Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன்

 

https://www.ilakku.org/matter-concern-histories-distorted-written-todays/

https://www.ilakku.org/heroes-day-has-become-a-cultural-event/

வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவதுவரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி.

 

கேள்வி:
1982இல் முதல் மாவீரர் வீரச்சாவடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தான் மாவீரர் தினம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை அறியத்தாருங்கள்.

உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களுக்கு ஒருவிளக்கம் ஒன்றை தர விரும்புகின்றேன். யாழ். மாவட்டத்தில் நான் பணியாற்றியதால், அந்த நேரம் யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றியே தகவல் தரமுடியும்.

பதில்:
இன்றைய சூழலில் முள்ளிவாய்க்காலுக்கு முன் தான் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின் வருகின்ற செய்திகள், ஊடகச் செய்திகள், விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. தேசியத் தலைவர் இருந்த போது இருந்தது தான் தமிழீழ விடுதலைப் புலிகள். வரலாறுகளைத் தனிநபர்கள் மாற்றியமைப்பதும், கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் இருந்து கொண்டு அவர்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், தியாகத்தின் வரலாற்றையும், மாபெரும் தலைவனின் தியாகத்தையும் தங்களுடைய அமைப்பாக மாற்றி, வலம் வருவதையும், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், இணையவழி ஊடகங்கள் என்று சொல்லி, அவர்கள் புது வரலாறை எழுதுவதும், தங்களுடைய நேரத்தை ஊடகங்களுக்குக் கடத்துவதற்காக ஊடகவியலாளர்களை அணுகி, சம்பந்தமில்லாமல் மாபெரும் இயக்கத்தின் தியாக வரலாறுகளை திரிபுபடுத்தி, அவர்கள் கூறுவதைக் கேட்டு அப்படியே ஒப்புவிப்பதும், பின்னர் நாங்கள் சொல்கின்றோம். மக்களே நீங்களே கேட்டு தெளிவடையுங்கள் என்று சாட்டாகச் சொல்லிவிட்டு நகர்வதும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக தமிழ் பேசும் மக்களுக்கு 2009உடன் தேசியத் தலைவரின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது. அந்த இயக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கும் போதுதான் அது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அப்போது நாங்கள் யாழ்.மாவட்ட அரசியல் பிரதிநிதிகளாக வேலை செய்தோம். இந்த வகையில் இதைப் பற்றி சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

1989ஆம் ஆண்டு எப்படி இந்த மாவீரர் நாள் உருவானது. அதற்கு முன்னர் ஏன் உருவாகவில்லை என்பதற்கான விடையை நான் உங்களுக்குத் தருகின்றேன். 1982ஆம் ஆண்டு சத்தியநாதன் ரமரணமடைந்த பின்னர் 1989வரையில் ஆயிரத்திற்குட்பட்ட போராளிகள் ரமரணமடைந்திருக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் வீரமரணமடைந்த போராளிகளின் உடல்கள் எங்கள் கைக்குக் கிடைக்கும் போது,  அந்தந்த மாவட்ட தளபதிகள், அந்தந்த மாவட்ட அரசியல்துறைப் போராளிகள் எல்லோரும் வீரமரணமடைந்த போராளியின் பெற்றோரிடம் அவரின் உடல்களை இறுதி நிகழ்விற்காக அவர்களிடம்  ஒப்படைப்போம். அந்த நடைமுறை தொடர்ந்தும் பேணிக் கொண்டு வரப்பட்டது. 1989இல் யாழ். மாவட்டத்தில் குறிக்கப்பட்ட இடங்களில், குறிக்கப்பட்ட போராளிகளே இருந்தனர். இலங்கை-இந்திய இராணுவங்கள் நடத்திய போரிலே அவர்கள் எல்லோரும் சிதைவடைந்து, தலைவர் உட்பட எல்லோரும் காட்டிற்குள் சென்று தான் ஒரு கெரில்லாப் போராட்டத்தை நாங்கள் மீண்டும் ஆரம்பித்தோம்.

யாழ். மாவட்டத்தில் நீர்வேலி, பொக்கணை, குப்பிளான், மாதகல், யாழ். நகரம் போன்ற இடங்களில் 3 போராளிகள், 5 போராளிகள் எனத்தான் போராளிகள் நின்றார்கள். இதே போன்று வடமராட்சி, தென்மராட்சியிலும் நின்றார்கள். மீதிப்பேர் வவுனியாக் காட்டிலும் இதே பாணியில் குறிக்கப்பட்ட போராளிகள் நின்றார்கள். காடுகளில் வீரமரணமடையும் போராளிகளை காடுகளிலே புதைக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. உடல் எங்களிடம் கிடைக்குமிடத்து, நாங்கள் காடுகளில் புதைப்போம்.  அங்கு எரிக்க முடியாது. எரித்தால், அங்கு எழும் புகை மூலம் நாங்கள் இருக்கும் இடத்தை இராணுவத்தினர் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால், புதைத்தோம்.

நாங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக வைத்திருந்த யாழ். மாவட்டத்திலே நாங்கள் கெரில்லாப் போராட்டத்தையும், இராணுவத்தை தடுத்து நிறுத்தி, சண்டை செய்யும் போதும், பொலிஸ் நிலையங்கள், இராணுவக் காவலரண்களைத் தாக்கும் போது நாங்கள் கைப்பற்றும், போராளிகளின் உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.  பெற்றோரின் விருப்பப்படி அவர்கள் தங்கள் சமயக் கிரியைகளைச் செய்து, தங்கள் மயானங்களில் உடல்களை எரிப்பார்கள்.  நாங்கள் மாவீரர் துயிலும் இல்லம் கட்டும் வரையில் இப்படியான நடைமுறையே இருந்தது. காடுகளில் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை பெற்றோரிடம் கொடுக்க முடியாத சூழ்நிலை.

இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்படுவது, எழுதப்படுவது என்பது கவலைக்குரிய விடயம். ஆரம்பத்தில் நாங்கள் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை  Body என்றுதான் சொல்வோம். பின்னர்தான் வித்துடல் என்று சொல்லும் வழமை வந்தது. இதேபோன்று நாங்கள் சண்டைசெய்யும் போதும், கால்களில் செருப்பு இல்லாமல் சண்டை செய்தோம். சாரத்துடன் சண்டை செய்தோம். இவை எல்லாம் அன்றைய காலத்தில் வந்த பத்திரிகைகளில் வந்த செய்திகள், புகைப்படங்களில் ஆவணங்களாக இருக்கின்றன.  எழுதுபவர்கள் சரியானதை, சரியான முறையில் தகவல்களைச் சேகரித்து, அந்தக் காலப் பத்திரிகைகளை   nulagam.com இல் பார்த்து எழுதலாம். எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால் புதிய கருத்துக்களை, புதிய வடிவில், தாங்கள் பக்கத்தில் நின்றவர்கள் போல் எழுதுவது தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

1990இல் இந்திய இராணுவம் வெளியேறி நாங்கள் வந்த போதும், இதே நடைமுறைதான் இருந்தது. பெற்றோரிடமே உடல்களை ஒப்படைத்து, அவர்கள் சமயக்கிரியைகள் செய்து உடல்களை அடக்கம் செய்தனர். அதற்குரிய பதிவுகளும் அன்றைய பத்திரிகைகளில் செய்திகளாக உள்ளன. இவற்றை வைத்துக் கொண்டு எழுதுபவர்களும், ஆய்வு செய்பவர்களும் எழுத வேண்டும என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

கேள்வி:
www.noolaham.org பற்றி எங்களுக்கு அறியத்தருவீர்களா?

பதில்:
இணையத்தில் நீங்கள் தேடினால், முழுப் பத்திரிகைகளையும், முழுமையாகப் பெறமுடியா விட்டாலும், ஈழநாதம், ஈழநாடு, முரசொலி, ஈழமுரசு, உதயன் போன்ற அந்தக் காலத்துப் பத்திரிகைகள் எல்லாமே இருக்கின்றன. அவற்றில் குறித்த காலப்பகுதிகளை நீங்கள் பார்க்கலாம். சில பத்திரிகைகள் தற்போது பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். சிலவேளைகளில் பல்கலைக்கழகங்களில் பத்திரிகைகள் இருக்கலாம். அல்லது கொழும்பு ஆகாஷ் என்ற ஆவணக்காப்பகத்தில் இருக்கின்றது.

ஆய்வுகள் செய்பவர்கள்தான் அல்லது பிழையாகத் தகவல்களைக் கொடுப்பவர்கள் தான் ஒரு வரலாறை நீங்கள் நினைத்தபடியும், உங்கள் கட்டுரைகளுக்கு ஏற்றபடியும், கேள்வி ஞானத்திலும், கற்பனையிலும் எழுதுவது தான் இங்கே கொடுமையாக உள்ளது. வரலாற்றாசிரியர் என்று சொல்பவர்களும் துயிலும் இல்லம் சம்பந்தமாக  2019ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் பிழையாக கட்டுரை எழுதியதை நான் வாசித்தேன். அது என்னுடன் சம்பந்தப்பட்டது. நான் நிர்வாகப் பொறுப்பாளராக இருக்கும் போது நடந்த வரலாறு.

அண்மையில் முகநூல் ஒன்றில் காட்டில் விதைத்த மாவீரர்களின் வித்துடல்களை எடுத்துக் கொண்டு வந்து தான் தேசியத் தலைவர் துயிலும் இல்லங்களை அமைத்தார் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். இது திட்டமிட்டு செய்யப்படுகின்றதா? சிலவேளைகளில் எங்களுக்காக வேலை செய்பவர்களே பிழையான கருத்துக்களை முன்வைக்கின்ற ஒரு சூழ்நிலையும் இருக்கின்றது.

தேசியத் தலைவர் இருக்கும் போது, தேசியத் தலைவராலும், தளபதிகளாலுமே ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கைக்குரியவர்கள் நியமிக்கப்படுவர். இந்திய இராணுவம் போனதன் பின்னர், முதலாவது அரசியல் பொறுப்பாளராக டொமினிக் அண்ணா வந்தவர். இரண்டாவதாக இளம்பரிதி வந்தவர். மூன்றாவதாகத்தான் நான் வந்தேன். பின்னர் நான்காவதாக மீண்டும் இளம்பரிதி வந்தார். இந்திய இராணுவத்தின் பின்னர் 2009 வரை இந்த மூன்று பேராலும் தான் யாழ்.மாவட்ட அரசியல் கட்டமைப்பு வழிநடத்தப்பட்டு வந்தது. தேசியத் தலைவர், பிரதித் தலைவர், தளபதி ஆகிய மூன்றுபேருடைய நெறிப்படுத்தலின் கீழ்தான் நாங்கள் மூன்றுபேரும் இயங்கினோம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களும் அப்படித்தான் இயங்கினார்கள்.

கேள்வி:
1982இல் முதல் மாவீரர்களின் ஈக வரலாறு தொடங்கியிருந்தாலும்கூட, 1989ஆம் ஆண்டு தான் மாவீரர்நாள் என்பது நினைவுகூரப்பட்டது.  இந்த 7 வருடகால இடைவெளி பற்றி எங்களுக்கு விளக்கம் தருவீர்களா?

பதில்:
ஆரம்பத்தில் கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த எங்கள் போராட்டம், பிற்காலத்தில் பொலிஸ் நிலையத் தாக்குதல்கள், இராணுவ முகாம் மீதான தாக்குதல்கள் மூலம் யாழ். மாவட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளை அவர்களின் பெற்றோரிடம் கொடுத்து, அவர்கள் சமய முறைப்படி அவர்களின் ஊர்களில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. ஆரம்பத்தில் இயக்க மரபு என்பது ஆரம்பிக்கப்படவில்லை. அந்த நேரம் அந்தச் சிந்தனையில் போராட்டம் நடத்தவும் இல்லை. அதுதான் உண்மை.

வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது

காலத்திற்குக் காலம் எங்கள் நடவடிக்கைகளில், கொள்கைகளில் மீளாய்வு செய்து, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். இது தான் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்காக இருந்தது. 1989இல் மாவீரர் நாள் என்ற ஒரு நாளை தேசியத் தலைவர் அவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களுக்கும் அறிவிக்கிறார். முதல் மாவீரரான சத்தியநாதன் வீரமரணமடைந்த நாளை மாவீரர் நாளாக கொண்டாடும்படி அறிவிக்கிறார். அந்த நேரத்தில் நான் யாழ். மாவட்டத்தில் இருந்தேன். அப்போது யாழ். மாவட்டத்தில் பொட்டம்மான் இருந்தார். குறிக்கப்பட்ட இடங்களில் குறிக்கப்பட்ட போராளிகளே இருந்தோம்.  இதை தேவர் அண்ணா எழுதிய புத்தகத்திலே பார்த்தோம்.

விமானப்படைக்குப் பொறுப்பாக சங்கர் அண்ணா இருந்தார்.  அந்தக் காலத்தில் வெளிநாடுகளில் நடந்த போர்களைப் பற்றியும், போர் நடவடிக்கைகளைப் பற்றியும் தலைவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, பிரிட்டனில் நடக்கின்ற பொப்பி தினம் பற்றி தலைவருக்கு சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான், தலைவருக்கு சிந்தனைக்கு இந்த மாவீரர் நாள் என்பது வந்தது.

முல்லைத்தீவில் 1 – 4 என்ற காட்டில் தேசியத் தலைவரும், வவுனியாவில் 3 -7 காட்டில் பிரதித் தலைவரும் இருந்தனர். அங்கிருந்து தான் அரசியல், இராணுவ நிர்வாகங்கள் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ். மாவட்டத்தில் பொட்டம்மானுக்கு தகவல் வருகின்றது. யாழ். மாவட்டத்தில் நின்ற பல்வேறு போராளிகள் இன்றும் உலகப்பரப்பில் வாழ்கின்றோம். பொட்டம்மானுக்கு வந்த அறிவித்தலை எங்களுக்குச் சொல்கிறார். அந்த வேளையில் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக நான் இருந்தேன். வீரமரணமடையும் போராளிகளுக்கு சுவரொட்டி அச்சிடும் பணியை நான் செய்தேன்.  திலீபன் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வெளியிடுவர்.  இவற்றிற்காக மனோகரா திரையரங்கிற்கு அருகிலிருந்த அச்சகமும், நாவலர் வீதியில் தவம் அண்ணர் என்பவரிடம் அச்சிடும் பணிகளை மேற்கொண்டோம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும், இந்தியாவிலிருந்தும் சுவரொட்டிகள் வரும். வீரமரணமடைந்த போராளிகளின் வீரவணக்கம்,  அவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். அவர்களால் தான் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் கொண்டாடுங்கள் என்ற அறிவித்தல் தேசிய மட்டத்தில் வந்துவிட்டது. பொட்டம்மான் என்னைக் கூப்பிட்டு, ஒரு  சுவரொட்டி வெளியிட வேண்டும். ஒரு வசனம் எழுதும்படி என்னைக் கேட்க, நான் “உங்கள் சுவடுகளில் தொடரும் எங்கள் பாதங்கள்” என்று ஒரு வசனத்தை எழுதினேன்.  பொட்டம்மான் ஒரு திருத்தம் செய்வோம் எனக் கூறிவிட்டு, கறுப்பு மையை கொண்டுவரும்படி கூறி, சூட்டின் காலின் அடிப் பாதத்தில் மையைத் தடவி அதை சுவடு என்ற சொல்லிற்கு பதிலாக வைத்து, சுவரொட்டியை அடித்து விடுவம் என்று கூறுகிறார்.  இது நல்லது என்று அதில் நின்ற போராளிகள் சொன்னோம். சூட்டின் கால் சிறியதாக உள்ளதால், ஜக்சன் என்ற போராளியின் காலில் மையைத் தடவி அந்த பாதத்தை நாங்கள் சுவரொட்டியாக ஒட்டினோம். ஜக்சன் என்ற அந்தப் போராளி இன்று வெளிநாட்டில் வாழ்கிறார். அவரையும் தேடிக் கண்டுபிடித்து அவரிடமும் நேர்காணல் ஒன்றை எடுப்பது வரலாற்றிற்கு சான்றாக இருக்கும்.

