Jump to content

மாமன்னன் எனும் மாமனிதன்                                         -சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                   மாமன்னன் எனும் மாமனிதன்

                                                           -சுப. சோமசுந்தரம்

           

இது திரை விமர்சனம் இல்லை; விமர்சனம் இல்லாமலும் இல்லை. 'மாமன்னன்' திரைப்படம் எழுப்பிய சிந்தனைச் சிதறல்கள் எனக் கொள்ளலாம்.
               சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படுவது சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படமான 'மாமன்னன்'. இயக்குனர் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் திரைக்கடலில்  மூழ்கி எடுத்த மூன்றாவது முத்து இப்படம் - பரியேறும் பெருமாள், கர்ணன், வரிசையில் மாமன்னன். மூன்றுமே சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் நம் செவிப்பறையைத் தாக்குவன; அவர்களது வலியை நமக்குக் கடத்தி சமூகத்தின் மீது சம்மட்டி அடியாய் விழுவன. முதல் இரண்டு படங்களும் அவ்வலியின் சித்திரங்கள். 'மாமன்னன்' வலியின் நிவாரணியைக் கோடிட்டுக் காட்டுவதாகவே உணர்கிறேன். நாம் நினைக்கிற சமூக சீர்திருத்தங்களையெல்லாம் கொண்டு வர வேண்டுமென்றால் ஒரு ஜனநாயக அரசியலில் தேர்தல் களத்தை எதிர்கொண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு நாம் வரவேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட அறிஞர் அண்ணாவை நினைவுறுத்துகிறது 'மாமன்னன்' திரைப்படத்தில் இறுதியில் சுட்டப் பெறும் வலி நிவாரணி.
            "நீங்க நீங்களாகவே இருக்கிற வரைக்கும், நான் நாயாகத்தான் இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் எதுவும் மாறாதுங்க !" என்று விரக்தி அடைந்த யதார்த்தவாதியான பரியேறும் பெருமாளிலிருந்து "உன்னால ஒருத்தனைத் திருப்பி அடிக்க முடிந்தும் நீ அவன்கிட்ட திரும்பத் திரும்ப அடி வாங்கினால் அது கோழைத்தனம்" என்று போதிக்கும் மாமன்னனாய் மாரி செல்வராஜ் காட்டும் பரிணாம வளர்ச்சி தமிழ்ச் சமூகத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சி. மூன்று படங்களையும் பற்றிய ஒரு சுருக்கமான பார்வை: 'பரியேறும் பெருமாள்' ஆணவக் கொலைகளை நேரடியாகப் பேசாவிட்டாலும் அவற்றைத் தொட்டுக் காட்டியது; 'கர்ணன்' கொடியங்குளம் கொடுமையை கண்முன் நிறுத்தியது; 'மாமன்னன்' இமானுவல் சேகரனைப் படம் பிடித்து, "சரி, இனி என்ன செய்யலாம் ?" என்ற நம்பிக்கை தரும் யதார்த்தத்திற்கு வருகிறது.
              முதற் படம் வருவதற்கு முன்பே தமது 'மறக்கவே நினைக்கிறேன்' மூலம் எழுத்துலகில் தடம் பதித்தவர் மாரி செல்வராஜ். எடுத்த எடுப்பிலேயே அவரது சான்றாண்மையை உலகிற்குப் பறைசாற்றியது அவர் எழுத்து. சாதியத்தின் வலிகளுக்குப் பெரும்பாலும் அப்பாற்பட்டது அந்த எழுத்து. சாதியக் கொடுமைகளை எழுத்தில் வடிப்பதை விட உயிரோவியமாய்த் திரையில் காட்டவே காத்திருந்தாரோ என்னவோ ! சாதித்தார். மூன்று படங்களிலும் சாதித்து விட்டார். எழுத்தாற்றலும் சொல்லாற்றலும் சிந்தனைத் தெளிவும் உள்ள ஒரு மனிதன் சாதித்துதானே ஆக வேண்டும் ! "நீ உட்காருப்பா, எந்திரிக்காதே ! என்று நாயகன் தன் தந்தைக்குக் கட்டளையிடுவதும், "அவர் உட்கார மாட்டார். அப்படித்தான் வழக்கம். யார் சொன்னாலும் கேட்க மாட்டார்" எனும் வில்லனின் சாதித் திமிரிடம், "நீங்க சொன்னீங்களா ?" என்று நாயகன் கேட்பதும் மாரி செல்வராஜின் சொல்லாற்றலுக்கும் சிந்தனைத் தெளிவிற்கும் சான்று பகர்வன. 