Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி தவறான கருத்துத் தெரிவித்திருக்கிறார் - மெடகொட அபயதிஸ்ஸ தேரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி தவறான கருத்துத் தெரிவித்திருக்கிறார் - மெடகொட அபயதிஸ்ஸ தேரை

President made wrong statement : Ven. Medagoda Abhayatissa Thera

அதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெடகொட அபயதிஸ்ஸ தேரை, நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கடுமையாகச் சாடிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அண்மையில் தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, தமிழர் தாயகத்தில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பை விகாரை கட்டுமாணங்களுக்காக ஒதுக்கவேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்தின் தலைவர் கூறியபோது, ரணில் அவரைக் கடுமையாகச் சாடியதுடன், சரித்திரம் பற்றி எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம், தேவையென்றால் நான் உங்களுக்குப் பாடம் எடுக்கிறேன் என்று கூறியிருந்தார். 

பெளத்த மதத்தைக் காக்கவும், விஸ்த்தரிக்கவும் தொல்பொருள் திணைக்களம் செய்துவரும் வேலைகளை ஜனாதிபதி விமர்சித்ததைக் கண்டித்திருக்கும் தேரை, தனியார் பணம் மூலம் நடத்தப்பட்டு வரும் பெளத்த மத விஸ்த்தரிப்பு வேலைகளுக்கு ஜனாதிபதி முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார். 

மல்வத்தை, அஸ்கிரிய மாநாயக்க தேரைகளுடனான சந்திப்பினை முடித்துக்கொண்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போதே இக்கண்டனத்தை அபயதிஸ்ஸ தேரை வெளியிட்டார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of ‎text that says '‎Archeology DG resign after being pulled up by President Do your Home Work! LESSONS Dail FT ARCHEOLOGY HISTORY TASK FORCE APPOINTED By GR هNN Don' Sinwardena I Can't do, I'll resign‎'‎

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

பெளத்த மதத்தைக் காக்கவும், விஸ்த்தரிக்கவும் தொல்பொருள் திணைக்களம் செய்துவரும் வேலைகளை

இதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.  அதற்காக தமிழ் மக்களின் நிலங்களை பௌத்தத்தின் பெயரால் கொள்ளையடிக்கிறார்கள் என்கிறோம். நீங்கள் தொல்பொருள் என்கிறீர்கள். நீங்களே பௌத்தத்தை நகைப்புக்கிடமாக்கி  இல்லாமல் ஒழிக்கப்போகிறீர்கள்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.  அதற்காக தமிழ் மக்களின் நிலங்களை பௌத்தத்தின் பெயரால் கொள்ளையடிக்கிறார்கள் என்கிறோம். நீங்கள் தொல்பொருள் என்கிறீர்கள். நீங்களே பௌத்தத்தை நகைப்புக்கிடமாக்கி  இல்லாமல் ஒழிக்கப்போகிறீர்கள்! 

முல்லைத்தீவு திரியாயிலையும், திருகோணமலை குருந்தியிலையும் அமைக்கப்பட்டிருக்கிற விகாரைகளுக்கு தலா 3000 ஏக்கரும் 2000 ஏக்கரும் சரித்திரகாலம் தொட்டே இருந்து வருகிறதா என்று ஆராய ஆணைக்குழு ஒன்றை அமைக்கப்போறாராம் ரணில். அவையின்ர மகாவிகாரை எண்ட மகாபோதிக்கே இவ்வளவு நிலம் ஒதுக்கப்படமால் இருக்க, இந்த இரண்டுக்கும் ஏன் இவ்வளவு நிலம் எண்டு கேக்கிறாராம்.

இது இப்படியிருக்க, சுத்த இனவாதி உதய கம்மன்பில ஐநாவின்ர யுனெஸ்கோ நிறுவனத்துக்கு தங்கட பெளத்த கலாசார தொன்மையைப் பாதுகாக்க அரசுக்கு அழுத்தம் குடுக்கவேணும் எண்டு மகஜர் அனுப்பியிருக்கிறாராம். 

நாங்கள் ஆயுதம் ஏந்தியதைப் பிழையெண்டுறியளோ ஆரும்? 

  • கருத்துக்கள உறவுகள்+

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நன்னிச் சோழன் said:

இதைத்தான் நான் இங்கு அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. இவர்களது வரைபடம் சில தசாபத்தங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட்து. அதாவது சிங்கள குடியேற்றமும் பவுத்த மாயமாக்கலும்.

