Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியார் ராணுவம் என்றால் என்ன? சோழர்களும் பேரரசை விரிவாக்க அதை பயன்படுத்தினார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியபிரமாணத்தில் சிவில், இராணுவ என்ற வேறுபாடு இல்லை.

Oath of Allegiance - ஒரு நாட்டுக்கு, அல்லது நபருக்கு, அல்லது முடிக்கு விசுவாசமாய் இருப்பேன் - என்பதே சாராம்சம்.

இதை Armed Forces Covenant உடன் போட்டு குழப்பி…தானும் குழம்பி ஏனையவரையும் குழப்ப பக்கம் பக்கமாய் நீட்டி முழக்கிவிட்டு…

வாக்னர் கூலிகளுக்கும், ரஸ்ய அரசுக்கும் இடையில் Armed Forces Covenant ஓ..அல்லது அதை ஒத்த ஏற்பாடோ இல்லை.  ரஸ்ய அரசு வாக்னர் தலைமையிடம் காசு கொடுக்கும். அதை தலைமை வாக்னருக்கு செலவழிக்கும்.

ஆனால் இராணுவத்தில் அப்படி அல்ல. அங்கே ஒவ்வொரு வீரருக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும், அதன் மூலம் அரசுக்கும் ஒரு நேரடி தொடர்பு உள்ளது. 

இதுதான் வித்தியாசம். இதை புரியாமல் எமது நேரத்தை பாழாக்கி விட்டு,

இப்ப ஏதோ நாம் கையை பிடிச்சு இழுத்த மாரி நேரம் இல்லை என கதை போகுது😂.

 

On 4/7/2023 at 14:07, Justin said:

உங்கள் இந்த வாதத்தின் படி, வக்னர் குழுவின் கிளர்ச்சி என்பது ரஷ்யாவின் இராணுவத்தின் கிளர்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாமோ? அப்படியென்றால், இது பற்றி ஓடிய ஒரிஜினல் திரியில் "இங்கே இராணுவம் புரினுக்கு எதிராகத் திரும்பவில்லை, எனவே இது பெரிய விடயமல்ல" என்று நீங்கள் வாதாடியது "வேற வாயா

தம்பி இந்த டீ (கேள்விக்கு பதில்) இன்னும் வரல்ல😂

  • Replies 85
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

சத்தியபிரமாணத்தில் சிவில், இராணுவ என்ற வேறுபாடு இல்லை.

Oath of Allegiance - ஒரு நாட்டுக்கு, அல்லது நபருக்கு, அல்லது முடிக்கு விசுவாசமாய் இருப்பேன் - என்பதே சாராம்சம்.

இதை Armed Forces Covenant உடன் போட்டு குழப்பி…தானும் குழம்பி ஏனையவரையும் குழப்ப பக்கம் பக்கமாய் நீட்டி முழக்கிவிட்டு…

வாக்னர் கூலிகளுக்கும், ரஸ்ய அரசுக்கும் இடையில் Armed Forces Covenant ஓ..அல்லது அதை ஒத்த ஏற்பாடோ இல்லை.  ரஸ்ய அரசு வாக்னர் தலைமையிடம் காசு கொடுக்கும். அதை தலைமை வாக்னருக்கு செலவழிக்கும்.

ஆனால் இராணுவத்தில் அப்படி அல்ல. அங்கே ஒவ்வொரு வீரருக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும், அதன் மூலம் அரசுக்கும் ஒரு நேரடி தொடர்பு உள்ளது. 

இதுதான் வித்தியாசம். இதை புரியாமல் எமது நேரத்தை பாழாக்கி விட்டு,

இப்ப ஏதோ நாம் கையை பிடிச்சு இழுத்த மாரி நேரம் இல்லை என கதை போகுது😂.

 

தம்பி இந்த டீ (கேள்விக்கு பதில்) இன்னும் வரல்ல😂

மிகவும் ஆயாசம் தரும் உரையாடல்கள் இவை. யாழில் இரண்டு உறுப்பினர்களுடன் (மற்றது யாரெண்டு ஊகியுங்கள்!) ஒரு விடயத்தைப் விவாதிக்க ஆரம்பித்தால், காட்டேறியின் மேலங்கியைப் பற்றிப் பிடித்த மாதிரித் தான்: காடு மேடெல்லாம் இழுத்து நமக்கே "சீயெண்டு" ஆக்கி விடுவார்கள் 😂.

இரண்டு பேரிலும் இருக்கும் ஒரு பொதுக்குணவியல்பு: ஒரு தவறான தரவை சரியென்று நிரூபிக்க ஒக்ஸ்போர்ட் அகராதியில் இருக்கும் வரைவிலக்கணத்தையே மாற்றி எழுதி விடுவர். The Professor and the Mad man இல் வந்தது போல "சொல்லாக்க" நிபுணர்களாக இருவரையும் மாற்றி விட்டால் சமூகத்திற்குப் பலன் கிடைக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

மிகவும் ஆயாசம் தரும் உரையாடல்கள் இவை. யாழில் இரண்டு உறுப்பினர்களுடன் (மற்றது யாரெண்டு ஊகியுங்கள்!) ஒரு விடயத்தைப் விவாதிக்க ஆரம்பித்தால், காட்டேறியின் மேலங்கியைப் பற்றிப் பிடித்த மாதிரித் தான்: காடு மேடெல்லாம் இழுத்து நமக்கே "சீயெண்டு" ஆக்கி விடுவார்கள் 😂.

இரண்டு பேரிலும் இருக்கும் ஒரு பொதுக்குணவியல்பு: ஒரு தவறான தரவை சரியென்று நிரூபிக்க ஒக்ஸ்போர்ட் அகராதியில் இருக்கும் வரைவிலக்கணத்தையே மாற்றி எழுதி விடுவர். The Professor and the Mad man இல் வந்தது போல "சொல்லாக்க" நிபுணர்களாக இருவரையும் மாற்றி விட்டால் சமூகத்திற்குப் பலன் கிடைக்கலாம்!

நிர்வாக முடிவால் - இந்த அலுப்பில் இருந்து கொஞ்சம் விடுதலை என்றே நான் எண்ணுகிறேன்.

பலதடவை விட்டு விட்டு போ என ஒரு மனம் சொன்னாலும்.

பித்தலாட்டம் செய்பவர்களே நிண்டு ஆடும் போது, உண்மை ஒதுங்கி போக கூடாது என்று இன்னொரு மனம் சொல்லும்.

இல்லாவிட்டால் - நிலவில் மனிதன் கால் பதிக்கவே இல்லை என நிறுவியே விடுவார்கள்.

கோவிட் காலத்தில் நீங்கள் மிகுந்த பிரயத்தனம் செய்தீர்கள். நன்றி.

நான் கூட ஒமிக்கிரோனின் பின் கோவிட் படிப்படியாக வலுவிழந்து நிலமை வழமையாகும் என எழுதிய போது - பரிகாசிக்கப்பட்டேன்.

கடைசியில் அப்படித்தான் நடந்தது. பரிகாசித்தவரும் இலங்கை போய் வந்தார்🤣.

