Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்!

யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்!

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் நிலைப்பாட்டில் உள்ளவர் என்று பிரசன்ன ரணதுங்க கூறினார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, நாங்கள் உங்களை சந்தித்தபோது, அதிகாரத்தை பரவலாக்கி அரசியல் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணுமாறு வலியுறுத்தினோம்.

ஆனால், அவர் செய்யவில்லை. இப்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது. இந்தப் பிரச்சினையை நாம் இப்போதே தீர்த்துவிடுவோம்.

நாம் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரத் தயாராகவுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1344188

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாகாண சபையில் மாவட்ட ரீதியில் விகிதாசார பிரதிநிதிதுவம் என்றால் - மேல், மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ் மா.ச எண்ணிக்கை உயர வாய்பிருப்பதாக நினைக்கிறேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலை வாருவதட்க்கென்றே ஒரு கூடடம் இருக்கின்றது. அவர்களது தொழிலை விட சொல்கிறீர்களா ? அப்படி என்றால் அவர்களது பிழைப்புக்கு யார் வழி சொல்லுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒன்று; தமிழரது உரிமைகளை பகிர்ந்து சேர்ந்து வாழ்வது இல்லை, தமிழரை விட்டு தனித்து வாழ்வது என்றொரு நிலை வந்தாலே சிங்களம் இறங்கிவரும். மீண்டும் முருங்கை மரத்தில் ஏறாது என்று சொல்ல முடியாது. தமிழர் முதுகில் சவாரி செய்து பழகிப்போச்சு. தமிழர் இல்லாமல் அதனால் தனித்து வாழ முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனோவும் ரணிலை நம்பி நம்பி காலத்துக்கு காலம் கதை சொல்லி தன் பிழைப்பை பார்த்துக்கிறாரே தவிர.. மேற்கிலங்கை வாழ் தமிழ் மக்களுக்கோ.. வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கோ.. மலைய மக்களுக்கோ ஒரு விமோசனமும் வந்ததாகத் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்கள தலைவர்கள் ஒருவர் மாறி ஒருவர் தமிழரை ஏமாற்றறி காரியம் சாதித்தனரே ஒழிய, யார் தமிழரை நின்று நிதானித்து செயற்பட அவகாசம் கொடுத்தனர்,  அனுமதித்தனர்? ஒருவர் விட்டதிலிருந்து மற்றவர் தொடர்ந்து ஓட ஓட விரட்டினரே, அவர்கள் அந்த பதவியில் உட்காருவதற்கு தமிழரும் காரணம் என்பதை ஏற்க மறுத்தனர், மறந்தனர். தமிழ்பிரதிநிதிகளின் ஆதரவு, பெலயீனம், தனிப்பட்ட ஆசை, திறமை போன்றவற்றை தனக்கு சாதகமாக்கி தன்னை வளர்த்து, நிலைநிறுத்திக்கொண்டது. ஆனால் அவைகளின் இந்தப்பிடிவாதம், மறுதலிப்பு நமக்கு ஒருநாள் விடிவை ஏற்படுத்தும். அந்த நாள் எந்த நாள் என்றுதான் தெரியவில்லை. ஆனால் நாம் இழந்த காலத்தை விட குறைவான காலத்திலுள்ளது. ரணில் அரசியலில் தலைவராக இருப்பதும் உறுதியளிப்பதும் இதுதான் முதற்தடவையல்ல. எனது கையில் இல்லை என்று கையை விரித்து பழியை மற்றவர் தலையில் போடுபவரை நம்பலாமா? அவர் தலைவர் எனச் சொல்ல தகுதியுள்ளவரா? அப்படிப்பட்டவர் எதற்கு உறுதி மொழியளிக்கிறார்? 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.