Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தது சினோபெக் நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தது சினோபெக் நிறுவனம் | Sinopac Opens First Petrol Station

எரிபொருள் இறக்குமதி 

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் Sinopec நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கையில் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தது சினோபெக் நிறுவனம் | Sinopac Opens First Petrol Station

இந்த ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சியின் விலைக்கு அமைய Sinopec எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/sinopac-opens-first-petrol-station-1693438188

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சீனா.... இலங்கையில் அகல கால் வைக்கின்றது.
அதுகும்.. இந்தியாவின் கனவான பெற்றோலியத் துறையை  எடுத்தமை, 
கடுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விலையை குறைத்த சினோபெக் !

sinopec.jpg

சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது.

சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக 3 ரூபா குறைவாக லீற்றர் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சினோபெக் நிறுவனம் தயாராகி வருகின்றது.

இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் சினோபெக் நிறுவனம் கடந்த மே மாதம் கையெழுத்திட்டது.

இதன்மூலம் சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான 20 ஆண்டுகால உரிமம் வழங்கப்பட்டுள்ளது

ஏலவே, இரண்டு எரிபொருள் கப்பல்கள் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள நிலையில், குறித்த நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

இதன்மூலம் கட்டம் கட்டமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாட்டில் திறக்கப்படவுள்ளன.

https://thinakkural.lk/article/271125

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அதுகும்.. இந்தியாவின் கனவான பெற்றோலியத் துறையை  எடுத்தமை,

இந்தியாவின் எரிபொருள் நிலையம் ஏற்கனவே உள்ளதென்று எண்ணுகிறேன்.

6 hours ago, ஏராளன் said:

ஏலவே, இரண்டு எரிபொருள் கப்பல்கள் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள நிலையில், குறித்த நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

இவர்களது எரிபொருட்களை எங்கே சேமித்து வைக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சீனா.... இலங்கையில் அகல கால் வைக்கின்றது.
அதுகும்.. இந்தியாவின் கனவான பெற்றோலியத் துறையை  எடுத்தமை, 
கடுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சீனா நல்லாக் காசைக் காரியாக்கட்டும் என்று இந்தியா தனக்குள் சிரித்தபடி கவனித்துக்  கொண்டிருக்கின்றது.......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

சீனா நல்லாக் காசைக் காரியாக்கட்டும் என்று இந்தியா தனக்குள் சிரித்தபடி கவனித்துக்  கொண்டிருக்கின்றது.......!   😂

சுவி எப்படி கரியாகும்?லாபம் இல்லாமல் எப்படி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

சுவி எப்படி கரியாகும்?லாபம் இல்லாமல் எப்படி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்?

இவர்கள் மூன்று ரூபா குறைத்து விக்கும்பொழுது, IOC இன்றிலிருந்து விலையை 13 ரூபாவால் (92 octane) அதிகரித்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்குதென்று. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

இவர்கள் மூன்று ரூபா குறைத்து விக்கும்பொழுது, IOC இன்றிலிருந்து விலையை 13 ரூபாவால் (92 octane) அதிகரித்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்குதென்று. 

The Ceylon Petroleum Corporation (CEYPETCO) says it has increased fuel prices. The price revision comes into effect from midnight today (Aug. 31).

The revised prices are as follows:

• 92 Octane Petrol - Rs. 361 (increased by Rs.13)
• 95 Octane Petrol - Rs. 417 (increased by Rs. 42)
• Auto Diesel - Rs. 341 (increased by Rs. 35)
• Super Diesel - Rs. 359 (increased by Rs. 1)
• Kerosene - Rs.231 (increased by Rs.5)

Lanka Indian Oil Corporation (LIOC), the local subsidiary of the Indian multinational oil and gas company, also announced its decision to raise fuel prices in line with the revised rates of CEYPETCO.

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருட்களின் விலைகளை அறிவித்தது சினோபெக்

சினோபெக் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  எரிபொருட்களின் விலைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி,

பெற்றோல் 92 – 358.00 ரூபா
பெற்றோல் 95 – 414.00 ரூபா
ஓட்டோ டீசல் – 338.00 ரூபா
சூப்பர் டீசல் – 356.00 ரூபா
மண்ணெண்ணெய் – 231.00 ரூபா

sinopec.jpg

https://thinakkural.lk/article/271279

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Cruso said:

இவர்கள் மூன்று ரூபா குறைத்து விக்கும்பொழுது, IOC இன்றிலிருந்து விலையை 13 ரூபாவால் (92 octane) அதிகரித்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்குதென்று. 

