Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்தி

சுவீடனை நேட்டோவில் சேர்க்கும் தீர்மானத்தை ஆதரித்து தமது பாராளுமன்றத்துக்கு அனுப்ப, துருக்கி அதிபர் முடிவு.

 

 

  • Replies 565
  • Views 53.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் க

  • "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!  இப்படி ஊர் உலக நிலவர

  • இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

பிந்திய செய்தி

சுவீடனை நேட்டோவில் சேர்க்கும் தீர்மானத்தை ஆதரித்து தமது பாராளுமன்றத்துக்கு அனுப்ப, துருக்கி அதிபர் முடிவு.

 

 

நல்ல செய்தி!

நாதத்தின் மொழியில் சொல்வதானால்: "அடிச்சான் பாரு அப்பாயின்ற்மென்ற் லெட்டரு!"😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் வாக்னர் குழுவின் தலைவரை சந்தித்தார் - பிபிசி

Published By: RAJEEBAN

11 JUL, 2023 | 10:51 AM
image
 

வாக்னர் கூலிப்படையின் புட்டின் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி இடம்பெற்று ஐந்து நாட்களின் பின்னர் கூலிப்படையின் தலைவரை  ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்னர் புட்டின் கதையின் மிகச்சமீபத்தைய பரபரப்பு குறித்து பிபிசியின் ரஸ்யாவிற்கான பிரிவின் ஆசிரியர் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

ஆகவே நான் இதனை உங்களிற்கு மிக தெளிவாக தெரிவிக்கின்றேன்.

c8d109fd827a4ad4b80ecaf457ea1f22Russia_W

24ம் திகதிஜூன் அதிகாலை கலகத்தின் போது புட்டின்  வாக்னர் குழுவின் தலைமை துரோகம் இழைத்துவிட்டதாகவும் முதுகில் குத்திவிட்டதாகவும்  புட்டின் குற்றம்சாட்டினார், பின்னர் அன்றைய தினம் ரஸ்ய விமானங்களை வாக்னர் குழுவினர் சுட்டுவீழ்த்தி விமானிகளை கொன்றனர்.

அதன் பின்னர் கூலிப்படையினர் மொஸ்கோவிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டவேளை கிரெம்ளினும் வாக்னரும் உடன்பாட்டிற்கு வந்தனர், கலகம் முடிவிற்கு வந்தது எவரும் கைதுசெய்யப்படவில்லை தண்டிக்கப்படவில்லை. 

 

யெவ்ஜென்சி பிரிகோசின் கைதுசெய்யப்பட்டு விலங்கிடப்படவில்லை, கிளர்ச்சிக்காக பொலிஸ்நிலையத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

புட்டினிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு ஐந்து நாட்களின்பின்னர் வாக்னர் குழுவின் தலைவர் தனது தளபதிகளுடன் புட்டினுடன் ஒரே மேசையில் அமர்ந்து உரையாடினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது அந்த சந்திப்பு எவ்வாறு முடிவடைந்தது என்பதும் எங்களுக்கு தெரியாது.

சமீப நாட்களாக வாக்னர் குழுவின் தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் ரஸ்ய ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன.

 

சென்பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள வாக்னர் தலைவரின் மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட படங்களை ரஸ்ய அதிகாரிகள் சமூக ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.

தங்கக்கட்டிகள் ஆயுதங்கள் விக்குகள் போன்றவற்றை ரஸ்ய தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.

பிரிகோஜின் அவர் தெரிவிப்பது போல ரொபின்கூட் இல்லை, அவர் குற்றபின்னணி கொண்ட வர்த்தகர் அவரது செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இடமானவை என சட்டவிரோதமானவை என ரஸ்ய ஊடகமொன்று  தெரிவித்துள்ளது.

24ம் திகதி கலகத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக புட்டினிற்கும் வாக்னர் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன?

அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் வாக்னர் குழுவின் தலைவர் பெலாரசிற்கு செல்லவேண்டும்.

கடந்த வாரம் பெலாரஸ் ஜனாதிபதி  வாக்னர் குழுவின் தலைவர் தனது நாட்டில் இல்லை என தெரிவித்தார்.

