Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'!

Featured Replies

கோயிலில் பூசை செய்யும் பிராமணர்களுக்கு வருமானம் எப்படி என்பது எல்லாருக்கும் தெரிந்தது.. நீங்கள் சாப்பிடும் சோற்றி நீச பாசையில் சாதம் என்பார்கள் அதுக்கு அர்த்தம் உருவாக்கி உண்பது... ஆனார் ஒரு பிராமணன் சாப்பிடுவதை பிரசாதம் என்பார்கள். அதுக்கு அர்த்தம் தானமாக பெற்ற சாதம் என்பதாகும்..

அப்படி ஒருவரின் வயிற்றில் அடித்துதான் நீங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டுமா..???

அன்னதானம் எண்று தமிழில் சொல்வார்கள் அதையே அந்தணர் பிரசாதம் என்கிறார்கள்...

எந்த நாட்டிலை தீர்த்ததை பிரசாதம் என்கிறார்கள்..?? என்ன கொடுமை சார் இது... !! :o:o:o

யார் சொன்னது....?? பிரசாதம் என்பத்து கடவுளுக்கு படைத்த பண்ண்டங்களை.. அதுவும் தானமாக கொடுக்கும் போதுதான்.. அது பிரசாதம். புக்கை, பஞ்சாமிருதம். சுண்டல் எண்டு வாங்கி அடிச்சாப் போதாது அது என்ன எண்டும் தெரிய வேணும்...

தீர்த்தம் எண்டால் தண்ணீர்... பால் திரவமாக கொடுதாலும் அது தீர்த்தம்தான் ... குடித்தால் அது தீர்த்தம்..

இனிமேல் தீர்த்த கரை எண்டு சொல்ல வேண்டாம் பிரசாத கரை எண்டு சொல்லாம்... காசிக்கு திர்த்தம் (கங்கை கரையில் குளிப்பதுக்கு) ஆட போனால் பிரசாதம் ஆட போனார்கள் எண்டு கட்டுரைகள் எழுதுவமப்பா...

விளக்கம் இல்லாமலே கருத்து எழுதுறதிலை நம்மாளுங்க வில்லனுங்கப்பா....

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்கள் இருக்கும் மட்டும் பூசகர்கள் தேவையாக இருக்கலாம். ஆனால் பார்ப்பனர்கள் என்பது தேவை இல்லை. பார்ப்பனர்கள் வேண்டும் என்றால் வேறு வேலைகள் பார்த்து சாப்பிடலாம்.

நல்லது. இன்று திராவிடம் கதைக்கின்ற தமிழகத்துப் பெரியார்கள் எந்தப் பணத்தைச் சாப்பிடுகின்றார்கள் என்றோ, அல்லது ராமசாமி ஐயா குடும்பத்தினர் கோவில் பணத்தில் தான் உண்டி வளர்த்தனர் என்பதையும், நாஸ்திகம் என்று கதைக்க வெளிக்கிட்ட பின்னரும், அப்பணத்தில் தான் உண்டி வளர்த்தனர் என்பதையும் தங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

பாரதி சொன்னது போன்று இவர்கள் தண்டச் சோறு உண்பவர்களாக இருக்கிறார்கள். உழைத்து சுயமரியாதையோடு வாழட்டும்.

கோவிலில் தர்மகத்தவாக இருந்து என்ன செய்தார்களோ, அவ்வாறு தான் கோவிலில் பூசாரியாக இருந்தவர்களும் செய்தது. பாரதியார் தர்மகத்தவாக இருந்தவர்களையும் நோக்கிச் சொல்லியிருக்கலாம்.

ஒரு சிறு கூட்டம் தமிழர்களின் இடங்களில் வந்து, தமிழர்களுக்கு பூசை செய்யும் உரிமையை மறுத்து, தமிழில் வழிபடும் உரிமையை மறுத்து, அத்துடன் இந்த அக்கிரமங்களுக்கு தமிழர்களே வக்காலத்து வாங்குவது மாதிரி தமிழர்களை முட்டாள்களும் ஆக்கி வைத்திருக்கின்ற போது, இது கடவுள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று தன்மானம் உள்ள யாரும் பேசாது இருக்க மாட்டார்கள்.

