Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை  நினைவுதினம் அனுஷ்டிப்பு

கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=175691

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது

ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் இன்று மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2023/1341160

  • கருத்துக்கள உறவுகள்

அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றோடு 40 ஆண்டுகள்

அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றோடு 40 ஆண்டுகள்

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன.

இறைபோன்ற ஒருநாளில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பில் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி அனைவரும் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

23 ஆம் திகதி ஆரம்பித்த இனக்கலவரம் மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்ற இந்த கலவரத்தில் 400 முதல் 3,000 வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என கூறப்படுகின்றது.

10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழரின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டதாகவும் ஜூலைக் கலவரம் சம்மந்தமான தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதே காலப்பகுதியில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் வரை கொல்லப்பட்டார்கள்.

இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், மனிதாபிமானமுள்ள சில சிங்கள மக்களால் பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1341113

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கறுப்பு ஜூலை நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் மீது பொலிஸார் பலப்பிரயோகம் - சுட்டிகளை காலால் மிதித்து உடைத்தனர் நிலத்தில் தள்ளிவீழ்த்தப்பட்டார் சந்தியா எக்னலிகொட -

Published By: RAJEEBAN

23 JUL, 2023 | 07:52 PM
image
 

கொழும்பில் கறுப்புஜூலையை குறிக்கும் நிகழ்வுகளை சிங்கள பேரினவாதிகளும் இலங்கை பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

362278688_6781999501865532_4740449799827

கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளை கனத்தை மயானத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸார் கலகமடக்கும் பிரிவினர் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கனத்தை  மயான சுற்றுவட்டத்தில் பெருமளவு பொலிஸ் வாகனங்களை காணமுடிந்தது.

வீதியின் இருமருங்கிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

362281279_6781998891865593_8733395210727

கறுப்புஜூலை நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வு ஆரம்பமான சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரினவாத கருத்துக்களை தெரிவித்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புஜூலையை நினைவுகூறும் நிகழ்வை முன்னெடுத்தவர்களை புலிகளின் ஆதரவாளர்கள்  புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியுடன் செயற்படுபவர்கள் என விமர்சித்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜூலையை குறிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் பொறுமையை கடைப்பிடிக்க முயன்றபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்- பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தனர்.

362885121_675408411073159_91794615835171

ஒரு கட்டத்தில் கலகமடக்கும் பொலிஸார் முன்னோக்கி நகர்ந்து கறுப்புஜூலை நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களை பின்னோக்கி தள்ள முயன்றனர். இதன்போது  ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட  சட்டத்தரணி சிறிநாத் பெரேரா உட்பட சிலர் நிலத்தில் தள்ளி விழுத்தப்பட்டனர் எனினும் பொலிஸார் அதனை அலட்சியப்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்டவர்களை பின்னோக்கி தள்ளுவதற்கு முயன்றனர்.

இதனை தொடர்ந்து கறுப்புஜூலை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

362996291_675408557739811_91103384473800

இதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை காணப்படும் பகுதிக்கு சென்று அங்கு சுட்டி விளக்குகளை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனை அங்கு காணப்பட்ட சிறிய கும்பலை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர் இதனை தொடர்ந்து பொலிஸார் காலால் சுட்டிகளை மிதித்து உடைத்தனர்.

எனினும் கறுப்பு ஜுலை நிகழ்வில்  கலந்துகொண்டவர்கள் மீண்டும் விளக்குகளை ஏற்றியவேளை பொலிஸார் அவர்களை கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்து அகற்றினர்.

362940583_6782076421857840_8849409733228

பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளை நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/160741

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு !

24 JUL, 2023 | 11:33 AM
image
 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது  நூலகத்துக்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. 

