Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைட்டானிக்கின் சிதைவுகளிற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியிலிருந்த அனைவரும் உயிரிழப்பு – அமெரிக்க கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, விசுகு said:

அவரவர் நாட்டில் எல்லா  வளங்களும் உண்டு

அவற்றை  விட்டு விட்டு

அநேகமாக  பொருளாதாரம்  தேடி அலைவதைத்தான் கானல் நீர் என்று குறிப்பிட்டேன்

நாட்டை விட்டு புறப்பட்டதற்காக  தற்போதும் வருந்துவதுண்டு

எனக்கும் இதே சிந்தனை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உண்டு. நிஜத்தை இழந்து போலிவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்றொரு மன உளைச்சல் பாடாய் படுத்தும்.. பாவம் எனது அடுத்த சந்ததிகள் என் சொந்த மண்ணின் சுகங்கள் தெரியாமல் வாழப்போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எனக்கும் இதே சிந்தனை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உண்டு. நிஜத்தை இழந்து போலிவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்றொரு மன உளைச்சல் பாடாய் படுத்தும்.. பாவம் எனது அடுத்த சந்ததிகள் என் சொந்த மண்ணின் சுகங்கள் தெரியாமல் வாழப்போகின்றார்கள்.

 

உண்மை  அண்ணா

ஒவ்வொருவருக்கு  ஒவ்வொரு  சாட்டு

எனக்கு  83  கலவரம்

ஆனால் என்னுடன் படித்தவர்கள்

என்னிடம் படித்தவர்கள்  அங்கு நல்ல  பதவிகளில் உயிருடன் தான்  உள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

டைட்டன் நீர்மூழ்கியின் வடிவமைப்பு, பாதுகாப்பு தொடர்பில் நிபுணர்களின் கேள்விக்கணைகள்

Published By: SETHU

26 JUN, 2023 | 02:43 PM
image
 

-ஆர்.சேதுராமன்

அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் மூழ்­கிக்­கி­டக்கும் டைட்­டானிக் கப்­பலின் சிதை­வு­களைப் பார்­வை­யி­டுவ­தற்­காகச் சென்­று ­கொண்­டி­ருந்த  டைட்டன் எனும் சிறிய நீர்­மூழ்கி, ஆழ்­க­டலில் வெடித்து அதில் பயணம் செய்த ஐவரும் உயி­ரி­ழந்த நிலையில், இந்­நீர்­மூழ்­கியின் பாது­காப்பு ஏற்­பா­டுகள் குறித்து நிபு­ணர்கள் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர். கடந்த காலத்தில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு விப­ரங்­களும் தற்­போது மீள வெளிக்­கி­ளம்­பி­யுள்­ளன.

டைட்டன் நீர்­மூழ்கி அமெ­ரிக்­காவின் தனி யார் நிறு­வ­ன­மான ஓஷன்கேட் எக்ஸ்­பெ­டி­ச­ன் நிறுவனத்துக்குச் சொந்­த­மா­னது. 2009ஆம் ஆண்டு இந்­நி­று­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. டைட்டன் நீர்­மூழ்­கியை 2018ஆம் ஆண்டு அந்­நி­று­வனம் நிர்­மா­ணித்­தது. 

6.7 மீற்றர் (22 அடி) நீளமும், 2.8 மீற்றர் (9.2 அடி) அகலமும், 2.5 மீற்றர் (8.3 மீற்றர்) உயரமும் கொண்ட நீர்­மூழ்கி இது. ஓட்­டுனர் (பைலட்) உட்­பட ஐவர் பய­ணிக்­கலாம். அதில் பயணிப்­ப­வர்கள் தரையில் அமர்ந்­து­ கொள்ள வேண்டும்.

1912ஆம் ஆண்டில் அத்­திலாந்திக் சமுத்­தி­ரத்தில் மூழ்­கிய, டைட்­டானிக் சிதை­வு­களை பார்­வை­யி­டு­வ­தற்கு சுற்­றுலாப் பய­ணி­களை அழைத்துச் செல்லும் நோக்­குடன் இது தயா­ரிக்­கப்­பட்­டது. இந்­நீர்­மூழ்கி 2021ஆம் ஆண்டில் முதல் தட­வை­யாக டைட்­டானிக் சிதை­வு­க­ளுக்கு சுற்­றுலாப் பய­ணி­களை  ஏற்றிச் சென்­றது. 2001இல்  6 பய­ணங்­க­ளையும்  2022 இல் 7 பய­ணங்­க­ளையும் டைட்­டானிக் நோக்கி டைட்டன் பய­ணித்­தது. எனினும் சில பய­ணங்­களில் அது இலக்கை அடை­யாமல் திரும்­பி ­வந்­தது.

Tinan.jpg

இவ்­வ­ருடம் சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஒரு பய­ணத்தை மாத்­திரம் டைட்டன் மேற்கொள்ளும் என எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அதுவே கடைசிப் பய­ண­மாக அனர்த்­தத்தில் முடிந்­து ­விட்­டது.