அவர்கள் பெலாரஸ் வந்துசேரக்கூடும் ஆனால் இன்னமும் வரவில்லை என்பதே அதுவே அதன் அர்த்தம்.

வாக்னர் எங்கே பிரிகோஜின் எங்கே அவர்களின் திட்டம் என்ன அவர்களுக்கும் புட்டினிற்கும் இடையிலான இணக்கப்பாடு என்ன?

எனக்கு தெரிந்திருந்தால் நல்லது என நான் நினைக்கின்றேன்,

தற்போது நான் தெரிவிப்பது இதுதான் - ரஸ்யாவின் அடுத்த தவிர்க்க முடியாத அத்தியாயத்திற்காக காத்திருங்கள்.

https://www.virakesari.lk/article/159699

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்கு நெடுந்தூர ஏவுகணகளை வழங்க பிரான்ஸ் முடிவு !

மக்ரோன் அறிவிப்பு 

உ.ப.ப. செய்தி

Oleg Tsokov  எனப்படும் ரஸ்ய லெப்டினன்ட் ஜெனெரல் உக்ரேனில் பலியாம்.

இவர் மேற்கின் தடை பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஆவார்.

10 hours ago, Justin said:

நல்ல செய்தி!

நாதத்தின் மொழியில் சொல்வதானால்: "அடிச்சான் பாரு அப்பாயின்ற்மென்ற் லெட்டரு!"😂

சுவீடன் அடிச்ச மணி ஆண்டவனுக்கு கேட்டுதோ இல்லையோ…அங்காராவுக்கு கேட்டிருக்கு🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

உக்ரேனுக்கு நெடுந்தூர ஏவுகணகளை வழங்க பிரான்ஸ் முடிவு !

மக்ரோன் அறிவிப்பு 

போரில் பிரான்சின் இந்த முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இதனால் கியவ் ஆட்சியாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது.

-பெஸ்கொ-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனிற்கான விநியோகங்களை கண்காணிக்க விசேட கண்காணிப்பு விமானத்தை வழங்குகின்றது அவுஸ்திரேலியா

11 JUL, 2023 | 02:18 PM
image
 

அவுஸ்திரேலியா உக்ரைன் நடவடிக்கைகளிற்கு ஆதரவாக  ஜேர்மனிக்கு விசேட கண்காணிப்பு விமானத்தை வழங்கவுள்ளது.

உக்ரைனிற்கு இராணுவ மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலியா கண்காணிப்பு விமானத்தை வழங்கவுள்ளது.

ஜேர்மன் சான்சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை  அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய விமானப்படை ஈ-7ஏ வெட்ஜ்டெய்ல் விமானத்தை ஒக்டோபர் முதல்  ஆறு மாதங்களிற்கு வழங்கவுள்ளது.

உக்ரைனிற்கு மிகவும் அவசியமான பன்னாட்டு விநியோகத்தை பாதுகாப்பதற்காக இந்த விமானங்களை அவுஸ்திரேலியா வழங்கவுள்ளது.

ஜேர்மனியிலிருந்து  இயங்கும் இந்த விமானம்  முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குவதன் மூலம் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும்.

https://www.virakesari.lk/article/159745

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸிய அதிபரின் பிரத்தியே சொகுசு ரயில் வண்டி பற்றிய தகவல்களை சி என் என் வெளியிட்டிருக்கிறது. மக்களிடமிருந்தும், தனது அரசில் இருக்கும் பலரிடமிருந்தும் அந்நியமாகிக்கொண்டு வரும் புட்டின் அவர்கள், தனது பாதுகாப்புக் குறித்து அதிக கரிசணை கொண்டிருப்பதனால், இந்த அதிசொகுசு ரயிலில் இனி அடைக்கலம் தேடலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்த நாளிலிலிருந்து இந்த ரயிலில் புட்டின் அதிக நேரம் செலவிட்டு வருகிறாராம்.

