Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டம் ஆரம்பம்

Published By: SETHU

20 JUL, 2023 | 06:30 AM
image
 

(ஆர்.சேது­ராமன்)

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி இன்று ஆரம்­ப­மா­­கின்­றது. சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம் 9ஆவது தட­வை­யாக நடத்தும் இப்­போட்­டி­களை அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்­து­கின்­றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ஆம் திகதி சிட்னி நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

இம்­முறை முதல் தட­வை­யாக 32 அணிகள் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. இதற்­கு முன் அதி­க­பட்­ச­மாக 24 அணி­களே பங்­கு­பற்­றின. 

முத­லா­வது போட்­டியில் நியூ­ஸி­லாந்து, நோர்வே அணிகள் மோத­வுள்­ளன. இலங்கை நேரப்­படி இன்று பிற்­பகல் 12.30 மணிக்கு நியூ­ஸி­லாந்தின் ஆக்­லாந்து நக­ரி­லுள்ள ஈடன் பார்க் அரங்கில் இப்­போட்டி ஆரம்­ப­மாகும். அதற்கு முன் இதே அரங்கில் ஆரம்ப விழா நடை­பெ­ற­வுள்­ளது. இன்று பிற்பகல் 3,30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 2ஆவது போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா, அயர்­லாந்து அணிகள் மோத­வுள்­ளன.

மகளிர் கால்­பந்­தாட்­டத்­துக்குத் தடை

முத­லா­வது சர்­வ­தேச மகளிர் கால்­பந்­தாட்டப் போட்டி 1881ஆம் ஆண்டு ஸ்கொட்­லாந்தில் நடை­பெற்­றது. ஸ்கொட்­லாந்து, இங்­கி­லாந்து அணிகள் அப்­போட்­டியில் மோதின.

எனினும், 1921ஆம் ஆண்டு முதல் 1970 ஜன­வரி வரை இங்­கி­லாந்து கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம், பெண்­க­ளுக்­கான போட்­டி­க­ளுக்கு தடை விதித்­தி­ருந்­தது. ஜேர்­மனி, பிரான்ஸ், பிரேஸில் போன்ற நாடு­க­ளிலும் மகளிர் கால்­பந்­தாட்­டத்­துக்கு பல தசாப்­தங்கள் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.Womens-World-Cup-2.jpg

1970ஆம் ஆண்டு சுயா­தீன ஐரோப்­ பிய மகளிர் கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம் எனும் அமைப்­பால், இத்­தா­லியில் முத­லா­வது மகளிர் உலக சம்­பி­யன்ஷிப் எனும் பெயரில் சுற்­றுப்­போட்­டி­யொன்று நடத்­தப்­பட்­டது. அதன் இறு­திப்­போட்­டியில் இத்­தா­லியை வென்று டென்மார்க் சம்­பி­ய­னா­கி­யது.

1971ஆம் ஆண்டு மெக்­ஸி­கோ­விலும் இதே அமைப்­பால் மற்­றொரு உலக சுற்­றுப்­போட்டி நடத்­தப்­பட்­டது. அதன் இறு­திப்­போட்­டியில் மெக்­ஸி­கோவை வென்று டென்மார்க் சம்­பி­ய­னா­கி­யது.  

பீபா ஏற்­பாட்டில்...

சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின்(பீபா) ஏற்­பாட்டில் முத­லா­வது மகளிர் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி 1991ஆம் ஆண்டு சீனாவில் நடை­பெற்­றது. 12 அணிகள் அச்­சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்­றின. அமெ­ரிக்கா முத­லா­வது சம்­பி­ய­னா­கி­யது. இது­வரை நடை­பெற்ற 8 போட்­டி­களில் 36 அணிகள் குறைந்­த­பட்சம் ஒரு சுற்­றுப்­போட்­டி­யி­லா­வது பங்­கு­பற்­றி­யுள்­ளன. 

இவற்றில் அமெ­ரிக்கா 4 தட­வைகள் சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. ஜேர்­மனி 2 தட­வை­களும், நோர்வே, ஜப்பான், ஆகி­ யன தலா ஒரு தட­வையும் சம்­பி­ய­னா­கி­யுள்­ளன. இறுதியாக 2015ஆம் ஆண்­டில் நடை­ பெற்ற 2 சுற்­றுப்­போட்டிக­ளி லும் அமெ­ரிக்­காவே சம்பிய­னா­கி­யது. மகளிர் கால்­பந்­தாட்­ டத்தில் அமெ­ரிக்கா, ஜேர்மனி, நோர்வே, ஜப்பான், சீனா, சுவீ டன், பிரேஸில், நெதர்­லாந்து, இங்­கி­லாந்து, கனடா, அவுஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், டென்மார்க் முத­லான அணிகள் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றன.