நாங்கள் புத்தூரில் நிற்கும் போது அங்கு மாவீரர் நினைவாலயம் என்ற மண்டபம் ஒன்றைக் கட்டினோம். அதன் திறப்பு விழாவை நடத்தும் போது, இந்திய இராணுவம் அதை தடுப்பதற்காக அங்கே வந்தது. அப்போது அப்பகுதிவாழ் மக்கள் வயோதிபர்கள், இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்று அந்த இராணுவத்தை தடுத்து நிறுத்தி, இது எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் செய்கிறோம் அவர்களின் நினைவாக நாங்கள் செய்வதை நீங்கள் தடுக்கக்கூடாது என்று சொல்லி அந்த இராணுவத்தினரை திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த இராணுவத் தளபதி மனமிரங்கித் திரும்பிப் போய்விட்டார் என்பது தான் உண்மை. அதேவேளை தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளில் மாவீரர்களின் படங்களைத் தூக்கி எறிந்ததும், அவர்களுக்காக சோடனை செய்ததை அகற்றியதுமான வரலாறுகள் உள்ளன. ஆகவே இந்த வரலாறுகள் தான் யாழ். மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டு நடந்தது.  அந்த நினைவு மண்டபத்தில் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யாழ்.மாவட்டத்தில் இவ்வாறுதான் நடந்தது. மற்றைய மாவட்டங்களில் இதேபோன்றுதான் நடந்தது. இது விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக இருக்கின்றது.

கேள்வி:
நீங்கள் அமைத்த மாவீரர் துயிலுமில்லம் மக்களிடையே எவ்வாறான பார்வையைப் பெற்றிருந்தது. அது மதங்களைக் கடந்து அமைக்கப்பட்ட ஒரு வடிவமைப்பைக் கொண்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லம் மக்களிடத்தில் எவ்வாறான எழுச்சியை ஏற்படுத்தியது?

பதில்:
உண்மையில் நான் அதனைக் கூறுவேனாக இருந்தால், மாவீரர் நாள் என்பது பண்பாட்டு கலாசாரமாகவே மாறிவிட்டது. அன்றைய நேரத்தில் 1989 ஆம் ஆண்டு தலைவர் காட்டுக்குள் போராளிகள் மத்தியில் ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார். அவ் உரை எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை. 1990 ஆம் ஆண்டு மாவீரர் நாள் தொடர்பான தலைவருடைய அறிக்கை பத்திரிகையிலும், எங்களுடைய புலிகளின்குரல் வானொலியிலும்  வெளிவந்திருந்தது. அதைத் தொடர்ந்து அந்த உரை வெளிநாடுகளிலும் வெளிவந்தது.

அதேநேரம் பெற்றோர்களை கௌரவித்திருந்தோம். ஆலயங்களில் மணியோசை அடிக்கும் போது அனைவரும் வீடுகளில் விளக்கேற்றுமாறு  கேட்டுக்கொண்டோம். இதேப் போலவே நாங்கள் 89 ஆண்டு 90 ஆம் ஆண்டுகளிலும் செய்திருந்தோம்.

1991 ஆம் ஆண்டு நாங்கள் இவ்வாறு சுடலை ஒன்றைக் கட்டிவிட்டோம் என புதுவை அண்ணையிடமும், மாத்தையா அண்ணையிடமும் ஒரு சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தோம்.

கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

அப்போது தான் புதுவை அண்ணை மாவீரர் துயிலும் இல்லம் என்னும் சொற்பதத்தையும் கூறியிருந்தார். அந்தச் சொற்பதம் கூட்டத்தில் எல்லோருடைய கூட்டு முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாவீரர் துயிலும் இல்லத்தில் நாங்கள் மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு மரபை அந்த கூட்டத்தில் முடிவெடுத்து, தலைவருக்கும் அறிவித்து, தலைவரும் ஏனைய தளபதிகளும் அதனை ஏற்றுக் கொண்டு, 1991 ஆம் ஆண்டு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் கொண்டாடும் மரபு உருவாகியது.

மாவீரர் நாள் நினைவு கூரப்படும்  போது இவ்வாறாகத் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கை தமிழீழ அரசியல் பிரிவினரால் வெளியிடப்பட்டு, ஒவ்வொரு அரசியல் துறை பொறுப்பாளர்களும் அந்த மரபில்  அதைக் கடைப்பிடித்தார்கள்.

துயிலும் இல்லம் என்பது எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்று தலைவரினால் தேசிய அளவில் அறிவிக்கப்பட்டது. எல்லோரும் கட்ட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.

நாங்கள் யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 4 பிரிவுகளாக இருந்தோம். வடமராட்சி, தென்மராட்சி, தீவகம், வலிகாமம். அதில் வலிகாமத்திற்கு முதலாவது  துயிலும் இல்லம் உருவாக்கப்பட்டது. அதேநேரம் தென்மராட்சிக்கு 1991 ஆம் ஆண்டு உடனே கட்டப்பட்டது. வடமராட்சியிலும் , தீவகத்திலேயும் கட்டப்பட்டது.

தென்மராட்சிக்குத் தமிழ்செல்வனும், வலிகாமத்திற்கு கிளியண்ணை தளபதியாக அதேநேரம் துயிலும் இல்லம் கட்டும் போது தீவகத்திற்கு தளபதியாக இருந்தவர். இப்படி சூசை அண்ணை வடமராட்சிக்கு இருந்தவர். இப்படியாக இருந்த    சிலர் உயிருடன் இருக்கின்றனர்.

புதுவை அண்ணை, அரசியல் துறையைச் சேர்ந்த எல்லோரும் அதனை சிந்தித்து பெயர்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து 1991 ஆம் ஆண்டு துயிலும் இல்லத்தில் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தோம்.

அப்போது தான் மக்களும் நாங்களும் போராளிகளும் சரி அதில் பொது ஈகைச்சுடர் ஒன்றினை ஏற்ற வேண்டும் என்று முதலாவது மாவீரர் நாள் நடக்கும் போ, துயிலுமில்லத்தில் அந்த நேரம் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா அண்ணை ஈகைச்சுடரினை ஏற்றினார்.

பானு அண்ணை கோட்டையில் ஏற்றினார். அதேநேரம் மணியோசை ஒலித்ததும் மௌன அஞ்சலியைச் செலுத்தி, தீபத்தை ஏற்றும் போது 1991 ஆம் ஆண்டு அப்போது துயிலுமில்லப் பாட்டு வரவில்லை. அப்போது நாங்கள் “ஓ மரணித்த வீரனே உன் சீருடையை உனக்கு தா ” என்ற பாடலைப் போட்டனாங்கள்.

பொதுவான பாட்டுக்கள் மெதுவாக போய்க் கொண்டிருந்தன. அதேநேரத்தில் மக்கள் மௌன அஞ்சலியையும் செலுத்தி, ஈகைச்சுடரினை ஏற்றி அந்த சமாதிக்கு மேலே அவர்கள் விழுந்து தங்களுடைய பிள்ளைகளின் நினைவுகளை சத்தம் போட்டு அழுது, தங்களுடைய மனச்சுமையை குறைத்ததை பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அந்த நேரம் சோகமும், வீரமும் கலந்த எழுச்சியாக தான் நாங்கள் அதனை பார்க்கின்றோம்.

கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

அந்த லைற் ஒளிவெள்ளங்கள் லஸ்பிக்கர் மோகன்மாமா என்பவர் பூட்டுவார். எல்லா நிகழ்ச்சிக்கும் அவர்தான் பூட்டுபவர் யாழ். மாவட்டத்தில் சிங்கம் சவுண்ட் சேர்விஸ் எண்டு வைச்சிருந்தவர். இப்பவும் வைத்திருக்கிறார் இப்பவும் உயிருடன் இருக்கிறார்.

இவர்கள் எல்லோருடய கூட்டு முயற்சியாகவும், எல்லோருடய சிந்தனையின் வெளிப்பாடாகவும் இந்த நிகழ்வு 1991ம் ஆண்டு நடைபெற்றது. அதே நேரத்தில் நாங்கள் கோயில் வளைவுகள் போல எல்லா சந்திகளிலும் கட்டினோம். அந்த வளைவுகள் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எல்லா சந்திகளிலும் கட்டியிருந்தோம். சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கட்டியிருந்தோம். லைற்றுகளை பூட்டி மிகவும் எழுச்சியாகதான் மாவீரர் நாளை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். அந்த எழுச்சிக்குள்ளும் ஒரு சோகம் என்பதை துயிலும் இல்லங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

மாவீரர் வளைவுகளை பற்றி நான் சொல்லும் போது வளைவுகளை நாங்கள் சந்திக்கு சந்தி யாழ் மாவட்டத்தில் கட்டி அந்த வளைவுகளை எந்த பிரதேச பொறுப்பாளர் திறம்பட செய்கின்றார் அந்த வளைவுகளுக்குரிய புள்ளிகளை போட்டு அவர்களை ஊக்குவிக்கிறதற்காகவும், உற்சாகத்தை கொடுக்கிறதற்காகவும் பரிசில்களை வழங்கினாங்கள்.

அந்த பரிசில்களை மதிப்பீடு செய்வதற்கு ஐங்கரநேசன் மாஸ்டர் இன்றைக்கு பசுமை இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். அவர் தான் அந்த காலங்களில செயற்பட்டவர். அவருடைய மாணவர்களும் அவரும் தேனீக்கள் என்ற ஒரு அமைப்பை வைத்திருந்தவர்கள். அந்த அமைப்பால் அந்த மதிப்பீடுகளை செய்து எந்த வளைவு முதலாம், இரண்டாம் , மூன்றாம் இடங்களை  பெறுகின்றது என்ற மதிப்பீட்டை செய்து யாழ் மாவட்ட அரசியல் நிர்வாகத்திற்கு கொண்டு வந்து தந்தவையள்.

அதனையும் நாங்கள் வளைவுகள் என்று நாங்கள் கட்டியது சம்பந்தமாக நினைவு கூருகின்ற போது அவர்களையும் நாங்கள் மறக்க முடியாது என்பதனை நான் இந்த வேளையில் தெரிவித்து கொள்கின்றேன்.

பின்னர் மரபு வழியில் மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பூப்போடுவதும் அதே நேரம் பாடசாலைகளிலிருந்த பிள்ளைகள் வந்து அதனைப் பார்ப்பதும் கிட்டத்தட்ட வரலாறு என்று சொல்கின்ற வரலாற்று இடங்களை பார்ப்பதுபோல் பார்க்கின்ற ஒரு சூழலையும் அது ஏற்படுத்தியிருந்தது.

ஆகவே இந்த மரபு என்பது அந்த இடத்தை நாங்கள் அமைத்ததன் விளைவாக மக்களால் இயல்பாக கடைப்பிடிக்கக்கூடிய ஒரு உணர்வைத்தான் அந்த இடம் ஏற்படுத்தியது.

இந்த மரபு என்பது அந்த இடத்தை அமைத்ததன் விளைவாக ஏற்படுத்தப்பட்டது. மக்களால் இயல்பாகவே கடைப்பிடிக்ககூடிய உணர்வைத்தான் அந்த இடம் ஏற்படுத்தியது. அன்றும் சரி இன்றும் சரி  ஒரு ஆலயத்தில் மக்கள் கடவுளுக்கு எப்படி மதிப்பைக் கொடுக்கிறார்களோ அப்படி ஒரு மரபை தோற்றிவித்தது. இந்த எழுச்சிக் கட்டங்கள் அழிக்கப்பட்டாலும், மனங்களில் உள்ள அந்த நினைவுகளோ அந்த கல்லறைகளோ அழிக்கப்படாது அவை மாவீரர் துயிலுமில்லம் இருக்கும் இடம் என்பதுதான் மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதத்திற்கும் பொருத்தமானது.

அந்த சொற்பதங்களைச் சரியான முறையில் பாவித்து சரியான முறையில் மாவீரர்களுடைய நினைவுகளை நாங்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதுதான் அந்த மாவீரர்களுக்கு செய்கின்ற ஒரு கடமையாக இருக்கும் என்பதுதான் இந்த நேரத்தில் என்னுடைய கருத்தாக இருக்கின்றது.

கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

கேள்வி:
2009க்கு பின்பதாக அல்லது யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதன் பின்னராக மாவீரர்களுடைய எழுச்சி சின்னம் என்பது முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டது. அதாவது தமிழர் பிரதேசங்களில் நினைவுச் சின்னமான மாவீரர் துயிலும் இல்லம் இல்லை எனும் அளவிற்கு இலங்கை இராணுவம் முற்றாக அழித்துவிட்டது. அந்த புறச்சூழலிலே சிலர் புலம்பெயர் தேசங்களில் அவற்றை நிறுவ வேண்டும் இந்த சின்னங்களை நிறுவி அந்த அடையாளங்களை பேணவேண்டும் என்ற அடிப்படையில் புலம்பெயர் தேசங்களில் இந்த மாவீரர் துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டது. இந்த சிந்தனை சரியா? அல்லது இந்த மாவீரர்களுடைய சினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தோடு இந்த சிந்தனை ஒத்துப்போகின்றதா? அல்லது அதில் ஏதாவது தவறுகள் இருக்கின்றனவா?

பதில்:
உணர்வுபூர்வமான நடவடிக்கை. இடங்கள் மாறினாலும் ஆட்கள் இடம்பெயர்ந்தாலும் மாவீரர்களுடைய உரித்துடையவர்கள் மாவீரர்களை நினைவு கூரவேண்டும். அவர்களுடன் களமாடியவர்கள் இன்றும் புலம் பெயர்தேசங்களுடன் உலகப்பரப்பில் பல்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். மாவீரர் நாள் என்பது தேசியத்தலைவர் இருக்கும் போது 52 நாடுகளில் கொண்டாடப்பட்ட ஒரு நாள். எங்கெங்கு தமிழன் இருந்தானோ அங்கெல்லாம் அந்த நினைவுகள் கொண்டாடப்பட்டது.