குண்டுகளும், பீரங்கிகளும் துளைக்காத கவசங்கள், நவீன தொலைத்தொடர்புக் கருவிகள், தற்காப்பு ஆயுதங்கள், அனைத்துச் சொகுசு வசதிகளையும் கொண்ட மாநாட்டு அறை, உடற்பயிற்சி செய்யும் அறை, மசாஜ் செய்யும் அறை, வெந்நீர் தடாகம் உள்ளிட்ட பல சொகுசு விடயங்கள் இந்த ரயிலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சுமார் 20 பெட்டிகளைக் கொண்டிருக்கும் இந்த சொகுசு ரயிலை வெளியில் இருந்து பார்த்தால் சாதாரண ரஸ்ஸிய ரயிலைப் போலவே இருக்கின்றதாம். இதனருகில் இன்னொரு ரயிலை நிறுத்தினால் எது புட்டினுடையது, எது பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியாதாம். அதாவது, தான் இலக்குவைக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே புட்டின் இதனை ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

ஒரு வேடிக்கை என்னெவென்றால், இதிலுள்ள உடற்பயிற்சி நிலையத்தில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட இத்தாலி நாட்டு உபகரணங்களைக் கழற்றி எறிந்து விட்டு அமெரிக்க உடற்பயிற்சி உபகரணங்களை புட்டின் இணைக்கக் கட்டளையிட்டிருக்கிறார்.

இந்த ரயிலை உருவாக்குவதில் ஈடுபட்டு, பின்னர் ரஸ்ஸியாவை விட்டுத் தப்பியோடிய இரு முன்னாள் பாதுகாப்பு அதிகரிகளே இதுபற்றிய விபரங்களை வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள்.

https://edition.cnn.com/videos/world/2023/07/10/putin-luxury-train-matthew-chance-pkg-ac360-intl-ldn-vpx.cnn

1. மேலும் ரஸ்ஸிய நீர்மூழ்கிக் கப்டன் அல்லது கட்டளையிடும் அதிகாரியொருவர் ரஸ்ஸியாவினுள் வைத்து இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று இடார்டாஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

https://edition.cnn.com/2023/07/11/europe/russian-submarine-commander-killed-krasnador-intl/index.html

 

2. இன்னொரு தகவல், உக்ரேனின் முறியடிப்புப் போர் எதனையும் கொண்டுவரப்போவதில்லை என்று மேற்குலகிலேயே கிசுகிசுக்கப்படுகிறதாம்!

https://edition.cnn.com/2023/07/04/europe/ukraine-counteroffensive-slow-progress-intl/index.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் உள்ள ரஷ்ய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷ்ய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷ்ய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புட்டினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உ.ப.ப.செய்தி

இன்று வழமைக்கு மாறாக உக்ரேனில், கியவ்வில் குண்டு மழையாம். ஒரு தொகை டிரோன்கள் தாக்கினவாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

இன்று வழமைக்கு மாறாக உக்ரேனில், கியவ்வில் குண்டு மழையாம். ஒரு தொகை டிரோன்கள் தாக்கினவாம்.

ஆதாரம் இருக்கா?
ஆதாரம் இல்லாத செய்திகள் யாழ்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது....? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

——-

அண்மைய சுற்று பயணங்களில், நேற்று டிவிட்டரில், நேட்டோவில் உக்ரேனை சேர்க்க ஆகும் தாமதம், ஆயுத உதவி பற்றி செலன்ஸ்கி கடும் தொனியில் பேசி இருந்தார்.

இன்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் - உக்ரேன் கொஞ்சம் நன்றியுணர்வு காட்ட வேண்டும் எனவும், முன்னரேதான் பிரிதானியா ஆயுத சப்ளை அமேசன் நிறுவனம் அல்ல என உக்ரேன் அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளதாயும் கூறினார்.

பதிலுக்கு செலன்ஸ்கி, நாம் மிகுந்த நன்றியாகவே இருக்கிறோம். இதை விட எப்படி நன்றியை காட்ட முடியும்? ஒவ்வொரு நாளும் காலையில் நன்றியை பறைசாற்றியா? என்ற தொனியில் பதில் கூறியுள்ளார்.

ஆனால் அதே மேடையில் சுனாக் - உக்ரேன் நன்றியுடந்தான் உள்ளது என கூறியுள்ளார்.