நீர்­மூழ்கிக் கப்பல் அல்ல

டைட்டன் போன்ற ஒரு நீர்­மூழ்கிக் கடற்­கலம். அது ஒரு நீர்­மூழ்கிக் கப்பல் (சப்­மெரீன்) அல்ல. இப்படி  கூறப்படுவதற்கு அளவு மாத்திரம் காரணமல்ல. ‍இ‍வை செயற்­படும் முறையும் வித்­தி­யா­ச­மா­னவை.  நீர்­மூழ்­கிக் கப்பல்கள் து‍றைமுகத்திலிருந்து ‍சுய­மாக வெளி‍யேறி, சுயமாக திரும்­பி­ வ­ரக்­கூ­டி­யவை. அவை, தமது வலு­சக்தி தேவை­களை தாமாக உற்­பத்தி செய்­யவும் புதுப்­பிக்­கவும் கூடி­யவை. பல மாதங்கள் அவை கட­லுக்குள் பய­ணிக்க முடியும்.

ஆனால், டைட்டன் போன்ற சிறிய நீர்மூழ்கிக‍ளை மூழ்கச் செய்­வ­தற்கும் நீர் ­மட்­டத்­துக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கும் மற்­றொரு தாய்க் ­கப்­பலின் உதவி தேவைப்­படும். குறிப்­பிட்ட நாட்­க­ளுக்கு மாத்­தி­ரமே அவற்றின் வலு­சக்­தியும் ஒட்­சி­சனும் போது­மா­னவை. ஆங்­கி­லத்தில் இவை 'சப்­மேர்­சிபிள்' எனக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. 

Titan-2.jpg

உலகில் நீர்­மூழ்கிக் கப்­பல்கள் அல்­லாத ஏரா­ள­மான நீர்­மூழ்­கிகள் உள்­ளன. அவற்றில் டைட்­டானிக் சிதைவுகள் கிடக்கும் தூரத்தைப் போன்ற, சுமார் 4,000 மீற்றர் (13,123 அடி) ஆழத்­துக்கு மனி­தர்­களை ஏற்றிச் செல்­லக்­கூ­டிய நீர்­மூழ்­கிகள் சொற்ப எண்­ணிக்­கையில் தான் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதை­விட சுமார் 3 மடங்கு ஆழத்­துக்கு செல்­லக்­கூ­டிய ஓரிரு நீர்­மூழ்­கி­களும் உள்­ளன. 

இரா­ணுவ ரீதி­யான நீர்­மூழ்கிக் கப்­பல்கள் பொது­வாக 300 மீற்றர் ஆழத்தில் பய­ணிக்­கின்­றன. அமெ­ரிக்க கடற்­படை நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்று ஒரு தடவை 900 மீற்றர் ஆழத்தில்  பய­ணித்­தது.

ஓஷன்கேட் நிறு­வ­னத்தின் டைட்டன் நீர்­மூழ்கி அமெ­ரிக்க கிழக்குப் பிராந்­திய நேரப்­படி கடந்த ஞாயிறு (18) காலை 8.00 மணி­ய­ளவில் கடலில் மூழ்கிச் செல்ல ஆரம்­பித்­தது. 

கோடீஸ்வர பய­ணிகள்

பாகிஸ்தான் தொழி­ல­தி­பரும் அந்­நாட்டின் மிகப்பெரிய செல்­வந்­தர்­களில் ஒரு­வ­ரு­மான செஷ்­ஸாதா தாவூத்(48), அவரின் மகன் சுலைமான் தாவூத்(19), துபாயைத் தள­மாகக் கொண்ட  அக் ஷன் ஏவி­யேஷன் நிறு­வ­னத்தின் தலை­வரும் விமா­னியும், விண்­வெளி சுற்­றுலாப் பய­ணி­யு­மான பிரித்­தா­னிய கோடீஸ்­வரர் ஹமீஷ் ஹார்டிங் (58),  நீர்­மூழ்கி ஓட்­டி­யான பிரான்ஸைச் சேர்ந்த போல் ஹென்றி நார்­ஜோலெட் (73),  இந்­நீர்­மூழ்­கியை இயக்கும் ஓஷன்கேட் எக்­பெ­டிசன் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஸ்டொக்டன் ரஷ் (61) ஆகியோர் இந்­நீர்­மூழ்­கியில் பய­ணித்­தனர்.

இவர்கள் போலார் பிரின்ஸ் எனும் கப்­பலின் மூலம், கன­டாவின் நியூ­ப­வுண்ட்­லாந்து பிராந்­தி­யத்­தி­லுள்ள சென் ஜோன்ஸ் நக­ரி­லி­ருந்து கடந்த 16ஆம் திகதி பய­ணத்தை ஆரம்­பித்­தனர். டைட்டன் சுழி­யோடல் பயணம் உட்­பட மொத்தம் 8 நாள் பய­ணத்­துக்கு ஒரு­வ­ரி­ட­மி­ருந்து  250,000 அமெ­ரிக்க டொலர் கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கி­றது.

Titan-passengers-5.jpg

டைட்டனில் இறுதியாக பயணித்தவர்கள் 

டைட்­டா­னிக்கை  நோக்கி 

3,810 மீற்றர் ஆழத்­தி­ல் டைட்­டானிக் சிதை­வு­கள் உள்ள பகுதி‍ையை ‍ைடட்டன் ­நீர்­மூழ்கி சுமார் 2 மணித்­தி­யா­லங்­களில் சென்­ற­டை­யக் ­கூ­டி­யது. 

