Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மறத்தமிழரா ?மறந்ததமிழரா ? 😡

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி-யூரூப் 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நொச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நொச்சி.

எம்மவர்கள் தானே இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்கிறார்கள்.

மேடையில் திலீபனுக்காக ஒரு நிமிட அஞ்சலி செலுத்தினால் எல்லாமே அடங்கிப் போய்விடும்.

மலேசியா சிங்கப்புர் என்று ஈரந்தவர்கள் அண்மையில் ஐரோப்பாவை குறிவைத்து நகர்கிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த இசை நிகழ்ச்சியும் நல்ல வரவேற்புடன் நிறைய பணம் கொட்டியதாக அறிய முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

 ஆளுக்காள் ஒவ்வொரு யூரியூப் தளம் ஆரம்பிச்சு எதை பேசி பிரபலம் ஆகலாம் பார்வையாளர்களை அதிகமாக்கலாம் என்று அலைகிறார்கள்.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் செப் 26ல் . நிகழ்ச்சி நடப்பதோ 23/24ல் . இவர் எதுக்காக அர்த்தமேயில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கிறார்?

கண்டிப்பா இவரின் நோக்கம் திலீபன்மேல் உள்ள அக்கறையல்ல, நிகழ்ச்சி நடத்துகிறவர்கள்மேல் உள்ள தனிப்பட்ட முரண்பாடே என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும்.

எதுக்கெடுத்தாலும் உங்களின் முரண்பாட்டுக்காக எம் தேச பிரச்சனையை இழுக்காதீர்கள். அகத்திலோ புலத்திலோ  எமது சனத்தொகையின் அளவிற்கு ஒப்பீட்டளவில் 90% மான மக்கள் உடலாலும், பொருளாலும் மனதாலும் போராட்டத்துடனேயே நின்றார்கள், அவர்களை கொச்சை படுத்தும் வேலைகளை நீங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2023 at 21:19, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி நொச்சி.

எம்மவர்கள் தானே இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்கிறார்கள்.

மேடையில் திலீபனுக்காக ஒரு நிமிட அஞ்சலி செலுத்தினால் எல்லாமே அடங்கிப் போய்விடும்.

மலேசியா சிங்கப்புர் என்று ஈரந்தவர்கள் அண்மையில் ஐரோப்பாவை குறிவைத்து நகர்கிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த இசை நிகழ்ச்சியும் நல்ல வரவேற்புடன் நிறைய பணம் கொட்டியதாக அறிய முடிந்தது.

நேற்றையதினம் நான் கேள்விப்பட்டேன் நிகழ்சி பிற்போடப்பட்டுள்ளதாக. காரணம் இந்த விடையம் திரு ஏ ஆர் ரகுமனுக்குத் தெரிவிக்கப்பட்டது என. சரியாகத் தெரியாது விசாரிக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2023 at 20:35, valavan said:

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் செப் 26ல் . நிகழ்ச்சி நடப்பதோ 23/24ல் . இவர் எதுக்காக அர்த்தமேயில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கிறார்?

திலீபனவர்கள் உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த நாள் செப்டெம்பர் 26.  1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாகஇ யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் வீரச்சாவடைந்தார். இந்தக்காலப் பகுதியில் இது போன்ற களியாட்டங்கள் ஊடாக இளைய தலைமுறையை மடைமாற்றம் செய்வதற்கான முனைப்புகளா என்பதே பலரது ஆதங்கம்.

4 hours ago, Elugnajiru said:

நேற்றையதினம் நான் கேள்விப்பட்டேன் நிகழ்சி பிற்போடப்பட்டுள்ளதாக. காரணம் இந்த விடையம் திரு ஏ ஆர் ரகுமனுக்குத் தெரிவிக்கப்பட்டது என. சரியாகத் தெரியாது விசாரிக்கவும்

நிகழ்ச்சி நடாத்துபவர்களது வாய்மொழியிலான கூற்றாகவே உள்ளதாகத் தகவல். அவர்கள் இதுவரை பிற்போடுவதாகத் தெளிவான அறிவித்தலைச் செய்யவில்லை.

தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? -ஈழத்துச் சுந்தர்.

DSC_1593-300x200.jpgதியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா?
இந்திய மற்றும்  இலங்கை அரச இயந்திர நிகழ்ச்சி நிரலுக்குள் ஏ .ஆர். ரஹ்மான் சிக்கியுள்ளாரா ?

யேர்மனிய நாட்டில் எதிர் வரும் 23.09.2023 அன்று, ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அகிம்சைய வழியில் ஆகுதியாகிய பெரும் தியாகி லெப்டினன்ட் கேணல். திலீபன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவெழுச்சியின் 9ஆம் நாளிலேஇந்திய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதை காணும் போது கவலையழிக்கிறது.

