Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட போட்டித் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியன் ஜப்பானை வெளியேற்றிய சுவீடன்! கதறி அழுத வீராங்கனைகள்

3 மணி நேரம் முன்

மகளிர் உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

சுவீடன் மிரட்டல்

ஈடன் பார்க் மைதானத்தில் முன்னாள் சாம்பியனான ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி நடந்தது.

பரபரப்பான இந்தப் போட்டியின் 32வது நிமிடத்தில் சுவீடன் அணியின் அமண்டா அபாரமாக கோல் அடித்தார். 

sweden-exit-japan-in-quarter-final-wc-2023

Carmen Mandato/Getty Images

அதன் பின்னர் 51வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் சுவீடனின் ஃப்லிப்ப ஏஞ்சல்டல் கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜப்பான் அணிக்கு ஒருவழியாக 87வது நிமிடத்தில் கோல் கிடைத்தது.

முன்னாள் சாம்பியன் வெளியேற்றம்

அந்த அணியின் ஹொனாக ஹயாஷி மிரட்டலாக கோல் அடித்தார். ஆனால் அதன் பின்னரான சுவீடனின் தடுப்பாட்டத்தினால் ஜப்பானால் கோல் அடிக்க முடியவில்லை.

sweden-exit-japan-in-quarter-final-wc-2023

REUTERS

இதனால் முன்னாள் சாம்பியனான ஜப்பான் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று வெளியேறியது. தோல்விக்கு பின் ஜப்பான் வீராங்கனைகள் கதறி அழுதனர். 

இந்த உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியன்களான அமெரிக்கா, ஜேர்மனி, நார்வே ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில் தற்போது ஜப்பானும் வெளியேறியதால், முதல் முறையாக ஒரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.      

sweden-exit-japan-in-quarter-final-wc-2023

Michael Bradley / AFP

sweden-exit-japan-in-quarter-final-wc-2023 

Michael Bradley / AFP

https://news.lankasri.com/article/sweden-exit-japan-in-quarter-final-wc-2023-1691752704

  • Replies 85
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எங்கடை ஜேர்மன் பிள்ளையள் ஒரு சொட்டிலை தோத்துப்போச்சினம். இல்லையெண்டால் இப்ப நடக்கிற கதையே வேறை......:cool: :rolling_on_the_floor_laughing:

3:0 in Türkei: DFB-Frauen lösen WM-Ticket :: DFB - Deutscher Fußball-Bund  e.V.

அவுஸ்ரேலிய கண்டம் கலங்கியிருக்கும் :beaming_face_with_smiling_eyes:

ஆர‌ம்ப‌த்தில் ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்லா விளையாடிச்சின‌ம்.............பிற‌க்கு சுத‌ப்ப‌ல் விளையாட்டு............

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2023 at 07:25, விளங்க நினைப்பவன் said:

தங்களை இறுதி ஆட்டத்தில்  வெற்றிபெற்று தான் யாரும் கோப்பையை தூக்க முடியும் என்பதில் அவுஸ்ரேலிய வீராங்கனைகள் உறுதியுடன் இருக்கின்றனராம்.

அப்படித்தான் நடந்துள்ளது..amazing Matlidas அரையிறுதிக்குத் தெரிவு..

மிகவும் விறுவிறுப்பாக நடந்த match..அரையிறுதிக்கு நுழைவதை உறுதி செய்த கோல்😊

IMG-0605.jpg

21 hours ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலிய கண்டம் கலங்கியிருக்கும் :beaming_face_with_smiling_eyes:

அவுஸ்திரேலிய கண்டம் மிகவும் பெரியது, இலகுவில் கலங்காது.. 

ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகள் சேர்ந்த ஜரேப்பா கண்டம்.. அடிக்கடி கலங்க வாய்ப்பு இருக்கிறது😵‍💫

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2023 at 14:33, nunavilan said:

யப்பான் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் போல உள்ளது. அருமையான நைஜீரியா குழு துரதிஸ்டமாக வெளியேறியது.

ம‌க‌ளிர் கால்ப‌ந்தும் நாம‌ நினைத்த‌ மாதிரி அமைய‌ வில்லை அண்ணா..............ந‌ம்பின‌ அணிக‌ள் ஏமாற்றிட்டின‌ம்😁...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவுஸ்திரேலிய கண்டம் மிகவும் பெரியது, இலகுவில் கலங்காது.. 

ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகள் சேர்ந்த ஜரேப்பா கண்டம்.. அடிக்கடி கலங்க வாய்ப்பு இருக்கிறது😵‍💫

அவுஸ்ரேலியா கண்டம் பெரிசுதான்....அதே போல கஞ்சத்தனமும் பெரிசு கண்டியளோ! :grinning_face:

உங்கை வாற அகதிகளையும் ஐரோப்பாவிலை நிரம்பி வழியுற அகதிகளையும் பெரிய மனசு பண்ணி நாட்டுக்குள்ளை எடுக்கலாம் தானே? பெரிய நிலப்பரப்பு சும்மாதானே இருக்கு:smiling_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியா கண்டம் பெரிசுதான்....அதே போல கஞ்சத்தனமும் பெரிசு கண்டியளோ! :grinning_face:

உங்கை வாற அகதிகளையும் ஐரோப்பாவிலை நிரம்பி வழியுற அகதிகளையும் பெரிய மனசு பண்ணி நாட்டுக்குள்ளை எடுக்கலாம் தானே? பெரிய நிலப்பரப்பு சும்மாதானே இருக்கு:smiling_face_with_smiling_eyes:

நில‌ப்ப‌ர‌ம்பில் பெரிய‌ நாடு அவுஸ்ரேலியா..........நாட்டு ம‌க்க‌ள் தொகை இல‌ங்கைய‌ விட‌ சிறு அள‌வு ம‌க்க‌ள் தொகை கூட‌ அம்ம‌ட்டும் தான்...............

விளையாட்டு இன்னும் முடிய‌ வில்லை ம‌லை போல் அசுர‌ ப‌ல‌த்தோடு நிக்கும் சுவிட‌ன் ம‌க‌ளிர் அணிய‌ வீழ்த்துவ‌து சிர‌ம‌ம்

அடுத்த‌ விளையாட்டு இங்லாந் எதிர் அவுஸ்ரேலியா............இங்லாந் வென்றால் அவுஸ் வெளிய‌🤣😁😂...............

  • கருத்துக்கள உறவுகள்

🇳🇬⚽ Nigeria came very close to eliminating the favorite team, England, in the Women's World Cup.
🤯🧬 One standout player from the Nigerian team was Michelle Alozie, a 26-year-old talent. She graduated from Yale University with a degree in Molecular Biology and, in addition to playing for the Houston Dash, she works part-time as a researcher at a Children's Cancer Health Center.
A total star ⭐
May be an image of 2 people, people playing football, people playing soccer and text
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பையன்26 said:

நில‌ப்ப‌ர‌ம்பில் பெரிய‌ நாடு அவுஸ்ரேலியா..........நாட்டு ம‌க்க‌ள் தொகை இல‌ங்கைய‌ விட‌ சிறு அள‌வு ம‌க்க‌ள் தொகை கூட‌ அம்ம‌ட்டும் தான்...............

விளையாட்டு இன்னும் முடிய‌ வில்லை ம‌லை போல் அசுர‌ ப‌ல‌த்தோடு நிக்கும் சுவிட‌ன் ம‌க‌ளிர் அணிய‌ வீழ்த்துவ‌து சிர‌ம‌ம்

அடுத்த‌ விளையாட்டு இங்லாந் எதிர் அவுஸ்ரேலியா............இங்லாந் வென்றால் அவுஸ் வெளிய‌🤣😁😂.........

இம் முறை ஆபிரிக்க நாட்டு மகளிர் அணி ஒன்று  உலக கிண்ணத்தை  சுவீகரிக்க வேண்டும் என்பது எனது ஆவா....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படித்தான் நடந்துள்ளது..amazing Matlidas அரையிறுதிக்குத் தெரிவு..

மிகவும் விறுவிறுப்பாக நடந்த match..அரையிறுதிக்கு நுழைவதை உறுதி செய்த கோல்😊

ஒம் மகிழ்ச்சி. புதன்கிழமையும் சிட்னியில் இங்கிலாந்தை வெற்றி கொள்வர்கள் போல் தெரிகின்றது.