FiFA-2023-worrl-cup-Players.jpg

முதன்­மு­றை­யாக

இம்­முறை முதல் தட­வை­யாக இரு நாடு­களில் மகளிர் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி நடை­பெ­று­கி­றது. நியூ­ஸி­லாந்தின் ஆக்­லாந்து, டனடின், ஹமில்டன், வெலிங்டன் ஆகிய 4 நக­ரங்­க­ளிலும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்பேர்ன், பேர்த், சிட்னி ஆகிய 5 நக­ரங்­க­ளிலும் இப்­போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 

போர்த்­துக்கல், அயர்­லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஹெய்ட்டி, பனாமா, ஸாம்­பியா, மொரோக்கோ ஆகி­யன முதல் தட­வை­யாக இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. 

பணப் ­ப­ரிசு

இச்­சுற்­றுப்­ போட்­டியில் சம்­பி­ய­னாகும் நாட்டின் கால்­பந்­தாட்டச் சங்­கத்­துக்கு சம்­பியன் கிண்­ணத்­துடன் 4,290,000 அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் அக்­கு­ழா­மி­லுள்ள ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 270,000  டொலர் வழங்­கப்­படும். அதா­வது முத­லிடம் பெறும் நாட்­டுக்கு மொத்­த­மாக 10,500,000 டொலர் வழங்­கப்­படும். 

2ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 3,015,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 195,000 டொலர் வழங்­கப்­படும். 3ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 2,610,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 180,000 டொலர் வழங்­கப்­படும். 

4ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 2,455,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 165,000 டொலர் வழங்­கப்­படும்.  கால் இறு­தி ­வரை முன்­னேறும் நாடு­களின் சங்­கங்­க­ளுக்கு தலா 2,180,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 90,000 டொலர் வழங்­கப்­படும். 

2023-FIFA-women-world-cup-logo.jpg

9 முதல் 16ஆவது இடங்­களைப் பெறும் நாடு­களின் சங்­கங்­க­ளுக்கு தலா 1,870,000  டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 60,000 டொலர் வழங்­கப்­படும்.  17 முதல் 32 வரை­யான இடங்­களைப்  பெறும் நாடு­களின்  சங்­கங்­க­ளுக்கு தலா 1,560,000  டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 30,000 டொலர் வழங்­கப்­படும். 

அணிகள் விபரம்:

குழு ஏ: நியூஸிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ். சுவிட்ஸர்லாந்து,

குழு பி:  அவுஸ்திரேலியா, அயர்லாந்து, நைஜீரியா, கனடா. 

குழு சி: ஸ்பெய்ன், கொஸ்டாரிக்கா, ஸாம்பியா, ஜப்பான், .

குழு டி: இங்கிலாந்து, ஹெய்ட்டி, டென்மார்க், சீனா. 

குழு ஈ: அமெரிக்கா, வியட்நாம், நெதர்லாந்து, போர்த்துக்கல்,

குழு எவ்: பிரான்ஸ், ஜமெய்க்கா, பிரேஸில், பனாமா. 

குழு ஜி: சுவீடன், தென் ஆபிரிக்கா, இத்தாலி, ஆர்ஜென்டீனா,

குழு எச்: ஜேர்மனி, மொரோக்கோ, கொலம்பியா, தென் கொரியா.

https://www.virakesari.lk/article/160440

  • Replies 85
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நியாயம்

ஊடகம், ஊடகவியலாளார் என்று கூறிக்கொண்டு இப்போது தனிப்பட்டவர்களின் விடயங்களை எல்லாம் சந்திக்கு கொண்டு வந்து நாறடிக்கின்றார்கள். ஆனால் என்னவோ இவர்களுக்கு தமிழ் மட்டும் ஒழுங்காக எழுத தெரியவில்லை.  வீ

குமாரசாமி

எங்கடை ஜேர்மன் பிள்ளையள் ஒரு சொட்டிலை தோத்துப்போச்சினம். இல்லையெண்டால் இப்ப நடக்கிற கதையே வேறை......  அவுஸ்ரேலிய கண்டம் கலங்கியிருக்கும் 

குமாரசாமி

அவுஸ்ரேலியா கண்டம் பெரிசுதான்....அதே போல கஞ்சத்தனமும் பெரிசு கண்டியளோ!  உங்கை வாற அகதிகளையும் ஐரோப்பாவிலை நிரம்பி வழியுற அகதிகளையும் பெரிய மனசு பண்ணி நாட்டுக்குள்ளை எடுக்கலாம் தானே? பெரிய நிலப்பர

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பெண்களுக்கான உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட போட்டியில் அவுஸ்ரேலியா மெல்போனில் யேர்மனி பெண்கள் அணி 6 கோல் அடித்து நல்லதொரு ஆரம்பத்தை செய்துள்ளது. 6 - 0 மொரோக்கோ அணியை வெற்றி கொண்டுள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

FIFA மகளிர் உலகக் கோப்பை: முதல் நாளிலேயே வரலாறு படைத்த நியூசிலாந்து; அவுஸ்திரேலியா வெற்றி

 5 நாட்கள் முன்

 

போட்டியை நடத்தும் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் முதல் நாளிலேயே வெற்றியுடன் தொடங்கின.

FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இன்று (வியாழன்) நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி நார்வேயை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இது உலககோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

அதே ஸ்கோரில் (1-0) இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது.

 

23-64b9492f66da4.webp

நியூசிலாந்து அணி நார்வே போட்டியை ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் 42,000 க்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். இது நியூசிலாந்தில் வரலாறு காணாத பார்வையாளர் எண்ணிக்கை என கூறப்படுகிறது.

அதே போல், அவுஸ்திரேலியா vs அயர்லாந்து போட்டியைக் காண 75,000-க்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவில் சிட்னி ஸ்டேடியத்தில் நிரம்பியிருந்தனர். 

23-64b9492fb4e21.webp

https://news.lankasri.com/article/fifa-womens-world-cup-new-zealand-australia-win-1689864494

  • கருத்துக்கள உறவுகள்
Posted

FIFA மகளிர் உலகக்கோப்பை: சுவிட்சர்லாந்து முதல் ஆட்டத்திலேயே வெற்றி

4 நாட்கள் முன்

 

பிலிப்பைன்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வெற்றிபெற்றது.

முதல் ஆட்டத்திலேயே வெற்றி

FIFA மகளிர் உலகக் கோப்பையில், இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் சுவிட்சர்லாந்து பெண்கள் அணி அதன் முதல் ஆட்டத்திலேயே 2-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தியது.

2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையில் சுவிட்சர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு அணிகளுக்குமே இது முதல் போட்டியாகும். இதில் சுவிட்சர்லாந்து அணி அதன் வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது.

23-64ba813a203d2.webp

இரண்டு கோல்கள்

போட்டியில் 45-வைத்து நிமிடத்தில் ரமோனா பச்மேன் (Romana Bachmann) தனது பெனால்டி கிக்கை கோலாக மாற்றி, அணிக்கு முதல் கோலை பெற்றுத்தந்தார்.

போட்டியின் இரண்டாவது பாதியில் செரைனா பியூபெல் (Seraina Séverin Piubel) அணிக்கான இரண்டாவது கோலைச் சேர்த்தார்.

 

23-64ba813b0fe44.webp

குரூப் ஏ என்கவுன்டர் டுனெடினின் ஃபோர்சித் பார் ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஆட்டமாகும், இது போட்டியின் ஒரே உள்ளரங்க மைதானமாகும். 30,000 க்கும் அதிகமானோர் அமரக்கூடிய இடத்தில் 13,711 பேர் கலந்து கொண்டதோடு, ஏறக்குறைய பாதி நிரம்பிய அரங்கத்தின் சுவர்களைச் சுற்றிலும் கூட்டத்தின் ஆரவாரம் எதிரொலித்தது.

பிலிப்பைன்ஸ் முன்கள வீராங்கனையான கத்ரீனா கில்லோ 15வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார், ஆனால் அது ஒரு ஆஃப்சைட் அழைப்பால் (offside rule) கைவிடப்பட்டது. 

23-64ba813a8f743.webp

23-64ba813b5b6bd.webp

https://news.lankasri.com/article/fifa-womens-world-cup-switzerland-beat-philippines-1689943935

  • கருத்துக்கள உறவுகள்
Posted

FIFA மகளிர் உலகக் கோப்பை 2023: முதல் பாதியிலேயே 3 கோல் எடுத்து ஸ்பெயின் வெற்றி

 4 நாட்கள் முன்

 

ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் கோஸ்டாரிகாவை 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வென்றது.

எதிரணி வீராங்கனையின் கவனக்குறைவால் முதல் கோல்

ஆரம்பத்திலேயே ஸ்பெயின் ஆட்டத்தை கைப்பற்றியது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் எஸ்தர் கோன்சலஸ் (Esther Gonzalez) அடித்த பந்து கோஸ்டாரிகா வீராங்கனை Valeria Del Campo-ன் கவனக்குறைவால் ஸ்பெயின் அணிக்கான முதல் கோலாக மாறியது.

அதையடுத்து 23-வது நிமிடத்தில் ஐதானா பொன்மதி (Aitana Bonmati) திறமையாக செயல்படுத்தப்பட்ட ஃபினிஷிங் மூலம் அட்டகாசமான கோலை அடித்தார்.

