Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலிலும் உலக தரப்பிலும் தற்போது சனல் 4 ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆவணப்பட தொகுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் பின்னணியில் இலங்கையின் பல முக்கிய அரசியல் வாதிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

குறித்த ஆவணப்படத்தில் இலங்கையின் முக்கிய புலனாய்வு அதிகாரியாக இருந்த நிசாந்த டி சில்வாவினுடைய கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை

கேள்வி

ஏன் நீங்கள் இலங்கையில் இருக்காமல் இங்கு வந்திருக்கின்றீர்கள்?

பதில்

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினர், கடற்படை புலனாய்வு பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மரண அச்சுறுத்தல் விடுத்தனர்.

இலங்கையின் முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி | Easter Attack Channel 4 Viral Video Pilliyan

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட விவகாரமே நான் கையாண்ட விடயங்களில் முக்கியமானது.

இந்த விசாரணைகளின் போது அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் மிகவும் மோசமான செயற்பாடுகளிற்காக பெயர் பெற்ற திரிபோலி பிளாட்டுன் குறித்து அவர் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தின.

நான் திரிபோலி குழுவை சேர்ந்த ஐந்து நபர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்தேன். அந்த தொலைபேசி இலக்கங்கள் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டன.

சிஐடிக்கு அழைக்கப்பட்ட கோட்டாபய

நான் தொலைபேசி ஆவணங்கள் உட்பட பல விடயங்களை ஆராய்ந்தேன். இடங்களை கண்டுபிடிக்க முயன்றேன். அவர் கண்டுபிடித்த ஆதாரங்கள் லசந்த படுகொலை செய்யப்பட்ட அன்று காலை அவரது வீட்டிலிருந்து திரிபோலி குழுவை சேர்ந்தவர்கள் அவர் கொல்லப்படும் இடம்வரை பின்தொடர்ந்ததை உறுதி செய்தன.

இலங்கையின் முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி | Easter Attack Channel 4 Viral Video Pilliyan

பலர் கோட்டாபய ராஜபக்சவே லசந்த படுகொலையின் பின்னணியில் இருந்தார் என சந்தேகப்படுகின்றனர். தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆவணங்களை ஆராய்ந்து அந்த சந்தேகம் சரியானது என்பதை உறுதி செய்தேன்.

ஆகவே நான் கோட்டாபய ராஜபக்சவை சிஐடிக்கு அழைத்தேன். அது ஒரு துணிச்சலான நடவடிக்கை. அதிகாரத்தில் இல்லாத போதிலும் கோட்டாபய ராஜபக்ச அச்சத்தை ஏற்படுத்தும் நபராக காணப்பட்டார்.

முக்கிய இடங்களில் செல்வாக்கு உள்ள நண்பர்கள் அவருக்கு இருந்தனர். கோட்டாபய ராஜபக்ச என்னிடம் நீங்கள் ஏன் என்னை லசந்த விக்கிரமதுங்க கொலைதொடர்பில் சந்தேகநபர் என குறிப்பிட்டுள்ளீர் என கேட்டார்.

சனல் - 4 ஊடகம்

அதற்கு நான் தேவையற்ற விடயங்களை செய்யவில்லை தேவையான விடயங்களை மாத்திரம் செய்கின்றேன் என தெரிவித்தேன். நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என தெரிவித்தேன்.

இலங்கையின் முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி | Easter Attack Channel 4 Viral Video Pilliyan

நான் உங்களை சந்தேகநபராக பெயரிட்டுள்ளேன் என தெரிவித்தேன். கோட்டபாய என்னை பற்றி அதிருப்தியடைந்தவராக காணப்பட்டார்." என நிசாந்த தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயங்களை சனல் - 4 ஊடகம் வெளியிடுவதற்கு முன்னர் எமது லங்காசிறியியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெளிவு படுத்தியிருந்தார்.

https://tamilwin.com/article/easter-attack-channel-4-viral-video-pilliyan-1693990069

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டிவி ஒளிபரப்புக்கு முன்னராகவே, அமெரிக்க, பிரிட்டிஷ், சுவிஸ் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து முடிவுக்கு வந்துவிட்டன. 

