Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபிக்கு உடனே ஜாமீன் - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ராஜேஷ்தாஸ்

பட மூலாதாரம்,ALAMY

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மாயகிருஷ்ணன்.க
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு. இந்த உத்தரவு வெளியான சற்று நேரத்திலேயே அவருக்கு ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் இருந்தபோது, அவருடன் பணியிலிருந்த சக பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து ராஜேஷ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ராஜேஷ்தாஸ் குற்றவாளி என நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு கடந்து வந்த பாதை

இன்று அதிகாலை முதலே வழக்கத்தை விட சற்று பரபரப்பாக இருந்தது விழுப்புரம் நகரத்தின் மையத்திலிருக்கும் மாவட்ட நீதிமன்ற வளாகம்.

 

பாதுகாப்புக்காக நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காலை முதல் பரபரப்பாக காணப்பட்ட விழுப்புரம் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபியும், எஸ்பி கண்ணன் இருவரும் 10 மணிக்கு காரில் வந்து இறங்கினர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி புஷ்பராணி காலை 11.20 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

ராஜேஷ்தாஸ்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராம் விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த எஸ்பி கண்ணனுக்கு 500 ரூபாயை அபராதமாக விதித்தார் நீதிபதி.

கடந்த 2021ஆம் ஆண்டு பணியிலிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சிறப்பு டிஜிபி மீது தமிழக அரசின் உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக புகார் அளிக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை நடுவழியில் தடுத்து நிறுத்தி கார் சாவியை பிடுங்கி, முன்னாள் டிஜிபிக்கு உதவியதாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி இந்த வழக்கை விசாரணை செய்தார். வழக்கு தொடர்பாக 68 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணைக்கு பிறகு தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இவ்வழக்கில் வருகிற 16-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி அறிவித்திருந்தார்.

இன்று காலை அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் ராஜேஷ்தாஸ் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தீர்ப்பு என்ன சொல்கிறது?

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது 345(1), 352/A, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த பிரிவுகளின் கீழ் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு பிரிவின் கீழ் தலா பத்தாயிரம், மற்றொரு பிரிவின் கீழ் 500 ரூபாய் அபராதம் என மொத்தமாக 20 ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிபிக்கு உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணன் என்பவருக்கு 341 பிரிவின்கீழ் ரூ.500 மட்டும் அபராதம் விதித்து, விழுப்புரம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கண்ணன்
 
படக்குறிப்பு,

கண்ணன், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் உடன் பணியிலிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் முன்வைக்கப்பட்டது.

தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டரீதியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

இந்த புகார் தொடர்பாக சிறப்பு டிஜிபி மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது.

138 முறை இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது.

அதுபோல் முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆகியோரின் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.

அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் வக்கீல் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

இரண்டு வருடமாக நடந்த வந்த வழக்கு

இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 2 வருடமாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் இரண்டு பிரிவுகளில் தலா பத்தாயிரம் ரூபாய் உட்பட மொத்தம் 20, 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூபாய் 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு வரவேற்பு

அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி
 
படக்குறிப்பு,

அம்ஜத் அலி, அரசு வழக்கறிஞர்

தீர்ப்பு குறித்து பேசிய அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி , நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

“பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்யவும் வழி உள்ளது,” என்று தெரிவித்தார்.

தொலைந்து போன ஆவணங்கள்

வழக்கு விசாரணை நடந்து வந்தபோது வழக்கின் ஆவணங்கள் தொலைந்ததாக அதிகாரிகளால் கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தாண்டி, சிறை தண்டனை விதிக்கப்பட்டது நிச்சயம் நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்க உதவியாக இருக்கும் என்று வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டாளருமான லூசியா தெரிவித்தார்.

லூசியா
 
படக்குறிப்பு,

லூசியா, வழக்கறிஞர், சமூக செயல்பாட்டாளர்

“இந்த சமூகத்தில் பெண் எந்த நிலையில் இருந்தாலும் போராடித்தான் நீதியை பெற வேண்டியிருக்கிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கும் இதே நிலைதான் இருக்கிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யும்போது தீர்ப்பு மாற்றி அளிக்கப்படும். அத்தியூர் விஜயா போன்ற வழக்குகள் இதற்கு உதாரணம். அதுபோல எதுவும் இந்த வழக்கில் நடக்கக்கூடாது,” என்று லூசியா கூறினார்.