டைட்டானிக் சிதை­வு­க­ளுக்கு அருகில் சில மணித்­தி­யா­லங்கள் செல­விட்ட பின் அல்­லது 8 முதல் 11 மணித்­தி­யா­லங்­களில் இந்­நீர்­மூழ்கி திரும்பி வரு­வது வழக்கம். (நீர்­மூழ்­கியின் உள்ளே இருந்தே டைட்­டானிக் சிதை­வு­களைப் பார்­வை­யிட முடியும்)

ஆனால், இந்­நீர்­மூழ்கிப் பயணம் ஆரம்­பித்து 2 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் காலை 9.45 மணி­ய­ளவில் தாய்க்­கப்­ப­லு­ட­னான தொடர்பை இழந்­தது. எனினும், அமெ­ரிக்க கரை­யோரக் காவல்­ப­டைக்கு மாலை 5.40 மணிக்கே தகவல் கிடைத்­தது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நீர்­மூழ்­கி­யி­லி­ருந்த 5 பேருக்கும் ஏறத்­தாழ 96 மணித்­தி­யா­லங்­க­ளுக்குப் போது­மான ஒக்­சிஜனே இருந்­தது. 

 

அமெ­ரிக்க கிழக்குப் பிராந்­திய நேரப்­படி வியா­ழன் ­காலை 7.08 (இலங்கை நேரப்­படி மாலை 4.38) மணி­யுடன் ஒக்­சிஜன் தீர்ந்­து­வி­டக்­கூ­டிய அபாயம் இருந்­ததால் அதற்­கு முன் நீர்­மூழ்­கியைத் தேடும் நட­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. அமெ­ரிக்க, கனே­டிய கரை­யோரக் காவல் ­ப­டை­யினர், பிரெஞ்சு நிபு­ணர்­க­ளுடன் விமா­னங்கள், கப்­பல்கள், ஆழ்­கடல் நீர்­மூழ்கி சாத­னங்­க­ளுடன் தேடு­தல்கள் நடத்­தப்­பட்­டன.

கடந்த 23 ஆம் திகதி வியாழன் மாலை இந்­நீர்­மூழ்­கியின் சிதை­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அமெ­ரிக்க கரை­யோர காவல்­படை அறி­வித்­தது. டைட்­டானிக் சிதை­வுகள் உள்ள பகு­தி­யி­லி­ருந்து 1,600 அடி (500 மீற்றர்) தூரத்தில் டைட்டன் சிதை­வுகள் காணப்­பட்­டன. 

நீர்­மூழ்­கி­யா­னது நீரின் அழுத்­தத்தை தாங்க முடி­யாமல்,  உள்­நோக்­கிய வெடிப்­புக்­குள்­ளாகி (நசுங்கி) சித­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் அதில் பய­ணித்த ஐவரும் உயி­ரி­ழந்­து ­விட்­டனர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Polar-Prince.jpg

டைட்­டனின் தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்டு சிறிது நேரத்தில், உள்­நோக்­கிய வெடிப்­புடன் தொடர்­பு­ப­டுத்­தக்­ கூ­டிய ஒலி­யியல் சீரின்மை ஒன்று (அதிர்வு) தன்னால் உண­ரப்­பட்­ட­தாக அமெ­ரிக்க கடற்­படை தெரி­வித்­துள்­ளது. இத்­த­கவல் அமெ­ரிக்­காவின் கரை­யோரக் காவல்­ப­டைக்கு தெரி­விக்­கப்­பட்­ட­துடன், தேடுதல் வல­யத்தை சுருக்­கு­வ­தற்கு இது பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அமெ­ரிக்க கடற்­படை அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள் ளார்.

பாது­காப்புக் குறை­பா­டுகள்

இந்­நி­லையில், டைட்டன் நீர்­மூழ்­கியின் அமைப்பு மற்றும் பாது­காப்பு தொடர்பில் பலர் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர்.

‘டைட்­டானிக்’ திரைப்­ப­டத்தை இயக்­கிய ஜேம்ஸ் கெம­ரோனும் இவர்­களில் குறிப்­பி­டத்­தக்­கவர். 

ஆழ்­கடல் சுழி­யோ­டல்கள் குறித்துப் பேசு­வ­தற்கு மிகவும் தகு­தி­யான ஒருவர் ஜேம்ஸ் கெமரோன். 

‘டைட்­டானிக்’ படத்தை இயக்­கு­வ­தற்கு முன்­னரும் பின்­னரும் வேறு நீர்­மூழ்­கி­களில் நேர­டி­யா­கவே டைட்­டானிக் சிதை­வு­களை பார்க்கச் சென்­றவர்  ஜேம்ஸ் கெமரோன்.  33 தட­வைகள் அவர் அப்­ப­கு­திக்குச் சென்று திரும்­பி­யுள்ளார்.

1995ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக ரஷ்ய நிறு­வ­ன­மொன்றின் நீர்­மூழ்­கியில் பய­ணித்து, டைட்­டானிக் சிதை­வு­களை தனது திரைப்ப­டத்­துக்­காக படம் ­பி­டித்தார். 

பசுபிக் சமுத்­தி­ரத்தில் 10,912 மீற்றர் (35,800 அடி) ஆழம் கொண்ட, உலகின் மிக ஆழ­மான சமுத்­தி­லுள்ள பகு­திக்கு நீர்­மூழ்­கி­யொன்றில் 2012 ஆண்டு சென்­று ­தி­ரும்­பி­யவர் ஜேம்ஸ் கெமரோன்.