இங்கே நினைவுகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதம் வரும் போது மாவீரருடைய சொற்பததத்தை பாவிப்பதுதான் சரி. இந்த கருத்துக்கு முரண்பாடான சொற்பதம் அதாவது மாவீரர் துயிலுமில்லம் என்பது மாவீரர்கள் துயில்கொள்கின்ற இடம். ஆகவே மாவீரர்களுடைய உடம்பு இல்லாத இடத்திற்கு அந்த சொற்பதத்தை பாவிக்காது, அது அவர்கள் உண்மையாக உணர்ச்சி போக்கிலே அல்லது எழுந்த மானத்திலே அந்த கருத்துக்களை பேசும்போது புண்படுத்துவதாகத்தான் நான் பார்க்கின்றேன்.

அதே நேரத்தில் அந்த சொல்லாடலை தவிர்த்து மாவீரர் நினைவாலயம் மாவீரரை நினைவு கொள்கின்ற மண்டபம் என்ற சொல்லாடல்களை பயன்படுத்துவதுதான் புலம்பெயர் தேசத்தை பொறுத்தவரை பொருத்தமாக இருக்கும் என்பது தான் என்னுடைய தாழ்மையான அபிப்பிராயமும்கூட. இந்த சொற்பதங்களைப் பாவிக்கும்போது அதற்குரிய அர்த்தத்துடன் தான் பாவிக்க வேண்டும். அர்த்தம் இல்லாமல் பொருளில்லாமல் கதைப்பதென்பது அறிவுபூர்வமான செயலாக இருக்காது.

ஆகவே அந்த நிலமையிலிருந்து மாறுபட்டு மாவீரர்களுடைய நினைவுகளை எந்த உலகப்பரப்பில் வாழ்ந்தாலும் அதனை நினைவு கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் 27,000 ற்கும் மேற்பட்டவர்கள் மாவீரர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய உறவுகள் என்று பார்த்தால் 2 இலட்சம் பேருக்குகிட்ட உறவுகள் உலகப்பரப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அந்த மண்ணிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆகவே நினைவாலயம் என்கின்ற சொற்பதத்தை நினைவு என்ற சரியான சொற்பதத்தையும் பாவித்து கொண்டாடப்பட வேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது.

கலாசார நிகழ்வாகவே மாறி விட்டது

 

கேள்வி:
மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டன. சிதைக்கப்படும் போது மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகத்தான் பார்க்கப்பட்டது. அந்தவகையில் மாவீரர் துயிலுமில்லம் சிதைக்கப்பட்டதோடு நீங்கள் மாவீரர் துயிலுமில்லங்களை நிறுவிய ஒருவர். அதனை ஆரம்பித்து ஆரம்ப கருவை உருவாக்கியதிலிருந்து பல மாவீரர்களை விதைத்து அதனை நிறுவியவர் எனும் வகையில் அந்த மாவீரர்களின் நினைவுச்சின்னம் சிதைக்கப்படும் போது உங்களுடைய எண்ணங்கள் அல்லது உங்களுடைய மனக்குமுறல் எவ்வாறிருந்தது?

பதில்:
சிந்தனைதான் என்னுடையது. இதை நிறுவியது ஒரு கூட்டு முயற்சியாகவே நிறுவினோம். இப்படியான ஒரு சூழலை உருவாக்கி இன்றைக்கு இந்த துயிலும் இல்லங்கள் எதிரிகளை பொறுத்தவரையில் அவர்கள் கல்லறைகளைத்தான் சிதைத்தார்கள் ஆகவே அவர்கள் கல்லறைகளை சிதைக்கும் போது உண்மையில் அவர்கள் யுத்த தர்மத்தையோ அல்லது மனிதாபிமானத்தையோ கடைப்பிடிக்காமல் நடந்தபோது மிகவும் திரும்பவும் உயிருடன் வைத்து மீண்டும் கொல்லப்பட்டு இருக்கின்றோம்.

மன ரீதியாக எதிரியின் வன்முறைகள் அட்டூழியங்கள் கூடும்போது தமிழ்மக்களாக இருந்தாலும் சரி ஆறறிவுள்ள எவருமே வந்து அதற்கெதிராக போராடக்கூடிய மனநிலையைத்தான் அது ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே அந்த நினைவுகள் மிண்டும் மீண்டும் அழியவிடாமல் மக்கள் மனங்களை அதாவது பொதுவாக சிந்திக்க கூடியவர்கள் உட்பட எல்லோரிடத்திலும் தான் ஏற்படுத்தியிருக்கின்றது.

வன்முறை கூடும் போது அதற்கு எதிராக புரியக்கூடிய மொழியிலே திரும்பவும் நாங்கள் அதை கொடுக்கின்றபோது அவர்கள் திருந்தக்கூடிய வாய்ப்பு அல்லது சமாதானம் பிறக்கக்கூடிய வாய்ப்பு என்பது ஏற்படுகின்றது. நாங்கள் இந்த அழிவிலிருந்து மீள்வதென்பது உண்மையாகக் சிந்திக்ககூடியது. அந்த நினைவுகளை பேணவேண்டும் என்பதை நாங்கள் சிந்தித்து அவர்களுடைய நினைவுகளையும் மாவீரர்களுடைய சிந்தனைகளையும் எவ்வாறு உலகத்துடன் சிந்தித்து எப்படி அறிவுபூர்வமாக ஒர் அரசியல் வடிவமாக திரும்ப நாங்கள் மீள் எழுச்சி பெறவேண்டும் என்பதுதான் அவர்கள் அழிக்கும் போது ஏற்பட்ட சிந்தனையாகத்தான் இருக்கின்றது. அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்கள் என்பது கடந்த கால அரசியல் வரலாறு, கடந்த கால அனுபவங்கள் சிங்களவர்கள் என்னத்தை செய்வார்கள் என உலகத் தமிழர்கள் அறிந்த ஒரு உண்மை. ஆகவே அதிலிருந்த மீள்வதற்கான நடவடிக்கைகளை உலகத்தமிழினம் செய்யலாம். எமது சமூகத்திலிருந்த வெளியே தெரியக்கூடிய மாதிரியான நடவடிக்கைகள் நடக்கவேண்டும் என்பதைத்தான் சமூகம் எதிர்பார்க்கின்றது. அறிவுபூர்வமான மாவீரர்களின் சிந்தனைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கான சிந்தனையை உருவாக்கியதுதான் சிங்கள அரசின் துயிலுமில்ல அழிப்பு நடவடிக்கை என்றுதான் நான் கருதுகின்றேன்.

முற்றும்.

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வித்துடல் விதைப்பு எப்படி நடைபெறும்

 

https://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it

 

 

---> சுரேன் கார்த்திகேசு.

 

"தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே! - இங்கு

கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா

குழியினுள் வாழ்பவரே!

...........................................” 

எனும் புதுவை ரத்தினதுரையின் உள்ளீர்க்கும் சொற்களையும் மீறிய உணர்வலைகள், ஈழத்தமிழர் தாயகமான வட-கிழக்கு இலங்கையில் இன்னும் பொங்கிப் பிரவாகம் எடுக்கச் செய்யும் ஒரு வரலாற்றுப் பண்பாட்டு நிகழ்வான மாவீரர் வாரம், தொடங்கியுள்ளது!

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை, யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளான வீடு ஒன்றிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளியே வந்து, அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவு ஓடி சக போராளிகளிடம் தன்னுடைய ஆயுதத்தை ஒப்படைத்துவிட்டு, கீழே சரிந்தார் அந்தப் போராளி; அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் உயிருக்கு அபாயம் ஏற்பட, கடுமையான கடல் முற்றுகையைத் தாண்டி, ஒரு வாரத்துக்குப் பின்னர் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டார்; ஆனால், சிகிச்சையால் இயற்கையை வெல்லமுடியாமல் போக, லெப்டினெண்ட் சங்கர் எனும் வீறுகொண்ட அந்தப் போராளி, தன் இயக்கத்தின் தலைவனும் தளபதியுமாக இருந்த பிரபாகரனின் மடியில் சரிந்து, உயிரியக்கத்தை நிறுத்திக்கொண்டார். அது, 1982 நவம்பர் 27 மாலை 6.05 மணி! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் களப்பலி, லெப்டினெண்ட் சத்தியநாதன் சங்கருடையது!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் இருந்தநிலையில், 1989-ம் ஆண்டில் அதே நாளில் அவ்வியக்கத்தின் சார்பில், நவம்பர் 27-ம் நாளானது ’மாவீரர் நாள்’ என முதல்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. அங்கிருந்து 1995-ல் லட்சக்கணக்கான மக்களுடன் புலிப்போராளிகள் வன்னிக்கு இடம்பெயர்ந்த பின்னரும் மாவீரர் நாளானது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.

இப்போதும் ஈழவிடுதலைப் போராளிகள் இயக்கம் ராணுவரீதியாக அழிக்கப்பட்டுள்ளபோதும், கார்த்திகை மாதம் என்றாலே மாவீரர் மாதம் என்கிறபடியாக, சிங்களப் பேரினவாதத்தின் நுகத்தடியின் கீழ் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம்முயிரைத் தந்துசென்ற மாவீரர்களின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, மரம் நடுகை போன்ற மனதை நனைக்கும் செயற்பாடுகள் நடந்தேறிவருகின்றன.

கோயில்கள், தேவாலயங்கள், பிற வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் மதநிகழ்வுகளைவிடக் கூடுதலாக, தமிழீழத்து மக்களின் உயிரில்கலந்த உணர்வாக, ஒரு துன்பியல் பண்பாட்டு நிகழ்வாக, மாவீரர் வீரவணக்க நிகழ்வு இருக்கிறது.

இதுகுறித்து இன்றைய இளம் தலைமுறையினரின் உணர்வு என்ன என்பதை அறிய, இறுதிப்போரின் முடிவுவரை களத்தில் இருந்து செய்திகளை வழங்கியவரும், முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் நெஞ்சில் குண்டுபட்டு படுகாயம் அடைந்து உயிர்தப்பியவருமான வன்னி செய்தியாளர் சுரேன் கார்த்திகேசுவிடம் பேசினோம். வதைமுகாமிலும் சிக்கி அங்கிருந்து தப்பி கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்று, அங்குள்ள வான்கூவரில் தற்போது ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவருகிறார்

வன்னியிலிருந்து வெளியான ’ஈழநாதம்’ நாளேட்டில் பணியாற்றிய இவரின் குடும்பத்திலிருந்தும் இரண்டு சகோதரர்கள் மாவீரர்களாகி காற்றோடு கலந்துபோனார்கள். சிறுவயது முதலே மாவீரர் ஊர்திகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர், அது விளைவித்திருக்கும் வீரமும் தீரமும் இன்னும் குறையாதவராகவே பேசினார்.

“மாவீரர் நாள் ஒரு பக்கம் இருக்க, ஒவ்வொரு மாவீரருக்கும் தனிப்பட்ட இறுதிமரியாதை செலுத்துவதும் பெரும் நிகழ்வாக இருக்குமாமே?”

“ஆமாம். இயக்கம் மட்டுமில்ல, ஒட்டுமொத்த மக்களும் மாவீரர்க்கு நினைவு வணக்கம் செலுத்தும். சண்டைக்களத்தில ஒரு போராளி வீரச்சாவு அடைந்துவிட்டாரெனில் இயக்கத்தின் (விடுதலைப் புலிகள்) கோட்ட அரசியல் துறை, அந்தப் பிரதேசத்தில் இருக்கிற, குறித்த போராளியின் குடும்பத்துக்கு தகவலை அறிவிக்கும். வீரச்சாவடைந்த போராளியின் வித்துடலை அவருடைய சக போராளிகள், இறுதியாக அவரோடு சண்டையில நின்றவர்கள், சொந்த இடத்துக்குக் கொண்டுபோவார்கள். ஒரு நாளோ இரண்டு நாளோ உறவினர்கள், பொதுமக்கள் வணக்கத்துக்குப் பின்னர், மஞ்சள் சிவப்பு நிறத்தில அலங்கரிக்கப்பட்டிருக்கிற மாவீரர் ஊர்தியில் அந்த மாவீரரின் வித்துடல் கொண்டுசெல்லப்படும், வித்துடலுக்குப் பக்கமாக ஆயுதம்தாங்கிய போராளிகள் சீருடைகளுடன் அமர்ந்திருப்பார்கள். மாவீரரின் வித்துடல் அந்தப் பகுதியில உள்ள மாவீரர் மண்டபத்தில வைக்கப்பட்டு, வீரவணக்கக் கூட்டம் நடைபெறும். சக போராளிகளும் பெரும்பாலும் அந்தப் போராளியினது பொறுப்பாளரும் அதில் உரையாற்றுவார்கள். பிறகு அந்த வித்துடலை மாவீரர் துயிலுமில்லம் நோக்கி ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போவார்கள்.

முன்னுக்கு ஒரு வாகனத்தில் வீரச்சாவடைஞ்ச போராளி பற்றி ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டே போவார்கள். பின்னணியில் மெலிதான ஒரு சோக இசை ஒலிபரப்பாகும். அதக் கேட்டு வழியால நிக்கிற மக்கள் மலர் வணக்கம் செய்வார்கள். அந்தப் பாதையால இருக்கிற வீடுகளில குத்துவிளக்கு ஏற்றிவச்சும் வீரச்சாவடைந்த மாவீரருக்கு மரியாதை செய்வார்கள். இதையெல்லாம் விடுதலைப்புலிகளோட கட்டளையால ஆரும் செய்யிறதில்ல.. மக்களின்ர மனசில இருந்து வாற உணர்வுதான்..!

துயிலுமில்லத்தை நெருங்கும் முன்னரே ஊர்தி நிறுத்தப்பட்டு, வித்துடலை அவருடைய சக போராளிகள் தோளில் சுமந்து நகர்ந்துசெல்வார்கள்.. ராணுவ அணிவகுப்பு அதற்கு முன்பாக இடம்பெறும். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பிரதான மேடையில வித்துடலை வைப்பார்கள். கூடியிருக்கிற மக்களுக்கு முன்னால அந்தத் துயிலுமில்லப் பொறுப்பாளர் உறுதியுரை வாசிப்பார். அது முடியவும் வித்துடலைச் சுற்றி நான்கு மூலைகளில் நின்றிருக்கிற ஆயுதம்தாங்கிய போராளிகள், மூன்று முறை வேட்டுகளை (சுட்டுத்) தீர்ப்பார்கள். அப்போது, மாவீரர்க்கான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி..’ எனும் துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்படும். பின்னர் அனைவரும் வித்துடலின் மீது மலர்களைத் தூவ.. போராளியின் வித்துடல் அங்கு விதைக்கப்படும்.” வித்துடல் விதைக்கப்படும் நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்கெடுத்திருப்பார்கள்.. அந்த இடம் எப்போதும் ஒரு புனிதத்தன்மை வாய்ந்த உணர்வைக் கொடுப்பதாகவே உணரமுடியும்..

”கடைசியாக எங்கெங்கு துயிலுமில்லங்கள் இருந்தன?”