அதைத் தமிழர்கள் பேசுவதற்கும், ஒரு கன்னடனின் துண்டலுக்குள் நின்று பேசுவதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. கோவிலுக்குப் பூசை செய்கின்ற சமுதாயமாக்கியது நம்மை ஆண்ட அரசர்கள் தாமே தவிர, இவர்கள் அல்ல. இவர்கள் வந்து தமிழர்கள் மீது சவாரி செய்யும் அளவிற்குத் தமிழர்கள் பலவீனர்களும் அல்ல. தவிரவும் இன்றைக்கு உள்ள சாதி வகுப்புக்கள் அனைத்திற்கும் அரசர்கள் தான் முழுப்பொறுப்புமாகும். இது தெரியாவிட்டால் உங்கள் கூட இருந்து கதைப்பதில் எவ்வித பிரியோசனமும் இல்லை.

இந்தியாவின் மற்றைய மொழிகள் நிலை எனக்குத் தெரியாது. ஆனால் தமிழை இந்து மதத்தின் பெயரால் கேவலப்படுத்துவது பற்றி எனக்கு தெரியும்.

கீர்த்தனைகள் என்று வருகின்ற போது தெலுங்கு புனித மொழியாகி விடுகிறது.

வழிபாடு என்று வருகின்ற போது சமஸ்கிருதம் புனித மொழியாகி விடுகிறது.

தமிழ்தான் எப்பொழுது நீச பாசையாகவே இருக்கிறது.

இந்து மதத்தை வைத்துக் குற்றம் சாட்ட மட்டும் தான் உங்களுக்குத் தெரியும் என்று சொல்லுங்கள். இன்றைக்குத் தமிழரை மற்ற சமுகத்தோடு ஒன்றி வாழவிடாமல் பிரியச் செய்தது இந்த ராமசாமியின் சதி. திராவிடத்துவத்தைப் பற்றிக் கதைக்கின்ற உங்களுக்கு மற்றய மொழிகள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று பாவனை செய்வது, முழுமையான ஏமாற்றுவித்தை. ஏன் நடிக்கின்றீர்கள் நண்பரே!

உங்களுக்கே தெரியும், தெலுங்காகட்டும், கன்னடமாகட்டும், மலையாளமாகட்டும். அவர்கள் தென்னிந்திய மொழிகள் என்றபோதும் அதற்கு வடநாட்டில் இப்படி ஒரு கேவலமான பெயரை அது ஏற்படுத்தவில்லை. ஆனால் காலம் காலமாக பெரும் அரசுகளை நடத்திய தமிழர்களுக்கு மட்டும் என்று இப்படி ஒரு கெட்ட பெயரைச் சென்ற நூற்றாண்டில் இருந்து ஏற்படுத்த வேண்டும்?

ஏனென்றால் இந்த ராமசாமி வேண்டும் என்று வருந்தி தமிழ் மக்களுக்கு எடுத்துக் கொடுத்த பட்டம். நாமும் வீராப்பாகச் சுமந்து கொண்டு திரிகின்றோம்.

தமிழை நீசமொழி என்று திட்டியவனாகடம்டும். காட்டுமிராண்டி என்று திட்டியவனாகட்டும். எல்லோருமே ஒரே பார்வையில் வைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு எவ்விதத்திலும் தமிழர்களாக நாம் கெளவரம் கொடுக்கப் போவதில்லை. அல்லது அதற்கு காரணம் சொல்லி பூசி மெழுகவும் போவதில்லை.

கீர்த்தனைகளை இயற்றிய தியாகராஜு பகவதரால் தான் தெலுங்கில் கீர்த்தனைகள் உருவானதே தவிர, அதற்கு வேறு எந்தக் காரணமும் அல்ல. தெரியாமல் கதைக்காதீர்கள் நண்பரே!

தமிழில் பாடினால், மேடையை கழுவிய பிறகுதான் பாடுவேன் என்று அடம்பிடிக்கும், அடம்பிடித்த பார்ப்பனியப் பாடகர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?

தமிழில் வாழிபாடு செய்தால் கோவில் தீட்டாகிவிடும் என்று அடம்பிடிப்பது யார் என்று உங்களுக்கு தெரியாதா?

சம்பந்தர் காலத்திற்கு முன்பே தமிழ் வழிபாட்டிற்கான போராட்டம் ஆரம்பம் ஆகி விட்டது.