எது எப்படியோ, தவறு விட்ட போது தவறை ஏற்று, எம் கருத்துக்கு உண்மையாக கடைசி வரை எழுதினோம் என்ற மன நிம்மதியே போதும். 

இதை விட வேறு எந்த எதிர்பார்ப்போடு எழுதவும் இல்லை 🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியப்பிரமாணம் - ஒருநபர் தேசம், அரசு போன்றவற்றுக்கு செய்து கொடுக்கும் ,  அவர் மீது சுமத்தப்பட்ட பொறுப்பை செவனே நிறைவேற்றுவேன் என்று செய்து கொடுக்கும் உறுதி மொழி 

Armed  Forces  Covenant - (பிரித்தானிய) தேசத்தால், அரசால்  பிருத்தானிய்ய படைகளுக்கு வழங்கப்பட்டும் உறுதி மொழி.

அடிப்படை  வித்தியாசங்கள் கூட அறியாமல், சத்யபிரமணத்தையும்,  Armed  Forces  Covenant  ஒப்பிட்டு மீண்டும் அறியாமையை காட்டி...

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு: நான் ஒரு போதும் armed  Forces  Covenant இ இழுக்கவில்லை. 

சத்திய பிரமாணங்கள்  வேறுபடுகிறது என்றே சொன்னேன்.

இந்த சத்யபிரமானங்களில்  வேறுபாடு இல்லை என்போர் இங்கே தான் இருக்கிறார்கள்.

மீண்டும் அவர்கிளே நிரூபித்து காட்டி இருக்கிறார்கள், சத்தியப்பிரமாணம் பற்றியும் அறவே  தெரியாது. அதே போல armed forces covenant எதுக்கு என்றும் தெரியாது.  

 

பிரசாவுரிமை சத்திய பிரமாணம் 

https://www.gov.uk/government/publications/british-citizenship-successful-applicants/citizenship-ceremonies-guidance-notes-english-and-welsh

 

English version

Oath of allegiance

I, (name), swear by Almighty God that, on becoming a British citizen, I will be faithful and bear true allegiance to His Majesty King Charles III, his Heirs and Successors, according to law.

Affirmation of allegiance

I (name) do solemnly, sincerely and truly declare and affirm that on becoming a British Citizen, I will be faithful and bear true allegiance to His Majesty King Charles III, his Heirs and Successors, according to law.

Pledge

I will give my loyalty to the United Kingdom and respect its rights and freedoms. I will uphold its democratic values. I will observe its laws faithfully and fulfil my duties and obligations as a British citizen.

 

பிரித்தானிய  இராணுவ சத்திய பிரமாணம் 

 

https://www.army.mod.uk/news-and-events/news/2022/09/british-army-recruits-swear-oath-of-allegiance-to-new-king-for-first-time/

"I swear by almighty God that I will be faithful, and bear true allegiance to his Majesty King Charles III, his heirs and successors, and that I will as in duty bound, honestly and faithfully defend his Majesty, his heirs and successors in person, crown and dignity, against all enemies, and will observe and obey all orders of His Majesty, his heirs and successors and the generals and officers set over me."

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன புதிய விடயமா?

ஒன்று சாதாரண குடிகளுக்கானது…

மற்றையது ஆயுதம் எடுத்து போராடும் அரச படைகளுக்கானது.

மேலே நான் எங்கும் இவை வரிக்கு வரி ஒன்றே என கூறவில்லை.

ஆனால் சாராம்சம் ஒன்றுதான் - பிரித்தானிய முடிக்கு விசுவாசமாய் இருப்பது.

பிகு

1. இன்னும் ஜஸ்டின் கேட்ட கேள்விக்கு பதில இல்லை (திரிக்கு திரிக்கு ஏறுக்குமாறாய் எழுதியது)

2. அத்தோடு - ரஸ்ய படைகள் எடுக்கும் சத்தியபிராமாணம் இது, வாக்னர் எடுக்கும் பிரமாணம் இது - என எதுவும் ஆதார பூர்வமாக இங்கே இன்னும் இணைக்கப்படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சத்யபிரமாணம்  சிவில். இராணுவம் ஒன்றே என்று விட்டு. அதை கொண்டே விளையாட்டு .. எல்லாவற்றையும் ஒன்றாகி நீட்டி விட்டு..  

சாராம்சம் ஒன்றில்லை. சும்மா கதை விடுவது. நம்பிக்கை எல்லாவற்றுக்கும் அடிப்படை.  அதை வைத்து சாராம்சம் ஒன்று என்பது 

(தெரியாமல்) அதை வைத்து தான் விளையாட்டு .. போன்றவற்றை ஒன்றாகி, ஒன்றில் சத்யபிரமமனம் எடுத்தால்,  இராணுவத்தில் வீரர்கள் என்ற .. என்ன விளக்கம் என்று சொல்லுவது?

சொன்னதின் படி இராணுவம் என்ற அமைப்பே இருக்க தேவையில்லை.

சரி விடுவோம். அறியாததால் ஒன்றும் இல்லை. அதை ஏற்றகா விட்டாலும் பரவாயில்லை, அறிந்து கொண்டது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு நாட்டுக்கு, அல்லது நபருக்கு, அல்லது முடிக்கு விசுவாசமாய் இருப்பேன் - என்பதே சாராம்சம்.

 நான் எழுதியதற்கு மட்டுமே நான் பொறுப்பு. ஏனையோரின் புரிதலுக்கு அல்ல🤣.

பிகு

என்னிடம் ரஸ்யாவே வாக்னர் தமது அரச படை இல்லை என கூறிய ஆதாரம் இருக்கு🤣.

கொஞ்சம் ஓட விட்டு…அதை ரிலீஸ் பண்ணுவம் என இருக்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்


என்னவென்றால், இங்கே ர் சிலருக்கு ஒரு framework இருக்கிறது. அதை விட்டால் படை அமைப்பு இல்லை.

அனால், அடிப்படை தெரியாமல், வேறு படை அமைப்பை அவர்களிடம் எதிர்பார்பது, என்னுடைய முட்டாள் தனம்.   

மறுவளமாக ஆதாரம் இருக்கிறதா - புடின் இடம் வாக்னர் தலைமை எடுக்கவில்லை என்று.

ரஷ்யா வெளியில் எதுவும் சொல்லலாம், US pmc போல (அதுக்காகவே US சட்டத்தை போட்டு வைத்து இருக்கிறது). 

அரசுகள் சொல்வதை நம்பும் , அதை ஆதாரம்  காட்டும் ஒருவரை, என்னவென்று சொல்வது?

அவரின் அறிவு அவ்வளவு தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹா…ஹா…

ரஸ்யாவே வாக்னர் ரஸ்ய அரச படை இல்லை என்று சொல்லும்….

ஆனால் அதெல்லாம் இல்லை…

எமக்கு….

ரஸ்ய அரச படையின் சத்தியபிரமாணம் எதுவென தெரியாது …

வாக்னரின் பிரமாணம் எது எனவும் தெரியாது…

ஆனால்… இரெண்டும் ஒன்றுதான்…ரஸ்யாவே மறுத்தாலும்…வாக்னர் ரஸ்ய அரச படைதான் என்போம்….