செலன்ஸ்கி-வலஸ் இடையான முறுகல் ஒரு இராஜதந்திர முட்டல் diplomatic spat என்பதாக நோக்கப்படுகிறது.

பென் வலஸ் அடுத்த நேட்டோ தலைமை பதவிக்கு போட்டியிட கூடுமாம். இப்படி சேம் சைட் கோல் அடிப்பது - பதவி தட்டிப்போக வழிசமைக்கக்கூடும்.

6 minutes ago, குமாரசாமி said:

ஆதாரம் இருக்கா?
ஆதாரம் இல்லாத செய்திகள் யாழ்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது....? :rolling_on_the_floor_laughing:

மன்னிக்கவும், இப்போ உ.ப.ப. செய்தி என தலையங்கம் போட்டுள்ளேன்.

ஆதாரம் இல்லாத செய்திகளை - இணைக்கப்போகிறேன் என சொல்லித்தான் இணைத்து வருகிறேன்.

ஆனாலும் நான் இணைக்கும் செய்திகள் அடுத்த 24/48 மணியில் ஆதாரபூர்வ இணையங்களில் இருந்து இணைக்கப்படுகிறது என்பது திரியை அவதானிப்பின் - கண்கூடு.

நிர்வாகம் வேண்டாம் என்றால் நிப்பாட்டி விடுவேன். பிரச்சனை இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கருத்து - உக்ரைனில் போரில்ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அதிகாரி பணிநீக்கம்

13 JUL, 2023 | 12:20 PM
image
 

ரஸ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக ரஸ்யாவின் சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஸ்ய பாதுகாப்பு படையினர் தனது படைப்பிரிவிற்கு போதியளவு ஆதரவை வழங்கவில்லை என தான் குற்றம்சாட்டியதற்காக தன்னை பணியிலிருந்து நீக்கியுள்ளனர் என தென் உக்ரைனில் உள்ள ரஸ்ய படையினரின் தளபதி இவான் பொபொவ் தெரிவித்துள்ளார்.

ஜபோரிஜியா பகுதியில் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள ரஸ்ய படையினரின் தளபதியே இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பதவி நீக்கம் முன்னொருபோதும் இல்லாத சம்பவம் என ஆய்வாளர்கள்தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/159898

  • கருத்துக்கள உறவுகள்

————

பிரிகோசின் ஒருநாள் புரட்சி நேரம் அது சம்பந்தமாயும், அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்ற வகையிலும், உக்ரேன் பற்றியும் தானும் சி ஐ ஏ தலைவரும் கலந்துரையாடியதாக ரஸ்ய  புலனாய்வமைப்பின் தலைவர் Sergei Naryshkin தெரிவித்துள்ளார் .

-கார்டியன்-

4 hours ago, ஏராளன் said:

ரஸ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கருத்து - உக்ரைனில் போரில்ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அதிகாரி பணிநீக்கம்

13 JUL, 2023 | 12:20 PM
image
 

ரஸ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக ரஸ்யாவின் சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஸ்ய பாதுகாப்பு படையினர் தனது படைப்பிரிவிற்கு போதியளவு ஆதரவை வழங்கவில்லை என தான் குற்றம்சாட்டியதற்காக தன்னை பணியிலிருந்து நீக்கியுள்ளனர் என தென் உக்ரைனில் உள்ள ரஸ்ய படையினரின் தளபதி இவான் பொபொவ் தெரிவித்துள்ளார்.

ஜபோரிஜியா பகுதியில் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள ரஸ்ய படையினரின் தளபதியே இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பதவி நீக்கம் முன்னொருபோதும் இல்லாத சம்பவம் என ஆய்வாளர்கள்தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/159898

இது ஒரு 24 மணி நேரம் முன்பே டிவிட்டரில் செய்தியாக உடைந்து விட்டது. ஆனால் உ.ப.ப.செ என போடும் அளவில் அரை நம்பகமான கணக்குகள் எதுவும் இதை உறுதிபடுத்தாமையால் இங்கே பதியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக டாங்கிகளே உக்ரைனில் எங்களின் முக்கிய இலக்கு - புட்டின்

Published By: RAJEEBAN

14 JUL, 2023 | 12:36 PM
image
 

உக்ரைன்:  மேற்குலகின் டாங்கிகளே ரஸ்யாவின் முன்னுரிமைக்குரிய இலக்காக காணப்படுகின்றன என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  தெரிவித்துள்ளார்.

