Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்!

ஜனாதிபதி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார்.

அதன்படி ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான (யு.எல்- 195) என்ற விமானத்தில் இன்று பகல் 1.43 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதேவேளை அவர் இன்று மாலை 5 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1340604

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி!

ஜனாதிபதி இந்தியா பயணம் : பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரது கீழ் அமைச்சுக்களை மேற்பார்வையிட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராகவும் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் காலப்பகுதியில் பணியாற்றுவதற்காக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன, ஜனாதிபதியின் பதில் செயலாளராக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1340611

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிக்ரு இந்திய விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிக்ரு இந்திய விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு முதன்முறையாக விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமான நிலையத்தில் வைத்து தான் வரவேற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ச்சி தெரிவித்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி ரணில் பேச்சு

20 JUL, 2023 | 09:05 PM
image

 

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று மாலை வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளிதரன் வரவேற்றுள்ளார்.

இதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் வரவேற்று கலந்துரையாடலில்  ஈடுபட்டார்.

https://www.virakesari.lk/article/160532

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

President.Ranil_.Wickremesinghe.India_.PM_.Narendra.Modi_-750x375.jpg

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ 
பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் 
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கௌதம் அதானியை சந்தித்தார் ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 3

21 JUL, 2023 | 10:09 AM
image
 

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்ததுள்ளார். 

இதனை கௌதம் அதானி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணம், 500 மெகாவாட் காற்றாலை மின்  திட்டம் மற்றும்  பசுமை வலுசக்தி உற்பத்தியை புதுப்பித்தல் விரிவுபடுத்துதல் உட்பட இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கௌதம் அதானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Capture.JPG

https://www.virakesari.lk/article/160540

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ரணிலுக்கிடையிலான பேச்சு ஆரம்பம்

Published By: VISHNU

21 JUL, 2023 | 11:53 AM
image
 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையிலான பேச்சுவார்த்தை சற்று முன் டெல்லியில் ஆரம்பமாகியுள்ளது.

361890349_1206015623398668_3438055649973

இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (20) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

362241032_306145608521620_19906955481763

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஹைதராபாத் இல்லத்தில் வைத்து அன்புடன் வரவேற்றார். 

362477951_152404904536276_21466301236492

இதன் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. இந்த ஆண்டு இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், நீண்டகால இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகளை மறுபரிசீலனை செய்து மேலும் வளர்ப்பதற்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்.

362216210_283362647708699_33695226906200

https://www.virakesari.lk/article/160563

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அதானி குழுமத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அதானி குழுமத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கௌதம் அதானி தனது டுவிட்டர் பதில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி, 500 மெகாவொட் காற்றலை மின்உற்பத்தி திட்டம் மற்றும் பசுமை ஐதரசன் திட்டம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1340733

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

 

May be a doodle of text

 

பார்த்தவுடன் சிரிப்பு வந்த, அர்த்தமுள்ள கருத்தோவியம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டு;ம் - ரணில் முன்னிலையில் மோடி

21 JUL, 2023 | 03:29 PM
image
 

இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமிழ்மக்களிற்கு கௌரவமான வாழ்வை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருநாடுகளுக்கு இடையில் அதிகளவு தொடர்பினை  ஏற்படுத்தக்கூடிய பல உட்கட்டமைப்பு திட்டங்களில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கான அபிவிருத்தி உதவி திட்டமொன்றையும் இந்திய பிரதமர் அறிவித்துள்ளார்.இலங்கை மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய பிரதமர் விடுத்துள்ளார்.

சமத்துவம் நீதி மற்றும் சமாதானத்தை உறுதிசெய்வதற்காக இலங்கை புனர்நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/160589

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – இந்தியாவுக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கை – இந்தியாவுக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சூரிய சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதி, IPL மற்றும் லங்கா பே ஆகியவற்றுக்கு இடையேயான நெட்வொர்க் டு நெட்வொர்க் ஒப்பந்தம்,  UPI விண்ணப்ப ஏற்பு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும்.

கால்நடை வளர்ப்பு மீது இந்த ஒப்பந்தங்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், இந்த குறிப்பிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1340868

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கு தீர்மானம் : மோடி உறுதி!

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கு தீர்மானம் : மோடி உறுதி!

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதன் மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

உத்தியோக பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.