ஏதோ இன்றைக்குத்தான் நாம் இதுபற்றி பேசுகிறோம் என்று தவறாக யாரும் நினைக்க வேண்டாம்.

மதத்தில் பற்றுக் கொண்டு மதத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும், மதம் அழிய வேண்டும் என்பதற்காக சாபம் போட்டு திருத்தம் பற்றிக் கதைப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு நண்பரே. ராமசாமி என்ன ராமசாமி.... விவேகானந்தர் இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் சாதிகளையும் எதிர்த்தார். ஆனால் அவர் மீது யாரும் கண்டனம் செய்யவில்லை. அவரை ஆதரித்தார்கள். ஏனென்றால் அவருக்கு நல்ல நோக்கம் இருந்தது. மத்தில் ஒட்டியிருக்கின்ற, அறியாமையால் இணைக்கப்பட்டிருக்கின்ற மூடநம்பிக்கைகளை நீக்க வேண்டும் என்ற பற்றிருந்தது. ஆனால் இந்து மதத்தில் உள்ளவர்களைக் கேவலமாகத் திட்டுவதே கொள்கையாக்க கொண்ட ராமசாமியை இதற்கு ஒப்பிட முடியாது.

மதச் சீர்திருத்தவாதிகளையும், மதத்தை நிந்திக்க வேண்டும் என்பதற்காகவே மதத்தைப் பற்றிக் கதைக்கின்றவர்களையும் பிரித்தறிகின்ற பகுத்தறிவு எமக்கு உண்டு.ஆனால் நீங்கள் தான் பாவம். .....

"மறவன்பாட்டில்" பாரதி பார்ப்பனர்களைப் பற்றி இப்படிப் படுகிறார்

இன்நாளிலே பொய்மைப் பார்பான்

அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்

பேராசைக்காரனடா பார்ப்பான்

ஆனால் பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்

பிள்ளைக்குப் பூநூலாம் என்பான்

நம்மைப் பிச்சுப் பணம் கொடெனத் தின்பான்

வேறொரு பாட்டில் பாரதி இப்படிச் சொல்கிறார்

சூத்திரனுக்கொரு நீதி

தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு

வேறொரு நீதி

என்று சாத்திரம் சொல்லிடுமாயின் - அது சாத்திரமன்று சதி என்றும் கண்டோம்

கோயில் தர்மகர்த்தாக்கள் பார்ப்பனர்கள் அல்ல.

அத்துடன் பெரியார் பற்றியும் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. பெரியாh குடும்பத்தினர் வியாபாரிகள். அவர்கள் கோயில் பணத்தில் சாப்பிடவில்லை. பிற்காலத்தில் பெரியார் தேவஸ்தான நிர்வாகியாக குறுகிய காலம் இருந்தாரே தவிர, அவர்கள் கோயில் வருமானங்களில் வாழவில்லை.

மாறாக அவர்களிடமும் பார்ப்பனர்கள்தான் சென்று தண்டச்சோறு உண்டு வந்தார்கள்.

தமிழர்களை இந்து மதம் ஆக்கிரமித்ததற்கு எதிராக பலர் போராடி வந்திருக்கிறார்கள். சித்தர்கள் தொடங்கி பெரியார் வரை பலர் போராடி வந்திருக்கிறார்கள். இந்து மதத்திற்குள் இருந்து போராடுவதில் பலன் இல்லை என்று கண்ட பெரியார் வெளியில் வந்து போராடினார். நாளை வேறு ஒருவர் வேறொரு வடிவத்தில் போராடுவார்.

ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் போராடுகின்ற போதும், பார்ப்பனர்களும் அவர்களுடைய ஏவல்காரர்களும் அவர்களை அழிப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

விவேகானந்தர் போன்று போராடுங்கள், சம்பந்தர் போன்று போராடுங்கள் என்று சிலர் அலறுவதற்கு காரணம் இருக்கிறது. அவர்கள் உள்ளிருந்த நடத்திய போராட்டத்தால், இந்து மதம் எந்த மாற்றங்களையும் சந்திக்கவில்லை.

தமிழில் வழிபாடு நடைபெறவில்லை. சாதியம் ஆட்டம் காணவில்லை. ஆனால் பெரியார் வெளியில் வந்து போராடினார். இந்து மதத்தையே போட்டு மிதித்தார்.