'மாமன்னனி'ன் மேற்கூறிய இக்காட்சியிலும், முதல்வர் அறையில் அப்பா உட்கார்ந்து பேசுகிறாரா என்று பார்க்க அறையிலுள் வலுக்கட்டாயமாக நாயகன் நுழையும் காட்சியிலும், பின்னர் ஏதோ ஒரு விசேஷ வீட்டில் மேட்டிமைச் சாதியினர் முன் உட்கார்ந்து இருப்பதைத் தெளிவாகக் குறிக்கும் போதும் இமானுவேல் சேகரனும் முதுகுளத்தூரும் நம் மனக்கண்முன் வரவில்லையென்றால் நமக்கு சமூக, அரசியல், வரலாறு தெரியவில்லை என்று பொருள். நாற்காலியில் உட்காருவதெல்லாம் சமூகத்தில் ஒரு தலையாய பிரச்சனையா என்று சமூக வலைத்தளங்களில் கேட்கும் சில தற்குறிகளுக்கு மாரி செல்வராஜ் விடுக்கும் செய்தி - "நாற்காலியில் உட்காருவது, உட்காரச் சொல்வதெல்லாம் ஒரு குறியீடு". அறிவு, மானம் இவை உள்ளோர்க்கு அது புரியும். அது தலையாய பிரச்சினை இல்லையென்றால், இமானுவேல் சேகரன் ஏன் தன் உயிரைக் கொடுக்க வேண்டும் ? அது சுமார் எழுபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒன்று என்றால், இப்போது கூட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவரைத் தரையில் உட்கார வைத்ததும், பள்ளித் தலைமையாசிரியரான தலித் ஒருவரைத் தேசியக்கொடி ஏற்ற விடாமல் செய்ததும் ஏன் செய்திகளாயின ? "இத்தனைக் காலம் கழித்து ஏன் ?" என்று தலித் தலைவர்களாய்த் தங்களை அடையாளப்படுத்துகிற சிலரே கேட்பது வேடிக்கை. நாற்காலியில் உட்கார்வது என்பது வீழ்த்தப்பட்ட சமூகம் எழுந்து நிற்பது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
             மாரி செல்வராஜ் அவர்களின் மாமன்னன் படத்தைப் பெரும்பாலும் சமூகம் பாராட்டுவதும், வெகுசிலர் பகைமை கொண்டு வன்மத்தோடு தாக்குவதும், சிலர் நடுநிலையோடு விமர்சிப்பதும் வலைத்தளங்களில் காணக் கிடைப்பன. தோழமையுணர்வுடன் சிலர் யோசனைகள் சொல்வதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழவே செய்கின்றது. அந்த அளவில் நாமும் சில யோசனைகள் சொல்லலாமோ எனத் தோன்றுகிறது. அவ்வாறு சொல்லுகையில் மாரி செல்வராஜை முன்னிலையில் வைத்துப் பேசுவது பொருந்தியமைவது. அந்த மாமன்னனை அரியணையில் அமர வைத்து நாம் அமைச்சனாய் அவர் முன்னின்று பேசுவது அவரது சான்றாண்மைக்கு நாம் பெருமை தருவது.
          "திரு. மாரி செல்வராஜ் அவர்களே ! நீங்கள் வரலாறாய்ப் படைத்த மூன்று படங்களிலும் தலித் சமூகத்தினரைக் கொடுமைக்கு உள்ளாக்கியோர் இன்ன சாதியர் என்று சொல்லாதது பெருஞ்சிறப்பு. தானே விளங்கி நிற்பதைச் சொல்லாமல் செல்வதே தனிச்சிறப்பு. சில இடங்களில் சொன்ன சொல்லை விட சொல்லாத சொல்லுக்கே வலிமை அதிகம் என்பதை உங்கள் படங்கள் சொல்லாமல் சொல்கின்றன.
          'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் 'தேவர் மகனை'க் குறித்தது மட்டும் ஏதோ பெருவிருந்தில் பல்லில் இடறிய சிறுகல்லாய்க் 'கடக்'கென்று ஒலித்தது என்ன மாயமோ ! பல தலைமுறைகளாய் அடிபட்டவன் ஒரு கணம் தன்னை மறந்து குமுறியதைத் தாங்கவொண்ணாத சமூகங்களைக் குறித்த வேதனையும் நமக்குத் தோன்றாமலில்லை. தேவர்மகனைக் குறித்துப் பேசியது கூட ஒரு குறியீடுதான்; ஏனைய ஆதிக்க சாதிகளுக்கும் அது பொருந்தும் என எடுத்துக் கொள்ளும் பக்குவம் எல்லோரிடமும் அமைய வாய்ப்பில்லை. முந்தைய இரு படங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்காத தேவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இப்போது சமூக வலைத்தளங்களில் உங்களை அநாகரிகமாகப் பேசுவது எங்களுக்கும் வலிக்கிறது. எல்லாவற்றையும் மீறி ஏனைய சில ஆதிக்க சக்திகளிடமும் மாமன்னன் செய்தி சென்று சேராமலில்லை. திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், "மாமன்னன் படம் பார்த்து விட்டீர்களா ?" என்று கேட்க, "எனக்கு நேரம் இல்லீங்க !" என்று சொல்லும் தொனி இருக்கிறதே, அதில் பொதிந்துள்ள