செப்டம்பர் மாத ஐநா அமர்வுக்கு முன்னதாக இது வெளியிடப்பட்டது முக்கியத்துவம் மிக்கதாக தெரிகிறது. 

ஓடுவதுக்கு இடமில்லாத, வகையில், இறுகி கொண்டு வரும் வலையினால், படுபாதக கொலைகாரர்கள், தண்டனை பெறுவார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என கோட்டாவிடம் தெரிவித்த நிசாந்த சில்வா - லசந்த கொலை விசாரணையின் போது நடந்தது என்ன?

Published By: RAJEEBAN

06 SEP, 2023 | 12:19 PM
image
 
channel-4

20 வருடங்களாக நிசாந்த டி சில்வா இலங்கையின் முக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவராக காணப்பட்டார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து 2015 இல் அகற்றபட்டதும் புதிய அரசாங்கம் முன்னைய  அரசாங்கத்தின் காலத்தில்  இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் பொறுப்பை நிசாந்த  டி சில்வாவிடம் ஒப்படைத்தது.

அவர் ஐரோப்பிய நாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கும் ஹேக்கின் மக்கள் தீர்ப்பாயத்திற்கும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.

எனினும் அவர் தனது கதையை ஊடகங்களிற்;கு தெரிவித்திருப்பது இதுவே முதல் தடவை.

கேள்வி

ஏன் நீங்கள் இலங்கையில் இருக்காமல் இங்கு வந்திருக்கின்றீர்கள்?

பதில்- எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இராணுவபுலனாய்வு பிரிவினர் -கடற்படை புலனாய்வு பிரிவினரும் முன்னாள் ஜனாதிபதியும் மரண அச்சுறுத்தல் விடுத்தனர்.

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட விவகாரமே நிசாந்த சில்வா கையாண்ட விடயங்களில் முக்கியமானது.

இந்த விசாரணைகளின் போது அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் மிகவும் மோசமான செயற்பாடுகளிற்காக பெயர் பெற்ற திரிபோலி பிளாட்டுன் குறித்து அவர் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தின.

நான் திரிபோலி குழுவை சேர்ந்த ஐந்து நபர்களின்  தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்தேன் அந்த தொலைபேசி இலக்கங்கள் லசந்த விக்கிரமதுங்கவின்  படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டன என நிசாந்த தெரிவித்தார்

lasantha2.jpg

நான் தொலைபேசி ஆவணங்கள் உட்பட  பல விடயங்களை ஆராய்ந்தேன் இடங்களை கண்டுபிடிக்க முயன்றேன்  என நிசாந்த சனல் 4 க்குதெரிவித்தார்

அவர் கண்டுபிடித்த ஆதாரங்கள் லசந்த படுகொலை செய்யப்பட்ட அன்று காலை அவரது வீட்டிலிருந்து திரிபோலி குழுவை சேர்ந்தவர்கள் அவர் கொல்லப்படும் இடம்வரை பின்தொடர்ந்ததை உறுதி செய்தன.

பலர் கோட்டாபய ராஜபக்சவே லசந்த படுகொலையின் பின்னணியில் இருந்தார் என சந்தேகப்படுகின்றனர்.

தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆவணங்களை ஆராய்ந்து  அந்த சந்தேகம் சரியானது என்பதை உறுதி செய்தவர் நிசாந்த.

ஆகவே நான் கோட்டாபய ராஜபக்சவை சிஐடிக்கு அழைத்தேன் என அவர் தெரிவித்தார்.

அது ஒரு துணிச்சலான நடவடிக்கை - அதிகாரத்தில் இல்லாத போதிலும் கோட்டாபய ராஜபக்ச அச்சத்தை ஏற்படுத்தும் நபராக காணப்பட்டார்- முக்கிய இடங்களில் செல்வாக்கு உள்ள நண்பர்கள் அவருக்கு இருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ச என்னிடம் நீர் ஏன் என்னை லசந்த விக்கிரமதுங்க கொலைதொடர்பில் சந்தேகநபர் என குறிப்பிட்டுள்ளீர்  எனகேட்டார் என  நிசாந்த் தெரிவித்தார்.