உக்ரைனிற்கு மேற்குலகம் ஆயுதங்களை அனுப்புவது யுத்தத்தின் போக்கை மாற்றாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்ய தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள புட்டின் உக்ரைன்  நேட்டோவில் இணைவது  ரஸ்யாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேற்குலகம் ஆயுதங்களை வழங்குவது சர்வதேச பதற்றத்தை நீடித்து  மோதலை மேலும் நீடிக்கச்செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

250 கிலோமீற்றர் செல்லக்கூடிய  குறுஸ் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கும் பிரான்ஸின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புட்டின் அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன, ஆனால் அவை யுத்தத்தின் போக்கை மாற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலகின் டாங்கிகளே எங்களது முன்னுரிமைக்குரிய இலக்குகள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159993

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வழங்கிய கொத்துக்குண்டுகள் உக்ரைனை சென்றடைந்தன-

Published By: RAJEEBAN

14 JUL, 2023 | 12:55 PM
image
 

அமெரிக்கா வழங்கியுள்ள கொத்துக்குண்டுகளை பெற்றுக்கொண்டுள்ள உக்ரைன் அவற்றை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

தென்உக்ரைனில் உள்ள அதிகாரியொருவர் கொத்துக்குண்டுகள் கிடைத்துள்ளன  என தனது தளபதி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

கொத்துக்குண்டுகள் சென்றடைந்துள்ளதை பென்டகனும் உறுதி செய்துள்ளது.

மொஸ்கோ இதனை கண்டித்துள்ளது.

கொத்துக்குண்டு தனக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் தானும் அதனை பயன்படுத்த வேண்டியிருக்கும் என ரஸ்யா எச்சரித்துள்ளது.

ரஸ்யா தான் கைப்பற்றியுள்ள பெருமளவு நிலத்தில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதால்  கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது நியாயமானது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

கொத்துக்குண்டுகள் ரஸ்ய படையினரை மேலும் மனச்சோர்வடையச் செய்யும், நிலைமையை  உக்ரைன் படையினருக்கு சாதகமாக மாற்றும் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் உக்ரைனின் பகுதிகளை மீள கைப்பற்றுவதற்கு கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவோம் என உக்ரைன் அதிகாரி  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159995

  • கருத்துக்கள உறவுகள்

வாக்னர் குழுவினரின் ஆயுதக் கிளர்ச்சி அடங்கிய 5 நாட்களில் அக்குழுவைச் சந்தித்தார் புட்டின்

  • கருத்துக்கள உறவுகள்

இச்சந்திப்பில் பிரிகோஷினும் கலந்துகொண்டார். ஆனால், இனிமேல் வாக்னர் குழுவை அன்ரே றெஷேவே வழிநடத்த முடியும் என்றும் புட்டின் கூறியிருக்கிறார். வாக்னர் குழு தமது புதிய தலைவரின் கீழ் வழமைபோல் செயற்பட முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தப் புதிய தலைவர் வாக்னர் குழுவினரை சிரியாவில் தற்போது வழிநடத்தி வருபவர் என்பதுடன் சிரிய அதிபர் ஆசாத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடக் தக்கது. 

சோவியத் ஆப்கான் போரில் பங்காற்றியிருந்த அன்ரே, பின்னாட்களில் ரஸ்ஸிய உள்ளக புலநாய்வுத்துறையிலும் சிறப்புப் படைகளிலும் பணிபுரிந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, ஏராளன் said:

அமெரிக்கா வழங்கிய கொத்துக்குண்டுகள் உக்ரைனை சென்றடைந்தன-

கொத்துக்குண்டு கலாச்சாரத்தை எதிர்த்த நாம்......இன்று தொட வரவோ...தொந்தரவோ பீலிங்....

அமெரிக்கன் என்றுமே தன் பக்கம் ஒரு குருட்டு நியாயத்தை வைத்து நாடுகளை அழித்தொழிப்பான் இது அவன் இன நியதி....தன் சொந்த மண்னையே தரிசாக்குபவனுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி....