பொருள் நமக்குப் புரிய வேண்டும் என்றால் மட்டுமே புரியும். எது எப்படியாயினும் உங்கள் படத்தைப் பார்த்த உயர் சாதியினர் தாங்கள் இழைத்த, இழைக்கும் அடக்குமுறைகளுக்காகக் குற்றவுணர்வுடன் தம்மைச் சுயசாதி விமர்சனம் செய்திருந்தால், அது பண்பட்ட தமிழச் சாதியின் அடையாளமாய் அமைந்திருக்கும். சுயசாதி விமர்சனத்தை அக்காலத்திலேயே ஆதிக்க சாதியொன்றில் தோன்றிய புதுமைப்பித்தன் செய்தார். அவர் சாதிப் பெருமை பேசவில்லை. தம் சாதியைக் குறித்தே 'நாசகாரக் கும்பல்' என்று தலைப்பிட்டு சிறுகதை எழுதும் அளவு அவரிடம் நேர்மைத் திறம் இருந்தது. அந்த நேர்மையைப் போற்றும் விவேகம் அவர் பிறந்த சாதியில் அன்று சிலரிடமே இருந்தது; இன்றும் சிலரிடமே இருக்கிறது. எனவே தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினர் என்று எந்த ஒருவரை மட்டும் குறிப்பதற்கில்லை. ஆண்ட பரம்பரை என்று ஆணவக் கொலை வரை செல்வோர் தெற்கே ஒருவர் என்றால், வடக்கே வேறொருவர். 'உயர்' சாதியினர் என்று தங்களை வரித்துக் கொண்டோர் எண்ணத்தில் உயர்ந்தோர் இல்லை. சமூக சீர்திருத்தம் என்பது அவர்களைத் திருத்துவதும் உள்ளடக்கியது; வெறும் தலித் முன்னேற்றம் மட்டுமல்ல. யாரைத் திருத்த நினைக்கிறோமோ, அவர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர்கள் அனைவரும் உணருமாறு அமைப்பதே சிறப்பாக அமையும். அப்படித்தான் உங்களது மூன்று படங்களும் அமைந்துள்ளன. பொதுவெளியிலும் பொறுமை காப்பது உங்களுக்கும், உங்களோடு கருத்தொருமித்த எங்களுக்கும் மிக அவசியமாகிறது. பக்குவம் பெறாத சிலரோடு வாதிட்டு நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. நமக்கு சமூகத்தில் நிறைய வேலை இருக்கிறது, தோழர் !
                நீங்கள் குறிப்பிட்ட 'தேவர் மகன்' உள்ளிட்ட சில படங்களில் சாதிப் பெருமை பேசப்படுவது உண்மையெனினும், அதனை நேர்மறையாய்ப் பார்ப்பது பெரிதும் பயனளிக்கும். அப்படங்களில் பெரும்பாலும் அறம் போதிக்கப்படுகிறது. சாதி பேதமின்றி எல்லோரையும் சமமாக நடத்துவதும், பெண்ணின் மானத்தைக் காத்து நிற்பதும் தம் சாதிக்கான பெருமை என்று கூறப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத் தம் சாதிக்குள் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியாகவே இதனைக் கொள்ளலாம். அப்படங்கள் வந்த இருபது-முப்பது வருடங்களுக்கு முன்னால் அதுவே சாதியப் புரட்சியாக உணரப்பட்டு, தற்போது சாதிப் பெருமை பேசுவதும் தவறு எனும் நிலைக்கு அறிவார்ந்த சமூகம் வளர்ந்துள்ளது. இது மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்வது உங்களைப் போன்று இளமையிலேயே சான்றோர் நிலையெய்திய சாதனையாளர் கைகளிலேயே உள்ளது.
                நிறைவாக, சாதிய விடுதலைக்கு அப்பாற்பட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள் :
திரு. கமலஹாசன் அவர்கள்  ஆக்சன் திரில்லர் (தமிழ் ? மன்னிக்கவும்) படங்களிலும், நகைச்சுவைப் படங்களிலும் மாறி மாறி நடிப்பதைப் போல் நீங்கள் அவ்வப்போது பலவகை சமூக விழிப்புணர்வுப் படங்களும் தரவேண்டும். உதாரணமாக ஊழல், நேர்மை அரசியல் போன்ற தலைப்புகளை எத்துணைப் பேர் முன்னரே கையாண்டிருந்தாலும், உங்களது ஆளுமை தனித்துவமானது; சமூகத்தைப் பரந்த அளவில் சென்றடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. முதற் சங்ககாலம் என்பது போல் திரைப்படத்துறையின் முதற் சமூகநீதிக்காலம் அறிஞர் அண்ணா ஆகியோர் படைத்த காலம். இரண்டாம் சமூகநீதிக்காலம் மாரி செல்வராஜ் முதலியோர் படைக்கும் காலம் எனக் காற்றினில் கலந்து வரும் மெல்லிசை, எல்லோர் காதிலும் தேனாய்ப் பாயும் காலம் விரைவில்.                