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகள் சேர்ந்த ஜரேப்பா கண்டம்.. அடிக்கடி கலங்க வாய்ப்பு இருக்கிறது😵‍💫

ஜரேப்பா கண்டத்தில் அவுஸ்ரேலிய மாகாணங்களின் சைசில் நாடுகளை வைத்திருக்கிறார்கள் கலங்கும் தானே

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இம் முறை ஆபிரிக்க நாட்டு மகளிர் அணி ஒன்று  உலக கிண்ணத்தை  சுவீகரிக்க வேண்டும் என்பது எனது ஆவா....:cool:

ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி
வெளி ஏறி விட்டின‌ம்
நைஜிரியா இங்லாந் ம‌க‌ளிர் அணியிட‌ம் ப‌னாட்டி மூல‌ம் தோல்வி அடைஞ்ச‌வை தாத்தா...............நைஜிரியா ம‌க‌ளிர் அணி ந‌ல்லா விளையாடின‌வை அதிஷ்ட‌ம் கூட‌ கை கொடுக்க‌ வில்லை😧.................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

அடுத்த‌ விளையாட்டு இங்லாந் எதிர் அவுஸ்ரேலியா............இங்லாந் வென்றால் அவுஸ் வெளிய‌🤣😁😂...............

Rugbyயும் Cricketம் தானே இங்கே முன்னனி விளையாட்டுகள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த நிலையில் இருந்து கொஞ்சம் விலகி உதைபந்தாட்டத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.. ஆகையால் இங்கிலாந்திடம் தேற்று Matlidas வெளியே போனாலும் பரவாயில்லை

இதுவே ஒரு பெரிய முன்னேற்றம்.. 

நேற்று நடந்த matchல் பிரான்ஸிற்கு கோல் அடிக்கும் வந்த வாய்ப்புகளை விட Matlidas ற்கு வந்த வாயப்புகள் அதிகம் ஆனாலும் தவறவிட்டார்கள். 

அதே போல பந்து பரிமாற்றம் கூட மாறி அடித்ததும் எதிர்அணிக்கு இலகுவாக பந்தை கொடுத்த நிலையும் இருந்தது.. 

Matlidas முன்னேற இடமுண்டு ஆனாலும் இந்த அரையிறுதிக்கு போவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் எதிர்காலத்தில் உலக கோப்பையை தூக்கவும் கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவுஸ்ரேலியாவில் முத‌ன்மையான‌ விளையாட்டு AFL அவுஸ்ரேலிய‌ன் ப‌ந்து விளையாட்டுக்கு தான் அவுஸ் ம‌க்க‌ள் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிற‌வை

அவுஸ்ரேலியாவில் கிரிக்கேட் 3வ‌து இட‌த்தில்..................அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி ப‌ல‌மான‌ அணி............அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியில் திற‌மையான‌ பெண்க‌ள் இருக்கின‌ம் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை.................நியுசிலாந் அக்லான்ட் மைதான‌த்தில் ( ஸ்பேனிய‌ன் எதிர் சிவிட‌ன் விளையாடின‌ம் ) 

இர‌ண்டு அணிக‌ளும் ப‌ல‌மான‌ அணிக‌ள் சுவிட‌ன் பின‌லுக்கு போனால் சுவிட‌ன் ம‌க‌ளிர் அணி கோப்பையுட‌ன் நாடு திரும்புவின‌ம்..............பாப்போம் என‌து க‌ணிப்பு ச‌ரியா ந‌ட‌க்குதான்னு😁................. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக் கிண்ண அரை இறுதி அணிகள் தெரிவு

Published By: SETHU

12 AUG, 2023 | 08:24 PM
image
 
Published By: SETHU

12 AUG, 2023 | 08:24 PM

2023 மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிகளுக்கு, ஸ்பெய்ன், சுவீடன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியன அணிகள் தெரிவாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 2-1 கோல்கள் விகிதத்தில் ஸ்பெய்ன் வென்றது. மற்றொரு போட்டியில்  ஜப்பானை 2-1 விகிதத்தில் சுவீடன் வென்றது.