நாட்டில் எவர் ஆட்சி மாறினாலும், நாடு எந்த அதல பாதாளத்தில் விழுந்தாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. சில வேளைகளில் எமது தமிழ் தலைமைகளும் (??) தெரிந்தோ தெரியாமலோ விளக்கமின்றி அவர்களுக்கு உதவியும் செய்கிறார்கள். எனவே எப்படியும் அவர்கள் அதை அடையவே முயட்சிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

அதன் முதற்கட்டமே யாழ் நூலக எரிப்பு! வரலாற்றை இல்லாமல் செய்து, தமக்கேற்றபடி வரலாறு படைக்க எவ்வளவு தந்திரமாய், நுணுக்கமாய் வேலையாற்றியிருக்கிறார்கள். அதற்காகவே வனவள பாதுகாப்பு, தொல்பொருள் ஆராய்ச்சி, மகாவலி அபிவிருத்தி இன்னும் என்னென்ன பெயரிலெல்லாம் தமிழரை கட்டுப்படுத்தி அவர்களின் நிலங்களையும், வளங்களையும் அபகரிக்கிறார்கள். சிங்களவன் மோடையன் என்று சொல்லி கற்றுக்கொடுத்தார்கள் அன்றிருந்த தலைமைகள் இன்றோ சுயநலத்திற்காக விற்றுக்கொண்டிருக்கிறார்கள் கூத்தாடிகள். 

2 hours ago, ரஞ்சித் said:

சுத்த இனவாதி உதய கம்மன்பில ஐநாவின்ர யுனெஸ்கோ நிறுவனத்துக்கு தங்கட பெளத்த கலாசார தொன்மையைப் பாதுகாக்க அரசுக்கு அழுத்தம் குடுக்கவேணும் எண்டு மகஜர் அனுப்பியிருக்கிறாராம். 

ஆங்கிலேயர் காலத்திற்கு முன் இருந்தபடி செய்வோம் சம்மதமா என்று கேட்டால் இவர் என்ன செய்வார்? அல்லது பௌத்தமதம் சாராத  மக்கள் உள்ள இடத்தில் அவர்களது அனுமதியின்றி எப்படி ஏன் பாதுகாக்க வேண்டும் என்று நிஞாயமான கேள்வி எழுப்பினால் என்ன பதில் சொல்லுவார்? எமது உரிமையை கேட்டது பயங்கரவாதம், எமது நிலத்தில்  அடாத்தாக விகாரை அமைப்பது பௌத்தத்தின் தொன்மை. தமிழரை அழிக்க உதவிய சர்வதேசம் அவர்களின் மதத்தையும் அழிக்க உதவுமென எதிர்பார்க்கிறார்கள்.

2 hours ago, ரஞ்சித் said:

முல்லைத்தீவு திரியாயிலையும், திருகோணமலை குருந்தியிலையும் அமைக்கப்பட்டிருக்கிற விகாரைகளுக்கு தலா 3000 ஏக்கரும் 2000 ஏக்கரும் சரித்திரகாலம் தொட்டே இருந்து வருகிறதா என்று ஆராய ஆணைக்குழு ஒன்றை அமைக்கப்போறாராம் ரணில். அவையின்ர மகாவிகாரை எண்ட மகாபோதிக்கே இவ்வளவு நிலம் ஒதுக்கப்படமால் இருக்க, இந்த இரண்டுக்கும் ஏன் இவ்வளவு நிலம் எண்டு கேக்கிறாராம்

உண்மையிலேயே அவர் அதை செய்யாவிட்டால், இந்தப்பிரச்சனை தீரப்போவதில்லை. அதுவரை அவரை இந்த இனவாத பிக்குகள் விடுவார்களா உயிரோடு? அப்படி செய்தால் பௌத்தம் நிலைக்குமா என்பது கேள்வியே. பிக்குகள் என்று நான் கூறுவது; இனவாதம் பேசும் சகல துறையினரையும் சேர்த்தே.