இதன்போது கறுப்பு ஜூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, ஏனையவர்களும் சுடரேற்றி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நினைவேந்தல் பதாகையில்,

1983 கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலையானது ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவுகூருகிறோம் எனவும் 1948 முதல் இன்று வரை நடைபெற்ற, நடைபெறுகின்ற இன அழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர்களான சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

Screenshot_20230723_163227_Gallery.jpg

20230723_154538.jpg

20230723_154522.jpg

20230723_153827.jpg

https://www.virakesari.lk/article/160762

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியம் - சுவிட்சர்லாந்து தூதுவர்

Published By: RAJEEBAN

24 JUL, 2023 | 02:48 PM
image
 

கடந்காலங்களை  கையாள்வதற்கும் ஐக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமனிக் பேர்க்லெர் தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை நினைவுகூற முயன்றவர்களை பொலிஸார் பலப்பிரயோகம் செய்து அகற்றியதை காண்பிக்கும் படத்தை பதிவு செய்து அவர் டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

சுவிஸ் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

40வருடங்களிற்கு முன்னர் கறுப்பு ஜுலையில்  இழக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் நாங்கள் நினைவுகூறுகின்றோம்.

கடந்த காலங்களை  கையாள்வதற்கும் ஐக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியமானது.

அனைத்து இலங்கையர்களுக்குமான அமைதி நீதி நல்லிணக்கத்திற்கு சுவிட்சர்லாந்து தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/160797

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜுலை புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

24 JUL, 2023 | 12:24 PM
image
 

கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார்.

F1vExcQXoAA_grZ.jpg

கறுப்பு ஜூலையின் 40வது வருடத்தின் போது  சந்திரகுப்த தேனுவர மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் கலை விசேட கண்காட்சியை நான் பார்வையிட்டேன் என அவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

 

F1vExcSWIAA6mVJ.jpg

இந்த கலைப்படைப்புகள் கடந்த காலத்தின் காயங்களையும் அனைத்து இலங்கையர்களுக்குமான நியாயமான எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறன என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/160784

  • கருத்துக்கள உறவுகள்

 

1983 ஜூலையில் வெறும் ஏழு நாட்கள், நூற்றுக்கணக்கான, இல்லாவிட்டாலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கையுடன் இலங்கையை படுகுழியில் தள்ளியது.

83 இல் நடந்த தமிழர் விரோதக் கலவரங்கள், பல ஆண்டுகளாகப் போர் மற்றும் இனக் கொந்தளிப்புகளுக்குள் நாம் எங்களின் கடினப் போராடிய சுதந்திரத்தை எப்படி மறுத்தோம் என்பதை ஒரு பயங்கரமான நினைவூட்டல். எங்கள் இருண்ட வரலாற்றைத் துணிச்சலாகப் பகிர்ந்து கொண்ட சிலரின் கதைகளைக் கேட்க தொடர்ந்து பாருங்கள்.

Pulse.lk

################################################################

@நன்னிச் சோழன் உங்கள் ஆவணத்திற்கு, இந்தக் காணொளி பயன்படுமா என  பாருங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1983 ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை - கனடா தூதுவர்

Published By: RAJEEBAN

24 JUL, 2023 | 03:35 PM
image
 

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என  இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் விதத்தில்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது வருடங்களிற்கு முன்னர் இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை நாங்கள் நினைவுருகின்றோம்.

1983ம் ஆண்டின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

இந்த பயங்கரமான நினைவுகள் இடம்பெற்றன என்பதை அங்கீகரிப்பதும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதும் இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய நிரந்தர செழிப்பிற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

இந்த இலககுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைவரையும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் என  கனடா தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/160811

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, தமிழ் சிறி said:

 

1983 ஜூலையில் வெறும் ஏழு நாட்கள், நூற்றுக்கணக்கான, இல்லாவிட்டாலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கையுடன் இலங்கையை படுகுழியில் தள்ளியது.

83 இல் நடந்த தமிழர் விரோதக் கலவரங்கள், பல ஆண்டுகளாகப் போர் மற்றும் இனக் கொந்தளிப்புகளுக்குள் நாம் எங்களின் கடினப் போராடிய சுதந்திரத்தை எப்படி மறுத்தோம் என்பதை ஒரு பயங்கரமான நினைவூட்டல். எங்கள் இருண்ட வரலாற்றைத் துணிச்சலாகப் பகிர்ந்து கொண்ட சிலரின் கதைகளைக் கேட்க தொடர்ந்து பாருங்கள்.

Pulse.lk

################################################################

@நன்னிச் சோழன் உங்கள் ஆவணத்திற்கு, இந்தக் காணொளி பயன்படுமா என  பாருங்கள்.