அதையடுத்து, அடுத்த நான்கு நிமிடங்களுக்குப் பிறகு (27-வது நிமிடத்தில்), எஸ்தர் கோன்சலஸ் அணிக்கான மொன்ரவது கோலை அடித்தார்.

23-64baaf847f38e.webp

முதல் பாதியிலேயே 3 கோல் எடுத்த ஸ்பெயின்

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே வெற்றிக்கான மூன்று கோல்களையும் ஸ்பெயின் அணி எடுத்தது. கோஸ்டாரிகா ஒரு கோல் கூட எடுக்கவில்லை.

ஸ்பெயினின் இடைவிடாத அழுத்தம் இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தது, ஓல்கா கார்மோனா இரண்டாவது பாதியில் வெறும் ஐந்து நிமிடங்களில் கிராஸ்பாரைத் தட்டினார். கோன்சலஸ் அடுத்ததாக ஒரு வாய்ப்பைப் பெற்றார், ஆனால் அவரது நெருங்கிய முயற்சியை மரியானா பெனாவிடஸ் திறம்பட தடுத்தார்.

 

23-64baaf84defba.webp

ஸ்பெயின் அடுத்த புதன்கிழமை ஜாம்பியாவை எதிர்கொள்ள உள்ளது, அதே நேரத்தில் கோஸ்டாரிகா ஜப்பானை எதிர்கொள்கிறது.

23-64baaf8538c4f.webp

https://news.lankasri.com/article/fifa-womens-world-cup-spain-beat-costa-rica-3-0-1689956227

  • கருத்துக்கள உறவுகள்
Posted

FIFA மகளிர் WC 2023: அறிமுக வீராங்கனை சாதனை; வெற்றி தொடக்கத்துடன் அமெரிக்கா

3 நாட்கள் முன்

 

இரண்டுமுறை சாம்பியனான அமெரிக்கா, ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

வெற்றி தொடக்கத்துடன் அமெரிக்கா

குரூப் E-ன் முதல் ஆட்டத்தில், அமெரிக்க பெண்கள் அணி வியட்நாம் பெண்கள் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

அமெரிக்க அணியில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய சோபியா ஸ்மித் (Sophia Smith) 2 கோள்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

 

23-64bbf0024f117.webpGetty Images

அறிமுக வீராங்கனை சாதனை

14வது நிமிடத்தில் சோபியா தனது முதல் கோலை அடித்தார். பின்னர், முதல் பாதியின் இரண்டாவது பாதியில், சோபியா ஒரு கார்னரில் இருந்து இரண்டாவது கோலை அடித்தார்.

அதன்படி, 22 வயதான சோபியா, பெண்கள் உலகக் கோப்பையில் அறிமுகப் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட கோல் அடித்த இளம் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

 

23-64bbf001e2344.webpGetty Images

அணிக்கான மூன்றாவது கோலை அணியின் கேப்டன் Lindsey Horan ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் அடித்து அமெரிக்க வெற்றியை நிறைவு செய்தார்.  

https://news.lankasri.com/article/fifa-womens-wc-2023-sophia-smith-2goals-us-vietnam-1690038272

  • கருத்துக்கள உறவுகள்
Posted

FIFA மகளிர் WC 2023: 5 கோல்கள் அடித்து தெறிக்கவிட்ட ஜப்பான்..கோல் கீப்பருக்கு ரெட் கார்டு

3 நாட்கள் முன்

 

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தியது.

ஜப்பான் அணியின் ஆதிக்கம்

FMG Stadium Waikatoயில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் மற்றும் ஜாம்பியா அணிகள் மோதின.

தொடக்கம் முதலே ஜப்பான் அணி இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. 43வது நிமிடத்தில் ஜப்பானின் ஹினடா மியாஸவா தமது அணிக்காக முதல் கோலை பதித்தார். 

japan-woman-beat-zambia-by-5-0-wc-2023AP 

அதனைத் தொடர்ந்து மினா டனக்கா சறுக்கிக்கொண்டே அசத்தலாக 55வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த 7 நிமிடங்களில் ஹினடா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

ஜப்பான் வீராங்கனைகளை வேகத்திற்கு ஜாம்பியாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஜுன் எண்டோ தனியாக பந்தை விரட்டிச் சென்று கோலாக மாற்றினார்.

