Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் (01) இடம்பெறுகின்றது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை (31) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்த ச கவனயீர்ப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) பி.ப 4.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

 

https://thinakkural.lk/article/266229

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை சுவீகரிக்க முயற்சி

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தையிட்டி பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தர உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளன.

இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாயின் அந்தக் காணிகள் நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த விகாரைக் கட்டுமானம் மற்றும் நில அளவைப் பணிகளை எதிர்த்து நாளை மறுதினம் தையிட்டி பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கே. சுகாஷ் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/272570

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.தையிட்டியில் காணி அளவிடும் பணிகள் இடைநிறுத்தம்!

%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88.jpg

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியினை அளவிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் காணி அளவீடு மேற்கொள்ளப்படவிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த திட்டத்தை தடுத்து நிறுத்த மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கமைய மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியினை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், மற்றும் பொது மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/272717

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

Published By: VISHNU   23 FEB, 2024 | 01:30 AM

image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் வியாழக்கிழமை (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

IMG-20240222-WA0133.jpg

இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது.

IMG-20240222-WA0134.jpg

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

IMG-20240222-WA0132.jpg

https://www.virakesari.lk/article/177085

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் 

24 MAR, 2024 | 08:06 AM
image

சட்டவிரோதமாக மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் சனிக்கிழமை (23) ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.

இந்த போராட்டமானது தொடர் போராட்டமாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடையும். அந்த வகையில் இன்றையதினம் பௌர்மிதினம் ஆகையால் போராட்டம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஈடுபட்டுவருகின்றனர்.

IMG-20240323-WA0275.jpgIMG-20240323-WA0274.jpg

IMG-20240323-WA0279.jpg

https://www.virakesari.lk/article/179547

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஈடுபட்டுவருகின்றனர்.

IMG-6095.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kavi arunasalam said:

IMG-6095.jpg

முச்சந்தி முரளி மாதிரி இவர் மதுப்பிரியர் மாயவனோ?!

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், நீங்கள்தானே வீரகேசரிச் செய்தியை பதிந்தனீங்கள். ஒருவேளை உங்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்கும்.

படத்தில் உள்ளவர்களில் வலது பக்கமாக ஒருவர், ‘தையிட்டி தமிழர் சொத்து’ என்றதொரு பதாதையை பிடித்தபடி தனியாக இருக்கிறாரே, ஒருவேளை அவர்தான் பொதுமக்களாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

ஏராளன், நீங்கள்தானே வீரகேசரிச் செய்தியை பதிந்தனீங்கள். ஒருவேளை உங்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்கும்.

படத்தில் உள்ளவர்களில் வலது பக்கமாக ஒருவர், ‘தையிட்டி தமிழர் சொத்து’ என்றதொரு பதாதையை பிடித்தபடி தனியாக இருக்கிறாரே, ஒருவேளை அவர்தான் பொதுமக்களாக இருக்குமோ?

மக்களை அணிதிரட்ட முடியவில்லையோ? இல்லை நாங்கள் தான் எதிர்ப்புப் போராட்டம் செய்கின்றோம் என காட்டவோ தெரியவில்லை ஐயா?!

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் ஆரம்பம்!

21 JUN, 2024 | 03:30 PM
image
 

தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை (20) ஆரம்பமானது.

பொது மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, உரிய அனுமதி பெறப்படாமலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விகாரையை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது. 

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விகாரையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20240621-WA0000.jpg

IMG-20240621-WA0003.jpg

https://www.virakesari.lk/article/186641

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

Published By: VISHNU   19 JUL, 2024 | 11:11 PM

image

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

IMG-20240719-WA0007.jpg

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG-20240719-WA0253.jpg

இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

IMG-20240719-WA0005.jpg

குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/188900

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

Published By: VISHNU   18 AUG, 2024 | 11:21 PM

image
 

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையில் பௌர்ணமி தின வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு தென்பகுதியிலிருந்து பேரினவாத மக்கள் அழைத்து வரப்படுவது வழமை. அந்தவகையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமாகியது.

இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1723984547094.jpg

1723984550012.jpg

https://www.virakesari.lk/article/191394

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

image

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்று புதன்கிழமை (16) மாலை மீண்டும் ஆரம்பமாகியது.

