Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை தொல்பொருள் திணைக்களம் மதித்து நடக்கவில்லை - முல்லைத்தீவு நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 AUG, 2023 | 05:27 PM
image
 

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக இன்று வியாழக்கிழமை (31) திகதி யிடப்பட்டிருந்தது. அந்த வகையிலே இன்றைய தினம் (31) குருந்தூர் மலை தொடர்பிலான AR/673/18 என்கின்ற வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. 

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்ததோடு ஆலய நிர்வாகம் சார்பாக  நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதே வேளையிலே தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர். 

இதன்போது கட்டளையை வழங்கிய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கட்டளை வழங்கியுள்ளார்.

IMG_20230831_130627.jpg

IMG_20230831_130447.jpg

IMG_20230831_092856__1_.jpg

https://www.virakesari.lk/article/163597

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதிக்கு தலை சுகம் இல்லை என்று ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் சொன்னதாக செய்தி வாசிச்ச ஞாபகம். இப்ப பார்த்தால் முழு நீதிமன்றத்துக்குமே தலை சுகம் இல்லையா?

தொல்பொருள் திணைக்களம் இலங்கையில் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால்பட்டது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நீதிபதிக்கு தலை சுகம் இல்லை என்று ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் சொன்னதாக செய்தி வாசிச்ச ஞாபகம். இப்ப பார்த்தால் முழு நீதிமன்றத்துக்குமே தலை சுகம் இல்லையா?

தொல்பொருள் திணைக்களம் இலங்கையில் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால்பட்டது தானே.

சிங்கள பவுத்த மயமாக்கல் என்று வரும்பொழுது அது நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு அப்பாட்பட்ட்து. 

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி குறித்து நீதிமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

குருந்தூர்மலை விவகாரம் : தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பாதுகாக்கத் தவறியுள்ளதாக முல்லைநீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகத்திற்கு இருந்தும், குருந்தூர்மலை தொடர்பில் நீதிமன்றால் இதற்குமுன் வழங்கப்பட்ட கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர்நாயகம் சரிவரப் பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளையை மீறி தொடர்ந்தும் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.

அதற்கமைய, முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் கட்டளையே நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1347664

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை விவகாரம் - நீதிமன்று வழங்கிய கட்டளை!
 

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு நீதின்று கட்டளை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக நேற்று (31) திகதியிடப்பட்டிருந்தது.

அந்த வகையிலே நேற்று (31) குருந்தூர் மலை தொடர்பிலான AR/673/18 என்கின்ற வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்ததோடு ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளையிலே தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன்போது கட்டளையை வழங்கிய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கட்டளை வழங்கியுள்ளார்.


 

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-
 

https://tamil.adaderana.lk/news.php?nid=177086

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன தீர்ப்பு?

ஒன்று, பணிப்பாளரை கூப்பிட்டு காரணம் கேட்டு, நீதிமன்ற அவமதிப்புக்கு பதிலளிக்க சொல்லியிருக்க வேண்டும்.

அடுத்தது, தொல்பொருள் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையை சீல் வைத்து, பிக்குவை வெளியேற்ற உத்தரவு போட்டிருக்கவேண்டும்.

ஏன் இது நடக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இதென்ன தீர்ப்பு?

ஒன்று, பணிப்பாளரை கூப்பிட்டு காரணம் கேட்டு, நீதிமன்ற அவமதிப்புக்கு பதிலளிக்க சொல்லியிருக்க வேண்டும்.

அடுத்தது, தொல்பொருள் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையை சீல் வைத்து, பிக்குவை வெளியேற்ற உத்தரவு போட்டிருக்கவேண்டும்.

ஏன் இது நடக்கவில்லை?

நீங்கள் லண்டனில் இருந்து, என்னவும் சொல்லலாம்.
நீதிபதி முல்லைத்தீவில் இருக்கிறாருங்கோ....
அவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் லண்டனில் இருந்து, என்னவும் சொல்லலாம்.
நீதிபதி முல்லைத்தீவில் இருக்கிறாருங்கோ....
அவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? 😎

அது ஸ்ரீ லங்கன் அரசு அமைத்த நீதிமன்றும், பதிவியில் அமர்த்தி சம்பளம் கொடுக்கும் நீதிபதியும் எல்லோ...