“கிளிநொச்சியில முழங்காவில், கனகபுரம் மற்றும் தேராவில் முல்லைத்தீவில முள்ளியவளை, ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேவிபுரம், இரணைப்பாலை, வலைஞர் மடம் மற்றும் முள்ளிவாய்க்கால்... இவை வன்னியில் குறிப்பிடத்தக்கவை.. ஆனால், ஏனைய தாயக மாவட்டங்களிலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்தன.. ஆனால் இன்று அவை அனைத்துமே தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவான துயிலும் இல்லங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன..

“இறுதிமரியாதை செலுத்துவதில் அதிகாரநிலைக்கு ஏற்ப மாறுபாடுகள் இருந்தனவா?”

அப்படிச் சொல்லமுடியாது. வீரச்சாவடையும் போராளிக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பொறுத்து மட்டும் இதில் மாறுபாடு காணப்பட்டது. இறுதிப்போருக்கு முன்னரே வீரச்சாவடைந்த தளபதி பிரிகேடியர் பால்ராச் அண்ணையின் வீரவணக்க நிகழ்வுக்கு முன்னர், அந்த வித்துடலானது வன்னி முழுக்க எடுத்துச்செல்லப்பட்டது. மற்ற பிரதேசங்களில் இருக்கும் மாவீரர் மண்டபங்களைப் போல அல்லாது, கிளிநொச்சியில் திரளான மக்கள் கூடவசதியாக அமைக்கப்பட்டிருந்த கலாசார மண்டபத்தில், பால்ராச் அண்ணையின் வித்துடல் வைக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள அரசின் விமானப்படையின் மிகை ஒலி விமானங்கள் அங்கு திரண்டிருந்த மக்களை மிரட்டும்வகையில் தாழப் பறந்து எச்சரித்திருந்தன. தாக்குதல் நடத்துவது போலவே அவற்றின் செயற்பாடுகள் அன்று அமைந்திருந்தன.. ஆனால் மக்கள் எவரும் அங்கிருந்து அகன்று செல்லவில்லை..

“மாவீரர் வாரம் எப்படியாக இருந்தது, ஈழத்து மண்ணில்?”

94 வரை நவம்பர் 21-ம் நாள் தொடக்கம் 27-ம் நாள்வரை மாவீரர் வார நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. 95-ல் யாழ்ப்பாணத்திலிருந்து (புலிகள் இயக்கம்) வன்னிக்கு இடம்பெயர்ந்தபின்னர் இறுதிவரை நவ.25 தொடக்கம் 27 வரை மூன்று நாள்களுக்கு மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடாத்தப்பட்டது. மக்களைப் பொறுத்தவரை, நவம்பர் 15-ம் நாள் வந்ததுமே அவரவர் ஊரில் மாவீரர் வணக்க நிகழ்விடங்களை சுத்தம்செய்யத் தொடங்கிவிடுவார்கள். வீதிகள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்படும். மாவீரர்களின் பொது உருவங்கள் தாங்கிய பெரிய அளவிலான பேனர்கள் வைக்கப்படும். அனைத்து மக்களும் தங்கள் பகுதிகளை அலங்கரிப்பார்கள்.. எங்குமே ஒருவகை புனிதமான உணர்வுநிலை காணப்படும்! தேசிய அளவில் நவம்பர் 25 காலை 8 மணிக்கு வீரவணக்கத்துக்காக அனைவரும் தயாராகியிருப்பார்கள்.

பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழத் தேசியக் கொடி, தலைவரால் (பிரபாகரனால்) ஏற்றப்படும். சமநேரத்தில் பிற அனைத்து இடங்களிலும் துயிலுமில்லங்களிலும் முதலில் பொதுச்சுடர் ஏற்றப்படும். தொடர்ந்து கொடிவணக்கத்துடன் தேசியக்கொடி ஏற்றல் நடைபெறும். தேசியக் கொடி ஏற்றப்படும்போது “ஏறுது பார் கொடி.. ஏறுது பார்...” என்ற பாடல் இசைக்க கொடி ஏற்றுவார்கள். மார்புக்கு நேராக கையை நீட்டி அகவணக்கம் செய்தலும் அடுத்தடுத்து நடைபெறும். நிறைவாக மாவீரர் நினைவாக உரைகள் இடம்பெறும். மாலை 6 மணிக்கு முன்னதாக தேசியக்கொடி இறக்கப்படவேண்டும். மறுநாளும் இதே நிகழ்வுகள் தொடரும்.

27-ம் தேதி தாயகம் எங்குமே உணர்வுமயமாகக் காணப்படும்... அனைத்து மக்களும் ஒருசேரக் கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை போலவே, அந்த நாள் அமைந்திருக்கும்.. சிறப்புப் போக்குவரத்துகள.. மலர்களைப் பறிப்பதற்காகவும் மாலைகளைக் கட்டுவதற்காகவும் பெண்களும் சிறார்களும் கூடுவார்கள்.. ஒருவிதமான சோகம் கலந்த உற்சாகம் அனைவரிடமும் இருக்கும்.. மதியம் தாண்டி மக்கள் அருகில் இருக்கும் அல்லது தங்கள் உறவுகள் விதைக்கப்பட்டிருக்கும் துயிலும் இல்லங்களுக்குப் படையெடுப்பார்கள்.. வயோதிபர்கள் மட்டுமே வீடுகளில் நின்றிருப்பார்கள்.. நேரம் செல்லச்செல்ல துயிலும் இல்ல வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிறைந்துகாணப்படும்..

நினைவுத்தூபிகள் (வித்துடல்கள் கிடைக்கப்பெறாத மாவீரர்கள் குறிப்பாக கரும்புலிகள் உட்பட்டவர்களுக்காக அமைக்கப்படுபவை), கல்லறைகள் சூழ மக்கள் காணப்படுவார்கள்.. ஒவ்வொரு கல்லறைக்கும், தூபிகளுக்கும் மாலைகள் அணிவித்து.. கண்ணீர் மல்ல அனைவரும் திரண்டிருப்பர்.

மாவீரர் லெப்டினன் சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த 6.05 மணிக்கு முன்பாக அந்த நேரத்துக்கு வழிவிடும் வகையில் முன்னதாக, தலைவர், மக்களுக்கு ஆற்றும் மாவீரர் நாள் உரை ஒலிபரப்பாகும்.. தாயகத்தில் எங்கும் விடுதலைப்புலிகளின் புலிகளின்குரல் வானொலி காற்றலையை அலங்கரிக்கும்... நிசப்தத்தின் பொழுதில் தலைவரி கம்பீரக் குரலில் உரை ஒலிக்கும்.. உரை ஒலித்து ஓய்ந்த மறுகணம்.. மணி ஒலிக்கும்...“இப்பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சுடர் ஏற்றுவார்” என்ற அறிவிப்பு வெளியாகியதும்.. துயிலும் இல்லங்களில் நின்றிருக்கும் பெற்றோர், உறவுகள் அங்கு தயார் நிலையில் காணப்படும் சுடர்களை ஏற்றுவார்கள்..

சமநேரத்தில், “...தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! ..” பாடல் ஒலிக்கும்.. அதேவேளை.. கோயில்கள், பொது இடங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் சுடர் ஏற்றப்பட்டு மக்கள் வணக்கம் செலுத்துவார்கள்..

மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்துவது ஒரு சடங்கு இல்லை.. நாங்கள் எங்கட மண்ணில வாழ்ந்த வாழ்க்கை. இதை அடுத்த தலைமுறைக்கும் இது எடுத்துச்செல்லப்படவேணும்..!” என சுதந்திர வேட்கையோடு உள்ளக்கிடக்கையை எடுத்துவைக்கிறார், சுரேன் கார்த்திகேசு.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் அவர்கள் 2005 மாவீரர் நாளுக்கு வெளியிட்ட கட்டுரை ஒன்றிலிருந்து,

 

"விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன.

  1. பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன.
  2. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன.

போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித்துடல்களை புதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில், தேசியத் தலைவரும் அவருடைய புலிப்படையினரும் மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர். களப்பலியான வீரர்களை தகனம் செய்தால், இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும், புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள், என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன.

இப்போது மணலாற்றில் புதைக்கப்பட்ட புலிவீரர்களின் புனித எச்சங்கள், ஒரே இடத்தில் அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டன. இத்துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை.

போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் எச்சங்களை, சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லும் பாரம்பரியம் உலகில் உண்டு. துயிலுமில்லம் என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர்.

புலிவீரர்களின் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய புலிகளின் எண்ணக்கருவை இச்சொற்றொடர் உணர்த்துகிறது.

முதலாது துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன.

1991இல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக, எமது மண்ணில் நிலைபெறும். என்று கூறுகிறது. இம்முடிவானது, போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 14 ஜுலை 1991 ஆம் நாள் விதைக்கப்பட்டுள்ளது.

வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, புலிகளாகிய எம்மிடம் உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும்.

தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலும், முள்ளியவளை துயிலும் இல்லத்திலும், விதைக்கப்பட்டுள்ளன.

அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழ துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுவப்பட்டன.

எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை 25. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 20000. (2005 மாவீரர் நாள் விபரம். இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் மேலும் துயிலும் இல்லங்கள் தற்காலிகமாக அமைந்ததும் எண்ணிக்கைகள் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளவும்)

அடுத்து எமது நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

  1. களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த உடலுக்கு சீருடை அணியப்படுகிறது. அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவனுக்கான பதவி நிலை வழங்கப்படுகின்றது. பின்பு வித்துடல் பேழையில் வைக்கப்படுகிறது. மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படுகின்றன.
  2. மாவட்ட அரசியல்துறையூடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாமையுடன், பெற்றார் அல்லது உறவினர் வீட்டுற்கு எடுத்துவரப்படுகிறது. வீட்டு வணக்கம் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
  3. அதன்பின் வீரவணக்கக்கூட்டம் மண்டபத்தில் நடாத்தப்படுகிறது. முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்படுகிறது. பெற்றார் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  4. நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கொடுக்கப்படுகிறது. வித்துடலுக்கு மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்படுகிறது. நினைவுரைகள் அடுத்ததாக நிகழ்த்தப்படுகின்றன.
  5. இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வைக்கப்படுகிறது. அப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது.
  6. உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்படுகிறது. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின், அனைவரும் அகவணக்கம் செலுத்துகின்றனர்.
  7. வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்ட்டு விதைக்கப்படுகிறது. அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போடுகின்றனர். நடுகல்லானால் மலர் வணக்கம் செய்கின்றனர்.

 

  • ஈழத்தமிழினத்தால், மாவீரர் நாளாக் கொண்டாடப்படும் நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்போரில் முதல் களச்சாவடைந்த, எமது இயக்க வேங்கை லெப். சங்கர் (சத்தியநாதன்) நினைவாக அமைகிறது.
  • 1989 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாட்தொட்டு, நாம் ஆண்டு தோறும் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றோம். முதலாவது மாவீரனின் வீரச்சாவு தான், அனைத்து மாவீரர்களின் நாளாக கொண்டாடப்படுவதால், அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு.
  • 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது.
  • 1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1995ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது.
  • முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும்.
  • அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும்.
  • மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும் - மொழியாகி எங்கள் மூச்சாகி - முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை."

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

நா.யோகேந்திரநாதன் எழுதிய “முதல் மாவீரர் நாள் – சில நினைவுகள்”

 

https://rokshan.wordpress.com/2007/12/05/7/

திசெம்பர் 5, 2007, 9:38 முப

 

1989 நவம்பர் -27
 அது வன்னி மண் தன்னை ஒரு மகத்தான புனிதத்தால் அலங்கரித்துக் கொண்ட நாள். கோணாவில் பாடசாலை மைதானமெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் காற்றில் பறக்கின்றன. அலங்கார மேடை. அதன் பின் திரையில் பொறிக்கப்பட்ட புலிச்சின்னம். அதன் கீழே மாவீரர் தினம் 1989 எனப் பொறிக்கப்பட்ட பதாதை. ஒரு புனிதம் அந்த மைதானத்தில் மட்டுமல்ல அதன் சுற்றாடலிலும் கோலோச்சி வலம் வருகிறது.

ஆம். அங்கே முதல் மாவீரர் தினத்திற்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளிலுள்ள அத்தனை வாடகைக் கார்களும், வேன்களும் ஒவ்வொன்றாக வந்து சேர்கின்றன. சகல மின்பிறப்பாக்கிகளும் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. எல்லா ஒலிபரப்பிகளும் வந்து குவிந்து விட்டன. அத்தனை வாகனங்களுக்கும், அத்தனை ஒலி பெருக்கி
களுக்கும், அத்தனை மின்பிறப்பாக்கிகளுக்கம் அங்கு என்ன தான் தேவை வந்து விட்டது?. உண்மையாகவே எல்லாமே பாவிக்க வேண்டிய அளவுக்கு தேவை எதுவுமே இல்லை.

சிலவே போதுமானவை. அங்கே ஒரு தந்திரோபாயம். ஒன்றிரண்டு வாகனங்கள் மின்பிறப்பாக்கிகள், ஒலிபெருக்கிகள் மட்டும் அந்த மைதானத்திற்குள் கொண்டுவரப்பட்டால் அதன் உரிமையாளர்கள் அடுத்த நாளே புலியென்று நையப்புடைக்கப்படலாம். கைது செய்யப்படலாம். சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம், கழுத்து வெட்டப்பட்டு வீதியிலும் வீசப்படலாம்!
அனைவருமே மாவீரர் தின நிகழ்வுக்கு தங்கள் வாகனங்களையும் சாதனங்களையும் கொண்டு வந்து விட்டால் எவரைப் பலியாக்குவது எவரைப்பிடிப்பது? எவரை அடிப்பது? எவரைக் கழுத்தறுப்பது.?
ஏறக்குறைய இரண்டு மணிக்கே வீதிகளில் நெடுந்தூரத்திற்கு வாகனங்கள் அணி வந்து நிற்கின்றன. ஒலி பெருக்கிகள் கார்களில் கட்டப்பட்டு விட்டன. மின் பிறப்பாக்கிகள் மேடையின் பின் அடுக்கப்பட்டு விட்டன.

அன்று காலையிலே இப்படி ஒரு விழா நடக்கவிருப்பதாக மக்களுக்கு வாய்மொழியாக அறிவிக்கப்பட்ட போதிலும் இரண்டு மூன்று மணிக்கே கால் நடையாகவும் சைக்கிள்களிலும் மக்கள் பெரும் திரளாக கூட ஆரம்பித்துவிட்டனர்.