ஜாமீன் பெற்ற டிஜிபி

மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு ஜாமீனும் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்.

ஜூலை 17ஆம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதி புஷ்பராணி 30 நாட்களுக்குள் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/czq8930v1vqo

 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த கட்சியை ஆதரிக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கு ஜாமீன் கிடைக்கும். சடடம், நீதி எல்லாம் ரெண்டாம் பட்ச்சம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:
ராஜேஷ்தாஸ்

பட மூலாதாரம்,ALAMY

ராஜேஷ்தாஸ்
 

டி.ஜி.பி. என்ற பெரிய உத்தியோகத்தில் இருந்து கொண்டு, ஏன்… இந்த சின்ன புத்தி?
மண்டையிலை…. 75 வீதம் மயிரும் கொட்டுண்டு, மிச்சம் இருக்கிற 25 வீத மயிரும் நரை மயிர்.
இந்த சீத்துவத்திலை….. பொம்பிளை  சோக்கு கேக்குதோ… 😂
அதுகும்  பொலிஸ் சூப்பிரண்ட் (எஸ். பி.) தான் வேணுமாம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மனைவி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தின் சுகாதாரத்துறை செயளலராக இருந்த பீலா ராஜேஸ். எடப்பாடியின் விசுவாசமான காவல் அதிகாரி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

டி.ஜி.பி. என்ற பெரிய உத்தியோகத்தில் இருந்து கொண்டு, ஏன்… இந்த சின்ன புத்தி?
மண்டையிலை…. 75 வீதம் மயிரும் கொட்டுண்டு, மிச்சம் இருக்கிற 25 வீத மயிரும் நரை மயிர்.
இந்த சீத்துவத்திலை….. பொம்பிளை  சோக்கு கேக்குதோ… 😂
அதுகும்  பொலிஸ் சூப்பிரண்ட் (எஸ். பி.) தான் வேணுமாம். 🤣

😜

இலங்கையில் நடந்த இந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது?

61 வயசு அதிகாரி, அம்மணி கலயாணம் கட்டவில்லை. பார்க்க நல்லா இருந்திருக்கிறார் போல.

அவருக்கு ஒரு 47 வயசு டிரைவர். அம்மணி ஓய்வு பெற்றுக் கொண்டு கிளம்ப மனசு கேட்கவில்லை.

அட வாழ்க்கைல ஒண்டையுமே பார்க்காம, மிஸ் பண்ணி போய்ச் சேரப்போகுதே. மண் தின்னப் போற உடல்....

வீட்டை போய், ரூமை பூட்டிக் கொண்டார். நிர்வாணமாகி தன்னைப் படம் பிடித்துக் கொண்டார்.... முக்கியமாக.... 💪

அம்மணிக்கு அனுப்பி விட்டார். எவ்வித உதவிக்கும் தயார். காதும், காதும் வைத்தது போல ரகசியமாக இருக்கும். எப்ப வேணுமெண்டாலும்.... கூப்பிடுங்கோ மேடம்....

டிரைவர் கம்பி எண்ணுகிறார்...😁🥱

A driver who is working for a ministry was taken into custody by Veyangoda police today for sending pornographic pictures and exposing his person on video calls through WhatsApp to a retired Administrative Officer of the ministry.  

The 61-year-old spinster was a resident of Divulapitiya area and the 48-year-old suspect is from Badulla area and a father of three children. 

Investigations revealed that he worked as the driver of the said Administrative Officer’s official vehicle when she was in the service. 

A senior police official said the suspect would be produced in court on the charge of producing and displaying pornography which is considered sexual abuse.

Veyangoda police are conducting further investigations.

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

😜

இலங்கையில் நடந்த இந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது?

61 வயசு அதிகாரி, அம்மணி கலயாணம் கட்டவில்லை. பார்க்க நல்லா இருந்திருக்கிறார் போல.