James-Camarone.jpg

ஜேம்ஸ் கெமரோன்

டைட்டன் நீர்­மூழ்­கியின் நகர்வு விப­ரமும் அத­னு­ட­னான தொடர்­பா­டலும் ஒரே நேரத்தில் துண்­டிக்­கப்­பட்­ட­தாக அறிந்­த­வுடன் அனர்த்தமொன்று ஏற்­பட்­டி­ருக்­கலாம் என உட­ன­டி­யாக  தான் சந்­தே­கித்­த­தாக அவர் கூறி­யுள்ளார்.

1912ஆம் ஆண்டின் டைட்­டானிக் கப்பல் விபத்தும், டைட்டன் நீர்­மூழ்கி விபத்தும் எச்­ச­ரிக்­கை­களைப் பொருட்­ப­டுத்­தாமல் செயற்­பட்­டதன் விளை­வுகள் என ஜேம்ஸ் கெமரோன் கூறி­யுள்ளார்.

டைட்­டானிக் கப்­பலின் தள­பதி எப்­படி பனிப்­பா­றைகள் குறித்த எச்­ச­ரிக்­கை­களைப் பொருட்­ப­டுத்­தாமல், கப்­பலை வேக­மாக பனிப்­பாறைப் பகு­தி­க­ளுக்குள் செலுத்திச் சென்­றாரோ அதே­போன்று ஓஷன்கேட் நிறு­வ­னமும் எச்­ச­ரிக்­கை­களைப் பொருட்­ப­டுத்­தாமல் செயற்­பட்­டுள்­ளது என்­கிறார் கெமரோன்.

ஒரே இடத்தில்  ஒரே கார­ணத்­துக்­காக இரு சிதை­வுகள் அரு­க­ருகே கிடக்­கின்­றன என அவர் விமர்­சித்­துள்ளார். 

ஆழ்­கடல் சுழி­யோடல் சமூ­கத்தைச் சேர்ந்த சிலர், ஓஷன்­கேட்­டுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் கடி­த­மென்றை எழு­தி­ய­தாக கெமரோன் தெரி­வித்­துள்ளார். 

ஓஷன்­கேட்டின் பாது­காப்பு ஏற்­பா­டுகள் தொடர்பில் கேள்வி எழுப்­பிய முதல் நபர் ஜேம்ஸ் கெமரோன் அல்லர்.

2018 ஆம் ஆண்டி‍லே‍யே எச்­ச­ரிக்கை

2018 மார்ச்சில், ஓஷன்கேட் நிறு­வ­னத்­துக்கு 'மெரைன் டெக்­னோ­லொஜிஸ் சொசைட்டி' எனும் அமைப்பு ஒரு கடிதம் எழு­தி­யது. அந்­நி­று­வ­னத்தின் பரீட்­சார்த்த அணு­கு­முறை எதிர்­ம­றை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தலாம் என அக்­க­டி­தத்தில் எச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்­நி­று­வ­னத்தின் நீர்­மூழ்கியில் பாது­காப்பு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம் என 2018ஆம் ஆண்டில் அந்­நி­று­வ­னத்தின் முன்னாள், கடல்சார் செயற்­பாட்­டுப்­ பி­ரிவின் பணிப்­பா­ள­ரான டேவிட் லொக்ரிட்ஜ் எச்­ச­ரித்­தி­ருந்­தமை நீதி­மன்ற ஆவ­ணங்கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

டைட்டன் வடி­வ­மைப்பு

டைட்டன் ஒரு பரி­சோ­தனை நீர்­மூழ்கி என ஓஷன்கேட் நிறு­வனம் வர்­ணிக்­கி­றது. வழ­மைக்கு மாறான பொருட்கள் மூலம் இந்த நீர்­மூழ்கி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

கார்பன் பைபர் மற்றும் டைட்டானியம் ஆகி­ய­வற்­றால் அதன் மத்திய உடல் ­ப­குதி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

போர்ட்ஸ்மௌத் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த சமுத்­திர உயி­ரியல் விரி­வு­ரை­யாளர் கலா­நிதி நிக்­கலோய் ரொட்­டர்டாம் இது தொடர்­பாகக் கூறு­கையில்,  “பொது­வாக மனி­தர்­களை ஏற்­றிச்­செல்லும் ஆழ்­கடல் நீர்­மூழ்­கிகள் டைட்­டா­னியம் எனும் மூலப்­பொ­ரு­ளால் தயா­ரிக்­கப்­பட்ட, 2 மீற்றர் விட்­ட­மு­டைய கோள வடி­வி­லா­ன­தாக இருக்கும்” எனத் தெரி­வித்­துள்ளார்.

அதிக ஆழத்தில் நீரின் அழுத்­தத்தை தாங்­கு­வ­தற்கு மிக வலி­மை­யான உலோக மூலப்­பொ­ரு­ளினால் உரு­வாக்­கப்­பட்ட நீர்­மூழ்கி வேண்டும். கார்பன் பைபர் ஆனது டைட்­டா­னியம் அல்­லது உருக்கை விட மலி­வா­னது. ஆனால் உறு­தி­யா­னது. எனினும், டைட்டன் போன்ற, மிகுந்த ஆழத்­துக்குச் செல்லும் கடற்­க­லங்­களில் இது அதிகம் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

பட­குகள், வான் பய­ணத்­து­றையில் கார்பன் பைபர்­ வெற்­றி­க­ர­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டாலும் மனி­தர்கள் பய­ணிக்கும் நீர்­மூழ்­கி­களில் இது பயன்­ப­டுத்தப்­பட்­ட­தில்லை என ஓஷன்கேட் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஸ்டொக்டர் ரஷ்ஷும் கடந்த வருடம் நேர்­காணல் ஒன்றில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எச்­ச­ரித்­தவர் பணி ­நீக்கம்

இந்­நீர்­மூழ்­கியின் உடற்­ப­குதி அதிக அழுத்­தத்தில் முறை­யாக சோத­னை­யி­டப்­ப­ட­வில்லை என ஓஷன்கேட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் டேவிட் லொக்ரிட்ஜ் தெரி­வித்­துள்ளார். இந்­நீர்­மூழ்­கியின் சிறிய மாதிரி ஒன்று அழுத்த சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது கார்பன் இழையின் குறை­பா­டுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.  

