Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் - தமிழ்த் தலைவர்களிடத்தில் அலி சப்ரி கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் - தமிழ்த் தலைவர்களிடத்தில் அலி சப்ரி கோரிக்கை

04 JUN, 2023 | 01:45 PM
image
 

ஆர்.ராம்

பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால் ஏற்பட்ட இழப்புக்களை நன்றாகவே உணர்ந்துள்ள தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு அங்கீகாரம் வழங்காது என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட அனைத்து விடயங்களுக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை காண்பதற்கு தற்போது அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அடுத்தகட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வீரகேசரியிடம் பிரத்தியேகமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை காண வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முனைப்புடன் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  பொறுத்தவரையில் அவர் முற்போக்கான ஒரு தலைவர். அவருடைய காலத்தில் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வினை காண்பதற்கு மிகவும் அரிதான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தினை தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தரப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த சக்திகளுக்கு மாறுபட்ட நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன. அவர்கள் இலங்கையில் நிரந்தரமானதொரு தீர்வினை எட்டுவதற்கு இதயசுத்தியுடன் விரும்பவில்லை என்பது பல செயற்பாடுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் சார்ந்துள்ள நாடுகளில் அவர்களது வகிபாகத்தினை தக்க வைத்துக்கொள்வதற்கான பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளை எமது நாட்டிலும் தமிழ் தலைவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தலைவர்கள் சிக்கிக்கொள்வதால் தமிழ் இளையோரின் எதிர்காலமே பாதிக்கப்படப் போகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால், அத்தலைவர்களால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடிந்திருக்கவில்லை. இதனால் அந்தத் தலைவர்களுக்கு எதிராக இளைஞர்கள் மாறியதுடன், அவர்கள் தலைவர்களால் செய்ய முடியாததை தாம் ஆயுத வழியில் நிகழ்த்திக் காண்பிப்போம் என்று புறப்பட்டார்கள்.

இந்தத் தீர்மானம் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டை சிதைத்துவிட்டது. அதிலும், தமிழ் மக்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் மிகவும் மோசமாக பாதித்துவிட்டது.

எனவே, இந்த விடயத்தில் தமிழ் தலைவர்கள் திறந்த மனதுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அதேநேரம், இந்தியாவை பொறுத்தவரையில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒருபோதும் அங்கீகாரமளிக்காது. ஏனென்றால், இந்தியாவின் தென்பிராந்தியங்களில் அவ்விதமான சிந்தனைகள் கடந்த காலங்களில் தோன்றியிருப்பதால், மத்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதே யதார்த்தமானதாகும்.

ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தினை பொறுத்தவரையில்  பொறுப்புக்கூறல், அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, படிப்படியாக விடயங்கள் தீர்க்கப்படுவதற்கே நாமும் செயற்படுகின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்,  அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. எஞ்சிய சொற்ப அளவிலானவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று தான் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் உள்ளிட்டவை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையானது அனைத்து சமூகங்களுக்குமானதாக உள்ளது. ஆகவே, அந்த விடயமும் உரிய அணுகுமுறையூடாக தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

முன்னதாக, நான் நீதியமைச்சராக கடமையாற்றியபோது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். எனினும், அதற்கு சிறிய குழுவினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

அதேநேரம், மாற்றுத்திறனாளிகளாக உள்ள முன்னாள் போராளிகளுக்கு உண்மையிலேயே உதவிகள் தேவையாக உள்ளன. அரசாங்கத்தினால் அளிக்கப்படுகின்ற பகுதியளவிலான உதவிகளை பெற்று, வாழ்க்கையை முன்னகர்த்துபவர்களும் உள்ளார்கள்.

எனவே, அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். இந்த விடயத்தில் தமிழ் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/156902

  • கருத்துக்கள உறவுகள்

இன்ரீதியிலான் பிரச்சனை, அடுத்ததாக முஸ்லிம் பெளத்த மத ரீதியில் வெடிக்கும்போது ம் அலிசப்றி இப்படித்தான் கூறுவாராக இருந்தால் நன்று. 

😀

  • கருத்துக்கள உறவுகள்

அவை ஏன் சிக்கப் போகினம். சாதாரண மக்களும்.. தாயகம் தன்னாட்சி என்று இயங்கவல்ல சில புலம்பெயர் அமைப்புக்கள் தான் இவையட்ட சிக்கி சின்னாபின்னமாகனும்.

அவை எப்பவும் தெளிவாத்தான் இருக்கினம். ஒட்ட வேண்டிய இடத்தில் ஒட்டுவினம். அதுதானே அவைட கொள்கை.