வரலாற்றை திரித்த காணொளி... குப்பையில் போடப்பட வேண்டியது.

இது புலிகளின் தாக்குதலால் உருவான கலவரமன்று. ஏற்கனவே சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு தக்க தருணத்திற்காக காத்திருந்த போது பழமாகக் கிடைத்தது தான் புலிகளின் திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதல். 

இக்கண்ணிவெடித் தாக்குதலை சாட்டாக வைத்து சிங்களவரை உருக்கொள்ள வைத்து தமிழர் மீது ஜே ஆர் ஏவி விட்டான். 

ஆனால் இக்காணொளியில் புலிகளால் தான் இதற்கு காரணமென்று தமிழர் மீது பழிபோட்டு விட்டப்பட்டுள்ளது. 

 இந்தக் காணொளியை அழிக்க வேண்டும், சனலோடு.

  • கருத்துக்கள உறவுகள்+

துலைவான் சிங்களவன் வரலாற்றையே திரிக்கிறான்.

@தமிழ் சிறி உது சிங்களச் சனல். தெளிவாய் தங்களுக்கு ஏற்றாற் போல வரலாற்றை மாத்தி தமிழரால் தான் இது உருவானதாக பழியை எங்களுக்கு மேலை போட்டுட்டாங்கள்..  அதையும் நீங்கள் காவிக்கொண்டு வந்திருக்கிறியள் பாருங்கோ ஐயனே....

சின்னச் சின்ன விடயங்கள் ஒரு இனத்தின் வரலாற்றையே மாற்றிவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாளை கிளிநொச்சியில்

Published By: VISHNU

26 JUL, 2023 | 01:34 PM
image
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் 27 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப.4.00 மணிக்கு, கிளிநொச்சி சேவைச்சந்தை முன்றலில் கறுப்பு ஜூலை தமிழின அழிப்பின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி சிறீகாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.அனந்தி சசிதரன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதோடு நினைவுரைகளையும் ஆற்ற உள்ளனர்.

மனிதப் பேரவலத்துக்கும், தமிழின அழிப்புக்கும் தோற்றுவாயான கறுப்பு ஜுலைப் படுகொடுலையில் உயிர்துறந்த உறவுகளை அஞ்சலிக்கும் இந் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களையும் இணைந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/160961

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை கலவரங்களில் உயிரிழந்தோரை நினைவுகூருவோருக்கு எதிரான அடக்குமுறைகள் : சட்டத்தரணி அம்பிகா கடும் விசனம்

Published By: VISHNU

26 JUL, 2023 | 03:00 PM
image
 

(நா.தனுஜா)

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி விரும்பும் அதேவேளை, மறுபுறம் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவோருக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

'கறுப்பு ஜூலை' கலவரங்கள் இடம்பெற்று இவ்வருடத்துடன் 40 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அக்கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வும், கவனயீர்ப்புப்போராட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இருப்பினும் இடைநடுவே வருகைதந்த பிறிதொரு குழு இப்போராட்டத்தில் குழப்பம் விளைவித்ததுடன், அக்குழுவில் சிலர் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்த அனைவரும் தீவிரவாதிகளே என்றவாறான கருத்தையும் முன்வைத்தனர். அப்பகுதியில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்த போதிலும், நினைவுகூரல் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அவர்கள் முற்படாமல் இருந்தமையினை காணொளிகள் வாயிலாக அவதானிக்கமுடிந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவங்கள் அடங்கிய காணொளியொன்றை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், 'கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவோருக்கு எதிராகப் பொலிஸார் படைப்பலத்தைப் பிரயோகிப்பதுடன், அவர்களை அச்சுறுத்துவதற்குக் குண்டர்களுக்கு இடமளிக்கும் அதேவேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க விரும்புகின்றார்கள்' என்று விசனம் வெளியிட்டுள்ளார்.

'இவ்விடயத்தில் நீங்கள் உண்மையான தன்முனைப்புடன் செயற்படவில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றீர்கள். அதேபோன்று சர்வதேச சமூகத்திடமிருந்து தப்புவதற்கும், பொறுப்புக்கூறல் முயற்சிகளிலிருந்து விடுபடுவதற்குமான உத்தியே இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பதும் நிரூபணமாகியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/160965

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.