ஏன் என்றால்……

எங்களுக்கு நவதுவாரத்தாலும் அறிவு பொங்கி வழிகிறது🤣.

பிகு

ரஸ்யா வாகனருக்கு சும்மா ஜாலிக்கு கூலி கொடுக்கவில்லை. அதன் dirty work ஐ செய்ய கூலி கொடுக்கிறது.

முதலில் போய் plausible deniability எண்டால் என்ன என கூகிள் பண்ணி பாருங்கள்.

சில வேலைகளை செய்ய வேண்டும், ஆனால் அதனால் பிரச்சனை வந்தால் - அவை எம் படை அல்ல என சொல்லி தப்பிக்கவும் வேண்டும்.

இவ்வாறு ரஸ்யாவுக்கு plausible deniability ஐ கொடுக்கும் வகையில் கூலிக்கு வேலை செய்யும் படைதான் வாக்னர்.

ஆனால் உக்ரேன் யுத்தத்தில் வாக்னரின் வகிபாகம், அண்மையில் ரஸ்யா காசு கொடுப்பது என புட்டின் சொல்லியது…இந்த plausible deniability ஐ உடைத்து விட்டது.

இப்போ ரஸ்யாவுக்கு கூலிக்கு வேலை செய்யும் படைதான் வாகனர் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது - ஆனால் இப்போதும் வாக்னர் ரஸ்ய அரச படை அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

அரசுகள் சொல்வதை நம்பும் , அதை ஆதாரம்  காட்டும் ஒருவரை, என்னவென்று சொல்வது?

அவரின் அறிவு அவ்வளவு தான்.

 

உறவே🙏,

இந்த முக்கியமான புள்ளியில் தான் உங்களுடன், கோசான், நான் ஆகியோர் ஒரே கோட்டில் வரமுடியாமல் நிற்கிறோம்.

ஒரு அரசு, அல்லது பொறுப்பான அமைப்பு சொல்வதை நம்புவது அறிவீனம் என்கிறீர்கள் நீங்கள்.

ஒரு அரசு, பொறுப்பான நிர்வாகம் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை விட அந்த அரச நிலைப்பாடு தான் கள நிலவரத்தைத் தீர்மானிக்கும் காரணி என்கிறோம் நாம்.

இது புரியாமல் அரசு/நிர்வாகம் உண்மை, பொய் தேட இதென்ன தியோலொஜி, பிலோசொபியா? அப்படி உண்மை பொய் தேடுவதால் யாருக்கு என்ன பயன்பாட்டு நன்மை இருக்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்

 

16 hours ago, Justin said:

ஒரு அரசு, அல்லது பொறுப்பான அமைப்பு சொல்வதை நம்புவது அறிவீனம் என்கிறீர்கள் நீங்கள்.

ஒரு அரசு, பொறுப்பான நிர்வாகம் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை விட அந்த அரச நிலைப்பாடு தான் கள நிலவரத்தைத் தீர்மானிக்கும் காரணி என்கிறோம் நாம்.

இது புரியாமல் அரசு/நிர்வாகம் உண்மை, பொய் தேட இதென்ன தியோலொஜி, பிலோசொபியா? அப்படி உண்மை பொய் தேடுவதால் யாருக்கு என்ன பயன்பாட்டு நன்மை இருக்கிறது? 


வாதம்  என்றால் எப்போதோ முடிந்துவிட்டது என்பதை விளங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறன்.

சொன்னதின் படி - எல்லா சத்திய பிரமாணமும் ஒன்று. ஒரு விடயத்தில் (சமயம், திருமணம், விளையாட்டு ..) எடுத்து விட்டு மற்ற விடயத்தில் (எடுக்காமலே, ஏனெனில் எல்லாம் ஒன்று  தானே) விருப்பம், இயலுமை இருந்தால்   ஈடுபடலாம். அப்படி ஈடுபடுவதன் வழியாக அவர் அந்த துறையில் ஆழத்து விடயத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

எனவே, வாக்னர் சாதரணமகா இரசியாவுக்கு சண்டை பிடித்ததின் மூலம், அரசு படைகள் ஆகிறது. வாதம் முடிந்தது.

இந்த நிலை எதனால் வந்தது?

ஒரு பிம்பத்தை நம்புவது அல்லது  கட்டுவது - எந்த பகுப்பாய்வும்  (சிந்தனையும்) இன்றியும் ஒன்றில் வாதத்தை உருவாக்குவது, அரச அறிவித்தல்களை, (அல்லது முன்வரிசை  ஊடகம் சொல்லும் செய்திகளை மேற்கோளாக எடுப்பது, இங்கே எடுக்கவில்லை ), அதை கொண்டு வாதிடுவது.

இதுவே சொல்லப்பட்ட வாதத்தை   தெரியாமலே முறிக்கப்பட்டது. 

வாதத்துக்காக, ஏறத்தாழ ambush செய்து (ருசியா அறிவிப்பால், இதை முன்பே சொல்லி இருந்தால் 2-3 பதிவுகளில் விடயம் முடிந்து இருக்கும்). அனால், அதிலும், பிறழ்வு, ஏனெனில் ஆய்வு இல்லை.      

அனால், இது வாதத்தை கடந்தது. ஒருவற்கு மட்டும் பதிவதில்லை.

இங்கே வாக்னர், நிச்சயம் pmc என்று தெரியுமா? அல்லது  இல்லை என்று தெரியுமா?

எனவே. சாத்தியக்கூறுகள் பற்றியே அலசப்படுகிறது (வேறு  எதாவது உளவு கிடைத்தால் ஒழிய. இதில் நான் ஒன்றும் உளவில்  ஈடுபடவில்லை).

நான் சொல்லுவது எல்லாவற்றையும் பார்த்து.  தற்செயலாக நான் பிழைத்தாலும் , எனது முறை சரி; கிடைக்கும் நேரத்தில்  ஏறத்தாழ  systematic, critical analysis - யதார்த்தம், வரலாறு, நடைமுறை போன்றவற்றின் அடிப்படையில்.  

வாக்னர் pmc என்பது சரி வந்தால் அது அதிர்சடமே தவிர , systematic, critical analysis அல்ல.

ஏனெனில், வாக்னரை pmc ஆக உருவகப்படுத்துவது ருசியா நலனுக்கு நன்மை (இப்போதைய நிலையில் மேற்கிற்கும் வசதி, ஏனெனில் ரஸ்சியாவில் சட்டவிரோதமான அமைப்பு ஒன்றின் வழியாக யுத்த குற்றங்களை ருசியா அரசு மீது சுமத்த முடியும் ஆயின், சட்டபூர்வமான மேற்கு pmc வழியாக மேற்கு அரசுகள் மீது குற்றம் சுமத்த முடியும்).    

இப்போதைய நிலையில், வாக்னர் pmc  என்ற வெளித்தோற்றத்துடன் விடயத்தை ருசியா மூடக்கு கூடிய வாய்ப்புகளே கூட.   

ஆனாலும், நான் ஆய்வின் அடிப்படையிலான முடிவையே சொல்வது.