நாலு மைல் தொலைவில் உருத்திரபுரத்தில் இந்தியப்படை முகாம். எதிர்ப்புறத்தில் ஆறுமைல் தொலைவில் அக்கராயனில் இந்தியப்படை முகாம். இன்னொரு புறத்தில் கிளிநொச்சி நகரில் ஆறு மைல் தொலைவில் இந்தியப்படை முகாம். ஈ.என்.டிஎல்.எவ் தேசதத்துரோகிகளின் முகாமும். மூன்று பக்கங்களிலும் ஆபத்து நாக்கை நீட்டிக்கொண்டு நிற்க நடுவே மாவீரர் நாள் விழா மெல்ல மெல்லப் பிரமாண்டமடைகிறது. இந்தியப்படையோ,  ஈ.என்.டி.எல். எவ் குழுவோ வந்தால், அவர்களை எதிர்கொண்டு விரட்டி அடிக்கத் தயாராக விடுதலைப் புலிகளின் படையணி மறைவிடங்களில் காத்திருக்கிறது என்பதை மக்கள் எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் மாவீரர்களின் மகத்துவம் அவர்களை துணிச்சலுடன் அணிதிரள வைக்கிறது.

மலையாக மைதானமெங்கும் மின்சார ஒளி வெள்ளம் பாய்ந்தது. விழா மாவீரர் வணக்கத்துடன் ஆரம்பமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் சிலர் காடுகளுக்குள் போய் விட்டனர். இன்னும் ஒரு பகுதியினர் கொழும்புக்கு தப்பியோடி விட்டனர். இப்படியான நெருக்கடியான நிலையிலும் வன்னி மண்ணிலேயே தலைமறைவாக இருந்து கொண்டு இயக்கப் பணிகளுக்குத் தோள்கொடுத்து வந்த ஆதரவாளர்களின் ஒத்துழைப்பில் இப்பிரமாண்டமான விழா அரங்கேறுகிறது.

மைதானம் நிறைந்த மக்களின் வெள்ளம். உணர்வு பூர்வமான ஒரு சூழல் எங்கும் பரவி ஒரு உன்னதத்தைச் சொரிய வைக்கிறது. அங்கே மாவீரர் துயிலும் இல்லம் இல்லை. ஆனால், மாவீரர்களின் தியாகத்தால் விம்மிப்புடைத்த இதயங்கள் இருந்தன. அங்கே தாயகத்திற்காக உயிர் தந்த தியாகிகளின் கல்லறைகள் இல்லை. ஆனால், அவர்கள் ஒவ்வொருவரையும் காலம் காலமாக நெஞ்சில் நிறுத்தும் நினைவுகள் இருந்தன. நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. மாவீரர் நினைவான பாடசாலை மாணவ மாணவிகளின் ஆடல்கள் பாடல்கள் அரங்கேறுகின்றன.

அடுத்து ‘வானம் பூமியானது. பூமி வானமானது…’ என்ற ஆசிரியர் கணேசனின் பாடல் பாடகர் சாந்தனின் குரலில் செவிகளை நிறைக்கிறது. அடுத்து இந்தியப்படையின் கொடுமைகளை, தேசத்துரோகிகளின் நயவஞ்சகத்தை விளக்கும் சில உரையாடல்கள், தாளலயம் வில்லுப்பாட்டு என நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. இறுதி நிகழ்ச்சியாக நா.யோகேந்திரநாதனின் நாடகம் மேடையேற்றப்படுகிறது. இதில் சிங்கள அரசு எவ்வாறு இந்தியாவைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்பதையும், இந்தியப்படை தோற்கடிக்கப்பட்டு விரட்டப்படும் என்பதையும் தேசத்துரோகிகளும் துரத்தப்படுவார்கள் என்பதையும் வெளிப்படுத்திய ஒரு நவீன பாணியில் அமைந்த படைப்பாக விளங்கியது.

மாவீரர்களை நினைவு கூர்ந்து நடத்தப்பட்ட இந்த முதல் நினைவு விழா, பிரமாண்டமான முறையில் அமைந்திருந்ததோடு மக்களுக்கு உணர்வூட்டி எழுச்சிபெற வைத்த ஒரு அரங்காக அமைந்தது. மறுநாள் கிளிநொச்சி நகரில் சிலரை பிடித்து வைத்து “நீ நேற்று கோணாவில் போனனீ தானே?” என்று கேட்டு கோழைத்தனமாக அடித்து துன்புறுத்தினர். ஒரு சில வாரங்களிலே அவர்கள் இந்தியப்படையினரின் பின்னே துண்டைக்கானோம் துணியைக்காணோம் என்று ஓடியதுதான் வரலாறு. மூன்று புறமும் இந்தியப் படையும் தேசத்துரோகிகளும் சூழ்ந்து நிற்க, எந்தக் கொடுமைகளையும் அவர்கள் எந்த நேரத்திலும் செய்யலாம் என்ற நிலை நிலவ இப்படிப் பெருந்தொகையான மக்கள் எப்படி இந்த நிகழ்வில் அணிதிரள முடிந்தது? இவ்வளவு பெரும் துணிச்சல் எப்படி வந்தது? இங்கு தான் மக்கள் சக்தி என்ற அற்புதம் முளைவிட்டு கிளைபரப்பி பெரும் விருட்சமாகிறது.

மக்கள் உணர்வு கொண்டு எழுச்சி பெறும்போது அதை எந்தச் சக்தியாலும் அச்சுறுத்த முடியாது, எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது, எந்த சக்தியாலும் அழித்துவிடமுடியாது. இது காலாதி காலமாக உலகம் கண்ட யதார்த்தம். இந்தியப் படையின் அச்சுறுத்தல்களோ மிரட்டல்களோ தியாகி திலீபனின் உண்ணா விரதத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்வதைத் தடுக்க முடியவில்லை. வெஞ்சினம் கொண்டு விடுதலைக்காக உயிரையும் கொடுப்போம் என்று சபதமிட்டதை தடுத்து விட முடியவில்லை.
இவ்வாறே கோணாவில் முதல் மாவீரர் தினத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு உணர்வெழுச்சியில் சங்கமமானதை எந்தக் கொடியவர்களாலும் தடுக்க முடியவில்லை.

இது மட்டுமல்ல, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றபோது சிறீலங்கா வான்படையின் கிபிர் மிக் விமானங்கள் தொடர்ந்து வட்டமிட்டன. தாழப்பறந்து பயங்கர ஒலி எழுப்பி மிரட்டின. ஆனால் ஒரு குழந்தை கூட அந்த இடத்தை விட்டு அகலவில்லை எந்த ஒருவரும் அஞ்சி ஓடவில்லை. ஆம், வீரச்சாவுகள் எங்கள் மக்களை துயரத்தில் தோய வைக்கின்றன. ஆனால், துவண்டு போக வைக்கவில்லை. துணிச்சல் ஊட்டுகின்றன இதயங்களுக்கு உரமூட்டி எழுச்சி பெற வைக்கின்றன. அவை அச்சத்தைத் தூக்கியெறிந்து ஆக்கிரோசத்தை உருவாக்கின்றன. மக்கள் இதய பூர்வமாக எழுச்சி பெறும்போது அவர்கள் எந்தப் பயங்கரத்துக்கும் துணிச்சலாக முகம் கொடுப்பார்கள் என்பதற்கு வன்னியில் இடம் பெற்ற முதல் மாவீரர் தினம் ஒரு நல்ல உதாரணமாகும்.

நா.யோகேந்திரநாதன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு

---> திரு.யோகரட்ணம் யோகி / 2007
 

1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணாநோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் வாச மலர் ஒன்று வாடிக்கிடக்கின்றது. யாழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

திருமலைச் சந்திரனுடன் பலர் இப்பாடலை பாடினார் இந்தியப் படை இங்கு நிலைகொண்டிருந்த வேளை தமிழ்நாட்டில் புதுவை அண்ணரின் முயற்சியால் புயல் கால இராகங்கள் அந்நியர் வந்து புகல் என்ன சூதி, களத்தில் கேட்கும் கானங்கள், பாசறைப் பாடல்கள், என்பன ஒலிப்பேழைகளாக வெளிவந்தன. 1990 இல் யாழ்ப்பாணத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற ஒலிப்பேழை வெளியீட்டுடன் பல ஒலிப்பேழைகள் வெளிவரத் தொடங்கின வேங்கைகளின் விடுதலை வேதங்கள் என்ற ஒலிப்பேழைக்காக புதுவை அண்ணரால் எழுதப்பட்ட பாடலை தலைவர் மாவீரர் நாளுக்குரிய பாலடலாகக் வேண்டுமென விரும்பியதையடுத்து அந்தப் பாட்டில் சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான பாடலாக வெளிவந்தது.

கண்ணனின் இசையில் வர்ண இராமேஸ்வரனுடன் பலர் அதை பாடினர். அதில் முதல் நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே… ஏன்றிருந்த வரி பின்பு மாவீரர் நினைவொலி நேரம் மாற்றப்பட்டபோது வல்லமை தந்துமே என மாற்றப்பட்டது. இந்ந மாற்றப்பட்ட வடிவமே இன்று நாம் கேட்கும் பாடலாகும். மாவீரர்களை புதைக்கத் தொடங்கிய பின்னே மாவீரர் மயானம் சுடுகாடு, மாவீரர் துயிலுமில்லமென அழைக்கப்பட்டது. 1990 இல் மாவீரர் விபரப் பட்டியலை கூராக்கும் பணி தலைவரால் என்னிடம் தரப்பட்டது.

மாவீரர் படங்கள் அவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டன. மாவீரர் விபரங்கள் அப்போது ஈழமுரசு செய்தித் தாளில் வெளியிடப்பட்டு எம்மிடம் இருந்து. தவறுகள் திருத்தப்பட்டன. இராதயன் அண்ணரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அங்கு மாவீரர் படங்களை தாங்கிய மாவீரர் ஏடு ஒன்று அச்சிடப்பட்டது. தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை அதிலிருந்த தகவல் தவறுகள் காரணமாக அதனை வெளியிட வேண்டாமென தலைவர் கூறியதையடுத்து அது வெளியிடப்படவில்லை.

1990இல் மாவீரர் நாளுக்காக தலைவர் முதன்முதலில் உரை நிகழ்த்தினார். அன்றிலிருந்து அவரது மாவீரர் நாள் உரை தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளை அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்து ஒரு கொள்கை உரையாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.

அந்த உரைக்கு உலகெங்கும் மிகுந்த மதிப்பு தரப்படுகின்றது. 1991ஆம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கண்ணன் வர்ண இராமேஸ்வரன் குழுவினர் மாவீரர் மேடையில் நின்று முதன்முதலில் மாவீரர் நினைவுகூரற் பாடலை பாட கோட்டையிலிருந்து சிங்களப்படை ஓடியது. அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கேணல்.பானு அவர்களால் அங்கிருந்து அதன் தாங்கியுடனையே கோண்டுவரப்பட்ட மணி மூலம் நினைவொலி எழுப்பப்பட அங்கு கூடியிருந்தோர் எல்லோரும் வீரம் பெருமிதம் கவலை என பல்வேறு உணர்வுகளுன் கண்ணீர் மல்க மாவீரரை நினைவு கூர்ந்த அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கையில் மெய் சிலிர்க்கின்றது.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர் நாள் மரபாகி வந்த கதை

 

வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக்  குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன.

அத்துடன் இலங்கைத்­தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளி­யாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்­வேறு நாடுகளில்  யூதர்கள் என்ற காரணத்­துக்காக கொல்லப்­பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்­குள்ளாக்கி வைத்துள்ளனர்  எனக் குறிப்பிட்ட அவர் ஒடடு­மொத்தமாக யூத இனம் தாம் சந்­தித்த இன அழி­வு­களை வர­லா­றா­கப் பதிவு செய்­வ­தில் காட்­டிய அக்­க­றையை விலா­வா­ரி­யாக விப­ரித்­தார். அத­னைப் போலவே ஈழ­நா­தம் காட்­டும் அக்­க ­றையை குறிப்­பி­டத்­தக்க விட­யம் எனப் பாராட்­டி­னார்.

இறுதி யுத்­தம் முடிந்து பதி­னோரு ஆண்­டு­கள் கழிந்து விட்­டன. இன்­ன­மும் இனப்­ப­டு­கொ­லைக்­குள்­ளாக்­கப்­பட்ட தமது உற­வு­கள் பற்­றிய பதி­வு­களை எம்­மி­னம் பூர­ணப்­ப­டுத்­த­ வில்லை. இறுதி நாட்­க­ளில் நடை­பெற்ற வீரச்­சாவு விப­ரங்­கள் கூட முழு­மைப்­ப­டுத்­தப் ப­ட­வில்லை. இந்த விட­யங்­க­ளில் யாரா­வது அக்­கறை காட்ட முனைந்­தால் தலை­யில் குட்டி அம­ர­ வைக்­கும் போக்­கி­னையே சிலர் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். வர­லாற்றை மாற்றி எழு­தும் பிர­கி­ரு­தி­கள் தமது கற்­ப­னை­களை ஓரிரு சம்­ப­வங்­க­ளில் சோடித்து இணை­யத்­த­ளங்­கள், முக­நூல்­க­ளில் உலாவ விடு­கின்­ற­னர். லூக்­காஸ் சாள்ஸ் அன்­ரனி என்ற இயற்­பெ­ய­ரைக்­கொண்ட மாவீ­ர­ருக்கு சீலன் எனப் பெயர் வைத்­த­வன் தானே என்­றும் தான் ஒரு மூத்த உறுப்­பி­னர் என்­றும் அண்­மை­யில் ஒரு­வர் இணை­யத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.மூத்த உறுப்­பி­னர் என்று சொல்­வ­தற்கு அவர் தலை நரைக்­கும் வரை காத்­தி­ருந்­தார்  போலும்.

வர­லாற்­றில் நடை­பெ­றும் திணிப்­புக்­கள் என்ற விட­யத்­தில் நாம் எச்­ச­ரிக்­கை­யா­கத் தான் இருக்­க­வேண்­டும். அந்த விட­யத்­தில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­கள் பற்­றி­யும் குறிப்­பிட்­டா­க­வேண்­டும். ஏனெ­னில் இன்­றைய நிலை­யில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளின் செயற்­பா­டு­கள்,முடி­வு­கள் தொடர்­பாக தீர்­மா­னிக்­கும் உரிமை தமக்கே உள்­ளது என்ற நினைப்பு சில­ரி­டம் ஊறி­விட்­டது போல் உள்­ளது.