தமிழ் ஈழ நீதிமன்று அல்ல.  😤

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தில் றிசாத் பதியுதீன், மன்னார் நீதிமன்றத்தில் எப்படி நடந்து கொண்டார், மன்றத்தையும், நீதிபதியையும் எப்படி அச்சுறுத்தினர் என்பதையும் தெரிந்து கருத்து வைப்போம். "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி." சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் 98% ஒற்றுமையுண்டு என்று அவர்கள் சொல்வது இதை குறித்தே. தமிழரின் நிலங்களை அபகரிப்பது, உடைமைகளை சூறையாடுவது, மதம் மாற்றுவது, வரலாற்றை திரிப்பது. இன்னும் ஏன் இவர்களிருவரும் எங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்க விரும்புகிறார்கள் என்பதன் உண்மை புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நாட்டின் ஜனாதிபதி  யாரோ ஒரு பிக்கனை சந்தித்து ஆசீர்வாதம் பெறச்சென்றபோது தான் எப்போதும் பெளத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்குவேன் என்று உறுதிமொழி கொடுத்தே அந்த பிக்கனின் ஆசீர்வதம் பெற்றதாக செய்திகளில் வந்தது.

பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு மதத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏனைய மதங்களை புறந்தள்ளு நோக்கத்துடன்  இப்படியான ஒரு வார்த்தைப்பிரயோகத்தை வெளிப்படையாகவே செய்யக்கூடுமென்றால் அந்த நாட்டில் உண்மையான நீதி எங்கே இருக்கப்போகிறது. அப்படி பார்த்தால் புறந்தள்ளப்பட்ட அந்த மக்களை ஆட்சி செய்வதற்கு அந்த ஜனாதிபதிக்கு எந்தவிதத்திலும் உரிமையும் கிடையாது. 

சிறிலங்காவில் காவாலி பிக்கன்மார் வரிஞ்சு கட்டிகொண்டு வந்து நாட்டின் அரசிலில் தலையிடுவதினால் ஏற்படப்போகும் தாக்கத்தை அடுத்த தலைமுறை உணரும் காலம்  வெகுதூரத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனை உருவாக்கியது பிக்குகளும் சில அரசியல்வாதிகளுமே என்று மைத்திரி உண்மையை வெளிப்படுத்த, இனவாதிகளின் சிகரங்கள், அப்படியான கருத்து வைப்போரையும் தலைவர் பிரபாகரன் துதி பாடுவோரையும் சிறையில் அடைக்கவேண்டுமென ஆலோசனை வழங்கியிருக்கின்றனரென்றால் நாடு எவ்வளவு நகைப்புக்கிடமாகிக்கொண்டிருக்கிறது.  தலைவர் பிரபாகரனாற்தானாம் நாட்டில் இரத்த ஆறு ஓடியது. அப்படியென்றால்; அவர் இல்லாத போதும், இரத்த ஆற்றில் நீந்த, வீதியெங்கும் நின்று துடிப்பது யார்?மீண்டும் இரத்த ஆறு ஓடும், இனக்கலவரம் வெடிக்கும் என மிரட்டுவது யார்? மீண்டும் என குறிப்பிடுவோரே முன்னையதற்கும் காரணம் என்பதை விளங்கிக்கொள்ள இவர்களுக்கு அறிவு காணாதோ அல்லது தம்மை குறிப்பிடமுதல் அதை திசை மாற்றி மறைகின்றனரோ? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியலமைப்புக்கும் ஜனநாயக கோட்பாடுகளுக்கும் அப்பால் நாட்டை வெகு சீக்கிரமாகவே  100 சத வீதம்  ஒரு சிங்கள பெளத்த நாடாக மாற்றிவிடும் மறைமுக திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருவதன்  ஒரு அங்கமாகவே இந்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.  வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக அனைத்து  பூர்வீக தமிழர் பிரதேசத்திலும்  நாடுபூராகவும் சிங்களமக்களின் இனப்பரம்பலையும் அவர்களின் குடியேற்றத்தையும் உறுதிசெய்ய சிங்கள தலைவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள்.

அவர்களின் அரசியல் யுத்திகளால்  தமிழ் அரசியல்வாதிகள் சிந்தனைக் குருடர்களாக்கப்பட்டு தமிழினத்துக்குள் கட்சி பிளவு,  பிரிவினைவாதம், பிரதேசவாதம் அனைத்தும் தலைதூக்கி நிற்கிறது. எமது இளைஞர்கள், சிறியோர் போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்பட்டு விட்டார்கள். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போய் இப்போது விகாரை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.