அரசு அதற்கு வேண்டிய தோற்றப்பாடே காட்டும்.    

வேறு ஓர் பக்கமும் பார்க்காமல், ருஷ்யா அரசு (அல்லது வேறு எந்த அரசாவது சர்ச்சைக்கு உரிய விடயங்களில்)  சொன்னதை ஏற்பது அவரவரின்  முடிவு.

அரசுகள் எல்லா நேரமும் பொறுப்பை ஏற்கும் என்றும் இல்லை. மறுக்கும் என்றும் இல்லை. 

ரஸ்சியாவி வோ  அல்லது எந்த அரசோ. அதுக்கு வசதியானதை  வெளியில் சொல்லும்.

இரகசியமாக வாக்னர் உறவை வைத்து இருப்பது அதற்கு நன்மை. ஒன்று மறுக்கலாம். மற்றது, நேரடி கட்டளைக்கு கீழ் வாக்னர்  படைகள். 

இப்படியான ஏற்பாடு  அமெரிக்கா, மற்றும் பொதுவாக மேற்கு நாடு படை அமைப்பிலும் இருக்கிறது.  

அதையே US, UK அது போல வேறு அரசுக்களும்  செய்கிறது, இப்படியான விடயங்களில் (special forces அல்லது அவ்வப்போது வேறு  பெயரிட்டு)

அனால் அப்படி இருப்பதையே மறுக்கும்.

(இதை விட இரகசிய சத்திய பிரமாணங்களும் இருக்கிறது. எவராவது  , இரகசியமாக வைத்திருக்க வேண்டிய பிணைப்பின் சத்தியபிரமாணத்தை வெளியில் விடுவார்களா, மேற்கு அரசுகளையும் உள்ளடக்கி? மற்றது, படைகளுக்கு இடையேயே வெவேறு சத்தியப்பிரமணங்களும் இருப்பதும் தெரியவில்லை).

உ.ம். US இன் special forces  சத்தியப்பிரமாணம் வெளியில் வராது. CIA இந்த சத்திய பிரமாணம் சற்று வேறுபட்டது.
   
(உ.ம். ஆக cia இல் sac ஓர் பிரிவு இருந்தது 1957 இல் இருந்து , அப்படி இருந்ததே வெளியில் தெரிந்தது 2016 இல். குறிப்பக்க அதிபருக்கு நேரடிக் கட்டுப்படு, கட்டளை கீழ் இயங்குவது. ) 

cia ஏ ஆரம்பித்து 10 - 15 வருடங்கள் பின்பே வெளியில் தெரிந்தது.

உ.ம். ஆக delta force என்ற மிகவும் இரகசியமாக (இப்போது தெரியும்) இருந்த படைப்பிரிவுக்குள்ளேயே , வெவ்வேறு பிரிவுகள் இருக்கின்றன இரகசியத்தன்மையான 

அதனால், அது கூலிப்படை ஆகுமா?  அரச படைகள் இல்லை என்று ஆகுமா? 

இதை தான் ரருசியாவும்  செய்கிறது, வேறுபாடுகளும் இருக்கிறது, அனால் அந்த வேறுபாடுகள் அடிப்படை தன்மையை மாற்றாது.

இவை உதாரணங்களே. 

ஓர் அரசு எப்படி படை அமைப்பை, எந்த அளவு இரகசியமாக , உறவை  மறைத்து வைத்து இருக்க வேண்டும் என்பது அதன் தெரிவு. 

நீங்கள் கூட உங்கள் (கேள்வியில் இருந்து) எதிர்பார்ப்பது, மேற்றகில் இருப்பதே ஒரே பெரு படைக்கட்டமைப்பு. அதாவது முறைசார் / மரபு வழி படைக்கட்டமைப்புகள் (வேறு நாடுகளில்) இருக்க வேண்டும். 

இந்த விடயங்களை சுருக்கமாக சொல்லியும், புரியவில்லை  
   
உங்கள் மற்ற கேள்விக்கு ஏற்கன  பதில் அளித்து விட்டேன் ,அனால், மேலே சொன்ன உதாரணங்கள் மேலதிகமாக உறுதிப்படுத்தி இருக்கும் .

தற்செயலாக, மேலே சொன்ன படைப்பிரிவுகள் கிளர்ந்தால், அது அமெரிக்காவோ (அல்லது வேறு எந்த நாடுகளின்) மரபு வழி  படையணிகள் கிளர்ந்ததாக இருக்குமா, அந்த படை  பிரிவுகள் அமெரிக்கா அரசின் (அல்லது வேறு எந்த நாடுகளின்) அங்கமாக இருந்தும் ?
 
அனால், இரு நிகழ்வுகள் வாக்னரின் நடைமுறையை, அதாவது அரச படைகள் என்று  காட்டியது.

அது ருசியா அரசு, உறவை மறைப்பதற்கு, சிந்தித்து, வாக்னருக்கும், ருசிய அரசுக்கும் சம்பந்த இல்லை என்ரா அறிவித்தலை விட வலிதானது. 

ஒன்று, பிரிகோஸின் நீதி கோரியே போராட்டம் புடினை நோக்கி (இதை நான் கேட்டு இருந்தேன் இதற்கு  பதில் இல்லை)

(இது காட்டுவது படைக் குடும்ப உணர்வை)

இரண்டு, புடின் முதுகில் குத்தியது என்பது (ஏனெனில், துரோகம், ஏமாற்றத்துக்கு பழக்கப்பட்ட ஒருவர், அரச  அதிபர் என்ற நிலையில், அவமானத்தையும்  தாங்கி கொண்டு வெளிக்காட்டிய  உணர்வு). 

 இரு பக்கமும் நடந்து கொண்டது, ஒவொருவருக்கு மற்றவர் (படை) இரத்தக் கடப்படுகள் இருப்பதற்கு ஒத்தது.   

சிலர் சொல்லுவது ருசியா சொல்லுவதை கொண்டே தவிர, வேறு எந்த பக்கமும் பார்க்காத முடிவு, ஏனெனில் கட்டிய பிம்பத்துடன், மதியில் பதிந்த பிம்பத்துடன் ஒத்து வருகிறது, ருசியா அறிவுப்பு.

நான் சொல்லுவதை சுருக்கமாக சொல்லும் fp:

https://foreignpolicy.com/2021/07/06/what-is-wagner-group-russia-mercenaries-military-contractor/

"Operatives from the sprawling Wagner network have spanned from Ukraine, where they fought alongside Russian and separatist forces, to Mozambique, where they were hired to fight insurgents. But the group defies the conventional definition of a private military contractor, instead melding mercenary activity and natural resource extraction while advancing the Kremlin’s foreign-policy objectives. Nominally private, the group is thought to be closely enmeshed with the Russian security apparatus, although the Russian government has denied the connection. The network’s murky nature presents an enormous challenge for victims, governments, and international institutions seeking to hold the group to account for alleged atrocities."

fp இல் சொன்னதால் முற்றுமுழுதாக உண்மை என்று இல்லை. அனால், fp க்கு நான்  பெறக்  கூடியதை  விட துல்லிய தகவல்கள் கூட.  