இதன்போது இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1340816

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம் குறித்து நான் முன்வைத்த யோசனை, கருத்துக்களை இந்திய பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொண்டேன் - ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 3

21 JUL, 2023 | 03:49 PM
image
 

மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்து கருத்துக்களையும் நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொண்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த பணிகள் குறித்து இணக்கப்பாட்டுடன், தேசிய ஒற்றுமைக்காக பணியாற்றுமாறு நான் பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். இந்த முயற்சிகளின் போது, பிரதமர் மோடி , தனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரு நாள் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின் போது ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை (21) கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமுல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி விக்ரமசிங்க, எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்திய ஊடகங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

“பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் புதுடெல்லிக்கு வருவதை கௌரவமாக கருதுகிறேன். கடந்த ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நான் இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் நிலையில், இந்த பயணம் எனக்கும், எனது அரசுக்கும் மிக முக்கியமான பயணம் என்றே கூறவேண்டும். இந்த பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும் உபசரிப்புக்களை வழங்கிய பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டிய ஜனாதிபதி, இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும்.

கடந்த வருடம் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார, சமூக, அரசியல் ரீதியிலான அசாதாரண சவால்கள் மற்றும் அந்தச் சவாலைகளை வெற்றிகொள்வதற்காக தன்னால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பிலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்திருந்தேன்.

எமது அண்மைய வரலாற்றில் மிக சவாலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் மனப்பூர்வமாக நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையின் அண்மைக்கால நிலைமைகளை மீளாய்வுச் செய்யும் போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் இலங்கையர்களின் அனைத்து சமூகங்களுக்கும் பலன் கிட்டும் வகையில், நீதி, நியாயத்துடனான நிலையான, ஸ்திரமான அபிவிருத்தியை நோக்கிய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான எனது அர்ப்பணிப்புக்களை பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்துள்ளேன்.

இதற்கு அப்பால் சென்று இலங்கையை பாரிய பொருளாதார மறுசீரமைப்பு பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதையும், இந்த செயற்பாடுகளின் நிலையான பிரதிபலன்களை இலங்கை தற்போது அடைந்துள்ளதாகவும், நாட்டின் முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நம்பிக்கை மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளதையும் நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.

மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்து கருத்துக்களையும் நான் அவருடன் பகிர்ந்துகொண்டேன்.

இந்த பணிகள் குறித்து இணக்கப்பாட்டுடன், தேசிய ஒற்றுமைக்காக பணியாற்றுமாறு நான் பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். இந்த முயற்சிகளின் போது, பிரதமர் மோடி அவர்கள், தனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நாம் தற்போது எமது பொருளாதாரத்தை, நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதும், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் மேம்படுத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் அவசியமான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.

இந்த நோக்கத்தை வெற்றிகொள்வதற்காக, பலமான பங்களிப்பை அடித்தளமாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் ஊடாக எதிர்கால இலங்கை - இந்திய பொருளாதார கூட்டிணைவுக்காக ஒருங்கிணைந்த நோக்கத்திற்காக ஒன்றுபட வேண்டும்.

எமது இருதரப்பு இராஜதந்திர தொடர்புகளில் 75ஆவது வருடத்தைப் பூர்த்திசெய்யும் போது, அடுத்த சில தசாப்தங்களில் எமது எதிர்கால சந்ததியினருக்காக வழங்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் மேலதிக வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான உள்ளக செயற்பாடுகள் ஊடாக மிகவும் பாதுகப்பான எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கான இயலுமை பற்றியும் ஆராய்தோம்.

இரு நாடுகளுக்கும் இடையில், பல தசாப்தங்கள் பழமையான நாகரிகம், கலாசார, மானிட மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் போதான உள்ளகச் செயற்பாடுகள், வாயிலாக எமது ஒன்றிணைந்த நோக்குக்கான அடித்தளம் உருவாகியுள்ளது.  

எமது உறவுகள் என்ற நூள் வரலாற்றிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.  எமது எதிர்கால இலக்குகளுக்கான ஆரம்பத்திற்கு நிகழ்காலமே மிகச் சிறந்த தருணமாகும்.

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது. அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுகிறது. அது சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும்.

தலைமன்னார் - ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் -  காங்கேசன்துறை ஆகிய பகுதிளுக்கிடையிலான படகு சேவை இரு நாடுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு வலு சேர்க்கும். இலங்கை மற்றும் இந்திய உறவுகளுக்கான வேறு வழிமுறைமைகள் தொடர்பில் ஆராய்வதும் பொருளதார வளர்ச்சிக்கு மற்றுமொரு வலுவாக அமையும்.