Gotabaya-Rajapaksa-L.jpg

அதற்கு நான்  தேவையற்ற விடயங்களை செய்யவில்லை தேவையான விடயங்களை மாத்திரம் செய்கின்றேன் என தெரிவித்தேன் நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என தெரிவித்தேன் எனவும் நிசாந்த தெரிவித்தார்.

நான் உங்களை சந்தேகநபராக பெயரிட்டுள்ளேன் என தெரிவித்தேன் கோட்டபாய என்னை பற்றி அதிருப்தியடைந்தவராக காணப்பட்டார் என நிசாந்ததெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/163942

  • கருத்துக்கள உறவுகள்

லசந்தவை விரைவில் கொலை செய்யவேண்டும் என கோட்டா தெரிவித்தார் - ஆசாத் மௌலானா

Published By: RAJEEBAN

06 SEP, 2023 | 04:50 PM
image
 
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை நாய் என தெரிவித்து அவரை கொலை செய்யவேண்டும் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா சனல் 4 க்கு தெரிவித்துள்ளார்.

மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் லசந்த விக்கிரமதுங்க செய்திகளை வெளியிட்டமை கோட்டாபய ராஜபக்சவை கடும் சீற்றத்திற்குள்ளாக்கியது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

பிள்ளையானையும் என்னையும் அவசர சந்திப்பிற்கு அழைத்த கோட்டாபாய ராஜபக்ச லசந்தவிக்கிரமதுங்க கொலை செய்யப்பவேண்டும் என தெரிவித்தார் என சனல் 4 க்கு ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

நாங்கள் கோட்டபாயவை அவரது அறையில் சந்தித்தோம் அவரது மேசையில் சண்டே லீடர் காணப்பட்டது, என குறிப்பிட்டுள்ள  ஆசாத் மௌலானா கோட்டாபய ராஜபக்ச லசந்த விக்கிரமதுங்கவை பல்லா  நாய் என குறிப்பிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நாய்  எப்போதும் என்னுடன் மோதுகின்றது இந்த நாயை  கொலை செய்யவேண்டும் உங்களால் முடிந்தளவு வேகமாக அதனை செய்யுங்கள் என கோட்டாபய தெரிவித்தார் எனவும் மௌலானா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/163970

  • கருத்துக்கள உறவுகள்

லசந்தவை கொலை செய்த கொலையாளி பாராளுமன்றத்தில் இருக்கின்றாரா ? - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

Published By: VISHNU

06 SEP, 2023 | 07:52 PM
image
 
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலையாளி பாராளுமன்றத்தில் இருக்கின்றாரா? இது தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் மிகவும் பக்க பலமாக இருந்தவரே லசந்த விக்கிரமதுங்க, இதனால் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் யார். இந்த கொலையுடன் தொடர்புடையவர்களை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தாதா? லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலைக்காரர் இந்த சபையில் இருக்கின்றாரா? இதனை கேட்பதற்கு நான் அஞ்ச மாட்டேன். இதற்கு பதிலளியுங்கள். ஒவ்வொரு குழுக்கள், ஆயுதக் குழுக்களுக்கு நாங்கள் பயமில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/163972

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யூ மீன் பிள்ளையான், சஜித்? 🙄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

யூ மீன் பிள்ளையான், சஜித்? 🙄

அவர் கறி  வேப்பிலை ஆகி கணகாலம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இந்த டிவி ஒளிபரப்புக்கு முன்னராகவே, அமெரிக்க, பிரிட்டிஷ், சுவிஸ் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து முடிவுக்கு வந்துவிட்டன. 

செப்டம்பர் மாத ஐநா அமர்வுக்கு முன்னதாக இது வெளியிடப்பட்டது முக்கியத்துவம் மிக்கதாக தெரிகிறது. 

ஓடுவதுக்கு இடமில்லாத, வகையில், இறுகி கொண்டு வரும் வலையினால், படுபாதக கொலைகாரர்கள், தண்டனை பெறுவார்களா? 