அவருக்கு ஒரு 47 வயசு டிரைவர். அம்மணி ஓய்வு பெற்றுக் கொண்டு கிளம்ப மனசு கேட்கவில்லை.

அட வாழ்க்கைல ஒண்டையுமே பார்க்காம, மிஸ் பண்ணி போய்ச் சேரப்போகுதே. மண் தின்னப் போற உடல்....

வீட்டை போய், ரூமை பூட்டிக் கொண்டார். நிர்வாணமாகி தன்னைப் படம் பிடித்துக் கொண்டார்.... முக்கியமாக.... 🥹

அம்மணிக்கு அனுப்பி விட்டார். எவ்வித உதவிக்கும் தயார். காதும், காதும் வைத்தது போல ரகசியமாக இருக்கும். எப்ப வேணுமெண்டாலும்.... கூப்பிடுங்கோ மேடம்....

டிரைவர் கம்பி எண்ணுகிறார்...😁🥱

டிரைவர் அனுப்பின படத்தைப் பார்த்து, அம்மணி பயந்து விட்டார் போலுள்ளது. 😁🦘
அம்மணி கலியாணம் கட்டாத படியால்… அதை  கண்டால், “அலர்ஜி” போலை இருக்கு. 😂
பாவம் டிரைவர். தானாக கனியிற பழத்தை… புகை அடிச்சு கனிய வைக்க வெளிக்கிட்டதாலை
கம்பி எண்ண வேண்டி வந்திட்டுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிணை, மேல்முறையீட்டு விடயத்தில் ஒரு சிக்கல்.

பிரிட்டனில், மேன்முறையீடு செய்யும்போது, பிணை கிடைக்காது, உள்ளே இருந்துதான் செய்யமுடியும், இந்த வகையில் ஒரு சலுகை, மேல்முறையீடு செய்யும் போது, தண்டனை அதிகரிக்காது.

ஆனால் இந்தியாவில், பிணை எடுத்து வெளியே இருந்து மேல்முறையீடு செய்யும் போது, மேல்முறையீட்டு நீதிமன்று, தண்டனையினை அதிகரிக்கலாம்.

இதுவே சரவணபவன் ராஜகோபாலுக்கு நடந்தது. 7 வருட தண்டனை, ஆயுள் தண்டனை ஆகியது. தடா ரஹீம் போன்ற, உள்ளே இருந்த, சிஸ்டத்தின் மறுபக்கத்தினை கரைத்து குடித்த சிறைக்கைதிகள், ராஜகோபாலிடம், அய்யா, பேசாமல் இருந்து விடுங்கள், நன்னடத்தை, பெரு வியாபாரி என்று சொல்லி, இரண்டு வருடங்களில் வெளியே வரலாம். மேல்முறையீடு செய்யும் போது சிக்கல் வரலாம் என்று சொல்லியும், தமது புலமையை உலகறிய செய்யும் பேராசையில், மீடியாவில் அதிகமாக கவர் செய்யப்பட்ட ராஜகோபால் கேசினை அய்யா வெல்லலாம் என்று ஆசை காட்டி, மேல் முறையீட்டில் ஆயுள் கொடுக்கப்பட்டது.

அதே சிக்கலே இவருக்கும். 

9 hours ago, தமிழ் சிறி said:

டி.ஜி.பி. என்ற பெரிய உத்தியோகத்தில் இருந்து கொண்டு, ஏன்… இந்த சின்ன புத்தி?
மண்டையிலை…. 75 வீதம் மயிரும் கொட்டுண்டு, மிச்சம் இருக்கிற 25 வீத மயிரும் நரை மயிர்.
இந்த சீத்துவத்திலை….. பொம்பிளை  சோக்கு கேக்குதோ… 😂
அதுகும்  பொலிஸ் சூப்பிரண்ட் (எஸ். பி.) தான் வேணுமாம். 🤣

ஸ்டார்டிங்.... பாட்டு பாடச்சொல்லி கேட்டிருக்கிறார்.

கண்ணே, உன் இசை கேட்க்க ஓடோடி வந்தேன்.... பாடு, என் மனம் குளிர பாடு....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

ஸ்டார்டிங்.... பாட்டு பாடச்சொல்லி கேட்டிருக்கிறார்.

