Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
08 SEP, 2023 | 08:15 PM
image
 
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 

இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர்.

குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20230908-WA0138.jpg

IMG-20230908-WA0130.jpg

IMG-20230908-WA0133.jpg

IMG-20230908-WA0128.jpg

IMG-20230908-WA0105.jpg

IMG-20230908-WA0109.jpg

IMG-20230908-WA0061.jpg

IMG-20230908-WA0064.jpg

IMG-20230908-WA0066.jpg

IMG-20230908-WA0074.jpg

IMG-20230908-WA0069.jpg

IMG-20230908-WA0080_-_Copy.jpg

IMG-20230908-WA0063.jpg

IMG-20230908-WA0115_-_Copy.jpg

IMG-20230908-WA0119_-_Copy.jpg

https://www.virakesari.lk/article/164150

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கண் துடைப்பா போகுமோ உலக நாடுகளுக்கு 
 ஆழ்ந்த இரங்கள் உறவுகளே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மனித புதைகுழியில் துப்பாக்கித் தோட்டாக்கள் - விடுதலைப் புலி பெண் போராளிகள் புதைக்கப்பட்டார்களா?

முல்லைத்தீவு மனித புதைக்குழியில் கிடைத்தது விடுதலைப் புலி பெண் போராளிகளின் எச்சங்களா?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 8 செப்டெம்பர் 2023

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இலக்கங்கள் அடங்கிய சாட்சியங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெண் போராளிகளின் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இலக்கங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

 
முல்லைத்தீவு மனித புதைக்குழி
 
படக்குறிப்பு,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இன்றைய மூன்றாம் நாள் அகழ்வு நடவடிக்கைகளின்போது இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புக்கூடுகளுடன் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மேலாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், துப்பாக்கித் தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களையும் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளுக்குக் கீழே மேலும் பல மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்தும் வகையில், இன்றைய தினம் இரண்டு எலும்புக்கூடுகளை அகழ்வாளர்கள் தோண்டி எடுத்துள்ளதுடன், அவை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் குழு வருகை

குறித்த இடத்திற்கு யாழ்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழுவொன்று, பேராசிரியருடன் வருகை தந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் உள்ளாடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் இலக்கங்கள் இன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

''இன்றைய தினம் எடுக்கப்பட்ட இரண்டு எலும்பு எச்சங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுடையது என நம்பப்படுகின்றன. அதேநேரம், முதலாவது மனித எச்சத்திலிருந்து துப்பாக்கி ரவையொன்றும் (தோட்டா), ஆடைகளுக்கான இலக்கங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதலாவது இலக்கமாக நீளமான பச்சை நிற கால் சட்டையில் 3204 என்ற இலக்கமும், அதேநேரம் முழு நீள மேல்சட்டையும், 3174 இலக்கமுடைய பெண்கள் அணியும் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, இரண்டாவது மனித எச்சமும் எடுக்கப்பட்டுள்ளது. நீளமான பச்சை நிற கால்சட்டையும், முழு நீள மேல்சட்டையும் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணியும் உள்ளாடையில் 1564 என்று இலக்கமிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் எடுக்கப்பட்டுள்ளன.

இவை இரண்டுக்கும் இடையில் துப்பாக்கி ரவைகள் (தோட்டா) எடுக்கப்பட்டுள்ளன," என காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ஆடைகளிலுள்ள இலக்கங்கள் கைகளால் கறுப்பு நிற ஊசியில் தைக்கப்பட்டடிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 
முல்லைத்தீவு மனித புதைக்குழி
 
படக்குறிப்பு,

குறித்த இடத்திற்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழுவொன்று, பேராசிரியருடன் வருகை தந்துள்ளனர்.

மனித புதைகுழியில் துப்பாக்கி தோட்டாக்கள்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்த இடமாக முல்லைத்தீவு காணப்படுகின்றது.

இலங்கையில் முப்பது ஆண்டுக் காலங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி நிறைவுக்கு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், மே 18ஆம் தேதி ஆயிரக்கணக்கான தமது உறவுகளை இலங்கை ராணுவம் கொலை செய்ததாக யுத்தத்தின் நேரடி பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள குடும்பங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றது.

இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பலர் நந்திக்கடல் பகுதியில் வைத்தே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதே இடத்தில் வைத்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

 
முல்லைத்தீவு மனித புதைக்குழி
 
படக்குறிப்பு,

முல்லைத்தீவு அருகே கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைக்குழி அகழ்வுப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

முப்பது ஆண்டுகளாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதி

இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த நந்திக்கடல் பகுதியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலேயே கொக்குத்தொடுவாய் பகுதி அமைந்துள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதியானது 1984ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இந்த மனித புதைகுழியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானது எனக் கருதப்படும் சீருடைகள் காணப்பட்டமையால், இது விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சுமார் 27 ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடமொன்றில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள காரணத்தால், காணாமல் ஆக்கப்பட்டவர்களை ராணுவத்தினர் கொலை செய்து புதைத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச மக்களால் வெளியிடப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் இலங்கை ராணுவத்திடம் மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் வினவியது.