இங்கே நான் செய்வது judgment call.  ஆனாலும், முறை சரி.

எந்த முறை  சரி என்பதை  நீங்களே முடிவெடுங்கள். 

மற்றது, இத்துடன் முடிக்கிறேன். எனது அணுகுமுறை என்பது  தெரிந்ததால்.

அனால், பிழை என்று கணி பட்டால் சுட்டிக்காட்டுவேன். அது எனது உரிமை.

 

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுக்காக சொல்லுகிறேன், சோழரும் வாக்கினரை போல், sac ஐ  போல் - அரசரின் நேரடி ஆணை, கட்டுப்பாடு - அது அரசரின் தனிப்பட்ட படையாக - அனால் சோழ அரசின் அங்கமாக வைத்து இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Armed Forces Covenant ஐ  பற்றி தவறான விளக்கம் கொடுக்கப்படுகிறது.

கொடுத்தவருக்கு Armed Forces Covenant என்று கேள்விப்பட்டுள்ளார். அவ்வளவே.

Armed Forces Covenant, பிரித்தானிய அரசு, தேசம் சேவையில் இருக்கும், ஓய்வு பெற்ற படை உறுப்பினருக்கு கொடுக்கும் உறுதி மொழி. 

முக்கியமாக , எல்லா அரச, அரசு சாரா அமைப்புகளும் கடைபிடிக்க வேண்டியதில்லை. தன்னார்வ உறுதி மொழி. 

அறிய விரும்புவோர் நேரடியாக அறிந்து கொள்ளுங்கள்.

https://www.armedforcescovenant.gov.uk/about/

அதன் நோக்கம், சாராம்சம் (கூகுளை மொழிபெயர்ப்பில் இருந்து) (கூகுளை மொழிபெயர்ப்பில் இருந்து)

"எங்கள் தேசத்தை பெருமையுடன் பாதுகாப்பவர்களே, அதை மரியாதையுடனும், தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்பவர்களே, ஆயுதப்படைகள் உடன்படிக்கை உங்களுக்கு தேசத்தின் அர்ப்பணிப்பாகும்.

ஆயுதப் படைகளில் பணியாற்றுபவர்கள் அல்லது பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்கள் தங்கள் உயிரைக் கொண்டு சேவை செய்யும் சமூகங்கள், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நியாயமாகவும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டு புரிந்துகொள்கிறோம்."
 

Covenant என்பதே தன்னார்வ உறுதி மொழி.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சத்தியப்பிரமாணம்  பற்றியும் தவறான தோற்றப்பாடு கட்டப்படுகிறது.

அதாவது, எல்லா சத்தியப்பிரமாணங்களும்  அடிப்படையில், சாரத்தில் ஒன்று என்பது.

முற்றிலும் தவறானது.

ஆங்கிலத்தில் oath  என்று இப்பொது வந்துவிட்டது.

 அது உண்மையில், solemn oath என்றே வழங்கப்பட்டது.

செய்யப்படும் உறுதிமொழியை முறித்தால், எந்தவித விண்ணப்பத்துக்கும் உரிமை இன்றி தண்டிக்கப்படலாம் என்பதே solemn oath (முன்பு வழங்கப்பட்டது).   இப்பொது oath என்று வழங்கப்படுகிறது. 

தமிழில் - நேரடி மொழிபெயர்ப்பு (என்னால் சொல்லக் கூடியது) - பயபக்தியுள்ள சத்தியப்பிரமாணம் (அல்லது  பயபக்தி பிரமாணம் - இது ஆங்கிலத்து கருத்துடன் ஒத்து வருகிறது, அனால் நான் சொல்வதே) 

மற்றது, சத்தியபபிரமாணம் ( solemn oath,  பயபக்தி பிரமாணம்) செய்யப்படும் நோக்கத்தை கொண்டும், சுமத்தப்படும் பொறுப்புக்களை கொண்டும்   (படை, தெய்வ கருமம், அரச கருமம் போன்ற)  வேறுபடுகிறது.

எனவே செய்யப்படுவது எல்லாம் சத்தியப்பிரமாணம் (பயபக்தி பிரமாணம், solemn oath) அல்ல. 

உ.ம். ஆக (இப்போதைய நிலையில்) திருமணத்தில், விளையாட்டு போன்றவற்றில். ஆனால், அவையும் சத்தியப்பிரமாணம் என்று  வழங்கப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2023 at 18:47, Justin said:

உறவே🙏,

இந்த முக்கியமான புள்ளியில் தான் உங்களுடன், கோசான், நான் ஆகியோர் ஒரே கோட்டில் வரமுடியாமல் நிற்கிறோம்.

ஒரு அரசு, அல்லது பொறுப்பான அமைப்பு சொல்வதை நம்புவது அறிவீனம் என்கிறீர்கள் நீங்கள்.

ஒரு அரசு, பொறுப்பான நிர்வாகம் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை விட அந்த அரச நிலைப்பாடு தான் கள நிலவரத்தைத் தீர்மானிக்கும் காரணி என்கிறோம் நாம்.

இது புரியாமல் அரசு/நிர்வாகம் உண்மை, பொய் தேட இதென்ன தியோலொஜி, பிலோசொபியா? அப்படி உண்மை பொய் தேடுவதால் யாருக்கு என்ன பயன்பாட்டு நன்மை இருக்கிறது? 

 

இன்னொமொரு காரணம்,  நான் பின்பு அறிந்த கொண்டது ( இதை நான் சிந்தித்தேன், ஆனல் 1ம் பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்).

பிரோகோஸின் எதிர்பின் பொது, ஒரு பகுதி மரபு  வழி இராணுவத்தினர் , பிரிஸோஸின் அந்த நகரத்தை அடைய  முதல் செயலற்று  இருந்ததாக. 

அனால் அந்த மரபு வழி இராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபடவில்லை.

பிரிகோஸின் நகரை அடைந்த கையோடு, மரபு வலி இராணுவத்தினர் எதிர்க தொடங்கியதாக 


இரு காரணங்கள் இருக்கலாம் 

1. பிரிகோசினுடன் உண்மையில் விரும்பி   ஒத்துழைத்தது, அனால், நிலைமையை கண்டு (அந்த நகரத்தில் பிரிகோசிக்குனுக்கு எதிர்ப்பு  வருவதை அறிந்தும்) அவர்கள்  மாறி இருக்கலாம் 

2. அல்லது பிரிகோசினுக்கு ஆம் (எதிர்க்காமல் ஒத்துழைக்கிறோம்) என்று விட்டு, (ஓரளவு பிரிகோசினுக்கு நடித்து விட்டு) ஏமாற்றியது. 


எதுவென்று வெளியில் தெரியாது தான்.

 அனால் இரு விடயங்களிலும், பிரிகோஸின் அந்த படைகளை ஆம் என்று சொல்லுமளவுக்கு பிணைப்பு இருந்து இருக்கிறது.

இது ஆக குறைந்தது காட்டுவது, மரபு வாலிப  படைக்கும் , பிரிகோஸின் தலைமை  படைக்கும் இருக்கும் enmeshing - fp சொல்லுவது போல.  