2018ஆம் ஆண்டு ஆய்­வ­றிக்­கை­யொன்றில் இது குறித்து டேவிட் லொக்ரிட்ஜ் தனது கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இந்­நீர்­மூழ்­கியில் பாது­காப்பு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் பல பிரச்­சி­னைகள் உள்­ள­தாகக் குறிப்­பிட்­டி­ருந்த அவர், மிக அதிக ஆழத்தில் டைட்­டனின் பய­ணி­க­ளுக்கு ஆபத்து ஏற்­ப­டலாம் என எச்­ச­ரித்­தி­ருந்தார்.

Titnic_2019.jpg

2019 ஆம் ஆண்டில் டைட்டன் பயணமொன்றின்போது பிடிக்கப்பட்ட படம் ‍ஸ்டொக்டன் ரரஷ் உட்பட மூவர் இதில் பயணித்தனர்

இந்­நீர்­மூழ்­கியை சோத­னைக்­குட்­ப­டுத்தி சான்­றிதழ் பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார். ஆனால், அவரின் எச்­ச­ரிக்­கைகள் நிராக­ரிக்கப்­பட்­ட­துடன், ஓஷன் கேட் நிறு­வ­னத்­தினால் பணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டார்.

நிறு­வ­னத்தின் இர­க­சியத் தக­வல்­களை வெளி­யிட்­டா­ரெனக் கூறி லொக்­­ரிட்­ஜுக்கு எதி­ராக ஓஷன்கேட் நிறு­வனம் வழக்கும் தொடுத்­தது. பதி­லாக, தன்னைப் பணி­நீக்கம் செய்­த­மைக்கு எதி­ராக லொக்­ரிட்ஜ் வழக்குத் தொடுத்தார். பின்னர் இவ்­வ­ழக்கு தீர்த்­துக் ­கொள்­ளப்­பட்­டது.

பாது­காப்புச் சான்­றிதழ்

அமெ­ரிக்க கப்­பல்­துறை பணி­யகம், நோர்­வேயைத் தள­மாகக் கொண்ட உல­க­ளா­விய அங்­கீ­க­ரிப்பு நிறு­வ­ன­மான டின்­எவி, பிரிட்­டனைத் தள­மாகக் கொண்ட லொயிட்ஸ் ரெஜிஸ்ட்டர் போன்ற நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து நீர்­மூழ்­கி­க­ளுக்­கான சான்­றி­தழைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

நீர்­மூழ்­கியின் வடி­வ­மைப்பு, நிர்­மாணம், உறு­தித்­தன்மை, பலம், பாது­காப்பு, செயற்­பாடு உட்­பட பல விட­யங்கள் பரீட்­சிக்­கப்­பட்டு சான்­றிதழ் வழங்­கப்­படும். 

நீர்­மூழ்கி பாவ­னைக்கு வந்த பின்னர், சான்­றிதழ் அங்­கீ­கா­ரத்தை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கு குறிப்­பிட்ட கால இடை­வெ­ளியில் மீண்டும் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

ஆனால், நீர்­மூழ்­கிகள் இத்­த­கைய சான்­றி­தழைப் பெற்­றி­ருக்க வேண்டும் என்­பது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வில்லை.

ஆபத்­தான ஜன்னல்

டைட்­டனின் முன்­பு­றத்­தி­லுள்ள கண்­ணாடி ஜன்னல் தொடர்­பிலும் பாது­காப்பு கரி­ச­னையை எழுப்­பி­யுள்ளார் லொக்ரிட்ஜ். 

இந்­நீர்­மூழ்கி 4,000 மீற்றர் ஆழத்­துக்குச் செல்லும் வகையில் உரு­வாக்­கப்­பட்ட போதிலும், மேற்­படி ஜன்­னலை தயா­ரித்த நிறு­வனம் அதை 1,300 மீற்றர் ஆழம் வரை பயன்­ப­டுத்­து­வ­தற்கே சான்றிதழ் வழங்­கி­யுள்­ளாக லொக்ரிட்ஜ் கூறி­யி­ருந்­தமை நீதி­மன்ற ஆவ­ணங்கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

அமெ­ரிக்­காவின் சன்ட்ட ஃபே எனும் அணு­சக்தி நீர்­மூழ்­கியின் தள­ப­தி­யாகப் பணி­யாற்­றிய ஓய்வு பெற்ற கடற்­படை கெப்டன் டேவிட் மர்­கெட்டும் இதே­போன்ற கருத்தை தெரி­வித்­துள்ளார்.

“அந்த நீர்­மூழ்கி பெரிய ஜன்­னலைக் கொண்­டுள்­ளது. அது பாதிக்­கப்­படக் கூடி­யது. இரா­ணுவ நீர்­மூழ்­கி­களில் ஜன்­னல்கள் இருப்­ப­தில்லை” என அவர் கூறி­யுள்ளார்.