கண்ணே, உன் இசை கேட்க்க ஓடோடி வந்தேன்.... பாடு, என் மனம் குளிர பாடு....

முனி… இந்த சிற்றுவேஷன் சாங் எப்பிடி… 😂

கலியாணம்தான்.. கட்டிகிட்டு ஓடிப் போலாமா…
ஓடிப் போய்த்தான்…. கலியாணம்தான் கட்டிக்கலாமா….
ஏலே… ஏலே… ஏலேலலலோ….. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

முனி… இந்த சிற்றுவேஷன் சாங் எப்பிடி… 😂

கலியாணம்தான்.. கட்டிகிட்டு ஓடிப் போலாமா…
ஓடிப் போய்த்தான்…. கலியாணம்தான் கட்டிக்கலாமா….
ஏலே… ஏலே… ஏலேலலலோ….. 🤣

இவருக்கு வந்த சிக்கல், அந்த பெண்மணியின் கணவர், மத்திய உள் துறை அமைச்சில் பெரிய அதிகாரி. அவர் மத்திய அரசு ஊடாக கொடுத்த அழுத்தில் தான் இவரும், அந்த பெண் SP யை பயமுறுத்தி தடுத்த இன்னுமொரு SP யும் சிக்கிக்கொண்டார்கள்.

கண்ணன்

அவருக்கு இது தேவையில்லாத சோலி. ஆனால், அந்த பெண்ணின் பின்புலம் தெரியாமல் சீண்டிய DSP இப்ப, முழுசிக் கொண்டு தலையை தடவிக்கொண்டு நிப்பார். 🙄

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

இரண்டு பிரிவின் கீழ் தலா பத்தாயிரம், மற்றொரு பிரிவின் கீழ் 500 ரூபாய் அபராதம் என மொத்தமாக 20 ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

23 hours ago, ஏராளன் said:

மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு ஜாமீனும் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்.

ரொம்ப கொடூரமான தண்டனை..

hqdefault.jpg

அடுத்த பாலியல் தொல்லைக்கும் சேர்த்து அட்வான்ஸ் கட்டி விட்டேன் ..அதில கழிக்க சொல்லு..

படம் : காதல் சடுகுடு.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:
On 17/6/2023 at 11:34, Nathamuni said:

ஸ்டார்டிங்.... பாட்டு பாடச்சொல்லி கேட்டிருக்கிறார்.

கண்ணே, உன் இசை கேட்க்க ஓடோடி வந்தேன்.... பாடு, என் மனம் குளிர பாடு....

முனி… இந்த சிற்றுவேஷன் சாங் எப்பிடி… 😂

கலியாணம்தான்.. கட்டிகிட்டு ஓடிப் போலாமா…
ஓடிப் போய்த்தான்…. கலியாணம்தான் கட்டிக்கலாமா….
ஏலே… ஏலே… ஏலேலலலோ

இன்னொருவர் வேதனை

இவர்களுக்கு வேடிக்கை

இதயமற்ற மனிதருக்கோ

இதெல்லாம் வாடிக்கை.

அவனவன் மானம் போச்சே என்று அழுது புலம்புகிறான்.

நீங்க வேற சிற்றுவேசன் பாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னொருவர் வேதனை

இவர்களுக்கு வேடிக்கை

இதயமற்ற மனிதருக்கோ

இதெல்லாம் வாடிக்கை.

அவனவன் மானம் போச்சே என்று அழுது புலம்புகிறான்.

நீங்க வேற சிற்றுவேசன் பாட்டு.

யாருக்கு மானம் போச்சு?

அதிகார பதவியில் இருக்கும் போது தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டால் பிறகு மானம் போச்சே என்று அழுது புலம்புவதில் பயன் இல்லை.

இந்த ராஸ்கல், பின்புலம் இல்லாத அபலை பெண்களை எப்படி பயன்படுத்தியிருப்பான்?

தனது தவறை மறைக்க இன்னொரு எஸ்பியின் வேலையையும் காவு வாங்கி விட்டானே! 

இதுக்கொரு சிற்றுவேசன் சாங்...

பட்டபின்னாலே வருகின்ற ஞானம்.... பலன் ஒன்றும் கிடையாது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.