விடு­த­லைப்­பு­லி­க­ளின் முதல் மாவீ­ரர் சங்­க­ரின் வித்­து­டல் தமி­ழ­கத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. (கொள்ளி வைத்­த­வர் அப்­பையா அண்­ணர்) இரண்­டா­வது,மூன்­றா­வது மாவீ­ரர்­க­ளான லெப்.சீலன் மற்­றும் ஆனந்­தின் உட­லங்­கள் யாழ்.போத­னா­வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எப்­ப­டியோ தக­வல் அறிந்த சீல­னின் தாயார் தனது மக­னின் உடலை தன்­னி­டமே கைய­ளிக்­க­வேண்­டு­மென பொலி­ஸா­ரி­டம் வேண்­டிக்­கொண்­டார். அவ் வேண்­டு­கோளை பொலி­ஸார் நிரா­க­ரித்­த­னர். ஊர்­கா­வற்­து­றைப் பகு­தி­யி­லேயே பொலி­ஸா­ரால் இவ்­விரு உடல்­க­ளும் எரி­யூட்­டப்­பட்­டன. வர­லாற்­றுச் சம­ரான 1983 ஜூலை  திரு­நெல்­வே­லி­யில் வீரச்­சா­வெய்­திய லெப். செல்­லக்­கிளி அம்­மா­னின் வித்­து­ட­லைப்  புலி­களே கொண்டு சென்­ற­னர். நீர்­வே­லிப் பகு­தி­யில் இவ் வித்­து­டல் விதைக்­கப்­பட்­டது. அன்­றைய கால­கட்­டத்­தில் இவ் விட­யம் பகி­ரங்­கப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. சுவ­ரொட்­டி­கள் மூலமே இவ்­வி­ட­யம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் ஓராண்டு நினைவு நாளை யொட்­டியே அவ­ரது வீரச்­சா­வுச் சம்­ப­வ­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

முதல் மாவீ­ரர் சங்­கர்
அன்­றைய கால­கட்­டத்­தில் இரு­வ­ரின்  பாது­காப்­புக் கருதி சங்­க­ரின் வீரச்­சாவை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ ரான நித்­தி­யா­ னந்­த­னை­யும், அவ­ரது துணை­வி­யார் நிர்­ம­லா­வை­ யும் கைது செய்ய இரா­ணு­வத்­தி­னர் யாழ். நாவ­லர் வீதி­யி­லுள்ள அவர்­க­ளது வீட்­டுக்­குச் சென்­ற­னர். ”27.10 1982 அன்று இடம்­பெற்ற சாவ­கச்­சேரி பொலி­ஸ் நிலை­யத் தாக்­கு­த­லில் காய­ம­டைந்த சீலன்,புலேந்­தி­ரன். ரகு (குண்­டப்பா) ஆகி­யோர்  இவர்­க­ளது வீட்­டி­லேயே  தங்­க­வைத்து சிகிச்­சை­ ய­ளிக்­கப்­பட்­ட­னர்” என்ற தக­வல் படை­யி­ன­ருக்­குக் கிடைத்­தி­ருந் தது. படை­யி­னர் இவர்­க­ளது வீட்டை முற்­று­கை­ யி­டச்  சென்ற போது அங்­கி­ருந்த சங்­கர் அந்த முற்­று­கை­யி­லி­ருந்து தப்ப முயன்­றார்.படை­யி­ன­ரின் துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தில் வயிற்­றில் காய­ம­டைந்த அவர் கைலா­ச­பிள்­ளை­யார்  கோவி­ல­டிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்­து­கொண்­டி­ருந்­தார் அப்­போது  யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வ­னும் பின்­னா­ளில் 18 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஈழநாதம் நாளிதழின்  பிரதம ஆசிரியராக விளங்கிய வருமான பொ .ஜெயராஜ் . அவர் சங்­க­ரைக்­கண்­டார். ஏற்­க­னவே அறி­மு­க­மா­யி­ருந்த சங்­கரை தனது துவிச்­சக்­கர வண்­டி­ யில் ஏற்­றிக்­கொண்டு சென்­றார். யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதிரே உள்ள குமா­ர­சாமி வீதி­யி­லுள்ள 41 எண்­ணு­டைய வீட்­டுக் குக்­கொண்­டு­போ­னார். இந்­தப்­போ­ராட்­டத்­து­டன் சம்­பந்­த­மு­டைய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் பலர் பழகி வந்த இந்த வீட்­டில் இருந்த ஏனை­யோ­ரு­டன் இணைந்து சங்கரைக் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.  

அன்­றைய கால­கட்­டத்­தில் பொது வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெறு­வது முடி­யாத விட­யம். எனவே மேல­திக சிகிச்­சைக்­காக சங்­கர் தமி­ழ­கத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டார். சிவ­கு­மார் என்­னும் இயற்­பெ­ய­ரைக் கொண்ட அன்­ரனே இவ­ரைத் தமி­ழ­கத்­துக்குக் கொண்டு சென்­றார்.

 

சங்­க­ருக்­காக உண்­ணா­வி­ர­த­மி­ருந்த தலை­வர்

பொது­வாக எவ­ருமே நினைவு தப்பி வலி­யில் துடிக்­கும் போது “அம்மா ..... அம்மா .. „ என்றே அரற்­று­வ­துண்டு . ஆனால் சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்ட அந்­தச் சம­யத்­தில் சங்­கர் “ தம்பி ... தம்பி “ என்றே அரற்­றி­னார். தலை­வர் சங்­க­ரின் மன­தில் எந்­த­ள­வுக்கு ஆழ­மாக உறைந்­தி­ருந்­தார் என்­ப­தற்கு இது­வோர் சிறந்த உதா­ர­ணம். தமி­ழர்­க­ளின் விடு­த­லைக்­காக இது­வரை  36 ஆயு­தப்­போ­ராட்ட இயக்­கங்­கள் தோன்­றிய போதும் அதில் புலி­கள் மட்­டுமே வித்­தி­யா­ச­மா­கத் தெரிந்­தார்­கள் என்­றால் அதற்கு இது போன்ற உதா­ர­ணங்­களை சுட்­டிக் காட்­ட­லாம். வேறு எங்­கும் காண முடி­யாத விட­யம் இது . அந்­தப் பாசப்­பி­ணைப்பே வர­லாற்­றில் முதல் மாவீ­ர­னாக (விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின்) பெயர்  பதித்த சங்­க­ரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்­தா­மல் உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் எண்­ணத்­தைக் தலை­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யது

 

மாவீ­ரர் நாள் அறி­விப்பு

இதன் அடுத்­த­கட்­டம் தான் மாவீ­ரர் நாள் பற்­றிய அறி­விப்பு.இந்­திய இரா­ணுவம் செயற்பட்ட காலத்­தில் 1989 ம் ஆண்­டில் இந்த அறி­விப்பு மண­லாற்­றுக் காட்­டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்­திய தள­ப­தி­க­ளுக்­கும்   தெரி­விக்­கப்­பட்­டது. முத­லாம் உல­கப்­போ­ரின்போது போர்க்­க­ளத்­தில் உயிர் நீத்த வீரர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் முதன் முத­லாக ஆரம்­பிக்­கப்­பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்­கர் என்ற மூத்­த­போ­ராளி உரை­யா­ட­லொன்­றின்­போது  தலை­வ­ரி­டம் குறிப்­பிட்­டார் (இவரே பின்­னா­ளில்  விமா­னப் படை­யின் உரு­வாக்­கத்­தில் பெரும்பங்கு வகித்­த­து­டன் அதனை வழி­ந­டத்­தி­ய­வர். (இயற்­பெ­யர் வை.சொர்­ண­லிங்­கம்)

இந்த பொப்பி மலர் உதா­ர­ணமே இலங்­கை­யில் ‘சூரி­ய­மல்’ எனப்­ப­டும் சூரி­ய­காந்தி இயக்­கத்­துக்கு வழி வ­குத்­தது.
அந்­தப்­பொ­றியை சங்­கர் தட்­டியபோதே எங்­க­ளது தேசிய விடு­த­லைப் போராட்­டத்­தில் ஆகு­தி­யா­கிய போரா­ளி­க­ளுக்­கும் ஒரு நாளைப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென்ற சிந்­தனை தலை­வர் மன­தில் உரு­வா­னது  . அந்­த­வ­கை­யி­லேயே புலி­க­ளின் முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் (சத்­தி­ய­நா­தன் ) நினைவு நாளை மாவீ­ரர் நாளா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­னார் அவர். இது பற்றி குறிப்­பினை தேவர் அண்­ணா­வும் வெளி­யிட்­டி­ருந்­தார்.

 

கிழக்­கில்...!
மட்­டக்­க­ளப்­புக்­கு இந்த அறி­விப்பு  வந்­த­போது வடக்கு,கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் கட்­டம்­கட்­ட­மாக வெளி­யே­றும் நிலை­யில் இருந்­தது .முத­லா­வது தொகு­தி­யி­னர் அம்­பாறை மாவட்­டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்­றாக வெளி­யே­றி­விட்­ட­னர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்­கங்­க­ளுக்கு கூடு­த­லான ஆயு­தங்­க­ளை­யும் அவர்­க­ளால் பிடிக்­கப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­சி­யும் வழங்­கி­விட்டே  இம் மாவட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.இந்­தி­யப்­ப­டை­யி­னர். இவர்­க­ளால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டோர் திருக்­கோ­வில் மற்­றும் தம்­பி­லு­வில் ஆகிய இடங்­க­ளில் இரு பெரும் முகாம்­களை  அமைத்­தி­ருந்­த­னர் .இந்­த­நி­லை­யில்  அன்­றைய அம்­பாறை மாவட்டத்  தள­ப­தி­யாக விளங்­கிய  அன்­ரனி தலை­மை­யில் ஒரு முகா­மை­யும்   இன்­னொன்றை  அன்­றைய மட்­டக்­க­ளப்பு மாவட்ட தள­பதியாக விளங்­கிய ரீகன் தலை­மை­யி­லும்   05.11.1989 அன்று    தாக்கி கைப்­பற்­றி­னர்­பு­லி­கள்.

இந்த நிலை­யில் அம்­பா­றை­யில் அன்­ரனி முதல் மாவீ­ரர் நாளை திறம்­பட நடத்­தி­னார். திருக்­கோ­யில்  பகு­தி­யில் தள­பதி அன்­ரனி தலை­மை­யில்   போரா­ளி­கள் பாது­காப்பு வழங்க  அம்­பாறை மாவட்ட அர­சி­யல் துறை­யி­னர் நிகழ்வை நடத்­தி­னர்.
ஆனால் மட­டக்­க­ளப்பு மாவ­ட­டத்­தில் இந்­திய இரா­ணு­வம் நிலை கொண்­டி­ருந்­த­தால் பெரும்­பா­லான கிரா­மங்­க­ளில்  மாவீ­ரர்­க­ளின் படங்­கள் வைத்து தீபம் ஏற்­றப்­பட்­டது.வந்­தா­று­மூ­லை­யில் புலி­க­ளும் மக்­க­ளும் கூடி­யி­ருந்த இடத்­துக்கு எதிர்­பா­ராத வித­மாக இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­த­போ­தும் அசம்­பா­வி­தம் எது­வும் நடக்­க­வில்லை.

திரு­கோ­ண­ம­லை­யைப் பொறுத்­த­வரை இந்­திய இரா­ணு­வத்­தின் நெருக்­கடி அதி­க­மாக இருந்­தது. அவ்­வா­றி­ருந்­தும் சாம்­பல்­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்­தில் நிகழ்­வுக்­கென ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 150 க்கு மேற்­பட்ட பொதுமக்­கள் இந் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­க­ளின்  பாது­காப்­புக்­காக ஒரு அணி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலை­யி­லான சுரேஷ் என்ற போரா­ளி­யை­யும்  (பின்­னர் படகு விபத்­தில் ஆகு­தி­யா­னார் ) நிகழ்­வைப் பொறுப்­பேற்று நடந்த அர­சி­யல் பொறுப்பை ஏற்­றி­ருந்த ரூப­னை­யும் அனுப்­பி­யி­ருந்­தார் பது­மன். அன்­றைய கால­கட்­டத்­தில் சங்­க­ரின் புகைப்­ப­டம் கூட இவர்­க­ளின்  கைவ­சம் இருக்­க­வில்லை.

நிகழ்வு நடை­பெ­றும் தக­வல் அறிந்து இந்­தி­யப்­ப­டை­யி­னர் அங்கு விரைந்­த­னர். அவர்­களை எதிர்த்து புலி­கள் போரிட்­ட­னர். ஒரு பக்­கம் மோத­லில் ஈடு­பட்­டுக்­கொண்டே நிகழ்­வை­யும் நடத்­தி­மு­டித்­த­னர் .மாவீ­ரர்­க­ளின் பெற்­றோ­ரின் பாது­காப்­பைக் கருத்­திற்­கொண்டு சுருக்­க­மாக நிகழ்வு நடந்­தன. ரூபன் சுட­ரேற்றி வைத்­தார்.அதே­வேளை இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரைத் தடுக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்ட  லெப்.ரிச்­சாட்  (இரா­ம­சாமி குண­ராசா, இறக்­கண்டி, திரு­கோ­ண­மலை.)என்ற போராளி களப்­ப­லி­யா­னார். இன்­னு­மொரு போரா­ளி­யும் இந்­தச் சம­ரில் காய­ம­டைந்­தார்.மாவீ­ரர் நாளின் மாண்­பைப் பேண­வும்  மாவீ­ர­ரின் பெற்­ரோ­ரைக்­காக்­கும் முயற்­சி­யி­ லும் தன்னை ஆகு­தி­யாக்­கிய முதல்­மா­வீ­ர­னாக ரிச்­சாட்டின்  வர­லாறு அமைந்­தது.

 

வடக்­கில்..!

கிளி­நொச்சி மாவட்­டத்­தின்  நிகழ்வு பிர­தே­சப் பொறுப்­பா­ள­ராக இருந்த அத்­தா­ரின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றது. உருத்­தி­ர­பு­ரம் சிவன்­கோ­யி­ லடி, அக்­க­ரா­யன்,கிளி­நொச்சி ஆகிய இடங்­க­ளில் இந்­திய இரா­ணுவ முகாம்­கள் இருந்­த­போ­தும் இவற்­றுக்கு நடு­வில் இருந்த கோணா­வில் அ.த.க பாட­சா­லை­யில் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. வாடகை மோட்­டார் வண்­டி­யில் ஒலி­ பெ­ருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறி­விப்­புச் செய்­யப்­பட்­டது. சில வேளை இவர்­க­ளுக்கு இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரால் தொந்­த­ரவு ஏற்­ப­ட­லாம் எனக்­க­ருதி, நக­ரில் இருந்த சகல ஒலி­பெ­ருக்கி மற்­றும் வாடகை மோட்­டோர் வண்டிக­ளின் உரி­மை­யா­ளர்­கள் நிகழ்­விடத்­துக்கு அழைக்கப்­பட்­ட­னர்.

“வானம்  பூமி­யா­னது பூமி ­வா­ன­மா­னது” என்ற பெரு­மாள் கணே­ச­னின் பாடலை பின்­னா­ளில் பிர­பல எழுச்­சி­பா­ட­க­ராக விளங்­கிய S .G சாந்­தன் பாடி­னார். அடி­மைத்­த­னத்­துக்கு எதி­ரான சினி­மாப் பாடல்­களை மாண­வர்­கள் பாடி­னர்.  (சத்­தி­யமே இலட்­சி­ய­மாய் கொள்­ளடா , உள்­ளத்­திலே உரம் வேண்­டு­மடா போன்ற) “ஓநா­யும் ,சேவல்­க­ளும்” என்ற நவீன குறி­யீட்டு நாட­க­மும் மேடை­யேற்­றப்­பட்­டது.வன்­னி­யில் முதன்­மு­தல் மேடை­யேற்­றப்­பட்ட இக் குறி­யீட்டு நாட­கத்தை நா. யோகேந்­தி­ர­நா­தன் எழு­தி­யி­ருந்­தார். அன்­ரன் அன்­ப­ழ­கன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருந்­தார். மாவீ­ரர் நாளுக்­கான சுட­ரேற்­றல் முத­லான நிகழ்­வு­க­ளு­டன் மிகச் சிறப்­பான முறை­யில் அனைத்­தும் நடை­பெற்­றன.மூன்று முகாம் களி­லி­ருந்­தும் இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­தால் எதிர்­கொள்­ளத் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அசம்­பா­வி­தம் ஏது­மின்றி அனைத்­தும் நடை­பெற்­றன.