  • கருத்துக்கள உறவுகள்+
14 minutes ago, satan said:

அதன் முதற்கட்டமே யாழ் நூலக எரிப்பு! வரலாற்றை இல்லாமல் செய்து, தமக்கேற்றபடி வரலாறு படைக்க எவ்வளவு தந்திரமாய், நுணுக்கமாய் வேலையாற்றியிருக்கிறார்கள். அதற்காகவே வனவள பாதுகாப்பு, தொல்பொருள் ஆராய்ச்சி, மகாவலி அபிவிருத்தி இன்னும் என்னென்ன பெயரிலெல்லாம் தமிழரை கட்டுப்படுத்தி அவர்களின் நிலங்களையும், வளங்களையும் அபகரிக்கிறார்கள். சிங்களவன் மோடையன் என்று சொல்லி கற்றுக்கொடுத்தார்கள் அன்றிருந்த தலைமைகள் இன்றோ சுயநலத்திற்காக விற்றுக்கொண்டிருக்கிறார்கள் கூத்தாடிகள். 

1 hour ago, Cruso said:

இதைத்தான் நான் இங்கு அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. இவர்களது வரைபடம் சில தசாபத்தங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட்து. அதாவது சிங்கள குடியேற்றமும் பவுத்த மாயமாக்கலும்.

நாட்டில் எவர் ஆட்சி மாறினாலும், நாடு எந்த அதல பாதாளத்தில் விழுந்தாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. சில வேளைகளில் எமது தமிழ் தலைமைகளும் (??) தெரிந்தோ தெரியாமலோ விளக்கமின்றி அவர்களுக்கு உதவியும் செய்கிறார்கள். எனவே எப்படியும் அவர்கள் அதை அடையவே முயட்சிப்பார்கள். 

தமிழர் தான் மோடையனுகள், சிங்களவர் இல்லை!

அவங்கள், தாங்கள் வகுத்த திட்டத்திலை தெளிவாய் இருக்கிறாங்கள்... எங்களைச் துடைச்சழிக்காமல் ஓயப்போறதில்லை.

தென் தமிழீழமும் வடக்கிலை வவுனியா & முல்லைத்தீவும் முற்றாய்ப் போகப்போகுது, இன்னும் கொஞ்சக் காலத்திலை. இப்பாவே முக்கால்வாசி போயிற்றுது. இன்னும் கொஞ்சம் தான்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நன்னிச் சோழன் said:

சில வேளைகளில் தமிழனும் அவர்களுக்கு போட்டு கொடுப்பதுண்டு. ஒரு காலத்தில் திருகோணமலை தமிழர்களின் பூமியாக இருந்தது. எப்போது திருகோணமலையை தமிழர் தாயகத்தின் தலை நகராக தமிழ் தலைவர்கள் அறிவித்தார்களோ அன்று தொடங்கிய சிங்கள குடியேற்றம் இன்று தமிழனை அங்கு மூன்றாம் நிலைக்கு தள்ளி விட்ட்து. இப்படியாக நிறையவே காரியங்கள் நடக்க உதவி இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Cruso said:

எப்போது திருகோணமலையை தமிழர் தாயகத்தின் தலை நகராக தமிழ் தலைவர்கள் அறிவித்தார்களோ அன்று தொடங்கிய சிங்கள குடியேற்றம்

சும்மா அடிச்சு விடாதீங்கோ... 

அப்பிடி அறிவிச்சாப் பிறகு ஒன்டும் தொடங்கேலை. தமிழர் தாயகத்தின் தலைநகராக அறிவிக்கும் முன்னரே அங்கு குடியேற்றம் தொடங்கிவிட்டது. 

டி. எஸ் சேனனாயக்காவின்ர காலத்திலை, அதாவது 1948 ஆம் ஆண்டே தொடங்கீற்றுது.

கந்தளாய் குடியேற்றம் தான் எமது தலைநகரில் முதன்முதலில் நடத்தப்பட்டது, நான் பிழையில்லையெனில். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நன்னிச் சோழன் said:

சும்மா அடிச்சு விடாதீங்கோ... 

அப்பிடி அறிவிச்சாப் பிறகு ஒன்டும் தொடங்கேலை. தமிழர் தாயகத்தின் தலைநகராக அறிவிக்கும் முன்னரே அங்கு குடியேற்றம் தொடங்கிவிட்டது. 

டி. எஸ் சேனனாயக்காவின்ர காலத்திலை, அதாவது 1948 ஆம் ஆண்டே தொடங்கீற்றுது.

கந்தளாய் குடியேற்றம் தான் எமது தலைநகரில் முதன்முதலில் நடத்தப்பட்டது, நான் பிழையில்லையெனில். 

அதாவது சுதந்திரம் (??) கிடைத்தவுடன் இந்த குடியேற்றம் ஆரம்பித்துவிட்ட்து என்று சொல்ல வருகிறீர்கள்.

