Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

13வது திருத்தம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி திட்டம்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வையும் அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2023/1340993

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் : அமைச்சர் ஜீவன்!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் : அமைச்சர் ஜீவன்!

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியிருந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

அதன்பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதேபோல் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலையை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் வலுசக்தி திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.

குறிப்பாக மலையக சமூகம் 200 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது இந்தியப் பயணத்தின்போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேடமாக நாட்டினது பொருளாதார நெருக்கடி மற்றும் மலையக மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லியன் ரூபாவினை மலையகத்தினது வீட்டுத்திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஒதுக்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

விசேடமாக மலையகத்தின் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக இந்த நிதி பயன்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1341030

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a black-and-white image of text

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஐயாவுக்கா ஐடியா சொல்லி கொடுக்கணும். ஐயா இப்ப சர்வ கட்சி மாநாடு எண்டு கூட்டிப்போட்டு , அவர்கள் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தப்புவதுதான் அவரது எண்ணம்.

நிச்சயமாக அங்கு எதிர்ப்பு வரும் எண்டு அவருக்கு தெரியும். நான் முயட்சி செய்தேன் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ள வில்லை , எனவே என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நல்லபிள்ளைக்கு நடிக்கப்போகின்றார்.

சுரேன் ராகவனும், டக்ளஸ் ஐயாவும் ஒத்து ஊத்தப்போகிறார்கள். நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு முன் இனவாதிகளையும் பிக்குகளையும் கூட்டி தீனி போட்டு, கொள்ளியையும் அவர்கள் கையில் கொடுத்துவிட்டு அதன்பின்னே சர்வகட்சி மாநாட்டை கூட்டுவார் நரியார். ஏற்கெனவே பக்கத்தில் ஊழைக்கும்பிடு போடும் கூட்டத்தை வைத்திருக்கிறார். சர்வதேசத்துக்கு சிங்களத்தையும் தெரியும், கோடரிக்காம்புகளையும்தெரியும் அவையும் அவைகளை அனுமதிக்கின்றது. எமக்கு விடிவு என்பது சிங்கள மக்களின் விழிப்புணர்ச்சியிலேயே தங்கியுள்ளது. அரசியல்வாதிகளைவிட்டு மக்களிடம் நமது பிரச்சனைகளை கொண்டுசெல்ல வேண்டும், அதற்கான காலமும் இதுவே. சிங்களம் தெரிந்த பொதுமக்கள் முயற்சிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வகட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

adminJuly 23, 2023
Ranil-Wickremesinghe-1.jpg?fit=686%2C452

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சர்வகட்சி கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட கட்சித் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் போது ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் 13 ஆவது திருத்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவிற்கு பயணம் செய்வதற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்விற்கு இணங்கினால் மாத்திரமே 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் என ஜனாதிபதி கூறியிருந்தார்.

 

https://globaltamilnews.net/2023/193246/

 

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுத் திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம் - மனோ

24 Jul, 2023 | 10:33 AM

image

(இராஜதுரை ஹஷான்)

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் 'மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1983 கறுப்பு ஜூலை சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள். கொழும்பில் எமது பெரிய வீடு எரிக்கப்பட்டது. மோசடி செய்து கட்டிய வீடு அல்ல,எனது தந்தையின் கடின உழைப்பால் கட்டிய வீடு, இனகலவரத்தில் வீடும்,உடமைகளும் எதிர்க்கட்டது. நாட்டுக்குள் அகதிகளாக இருந்தோம். இவை மறக்க முடியாத சம்பவம்.நாட்டில் மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் தமது வீடுகள் எரிக்கப்பட்டதை பொதுஜன பெரமுனவினர் புலம்பிக் கொண்டு குறிப்பிட்டார்கள். வன்முறையை நாங்கள் கடுமையாக எதிர்கிறோம். தீயிடும் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.எமது இருப்புக்கள் வரலாற்றில் தீக்கிரையாக்கப்பட்டன. ஆசியாவில் சிறந்த தொன்மை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இவற்றையும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எமக்காக எவரும் அன்று குரல் கொடுக்கவில்லை என்பதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டோம்.

ஒரு நாடு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு பிறிதொரு சட்டம் என்று வேறுபாடு காணப்படுகிறது.ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் பேசப்படுகிறது.

கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்க்கப்பளிக்கப்பட்ட இராணுவ சார்ஜன் மேஜர் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். சுனில் ரத்நாயக்க 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த களத்துக்கு அப்பாற்பட்ட வகையில் மிருசுவில் பகுதியில் முகாமுக்கு அருகில் விறகு தேடி வந்த எட்டு வயது சிறுமி உட்பட எட்டு பேரை வெட்டிக் கொன்றார்.

விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியது, கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இவ்வாறான பின்னணியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள். இதனால் தான் அவர்கள் சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறார்கள்.

மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி அண்மையில் பொது மன்னிப்பு வழங்கினார். இந்த செய்தியை வெளியிட்ட ஒரு சில ஊடகங்கள் மத்திய வங்கி குண்டுத்தாக்குதல் சம்பள காணொளியை காண்பித்து நீண்ட விளக்கம் அளித்தன. இந்த ஊடகங்கள் கறுப்பு ஜூலை சம்பவத்தை காண்பிக்கவில்லை. இந்த ஒருதலைபட்ச செயற்பாடு தவறு. நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்குள் இருந்து செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வழங்க கூடியதையும், வழங்க முடியாததையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இந்திய விஜயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்துக்கு வருகை தந்து குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும்.அதற்கு முன்னர் அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு விவகாரத்தில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கடுமையாக விமர்சிக்கிறார். வரலாற்றில் இதுவே இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. தீர்வு திட்ட விவகாரத்தில் இரு அரசியல் கட்சிகளும் விளையாடிக் கொண்டன. இந்த விளையாட்டு இம்முறை செல்லுபடியாகாது.