அவர்களுக்கு வேண்டிய தேவையை பெற்று கொண்டால் நீதியாவது நியாயமாவது அதுதான் உலகு .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அவர்களுக்கு வேண்டிய தேவையை பெற்று கொண்டால் நீதியாவது நியாயமாவது அதுதான் உலகு .

இந்த முறை சுருக்கு இறுகும்.

ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு இப்ப அவர்களது குடிமக்கள் பத்துப்பேருக்கு வகை சொல்ல வேண்டியவர், முன்னால் அமேரிக்க குடிமகன்.

விசாரணை அதிகாரியை வெளீய சுவிசுக்கு, எடுத்த போது, இது இந்த விசாரணைகள் தொடர்பிலும் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

கடைசீல நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

கதிர்காமர் கொலை, மகிந்தா கம்பனி வேலை என்று எவ்வளவு பேருக்கு தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் என்ன. சிங்கள தொலைக்காட்சிகள் இவற்றை பொய் என்று நிரூபிக்க முயட்சிக்கின்றன. அத தேரான டிவி இவர் (நிஷாந்த சில்வா ) ஒரு தமிழர் என்றும் பொய் சொலவதாக காட்டிட முயட்சிக்கிறது. அதாவது அவரது பெயர் கந்தப்பா என்று கூறுகிறார்கள். இது முன்னரும் விவாதிகபடடாலும் இப்போது மீண்டும் செய்தியாக்கப்படுகின்றது. எப்படி இருந்த போதும் இப்போது எல்லோரும் சர்வதேச விசாரணையை கோருவதால் இலங்கைக்கு இது சிக்கலான விடயம்தான்.  

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கையின் வழக்கமான செயற்பாடாக இருந்தாலும் ஏதாவது ஒன்றுக்கு மறுப்பு தெரிவித்தால் பரிசீலிக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான மறுப்பு, ஒரு சாராரை சாடுவது சிந்திக்கப்பட வேண்டியது அதுமட்டுமல்ல, ஒரே தவறை பகிரங்கமாக செய்து கொண்டு எச்சரித்துக்கொண்டு எப்படி மற்றவர் மேல் குற்றம் சுமத்த முடியும்? இது இவர்களின் அறியாமை என்பதோடு மற்றவர்களை அறிவிலிகள் என்றும் தம்மைப்போல் தான் இருப்பார்கள் என நினைக்கும் மடமைத்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Cruso said:

ஆனாலும் என்ன. சிங்கள தொலைக்காட்சிகள் இவற்றை பொய் என்று நிரூபிக்க முயட்சிக்கின்றன. அத தேரான டிவி இவர் (நிஷாந்த சில்வா ) ஒரு தமிழர் என்றும் பொய் சொலவதாக காட்டிட முயட்சிக்கிறது. அதாவது அவரது பெயர் கந்தப்பா என்று கூறுகிறார்கள். இது முன்னரும் விவாதிகபடடாலும் இப்போது மீண்டும் செய்தியாக்கப்படுகின்றது. எப்படி இருந்த போதும் இப்போது எல்லோரும் சர்வதேச விசாரணையை கோருவதால் இலங்கைக்கு இது சிக்கலான விடயம்தான்.  

அதெல்லாம் வேலைக்காகாது.

இந்தியாவை ஓரமா இருந்து பார் என்று சொல்லி, சீனாவை ஒதுங்கு அந்தப்பக்கமா என்று சொல்லி, அரகாலயாவை நடாத்தி கோத்தாவை இறக்கி,  நாட்டை விட்டு திரத்தி இப்ப பெஞ்சில இருத்தி, ரணிலை ஏத்தி, வைத்திருக்கு அமெரிக்கா.