ஏற்கனவே இருந்த சேமிப்புக்கு கொழுத்த லாபம்.

அவர்களும் கூட்டத்தானே செய்வார்கள்.

12 hours ago, MEERA said:

The Ceylon Petroleum Corporation (CEYPETCO) says it has increased fuel prices. The price revision comes into effect from midnight today (Aug. 31).

The revised prices are as follows:

• 92 Octane Petrol - Rs. 361 (increased by Rs.13)
• 95 Octane Petrol - Rs. 417 (increased by Rs. 42)
• Auto Diesel - Rs. 341 (increased by Rs. 35)
• Super Diesel - Rs. 359 (increased by Rs. 1)
• Kerosene - Rs.231 (increased by Rs.5)

Lanka Indian Oil Corporation (LIOC), the local subsidiary of the Indian multinational oil and gas company, also announced its decision to raise fuel prices in line with the revised rates of CEYPETCO.

5 hours ago, ஏராளன் said:

எரிபொருட்களின் விலைகளை அறிவித்தது சினோபெக்

சினோபெக் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  எரிபொருட்களின் விலைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி,

பெற்றோல் 92 – 358.00 ரூபா
பெற்றோல் 95 – 414.00 ரூபா
ஓட்டோ டீசல் – 338.00 ரூபா
சூப்பர் டீசல் – 356.00 ரூபா
மண்ணெண்ணெய் – 231.00 ரூபா

sinopec.jpg

https://thinakkural.lk/article/271279

வியாபாரத்தில் முதலிடம் பிடிப்பதற்கும் பிரபல்யமாவதற்கும் லீட்டருக்கு 3 ரூபாவரை குறைத்து விற்கிறார்கள் போல இருக்கிறது.

கூடியளவு பெற்றோல் விற்கப்படும் போது குறைந்தளவு வருமானம் வந்தாலும் பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே இருந்த சேமிப்புக்கு கொழுத்த லாபம்.

அவர்களும் கூட்டத்தானே செய்வார்கள்.

நேற்றைய தகவல்களின்படி தங்களுக்கு ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாயையை விட குறைந்த லாபம்தான் கிடைக்குதென்று அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் சினோபக் எப்படி மூன்று ரூபாய்கள் குறைத்து விட்கிறார்கள்? இதெல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் திடடம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முதல் (QR code) கோட்டா வும் நிறுத்தி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

வியாபாரத்தில் முதலிடம் பிடிப்பதற்கும் பிரபல்யமாவதற்கும் லீட்டருக்கு 3 ரூபாவரை குறைத்து விற்கிறார்கள் போல இருக்கிறது.

வியாபாரத்தில் "விட்டுப்பிடிப்பது." என்று ஒரு சொல்வழக்கு உண்டு. கணிசமான வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக்கொண்டபின், விட்ட நட்டத்தை அவர்களிடமிருந்து சேர்த்து எடுப்பார்கள். வாடிக்கையாளரும் அதை பெரிது படுத்த மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle

May be pop art

May be an image of text

May be a doodle of text

May be an illustration of text

சிரிப்பு வர வைக்கும்... பெற்றோலிய கருத்தோவியங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, satan said:

வியாபாரத்தில் "விட்டுப்பிடிப்பது." என்று ஒரு சொல்வழக்கு உண்டு. கணிசமான வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக்கொண்டபின், விட்ட நட்டத்தை அவர்களிடமிருந்து சேர்த்து எடுப்பார்கள். வாடிக்கையாளரும் அதை பெரிது படுத்த மாட்டார்கள்.

இந்த விலை குறைப்பில் பெரிய தாக்கமொன்றுமில்லை. இவர்கள் பழைய விலைக்கே எரிபொருட்களை கொண்டு வந்து விடடார்கள். இவர்கள் விநியோகிக்க தொடங்கிய முதல் நாளே விலையேற்றம். இதனால் தற்போதைய விலையேற்றத்தின்மூலம் இவர்களுக்கு ஒரு பில்லியன் ரூபாய்க்கு மேல் லாபம் என்று அறிய கிடைக்கின்றது. இன்னொன்றும் அறிய கிடைக்கின்றது. அதாவது கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் (Money  Laundering ) வேலையும் இந்த திடத்தின்மூலம் அரங்கேற்றப்படுகின்றதாம். எனவே இங்கு நடைதான் என்ற பேச்சுக்கே இடமில்லை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Cruso said:

இந்த விலை குறைப்பில் பெரிய தாக்கமொன்றுமில்லை. இவர்கள் பழைய விலைக்கே எரிபொருட்களை கொண்டு வந்து விடடார்கள். இவர்கள் விநியோகிக்க தொடங்கிய முதல் நாளே விலையேற்றம். இதனால் தற்போதைய விலையேற்றத்தின்மூலம் இவர்களுக்கு ஒரு பில்லியன் ரூபாய்க்கு மேல் லாபம் என்று அறிய கிடைக்கின்றது.