May be an image of 8 people, flute and temple

  • கருத்துக்கள உறவுகள்

 

நம்ம சமாதானம் மாதிரி எல்லோரும் இருங்கப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டமூலம் : அரசாங்கம் அறிவிப்பு

Published By: NANTHINI

04 JUN, 2023 | 02:18 PM
image
 

(ஆர்.ராம்)

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இறுதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இது குறித்து தெரிவிக்கையில்,

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதில் நாம் அதிகளவான சிரத்தையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் அந்த ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவினைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதனையடுத்து, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றை கூட்டுவதோடு, குறித்த சட்டமூலம் தொடர்பாக பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தி, அனைவரின் கருத்துக்களையும் உள்ளீர்க்கவுள்ளோம்.

தொடர்ந்து பூரணமான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்தச் செயற்பாட்டில் அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/156904

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட ஆக்கள் ஐஎஸ் நிகழ்ச்சி நிரலில சிக்கினது பத்தி.... வாய் திறக்க மாட்டாரே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்கட ஆக்கள் ஐஎஸ் நிகழ்ச்சி நிரலில சிக்கினது பத்தி.... வாய் திறக்க மாட்டாரே?

அப்பிடிச் சொல்லாதையுங்கோ...அவர் கோட்டாவுக்கே வீடு  விட்டுக்கொடுத்தவராம்...அப்படி பவரான ..செல்வாக்குப் பிடிச்ச மனுசனப்பா..அவருடைய பக்கத்திலை பால் சோறும் கொடுத்து ஆரவாரப் படுகினம்..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதில் நாம் அதிகளவான சிரத்தையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் அந்த ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவினைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

ஆமா... கடந்த சுதந்திர தினத்துக்கு முதல் தீர்வு என்றார், இப்போ எதிர்வரும் மூன்று மாதத்திற்குள். கடந்த கால வரலாறு தெரியாதவரோ இவர்? அல்லது மறதிநோயால் பாதிக்கப்பட்டவரோ? சட்ட வரைபு முடிந்தது என்று சுமந்திரன் எப்பவோ அறிவித்தாரே, அதுக்கு என்ன நடந்தது?

15 hours ago, கிருபன் said:

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டார்கள்.

ஏன் அந்தத் தேவை அவர்களுக்கு வந்தது? தொடர்ந்து ஏமாற்றப்பட்டமையே!

 

15 hours ago, கிருபன் said:

பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால்

இவருக்கு ஆயுதப்போராட்டம் ஏற்பட்டதுக்கான காரணம் புரியவில்லை அல்லது தவறான கருத்துக்களை நம்பிக்கொண்டிருக்கிறார் போலுள்ளது. உண்மையான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கை எடுக்குமட்டும் உங்களால் எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது அமைச்சரே!

 

15 hours ago, கிருபன் said:

இந்தியாவை பொறுத்தவரையில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒருபோதும் அங்கீகாரமளிக்காது. ஏனென்றால், இந்தியாவின் தென்பிராந்தியங்களில் அவ்விதமான சிந்தனைகள் கடந்த காலங்களில் தோன்றியிருப்பதால், மத்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதே யதார்த்தமானதாகும்.

இந்தியா தமிழ்நாட்டில் தங்கியிருக்கிறது, சிங்களம் தமிழரின் உழைப்பில் தங்கியிருக்கிறது. இவர்கள் பிரிந்துபோனால் தண்ணியில்லாத மீனே. அதனால் பயப்படுகிறார்கள். பிழையான விளக்கம் கொடுத்து தக்கவைக்கப்பாக்கிறார்கள். நாங்கள் பிரிவினை கோரவில்லை, எங்கள் உரிமைகளை பறித்து எங்களை அந்தநிலைக்கு தள்ளியது இந்த சோம்பேறிகூட்டமே. இவர்கள்  தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் பிரிவினையை தவிர்க்க முடியாது, அதை  நீங்கள் உணரும்போது காலம் கடந்துபோயிருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களுடனான நல்லுறவை சீர்குலைப்பதே பிரதான நோக்கம் - அலி சப்ரியின் கருத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டனம்

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2023 | 04:31 PM
image
 

(நா.தனுஜா)

தமிழ் அரசியல் தலைவர்கள் புலம்பெயர் நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்கிவிடக்கூடாது என்று அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரித்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் நோக்கில் முன்னெடுத்துவரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இக்கருத்து அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள் இலங்கையில் நிரந்தர தீர்வொன்று எட்டப்படுவதை இதயசுத்தியுடன் விரும்பவில்லை என்றும், மாறாக தத்தமது தேசங்களில் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்கள் இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எனவே புலம்பெயர் குழுக்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் தமிழ் அரசியல் தலைமைகள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கின்றார்.

