Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி அரசு; தூதருக்கு இந்திய அரசு சம்மன்

 
postcard-1-5.jpg?fit=960%2C540&ssl=1

ஜெர்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து 20 மாதங்களுக்கு மேலாக பிரித்து வைக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

 

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு வேலை விசாவில் சென்ற அகமதாபாத்தைச் சேர்ந்த பாவேஷ் மற்றும் அவரது மனைவி தாரா அவரது பெண் குழந்தை அரிஹாவின் பிறப்புறுப்பில் காயம் இருந்ததைத் தொடர்ந்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதன் பிறகு அரிஹாவை ஜெர்மன் நிர்வாகம் வளர்ப்பு இல்லத்திற்கு அனுப்பியது. செப்டம்பர் 2021 முதல், அரிஹாவின் பெற்றோர் குழந்தையின் காவலுக்காக சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ங்கள்

இந்த தம்பதி தங்கள் மகளை தங்களிடம் திருப்பித் தருமாறு 20 மாதங்களாக ஜெர்மனி அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மருத்துவர்கள் அரிஹாவுக்கு சிகிச்சை அளித்த போது, குழந்தையின் டயப்பரில் இரத்தம் இருப்பதைக் கண்டார்கள். இதையடுத்து நிர்வாகம் சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தது. அன்றிலிருந்து அரிஹா வளர்ப்பு இல்லத்திலிருந்து வருகிறார்.

இது குறித்து குழந்தையின் தாய் தாரா கூறுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில், அரிஹா வளர்ப்பு இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும். ஜெர்மன் அரசாங்கத்தின் விதிகளின்படி, ஒரு குழந்தை வளர்ப்பு இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தால், அந்தக் குழந்தை பெற்றோரிடம் திரும்பப் பெறப்படாது என கூறியதோடு பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

முன்னதாக நவம்பர் 2022 இல், அரிஹாவின் தாய் தாரா ஷா தனது மகளின் காவலைப் பெறுவதற்காகக் குஜராத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டையும் தாரா ஷா கோரியிருந்தார்.

மேலும் அரிஹாவின் தாய் தாரா கூறுகையில், தனது மகள் தற்போது கிறிஸ்தவ குடும்பத்தில் இருப்பதாகவும், அவள் இப்போது ஜெர்மன் பேச ஆரம்பித்துவிட்டார். வழக்கு விசாரணைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதுவரை மகள் அரிஹா தன் காவலில் இருக்க வேண்டும். அல்லது தங்கள் உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாரா கூறுகிறார்.

இந்திய தூதரை வரவழைத்தது இந்திய சிறுமி அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அரிஹா வழக்கு தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பியர்போக்கிடம் கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‘அரிஹா விவகாரம் தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மானுக்கு அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. குழந்தையை பெற்றோரிடம் விரைவில் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் வருத்தத்தை அந்நாட்டு தூதரிடம் தெளிவாக எடுத்துரைத்தோம். குழந்தையின் இந்திய கலாசார உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். மொழி, மத, கலாச்சாரம், சமூக சூழலில் இந்திய குழந்தை வாழ்வது முக்கியமானது. இந்த விவகாரத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. குழந்தை அரிஹாவை இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வர அனைத்து உதவிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’ என்றார்.

https://news7tamil.live/german-government-snatches-7-month-old-baby-girl-from-indian-parents-government-of-india-summons-german-ambassador.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தவறேதும் இல்லாமல் பெற்றோர்களிடம் இருந்து குழந்தையை யேர்மனியில் பிரிக்க மாட்டார்கள். பிழை பெற்றோரிடம் இருப்பதால்தான் இந்த நிலை வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தியச் சட்டங்கள் போல் அல்ல யேர்மனியச் சட்டங்கள். எந்த ஒரு நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டியவர்கள் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வெளிநாடுகளில் குழந்தைகள் மீது  அரசாங்கம் மிகவும் தனிப்பட்ட் அக்கறை  எடுத்துக் கொள்கிறது . பாடசாலைகளில்   கூட சிறு காயம் இருப்பின் ஆசிரியர் எப்படி வந்ததென்று  வினவி சந்தேகமிருப்பின் மேலிடத்துக்கு அறிவிக்க படும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாடுகளில் கூட அரசு சார்ந்த சிறுவர் நல, கண்கானிப்பு நிலையங்களில் எத்தனையோ தவறுகள் நடந்துள்ளன. 

உதாரணத்திற்கு இங்கே Tasmaniaவில் சிறுவர் நன்நடத்தை மற்றும் அவர்களை பாராமரிக்கும் அரசு சார்ந்த நிலையம் ஒன்றில் நடைபெற்று வந்த பாலியல் வன்புணர்வு, பாலியல் சித்திரவதைகள் தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. 

குழந்தைகளைத் தாயிடம் இருந்து பிரித்து தவறான/abusiveன தந்தையிடமோ அல்லது foster careலோ விடப்படுகின்றனர். சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நல்ல சூழ்நிலைகளில் வளர்வார்கள் ஆனால் பெரும்பாலோனருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இருப்பதில்லை. 

இந்த சம்பவத்தில்/செய்தியில் கூட சரியான தகவல் இல்லை 

1- //மனைவி தாரா அவரது பெண் குழந்தை அரிஹாவின் பிறப்புறுப்பில் காயம் இருந்ததைத் தொடர்ந்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். // 

2- // மேலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.//

மேலே இரண்டு கூற்றுகளுமே தவறான, ஒன்றுக்கொன்று முரணான தகவல்களைத் கூறுகின்றன. இதனை வைத்து பெற்றோரை குறை கூறமுடியுமா? தெரியவில்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னர், இந்தியா திரும்ப நோர்வே, ஓஸலோ விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய குடும்பத்தில், தாய், மகனுக்கு கையால் உணவூட்டினார், அது தவறு என்று குழந்தையை பறித்துக் கொண்டணர்.

அங்கும் இந்திய அரசே தலையிட்டு, கையால் உண்ணுதல் இந்திய கலாச்சாரம் மேலும் அவர்கள் இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்தனர் என வாதாடி குழந்தையை மீட்டது.

இந்த சிறுவர் நலஅமைப்புகள் பல விடயங்களில் அலட்சியமாகவும், சில விடயங்களில் அநியாயத்துக்கு கவனமாகவும் இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யூன் மாதம் இது சம்பந்தமான பிபிசியின் செய்தி யாழில் இணைக்கப்பட்டிருந்தது

 

  • Like 1
  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
    • ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.   சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.