Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை இல்லை : சர்வதேச இந்துமத பீடம் !

kugenJuly 17, 2023
 
565321.jpg

இன்று பிறந்துள்ள ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வரும் நிலையில், மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை விரதமாக கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அரிதாக வரும் நிலையில், இன்றைய தினம் வரும் முதல் அமாவாசை தினம் ஆடி அமாவாசை தினம் அல்லவென சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும் கருதப்படும் என்பதுடன், அன்றைய தினம் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.battinews.com/2023/07/blog-post_797.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல், நாடுகள், மதங்கள், மனிதர்களின் குழப்பம். இயற்கையே குழம்பியநிலை. நேற்று காலையிலிருந்து ஒரு கைபேசி அமவாசை தொடர்பாக இலங்கை-நோர்வே-இலண்டன் என்று அலறியபடி இருந்தது. நானே இன்றுதான் என்று நினைத்திருந்தேன். இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

இன்று பிறந்துள்ள ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வரும் நிலையில், மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை விரதமாக கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அரிதாக வரும் நிலையில், இன்றைய தினம் வரும் முதல் அமாவாசை தினம் ஆடி அமாவாசை தினம் அல்லவென சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும் கருதப்படும் என்பதுடன், அன்றைய தினம் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச இந்துமத பீடம்... இதை இரண்டு நாள் , முன்பே சொல்லி இருந்தால்...
நான்... இன்று விரதம் பிடித்து , மரக்கறி சாப்பாடு, சாப்பிட வேண்டிய தேவையே வந்திருக்காது.
அதுகும்... மத்தியானம் சாப்பிட்ட பிறகுதான், இந்தச் செய்தியே கண்ணில் படுகுது.
கொஞ்சம் முதல் தெரிந்திருந்தாலாவது...  முட்டைப்  🥘  பொரியலுடன் சோறு சாப்பிட்டிருக்கலாம்.

2 hours ago, nochchi said:

அரசியல், நாடுகள், மதங்கள், மனிதர்களின் குழப்பம். இயற்கையே குழம்பியநிலை. நேற்று காலையிலிருந்து ஒரு கைபேசி அமவாசை தொடர்பாக இலங்கை-நோர்வே-இலண்டன் என்று அலறியபடி இருந்தது. நானே இன்றுதான் என்று நினைத்திருந்தேன். இணைப்புக்கு நன்றி

நொச்சி... அருந்தப்பில் தப்பி விட்டார், போலுள்ளது.  😜

@goshan_che  👆 இந்தக் கூத்தை ஒருக்கால் பாருங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

சர்வதேச இந்துமத பீடம்... இதை இரண்டு நாள் , முன்பே சொல்லி இருந்தால்...
நான்... இன்று விரதம் பிடித்து , மரக்கறி சாப்பாடு, சாப்பிட வேண்டிய தேவையே வந்திருக்காது.
அதுகும்... மத்தியானம் சாப்பிட்ட பிறகுதான், இந்தச் செய்தியே கண்ணில் படுகுது.
கொஞ்சம் முதல் தெரிந்திருந்தாலாவது...  முட்டைப்  🥘  பொரியலுடன் சோறு சாப்பிட்டிருக்கலாம்.

நொச்சி... அருந்தப்பில் தப்பி விட்டார், போலுள்ளது.  😜

@goshan_che  👆 இந்தக் கூத்தை ஒருக்கால் பாருங்கோ. 

சர்வதேச சைவ பீடம் சொல்லாதவரை நாங்கள் நம்ப மாட்டோம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

சர்வதேச இந்துமத பீடம்... இதை இரண்டு நாள் , முன்பே சொல்லி இருந்தால்...
நான்... இன்று விரதம் பிடித்து , மரக்கறி சாப்பாடு, சாப்பிட வேண்டிய தேவையே வந்திருக்காது.
அதுகும்... மத்தியானம் சாப்பிட்ட பிறகுதான், இந்தச் செய்தியே கண்ணில் படுகுது.
கொஞ்சம் முதல் தெரிந்திருந்தாலாவது...  முட்டைப்  🥘  பொரியலுடன் சோறு சாப்பிட்டிருக்கலாம்.

இப்படி  ஒரு  விரதம்  தேவையா ராசா

அடுத்த  முறை சந்திக்கும்போது

100 முட்டை  கொண்டு வாறன்

ஆனால் தந்திட்டு ஓடிடுவன்☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும்

இதை முன்னமே சொல்லி இருக்க கூடாதா? 😀
 
Edited by நிலாமதி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

நொச்சி... அருந்தப்பில் தப்பி விட்டார், போலுள்ளது.  😜

இங்கும் அதேதான். ஆனால், எனக்கு மரக்கறியும் பிடிக்கும். ஊரிலையே சித்திரை தொடங்கிற விரதச் சாப்பாடு புரட்டாதிவரை நீளும்.அதோட வெள்ளி-செவ்வாயும் பிறகென்ன.... புலத்திலை தனிய இருக்கேக்கை வெள்ளிமட்டும். பிறகு துணைவியார் வர செவ்வாயும் இணைந்துவிட்டது. 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.