இன்றைக்கு தமிழில் வழிபாடு நடத்துவதற்கு சட்டம் வருகின்றது. அனைவரும் அர்ச்சகர் ஆகின்ற சட்டம் வருகின்றது. இந்த மிக மிக சிறிய வெற்றிகள் கூட வெளியே வந்து போராடியதால்தான் நடந்தது. இல்லையென்றால் "பெரியார் சுவாமிகளுக்கும்" சைவப் பாடப் புத்தகத்தில் ஒரு பக்கத்தை ஒதுக்கிவிட்டு போயிருப்பார்கள்.

அட! எல்லாவற்றையும் விடுங்கள்

இந்து மதத்தை எதற்கு சீர்திருத்த வேண்டும்? அதை எதற்கு சீர்திருத்தி எம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும். இந்து மதத்திற்கும் எங்களுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? இந்து மதம் இல்லாவிட்டால் எங்களால் வாழவே முடியாதா?

யாரோ ஒருவன் கொண்டுவந்த ஆபாசமும், அருவருப்பும், அக்கிரமும் உள்ள ஒரு மதம் இந்து மதம். அதை தூக்கி எறிவதை விட்டு விட்டு, சீர்திருத்துவதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?

தமிழர்களிடம் உயர்ந்த சித்தாந்தங்கள் இருக்கின்ற போது, எதற்கு இந்து மதம்?

விவேகானந்தர் போன்று போராடுங்கள், சம்பந்தர் போன்று போராடுங்கள் என்று சிலர் அலறுவதற்கு காரணம் இருக்கிறது. அவர்கள் உள்ளிருந்த நடத்திய போராட்டத்தால், இந்து மதம் எந்த மாற்றங்களையும் சந்திக்கவில்லை.

தமிழில் வழிபாடு நடைபெறவில்லை. சாதியம் ஆட்டம் காணவில்லை. ஆனால் பெரியார் வெளியில் வந்து போராடினார். இந்து மதத்தையே போட்டு மிதித்தார்.

இன்றைக்கு தமிழில் வழிபாடு நடத்துவதற்கு சட்டம் வருகின்றது. அனைவரும் அர்ச்சகர் ஆகின்ற சட்டம் வருகின்றது. இந்த மிக மிக சிறிய வெற்றிகள் கூட வெளியே வந்து போராடியதால்தான் நடந்தது. இல்லையென்றால் "பெரியார் சுவாமிகளுக்கும்" சைவப் பாடப் புத்தகத்தில் ஒரு பக்கத்தை ஒதுக்கிவிட்டு போயிருப்பார்கள்.

பழைய சோற்றைதான் மீளவும் பிசைகிறீர்கள்... சைவம் என்பது இந்து மததுள் அடக்கம் ( அடக்க பட்டது சமரசம் செய்ய பட்டது) எண்டாலும் பல மூட நம்பிக்கைக்களை சைவம் சொன்னவை அல்ல... மக்களால் உருவக படுத்த பட்டவை.... பில்லி சூனியம் போண்றவை சம்பந்தமாகவும் பேய்கள் பற்றி சொல்லிய அதர்வ வேதம் கிரிஸ்தவர்களால் சாத்தான் எண்று சொல்லபடுவது போண்றது ... மூட நம்பிக்கைகளை பரப்ப அதுவே காரணம்...

சாதியதை தூண்டியது எண்று சொல்லப்படும் ஜசூர் வேதம் கூட ஒரு அந்தணன் எப்படி பூசாரி ஆக இருப்பது என்பதை சொல்கிறது.... அவனின் பத்திய மக்களிடம் இருந்து ஒதுங்கிய வாழ்க்கை சாதாரண மக்களை தீண்டாது அவனை தீண்டாமல் பண்ணி வைத்து இருக்கிறது...

சாணக்கியர் சொன்ன அர்த்த சாத்திரத்தை விட மனுதர்மம் கூட சாட்தியத்தை தூண்டியது... மனுதர்மம் அர்த சாத்திரதுக்கு பிறகு தோண்றியது.... அதுதான் சாதியதை தூண்டியது... அதாஅவது கீமு 600 ஆண்டுகளுக்கு முன்னர் தோண்றிய மௌரிய பேரரசுக்கு பிறகு....