புதிய மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய துறைகளுக்கு இருதரப்பு பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை மற்றும் - இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்ற விடயத்திற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக சேவை வழங்கல் மற்றும் தனி நபர்களை  மையப்படுத்திய சேவைகளுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இலங்கை ஆர்வமாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் மேம்படுத்தப்படும் தொடர்பாடல், சுற்றுலாத்துறை, மனிதர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் கலாசார தொடர்பாடல்கள் உள்ளிட்ட துறைகளை வலுவூட்டுவதற்கான முக்கியமான விடயங்களுக்கு நாம் இணங்கியுள்ளோம். தொற்றுநோய் பரவலுக்கு பின்னராக காலப்பகுதியில்,  இலங்கையின் சுற்றுலாத்துறை தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்குடன் இருக்கின்ற நிலையில், இந்தியர்களின் இலங்கைக்கான சுற்றுலா மிகப்பெரிய சந்ததையாக மாறியுள்ளது. அதனால், Unified Payments Interface (UPI) முறைமையை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறைமையை வலுவூட்டுவதால், ஏனைய துறைகளையும் பலப்படுத்த முடியும்.

பசுமை பொருளாதாரத்திற்கு இலங்கையின் தேசிய முக்கியத்துவம் உலக அர்பணிப்புக்களுக்கு இணங்க வலுசக்தி பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காகவும், பசுமை மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவூட்டலுக்கான இந்தியாவுடன் கைகோர்த்துக்கொள்வது பெறுமதியான வாய்ப்பு என இலங்கை கருதுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான துறைசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் வலியுறுத்துகிறேன். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அதிக வலுவுடனான மின் பரிமாற்ற தொடர்பு கட்டமைப்பு ஒன்றை நிறுவினால் இருநாடுகளுக்கும் இடையிலான இருவழிப்பாதை மின் வர்த்தகத்திற்கான வழியை ஏற்படுத்தும்.

இந்தியாவின் ஒத்துழைப்போடு, திருகோணமலை இலங்கையின் வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாகவும் திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும்.

பிரதமர் மோடி மற்றும் நான் நம்பிக்கை கொண்டுள்ள வகையில், இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்து இலங்கை வரையிலான பல்துறைசார் பெற்றோலிய குழாய் கட்டமைப்பொன்றை உருவாக்குவதால், இலங்கையினால் வழங்கக்கூடிய உறுதியான வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதே பிரதமர் மோடியினதும் எனதும் எதிர்பார்ப்பாகும்.  

சமூக - பொருளாதார அபிவிருத்தியின் அதிகமான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான எமது பொது முயற்சியை வெற்றிகொள்வதற்காகவும், எமது மக்களின் போஷாக்கு நிலைமையை மேம்படுத்துவதற்கான பால் உற்பத்தி மற்றும் கால்நடை துறைகளில் எமது ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசித்தோம்.

கல்வித்துறையின் ஒத்துழைப்பு எமது இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது. இந்திய உதவியுடன் இலங்கைக்குள் புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவது முக்கியமானதென நம்புகிறோம். இதனால் எமது இளைஞர், யுவதிகளில் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த முடியும் என்பதோடு அவர்களை தேசிய அபிவிருத்தி பொறிமுறைக்குள் உள்வாங்கப்படுவர்.

எமது இருதரப்பு தொடர்புகளை மீளாய்வுச் செய்றவதற்காகவும், உலக மற்றும் கலாசார தொடர்புகளை வலுவாக பயன்படுத்திக்கொள்ளவும் நவீன உலகத்தில் எமது எதிர்கால எதிர்பார்ப்புக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்த எனது இந்திய விஜயம் வாய்ப்பளித்துள்ளது என நம்புகிறேன்.

இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை  -  இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும் என்றும், இலங்கை அனைத்து சமூக குழுக்களினதும் நிலையான அபிவிருத்தி மற்றும் தேசிய ஒருமைப்பாடு இலங்கையின் அனைத்து சமூகத்தினர் மத்தியிலுமான நல்லிணக்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு  சுபீட்சமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எனது நோக்கத்திற்கு உதவும் என நம்புகிறேன்.’’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/160595

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினை தவிர மற்ற எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்படும். அதாவது இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இதில் தமிழர் பிரச்சினை அடிபட்டு போகும் வழமைபோல.  

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230721-221542.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன- மோடி

21 JUL, 2023 | 04:50 PM
image
 

இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளதால் இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையில்  இலங்கைக்கு விசேட இடமுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள  அவர் இருநாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தினை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நெருக்கடியில் உள்ள நேரத்தில் அந்த நாட்டுமக்களுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கவேண்டும் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை அதிகரிப்பதற்காக  நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையில் படகுச்சேவையை ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க பதவியேற்று ஒருவருடகாலத்தை பூர்த்திசெய்துள்ளமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் இலங்கை மக்கள் கடந்த வருடம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள், ஆனால் நெருங்கிய நண்பர்கள் போல நாங்கள் நெருக்கடியான தருணத்தில் இலங்கை மக்களுடன் தோளோடுதோள் நின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/160610

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக ஜானாபதி ஊடகப்பி பிரிவு தெரிவித்துள்ளது
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்து

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்து

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என தாம் நம்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் மாகாணத் தேர்தல்களை நடத்துவதற்கும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தங்கள் பழமையான 13வது திருத்தம் ஒன்பது மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை கொடுத்த போதும் அது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் திருத்தத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.