 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • சுப.சோமசுந்தரம் changed the title to மாமன்னன் எனும் மாமனிதன்                                         -சுப. சோமசுந்தரம்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்லதொரு  கட்டுரை👍, தொடர்ந்து பகிருங்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

எது எப்படியாயினும் உங்கள் படத்தைப் பார்த்த உயர் சாதியினர் தாங்கள் இழைத்த, இழைக்கும் அடக்குமுறைகளுக்காகக் குற்றவுணர்வுடன் தம்மைச் சுயசாதி விமர்சனம் செய்திருந்தால், அது பண்பட்ட தமிழச் சாதியின் அடையாளமாய் அமைந்திருக்கும். சுயசாதி விமர்சனத்தை அக்காலத்திலேயே ஆதிக்க சாதியொன்றில் தோன்றிய புதுமைப்பித்தன் செய்தார். அவர் சாதிப் பெருமை பேசவில்லை. தம் சாதியைக் குறித்தே 'நாசகாரக் கும்பல்' என்று தலைப்பிட்டு சிறுகதை எழுதும் அளவு அவரிடம் நேர்மைத் திறம் இருந்தது. அந்த நேர்மையைப் போற்றும் விவேகம் அவர் பிறந்த சாதியிலேயே அன்று சிலரிடமே இருந்தது; இன்றும் சிலரிடமே இருக்கிறது.

பேராசான் சுப.சோமசுந்தரம் ஐயாவிற்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.