வாக்னர் கூலிப் படை என்றால், இது நடந்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில்,  இது சண்டை களத்தில் நடக்கவில்லை.
 

அதனால் தான், இந்த வாக்னர் கிளர்ச்சி பற்றிய திரியில்   State (அரசு) இன் அடிநாதம், இதயத்துடிப்பு, மதியின் நிலை state of  mind என்றது.

இது வலுப்பட்டு இருக்கிறது என்றால்,  (ரஷ்யா அல்லது வேறு எந்த அரசாகிலும்) வலுப்பட்டு இருக்கிறது என்றே  அர்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொஜிக் எங்க உடையுது தெரியுமா?

ரஸ்ய தரைப்படைதான் வாக்னரை எதிர்க்கவில்லை. ஆனால் வான்படை எதிர்த்து குண்டு விசி, 8 வானூர்திகளையும், 15 வரையான வீரர்களையும் இழந்தது.

அதே போல் Moscow ring road இல் ரோஸ்கார்டியா நிலை எடுத்து இருந்தது, வாக்னரை தாக்க.

ஆகவே தரைப்படை எதிர்க்வில்லை, ஆகவே வாக்னர் கூலிப்படை இல்லை என்பது - ஊரில் சொல்வது போல், மாடு பிரண்ட பக்கத்தில் குறி சுடுவது🤣.

உண்மையில் நடந்தது என்ன என்றால்?

எந்த இராணுவத்திலும் எந்த ஒரு சிப்பாயும் தான் நினைத்த உடன் துப்பாக்கியை தூக்கி சண்டைக்கு போவதில்லை. உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும்.

வாக்னர் 4 ஒப்லாஸ்ட்டுகளை கைப்பற்றி ஒரு பெருநகர், அதில் உள்ள விமானநிலையம், அணு ஆயுத முகாம், என பலதை கைப்பற்றிய போதும், மாஸ்கோவில் இருந்து 200 கிமி வரை வந்த போதும் -

ரஸ்ய தரை இராணுவம் தலையிடவில்லை. காராணம் ஒன்றில் தளபதிகள் உத்தரவிடவில்லை அல்லது உத்தரவிட்டும் சிப்பாய்கள் நகரவில்லை.

இது ரஸ்யாவின் தரைப்படையின் மனவலிமை, போரிடும் ஆற்றல், புட்டின் மீதான விசுவாசம் எப்படி ஈடாடி போய் உள்ளது என்பதை காட்டி நிற்கிறதே ஒழிய, இதற்கும் வாக்னர் கூலிப்படையா, அரச படையா என்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மீண்டும் எழுந்தமானமான, (வாதத்துக்கு) வேண்டிய முடிவுகள்.


நகரை அடைய முதல், உத்தரவிட்டு படைகள்  நகரவில்லை என்பது ஏற்று கொள்ளக் கூடியதா இல்லை. 

இது இலகுவாக நடக்க  கூடியது அல்ல.


உத்தரவிட்டு, அசையாத படைகளை, அந்த குறுகியகாலத்துக்குள் மீண்டும் எதிர்த்தன என்பது - அடிப்படை இராணுவ உளவியல், மற்றும் அமைப்பு இயங்கும் முறைக்கு மிகவும் மாறானது

(ஒயாத  அலைகளின் போது மனோபலம் முறிந்து ஓடாத தொடங்கிய சிங்கள படைகைலின் நடத்தையை பார்க்கவும் - தமக்கு அழிவு வருகிறது என்று தெரிந்தும் எதிர்க்காமல் ஓடுவதத்திற்கே முற்றப்பட்டார்கள். ஜனக பெரேரா ஆயுதங்களுடன் வந்து  தலைமை ஏற்றபின்பே எதிர்ப்பை காட்டாத தொடங்கின)

அதாவது மனச் சோர்வடைந்த படைகளை, குறுகிய காலத்துக்குள் மீண்டும் தட்டி எழுப்புவது மிகக் கடினம். இதில், அந்த படைக்கு வாக்கினரால் எந்தவித அழிவும், எதிர்ப்பும் இல்லாமல் 

அப்படியானால், அந்த நகரத்தில் விமான தாக்குதலின் பின்னும், சிப்பாய்கள் செயலற்று இருந்து  இருக்க வேண்டும், அநேகமாக வாக்னெர் முன்னேறவே முயற்சித்து  இருக்கும்.

சடுதியாக  வாக்னர் கைவிட்டது, திட்டத்தில் ஏதோ ஒரு பெரிய ஏற்பாடு பிழைத்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

அது விமானத் தாக்குதலால் மட்டும் நடந்து இருக்க கூடிய சாத்திய கூறுகள் இல்லை. ஏனெனில், அதை வாக்னர் சமாளித்து இருந்தது.
  
மற்றது, வாக்னர் அவ்வளவு இலகுவாக பிடித்தது - உத்தரவிடப்படவில்லை என்பதே பெரும் பாலும் நடந்து இருக்க கூடியதாக இருக்கிறது.  
  
எனவே மீண்டும் 1 அல்லது  2 க்கே வருகிறது. எதுவென்று தெரியாது தான்.

1 ஓ அல்லது 2 ஓ, பிணைப்பு இல்லாவிட்டால், அதாவது ஒரே படை குடும்பம் என்ற உணர்வு இல்லாவிட்டால்,  செய்து இருக்க முடியாது, அதுவும் களத்துக்கு வெளியில். 

சாதாரண படை உறவுகள் தன்மை பற்றி தெரிந்தவர்களுக்கு, இந்த முக்கியத்துவம் அறிவார்கள். 

அதாவது, வாக்னர் கூலிப்படை என்றால் செய்து இருக்க கூடிய சாத்திய கூறுகள் மிக குறைவு.  நடந்து இருந்தால் புதிய வரலாறு, அநேகமாக, மேற்கு அறிந்து இருக்கும்; வெளிவந்தும் இருக்கும். 

(சிந்தித்து பார்க்கம், ஒரு வெளிப் (கூலிப்படை) படை, அரச படைகள் மீது, அந்த படைகளின், தலைமை மீது, எதிர்க்காமல் இருக்க கூடிய அளவு செல்வாக்கு செலுத்தி இருக்கிறது - எவ்வாறு - புதிய வரலாறு)

(நான் அறிந்த வரையில்), ருசியா உருவாக்கி இருப்பது நவீன காலத்தில் முன்னோட்டம் இல்லாத படை கட்டமைப்பு.

எதுவாயினும், வாக்னர் - ருஷ்யா படை  உறவு, சண்டை களத்துக்கு அப்பால் வெளிப்படை (கூலிப் படை), அரச படை பிணைப்பல்ல  என்பதையே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்னர் கூலிப்படையே தவிர எதிரிப்படை அல்ல - ஆகவே ஒரே களத்தில் அருகருகே இருந்து போரிட்ட இன்னொரு அணி மீது எந்த ஒரு கடைநிலை சிப்பாயும் தானாக துப்பாக்கியை திருப்ப போவதில்லை.

