Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

பரபரப்பை ஏற்படுத்திய பிரபாகரனின் சுவரொட்டிகள்

 

 

facebook sharing button
print sharing button
wordpress sharing button
pocket sharing button

பாறுக் ஷிஹான்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட  அநாமதேய சுவரொட்டி ஒன்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டி இன்று ஒட்டப்பட்டுள்ளதுடன் கருப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில்  பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது

1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதியில் விடுதலை புலிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட எமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு கூறுகின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை ஞாயப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .அனைவரும் பாராபட்சம் இன்றி இருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அம்பாறை  மாவட்டத்தில் அக்கரப்பற்று , அட்டாளைச்சேனை, பாலமுனை,  நிந்தவூர், ஒலுவில்  ,சம்மாந்துறை , சாய்ந்தமருது  ,கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ,உள்ளிட்ட    முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு    சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பரபரபப-ஏறபடததய-பரபகரனன-சவரடடகள/73-322495

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

ஐ.நா மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும்.

 

1 hour ago, nunavilan said:

கருப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில் 

சிங்களம் தீர்வை நோக்கி நெருங்கினாலும்(?) பெரும் தடைக்கற்களாக இருக்கப்போவது இவர்களே என்பதை தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள். அதைவிட எங்கேயாம் ஐ.நாவில் புலிகளுக்கு ஆதரவான நியாயங்கள் பேசப்படுகிறது. அங்கே தமிழருக்கான நியாயமே தொடக்கூடப்படவில்லை. இதிலெப்படிப் புலிகளுக்கான நியாயம். தொடர்ந்தும் தமிழரது குருதியில் படகோட்டிக்கொண்டிருக்க முடியாதென்பதையும், 1948இற்கு முன்பிருந்த நிலைக்கு மீளாய்வு செய்தால் என்ன பெறுபேறு கிடைக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். எப்போதாவது தீர்வு முயற்சிகள் வேகமடையும்போது உடனே புறப்பட்டுவிடுவார்கள். இது மறைந்த அஸ்ரப்பின் காலத்திலிருந்தே தொடர்கிறது. உங்களுக்கு ஒரு அலகு வேண்டும் என்று கேட்டதுபோல் ஏன் சிங்களத்தை நோக்கி அதிகாரத்தில் இருக்கும் அலி சாப்ரி போன்றோரால் கேட்க முடியவில்லை. அவளவு சிங்கள எச்சிலை விசுவாசமா? சாவுகளும் அழிவுகளும் தமிழருக்கு அதில் குளிர்காய்தல் என்ன ஈனத்தனம். இலங்கைச் சோனகர்கள் தெளிவாக யோசிக்க வேண்டும்.தமிழினம் இருக்கும்வரைதான் தண்ணியடிக்கும்போதான கொறிப்பதுபோலாவது (சைட்டிஸ் மாதிரியாவது) உங்களைச் சிங்களம் தேடும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, nochchi said:

 

சிங்களம் தீர்வை நோக்கி நெருங்கினாலும்(?) பெரும் தடைக்கற்களாக இருக்கப்போவது இவர்களே என்பதை தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள். அதைவிட எங்கேயாம் ஐ.நாவில் புலிகளுக்கு ஆதரவான நியாயங்கள் பேசப்படுகிறது. அங்கே தமிழருக்கான நியாயமே தொடக்கூடப்படவில்லை. இதிலெப்படிப் புலிகளுக்கான நியாயம். தொடர்ந்தும் தமிழரது குருதியில் படகோட்டிக்கொண்டிருக்க முடியாதென்பதையும், 1948இற்கு முன்பிருந்த நிலைக்கு மீளாய்வு செய்தால் என்ன பெறுபேறு கிடைக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். எப்போதாவது தீர்வு முயற்சிகள் வேகமடையும்போது உடனே புறப்பட்டுவிடுவார்கள். இது மறைந்த அஸ்ரப்பின் காலத்திலிருந்தே தொடர்கிறது. உங்களுக்கு ஒரு அலகு வேண்டும் என்று கேட்டதுபோல் ஏன் சிங்களத்தை நோக்கி அதிகாரத்தில் இருக்கும் அலி சாப்ரி போன்றோரால் கேட்க முடியவில்லை. அவளவு சிங்கள எச்சிலை விசுவாசமா? சாவுகளும் அழிவுகளும் தமிழருக்கு அதில் குளிர்காய்தல் என்ன ஈனத்தனம். இலங்கைச் சோனகர்கள் தெளிவாக யோசிக்க வேண்டும்.தமிழினம் இருக்கும்வரைதான் தண்ணியடிக்கும்போதான கொறிப்பதுபோலாவது (சைட்டிஸ் மாதிரியாவது) உங்களைச் சிங்களம் தேடும்.

 

அதே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த சுவரொட்டியின் பின், சிங்களமே இருக்கிறது போல தெரிகிறது.

இனவாதிகளே, கனடிய அரசின், கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மேலான நிலைப்பாட்டை, புலிகள் மேலானது என்று கயிறு திரிக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்கள்.

  • Like 1
Posted
8 minutes ago, Nathamuni said:

இந்த சுவரொட்டியின் பின், சிங்களமே இருக்கிறது போல தெரிகிறது.

இனவாதிகளே, கனடிய அரசின், கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மேலான நிலைப்பாட்டை, புலிகள் மேலானது என்று கயிறு திரிக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்கள்.

இதில் சிங்களவர்கள் கில்லாடிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் தமிழினம் இருக்கும் வரைக்கும் முஸ்லீம்,சிங்களம், போலி தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஹிந்திகளுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு பொன்வாத்து முட்டைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கூடடம் எந்த பக்கம் காற்றடிக்கிறதோ அந்த பக்கம்  சாயக்கூடியது. இது அவர்களது ரத்தத்தில் ஊறிய ஒன்று. நாய் வாலை நிமிர்த்த முடியாது. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்த ஜனாதிபதி December 15, 2024  11:39 pm இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr.S. Jaishankar), மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.  அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உடனான சந்திப்பு சிநேகபூர்வமாக இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் அதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார். மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதியை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து  கலந்துரையாடினார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197356
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.