கோல் கீப்பருக்கு ரெட் கார்டு

90 நிமிடங்கள் முடிந்த பின்னரும் ஜாம்பியா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

கடைசி நிமிடத்தில் ஜாம்பியா கோல் கீப்பர் கேத்தரின் முஸோண்டா எதிரணி வீராங்கனையை தடுக்க முயன்றதால் அவர் கீழே விழுந்தார். இதனால் ஜப்பானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 

japan-woman-beat-zambia-by-5-0-wc-2023 AP Photo/Juan Mendez

அத்துடன் கேத்தரின் முஸோண்டாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வந்த கோல் கீப்பர் எயூனிஸ் சகலாவினால் ஜப்பான் வீராங்கனை ரிகோவின் ஷாட்டை தடுக்க முடியவில்லை.

இதனால் ஜாம்பியா அணி 0-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி அடைந்தது. 

japan-woman-beat-zambia-by-5-0-wc-2023 Hagen Hopkins/FIFA/Getty Images

japan-woman-beat-zambia-by-5-0-wc-2023

REUTERS

https://news.lankasri.com/article/japan-woman-beat-zambia-by-5-0-wc-2023-1690049109

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ருத்ர தாண்டவம் ஆடிய ஜேர்மனி! மகளிர் உலகக்கோப்பையில் கோல் மழை பொழிந்து வெற்றி

2 நாட்கள் முன்

 

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜேர்மனி அணி 6-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை பந்தாடியது.

ஜேர்மனியின் மிரட்டல் ஆட்டம்

ஜேர்மனி மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்போனில் நடந்தது.

மெல்போர்ன் ரெக்டாங்குலர் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே ஜேர்மனி ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஜேர்மனியின் அலெக்சாண்டரா போப் அசத்தலாக கோல் அடித்தார். அடுத்து அவரே 39வது நிமிடத்தில் கோல் அடித்தார். 

Germany-beat-morocco-6-0-wc-2023Getty Images

மொராக்கோவின் சுயகோல்

கிளாரா 46வது நிமிடத்தில் மிரட்டலாக ஒரு கோல் அடித்தார். மொராக்கோ வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது அந்த அணியின் ஹனனே சுயகோல் போட்டார்.

இதனால் ஜேர்மனியின் கோல் 4 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் ஜேர்மனியின் கோலை தடுக்க மொராக்கோவின் யாஸ்மின் முயன்றபோது, அவரது காலில் பட்டு சுய கோலாக மாறியது. 

Germany-beat-morocco-6-0-wc-2023 

AFP

இமாலய வெற்றி

ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் ஜேர்மனியின் லீ ஸ்சுலர் தன்னிடம் வந்த பந்தை புயல் வேகத்தில் கோல் ஆக மாற்றினார்.

கடைசி வரை மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜேர்மனி 6-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.  

Germany-beat-morocco-6-0-wc-2023

AFP 

Germany-beat-morocco-6-0-wc-2023 

William West/AFP

https://news.lankasri.com/article/germany-beat-morocco-by-6-0-wc-2023-1690218251

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/7/2023 at 07:32, ஏராளன் said:

ருத்ர தாண்டவம் ஆடிய ஜேர்மனி! மகளிர் உலகக்கோப்பையில் கோல் மழை பொழிந்து வெற்றி

மிரட்டலாக ஆரம்பித்தவர்கள் இன்று சிட்னியில் கொலம்பியாவிடம்  தோல்வியடைந்துவிட்டனர். யேர்மனி 1 - 2 கொலம்பியா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மார்பைப் பிடித்துக் கொண்டு சரிந்த உலகக் கோப்பை கால்பந்து நட்சத்திரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

2 நாட்கள் முன்

 

கொலம்பியாவின் கால்பந்து நட்சத்திரம் லிண்டா கைசெடோ பயிற்சியின் போது சுருண்டு விழுந்துள்ள நிலையில், இனி அவர் விளையாடும் வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

90 நொடிகள் வரையில்

18 வயதேயான கால்பந்து நட்சத்திரம் லிண்டா கைசெடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னர் சுமார் 90 நொடிகள் வரையில் சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார்.

மார்பைப் பிடித்துக் கொண்டு சரிந்த உலகக் கோப்பை கால்பந்து நட்சத்திரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | World Cup Star Grabs Her Chest Collapses@getty

சிகிச்சைக்கு பின்னர், அதே நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிறன்று ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.

தமது சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லிண்டா கைசெடோ, திடீரென்று பயிற்சியை நிறுத்தியவர், மார்பைப் பிடித்துக் கொண்டு தரையில் சரிந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, செல்லும் வழியில் அவருக்கு நினைவு திரும்பியதாக கூறுகின்றனர்.