அடுத்து ரணிலை வைத்தே, கோத்தா முன்னாள், அமெரிக்கராக நாடு கடத்தப்படுவார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நிச்சயமாக கோத்தாவை ரணில் நாடு கடத்த மாடடார். ரணில் அப்படி எல்லாம் தட்க்கொலைக்கு துணியும் அளவுக்கு வர மாடடார். இப்போது அவர் எப்படி சிங்கள பவுத்த வாக்குகளை பெறலாம் எப்படி அடுத்த தேர்தலில் வெல்லலாம் என்பதே அவரது கனவு. மேலும் இப்போது கோத்தா இலங்கை பிரஜை என்பதுடன், அமெரிக்கா இன்னும் பிரச்சினைகளை முரண்பாடுகளை இலங்கை அரசுடன் ஏட்படுத்த முயலாது. வேண்டுமென்றால் கோத்தாவை சர்வதேச நீதி மன்றுக்கு இழுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Cruso said:

சர்வதேச நீதீமன்றுக்கும் இலங்கைக்கும் தொடர்பில்லை.

அதேவேளை, இலங்கைக்கு ஒரு சர்ஜரியும் தேவை. அது தமிழருக்கு மட்டுமல்ல, சிங்களவருக்கும், நாட்டுக்கும் நல்லது.

ரணில் இரண்டாண்டு பதவியில் இருப்பதே அவருக்கு போதும். அமெரிக்க சொல் பேச்சு கேட்காவிடில், அவரும் வீழ்வார்.

ஊர் பரியாரியாக, தலைமறைவாக இருந்த யுத்த குற்றவாளி, Butcher of Balkan  அந்த நாட்டு அரசாலேயே சர்வதேச விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டார்.

பிச்சைக்கார இலங்கை எம்மாத்திரம்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அன்றே விசாரணையை நீதியோடு முன்னெடுத்து இவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கியிருக்கலாம். ஒன்று அன்று மக்களிடையே செல்வாக்கு மிக்கவர்களாக இராணுவ வலுவுள்ளவர்களாக ராஜபக்ச குடும்பம் இருந்தது. மக்கள் சக்திக்கு, இவர்களின் அடாவடிக்கு பயந்து அவர்களை கைது செய்யாது தன்னிடமிருந்து இவர்களை விலத்தி வைக்கும் செயற்பாடாகவே அன்றைய ரணிலின் நடவடிக்கை இருந்தது. அதோடு விஜேஜ தாச ராஜபக்ச கோத்தாவை காப்பாற்றுவதிலே கவனமாக இருந்தார். அதனாலேயே எதுக்கு ரணில் அஞ்சினாரோ அது நடந்தது. இப்போ நிலைமை வேறு. அமெரிக்க தூதுவர் அடிக்கும் சூறாவளிப் பயணத்தை பாத்தால் இந்திய இராணுவத்தை விட அமெரிக்க இராணுவமே உதவிக்கு வரலாம் போற் தெரிகிறது. இலங்கை இராணுவத்தை தன் கைக்குள் அடக்கப்போறா போலுள்ளது. அன்று விடுதலைப்புலிகளை முறியடிக்க ரணில் பின்னிய வலை இன்று சிங்களத்துக்கே திரும்பும் போலிருக்கிறதே. நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. எதற்கும் தாடியரிடம் தீர்க்கதரிசனம் கேட்டுபாக்கலாம். அதை நிட்சயப்படுத்த அவரும் உயிரோடு இருக்க மாட்டார் நானும் உயிரோடு இருக்க மாட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சனல் என்ன வெளியீட்டாலும் இலங்கையை ஒன்றும் செய்ய ஒரு நாடும் முன்வராது எத்தனை மனித புதைகுழிகள் எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள் இறுதிப்போரில் பல ஆயிரணக்கானவர்கள் இறந்தார்கள் என்ன நடந்தது ???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன சனல் என்ன வெளியீட்டாலும் இலங்கையை ஒன்றும் செய்ய ஒரு நாடும் முன்வராது எத்தனை மனித புதைகுழிகள் எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள் இறுதிப்போரில் பல ஆயிரணக்கானவர்கள் இறந்தார்கள் என்ன நடந்தது ???

திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான்.