கலி­போர்­னியாவின்  'மொன்­டெரி பே' நீரியல் பூங்கா ஆராய்ச்சி நிறு­வ­கத்தின் சமுத்­தி­ர­வியல் உயி­ரி­ய­லாளர் புரூஸ் எச் ரொபின்­சனும் இந்­நீர்­மூழ்கி குறை­பா­டு­களைக் கொண்­டுள்­ளது எனத் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் ஓய்­வு பெற்ற சுழி­யோ­டியும் நியூ­யோர்­க்­கி­லுள்ள ஆய்வாளர்கள் கழ­கத்தின் முன்னாள் தலை­வ­ரு­மான அல்­பிரெட் எஸ் மெக்­லானர், இந்­நீர்­மூழ்­கியில் பயணம்  செய்­வது குறித்து சிலர் தன்­னிடம் ஆலோ­சனை கேட்­ட­தா­கவும், ஆனால், அதில் ஈடுபட வேண்டாம் என தான் ஆலோசனை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கிக்கு சான்றிதழ் பெறுவதற்கு ஓஷன்கேட் ஆர்வம் செலுத்தவில்லை என 'மனிதர்கள் பயணிக்கும் நீரடி வாகனங்களின் குழு' எனும் நீர்மூழ்கித் துறை சங்கத்தின் தலைவரான வில்லியம் கோஹன் தெரிவித்துள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கிக்கு ஓஷன்கேட் நிறுவனம் பாதுகாப்புச் சான்றிதழைப் பெறவில்லை. சோதனைக்கு உட்படுத்தப்பட்டால் அதற்கு சான்றிதழ் கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும் என்கிறார் ஜேம்ஸ் கெமரோன்.

ஓஷன்கேட் ஸ்தாபகர் கருத்து

ஆனால், நீர்மூழ்கியின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்டொக்டன் ரஷ் அசட்டையாக இருக்கவில்லை என ஸ்டொக்டன் ரஷ்ஷுடன் இணைந்து 2009ஆம் ஆண்டு ஓஷன்கேட் நிறுவனத்தை ஸ்தாபித்த குய்லேர்மோ சோன்லெய்ன் கூறுகிறார். 2013ஆம் ஆண்டு ஓஷன்கேட்டிலிருந்து சோன்லெய்ன் விலகியிருந்தார். 

டைட்டனுக்கு என்ன நடந்தது என உடனடியாக அறிய முடியாதுள்ளதாகக் கூறிய அவர், எவ்வாறெனினும் ஆழ்கடல் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும் எனக் கூறியுள்ளார். 

“விண்வெளி ஆராய்சிகளில் போன்று, இந்த 5 ஆய்வாளர்களினதும் நினைவுகளை பாதுகாப்பதற்கான சிறந்த வழி என்னவென்றால், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, என்ன நடந்தது என அறிந்துகொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்கிறார் சோன்லெய்ன்.

விசாரணைகள்

டைட்டன் நீர்மூழ்கி அனர்த்தம் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபை  அறிவித்துள்ளது. டைட்டன் நீர்மூழ்கியின் தாய்க்கப்பலான த போலார் பிரின்ஸ் பதிவு செய்யப்பட்ட நாட்டின் விசாரணை அமைப்பு என்ற வகையில் இவ்விசாரணையை தான் நடத்தவுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. அதேவேளை அமெரிக்கக் கரையோரக் காவல் படையும் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/158627

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

Titnic_2019.jpg

2019 ஆம் ஆண்டில் டைட்டன் பயணமொன்றின்போது பிடிக்கப்பட்ட படம் ‍ஸ்டொக்டன் ரரஷ் உட்பட மூவர் இதில் பயணித்தனர்

250,000 டொலர் கொடுத்து…. கடலுக்கு அடியில் குந்தி இருந்து,
உயிருக்கு உத்தரவாதமில்லாத  மாட்டு வண்டி சவாரி.

  • கருத்துக்கள உறவுகள்

டைட்டன் நீர்மூழ்கியின் மீட்கப்பட்ட பாகங்கள் விபத்தின் மர்மத்தை கண்டுபிடிப்பதில் எப்படி உதவும்?

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,OCEAN GATE

 
படக்குறிப்பு,

டைட்டன் நீர்மூழ்கி

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜோனாதன் ஆமோஸ், அறிவியல் செய்தியாளர்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 47 நிமிடங்களுக்கு முன்னர்

அட்லான்டிக் கடலோரத்தில் எஞ்சிக் கிடக்கும் டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த எச்சங்களிலிருந்து சேகரிக்க முடிந்த அனைத்து குப்பைகளையும், ’ஹொரைசான் ஆர்க்டிக்’ (Horizon Arctic) என்ற மீட்பு கப்பல் சேகரித்துள்ளது.

கரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் பொருட்களுடைய அளவுகளின் மூலம், கப்பலின் ஆழ்கடல் ரோபோவால், குறிப்பிடத்தக்க கூறுகளைக் கரைக்கு கொண்டு வர முடிந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

இது 11 நாட்களுக்கு முன்பு, 5 பேருடன் வெடித்துச் சிதறிய டைட்டன் கப்பலின் பேரழிவுக்கான காரணத்தை ஆய்வு செய்து வரும், புலனாய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

நியூஃபவுண்ட்லாந்து பகுதியில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் டைட்டன் பாகங்களை பிபிசி குழு பார்வையிட்டது.

