Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளை ஒத்த பாறைகள் இலங்கையில்? : நாசா விஞ்ஞானிகள் ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

இந்தக் கட்டுரையை ஆதாரமாக நீங்கள் துணிந்து இணைத்தமைக்கு 3 காரணங்கள் இருக்கலாம். நீங்களே தேர்வு செய்யுங்கள்:

1. தலைப்பை மட்டும் வாசித்து விட்டு உள்ளடக்கம் அறியாமல் இணைத்திருக்கிறீர்கள்.
2. உள்ளடக்கத்தை வாசித்திருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு அதில் இருக்கும் sarcasm கலந்த ஆங்கிலம் புரியவில்லை.
3. உள்ளடக்கம் புரிந்து கொண்டீர்கள், ஆனால் யாழ் வாசகர்கள் இதைக் கவனிக்காத முட்டாப்பீசுகள் என்று நினைத்துக் கொண்டீர்கள்!

இதில் எது காரணம் நெடுக்கர்?😂

(இதுக்கு ஒரு "அறிஞர்" விருப்பு" வேற போட்டிருக்கீனம்!)

இது எதுவுமே அல்ல. 

அமெரிக்கா நிலாவில் தரையிறங்கியது என்பதை நம்பாத மக்கள் பெருந்தொகையில் இருக்கினம்.. என்பதை யாழ் கள வாசகர்களும் அறியனும்... அதை தலைப்பில் போட்டு சமாளிப்புக் கட்டுரைகள் எழுத வேண்டிய நிலையில் அமெரிக்க சார்ப்பு ஊடகங்களே இருக்கென்னும் போது அந்தக் கருத்தியல் எவ்வளவு வலுவானது என்பதையும் யாழ் வாசகர்கள் அறியனும். இது தான் நோக்கம்.

அப்படியான கருத்தியல் என்பது அரைவேக்காடு அல்ல.. அது அமெரிக்காவின் நாசாவின் நடவடிக்கைகளை.. வெளியீடுகளை கேள்விக்குரியதாக்கும்.. மக்களின் அடிப்படை அறிவியல் அறிவின் விளைவு என்பதாகும்..!! அது யாழ் வாசகர்கள் மத்தியிலும் வளரனும். சும்மா ஒருவர் படிச்சனான் என்று வந்து எழுதிட்டு போறதை அப்படியே நம்பனுன்னு அவசியமில்லை. கேள்விக்குரியதாக்குவதும் சீர் தூக்கி ஆராய்ந்து அறிவதும்.. அறிவின் வெளிப்பாடாகும். அது வளரனும். அப்போதுதான் அமெரிக்கா உட்பட பலரின் அவியல்களை உலகம் உணரத் தலைப்படும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முதலாக செவ்வாய்க்'கு ப் போனது இலங்கை மக்கள் தான். சிறிலங்காவுக்கும் செவ்வாய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் செவ்வாய் சிறிலங்காவுக்குத்தான் சொந்தம். யாரும் செவ்வாய்க்குப் பேறதெண்டால் சிறிலங்கா விசா எடுத்தால் போதும். விரைவில் செ;வாயில் ஒரு புத்தவிகாரை கட்ட வேண்டும். இந்த ஆய்வுக்கு வரும் காசில் வடக்குக்கிழக்கில் எத்தனை புத்த விகாரை எழும்பப் போகுதோ தெரியவல்லை.பிள்ளையார் அம்மையப்பனைச் சுத்தினால் உலகத்தைச் சுத்தினதுக்குச் சம் எண்ட மாதிரி இப்ப சிசிலங்காவுக்குப் போனால் செவ்வாயக்குப் போன மாதிரி என்று சுற்றுலாப் பயணிகளை கவர திட்டம் போடுறாங்களோ எண்டு தெரியாது. அப்பாவித் தமிழ்மக்களை இனப்படுகொரலசெய்து விட்டு தமிழ்பப புலி பயங்கரவாதிகள்தான்  அந்த மக்களைக் கொலை செய்தார்கள் என்று சிறிலங்கா சொன்ன பொய்யை உலகம் முழுவதும் நம்பினமாதிரி இதை நம்புவது பெரிய விடயம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு science சம்பந்தமான திரியை கூட அதன் அடிப்படையில் அது சம்மந்தமான அறிவை பெருக்கும் வகையில் கருத்தாடாமல்  மலிந்த அரசியல் சாக்கடைக்குள்ளும் sudo science, conspiracy theiory க்குள்    இதனை இழுத்து வந்து  குத்தி முறியவேண்டிய பரிதாப நிலை.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இது எதுவுமே அல்ல. 