வன்னியில், ஒட்டு மொத்த சிங்களமும் சேர்ந்து அழிக்கப்பட்டது பயங்கரவாதிகள் என்று நிற்க, இப்போது, மாத்தளைப் புதைகுழி, லசந்தா, ஈஸ்டர் என்று கிளம்ப, செய்வதறியாது திகைக்கிறார்கள்.

இதில் நம்பிக்கை தரும் ஒரே விடயம், கிட்டததட்ட 10 மேற்குலக குடிமக்கள் இறந்ததும், மேலும் சிலர் காயமடைந்ததும்.

சணல் 4 நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சொல்லியிருந்ததை கவனித்தருப்பீர்கள், மேற்கு நாட்டு புலனாய்வு அமைப்புகள்இது தொடர்பில்விசாரணை செய்தன என்று.

விசாரித்தவர்கள் சும்மாவா இருப்பார்கள். ஈஸ்டர் குண்டு வரை கோத்தா, அமெரிக்கர் என்பது முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா, மகிந்த குடும்பம் மீது சனல் 4 சேறடிக்கிறது என்ற தொனியில் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

கோத்தா, மகிந்த குடும்பம் மீது சனல் 4 சேறடிக்கிறது என்ற தொனியில் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாராம்.

வேறு என்னதான் சொல்ல முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ ராஜபக்சாக்களின் அரசியல் பயணம் அஸ்தமிக்குது என்றே தோன்றுகிறது. நாமலை ஜனாதிபதியாக்க மஹிந்தா எடுத்த முயற்சியே இவர்களுக்கு கஸ்ர காலத்தை தொடக்கியது. நானே அரசன் என்று நினைத்து ஆடும்போது நினைத்திருக்க மாட்டார்கள் இப்படி மாட்டுவோமென. வெற்றி விழா கொண்டாடும்போது அறிந்திருக்க மாட்டார்கள் தூக்கியெறியப்படுவோமென. இனி புத்தராலும் இவர்களை காப்பாற்ற முடியாது. எப்போதும் ஒரே தந்திரம் பலிக்காது. அப்படி செய்ய வெளிக்கிட்டால் அந்த தந்திரத்தில் அவர்களே சிக்கிக் கொள்வார்கள். குண்டு வெடித்து அரசை கைப்பற்றிய ருசி, வன்முறையை கிளப்பி மீண்டும் அரச கதிரையேற துடித்தவர்கள், சரியான நேரத்தில் சணல் 4 உண்மையை வெளிப்படுத்தி அடையாளம் காட்டியிருக்கிறது. இனி விதி அவர்களை பாத்துக்கொள்ளும். இல்லையேல் சிங்கள மக்களே இந்தமுறை அவர்களின் வன்முறையில் சிக்குவார்கள். 

13 minutes ago, nunavilan said:

கோத்தா, மகிந்த குடும்பம் மீது சனல் 4 சேறடிக்கிறது என்ற தொனியில் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாராம்.

இது இவர்களின் வழமையான பல்லவி என்பது உலகறிந்த விஷயம். ராஜபக்சவின் உருவச்சிலையை அடித்து நொருக்கியதை உலகமே கண்டதே. . ஏற்கெனவே மக்களால் துரத்தப்பட்டவர்களுக்கு ஏன் சேறடிக்க வேண்டும்? தூய்மையானவர்களுக்கு சேறடித்து அவர்களின் புகழை மறைக்கிறார்கள் என்று சொல்லலாம், திருடர் மாதிரி ஒளித்து ஓடியவர்கள் மேல் ஏன் சேறடிக்க வேண்டும்? ? 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

கோத்தா, மகிந்த குடும்பம் மீது சனல் 4 சேறடிக்கிறது என்ற தொனியில் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாராம்.

ஆமாம் கடும் தொனியில் ஒரு பெரிய அறிக்கையை விட்டிருக்கிறார். சானல் 4 ஐயும் விளாசி தள்ளி இருக்கிறார். அவரது சார்பு தொலைக்காட்சிகள் இதட்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்.

இதில் பாதிக்கப்படட வெளி நாட்டினர் இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்வதுதான் செய்யக்கூடிய ஒன்று. நிச்சயமாக இனி செய்வார்கள் என்று நம்பலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.