இன்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பிரான்ஸை, இணை வரவேற்பு நாடான அவுஸ்திரேலியா பெனால்டி முறையில் 7-6 கோல்கள் விகிதத்தில் வென்றது. இன்று நடைபெற்ற 2 ஆவது கால் இறுதிப்போட்டியில் கொலம்பியாவை இங்கிலாந்து 2-1 விகிதத்தில் வென்றது.

எதிர்வரும் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெறவுள்ள அரை இறுதிப்போட்டியில் ஸ்பெய்னும் சுவீடனும் மோதவுள்ளன. 16 ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ள 2 ஆவது அரை இறுதியில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதவுள்ளன.  இறுதிப்போட்டி 20 ஆம் திகதி சிட்னியில் நடைபெறள்ளது.

இம்முறை அரை இறுதிக்குத் தெரிவான அணிகள் எதுவும் இதுவரை மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/162230

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி 4 குழுக்களில் இறுதிப்போட்டியின் வாசல் வரை சென்றது (2003) சுவீடன் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சுவீடன் இறுதி ஆட்டத்திற்கு வந்து யேர்மனியுடன் மோதி யேர்மனி சம்பியனானது. இம் முறை சுவீடன் இறுதியாட்டத்தில் அவுஸ்ரேலியாவுடன் மோத கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

 சுவீடனை ஸ்பெயின் 2 - 1 வெற்றி பெற்றுவிட்டது.  நாளை நடைபெறும் போட்டியில் அவுஸ்ரேலியா இங்கிலாந்தை வென்று,  மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்துடன் சுவீடன் விளையாட,  கோப்பையை தூக்கும் இறுதி போட்டியில் அவுஸ்ரேலியா  ஸ்பெய்னுடன் மோத கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 சுவீடனை ஸ்பெயின் 2 - 1 வெற்றி பெற்றுவிட்டது.  நாளை நடைபெறும் போட்டியில் அவுஸ்ரேலியா இங்கிலாந்தை வென்று,  மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்துடன் சுவீடன் விளையாட,  கோப்பையை தூக்கும் இறுதி போட்டியில் அவுஸ்ரேலியா  ஸ்பெய்னுடன் மோத கூடும்.

8நிமிட‌த்தில் மூன்று கோல்
சுவிட‌னின் தோல்வி க‌வ‌லை அளிக்குது😧..................

ஸ்பேனிய‌ன் ம‌க‌ளிர் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🥰🙏.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் தகுதி

Published By: SETHU

15 AUG, 2023 | 04:39 PM
image
 
2023 மகளிர் உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றுள்ளது.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் சுவீடனை 2:1 கோல்கள் விகிதத்தில் ஸ்பெய்ன் வென்றது. 

81 ஆவது நிமிடத்தில் ஸ்பானிய வீராங்கனை சல்மா பரலேலோ, போட்டியின் முதல் கோலைப் புகுத்தினார்.

88 ஆவது நிமிடத்தில் சுவீடனின் ரெபேக்கா புளோம்கிவிட் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

எனினும், 90 ஆவது நிமிடத்தில் ஸ்பானிய வீராங்கனை ஒல்கா கார்மோனா கோல் புகுத்திய கோல் அவ்வணியை இறுதிப்போட்டிக்கு முன்னேறச் செய்தது.

நாளை சிட்னியில் நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதவுள்ளன. (சேது)

https://www.virakesari.lk/article/162444

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

8நிமிட‌த்தில் மூன்று கோல்

😂  ஓம் வினோதமாக இருந்ததெல்லோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

😂  ஓம் வினோதமாக இருந்ததெல்லோ.

ஆம்
8நிமிட‌த்தில் 3கோல் உண்மையில் ஆச்ச‌ரிய‌ம்
சுவிட‌ன் அடுத்த‌ கோல் அடிச்சு ஒரு நிமிட‌த்தில் ஸ்பேனிய‌ன் ம‌க‌ளிர் அணி அடிச்சிட்டின‌ம் மூன்றாவ‌து கோல‌.........................

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2023 at 12:29, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படித்தான் நடந்துள்ளது..amazing Matlidas அரையிறுதிக்குத் தெரிவு..