தீர்வு திட்ட விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்குவோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி பக்கம் பந்து வீசுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றார்.

 

https://www.virakesari.lk/article/160758

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நல்ல முடிவு   கலந்து கொள்வதால் தீர்வு கிடைக்காது என்பது நன்றாக தெரியும்    இதை தெரியாத    புரியாதவர்கள் கலந்து   தெரிந்து புரிந்து கொள்ளட்டும்.  

7 hours ago, கிருபன் said:

ஒரு நாடு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு பிறிதொரு சட்டம் என்று வேறுபாடு காணப்படுகிறது.

உண்மை 

7 hours ago, கிருபன் said:

இவ்வாறான பின்னணியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.

நிச்சியமாக சரியான கேள்வி 

7 hours ago, கிருபன் said:

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்குள் இருந்து செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இது நிறைவேறும் ஆயின். தீர்வு இலகுவாக கிடைக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இச்சந்திப்பில் வழங்க கூடியதையும், வழங்க முடியாததையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அறிக்கை

இவருக்கு இது தெரிந்தால்  ஏன் பேச்சுவார்த்தை செய்து   காலத்தை வீணடிக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2023 at 18:26, Cruso said:

ரணில் ஐயாவுக்கா ஐடியா சொல்லி கொடுக்கணும். ஐயா இப்ப சர்வ கட்சி மாநாடு எண்டு கூட்டிப்போட்டு , அவர்கள் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தப்புவதுதான் அவரது எண்ணம்.

நிச்சயமாக அங்கு எதிர்ப்பு வரும் எண்டு அவருக்கு தெரியும். நான் முயட்சி செய்தேன் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ள வில்லை , எனவே என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நல்லபிள்ளைக்கு நடிக்கப்போகின்றார்.

சுரேன் ராகவனும், டக்ளஸ் ஐயாவும் ஒத்து ஊத்தப்போகிறார்கள். நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கிறேன். 

ஏற்கனவே சரத் வீரசேகரா கம்பன்மல போன்றோர் கைவசம் உள்ளனர்.

அவர்களது குழுவில் இன்னும் பலர் சேர்வார்கள்.ஜனாதிபதி எப்படியும் சேர்த்து விட்டுடுவார்.

2 hours ago, Kandiah57 said:
9 hours ago, கிருபன் said:

இச்சந்திப்பில் வழங்க கூடியதையும், வழங்க முடியாததையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அறிக்கை

இவருக்கு இது தெரிந்தால்  ஏன் பேச்சுவார்த்தை செய்து   காலத்தை வீணடிக்க வேண்டும்

அவரது தொழிலே அது தானே.

காலத்தை இழுத்தடிப்பது வெளிநாடுகளை ஏமாற்றுவது முக்கியமாக அடுத்த தேர்தலுக்கு தயாராவது.

எங்கே உங்க உறவுக்காரரான சங்கரியரைக் காணவில்லை.
அவரும் ஒருகட்சி வைத்திருக்கிறாரே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எங்கே உங்க உறவுக்காரரான சங்கரியரைக் காணவில்லை.

தெரியவில்லை.....வயது.  86 வரலாம்...இந்த பேச்சுவார்த்தையில்  நம்பிக்கை இழந்து இருக்கக்கூடும் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எங்கே உங்க உறவுக்காரரான சங்கரியரைக் காணவில்லை.

அவரும் ஒருகட்சி வைத்திருக்கிறாரே.

 

11 minutes ago, Kandiah57 said:

தெரியவில்லை.....வயது.  86 வரலாம்...இந்த பேச்சுவார்த்தையில்  நம்பிக்கை இழந்து இருக்கக்கூடும் 🤣

சில நாட்களுக்கு முன்…. ஊடகவியலாளர் வித்தியாதரனின் வீட்டு திருமணத்தில்… மகிந்த ராஜபக்சவும், ஆனந்த சங்கரியும் கலந்து கொண்டிருந்த படம் ஒன்றை பார்த்தேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை

கலந்து கொள்ளாமைக்கான காரணத்தையும் ஆதாரங்களையும் சமர்ப்பித்து தவிருங்கள். அதுவே சிறந்ததாகும்! கேள்வி கேட்ப்பவர்கள் விளங்கிக்கொள்ளவும் முடியும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்கும் பிரதான கட்சிகள்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

அத்துடன், தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது தமது கொள்கையல்ல எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தால் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த தயார் என ஜனாதிபதி கூறியிருந்தார்.

சர்வகட்சி மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் 13 ஆவது திருத்தம் குறித்து பேசப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் இணைவது தொடர்பில் நாளையத்தினம் தீர்மானிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்காது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெதிதி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1341380

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதனன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் : 13வது திருத்தம் குறித்து பேசப்படும் என தகவல்

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை சர்வகட்சி மாநாடு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை மாலை சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட அனைத்து கட்சித் தலைவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதான கட்சிகளும் இன்றைய சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.

தேசிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு ஒருமித்த கருத்துக்கு வரவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள் அதிகாரப் பகிர்வை பாரிய விடயமாக கருதுகின்ற போதும் வடக்கு கிழக்கு தமிழ் உறுப்பினர்களுடன் அதன் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1341603

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.