அமெரிக்கா நிலாவில் தரையிறங்கியது என்பதை நம்பாத மக்கள் பெருந்தொகையில் இருக்கினம்.. என்பதை யாழ் கள வாசகர்களும் அறியனும்... அதை தலைப்பில் போட்டு சமாளிப்புக் கட்டுரைகள் எழுத வேண்டிய நிலையில் அமெரிக்க சார்ப்பு ஊடகங்களே இருக்கென்னும் போது அந்தக் கருத்தியல் எவ்வளவு வலுவானது என்பதையும் யாழ் வாசகர்கள் அறியனும். இது தான் நோக்கம்.

அப்படியான கருத்தியல் என்பது அரைவேக்காடு அல்ல.. அது அமெரிக்காவின் நாசாவின் நடவடிக்கைகளை.. வெளியீடுகளை கேள்விக்குரியதாக்கும்.. மக்களின் அடிப்படை அறிவியல் அறிவின் விளைவு என்பதாகும்..!! அது யாழ் வாசகர்கள் மத்தியிலும் வளரனும். சும்மா ஒருவர் படிச்சனான் என்று வந்து எழுதிட்டு போறதை அப்படியே நம்பனுன்னு அவசியமில்லை. கேள்விக்குரியதாக்குவதும் சீர் தூக்கி ஆராய்ந்து அறிவதும்.. அறிவின் வெளிப்பாடாகும். அது வளரனும். அப்போதுதான் அமெரிக்கா உட்பட பலரின் அவியல்களை உலகம் உணரத் தலைப்படும். 

இன்னும் இதை சீரியசான செய்தி ஆய்வென நீங்கள் என்று நம்பியிருப்பதால், அப்ப 2 வது காரணம் தான், .

மேலும், உங்கள் 3 வது காரணத்தின் நம்பிக்கையை பாழாக்காத 3 பேர் எப்பவும் உங்களோடு இருக்கின்றனர் என்றும் தெரிகிறது நெடுக்கர்!😎

உங்கள் கருத்தோடு பெரும்பாலும் உடன்படுகிறேன்: அவியல், அரை அவியல் எல்லாம் வெளிவந்து கொண்டு தான் இருக்குது. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும், மேலும் வெளிவர!

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் கோள் வடிவானது என்பதாவது உண்மையா?

அல்லது தட்டையானது உலகு,

அண்டார்டிக்காவில் ஒரு பனித்திரை உள்ளது,

அதன் அப்பால் பாம்பு தோல் கொண்ட மனிதர்கள் வசிக்கிறார்கள்…

அவர்கள்தான் உலகை கட்டுப்படுத்துகிறார்கள்…

பைடன், எலோன், கேட்ஸ், சுக்கர்பேர்க் எல்லாம் இந்த ஆட்கள்தான்…

இதுதான் உண்மையா?

ஏன் கேட்கிறேன் என்றால் நிலவுக்கு நான் போய் பார்க்கவில்லை, அமெரிக்கா வந்ததா இல்லையா என்று.

அதேபோல் நான் விண்வெளிக்கு போய் - உலகம் கோள் வடிவானது என்பதையும் என் கண்ணால் பார்த்து உறுதி செய்யவில்லை.

இதுக்க நேற்று டிவிட்டரில் ஒரு பக்கி உலகம் doughnut வடிவானது என்று வேற குழப்புது.

Cream doughnut ஆ, jam doughnut ஆ தெரியவில்லை🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

ஒரு science சம்பந்தமான திரியை கூட அதன் அடிப்படையில் அது சம்மந்தமான அறிவை பெருக்கும் வகையில் கருத்தாடாமல்  மலிந்த அரசியல் சாக்கடைக்குள்ளும் sudo science, conspiracy theiory க்குள்    இதனை இழுத்து வந்து  குத்தி முறியவேண்டிய பரிதாப நிலை.  

இது யாழில் இப்போது பரவி வரும் ஒரு நோய் நிலை.

1. Objective ஆன விஞ்ஞானத் தரவுகளைக் கூட யார் சொல்கிறார் என்பதை வைத்தே ஏற்பதா மறுப்பதா எனத் தீர்மானிக்கும் ஆட்கள் ஒரு பக்கம். "உலகம் உருண்டை " என்பதை அமெரிக்கன் கண்டு சொல்லியிருந்தால், இப்ப அதையும் அவியல் என்று சொல்லக் கூடிய அளவுக்கு, விஞ்ஞானத்தையும் கலர் பூசிய கண்ணாடிக்குள்ளால் தான் பார்ப்பர் இந்த உறுப்பினர்கள்.