இருப்பினும் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலை என்பது இலங்கையின் வாழும் தமிழ்மக்கள், புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கைத்தமிழ்மக்கள் மற்றும் இந்தியவாழ் தமிழ்மக்கள் ஆகிய முத்தரப்பினரின் முயற்சிகளை அடிப்படையாகக்கொண்டது என்று தாம் உறுதியாக நம்புவதாகவும், எனவே இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் மீண்டுமொரு மோதல் உருவாகவேண்டும் என்ற புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வையே கோருகின்றனர். அவ்வாறிருக்கையில் வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகிக்கக்கூடிய அலி சப்ரியின் வெளிநாட்டுப்பயணங்களின்போது, இவ்விடயம் பற்றிய அழுத்தங்கள் மிகவும் வலுவானதாக மாறிவருகின்றன. அந்த அழுத்தத்தைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல்தான் அண்மையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றைச் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தையும் பார்க்கவேண்டியிருக்கின்றது. அவர் படிப்படியாக உளநோயாளியாக மாறிவருகின்றார். முன்னாள் போராளிகளைப்போன்று அவருக்கும் புனர்வாழ்வு மற்றும் உளவள ஆலோசனை ஆகியவற்றை வழங்கவேண்டியிருக்கின்றது. அதன்மூலமாகவேனும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மோதலின் பின்னரான இன ஐக்கியம் ஆகியவற்றின் உண்மையான தாற்பரியம் குறித்தும் அவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியும் அவர் அறிந்துகொள்ளட்டும்.

எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் இன சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒரே நேர்கோட்டில் ஒருமித்துப் பயணிக்கக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் கவனமாக இருந்துவந்திருப்பதுடன் அதில் வெற்றியும் கண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசாங்கத்தினால் அமைச்சர் அலி சப்ரியும் ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றார் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கிலேயே அமைச்சர் அலி சப்ரி இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், அக்கருத்தை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

'புலம்பெயர் தமிழ்மக்கள் எமக்கு அவசியமான நிதியுதவிகளை வழங்கிவருகின்றனர். இருப்பினும் அதற்குப் பதிலாக அவர்களது தேவைக்கேற்றவாறு அல்லது நிபந்தனைகளுக்கு அமைவாகச் செயற்படவேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. மாறாக நாம் எமது நாட்டின் நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு அதற்கேற்றவாறு செயலாற்றிவருகின்றோம். அவ்வாறிருக்கையில் நாம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடனோ அல்லது மக்களுடனோ இணைந்து செயற்படக்கூடாது என்று கூறுவதாக இருந்தால், முதலில் எமது பிரச்சினைக்குரிய தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும். அதற்குரிய திட்டத்தை எம்மிடம் கையளிக்கவேண்டும். அதனைவிடுத்து இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை' என்றும் விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

மேலும் இதுகுறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்.

'சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் நோக்கில் முன்னெடுத்துவரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள கருத்தைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்திலிருந்து கிட்டும் ஓர் பதவிக்காக அவர் வெளியிடுகின்ற இத்தகைய கருத்துக்கள், சிறுபான்மையின தமிழர்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் மக்களுக்கும் அழிவை ஏற்படுத்தும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் இலங்கையில் சமஷ்டி முறையிலான தீர்வையும் கடந்தகால மீறல்களுக்கான நீதியையுமே கோருகின்றார்கள். இலங்கையின் ஒற்றையாட்சி முறை மற்றும் அதன்கீழ் நிகழ்ந்த அடக்குமுறைகளின் விளைவாகவே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். எனவே அமைச்சர் அலி சப்ரி தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பேசுவதைவிடுத்து ஓர் சட்டத்தரணி என்ற ரீதியில் உண்மையைப் புரிந்துகொண்டு மனிதாபிமானத்துடன் பேசவேண்டும்' என்று வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/156990

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 21:39, Nathamuni said:

உங்கட ஆக்கள் ஐஎஸ் நிகழ்ச்சி நிரலில சிக்கினது பத்தி.... வாய் திறக்க மாட்டாரே?

ஐ எஸ் , ஸஹ்ரான் எல்லாம் தங்களுடைய ஆட்களில்லையாம். ஏன் அலி சபரி ரஹீம் எனும் கடத்தல்காரனும் தங்களுடைய ஆட்கள் இல்லயாம். தான் கோத்தாவின் ஆள் என்றும், கோதாவுக்காக எதுவும் செய்வேன் என்று கூறி உள்ளார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.