மிகவும் விறுவிறுப்பாக நடந்த match..அரையிறுதிக்கு நுழைவதை உறுதி செய்த கோல்😊

IMG-0605.jpg

அவுஸ்திரேலிய கண்டம் மிகவும் பெரியது, இலகுவில் கலங்காது.. 

ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகள் சேர்ந்த ஜரேப்பா கண்டம்.. அடிக்கடி கலங்க வாய்ப்பு இருக்கிறது😵‍💫

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி வெளிய‌

பின‌லில்
ஸ்பேனிய‌ன் இங்லாந்
இந்த‌ முறை யார் க‌ப் தூக்குவின‌ம் என்று க‌னிப்ப‌து க‌ஸ்ர‌மாய் இருக்கு

இங்லாந் ம‌க‌ளிர் அணி க‌ல‌க்க‌ள் விளையாட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

Published By: SETHU

16 AUG, 2023 | 06:30 PM
image
 
2023 மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. 

இன்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவை 3:1 கோல்கள் விகிதத்தில் இங்கிலாந்து வென்றது.  

சிட்னி நகரில் நடைபெற்ற இப்போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை எல்லா டூன் முதல் கோலை புகுத்தினார்.

இடைவேளையின்போது இங்கிலாந்து 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது. 

63 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனை சமந்தா கேர் கோல் விகிதத்தை சமப்படுத்தினார்.

எனினும், இங்கிலாந்தின் லொறீன் ஹெம்ப் 71 ஆவது நிமிடத்திலும், அலேசியா ருசோ 86 ஆவது நிமிடத்திலும் மேலும் இரு  கோல்களைப் புகுத்தினர். 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெய்னை இங்கிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.  (சேது)

https://www.virakesari.lk/article/162524

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி வெளிய‌

பின‌லில்
ஸ்பேனிய‌ன் இங்லாந்
இந்த‌ முறை யார் க‌ப் தூக்குவின‌ம் என்று க‌னிப்ப‌து க‌ஸ்ர‌மாய் இருக்கு

இங்லாந் ம‌க‌ளிர் அணி க‌ல‌க்க‌ள் விளையாட்டு

நான் நினைக்கிறேன் ஸ்பெயினிற்கு வெற்றி பெறும் சந்தர்ப்பம் அதிகம் என..

நேற்று Matlidas கோல் அடிக்கும் சந்தர்ப்பங்களை கொஞ்சம் தவறவிட்டுவிட்டார்கள். Defending கூட சரியாக இருக்கவில்லை.. இலகுவாக இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடள் 2 -0 அவுஸ்ரேலியாவை வெற்றி பெற்று 3 இடத்தை பெற்று கொண்டது.முன்பு சுவீடன் பெண்கள் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட போட்டி இறுதியாட்டத்தில் யேர்மனியிடம் தோல்வி அடைந்து 2 இடத்தை பெற்று கொண்டதாம். அவுஸ்ரேலியாவின் தோல்வி கவலை அளித்தாலும் இது ஒரு முன்னேற்றம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக்கோப்பை மூலம் ஜாக்பாட் அடித்த FIFA! 4,700 கோடி வருவாய் கிடைத்தாக கூறும் தலைவர்

1 நாள் முன்

அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

அதற்கு முன்பாக நாளை நடைபெற உள்ள 3வது இடத்திற்கான போட்டியில் ஸ்வீடன் - அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 

women-football-wc-2023-generates-570m-profit

AP

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடர் மூலம் 4,700 கோடி (570 மில்லியன் டொலர்) வருவாய் ஈட்டியுள்ளதாக FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகையை உயர்த்த திட்டம்

அத்துடன் தற்போது கிடைத்துள்ள வருவாயானது கத்தார் ஆடவர் உலகக்கோப்பை பரிசுத்தொகையை (440 மில்லியன் டொலர்) விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய இன்ஃபான்டினோ, அடுத்த உலகக்கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை 24யில் இருந்து 32 ஆக உயர்த்த உள்ளதாகவும், பரிசுத்தொகையை உயர்த்த உள்ளதாகவும் உறுதி அளித்தார்.   

women-football-wc-2023-generates-570m-profit 

https://news.lankasri.com/article/women-football-wc-2023-generates-570m-profit-1692362817

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.