மன்­னார்ப் பிராந்­தி ­யத்­தின்  சகல மாவீ­ரர் விப­ரங்­க­ளை ­யும் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் அமு­தன் (சுரேஷ் ) தலை­வ­ரி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தார். பண்­டி­வி­ரிச்­சான் , நானாட்­டான், கறுக்­காய்க் குளம், முழங்­கா­வில் ஆகிய இடங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பண்­டி­வி­ரிச்­சான் பாட­சா­லை­யில் பிர­தே­சப்­பொ­றுப் பா­ளர் கணே­ஷின் ஏற்­பாட்­டில் நிகழ்வு நடை­பெற்­றது. கவிதை, பேச்சு, நாட­கம் என பல்­வேறு நிகழ்­வு­க­ளின் போட்­டி­க­ளும் முன்­கூட்­டியே ஏற்­பாடு செயப்­பட்­டி­ருந்­தன. நானாட்­டான் நெல் களஞ்­சி­யத்­தில் பிர­தே­சப் பொறுப்­பா­ளர் ஞானி­யின் ஏற்­பாட்­டில் நிகழ்­வு­கள் நடந்­தன. பின்­னா­ளில் தமி­ழீழ நிர்­வாக சேவை­யில் பிர­மு­க­ராக விளங்­கிய சின்­னப்பா மாஸ்­டர் இந் நிகழ்வை திறம்­ப­டச் செய்­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தார்.

கறுக்­காய்க் குளத்­தி­லும் நெற்­க­ளஞ்­சி­யத்­தி­லேயே நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பிர­தே­சப்­பொ­றுப்­பா­ளர் பாரதி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.பூந­கரி பிர­தே­சத்­துக்­கான நிகழ்வு முழங்­கா­வில் மகா வித்­தி­யா­யத்­தில் நடை­பெற்­றது. பிர­தே­சப் பொறுப்­பா­ளர் சாம் இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார். யாழ்.மாவட்­டப் பொறுப்­பா­ள­ராக  பொட்­டுவே செயற்­பட்­டார். அவர் தன்­னு­டன் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த ராஜன் (பின்­னா­ளில் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கி­ய­வர்) சூட் ( தவளை நட­வ­டிக்­கை­யின் போது வீரச்­சா­வெய்­தி­ ய­வர்) ஜக்­சன் (தற்­போது  புலம்­பெ­யர் நாடொன்­றில் வசிப்­ப­வர்) முத­லா­னோ­ரி­டம் மாவீ­ரர் நாள் அறி­விப்பு பற்­றிக் குறிப்­பிட்­டார். இந்­தி­யப் படை­யி­ன­ரின் நட­வ­டிக்கை தீவி­ர­மா­யி­ருந்­த­தால் சிறு சிறு குழுக்­க­ளாக காலத்­துக்­கேற்ப செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர் புலி­கள். நீர்­வேலி வாத­ர­வத்தை, குப்­பி­ளான், மாத­கல் போன்ற இடங்­க­ளில் இந்த நக­ரும் குழுக்­கள் பெரும்­பா­லும் தங்­கி­யி­ருந்­தன. பகி­ரங்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது சிர­ம­மென்­ப­தால்,  சுவ­ரொட்­டி­கள் அடித்து சாத்­தி­ய­மான இடங்­க­ளில் ஒட்­டு­வோம் என ராஜ­னி­டம் தெரி­வித்­தார் பொட்டு.

 

முதல் சுவ­ரொட்டி

திலீ­பன் காலத்­தில் அர­சி­யற் பணி­களை மேற்­கொண்­ட­வர் என்ற வகை­யில் நடை­மு­றைச் சாத்­தி­ய­மான விட­யங்­கள் பற்றி ராஜ­னின் அபிப்­பி­ரா­யங்­கள் கவ­னத்­திற் கொள்­ளப்­பட்­டன. ‘‘உங்­கள் சுவ­டு­க­ளில் தொட­ ரும் பாதங்­கள்’’ என்­றொரு வச­னத்தை (சுலோ­கம் என்­றும்  சொல்­ல­லாம்) எழு­திக் கொண்­டு­போய் பொட்­டு­வி­ டம் காட்­டப்­பட்­டது. அவர் அதை ஏற்­றுக் கொண்­டார். எனி­னும் மக்­கள் மன­தில் இன்­னும் ஆழ­மா­கப் பதிய வைப்­பது எப்­படி என்று சிந்­தித்­த­ வாறே தொடர்ந்து செய­லில் இறங்­கி­னார்.

எங்­கே­யா­வது கறுப்பு வர்­ணம் (பெயின்ற்) எடுத்து வரும்­படி சொன்­னார். வெளியே சென்­ற­வர்­கள் ஒரு வாளி­யில் அத­னைக் கொண்டு வந்­த­னர். வெள்­ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அரு­கில் நின்ற சூட்டை அழைத்து அவ­ரது காலின் அடிப்­பா­தத்­தில் பெயின்றை அடித்து அத்­தா­ளில் பதிய வைத்­தார். அச்­சொட்­டாக கால் பதிந்­தது. எனி­னும் அங்கு நின்ற அன்­னை­யொ­ரு­வர் இவ­ரது கால் சிறி­ய­தாக உள்­ளது; வேறொ­ரு­வ­ரின் கால் பெரி­தாக இருக்­கு­மா­யின் நன்­றாக இருக்­கும் எனத் தனது அபிப்­பி­ரா­யத்தை வெளி­யிட்­டார். அது சரி­யா­கவே இருந்­தது பொட்­டு­வுக்கு. உடனே அரு­கில் நின்ற ஜக்­ச­னின் காலில் மை பூசப்­பட்­டது. அது மிகப் பொருத்­த­மாக இருந்­தது. ராஜன் எழு­திய வச­னத்­தில் பாதங்­கள் என்ற சொல்லை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக .... (டொட் டொட்) என குறிப்­பிட்­டார் பொட்டு.

அந்த வகை­யில் தயா­ரிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டியே முதன் முத­லில் மாவீ­ரர் நாளுக்­கென மக்­க­ளின் பார்­வைக்கு வந்­தது. துவிச்­சக்­க­ர­வண்டி மூல­மாக பல்­வேறு இடங்­க­ளுக்­கும் கொண்டு சென்று ஒட்­டி­னர் புலி­கள்.


ஒதுங்­கிய இரா­ணு­வம்
புத்­தூர் முகா­மி­லி­ருந்து புறப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னரை   நாட­கக் கலை­ஞர் செல்­வம் மற்­றும் பாலன் முத­லா­னோர் வழி மறித்­த­னர். மாவீ­ரர் நாள் தொடர்­பான விட­யங்­கள் இருப்­ப­தால் வெளியே வரா­ம­லி­ருக்­கு­மாறு அவர்­கள் இரா­ணு­வத்­தி­டம் கூறி­னர். தாங்­கள் எப்­ப­டி­யும் வெளி­யேற வேண்­டி­ய­வர்­கள் தானே என்ற நினைப்­பிலோ என்­னவோ மக்­க­ளின் கருத்­துக்கு மதிப்­ப­ளித்து திரும்­பிச் சென்­ற­னர் இந்­தி­யப் படை­யி­னர்.

புலி­க­ளின் கட்­ட­ளைப் பணி­ய­க­மான மண­லாறு’ 14: முகா­மில் தேவர் அண்­ணா­வோடு இணைந்து ஏற்­பா­டு­களை கவ­னிக்­கு­மாறு தலை­வர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார். அந்த வகை­யில் பெண் போரா­ளி­கள் உட்­பட அனை­வ­ரும் உணர்­வு­பூர்­வ­மாக பணி­க­ளில் ஈடு­பட்­ட­னர். புலி­க­ளைத் தவிர வேறு எந்த விடு­தலை இயக்­க­மும் காட்­டுக்­குள் இருந்து ஒலி­பெ­ருக்கி மூலம் பாடல்­களை இசைக்க விட்டு தமது தோழர்­களை நினைவுகூர்ந்­தி­ருக்­காது.

இந்­நி­கழ்­வு­கள் நடை­பெ­றும்­போ­தும் இந்­தி­யப் படை வந்­தால் எதிர்­கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளில் தளர்ச்சி ஏதும் இருக்­க­வில்லை.

நிகழ்­வு­களை கார்த்­திக்  மாஸ்­டர் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். இவ­ருக்கு ஏற்­க­னவே காட்­டுக்­குள் வைத்தே புகைப்­ப­டக் கரு­வி­யைக் கையாள்­வது, அதன் நுணுக்­கங்­கள் என்­ப­வற்­றைக் கிட்டு கற்­பித்­தி­ருந்­தார். தலை­வ­ரின் உரை முத­லான விட­யங்­கள் அடங்­கிய நிகழ்ச்சி நிரலை சங்­கர் மற்­றும் தேவர் அண்ணா திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

1990 ஆம் ஆண்டு நள்­ளி­ரவு 12 மணிக்கு மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் ஆரம்­ப­மா­கின. 12 மணி இரு நிமி­டத்­துக்கு  சுட­ரேற்­று­மாறு விடுத்த அழைப்­புக்கு மதிப்­ப­ளித்­தி­ருந்­த­னர் மக்­கள். ஆல­யங்­க­ளில் மணி­கள் ஒலிக்க வைக்­கப்­பட்­டன. அத­னைத் தொடர்ந்து மக்­கள் சுட­ரேற்ற தலை­வ­ரின் உரை வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பா­னது. வீட்டு வாச­லில் சுட­ரேற்­றிய சம­யம் மழை பெய்­தது. அத­னால் சுடர் அணைந்து விடா­ம­லி­ருக்க குடை பிடித்­த­னர். இந்­தக் காட்சி ஒரு ஓவி­ய­ரின் மன­தில் தைத்­தது. அவர் இக்­காட்­சி­யைத் தத்­ரூ­ப­மாக வரைந்­தி­ருந்­தார். தீப­மேற்­றல், மணி­யோசை ஒலிக்­கச் செய்­தல் முத­லான விட­யங்­க­ ளெல்­லாம் கவி­ஞர் புது­வை­ அண்­ணா­வின் ஆலோ­ச­னையே. அத­னைத் தலை­வர் ஏற்­றி­ருந்­தார். மாவீ­ர­ரின் பெயரை வீதி­க­ளுக்கு சூட்­டு­வ­தும் நடை­பெற்­றது.

மாவீ­ரர் பெற்­றோ­ரைக் கெள­ர­வித்­தல் நிகழ்­வும் இந்த ஆண்­டி­லேயே ஆரம்­ப­மா­கி­விட்­டது. வலி­கா­மம் பகுதி மாவீ­ரர்களது பெற்­றோர் கோப்­பாய் ஆசி­ரிய கலா­சா­லை­யி­லும் வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யி­லும் தென்­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் டிறி­பேர்க் கல்­லூ­ரி­யி­லும் தீவ­கத்­தைச் சேர்ந்­தோர் வேல­ணை­யி­லும் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர். புதிய உடை­கள், அன்­ப­ளிப்­பு­கள் வழங்­கல், விருந்­தோம்­பல் முத­லான விட­யங்­கள் பெற்­றோரை நெகிழ வைத்­தன. தாங்­கள் இழந்த பிள்­ளை­களை அங்­கி­ருந்த போரா­ளி­க­ளின் வடி­வில் கண்­ட­னர். இந்­திய இரா­ணுவ காலத்­தில் ஒரு போராளி வீரச்­சா­டைந்­தார். அவ­ரது உடல் ஓரி­டத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. ஏதோ அனா­தை­கள் போல எங்­கள் சகாவை எரிப்­பது ஒரு போரா­ளி­யின் மன­தைத் தைத்­தது. விடு­த­லைக்­கா­கப் புறப்­பட்­ட­ வர்­கள் என்­றா­லும் அவர்­க­ளுக்­கான நிகழ்வு கெள­ர­வ­மாக நடத்­தப்­பட வேண்­டும்– எங்­கள் கட்­டுப்­பாட்­டில் ஒரு நிலம் இருக்­கு­மா­யின் தனிப் போரா­ளி­க­ளுக்­கென ஒரு சுடலை அமைக்க வேண்­டும் என ராஜன்  நினைத்­தார்.

 

துயி­மில்­லங்­க­ளின் உரு­வாக்­கம்

நெருக்­க­டி­கள் தானே புதிய சிந்­த­னை­களை தோற்­று­விக்­கும். எம்.ஜி.ஆர். இள­மை­யில் வறுமை கார­ண­மாக பட்­டினி கிடக்க வேண்­டி­யேற்­பட்­டது. அந்த வலி மன­தில் ஆழ­மா­கப் பதிந்­தி­ருந்­த­தால் தான், தாம் முத­ல­மைச்­ச­ராக வந்­த­போது சத்­து­ண­வுத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். தான் சாப்­பி­டக் கூடிய நிலை­யில் இருந்­தி­ருந்­தால் நிச்­ச­யம் கல்­வியை இடை­நி­றுத்­தி­யி­ருக்க மாட்­டார். இந்த நிலை தனது ஆட்­சி­யில் குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டக்கூடாது .  முத­லில் உண­வுக்­கா­க­வே­னும் பாட­சா­லை­க­ளுக்­குப் பிள்­ளை­கள் வரட்­டும் என நினைத்­தார்.