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

01__1_.jpg

01__2_.jpg

01__4_.jpg

https://www.virakesari.lk/article/196474

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத திஸ்ஸ விகாரை; தையிட்டியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மீண்டும் இன்று ஆரம்பம்

thissa-vigarai.jpg

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மேற்படி விகாரைக்கு அருகில் மீண்டும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முழுநோன்மதி நாளான நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாகவும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், விகாரைக்கு சூழவுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கோரி மாதம் தோறும் முழுநோன்மதி தினத்தை முன்னிட்டு தையிட்டியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

https://akkinikkunchu.com/?p=299111

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்

WhatsApp-Image-2024-11-14-at-17.43.23-11

தையிட்டிப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து  இராணுவத்தினரது தேவைகளுக்காக இராணுவத்தினரால் சட்டவிரோமாகக் கட்டப்பட்ட சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி கடந்த ஒன்றரை வருடங்களாக பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாளைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமானது.

காணி உரிமையாளர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

WhatsApp-Image-2024-11-14-at-17.43.23-2-WhatsApp-Image-2024-11-14-at-17.27.46-1-

https://globaltamilnews.net/2024/208298/

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றக் கோரி தொடரும் போராட்டம்

14 DEC, 2024 | 11:29 AM
image

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை (14) மாலை வரை போராட்டம் இடம்பெற்று வருகிறது.  

தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த இப்போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/201241

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் பதற்றம்! பொலிஸார் – முன்னணி முறுகல்

December 14, 2024
t-5-696x392.jpg

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அத்தோடு, பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி குவிக்கப்பட்டுள்ளனர்.

t-4-1024x577.jpg

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் நடைபெற்றது.

t-3-1024x577.jpg

இந்த நிலையிலேயே இன்று மாலை முன்னணியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

t-1-1024x577.jpg t-2-1024x577.jpg

இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தபோது உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

https://eelanadu.lk/தையிட்டியில்-பதற்றம்-பொ/

 

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்!

14 JAN, 2025 | 01:39 PM
image

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்த போராட்டம் திங்கட்கிழமை (13) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சட்டத்தரணி ந.காண்டீபன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எனப்பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

01__7___1_.jpg

01__5_.jpg

01__1___1___2_.jpg

01__4___1_.jpg

https://www.virakesari.lk/article/203799

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக போராட்டம்

13 MAR, 2025 | 08:10 PM

image

யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்று வியாழக்கிழமை (13)  நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த கட்டுமானமானது மக்களது காணியை அபகரித்து கட்டியுள்ள நிலையில் காணி உரிமையாளர்களாலும், பொதுமக்களாலும், அரசியல் பிரதிநிதிகளாலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றமை வழமை. அந்தவகையில் இன்றைய தினமும் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், காணியின் உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

IMG-20250313-WA0162.jpg

IMG-20250313-WA0163.jpg

IMG-20250313-WA0160.jpg

https://www.virakesari.lk/article/209116

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

43-2.jpg?resize=750%2C375&ssl=1

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்!

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

அந்நிலையில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1431673

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

Published By: DIGITAL DESK 3

12 MAY, 2025 | 10:16 AM

image

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம்,  தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

494834989_1339224920519898_7632450282893

494817454_1007776978223382_7846268326508

494361605_1028144029459076_4426149729471

494824277_1266072688273013_9781829063986

494834630_682137787901442_60997017459587

494359334_2855479081322517_8760901559722

https://www.virakesari.lk/article/214495

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சிக்கும் இப்போராட்டத்துக்கும் சம்பந்தம் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

12 May, 2025 | 04:46 PM

image

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி  திங்கட்கிழமை (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

போராட்ட களத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் , அவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் | Virakesari.lk

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம் : கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு!

Published By: DIGITAL DESK 2

10 JUN, 2025 | 10:26 AM

image

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று செவ்வாய்க்கிழமை (10) போராட்டம் நடைபெற்று வருகிறது.

திஸ்ஸ விகாரையில் இன்று (10) நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் நீர்த்தரைப் பிரயோக இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை பெறப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-06-10_at_10.06.17.jp

WhatsApp_Image_2025-06-10_at_10.06.17__1WhatsApp_Image_2025-06-10_at_10.06.20__2WhatsApp_Image_2025-06-10_at_10.06.18.jpWhatsApp_Image_2025-06-10_at_10.06.19.jpWhatsApp_Image_2025-06-10_at_10.06.20.jpWhatsApp_Image_2025-06-10_at_10.06.20__1WhatsApp_Image_2025-06-10_at_10.06.21__1WhatsApp_Image_2025-06-10_at_10.06.23__1WhatsApp_Image_2025-06-10_at_10.06.23.jpWhatsApp_Image_2025-06-10_at_10.06.21.jp

https://www.virakesari.lk/article/217070

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். தையிட்டியில் ஆர்ப்பாட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

10 JUN, 2025 | 03:55 PM

image

பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த இடத்துக்கு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VID-20250610-WA0014.jpg

VID-20250610-WA0012_1_.jpg

VID-20250610-WA0016.jpg

https://www.virakesari.lk/article/217097

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.