பாவம் செலென்ஸ்கி அல்ல......பாவம்  வளம் கொழித்த உக்ரேன் பூமி.

ஐ மீன் கவிதை கட்டுரை...எங்கே எழுதுங்கள் பார்க்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கொத்துக்குண்டு கலாச்சாரத்தை எதிர்த்த நாம்......இன்று தொட வரவோ...தொந்தரவோ பீலிங்....

அமெரிக்கன் என்றுமே தன் பக்கம் ஒரு குருட்டு நியாயத்தை வைத்து நாடுகளை அழித்தொழிப்பான் இது அவன் இன நியதி....தன் சொந்த மண்னையே தரிசாக்குபவனுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி....

பாவம் செலென்ஸ்கி அல்ல......பாவம்  வளம் கொழித்த உக்ரேன் பூமி.

ஐ மீன் கவிதை கட்டுரை...எங்கே எழுதுங்கள் பார்க்கலாம் 

நீங்கள் சொல்வது உண்மை. அமெரிக்காவுக்கு ரஸ்ஸியா சளைத்து அல்ல. அதை நீங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய ஊடகமான Kommersantற்கு புட்டின் ஒரு பேட்டி வழங்கியுள்ளார்.

இதில் கலகத்தின் பின் பிரிகோசினையும், 35 வாக்னர் தளபதிகளையும்தான் கிரெம்ளினில் சந்தித்தை ஒத்து கொண்ட புட்டின், தான் வாக்னர் தலைமையை மட்டும் மாற்றி விட்டு, தற்போது அவர்களை வழிநடத்தும் போர்கள தளபதியின் கீழேயே, கலகத்துக்கு முந்திய நிலையில் தொடரலாம் என ஒரு தெரிவை அவர்களுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார்.

இந்த தெரிவை பலவக்னர் தளபதிகள் (தலையாட்டி) ஏற்பது போல் சைகை செய்தாலும், பிரிகோசின் இதை ஏற்க மறுத்துவிட்டார் என புட்டின் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி

ரஸ்யாவில் இயங்கும் ஒரு குழு, புட்டின் சொல்லியும் கேட்காமல் சுயாதீனமாக முடிவு எடுக்கிறது, அதை புட்டின் பொதுவெளியில் சொல்லுகிறார் என்பது சில மாதங்கள் முன் கூட கற்பனை செய்தும் பார்கவியலாத விடயம். 

இதே பேட்டியில் ரஸ்யாவில் தனியார் இராணுவம் இருப்பது சட்டவிரோதம் என்ற சட்டத்தை சுட்டிகாட்டி - வாக்னர் குழுவின் இருப்பு என்பதே இல்லை எனவும் (does not exist) என்றும் கூறியுள்ளார்.

இல்லாத ஒரு அமைப்பையா இரு கிழமைக்கு முன் ரஸ்யாவை பாதுகாத்த வீரர்கள் என நாட்டு மக்களுக்கான உரையில் புகழ்ந்தார்? இத்தனை காலமும் அது தனியார் படை என ஒறுப்பு துறந்து விட்டு, அண்மையில் அரசு கூலி கொடுக்கிறது என ஓப்பு கொண்டார்.

வாக்னர்பி/ரிகோசன் விடயத்தில் புட்டின் ரொம்பவே குழம்பியுள்ளார். அதிகாரமும், strongman விம்பமும் கையை விட்டு, பகிரங்கமாகவே நழுவத்தொடங்கி விட்டதோ?

 

https://amp.theguardian.com/world/2023/jul/14/putin-says-he-tried-but-failed-to-oust-prigozhin-after-wagner-mutiny-figters-ukarine-war
 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் இலையுதிர்கால அமைச்சரவை மறு அமைப்பில், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் பதவி விலகலாம் என ஸ்கை நியூஸ் கூறுகிறது.

வலஸ் - நேட்டோ தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பைடன் அதிக ஆர்வம் காட்டவில்லையாம். அதே போல் மேலே எழுதிய, செலன்ஸ்கியுடனான இராஜதந்திர முட்டலும் இந்த வாய்ப்பை குறைத்தததாக சொல்லப்படுகிறது.