   
நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,CBC

 
படக்குறிப்பு,

நீர்மூழ்கியின் வியூ பாய்ண்ட் (view point) சாளரம்

நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பகுதியில் வேலை பார்த்து வரும் குவாசைட் தொழிலாளர்கள், நீர்மூழ்கியின் எஞ்சியிருக்கும் துண்டுகளை தார்ப்பாய்கள் மூலம் மறைக்க முயன்றனர். ஆனாலும் அங்கே சில துண்டுளைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது.

டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர் கலவையில் உருவாகியிருந்த சிலிண்டர் வடிவ உருளை ஒன்று மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

அதேபோல் டோனட் (doughnut) வடிவில், உலோகங்களால் ஆன பொருள் ஒன்று கிடந்தது. அதன் நடுவில் பெரிய துளையும் இருந்தது. அது அநேகமாக நீர்மூழ்கியின் வியூ பாய்ண்ட் (view point) சாளரமாக இருந்திருக்கும். அதன் துளை வழியாக கிரேன் அதைத் தூக்கிச் சென்றது.

ஆனால் அதேநேரம், அதன் அக்ரிலிக் ஜன்னல்கள் இப்போது எங்கிருக்கும் என்பது குறித்து நமக்குத் தெரியவில்லை. அதனுடைய வலிமை குறித்தும், 4கிமீ ஆழத்தில் உள்ள அழுத்தத்தை இந்த சாளரங்கள் எப்படி சமாளித்திருக்கும் என்பது குறித்தும் பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.

இந்த நேரத்தில் டைட்டானியத்தால் செய்யப்பட்ட விளிம்புகள் போன்ற பொருட்களும் அங்கே கொண்டு வரப்பட்டன.

டைட்டனின், கார்பன் ஃபைபரால் ஆன உருளையான மேற்பரப்பின் இரு முனைகளிலும் ஒட்டப்பட்டிருந்த உலோக வளையங்கள் இவை. இந்த விளிம்புகளின் பின் பகுதியில், தொப்பி போன்ற மற்றொரு உபகரணம் மூலம் இணைக்கப்பட்டிருந்தது.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,SHUTTER STOCK

 
படக்குறிப்பு,

நீர்மூழ்கியின் டைட்டானிய விளிம்புகள்

இந்த விளிம்புகளும், கார்பன் ஃபைபர் பொருட்களுடன் அதற்கு இருந்த இணைப்பும்தான், அமெரிக்க - கனடா அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணையின் மையப்புள்ளியாக இருக்கும் எனத் தெரிய வருகிறது.

“அக்ரிலிக் சாளரங்களுக்கும், டைட்டானிய அரைகோள குவிமாடங்களுக்கும் இடையே உள்ள இடைமுகத்தையும்; டைட்டானிய விளிம்புகளுடன் கார்பன் ஃபைபர் பிணைக்கப்பட்டிருக்கும் பகுதியையும்தான் இங்கே முதன்மை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்,” என பேராசிரியர் பிளேர் தோர்ன்டன் பிபிசியிடம் கூறினார். இவர் பிரிட்டனின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த இரண்டு முக்கியக் கூறுகளும் மீட்கப்பட்டிருப்பதன் மூலம், இந்த விபத்து குறித்த விசாரணையை இன்னும் துரிதமாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,SHUTTER STOCK

அங்கு நின்றுகொண்டிருந்த லாரிகளில், குப்பைகள் ஏற்றபட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்தக் குப்பைகளில் என்ன இருந்தது என்பது குறித்து எங்களால் யூகிக்க முடியவில்லை. ஒருவேளை அது கார்பன் ஃபைபரின் மேலோடு துண்டுகளாக இருந்திருக்கலாம்.

இந்த விபத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் அங்கிருந்திருந்தால், அந்தக் குப்பைகளை ஆய்வு செய்ய வேண்டுமெனக் கேட்டிருப்பார்கள். விளிம்புகளுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த கார்பன் அடுக்குகளை, பல வழிகளில் நம்மால் பிரித்தெடுக்க முடியும்.

கரைக்கு வந்து சேர்ந்த மிகப் பெரிய பொருட்களில், பின்பக்கத்தில் உபகரணங்களை வைக்கும் இடமாக இருந்த பாகமும் ஒன்று. நீர்மூழ்கி ஆழ்கடலுக்குள் மூழ்கிப் பயணிக்கும்போது ஒரு கூர்மையான வால் போன்ற கூம்பு மூலம் மூடப்பட்டிருந்தாலும், உபகரணங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட பின்புற பாகம் மட்டும் திறந்த கூண்டாகவே இருக்கும்.

தற்போது நீர்மூழ்கி வெடித்து விபத்திற்குள்ளாகி இருப்பதன் காரணமாக இந்தப் பின்புற பாகம்(rear equipment bay) தனியே பிரிந்து வந்துள்ளது. விபத்தின் காரணமாக அது மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,SHUTTER STOCK

 
படக்குறிப்பு,

உபகரணங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட பின்புற பாகம் (Rear equipment bay)

அதேபோல் அங்கே நீட்டமாகத் துருத்திக் கொண்டிருக்கும் கம்பி ஒன்று இருந்தது. அது ஒரு ஆன்டெனா. நீர்மூழ்கி கடலின் மேற்பரப்பில் இருக்கும்போது, இரிடியம் செயற்கைக் கோள் தொலைபேசி நெட்வொர்க்குடன் இணைப்பில் இருப்பதற்கு இந்த ஆண்டெனா பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆன்டெனா சுயாதீனமாக இயங்கக் கூடியது. டைட்டன் நீர்மூழ்கி ஆழ்கடலுக்குள் செல்லத் துவங்கிய பிறகு, இந்த ஆன்டெனாவிலிருந்து எந்தச் செய்தியும் வரவில்லையென்றால், கடலுக்குள் சென்ற நீர்மூழ்கி திரும்பி வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதற்கான வலுவான அறிகுறியாக அது கருதப்படுகிறது.