2. இன்னொரு சாராருக்கு சொல்லப் படும் தரவு என்னவென்பதே அவசியமில்லை. தங்களுக்குப் பிடிக்காதவரை ஒருவர் எதிர்த்து விட்டால், வரிசையில் ஓடி வந்து குத்துவர்😎! இது குழுவாத மனநிலை. பரிதாபம் என்னவென்றால் "இவையள் நான் என்ன எழுதினாலும் ஆதரிப்பர்" என்று நினைக்கும் ஒருவர் இந்த குழுவாத உறுப்பினர்களை எந்த நிலையில் எடை போட்டு வைத்திருக்கிறார் ? (மீண்டும் காரணம் 3 ஐ வாசியுங்கள்!) 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உட்பட சில பிரதேசங்களில் நாசா மேற்கொள்ளும் இந்த FINESSE ஆய்வு முயற்சி பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்:

FINESSE என்பது "Field Investigations to Enable Solar System Science and Exploration" என்ற நீண்ட பெயரின் சுருக்க வடிவம். பெயர் சுட்டுவது போல, சூரியக் குடும்பம் பற்றிய அறிவியலையும் தேடலையும் ஊக்குவிக்கும் கள ஆய்வு இது. இதில் "தேடல்-explortion " பகுதியைத் தான் இலங்கையில் நிகழும் கள ஆய்வு பூர்த்தி செய்கிறது. இந்த தேடலின் நோக்கம்: எந்த வகையான தேடல் நடவடிக்கைகள் உயரிய பயனைத் தருகின்றன எனக் கண்டறிவது தான்.

மேலே ஒரு கருத்தில், நாசாவின் செவ்வாய்க்கிரக வாகனம் ஏற்கனவே துளைபோட்டு செவ்வாயில் தேடியதை விட இலங்கையில் என்ன புதிதாகக் கண்டறிந்து விடுவர் என்ற கேள்வி வைக்கப் பட்டது. நியாயமான கேள்வி.

ஆனால், இந்த FINESSE ஆய்வு நடவடிக்கை, செவ்வாயில் என்ன இருக்கிறது என்ற கேள்வியைத் தாண்டி, செவ்வாய் உட்பட்ட பிரபஞ்ச உடல்கள் எப்படி உருவாகின என்ற பொறிமுறை தொடர்பான கேள்வியைக் கேட்கிறது. பூமி, செவ்வாய் உட்பட்ட பிரபஞ்ச உடல்களின் தோற்றத்திற்கு இரு இயற்கை நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம்:

1. எரிமலை வெடிப்பு (Volcanism).

2. (ஏனைய பிரபஞ்ச உடல்களுடனான) மோதுகை (Impacts).

எரிமலை வெடிப்பினால் (அது மில்லியன், பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம்) புதிய பாறைப் படிவுகள் உருவாகலாம். இது இன்றும் கூட ஐஸ்லாந்து போன்ற தீவுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு புவியல் நிகழ்வு.

அதே போல, விண்ணுடல்கள் மோதியதால் உருவான பெரும்பள்ளங்கள் (craters) பூமி, நிலவு உட்பட்ட பல பிரபஞ்ச உடல்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. உண்மையில், நிலவும் பூமியும் ~4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஈர்ப்பு விசையினால் மிக நெருக்கமாக ஒன்றையொன்று சுற்றி "ராங்கோ" ஆடிய போது, அந்த மோதலினால் உருவான பள்ளங்களே சமுத்திரங்களாக மாறியிருக்கலாம் என ஒரு தியரி உண்டு. தற்போது நிலவு, மைய நீக்க விசையினால் பூமியை விட்டு மிகத் தொலைவில் சென்று விட்டாலும், சமுத்திரங்களின் மீது தன் ஈர்ப்பு விசையைப் பிரயோகிக்கிறது.

இதையெல்லாம், இன்னும் ஆராய, FINESSE போன்ற ஆய்வு முயற்சிகள் உதவும். விண்வெளி பற்றியும், எங்கள் பூமி பற்றியும் நாம் இன்று கொண்டிருக்கும் அறிவு, கடந்த 2000 ஆண்டுகளாக மனிதர்கள், ஆய்வாளர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த தகவல்களால் கட்டியமைக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தின் ஒரு துளி தான் FINESSE.