வலஸ் அரசியலில் இருந்து ஓய்வா?

அல்லது சுனாக் தேர்தலில் தோற்ற பின்  கட்சி தலைமையை கைப்பற்றும் எண்ணமா? தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்னரின் பெலரூஸ் நகர்வு பற்றி ரஸ்ய அரச ஊடகங்கள் சொல்வதென்ன?

https://twitter.com/TheKremlinYap/status/1680198869806620673/mediaViewer?currentTweet=1680198869806620673&currentTweetUser=TheKremlinYap

 

(மாற்று கருத்து என்ன என்பதை அறிய).

டிஸ்கி

இது உண்மையாக இருந்தால் போலந்தின் சுவால்கி கொரிடோரை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் படை நகர்ந்தால் - பெலரூஸும், வாக்னரும் நேட்டோவால் வெளுக்கப்படும் என்பதே உண்மை.

அத்துடன் இப்படி ஒரு திட்டம் இருந்தால் அதை டிவியில் சொல்லவும் மாட்டார்கள்.

எதை சொல்லியாவது - புட்டின் ஒரு கெட்டிக்காரன் என நிறுவும் முயற்சியாகவே படுகிறது.

பிரித்தானியாவில் பிரபலமான டிவி காமெடி ஒன்றில், ஒரு முட்டாள் - குழறுபடிகளை செய்யும் போது I have a cunning plan என சொல்லுவார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

வாக்னரின் பெலரூஸ் நகர்வு பற்றி ரஸ்ய அரச ஊடகங்கள் சொல்வதென்ன?

https://twitter.com/TheKremlinYap/status/1680198869806620673/mediaViewer?currentTweet=1680198869806620673&currentTweetUser=TheKremlinYap

 

(மாற்று கருத்து என்ன என்பதை அறிய).

டிஸ்கி

இது உண்மையாக இருந்தால் போலந்தின் சுவால்கி கொரிடோரை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் படை நகர்ந்தால் - பெலரூஸும், வாக்னரும் நேட்டோவால் வெளுக்கப்படும் என்பதே உண்மை.

அத்துடன் இப்படி ஒரு திட்டம் இருந்தால் அதை டிவியில் சொல்லவும் மாட்டார்கள்.

எதை சொல்லியாவது - புட்டின் ஒரு கெட்டிக்காரன் என நிறுவும் முயற்சியாகவே படுகிறது.

பிரித்தானியாவில் பிரபலமான டிவி காமெடி ஒன்றில், ஒரு முட்டாள் - குழறுபடிகளை செய்யும் போது I have a cunning plan என சொல்லுவார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

நேட்டோ நேரடியாக வெளுக்கும் நிலையை ஏற்படுத்தினால் நல்லது தான்! ஒரு வாரத்தில் முடிவு வரலாம்!
 

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனின் அண்மைய முறியடிப்புத்தாக்குதல் (counter offensive) பலத்த எதிர்ப்பை சந்தித்ததாயும்.அதனால் 20% வரையான டாங்கிகளை உக்ரேன் இழந்ததாயும்.

இதன் பின் தாக்குதலை தாமதித்து/இடைநிறுத்தி - தன் தந்திரோபாயங்களை உக்ரேன் மீளாய்வு செய்ததாயும் நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.nytimes.com/2023/07/15/us/politics/ukraine-leopards-bradleys-counteroffensive.html?action=click&module=Well&pgtype=Homepage&section=US News

 

முன்னைய உக்ரேனிய/சோவியத் தாங்கிகளை போல அல்லாது மேற்கின் தாங்கிகள் தாக்குதலுக்கு உள்ளாகினாலும் உயிர் சேதத்தை குறைத்ததாய் இந்த செய்தி கூறுகிறது.

ரஸ்யா அமைந்துள்ள அரணை தகர்க்க உக்ரேனிய படை கடும் பிரயத்தனம் எடுக்க வேண்டி உள்ளதாயும், முதல் 15 கிமி முன்னேற்றம் மிக கடுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுவதாயும் கூறப்பட்டுள்ளது.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.