அட! எல்லாவற்றையும் விடுங்கள்

இந்து மதத்தை எதற்கு சீர்திருத்த வேண்டும்? அதை எதற்கு சீர்திருத்தி எம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும். இந்து மதத்திற்கும் எங்களுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? இந்து மதம் இல்லாவிட்டால் எங்களால் வாழவே முடியாதா?

யாரோ ஒருவன் கொண்டுவந்த ஆபாசமும், அருவருப்பும், அக்கிரமும் உள்ள ஒரு மதம் இந்து மதம். அதை தூக்கி எறிவதை விட்டு விட்டு, சீர்திருத்துவதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?

தமிழர்களிடம் உயர்ந்த சித்தாந்தங்கள் இருக்கின்ற போது, எதற்கு இந்து மதம்?

அரு வெருப்பாக எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை...

சாதியம் கூட அரசு பொறுப்பில் இருப்பவர்களால் நீக்க கூடியது.... ஆனால் மக்களின் பிரிவினையால் வாக்குக்களை பிரிக்க முடியாமல் போய்விடும் எண்று பிரிந்து இருக்கவே விரும்பும் அரச்சியல் விளையாட்டு அது...

Edited by தயா

தாத்தாவா... பேரனா?!

‘‘அதுசரி... ராமரே இல்லை என்பவர், விநாயகரை மட்டும் ஒப்புக் கொள்வாரா?ÕÕ & என்று கடைசி வாக்கியத்தைப் பேசி முடித்துவிட்டு, செல்போனை அணைத்தபடியே நம்முன் அமர்ந்தார் கழுகார்.

ÔÔஎல்லாம் Ôகலைஞர்Õ தொலைக்காட்சி பற்றித்தான்! துவக்க நாளன்று பிள்ளையார் சதுர்த்தி அல்லவா! Ôபண்டிகைக்கான வாழ்த்துச் செய்தியை வி.ஐ.பி&க்களிடம் வாங்கிப் போடலாமா?Õ என்று கேட்டார்களாம் சேனலின் நிர்வாகிகள். Ôஅதெல்லாம் கூடவே கூடாதுÕ என்று அடித்துச் சொல்லிவிட்டுத்தான் சேலம் நிகழ்ச் சிக்கு ரயில் ஏறினாராம் முதல்வர் கருணாநிதி! ரயிலைப் பிடிக்கிற கடைசி நிமிடம் வரை, சேனலில் ஒளிபரப் பாக வேண்டிய முதல் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் அத்தனையையும் ஒன்று விடாமல் பார்த்து நிறைய கரெக்ஷனும் கொடுத்தாராம்!ÕÕ

ÔÔஎன்னவெல்லாம் கரெக்ஷன்..?ÕÕ

ÔÔஉதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்! செய்திகளின் போது, வாசிப்பாளரின் பின்னணியில் உலகின் ஏழு அதிசயங்களை வைத்திருந்தார்கள். Ôஎன்னய்யா இது! நம்மூரில் இல்லாத கலை அழகா?Õ என்று முகம் சிறுத்த கருணாநிதி... தஞ்சை பெரியகோயில், மாமல்லபுரம் சிற்பங்கள், வள்ளுவர்&கண்ணகி சிலைகள் ஆகியவற்றை செய்தித் திரையின் பின்னால் வரும்படி மாற்றச் சொன்னாராம். ஏற்காடு எக்ஸ்பிரஸில் புறப்பட்ட கருணாநிதி, இயக்குநர் இராம.நாரயணனை தன் னோடு அழைத்துக்கொண்டவர், அந்தப் பயணத்தின்போதும், வரிசையாக பல திருத்தங்கள் சொல்லிக் கொண்டே வர... இராம.நாராயணன் தன் செல்போன் மூலம் கலைஞர் டி.வி. குழுவினருக்கு அதை அப்படியே ரிலே செய்துகொண்டே இருக்க... கடைசி நிமிடம் வரை கரெக்ஷன், கரெக்ஷன், கரெக்ஷன்தானாம்!ÕÕ

ÔÔசும்மாவா... சவாலுக்கு சவாலாகச் செய் கிற காரியம் அல்லவா?ÕÕ

ÔÔசேலத்தில் அரசு நிகழ்ச்சி, ஏற்காட்டில் ஓய்வு, ஈரோட்டில் கட்சி நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு இடையிலும்... நேரம் கிடைத்தபோதெல்லாம் ஒரிஜினல் ஒளிபரப்பை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தாராம் கருணாநிதி. முன்கூட்டி அவர் ஓகே செய்துவிட்டுப் போயிருந்ததால், இங்கே தொலைக் காட்சி அலுவலகத்தில் ரொம்ப ரிலாக்ஸ்டாகவே இருந் தார்களாம்!ÕÕ