என்ன நடக்கிறது என்ற புரிதல் இல்லாமை, குழப்ப மனோநிலை, உத்தரவுகள் பிந்துதல், உத்தரவுகள் மதிக்கப்படாமை, தலைமை மீது விசுவாசமிழப்பு…இப்படி

ஒரே பக்கம் போரிட்ட இரு அணிகளில் ஒன்று சடுதியாக எதிர்க்க ஆரம்பிக்கும் போது மற்றைய அணி சுணங்க பல காரணக்கள் இருக்கும். 

இதை வைத்து மட்டும் வாக்னர் ரஸ்ய அரச படை என கூற எந்த முகாந்திரமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டிய எடுகோள்களை எடுத்து, முடிவு செய்வதை ....

களத்துக்குள்ளேயே, சொன்னவற்றில் சாத்திய கூறுகள் கூட.

களத்துக்கு வெளியே (ரஸ்சியாவில்), மிக குறைவு.

இரு (களத்துக்கு உள்ளே, வெளியே) இருந்த ருஷ்யா படைகளும், ஒன்றாக இருந்தற்கான சாத்திய கூறுகளும் மிக குறைவு.    

மேற்கு  அரசு, அரசு சாரா ஆய்வுகளும்  சொல்லுகின்றன, பொதுவாக ருசியா இராணுவம், மேம்பட்டு இருக்கிறது கடந்த வருடத்திலும்.

(google இல் தேடி பார்க்கவும், எண்ணிக்கை அதிகம் )

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த fp இணைப்பில் இருப்பது -  இப்பொது தான் நானும் பார்க்கிறேன்.

"The U.S. government has described the Wagner Group as a proxy force for the Russian Ministry of Defense, while the group’s operatives train at a camp in Molkino in southern Russia, which is shared by Russian special forces."

அனால், எனது முடிவு இதை வைத்து அல்ல. கிடைத்த நேரத்தில் நான் செய்த யதார்த்த, நடைமுறை, வரலாறு ஆய்வின் முடிவு. 

சொல்லலாம் அரசு சொல்வது என்று. 

நான் முன்பே சொன்னது போல அரசுகள் சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளும், சில வேளைகளில் மறுக்கும்.

இதில், US வாக்னரின் உண்மை தன்மையை சொன்னதாகவே எனக்கு தெரிகிறது. எனக்காக சொல்லவில்லை.

அக்கறை உள்ள எல்லோரும், கூகுளை தேடுதல் செய்து பார்க்கலாம்.

(

https://home.treasury.gov/news/press-releases/jy1581

https://home.treasury.gov/news/press-releases/jy1220

)

ஆனால், US மற்றும் பொதுவாக மேற்கு அரசுகள் இரு நிலைப்பாடுகளை எடுக்கிறது  - 

பொருளாதார தடைக்கு வாக்னர் pmc.


அதன் உண்மையான நோக்கத்தில் வாக்னெர்  proxy force for the Russian Ministry of Defence என்கிறது 


 இதையே நான் சொன்னது  - வாக்னர் வெளித்தோற்றத்துக்கு pmc. company registration உம இருக்கிறது. (எனவே பொருளாதார தடை அதன் மீது தன விதிக்கப்பட முடியும்)

அனால் வாக்னர் உண்மையில் (அதன் உண்மையான நோக்கம், தொழிற்படு), மேற்கு அரசுகளின் பார்வையில்,   proxy force for the Russian Ministry of Defence. (இதை சொல்லி தடை விதிக்க முடியாது, விதித்தால் political ban, அது  Russian Ministry of Defence இ பயங்கரவாத அமைப்பு ஆக்கும், இதை US ஒருபோதும்  செய்ய முடியாது என்று மறுத்து விட்டது.) 


நான் சொன்னது, மேற்கில் இல்லாத படை அமைப்பை கொண்ட, அரச படைகளின் பகுதி  வாக்னர் என்று. அதாவது, ரஷ்யா இதில் அதன் நோக்கத்தை அடைந்துள்ளது. 

இதை எழுந்தமானத்திலோ, எனக்கு விரும்பியோ சொல்லவில்லை. ஆய்வி இட்டு சென்ற  மிக கூடிய சாத்தியக்கூறையே  சொன்னது.

எனவே இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நேரமும் வீண்.

  • கருத்துக்கள உறவுகள்

Proxy என்றால் என்ன?

கீழே உள்ள லிங்கில் இந்த ஆங்கில வார்த்தைக்கான ஒத்த சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

https://www.thesaurus.com/browse/proxy

ஒரு வேலையை செய்ய -  எனக்காக இன்னொருவரரை நான் அனுப்புவது என்ற அர்தத்தில் மேலே இந்த சொல் பாவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் agency என்பார்கள்.

நான் எனக்குரிய வேலையை செய்தால் செய்தால் - actual,

எனக்காக இன்னொருவரை செய்யும் படி நான் கோரினால் - அவர்கள் எனது proxy, agent.

இங்கே ரஸ்யாவுக்காக யுத்தத்தில் வாக்னர் (கூலி வாங்கி கொண்டு) ஈடுபடுகிறது. ஆகவே அது ரஸ்யாவின் proxy force.

ஆனால் ரஸ்ய இராணுவம், ரஸ்யாவின் proxy அல்ல. அது ரஸ்யாவின் actual force.

இதைதான் 2 பக்கமாக எழுதி வருகிறேன். 

 

 

 

 

பிகு

தமது நிலைப்பாட்டை சுக்கு நூறாக்கும் வாதங்களை தாமே முன்வைக்கும் ஆட்களோடு வாதிடுவது எனக்கும் utter waste of time தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு சொல்வதை சொல்லியது.

நான் சொல்லுவது யதார்த்தத்தை, நடைமுறையை. 

மேற்கு சொல்லும் proxy இன்  ராஜதந்திரத்தையும் (ராஜதந்திர கருத்தையும், நோக்கத்தையும்)  புரியவில்லை (அதுவே அகராதி நாட காரணம்). 

(சொல்லுக்கு சொல் வரைவிலக்கணம் தேடும் சட்டத்தில் கூட, இருக்கும் சூழ்நிலை,  நடைமுறை, யதார்த்தம் சொல்லின் ஒப்பிட்டளவிலான கருத்தை மாற்றும். அதே போல யதார்த்தம் , நடைமுறை பார்த்தே முடிவுகளும்)

ராஜதந்திரத்தில் ...

ஒருபோதும், ஒரு சிறப்பு படையணி அதன் முகாமை, பயிற்சி, முகாமை  களத்தை விடாது - வெளிப்படைக்கு - அதாவது வாக்னர் வெளிப்படை (வெளியில் proxy ஒ pmc ஒ) என்ற எந்த பெயரில் இருந்தாலும் )  என்றால்.

படைப்பிரிவுகள் எவ்வளவு territorial  தன்மை வாய்ந்தவை ஏன்பதை அறிந்தால், இது சொல்லப்பட்டு இருக்காது.

சாதாரண படை அமைப்பு, உணர்வுகள் அறியாமல், அகராதியை வைத்து கதைப்பது. 