கருப்பை புற்றுநோய்

கொலம்பிய மகளிர் கால்பந்து நம்பிக்கை நட்சத்திரமான லிண்டா கைசெடோ, 15 வயதில், அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, அந்த நோய் அவரது கால்பந்து வாழ்க்கையை அழித்துவிடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

மார்பைப் பிடித்துக் கொண்டு சரிந்த உலகக் கோப்பை கால்பந்து நட்சத்திரம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | World Cup Star Grabs Her Chest Collapses@instagram

இதனையடுத்து அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்டது மற்றும் கால்பந்து களத்திற்கு திரும்புவதற்கு முன் ஆறு மாதங்கள் கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டார்.

https://news.lankasri.com/article/world-cup-star-grabs-her-chest-collapses-1690541666

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொலம்பியாவின்  லிண்டா கைசெடோ ஒரு சாதனையாளர் தான்.
புற்றுநோய் வந்து அதன் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பின்பு , புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சையும் பெற்று விளையாட வந்திருக்கிறார்.

5 hours ago, ஏராளன் said:

ஞாயிறன்று ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.

போட்டியில் அவர் களமிறங்கி 52 நிமிடத்தில் முதலாவது கோலை யேர்மனிக்கு எதிராக அடித்தார்.

  • Like 1
Posted

கடந்த கிழமை அயர்லாந்து எதிர் கனடா பார்க்க வாய்ப்பு கிடைத்தது. போட்டி தொடங்கி சில நிமிடங்களில் அயர்லாந்து வீராங்கனைக்கு  மூலை உதை(corner) வழங்கப்பட அயர்லாந்து வீராங்கனையின் அபாரமான உதையால் பந்து நேராக கோலாகியது. இப்படி அற்புதமான கோலை மரடோனா ஒரு முறை அடித்த நினைவு. ஆனால் போட்டியின் இறுதியில் கனடா 2 - 1 என்ற கோலடிப்படையில் வென்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, nunavilan said:

கடந்த கிழமை அயர்லாந்து எதிர் கனடா பார்க்க வாய்ப்பு கிடைத்தது. போட்டி தொடங்கி சில நிமிடங்களில் அயர்லாந்து வீராங்கனைக்கு  மூலை உதை(corner) வழங்கப்பட அயர்லாந்து வீராங்கனையின் அபாரமான உதையால் பந்து நேராக கோலாகியது. இப்படி அற்புதமான கோலை மரடோனா ஒரு முறை அடித்த நினைவு. ஆனால் போட்டியின் இறுதியில் கனடா 2 - 1 என்ற கோலடிப்படையில் வென்றது.

தகவலுக்கு நன்றி . இன்று கனடாவும் அவுஸ்ரேலியாவும் விளையாடுகின்றன😀

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனேடிய செல்லங்கள் இன்று ஒஸ்ரேலியாவை பந்தாடுவாளுகள்!❤️🇨🇦

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன செய்வது  வாலியின் கனடா செல்லங்களை அவுஸ்ரேலியா பந்தாடிவிட்டது கவலை தான். அவுஸ்ரேலியா 4  கனடா 0.

  • Haha 1
Posted

கனடா போட்டிகளில் இருந்து விலகியுள்ளது.  அவுசின் போட்டியில் சமநிலை அல்லது வெற்றியின் மூலமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவை தொடர்ந்து யேர்மனியும் போட்டிகளில் இருந்து விலகி சூட்கேசை அடுக்கி கொண்டு வெளியேறிவிட்டது.  2003, 2007 உலக சம்பியனான யேர்மன் பெண்கள் அணி இவ்வளவு விரைவாக  வெளியேறும் முதல் தோல்வி இது என்று அறிவிப்பாளர் சொன்னார்.யேர்மனியால்    6 - 0 கோல் அடித்து தோற்கடிக்கபட்ட மொரோக்கொ அணி யேர்மனியை வெற்றி கொண்ட கொலம்பியதை தோற்கடித்து பிரான்ஸ்சுடன் விளையாடபோகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

FIFA மகளிர் WC 2023: நார்வே கோல் மழை! ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி, வெளியேறிய நியூசிலாந்து

4 நாட்கள் முன்

 

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவிடம் 2-1 என ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி

Allianz மைதானத்தில் நடந்த போட்டியில் ஜேர்மனி - கொலம்பியா அணிகள் மோதின. இரு அணி வீராங்கனைகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 52வது நிமிடத்தில் கொலம்பியாவின் லிண்டா அபாரமாக கோல் அடித்தார்.

அதன் பின்னர் கொலம்பியா கோல் கீப்பர் தவறிழைத்ததால் ஜேர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 89வது நிமிடத்தில் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அலெக்ஸாண்ட்ரா போப் அதனை கோலாக மாற்றினார். இதனால் 1-1 என சமநிலை ஆனது.

