Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்பு தடவிய விஷம்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வி.நிதர்ஷன் 

“வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 

“இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பு, இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கென வாராதுவந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய்ச் சிலாகித்து வருகிறது. 

“ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்” என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்தார். 

வவுனியாவில் சீனித்தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ.ஐங்கரநேசன், இன்று (07) நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இவ்வாறு எச்சரித்தார். 

ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“கரும்பினதும் சீனியினதும் நீர் அடிச்சுவடு மிகவும் உயர்வானது. ஒரு கிலோகிராம் கரும்பை உற்பத்தி செய்வதற்கு 210 இலீற்றர் தண்ணீரும் ஒரு கிலோகிராம் சுத்திகரிக்கப்பட்ட சீனியை உற்பத்தி செய்வற்கு 1780 இலீற்றர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கரும்பு வருடம் முழுவதும் நீர் பாய்ச்ச வேண்டிய ஒரு பல்லாண்டுப் பயிருமாகும். 

“இவற்றின் அடிப்படையில், பேராறுகள் எதுவுமே இல்லாத வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும். 

“கரும்பு மிக அதிகளவில் இரசாயன உரங்களையும், பீடைகொல்லி – களைகொல்லி நஞ்சுகளையும் வேண்டி நிற்கும் ஒரு பயிர். தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களால் குளிப்பாட்டப்படும் மண்ணில் நுண்ணங்கிகள் அழிந்து தொடர்ந்து பயிரிடமுடியாதவாறு மண் மலடாகி விடுகிறது. கந்தளாய்ச் சீனித்தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டிருப்பதற்குக் கரும்பில் இருந்து இனிமேலும் அதிக விளைச்சலைப் பெறமுடியாத அளவுக்கு நிலம் தரம் இழந்ததும் ஒரு காரணம். 

“விவசாய இரசாயனங்கள் நீரோடு கலந்து குடிநீரையும் மாசடையச் செய்கிறது. வவுனியா ஏற்கெனவே சிறுநீரக நோய்களின் ஆபத்து அதிகமாகவுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  விவசாய இரசாயனங்கள் கலந்த குடிநீரை அருந்தியதால் ஏராளமானோர் சிறுநீரகங்கள் செயலிழந்து  அவதிப்படுகின்றனர். 

“இந்நிலையில், கரும்புச் செய்கை வவுனியாவின் நிலத்தினதும் மக்களினதும் ஆரோக்கியத்துக்குப் பெருங்கேடாகவே முடியும். 
கரும்புச் செய்கைக்கும் சீனித்தொழிற்சாலைக்கும் ஒதுக்கப்பட்ட காணியின் அளவு வவுனியாவின் மொத்தப்பரப்பில் ஆறு விழுக்காடுக்கும் அதிகம். இந்தப் பாரிய இடத்தைக் காடுகளை அழித்தே பெறமுடியும். 

“மக்கள் போரினால் இடம்பெயர்ந்ததன் காரணமாகக் கைவிடப்பட்ட மேயிச்சல் தரைகளையெல்லாம் அங்கு மரங்கள் வளர்ந்ததைக் காரணங்காட்டிக் காடுகள் என எல்லைகள் போட்ட வனவிலங்குத் திணைக்களம் இப்போது அதே காடுகளை கரும்புச் செய்கைக்கு விடுவிப்பதற்கு இணங்கியுள்ளது. 

“காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படப்போகும் நாடுகளது பட்டியலில் இலங்கையும் அடங்கியுள்ள நிலையில் அதனைக் கருத்திற் கொள்ளாது காடுகளை அழித்து, சீனித் தொழிற்சாலையை அமைப்பது குருட்டுத்தனமான முடிவாகும். இது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும். 

“போரால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் வாழ்வை மேம்படுத்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். ஆனால், வடக்கின் மண்ணுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்கள் எத்தனையோ இருக்கும்போது எவ்வித்திலும் பொருந்தாத சீனித் தொழிற்சாலையை வரவேற்பது அறிவுடையோரினதோ, தமிழ்த் தேசியப் பற்றாளர்களினதோ செயலாக இருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார்.  (N)

Tamilmirror Online || ‘வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்பு தடவிய விஷம்’

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு பாதிப்பு என்றால் நிச்சயமாக அந்த திடடம் நிறைவேற்றப்படும்.  இருந்தாலும் மகாவலி நீர்ப்பாசன திடத்தினூடாக இவற்றுக்கான நீர் பெற்றுக்கொள்ளப்படும்.

இங்கு இந்த திடடம்நிறைவேறினாலும் பெரிதாக தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கப்பபோவதில்லை. வவுனியாவில் இவர்கள் கொண்டுவரும் திட்ட்துக்கு அண்மையாக நிறைய சிங்கள குடியேற்றங்கள் காணப்படுகின்றது. எனவே அவர்களது திடடம் வேறு நோக்கத்துக்கானது.