தொகுப்பு மூலம்: loosely based on, https://www.nasa.gov/finesse/overview-finesse

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் என்பது அமெரிக்காவையும் நாசாவையும் சார்ந்தது மட்டுமல்ல. என்னற்ற அறிவியல் கருதுகோள்களும் கொள்கைகளும் தத்துவங்களும் பிறந்து மாற்றமடைந்து கொண்டு தான் இருக்கின்றன. அறிவியல் என்பதே ஆராய்ந்து அறிவது தானே தவிர.. அமெரிக்காவும் நாசாவும் சொன்னால் அது தான் அறிவியல்.. இறுதியியல் என்றெல்லாம் வகுப்பெடுக்க நினைப்பவர்களின் அறிவுதான் மட்டமாக உள்ளது. 

செவ்வாயின் கல்லு சொறீலங்காவில் என்ன சகாரா பாலைவனத்திலும் கிடைக்கலாம்.. இப்ப சிங்கள நாசா பிரதிநிதி.. சொறீலங்கா கல்லை செவ்வாய் கல்லு என்று சொல்ல வந்திருக்காரா.. இல்லை.. நாசா வெளியிடப் போகும் எதிர்காலப் படங்களுக்கு இந்தக் கற்கள் காட்சிப் பொருளாகப் போகின்றனவா.. அதாவது நாசாவின்  Fabricated science க்கு கல் தேடுகிறார்களா... அது நிலவில் கால்பதிச்சது என்ற 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த.. பின் நிகழாத.... சம்பவங்களின் நீட்சியா என்பது தான் தொக்கு நிற்கும் கேள்வி..!

யாழ் கள வாசகர்கள் பலருக்கு இது விளங்கும். விளங்காத மாதிரி நடிப்பவர்கள் தொடர்ந்து நடிக்கலாம்.. நக்கல் அடிச்சு சுய இன்பம் பெறலாம். 😄

நாங்கள் நாசா சார்ந்து வெளியிடப்பட்டுப் பார்க்கும் படங்கள் பெரும்பாலானாவை சிருஷ்டிக்கப்பட்டவை... என்பதை நாசாவே சொன்னாலும்.. இங்குள்ள சிலர் அதுதான் தாம் கண்ட அறிவியல் என்று அளக்க முனையலாம். காணும் காட்சிகள்.. கருத்துக்கள் தொடர்பில் அலசி ஆராய்வது அவசியம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

https://www.nasa.gov/centers/armstrong/multimedia/imagegallery/experimental_fabrication/index.html

நாங்கள் நாசா சார்ந்து வெளியிடப்பட்டுப் பார்க்கும் படங்கள் பெரும்பாலானாவை சிருஷ்டிக்கப்பட்டவை... என்பதை நாசாவே சொன்னாலும்.. இங்குள்ள சிலர் அதுதான் தாம் கண்ட அறிவியல் என்று அளக்க முனையலாம். காணும் காட்சிகள்.. கருத்துக்கள் தொடர்பில் அலசி ஆராய்வது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

https://www.nasa.gov/centers/armstrong/multimedia/imagegallery/experimental_fabrication/index.html

நாங்கள் நாசா சார்ந்து வெளியிடப்பட்டுப் பார்க்கும் படங்கள் பெரும்பாலானாவை சிருஷ்டிக்கப்பட்டவை... என்பதை நாசாவே சொன்னாலும்.. இங்குள்ள சிலர் அதுதான் தாம் கண்ட அறிவியல் என்று அளக்க முனையலாம். காணும் காட்சிகள்.. கருத்துக்கள் தொடர்பில் அலசி ஆராய்வது அவசியம்.

தெய்வமே! நீங்கள் வெங்காயம் போல உரிக்க உரிக்க "ஆச்சரிய லேயர்களாக" வந்து கொண்டேயிருக்கிறீர்கள்😂: Experimental fabrication என்பது ஒரு பொறியியல் சொற்பதம். இங்கே இயந்திரங்களை, பாகங்களை முன்னோட்டமாகச் செய்து பார்ப்பர். இது நீங்கள் நினைக்கிற "fabrication" கிடையாது!

தயவு செய்து விதண்டாவாதத்திற்காக உங்கள் அறிவுக்குறைவை இங்கே பகிரங்கமாகக் காட்டாமல் இருங்கள், எனக்கே சங்கடமாக இருக்கிறது!🙏

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமே... நீங்கள் நாசா வேணாம் வேணாம் என்றாலும்.. நற்சான்றிதழ் கொடுப்பீர்கள்.