ஆனால் கூடுதல் நேரத்தின் 6வது நிமிடத்தில் கொலம்பியா வீராங்கனை மனுல வானெகாஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். ஜேர்மனி அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஜேர்மனி அணி/Germany TeamAP

நார்வே கோல் மழை

பிலிப்பைன்ஸை எதிர்கொண்ட நார்வே அணி 6-0 என பந்தாடியது. சோஃபி ரோமன் ஹூக் 3 கோல்கள் அடித்தார். இதன்மூலம் இரண்டாவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

சுவிற்சர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி 0-0 என டிராவில் முடிந்தது. 

பிலிப்பைன்ஸ் அணி/Philippines Team 

AP Photo/Abbie Parr

நியூசிலாந்து வெளியேற்றம்

இந்த முடிவினால் புள்ளிகள் அடிப்படையில் சுவிற்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறியது.  

நியூசிலாந்து அணி/New zealand Team REUTERS

சுவிற்சர்லாந்து அணி/Switzerland Team

AP

https://news.lankasri.com/article/norway-swiss-qualify-next-level-women-wc-2023-1690739870

  • கருத்துக்கள உறவுகள்
Posted

6-1 என சீன அணியை அலறவிட்ட இங்கிலாந்து! உலகக்கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி

2 நாட்கள் முன்

 

மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

ஆரம்பத்திலேயே அடி கொடுத்த இங்கிலாந்து

பிபா மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்து - சீனா அணிகளுக்கு இடையிலான போட்டி அடிலெய்டின் Hindmarsh மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் அலெஸ்சியா ரூஸ்ஸோ கோல் அடித்தார். அதன் பின்னர் அவர்களின் வேகத்தை சீனாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

26வது நிமிடத்தில் லாரென் ஹெம்ப்பும், 41வது நிமிடத்தில் லாரென் ஜேம்ஸ் ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர். 

eng-beat-china-by-6-1-wc-women-2023Reuters

eng-beat-china-by-6-1-wc-women-2023Reuters

பெனால்டியில் சீனாவுக்கு கோல்

சீன அணிக்கு 57வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாங் ஷுங் கோல் அடித்தார்.

இங்கிலாந்தின் லாரென் ஜேம்ஸ் 65வது நிமிடத்தில் காற்றில் பறந்து வந்த பந்தை அப்படியே கோலாக மாற்றினார். 

eng-beat-china-by-6-1-wc-women-2023

Getty Images

இங்கிலாந்து இமாலய வெற்றி

இதனைத் தொடர்ந்து க்ளோ கெல்லி 77வது நிமிடத்திலும், ரேச்சல் டேலி 84வது நிமிடத்திலும் கோல் விளாசினர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. இது இங்கிலாந்தின் ஹாட்ரிக் வெற்றி ஆகும்.  

eng-beat-china-by-6-1-wc-women-2023

Reuters

eng-beat-china-by-6-1-wc-women-2023

Reuters

https://news.lankasri.com/article/eng-beat-china-by-6-1-wc-women-2023-1690905856

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கால்பந்து உலகக் கோப்பையில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் வீராங்கனை!

விளையாடும்போது வீராங்கனைகள் ஹிஜாப் அணியக் கூடாது, அது அசௌகரியமானது என்று உலகெங்கிலும் பல நாடுகளின் விளையாட்டுத்துறை அமைப்புகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுத்துள்ளது.

அந்த வகையில், உலகக் கால்பந்து கூட்டமைப்பான ‘FIFA’வும் 2007ஆம் ஆண்டு முதல், “விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் விளையாடும்போது தங்களுக்கோ அல்லது பிறருக்கோ காயம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு உடைகளையும், அணிகலன்களையும் அணியக் கூடாது. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அல்லது அனுமதியளிக்கப்பட்டுள்ள உடைகளையும், உபகரணங்களை மட்டுமே அணிய வேண்டும்” என்று கூறி ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்திருந்தது.

நௌஹைலா பென்சினா

`FIFA’வின் இந்த ஹிஜாப் தடை இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிப்பதாகவும், இஸ்லாமியப் பெண்கள் கால்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை மறுப்பதாகவும் பெரும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் எழுந்தன. இதையடுத்து 2014ஆம் ஆண்டு இந்தத் தடை நீக்கப்பட்டது.

நௌஹைலா பென்சினா

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ‘2023 FIFA Women’s World Cup’ தொடரில் கடந்த ஜூலை 24ஆம் திகதி ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் மொராக்கோ அணியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான ‘நௌஹைலா பென்சினா’ ஹிஜாப் அணிந்து களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போட்டியில் அவர் களமிறங்கவில்லை. இதையடுத்து கடந்த ஜூலை 30ஆம் திகதி தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் ஹிஜாப் அணிந்து களத்தில் விளையாடினார்.

இதன்மூலம், FIFA கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் வீராங்கனையானார் 25 வயதாகும் நௌஹைலா பென்சினா.