ஈழத்தமிழர்கள் கண்ணீரில்க் கலக்கும் காலத்தில் அவர்களின் முதுகில்  வென்நீரை ஊற்றுவது போல்லுள்ளது  எங்கள் வேதனை.உலகத்தமிழினமே! உணர்வெழுச்சி கொண்டு உண்ணா நோன்பு அனுஸ்டிக்கும் காலத்தில் இந்த இசைக் கூத்தும் குத்தாட்டமும் எதற்கு எமக்கு? புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களே! தமிழக தமிழர்களே!! தியாகி திலீபனை, அவரது மெய்  கூச்செறியும் தியாகத்தை  மறந்து போனீர்களா?தமிழினம் சுதந்திரம் அடையவும், தமிழ்மொழி காக்கவும்,தன்னை அணுவணுவாக  12 நாட்கள் உருக்கினாரே! அந்த நினைவுகள் உங்கள் நினைவினில் இல்லையா?

ஏற்கனவே  வீரச்சாவடைந்த 650 மாவீரர்களோடு நானும் வானத்திலிருந்து ஈழம்  மலர்வதைப் பார்ப்பேன்  என ஆசை கொண்டுதானே இன்னுயிரை  ஈகம் செய்தார். அவர் உங்கள் பிள்ளை இல்லையா? அவர் ஈகம் பெரிதில்லையா? உங்களுக்கு  இன மானம் இல்லையா? அல்லது இனம் பெரிதில்லையா? திலீபன் நினைவு நிகழ்வுகளை மறுத்து இசையமைத்து இலாபம் தேடவேண்டுமா?

இப்படி ஒரு வியாபாரம் செய்து ஈழத்தமிழரின் பணத்தைப் பெற்று நீங்கள் வாழவேண்டுமா? இதை எம் இனம் பார்த்து மகிழுமா? யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்களே ஆழ்மனதிலிருந்து சிந்தியுங்கள்.எதிரியும் ஏளனம் செய்வான் இதைபார்த்து. போராடிய சமூகமாக நாங்கள் இன்னும் அகதி முகாம்களிலே இருந்தபடியே, பார்க்க வேண்டுமா இந்த நாகரீகமற்ற  கூத்தை?
இதயம் திறந்திருக்கட்டும் இமைப்பொழுதில்  எம்முறவுகளே! இவ்வுலகில் அகிம்சையின் அடையாளம் காந்தி அடிகளே என்று சொன்ன, பாரத தேசம் ஈழத்தமிழ் இனத்தின் அகிம்சையின் அடையாளமாகிய  தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, அவரது ஈகத்தின் பின்னே பாரதம் தலைகுனிந்ததும் வரலாறு.

அந்த தியாக வரலாற்றை யாரும் அழிக்க முடியாது. அது வானுயர எழுதப்பட்ட வரலாறு. இன்றுவரை உலகம் வியந்து நிற்கும் ஒரு வீர வரலாறு. இன்று வரை ஈழத்துயரில் களத்தினில் பங்கு கொள்ளும் எம்  உலகத் தமிழ் புலம் பெயர் உறவுகளே! யேர்மன் வாழ் ஈழத்தமிழர்களே!! உங்கள் இதயத்தை இந்தக் காலத்தில் அந்த உன்னதனுக்காக, திறந்து வையுங்கள். நாம் ஆழ வேரறுந்து விழுந்துவிடக் கூடாது. ஏனெனில் உங்கள் நிழலில்த்தான் இன்று எம் தாயகம் மூச்சை இழுத்து விடுகிறது.

இந்த இசைக் களியாட்டத்தை ஒழுங்கு படுத்தும் வியாபார விசமிகளுக்கு உங்கள் விடுதலைப்பற்றை, தன்மான உணர்வை மீண்டும் வெளிப்படுத்துங்கள். இந்த விசமிகளை அறச்சீற்றத்தோடு விரட்டியடியுங்கள். நீங்கள் புலம்பெயர்ந்த சமூகமானாலும் தமிழீழத் தனியரசின் பிரதிநிகளாய் இழிவானோரை திருத்தி வழிநடத்துங்கள். உண்ணாவிரதக் காலத்தை உணர்வோடும், தூய்மையோடும் தாங்கிநின்று, மாவீரர்களின் பெருந் துணையோடு உறுதிகொள்ளுங்கள். இது உங்கள் காலத்தின் கடமை. கட்டாயம் செய்வீர்களென நம்பிக்கை கொள்கிறோம்.

தாய்நாட்டின் சுகமிழந்து, இயல்பு வாழ்வின்றி, இந்தோனேசிய அகதி முகாம்களில் இன்னும் அல்லலுறும் நாங்கள், ஈழத்தமிழர் என்ற உணர்வை மட்டும் குலையாது வைத்துள்ளோம். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒற்றை நம்பிக்கையில்.

நன்றி,
நிறைந்த வலியோடு,
ஈழத்துச் சுந்தர்,
தமிழீழ அகதிகள் சார்பாக,
இந்தோனேசியா.
04.08.2023.

okkk_Seite_1.jpg
okkk_Seite_2.jpg
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.