அது­போல் வாழைத்­தோட்­டத்­தில்  சேரி வாழ்க்­கையை அனு­ப­வித்­த­தால்­தான் ஒவ்­வொரு குடும்­பத்­துக்குத் தனித்­தனி வீடு­கள் அமைக்­கப்­பட வேண்­டு­மென்று பிரே­ம­தாஸ நினைத்­த­ப­டி­யால்­தான் வீட்­டுத் திட்­டத்­தில் அதீத அக்­கறை காட்­டி­னார். 10 லட்­சம் வீட்­டுத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னார். அதைப் போன்­றதே போரா­ளி­க­ளுக்­கான தனிச் சுடலை என்ற சிந்­த­னை­யும். ராஜன் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ரா­ன­தும் தனது எண்­ணத்­தைச் செயற்­ப­டுத்த முனைந்­தார். முத­லில் நிலம் வேண்­டுமே? சிறைச்­சா­லைத் திணைக்­க­ ளத்­துக்கு சொந்­த­மான நிலம் கோப்பாய்– இரா­ச­பா­தை­யில் உள்­ளது என்ற தக­வலை ஒரு போராளி தெரி­வித்­தார். அத­னையே போரா­ளி­க­ளின் சுட­லை­யாக்­கு­வோம் என முடி­வெ­டுத்­தார் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் ராஜன். காணி­யைத் துப்­பு­ர­வாக்­கு­தல் போன்ற பணி­க­ளில் பொ.ஐங்­க­ர­நே­ச­னின் ‘தேனீக்­கள்’ அமைப்­பைச் சேர்ந்த மாண­வர்­க­ளும் ஈடு­பட்­ட­னர். அடுத்து சுட­ லை­யை­யும் வடி­வ­மைக்க வேண்­டும். யாழ்.நக­ரப் பொறுப்­பா­ள­ராக இருந்த கமல் மாஸ்­டர் (வீரச்­சா­வ­டைந்­து­விட்­டார்) தனது பணி­ம­னைக்கு முன்­னால் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த கட்­டட வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­ வர் இருக்­கி­றார் என்று தெரி­வித்­தார். அவ­ரையே வர­வ­ழைத்து சுட­லைக்­கான வடி­வம் அமைக்­கப்­பட்­டது. வடி­வ­மைப்­பா­ளர் கோரி­ய­படி கந்­தர்­ம­டத்­தி­லி­ருந்த பொறி­யி­ய­லா­ளர் பங்­க­ளிப்­பும் கிடைத்­தது. ஏற்­க­னவே அறி­மு­கம் இல்­லா­த­போ­தும் இரு­வ­ரும் ஆர்­வ­மு­டன் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். பொற்­பதி வீதி­யி­லுள்ள கட்­ட­டத் தொழி­லா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பில் நடந்த பணி­க­ளில் உடலை எரிப்­ப­தற்­கான மேடை­யும் அடங்­கி­யி­ருந்­தது.

இதன்­பின்­னர் வீரச்­செய்­தி­ய­வர் ஒரு கிறிஸ்­த­வர். அவரை எப்­படி எரிப்­பது என்ற பிரச்­சினை. அது­வும் தனிச் சுட­லை­யில் ஏன் எரிப்­பான் என்­பது அடுத்த கேள்வி. விவ­கா­ரம் எழுந்­த­தும் ராஜன் அங்கு சென்­றார். ‘‘பொதுச் சுட­லை­யில் கண்ட காவாலி, கழி­ச­றை­க­ளை­யும் எரித்­தி­ருப்­பா­ர்­கள். எங்­கள் மகனோ புனி­த­மான மாவீ­ரர். காவா­லி­களை எரித்த இடத்­தில் இவ­ரை­யும் எரிப்­பதை ஏற்­க­மாட்­டார்­கள் தானே?” எனக் கேட்­டார். யதார்த்­தத்­தைப் புரிந்­த­னர் பெற்­றோர். மேடை­யில் இவ­ரது சட­லம் எரிப்­பதை ஒளிப்­ப­ட­மாக எடுத்து தலை­வ­ருக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. ‘‘தனி மயா­னம் நல்­ல­து­தான்; நாங்­கள் ஏன் எரிக்க வேண்­டும்? புதைக்­க­லாமே?’’ இந்­தக் கேள்வி  தான் வித்­து­டல்­க­ளைப் புதைக்­கும் வழக்­குக்கு அத்­தி­பா­ரம். அடுத்­த­தாக வீரச்­சா­வெய்­து­ப­வ­ரின் வீட்­டுக்கு சென்­ற­போது அங்­கும் பிரச்­சினை எழுந்­தது. ஏன் எங்­கள் பிள்­ளை­யைச் சுட­லை­யில் எரிக்­கா­மல் புதைக்க வேண்­டும்? என்று கேட்­ட­னர். நீங்­கள் மக­னின் நினைவு எழும் போதெல்­லாம் அந்த இடத்துக்­குச் சென்று கும்­பி­ட­லாம். அழ­லாம். பூப்­போ­ட­லாம் என்று விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

வர­லாற்­றில் துயி­லு­மில்­லத்­தில் முதன் முத­லாக விதைக்­கப்­பட்­ட­வர் என்ற வர­லாறு சோலை என்ற மாவீ­ர­ருக்­குக் கிடைத்­தது. மாவீ­ரரை விதைக்­கு­முன் வாசிக்­கப்­ப­டும் வாச­கங்­க­ளை­யும் (மாவீ­ரர் பெயர் தவிர்த்­தது )புதுவை அண்­ணாவே எழு­தி­னார்.


மாவீ­ரர் பதி­வு­கள்

இந்­தக்­கா­லப் பகு­தி­க­ளிலே மாவீ­ரர் பணி­மனை முழு அள­வில் செயற்­பட ஆரம்­பித்­தது. இந்­தி­யப் படை­யி­ன­ரின் வரு­கைக்கு முன்­னர் மாவீ­ரர்­க­ளின் விப­ரம் பேணப்­பட்­டி­ருந்­தது.  எனி­னும் இந்­தி­யப் படை­யி­ன­ரின் காலத்­தில் புதி­தாக இணைந்து கொண்­டோர் பற்­றிய விவ­ரம் தலை­மைக்­குத் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அந்­தக் காலத்­தி­லேயே இணைந்து அக்­கா­லப் பகு­தி­யி­லேயே சிலர் மாவீ­ர­ரா­கி­யும் இருந்­த­னர். எனவே இவ்­வா­றான விட­யங்­க­ளைத் தெரி­விக்­கும்­படி பகி­ரங்க அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது. இதற்கு பொன்.பூலோ­க­சிங்­கம் என்ற சட்­டத்­த­ர­ணி­யின் பங்­க­ளிப்பு காத்­தி­ர­மா­ன­தாக இருந்­தது.  அவர் நாள்­தோ­றும் தினக்­கு­றிப்பு (டயரி) எழு­தும் பழக்­க­மு­டை­ய­வர். பத்­தி­ரி­கை­க­ளில் வரும் மாவீ­ரர் இழப்பு,  பொது­மக்­கள் இழப்பு (படையினர் மற்­றும் இன­வா­தி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டவை) குறித்து அவர் எழு­திய குறிப்­பு­களே மாவீ­ரர் பட்­டி­யலை கணி­ச­மான அளவு சரி­யாக்க உத­விற்று.  தாவ­டி­யில் தும்­புத் தொழிற்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட விமா­னக் குண்­டு­ வீச்­சில்  லூக்­காஸ் என்­ப­வர் மாவீ­ர­ரா­னார். ஆனால் இந்த மாவீ­ரர் பற்­றிய விவ­ரம் எவ­ருக்­கும் தெரி­யாது. நாவ­லப்­பிட்­டி­யைச் சேர்ந்­த­வர் என்று மட்­டுமே தெரி­யும்.

1990 இல் ஈழ­நா­தம் நாளி­தழ் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது வீர­வ­ணக்க விளம்­ப­ரங்­கள் வெளி­வந்­தன. தங்­கள் பிள்­ளை­களை, உற­வு­களை, நட்­பு­களை நினை­வு­கூர வச­தி­யான சில­ரால் மட்­டுமே முடிந்­தது. அதே­சம்­ப­வங்­க­ளில் வீரச்­சா­வெய்­திய ஏனைய மாவீ­ரர்­களை எவ­ரும் நினை­வு­கூ­ர­வில்லை. இத­னைக் கண்­ணுற்ற ஒரு போராளி அப்­போ­தைய அர­சி­யல் தலை­மையை வகித்த மாத்­த­யா­வி­டம் இவ்­வி­ட­யம் பற்­றிக் குறிப்­பிட்­டார். நாளாந்­தம் அதே நாளில் வீரச்­சா­வெய்­தி­யோர் விவ­ரம் வெளி­யி­டப்­பட வேண்­டும் என்ற ஆதங்­கத்­தைத் தெரி­வித்­தார். வரு­டம் 365 நாளில் மட்­டு­மல்ல 4 வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றை­வ­ரும் (லீப்­வ­ரு­டம் ) பெப்­ர­வரி 29 இல் கூட  மாவீ­ரர் விவ­ரம் உண்டு என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இதற்­கென இயங்­கி­வந்த பணி­மனை இரண்டு மாவீ­ரர்­க­ளின்  தந்­தை­யான பொன்.தியா­கம் அப்­பா­வின் பொறுப்­பில் ஆரம்­பிக்­கப்­பட்டு மாவீ­ரர் பணி­ம­னை­யு­டன் இணைக்­கப்­பட்­டது. (பின்­னர் இவர் மூன்று மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யா­னார். பள்­ள­ம­டு­வில் இவ­ரது மக­ளும் வீரச்­சா­வ­டைந்­தார்) பெய­ரில், திக­தி­யில், முக­வ­ரி­யில் என பல்­வேறு தவ­று­க­ளு­டன் இருந்த பட்­டி­யல்­கள் தியா­கம் அப்­பா­வின் முயற்­சி­யால் திருத்­தப்­பட்­டன. மாவீ­ரர் நிகழ்­வு­கள் பற்­றிய சுற்­று­நி­ரு­பங்­கள் இந்­தப் பணி­ம­னை­யி­னால் விடுக்­கப்­பட்­டன. இந்­தப்­ப­ணி­மனை கோரும் விவ­ரங்­களை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என பிராந்­தி­யத் தள­ப­தி­க­ளுக்­கும் தலை­வ­ரும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தார். எந்­தெந்­தத் துயி­லு­மில்­லங்­க­ளில் யார் ,யார் விதைக்­கப்­பட்­டார்­கள், வித்­து­டல் கிடைக்­காத யார் யாருக்கு எங்­கெங்கு நினை­வுக்­கல் உள்­ளன போன்ற முழு விவ­ரங்­க­ளும் இந்­தப்­ப­ணி­ம­னை­யில் இருந்­தது.இதன் மூலம் மிக­வும் காத்­தி­ர­மான பணியை செய்­து­வந்­தார் பொன் தியா­கம் அப்பா.

 

‘‘தாயகக் கனவுடன்..”

1992 ஆம் ஆண்­டுக்­கான மாவீ­ரர் நாள் ஏற்­பா­டு­கள் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் தலை­வர் தலை­மை­யில் நடந்­தது. அப்­போது மக­ளிர் அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கிய ஜெயா ஒரு  ஆலோ­ச­னையை முன்­வைத்­தார். மாவீ­ரர் பெற்­றோ­ரும் போரா­ளி­க­ளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்­றார். உடனே தலை­வர் புது­வை­யண்­ணா­வைப் பார்க்க கையைப் பொத்தி பெரு­வி­ரலை உயர்த்­திக் காட்­டி­னார் புதுவையண்ணா.
ஈழ­நா­தம், விடு­த­லைப் புலி­கள், சுதந்­தி­ரப் பறவை வெளி­வந்த மாவீ­ரர்­கள் பற்­றிய கட்­டு­ரை­களை தனி­யான நூல்­க­ளாக வெளி­யிட வேண்­டும் என்ற அறி­வ­னின் யோச­னை­யும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது. துயி­லு­ மில்­லத்­துக்கு வரு­வோர் தமது பிள்­ளை­க­ளின் நினை­வாக வீடு­க­ளில் நாட்­டு­வ­தற்கு அவர்­க­ளின் கல்­ல­றை­கள் மற்­றும் நினை­வுக் கற்­க­ளுக்கு முன்­னால் தென்னை போன்ற பயன்­தரு மரங்­களை வைக்க வேண்­டும் என்று பொருண்­மிய மேம்­பாட்டு நிறு­வ­னத்­தி­ன­ரால் வைக்­கப்­பட்ட யோச­னை­யும் ஏற்­கப்­பட்­டது. இந்த யோசனை இன்று பல்­வேறு வகை­யி­லும் பின்­பற்­றப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மான விட­யம்.

ஜெயா­வின் கருத்தை உட­ன­டி­யாக செய­லாக்­கி­னார் புது­வை­யண்ணா. அது­தான் ‘‘தாய­கக் கன­வு­டன்’’ என்று ஆரம்­பிக்­கும் மாவீ­ரர் பாடல். மன­தைப் பிழி­யும்  இப்­பா­டல் இன்­று­வரை மாவீ­ரர் குடும்­பத்­தி­னர், முன்­னாள் போரா­ளி­கள்­மற்­றும் தமிழ் மக்­கள் மன­தில் நிலைத்து நிற்­கி­றது. கண்­ணன் இசை­ய­மைக்க வர்­ண­ரா­மேஸ்­வ­ரன் குர­லில் ஒலித்த பாடல் இது. கோப்­பாய் துயி­லு­மில்­லத்­தில் தனக்­குப் பக்­கத்­தில் நின்று நேரில் அத­னைப் பாட­வேண்­டும் என்று அப்­போ­தைய அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ளர் தமிழ்ச் செல்­வன் வர்­ண­ரா­மேஸ்­வ­ர­னின் வேண்­டிக் கொண்­டார். ஒலி­பெ­ருக்­கி­யி­லும் இந்­தப்­பா­டல் இசை­யு­டன் ஒலித்­தது.

முதன்­மு­த­லாக இவ்­வ­ரி­க­ளைக் கேட்ட மாவீ­ரர் குடும்­பத்­தி­னர் கதறி அழு­த­னர். இப்­பா­ட­லின் ஒலி­நா­டாவை ஒரு போரா­ளி­யி­டம் (கரும்­ப­றவை) வழங்­கிய புது­வை­யண்ணை முதன் வரி­க­ளைக் கேட்­கும்­போது உங்­க­ளுக்கு நினை­வில் வரும் சம்­ப­வங்­க­ளை­யும் கருத்­துக்­க­ளை­யும் எழு­தித் தாருங்­கள் என்­றார். அந்த விட­யம் வெளிச்­சம் இத­ழில் வெளி­வந்­தது. ஒரு மாவீ­ர­னின் தாயா­ரான மல­ரன்­னை­யும் அன்­றைய மாவீ­ரர் நாள் குறித்து கட்­டுரை எழு­தி­யி­ருந்­தார்.


மாறிய நேரம்
1992 மாவீரர் நாள் பொதுச்­சு­டரை தமிழ்ச்­செல்­வன் ஏற்­றி­னார்.1991 இல்  இதனை மாத்­தயா ஏற்­றி­யி­ருந்­தார். மாவீ­ரர் பாட­லில் வரும் ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற வரி ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ எனப் பின்­னா­ளில் மாற்­றப்­பட்­டது. ஏனெ­னில் முன்­னர் நள்­ளி­ர­வி­லேயே மாவீ­ரர் நாள் நினைவுகூரப்­பட்­டது. பின்­னரே தற்­போதுள்ள மாலை 6.05 க்கு மாவீ­ரர் சுடர் ஏற்­றும் முறை வழக்­கத்­துக்கு வந்­தது . தற்­போ­தைய நேரமே முதல் மாவீ­ர­ரான சங்­கர் வீரச்­சா­வெய்­திய கணம்,

2009 மே 15 ஆம் நாள் வரை 27 ஆயி­ரம் அள­வில் மாவீ­ரர்­க­ளின்  விவ­ரம் கிடைத்­தன. இதன் பின்­னர் தர­வு­க­ளைப் பேணவோ வழங்­கவோ இய­லக் கூடிய நிலை­யில் சூழல் அமை­ய­வில்லை.

 

 

https://www.meenagam.com/மாவீரர்-நாள்மரபாகி-வந்த/

 

Edited by நன்னிச் சோழன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.