On 1/9/2023 at 09:12, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே இருந்த சேமிப்புக்கு கொழுத்த லாபம்.

18 hours ago, தமிழ் சிறி said:

May be a doodle

May be pop art

May be an image of text

May be a doodle of text

May be an illustration of text

சிரிப்பு வர வைக்கும்... பெற்றோலிய கருத்தோவியங்கள். 😂

இந்த ஓவியங்களைப் பார்த்து சும்மா சிரித்துவிட்டு மட்டும் போகமுடியாது.

மக்கள் சிந்திக்கவும் வேண்டும்.

ஆனாலும் அந்த சிந்தனைகள் வரக் கூடாது என்பதற்காக இன மத ரீதியாக மக்களை திசை திருப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

May be an image of text

May be an image of text that says 'Ûu morning FUEL PRICES O FUEL PRICES BUS FARES FOOD PRICES Sudeen'

"வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் 
நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும் 
கோல் உயர கோன் உயர்வான்."

ஒளவையாரின் இந்தப்   பாடல்...  எண்ணை விலை உயர்வுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

மேலே குறிப்பிடட கார்டூனில் முக்கியமான ஒன்றை விட்டுவிடடார்கள். நாளையில் இருந்து எரிவாயுவின் விளையும் அதிகரிக்கப்போகின்றது. இனி எல்லா பேக்கரி, சமைத்த உணவுகளும் விலையில் பெரிய அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். ஆனால் இலங்கையில் பணவீக்கம் மட்டும் பூச்சியத்துக்கு வந்து விட்ட்து. என்ன கணக்கோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

எரிவாயுவின் விலை ஏற்றத்தை,  நேற்று அறிவித்ததாக நினைக்கின்றேன்.
ஆனபடியால்.... அதனைப் பற்றிய கருத்தோவியங்கள் நிச்சயம்  நாளைய பத்திரிகைகளில் 
இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.🙂

May be an image of text

May be a graphic of text

May be a graphic of one or more people, trumpet, clarinet, speaker, saxophone and text

May be an image of water heater and text

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2023 at 02:54, Cruso said:

மேலே குறிப்பிடட கார்டூனில் முக்கியமான ஒன்றை விட்டுவிடடார்கள். நாளையில் இருந்து எரிவாயுவின் விளையும் அதிகரிக்கப்போகின்றது. இனி எல்லா பேக்கரி, சமைத்த உணவுகளும் விலையில் பெரிய அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். ஆனால் இலங்கையில் பணவீக்கம் மட்டும் பூச்சியத்துக்கு வந்து விட்ட்து. என்ன கணக்கோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம். 

May be a doodle of text

May be a black-and-white image

May be a graphic

@Cruso நீங்கள் எதிர்பார்த்த... எரிவாயு குவளையும்   இன்றைய  கருத்தோவியத்தில்  வந்து விட்டது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of segway, skateboard, minions and text

May be an image of laundromat and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் எரிபொருள் பற்றிய படங்களையே போடுகிறார்கள்.

வேடிக்கையாக இருந்தாலும் மக்களை நினைக்க வேதனையாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் இந்த நிலைக்கு மக்களும் காரணம் எனும்போது சினமாகவும் இருக்கிறது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் சினோபெக் எரிபொருள் நிறுவனம்

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது முக்கிய பங்கை சினோபெக் நிறுவனம் வகித்து வருகிறது.

இந்த நிலையில், உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/274501

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

Published By: VISHNU

26 SEP, 2023 | 08:04 PM
image
 
IMG_4156.jpg

IMG_4136.jpg

IMG_4190.jpg

IMG_4168.jpg

IMG_4162.jpg

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(26) கொழும்பு, ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கைக்கான சீனத்தூதுவர் சீ சென்ஹொங் மற்றும் சினோபெக் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யாங் ஜுன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.

 (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

https://www.virakesari.lk/article/165526

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.