நாங்கள் மேலே சொன்னதே.. அதை தான் சிருஷ்டிப்பு தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்துகிறது என்பதை தான். 

அதன் மூலம் சிருஷ்டுக்கப்படுபவை.. இயந்திரங்கள் மட்டுமல்ல.. தொலைநகற் படங்களுமே. 

https://science.nasa.gov/all-these-space-images-are-fake-except-one

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

தெய்வமே... நீங்கள் நாசா வேணாம் வேணாம் என்றாலும்.. நற்சான்றிதழ் கொடுப்பீர்கள்.

நாங்கள் மேலே சொன்னதே.. அதை தான் சிருஷ்டிப்பு தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்துகிறது என்பதை தான். 

அதன் மூலம் சிருஷ்டுக்கப்படுபவை.. இயந்திரங்கள் மட்டுமல்ல.. தொலைநகற் படங்களுமே. 

https://science.nasa.gov/all-these-space-images-are-fake-except-one

"கிருஷ்ணரின் துவாரகையை நாசா கண்டுபிடித்து விட்டது" என்று உல்டா விடும் சங்கிகள் பற்றி (அல்லது அந்த உல்டாக்களை நம்பும்) உங்கள் போன்ற வெள்ளந்தி மனமுடையோருக்கு உதாரணம் காட்ட இதைத் தந்திருக்கிறார்கள்-awareness campaign.

ஆனால், உண்மையிலேயே experimental fabricationஅர்த்தம் உங்களுக்குத் தெரியாமல் இங்கே பகிர்ந்தீர்களா? அல்லது experimental fabrication + NASA என கூகிள் தேடலில் வந்ததை சரியாக ஆராயாமல் இங்கே இணைத்து விட்டீர்களா?


#அமெரிக்கா/நாசாவுக்கு மூக்குப் போகோணும், எனக்கு தலை போனாலும் பரவாயில்லை!😂

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

ஆனால், உண்மையிலேயே experimental fabrication அர்த்தம் உங்களுக்குத் தெரியாமல் இங்கே பகிர்ந்தீர்களா? அல்லது experimental fabrication + NASA என கூகிள் தேடலில் வந்ததை சரியாக ஆராயாமல் இங்கே இணைத்து விட்டீர்களா?

இல்லை.

experimental fabrication என்பது சிருஷ்டிப்பு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒன்று. அதில் பல்வேறு தேவைகள் உள்ளடக்கப்பட்டிருக்குது. குறிப்பாக விண்கலத் தேவைகளுக்கான மூலப் பொருட்களை உருவாக்குதல் உள்ளடங்க. இதில்.... டிஜிட்டல்.. இமேஜிங் உட்பட பல்வேறு துறைகள் ஒன்றிணைக்கப்பட்டிருக்குது.

நாசா ஏலவே பாவித்த சிருஷ்டிப்பு படங்களை தயாரிக்கும்.. துறைகளோடு ஒருங்கிணைந்தே இதனை வடிவமைத்திருக்குது. தற்போதைய தேவைகளை விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு.

நாசாவால்.. சிருஷ்டிப்பு மூலம்.. பலவற்றை உண்மை போல் காட்ட முடியும். அதற்கான அத்துணை வளங்களும் உண்டு. ஆனால் உண்மை என்று நம்ப வைக்க அதற்கு நிஜ உதாரணங்கள் தேவை. அதனை நோக்கி கூட இந்தக் கல்லை ஆராய அதன் கட்டமைப்பை தோற்றத்தை ஆராய முற்பட்டிருக்கலாம். அதாவது போலிச் சிருஷ்டிப்பு நோக்கத்திற்காக. 

நாசா பல வடிவங்களில்... சிருஷ்டிப்புக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.. என்பதை இனங்காட்டத்தான் இந்த இணைப்பே தவிர.. இந்த தொழில்நுட்பம் பற்றி ஆழமாக கருத்தாடுவதல்ல. அதனை நோக்கி அந்த இணைப்பு இணைக்கப்படவும் இல்லை என்பதை அதன் கீழ் உள்ள கருத்துச் சொல்லும்.

உங்களுக்கு அது புரியவில்லை என்பதற்காக.. அந்த இணைப்பை பிடிச்சு கொண்டு தொங்கச் சொல்லவில்லை.

 

உ+ம்; https://www.researchgate.net/figure/Images-with-spacecraft-artist-rendering-during-collection-phase-and-BMG-components-for_fig63_235767206

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.