ÔÔஅதுசரி!ÕÕ

ÔÔசெப்டம்பர் 15&ம் தேதி விடியற்காலை ஒளிபரப்பு துவங்கும்போது, எந்த தொழில்நுட்ப கோளாறும் வந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கொஞ்சம்கூட தாமதமாகிவிடக்கூடாது என்று கண்டிப்போடு சொல்லி இருந்தாராம் கருணாநிதி. Ôஎதிர்பாராத கோளாறு எதுவும் ஏற்பட்டால், அதற்கு காரணமானவர்களை நாங்கள் சும்மா விட மாட்டோம்Õ என்று Ôகலைஞர்Õ டி.வி. ஆட்கள் நாலு பேருக்குக் கேட்கிற மாதிரி உரக்கப் பேசி செய்தி பரப்பி வைத்திருந்தார்களாம். மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ. ராசா ஒருபடி மேலே போய், டெல்லி அதிகாரிகளிடம் பேசி தொலைக் காட்சி அலைவரிசையின் துல்லியத்துக்கு உத்தரவாதம் வாங்கிக்கொண்டு, நகத்தைக் கடித்தபடி நிகழ்ச்சிகளைப் பார்த்தாராம்!ÕÕ

ÔÔஅமைச்சருக்கு அந்தப் பொறுப்புகூட இல்லாவிட்டால் எப்படி!ÕÕ

ÔÔசென்னை உட்பட முக்கிய மாநகரங்களில் Ôசுமங்கலி கேபிள் விஷன்Õ மூலம்தான் கலைஞர் டி.வி. ஒளிபரப் பாகிறது. Ôஅங்கெல்லாம் டி.வி. தெளிவாக தெரிகிறதா?Õ என்பதை பார்த்துத் தகவல் சொல்வதற்காக கட்சியின் சீனியர்கள் மூலம் உடன்பிறப்புகளை முழு நேர டியூட்டியே போட்டிருந்தார்களாம். ஊருக்கு ஊர் ஏற்கெனவே டிஜிட் டல் பேனர் வைத்து அட்டகாசம் செய்திருந்த சில அமைச் சர்களும் பிரமுகர்களும், துவக்க நாளை முன்னிட்டு புது தினுசில் இன்னும் பெரிய சைஸில் கருணாநிதி படம் போட்டு பேனர் வைக்க திட்டமிட... அது தெரிய வந்து, Ôவேண்டாம்! ரொம்ப செய்தால், பொதுமக்கள் இதை கட்சி டி.வி. என்றே முடிவு கட்டிவிடுவார்கள்Õ என்று சொல்லி... அடக்கி வாசிக்க வைத்ததாம் அறிவாலயம்!ÕÕ

ÔÔஅதையும் மீறி, இந்த சுகப் பிரசவத்தைக் கொண்டாடி பல ஊர்களில் ஸ்வீட் கொடுத்துக் கொண்டார்களாமே..?ÕÕ என்றோம்.

சின்னதாக புன்னகைத்த கழுகார்,

ÔÔமுரசொலி மாறனும், செல்வமும் கருணாநிதியின் ஒரு தமக்கை புதல்வர்கள் என்றால்... சொர்ணமும், அமிர்தமும் இன்னொரு தமக்கையின் புதல்வர்கள். முன்பு Ôகலைஞர்Õ டி.வி&யின் முன்னோட்ட ஒளிபரப்பு நிகழ்ச்சியை தன் கையால் துவக்க நினைத்தார் கருணாநிதி. ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக முடியாமல் போய் விட்டது. செப்டம்பர்&15 ஒரிஜினல் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும்படி முதல்வரிடம்தான் சொல்லியிருந்தார்கள். ஆனால், அன்றைய தினம் முதல்வர் ஈரோட்டில் இருந்ததால் அதுவும் முடியாமல் போய்விட்டது. இருந்தாலும், தான் துவக்கி வைக்க வேண்டிய அந்தப் பொறுப்பை சினிமா இயக்குநரான அமிர்தம் வசம் அளித்திருந்தார் முதல்வர். அதில் அமிர்தத்துக்கு ஏக பெருமிதமாம். சுவிட்சை தட்டி விட்டு, அங்கிருந்தவர்களுக்குத் தன் கையால் சாக்லெட் விநியோகித்தபோது, அவர் கண்கள் உருக்கத்தில் ஏகத்துக்கும் கலங்கிப் போயிருந்ததாம்!ÕÕ என்று நிறுத்திய கழுகார்,

ÔÔவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்குத்தான் சேனலில் தடையே தவிர, செய்தி வாசிப்பில் பண்டிகை கொண்டாட் டம் பற்றிய வர்ணனைக்குத் தடையில்லை. அதேபோல், அன்றைய தினம் அண்ணா நினைவிடத்தில் ஜெயலலிதா மலர் வளையம் வைத்த செய்தி இடம்பெற வேண்டும் என்பதும் ஏற்காட்டில் இருந்து பறந்து வந்த உத்தரவாம்!ÕÕ

மைசூர் போண்டா வந்து சேர்ந்தது. ரெண்டாக அதைப் பிளந்தபடியே கழுகார்,

ÔÔஇத்தனைக்கும் நடுவே, Ôசன்Õ டி.வி&யின் ரியாக்ஷன் என்னவென்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததாம் Ôகலைஞர்Õ குழாம்! ÔமொழிÕ படத்துக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே விளம்பரங்கள் வந்து சேர்ந்த தையும்கூட வெளியில் முன்கூட்டிப் பரப்பியும் ரசித்தார் களாம் கலைஞர் தொலைக்காட்சி தரப்பினர். இதுவரை இல்லாத வழக்கமாக, செப்டம்பர் 15 மற்றும் 16&ம் தேதி களில் சன் டி.வி&யின் 1.30 மணிக்கு வெளியாகும் மதிய செய்திகள் ஒளிபரப்பாகவில்லை. Ôஎங்களுக்கும் விளம் பரங்கள் அதிகமாக வந்துவிட்டன. மற்ற நிகழ்ச்சிகளின் நேரத்தை அட்ஜஸ்ட் செய்வதற்காகவே செய்தியை தவிர்க்க வேண்டியதாகி விட்டதுÕ என்று Ôசன்Õ டி.வி&யின் ஊழியர்கள் சிலர் வெளியில் சொன்னதும்கூட காதுக்கு வந்தது.. ஆனால், Ôகலைஞர்Õ டி.வி&காரர்களோ, Ôசெய்தியை ஒளிபரப்பினால், சன் டி.வி&யின் வழக்கமான நேயர்கள் எங்கள் புத்தம் புதிய ஒளிபரப்பை பார்க்க ஸ்கிப் ஆகிவிடுவார்கள் என்று கணக்கு போட்டே இரண்டு நாளும் தவிர்த்தார்கள் போலÕ என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்!ÕÕ

ÔÔஅப்படியா!ÕÕ

ÔÔ17&ம் தேதி வழக்கம்போல 1.30 மணிக்கு Ôசன்Õனில் செய்திகள் ஓட... அதேநேரம் Ôகலைஞர்’ சேனல் Ôவைர நெஞ்சம்Õ என்ற நெடிய தொடரை ஒளிபரப்பியது. கருணாநிதி கதை, வசனத்தில், ஏ.வி.எம். தயாரிக்கும் நெடுந்தொடர் இது!ÕÕ

ÔÔநிறையத்தான் தகவல்களை அள்ளி வந்திருப்பீர் போல...ÕÕ என்றபடி, கழுகாரை குஷிப்படுத்த இன்னொரு போண்டாவை எடுத்து கொடுத்தோம். ருசித்தபடியேதொடர்ந்தார்&

ÔÔநடக்கிற இந்தப் போட்டியில் செம குஷியாக இருப்பவர் விஜயகாந்த். தே.மு.தி.க&வின் புதுக்கோட்டை மாநாட்டை சன் டி.வி. செய்தியில் காட்டி னார்கள். அதில், விஜயகாந்த் தனது பேச்சின் ஹைலைட்டாக கூட்டணி கொள்கை பற்றி சொன்னது விடுபட்டுவிட... இதை தே.மு.தி.க&வின் முக்கிய பிரமுகர்கள் சன் டி.வி. நிருபர்களிடம் உரிமையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.