வவுனியாவில் ஆடை தொழிட்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் அந்த தொழிட்சாலை அமைக்கப்பட்ட்து சிங்கள குடியேற்றப்பகுதியில். இங்கு ஐங்கரன் சொல்வது போல நீர் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவை வனாந்தரமாக்கவல்ல சீனித் தொழிற்சாலை திட்டத்தை கைவிடுங்கள் : ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

08 JUL, 2023 | 06:02 PM
image
 

(நா.தனுஜா)

வவுனியாவில் கரும்புப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும், சீனித்தொழிற்சாலையை அமைப்பதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி ஜனாதிபதியும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், எனவே ஒருகாலத்தில் வவுனியா மாவட்டத்தை வனாந்தரமாக்கக்கூடிய இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

வவுனியாவில் கரும்பு வளர்ப்பதும், சீனித்தொழிற்சாலை அமைப்பதும் வடமாகாணம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாடும் பொருளாதார செழிப்பை அனுபவிப்பதற்கு வழிவகுக்காது.

 நான் முதலமைச்சராகப் பதவிவகித்தபோது, வடமாகாணத்தில் பாரியளவிலான கரும்பு பயிரிடல் செயற்திட்டம் எமது பரிசீலனைக்கு வந்தது. 

இருப்பினும் கிடைக்கப்பெற்ற தரவுகள் மற்றும் செயற்திட்ட அறிக்கையைப் பரிசீலித்ததன் பின்னர், அச்செயற்திட்டம் வடக்கு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் என்பதால், அதனை நிராகரித்தோம். தற்போது இச்செயற்திட்டம் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளது.

சீனித்தொழிற்சாலையை அமைப்பதற்கான 500 ஏக்கர் காணியுடன் சேர்த்து மொத்தமாக 72,000 ஏக்கர் நிலப்பரப்பு இச்செயற்திட்டத்துக்கான ஒதுக்கப்பட்டுள்ளது. 

செழித்து வளர்வதற்குப் பெருமளவான நீர் தேவைப்படும் பயிர்களில் ஒன்றான கரும்பு ஓர் நீண்டகாலப் பயிராகும் (18 மாதங்கள்). அதன்படி ஒரு ஹெக்டேயர் காணியில் பயிரிடப்படும் கரும்புக்கு வருடமொன்றுக்குத் தேவையான நீரின் அளவு 2000mm - 3000mm எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

தற்போது வடமாகாண உலர்வலயம் தண்ணீர் பஞ்சத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண நீர்வளத்தை வற்றச்செய்யக்கூடிய செயற்திட்டத்தை எதற்காக நடைமுறைப்படுத்த முற்படுகின்றீர்கள்?

வவுனியாவும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களும் ஏற்கனவே குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளன. 

பாரிய ஏரிகள், நதிகள், நீர்நிலைகள் இல்லாத வவுனியாவிலும் அதனைச்சூழவுள்ள பகுதிகளிலும் இருந்து கரும்புப்பயிர்ச்செய்கைக்குத் தேவையான பெருமளவு நீரை எவ்வாறு பெறப்போகின்றோம்? அப்பகுதிகளிலிருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டால், வெகுவிரைவில் வவுனியா மாவட்டம் வனாந்தரமாகிவிடும்.

அதேபோன்று இங்கு கரும்புப்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் பட்சத்தில், தென்னை, நெல் உள்ளிட்ட ஏனைய அனைத்துப் பயிர்களும் நீரின்றிப் பாதிப்படையத்தொடங்கும். எனவே இப்பிரதேசத்தின் இயற்கைச்சூழல் வெகுவாகப் பாதிப்படையும்.  

அது மாத்திரமன்றி மகாவலி செயற்திட்டத்தைப்போன்று, இக்கரும்புப் பயிர்ச்செய்கை செயற்திட்டமும் தமிழர்களின் பாரம்பரிய வதிவிடங்களில் சிங்களக்குடியேற்றங்களை எளிதாக நிலைபெறச்செய்வதற்கு வழிகோலும். 

இதன்மூலம் மக்கட்பரம்பல் மாற்றமடையும். ஆகவே இச்செயற்திட்டம் எதிர்வருங்காலத்தில் தமிழ்மக்களின் நல்வாழ்வை வெகுவாகப் பாதிக்கும். நீங்கள் அடுத்த தேர்தலில் தமிழ்மக்களின் வாக்கைப் பெறவேண்டுமேயானால், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடுங்கள் என்று விக்கினேஸ்வரன் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/159538

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா முதலே தவறை விட்டுவிட்டு இப்போது ஞானோதயம் வந்தவர் போல பேசுகிறார். மாகாண சபையின் கீழ் இருந்த இரணைமடு குள நிர்வாகம் மகாவலி திடத்தின் கீழ் போவதட்கு அனுமதியளித்துவிட்டு இப்போது சிங்கள குடியேற்றம் பற்றி புலம்புகிறார். இனி நீங்கள் தலை கீழாக நின்றாலும் அவர்களது திடடம் திடடமிடடபடி நடக்கும். உங்களால் இப்படி அறிக்கை விட மட்டும்தான் முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.