கிடடதடட 75 வருடங்களாக இந்த குடியேற்றம் தொடர்கின்றது. அதாவது இனியும் தொடரும் இதை எம்மால் தடுக்க முடியாது என்பதும் நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது விளங்குகின்றது.

எனவே கந்தளாய் தொடக்கம் வன்னி வரைக்கும் வந்த குடியேற்றம் விரைவில் கச்சத்தீவில் போய் முடியுமென்று எதிர்பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Cruso said:

அதாவது சுதந்திரம் (??) கிடைத்தவுடன் இந்த குடியேற்றம் ஆரம்பித்துவிட்ட்து என்று சொல்ல வருகிறீர்கள்.

ஓமோம், கந்தளாயிலை தொடங்கி ஒவ்வொன்டாய் வல்வளைப்புச் செஞ்சதோட சோனகர்களும் இவங்களுக்குத் துணை நிண்டவங்கள் - தமிழரை சொந்த ஊர்களைவிட்டு துரத்தியடிக்க. இன்டைக்கு தமிழரை விட சோனகர்கள் தான் கூட. சிங்களவர் ஏறத்தாள எங்களுக்கு கிட்ட சனத்தொகையிலை இருக்கிறாங்கள், தொடர் குடியேற்றங்களாலை.

இந்தக் குடியேற்றங்கள் முழுவீச்சாக நடைபெற்றது 90,91,92 காலத்திலை தான். அதிலும் தமிழர் ஊர்களில் அடாத்தாக குடியேற்றப்பட்டனர், தென்னிலங்கைச் சிங்களவர்!

1 hour ago, Cruso said:

கிடடதடட 75 வருடங்களாக இந்த குடியேற்றம் தொடர்கின்றது. அதாவது இனியும் தொடரும் இதை எம்மால் தடுக்க முடியாது என்பதும் நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது விளங்குகின்றது.

எனவே கந்தளாய் தொடக்கம் வன்னி வரைக்கும் வந்த குடியேற்றம் விரைவில் கச்சத்தீவில் போய் முடியுமென்று எதிர்பார்க்கலாம். 

நீங்கள் இன்னும் அப்டேட் ஆகலை பாருங்கோ.  😂

கச்சதீவிலை புத்தர் இறங்கி சிறுவிகாரை அமைச்சுப் பல மாதங்கள் கண்டியளோ! 😏

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+
  • 1949: பார்வதிபுரம்/ பதவில்குளம் --> பதவியா
  • 1950 & 1951:  அரிப்பு --> சேருநுவர; சேறுவில் --> சேறுவில (இது 1976ம் ஆண்டு தனித் தேர்தல் தொகுதியானது), திருமங்கலை --> தெகிவத்தை (சிறிமங்கலகம); நீலாப்பளை --> நீலபொல; பூநகர் --> மகிந்தபுர; கல்லாறு--> சோமபுர
  • 1957: முதலிக்குளம் --> மொறவெவ, 
  • 1960: பெரியகுளம் --> நமல்வத்தை, புடவைக்கட்டு --> சாகபுர
  • நொச்சிக்குளம் --> நொச்சியாகம
  • தம்பலகாமம் --> தம்பலகமுவெவ
  • கந்தளே --> கந்தளாய்
  • 1970: பெரியவிளான்குளம் --> மகாடிவுலுவேவா

இதெல்லாம் இன்று நாம் இழந்துவிட்டவை ,எமது தலைநகரில்.

உதயன்: 19/10/1992

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2023 at 13:01, ரஞ்சித் said:

தனியார் பணம் மூலம் நடத்தப்பட்டு வரும் பெளத்த மத விஸ்த்தரிப்பு வேலைகளுக்கு ஜனாதிபதி முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார். 

அந்த  தனியார் யார், நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளும் குறைபாடுகளும் இருக்க அவருக்கு ஏன் வட கிழக்கில் விகாரைகள் தேவைப்படுகிறது, அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணமும் விகாரைகளுக்கான தேவையும் வந்தது?  அவர் தொழுகை செய்வதற்கு அவர் பகுதியில் உள்ள விகாரை போதாதாஇது ஒரு தனியார் வியாபாரமா என்பதையும் அறியத்தந்தால் நல்லது! தேவையோடு இருப்பது பக்தி, தேவைக்கு அதிகம் வந்தால் அது கேளிக்கை. இத்தனை விகாரைகளில் யார் வழிபடுவது? இன்றே அதற்கு மக்களில்லை அன்று எப்படி எங்கிருந்து வந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2023 at 13:01, ரஞ்சித் said:

பெளத்த மதத்தைக் காக்கவும், விஸ்த்தரிக்கவும் தொல்பொருள் திணைக்களம் செய்துவரும் வேலைகளை ஜனாதிபதி விமர்சித்ததைக் கண்டித்திருக்கும் தேரை,

, அன்பு, அமைதி, சமாதானத்தை போதித்து வளர்ப்பதே மதம். வன்முறைகளையும் குரோதத்தையும் வளர்ப்பது வன்முறைக்கும்பல். சிறுவயதில் எந்த அறிவுமில்லாமல் வறுமையில் தள்ளிவிடப்பட்டதுகள், சும்மா இருந்து சாப்பிட்டு விட்டு பேராசை பிடிக்குதுகள். பௌத்தத்தின் பேரால் நடக்கும் கொள்ளைகளை அந்த மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், அந்த மக்களுக்கு வரலாறு தெரியாது, வட கிழக்கில் என்ன நடக்கிறது என்று தெரியாது, அவர்களை ஏமாற்றி, சூடேற்றி, குளிர் காயும் இந்த பிக்குகளையும் இனவாதிகளையும் அந்தந்த இடத்தில வைக்க தெளிவூட்ட வேண்டும். இல்லையேல், அரசுகள் செய்யும் தவறுகளுக்கு அவர்களை ஆதரிக்கும் குடிகள் தண்டிக்கப்படுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நன்னிச் சோழன் said:

நீங்கள் இன்னும் அப்டேட் ஆகலை பாருங்கோ.  😂

கச்சதீவிலை புத்தர் இறங்கி சிறுவிகாரை அமைச்சுப் பல மாதங்கள் கண்டியளோ! 😏

இல்லை இல்லை. நான் எல்லாவற்றையும் அப்டேட் ஆக்கிக்கொண்டுதான் இருக்கிறேன். கச்சத்தீவில் வைத்த சிலையை சில காரணங்களினால் அகற்றி விடடார்கள்.

ஜே வலய குடியேற்றத்துடன், யாழ்ப்பாண குடியேற்றம்(சில குடியேற்றம் முன்பே தொடங்கிவிடடார்கள்), தீவுப்பகுதி குடியேற்றம் என்று இனி வரும் காலங்களில் நடக்கபோகுது. அப்போது அந்த சிலை மீண்டும் தோன்றும்.

சிலை வைத்தால் அதன் எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும், இந்தியா எதிர்க்கிறதா என்பதை சோதிக்கவே அப்படி செய்தார்கள். நிச்சயமாக அந்த சிலை மீண்டும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்+
26 minutes ago, Cruso said:

இல்லை இல்லை. நான் எல்லாவற்றையும் அப்டேட் ஆக்கிக்கொண்டுதான் இருக்கிறேன். கச்சத்தீவில் வைத்த சிலையை சில காரணங்களினால் அகற்றி விடடார்கள்.

ஜே வலய குடியேற்றத்துடன், யாழ்ப்பாண குடியேற்றம்(சில குடியேற்றம் முன்பே தொடங்கிவிடடார்கள்), தீவுப்பகுதி குடியேற்றம் என்று இனி வரும் காலங்களில் நடக்கபோகுது. அப்போது அந்த சிலை மீண்டும் தோன்றும்.

சிலை வைத்தால் அதன் எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும், இந்தியா எதிர்க்கிறதா என்பதை சோதிக்கவே அப்படி செய்தார்கள். நிச்சயமாக அந்த சிலை மீண்டும் வரும்.

அப்ப சரி... 

அ... பெருமூச்சு மட்டும் தான் இனிமேல் மிஞ்சும்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Cruso said:

சிலை வைத்தால் அதன் எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும், இந்தியா எதிர்க்கிறதா என்பதை சோதிக்கவே அப்படி செய்தார்கள். நிச்சயமாக அந்த சிலை மீண்டும் வரும்.

வைத்தது, கைப்பற்றியது எதையும்  உறுதிப்படுத்துவார்களே ஒழிய திரும்பப்பெற மாட்டார்கள். அவர்கள் எடுத்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள் அது உண்மையா என்பதை அடுத்த ஆண்டு அந்தோனியார் திருவிழாவுக்கு போய்த்தான் உறுதிப்படுத்த முடியும். அப்போ; அந்தோனியார் திருவிழா கொண்டாடும் சூழல் அங்கு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் நாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.