அத்தோடு இந்த நடவடிக்கையை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மற்றொரு வெற்று வாக்குறுதி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

https://athavannews.com/2023/1340973

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்து

நம்பிக்கை கீற்று தென்படுகிறது.. ரொம்ப ஸ்ட்ரிக்கா சொல்கிறார் போல இருக்கு தோழர்..😊

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Cruso said:

தமிழர் பிரச்சினை தவிர மற்ற எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்படும். அதாவது இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இதில் தமிழர் பிரச்சினை அடிபட்டு போகும் வழமைபோல.  

தமிழர் பிரச்சனை தீர்க்கப்படுவதை இந்தியாவோ, இலங்கையோ விரும்பாது. தமிழரின் அழிவிற்த்தான் அவர்களது அரசியலே இருக்கிறது. அது தவிர்த்து எந்தப்பிரச்சனையும் நகராது. பிரச்சனையின் மூலவேரே தமிழர் பிரச்சனைதான், அதை தீர்க்க முடியாவிட்டால் இந்தியா அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும், இல்லையேல் அதன் பலனை அதன் குடிமக்கள் அனுபவிப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நம்பிக்கை கீற்று தென்படுகிறது.. ரொம்ப ஸ்ட்ரிக்கா சொல்கிறார் போல இருக்கு தோழர்..😊

ஆமா ஆமா

காட்டுற விரலைப் பார்த்தா அப்படித் தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

22 JUL, 2023 | 06:22 AM
image
 

இந்தியாவுக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை (21) இரவு நாடு திரும்பினார்.

ஜனாதிபதியுடன் 17 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இந்தியாவின் புதுடில்லிக்கு 20 ஆம் திகதி வியாழக்கிழமை சென்றிருந்தனர்.

அவர்கள் அனைவரும் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL196 இல் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வரவேற்றார்.

அதன் பின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவலை சந்தித்த ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவர்த்தைகளை நடத்தியிருந்தார்.

கடந்த வருடம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில், ஒருவருடத்தின் பின் இந்தியாவுக்கான முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/160620

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நம்பிக்கை கீற்று தென்படுகிறது.. ரொம்ப ஸ்ட்ரிக்கா சொல்கிறார் போல இருக்கு தோழர்..😊

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமா ஆமா

காட்டுற விரலைப் பார்த்தா அப்படித் தான் தெரியுது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்து

animiertes-gefuehl-smilies-bild-0055.gif ஒரு கிழமைக்குள் பிரச்சினையை தீர்க்காட்டில் நடக்கிறதே... வேறை என்று சொல்லுகிறார்.
இதோடை தீர்வு வரும் போலை கிடக்கு. animiertes-gefuehl-smilies-bild-0029.gif

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. – அண்ணாமலை

4-38.jpg

”இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை, முழுவதுமாக அமல்படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்ததாக” அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் திரு  ரணில் விக்கிரமசிங்கே அவர்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி  அவர்களை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நமது பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை, முழுவதுமாக அமல்படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இலங்கையில் மலையகத் தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாண்புமிகு பிரதமர் திரு  நரேந்திரமோடி , இலங்கையில் ₹75 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதையே, நமது மாண்புமிகு பிரதமர் முன்னுரிமையாகக் கொண்டுள்ளார்.

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது. 1800 ஆண்டு பழமையான சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில்  குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தொன்மையுள்ள தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத் தொடர்பு, 1960களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு

நரேந்திரமோடி  அவர்கள் தலைமையிலான மத்திய அரசு 287 கோடி மதிப்பில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது.

நாகப்பட்டினம் காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மற்றும் இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இது சாத்தியமாவதற்கு முழுமுதற் காரணமான மாண்புமிகு பாரதப் பிரதமர்  அவர்களுக்கு  பாஜக தமிழ்நாடு சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
 

 

https://akkinikkunchu.com/?p=250915

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார், பூநகரியில் சூரிய மற்றும் காற்றாலை திட்டத்தை 2025 ஜனவரிக்குள் நிறைவு செய்ய அதானி உறுதி: காஞ்சன

மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் சோலார் மற்றும் காற்றாலை திட்டத்தை 2025 ஜனவரிக்குள் நிறைவு செய்ய கௌதம் அதானி உறுதியளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவுடனான சந்திப்பின் போது அதானி இந்த உறுதிமொழியை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், CEB மற்றும் NTPC இந்தியாவின் கூட்டு முயற்சிக்காக சம்பூர் சோலார் பூங்காவிற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/264651

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.