அந்த உறவு  மறைகப்பட்டு இருக்கிறது - அனால் அவ்வப்போது வெளியில் வருகிறது - சிறப்பு படையணி பயிற்சி  முகாம் பாவிப்பு, புட்டின் - பிரிகோஸின் , வாக்னர் நடத்தை, படைகள் -வாக்னர் நடத்தை, ருசியா முழுச்  செலவையும் ஏற்றது,  இப்படியே தே டிக் கொண்டு போனால் வரும். 

அனால் ருஷ்யா அதன் வசதிக்காக மறைத்து இருக்கிறது, எனவே தேடுவது வலு கடினம் அல்லது முடியாது. ருஸ்சியா  சாதிக்கவும் கூடும், வேறு ஆதாரங்களை கூட வெளியிடக்  கூடும். 

கண்முன்னே இருக்கும்  நடைமுறையை, யதார்த்தத்தை  தவிர்த்து, அகராதி மூலம் நடைமுறையை விளங்க வேண்டி வந்தால், இது தான். 

(சொல்லுவ படி, எந்த ஒரு ஆய்வுமே தேவை இல்லை - எந்த துறைக்கும் -அகராதியை பார்த்தால் சரி.) 

நேரம் வீண்.  அனால் இந்த முறை கோளாறுகளை சுட்டிக் கட்டுவது அவசியம் (இங்கே முடிவு அல்லது ஒரு பிம்பத்தை நம்பி விட்டு, அதுக்கேற்ற முறைகளை எடுப்பது.)

இங்கே அகராதியே ஏறத்தாழ ஆதாரம் வரை கொண்டுவரப்பட்டுள்ளது   (யதார்த்தங்கள், நடைமுறைகளை, சிந்தனைகள், படைத்துறை மரபுகள், அரசுகளின் குயுக்திகள், நடத்தைகள், ராஜதந்திரங்கள் போன்றவற்றை ஒன்றில் தெரியாமல் அல்லது  வேண்டும் என்றே தவிர்த்து) 

குறிப்பு: அகராதியை பாவிப்பதில் தவறு  இல்லை. அனால்,  கண்முன்னே இருக்கும்  நடைமுறையை, யதார்த்தத்தை  அதற்காக தவிர்த் விட்டு, ஏனெனில், அகராதி யில் சொல்லப்பட்டு இருப்பது கட்டிய, நம்பிய பிம்பத்துக்கு சரிவருகிறது என்று,  அதையே மேற்கு  அரசுகளும் (ராஜதந்திரத்தை புரியாமல்) சொல்லுகிறது என்பதை எடுப்பது ... என்னவென்று சொல்லுவது.  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சொல்லுக்கு “ராஜதந்திர அர்த்தம்”, என்று எதுவும் இல்லை.

சொல்லாமல் சொல்லுவது இராஜதந்திரம். ஆனால் இங்கே மேற்கு நேரடியாகவே வாக்னர் ரஸ்யாவின் புரொக்சி என சொல்லுவதில் ஒரு இராஜதந்திர மொழியும் இல்லை.

Proxy என்பது சாதாரண வழக்கில் இருக்கும் ஆங்கில சொல்தான்.

அதன் அர்த்தம் எங்கேயும் ஒன்றுதான்.

அந்த அர்த்தம் மேலே வழங்கபட்டுள்ளது ( அதாவது actual இன் எதிர்பதம்).

அந்த அர்த்தத்தில் மட்டுமே மேற்கு வாக்னரை Russian proxy என அழைக்கிறது.

ஏன் ரஸ்யா உக்ரேன் செய்யும் போரை  NATO is wagging a proxy war on Russia நேட்டோ ரஸ்யா மீது புரொக்சி யுத்தம் செய்கிறது (உக்ரேனை பாவித்து) என சொல்வதும் இதன் அடிப்படையிலேயே.

உலக அரசியல், ஆங்கில பதங்களின் பொருள், இவற்றை நுனிபுல் மேய்ந்தால் - இதுதான் நிலமை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தங்கள், நடைமுறைகள், சூழ்நிலைகள் ராஜதந்திரத்தில் ஆக குறைந்தது ஒப்பிட்டளவிலான ராஜதந்திர கருத்தையே மாற்றும் என்று சொல்லியும், அதை பற்றி ஒரு சிறிதும் சிந்திக்காது, வாதத்துக்கு  கதைக்கப்படுகிறது. முன்பே சொன்னது போல ஒன்றை நம்புவது அல்லது பிம்பம் கட்டுவது, அந்த வசதிக்கேற்ற ஆவணங்களை தேடிப் பெறுவது, பின்பு வாதிடுவது.    

(ராஜதந்திரம் என்பது - கண்ணனுக்கு முன்னே இருப்பதை உண்மையில் காண்கிறேனா, அப்படி கண்டாலும் அது உண்மையா , அதாவது யதார்த்தத்தில் எவ்வளவு சாத்தியப்பாடுகள் உள்ளது இப்படியே கேட்பதும், வாசிப்பதும், மணப்பதும், உண்பதும் என்று அடுக்கி கொண்டே போகலாம் ...  என்ற கேள்விகளை எழுப்பி விடை காணும் துறை). 

(ஓர் சுவாரசியமான தகவல் - ஒரு காலம் இருந்தது,  , ராஜதந்திரிகள் வேறு அரசுகளுக்கு பிரயாணம் செய்யும் போது , அவர்களுடன் சமையல் கலை அறிந்தவரை கூட்டி செல்வது. ஏனெனில், வேறு அரசுக்களில், அவர்களின் உணவில் (அவர்களை கொலை செய்வதற்கு) நஞ்சை கலப்பது சர்வசாதாரணமாக நடந்தது. அனால், அந்த தன்மை இப்போதும் இருக்கிறது - சில இறப்புகள் மர்மாகவே இருக்கிறது). 

இந்த ராஜதந்திரிகளுக்கு இவ்வளவு கொழுத்த சம்பளம், கொழுத்த சலுகைகள் மேற்கு / வேறு  அரசுக்கள்  கொடுப்பது வீண். 

ஏன்  ராஜதந்திரிகள்  இப்படி வரிக்குவரி, சொல்லுக்கு சொல், பந்திக்கு பந்தி , மபக்கத்துக்கு, பக்கம்   சூழ்நிலைகள், யதார்த்தங்கள், நடைமுறைகள்     வேறு அர்த்தத்தில் கொண்டு வந்து விடுமோ, தாங்கள்  பொறுப்பு  எடுக்க / கொடுக்க  எண்ணுவதிலும் பார்க்க கடப்பாடு கூடி விடுமோ / குறைந்து விடுமோ என்று வாரம்,  மாதம் , வருட  கணக்காக மண்டையை  குழப்பவேண்டும்? 

இங்கே இருக்கும் அகராதி சொல் விற்பனர்களை குறித்த அரசின் ராஜதந்திர பணிக்கு அமர்த்தினால், அதை ஓரிரவில், அந்த அரசில் மேலதிக ராஜதந்திர வேலைக்கு இடமின்றி, விடியும் போது, அப்படி அரசு ஒன்று இருந்ததா எனும்  சேவற்கூவலோடு,  முடித்து விடுவார்கள். 

  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.