அங்கேயிருந்த லாரிகளில், தாழ்த்தப்பட்ட நீண்ட மெட்டல் கம்பிகள் காணப்பட்டன. அது டைட்டனின் தரையிறங்கும் சட்டத்தில் இருந்தவற்றின் எஞ்சியுள்ள பகுதிகளாகும்.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

தரையிறங்கும் சட்டத்தின் எச்சங்கள்

 
நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

வெள்ளை நிற பேனல்கள்

குவாசைடில் காணப்படும் பெரிய, வெள்ளை நிற பேனல்கள் வெளிப்புற உறைப்பூச்சின் ஒரு பகுதி. கார்பன் ஃபைபர் மேலோட்டத்தின் வெளிப்புறத்தில் செல்லும் கம்பிகள் மற்றும் குழாய்களை மறைப்பதற்கு அவை பயன்படுத்தப்பட்டன.

சிலர் இந்த பேனல்களை ‘ஹல்’ (hull) துண்டுகள் என்று கூறுகின்றனர். ஆனால் கார்பன் ஃபைபரின் அழுத்த பாத்திரத்தின் (Fiber Pressure vessel) துண்டுகள் கருப்பு நிறத்தில், தடித்து சற்று கடினமானதாக இருக்கும்.

தற்போது இந்த வெள்ளை நிற பேனல்கள் லாரிகளின் மீது இறக்கி வைக்கப்பட்டுள்ளதால்தான் சற்று வளைந்து காணப்படுகின்றன.

https://www.bbc.com/tamil/articles/c6pdvgpvqnwo

  • கருத்துக்கள உறவுகள்

டைட்டானிக் கப்பலை காண விருப்பமா..? நீர்மூழ்கி விபத்துக்கு பிறகும் வெளியான விளம்பரம்

1912ஆம் வருடம், “டைட்டானிக்” எனும் சொகுசு கப்பல் வட அட்லாண்டிக் கடலில் தனது முதல் பயணத்திலேயே மூழ்கியதும், 1500 பேர் பலியானதும், உலகளவில் இன்று வரை பேசப்படும் ஒரு சோக நிகழ்வாக இருக்கிறது.

ஆழ்கடலில் தரைதட்டி நிற்கும் அந்த “டைட்டானிக்” கப்பலை காண அவ்வப்போது முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

அத்தகைய ஒரு முயற்சியாக இரு வாரங்களுக்கு முன், ஆழ்கடல் ஆராய்ச்சி சுற்றுப்பயணத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் “டைட்டன்” நீர்மூழ்கியில், டைட்டானிக் கப்பலை காண அதன் மாலுமி உட்பட 5 பேர் பயணித்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த நீர்மூழ்கி வெடித்து, அதில் பயணம் செய்த ஐவரும் பலியானார்கள். இதனால் ஆழ்கடல் சுற்றுப்பயண திட்டங்களை காலவரையின்றி மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

50.jpg

இதற்கிடையே, அடுத்த ஆழ்கடல் சுற்றுப்பயணத்துக்கான ஓஷன்கேட் நிறுவன விளம்பரம் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டைட்டானிக் கப்பலை காண விரும்புவோருக்கான சுற்றுபயண விபரங்களையும், கட்டணத்தையும் அதன் இணையதளத்தில் மீண்டும் விளம்பரப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின்படி, ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை காணும் சுற்றுப்பயணத்திற்கு பயணத்தொகை சுமார் ரூ.2 கோடிக்கு மேலாகிறது. ஒரு பயணம் அடுத்த ஆண்டு ஜூன் 12இல் தொடங்கி ஜூன் 20 வரையிலும் மற்றொன்று ஜூன் 21 தொடங்கி ஜூன் 29 வரையிலும் என 2 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

முதல் நாளன்று பயணிகள், கடலோர நகரமான செயின்ட் ஜான்ஸுக்கு வர வேண்டும். அதன் பின்னர் தங்களுடன் பயணம் செய்யும் குழுவினரை அவர்கள் சந்தித்து கப்பலில் ஏறுவார்கள். அக்குழு நீர்மூழ்கியில் டைட்டானிக் புதையுண்ட இடத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கிருந்து டைட்டானிக் மூழ்கிய இடத்திற்கான 400 நாட்டிகல் மைல் பயணத்தை தொடங்கும் போது, கப்பலில் வாழ்க்கைமுறையைப் குறித்து பயணிகள் உணர்ந்திருப்பார்கள். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனம், காணாமல் போன, “டைட்டன்” நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடந்து வரும்போதே, “துணை பைலட்” (sub pilot) பணிக்கு ஆட்களை தேர்வு செயவ்து தொடர்பாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்ததும், அதற்கு எழுந்த கடும் விமர்சனங்களால், அது அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/260880

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.