(விகடன்)

https://www.virakesari.lk/article/161538

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"ஈயம் பூசியது போலவும் இருக்க வேணும், பூசாதது போலவும் இருக்க வேணும்".......!  😁

Posted

மொறோக்கோ அணி ஆண்கள் அணி போல் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
நேற்றைய கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டம் இதற்கு சாட்சி.
மொறோக்கோ அணி தர வரிசையில் கடை நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஏராளன் said:

கால்பந்து உலகக் கோப்பையில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் 🙆‍♂️

அடிப்படைவாத மதவெறிக்கு விளையாட்டு துறை இடமளித்தது மிகவும் பெரிய தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனக்கு தானே ஆப்புவைத்துக் கொண்ட இத்தாலி: உலக கோப்பையிலிருந்து வெளியேறியது

2 நாட்கள் முன்

 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் A முதல் H வரை எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவுக்கு நான்கு அணிகள் வீதம் 32 அணிகள் இந்த உலகக்கோப்பையில் விளையாடுகின்றனர்.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் நைஜிரியா, டென்மார்க், ஸ்பெயின், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆகிய பதினோரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தனக்கு தானே ஆப்புவைத்துக் கொண்ட இத்தாலி: உலககோப்பையிலிருந்து வெளியேறியது | South Africa Vs Italy 3 2 Womens World Cup 2023

 

இன்றைய போட்டியில் இத்தாலி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது. போட்டி ஆரம்பித்த பதினோராவது நிமிடத்திலே கோலடித்த இத்தாலி அணி, சிறிது நேரத்தில் இத்தாலி அணி வீராங்கனை துருதிஷ்டவசமாக பெனெடெட்டா ஒர்சி தன் பக்கமே சொந்த கோலடிக்க போட்டி 1-1 என சமமானது.

அடுத்து இரண்டாவது பாதியில் தென் ஆப்பிரிக்கா இரண்டு கோலும் இத்தாலி ஒரு கோலும் அடிக்க போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 3-2 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இத்தாலி அணி அடித்த சொந்த கோலால் இந்த போட்டியில் தோற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

தனக்கு தானே ஆப்புவைத்துக் கொண்ட இத்தாலி: உலககோப்பையிலிருந்து வெளியேறியது | South Africa Vs Italy 3 2 Womens World Cup 2023

https://news.lankasri.com/article/south-africa-vs-italy-3-2-womens-world-cup-2023-1690982833

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்கள் உலக கோப்பை கால்பந்தில் வரலாறு படைத்த ஜமைக்கா: வெளியேறியது பிரேசில் அணி

2 நாட்கள் முன்

 

பெண்கள் கால்பந்து உலக கோப்பை தொடரில் இருந்து பிரேசில் அணி வெளியேறியுள்ளது.

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜமைக்கா

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 32 அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான 9வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நேற்று “எப்” பிரிவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதலில் பிரேசில் மற்றும் ஜமைக்கா அணிகள் மோதின, ஆனால் இந்த போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பிரான்ஸ் மற்றும் பனாமா அணிகள் மோதின, பனாமா அணியை 3-6 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி சூறையாடியது.

 

2023-fifa-women-football-jamaica-enter-round-16:உலக கோப்பை கால்பந்தில் வரலாறு படைத்த ஜமைக்கா: வெளியேறியது பிரேசில் அணி

Reuters

இதன் மூலம்  “எப்” பிரிவில் பிரான்ஸ் அணி 2 வெற்றி மற்றும் 1 டிரா என 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து  அடுத்த சுற்றுக்கு(நாக் அவுட் 16) முன்னேறியது.

இதனை தொடர்ந்து ஜமைக்கா அணி 1 வெற்றி மற்றும் 2 டிரா என 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  

வெளியேறிய பிரேசில்

பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட பிரேசில் 1 வெற்றி, 1 டிரா மற்றும் 1 தோல்வியை என மொத்தமாக 4 புள்ளிகள் மட்டுமே எடுத்து இருந்ததால்  “எப்” பிரிவில் 3 இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

2023-fifa-women-football-jamaica-enter-round-16:உலக கோப்பை கால்பந்தில் வரலாறு படைத்த ஜமைக்கா: வெளியேறியது பிரேசில் அணி

இதே பிரிவில் இருந்த பனாமா அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி கணக்கை தொடங்காமலே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இன்று “ஜி பிரிவில்” மொராக்கோ-கொலம்பியா மற்றும் தென்கொரியா-ஜேர்மனி அணிகள் மோதும் போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைய உள்ளது. 

https://news.lankasri.com/article/2023-womens-world-cup-football-jamaica-enter-ro-16-1691016349




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.