''எம்மால் அப்படிக் கூற முடியாது. ஏனெனில், அதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் கிடையாது.

யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போதும் கிடைக்கின்றன,” என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

மேலும், “சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னரே இது எந்த காலப் பகுதிக்குச் சொந்தமான எச்சங்கள் என்பதைக் கூற முடியும்.

அத்தோடு இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்," எனவும் அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cv2jn01pqw5o

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஏராளன் said:

இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்," எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆமா  இலங்கையில் சிங்கங்கள் ஆடை உடுத்திக்கொண்டன என மகாவம்ஷம் கூறுகிறது. இவர்கள் கூறும் பதில்களை பாத்து இவர்களின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. வர வர நகைச்சுவையாளர்களாக மாறி வருகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கா, கனடா வலியுறுத்தல்

11 SEP, 2023 | 09:40 PM
image

(நா.தனுஜா)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க மற்றும் கனேடியப் பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரியவாறு முன்னெடுக்கப் படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. 

இங்கு ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையைத் தொடர்ந்து ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றினர்.

அதன்படி பேரவையில் கருத்து வெளியிட்ட அமெரிக்கப்பிரதிநிதி, இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன் ஊழல் ஒழிப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டமை உள்ளடங்கலாக இலங்கையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படும் சம்பவங்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்திய அவர், பயங்கரவாதத்தடைச்சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் மீளவலியுறுத்தினார்.

 அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான பொறிமுறையின் ஊடாக கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 அதேவேளை பேரவையில் உரையாற்றிய கனேடியப் பிரதிநிதி, இலங்கையின் அண்மையகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.

 குறிப்பாக முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் என்பன உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்குரிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைத்தல் மற்றும் பால்புதுமையின சமூகத்தினரது உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலான சரத்துக்களை நீக்கல் என்பன பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/164367

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நீதி சாத்தியமாவதற்கு தமிழ் பிரதிநிதிகளின் அழுத்தங்கள் அவசியம் - அனந்தி சசிதரன்

13 SEP, 2023 | 10:09 AM
image
 

(பாலநாதன் சதீஸ்)

மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான உலக கவனத்தை ஈர்ப்பதற்கான தங்களுடைய முழு அழுத்தத்தையும் பிரயோகிப்பதன் மூலமே சர்வதேச நீதியை பெற வழிவகுக்கும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அதிக எதிர்பார்ப்போடு போராடிக் கொண்டிருக்கின்ற பெற்றோருக்கும் தங்களுடைய பிள்ளையோ என்ற ஒரு வேதனை இருக்கிறது. இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்கின்றது போலான தோற்றத்தில் இங்கே புதைக்கப்பட்டிருக்கவில்லை.

இன்னும் நூற்றுக்கணக்கான உடலங்கள் இதற்குள் போட்டு குவிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்கின்றோம். ஏனெனில் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த ஒரு தடயமாக தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சனல் 4 வில் 269 பேருடைய கொலைகள் தொடர்பாக விவாதித்துக்கொண்டிருக்கின்ற ஒருபக்கம் மனித படுகொலையை செய்து இந்த மண்ணிலே புதைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கின்ற ஒரு விடயத்தை பேசு பொருளாக்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த மண்ணிலே வாழ்ந்தவர்கள் என்ற வகையில் இது ஒரு சூனிய பிரதேசமாக, சுற்றிவர இராணுவ முகாம்கள் தான் இருந்திருக்கிறது. இறுதி போரின் பின்னர் பெண் போராளிகளை பேருந்துகளில் ஏற்றி செல்வதனை படங்களிலும், நேரடியாகவும் பல விடயங்களை பார்த்திருக்கின்றோம். 

மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த இடத்திற்கு வந்து தங்களது ஆதரவை கொடுப்பதன் ஊடாக தான் நிறைய உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவதோடு அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதாக இருக்கும்.

தொடர்ந்தும் இவ் இடம் முழுமையாக ஆய்வுக்கு கொண்டுவர வேண்டும். எதிர்வரும் காலம் மழைக்காலம் ஆகையால் எவ்வாறு இவர்களுடைய ஆய்வுகள்  கொண்டு செல்லப்படும் என்ற கேள்வியும் இருக்கிறது. அல்லது இத்தோடு நிறுத்தி விடுவர்களா என்ற ஐயப்பாடும் இருக்கிறது. 

தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கின்ற அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் புதைகுழி தொடர்பான உலக கவனத்தை ஈர்ப்பதற்கான தங்களுடைய முழு அழுத்தத்தையும் பிரயோகித்து தான் எங்களுக்கு ஒரு சர்வதேச நீதியை பெற்றுத்தர வழிவகுக்கும் என கருதுகின்றேன்.

https://www.virakesari.lk/article/164452

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 7 ஆம் நாள் அகழ்வாய்வு : 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் விடுதலைப்புலிகளின் சைனட்குப்பியும் 2 இலக்கத்தகடுகளும் மீட்பு

13 SEP, 2023 | 07:42 PM
image
 

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13)இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஏழுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 09மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுப் பணிகளுக்கென, 5.7மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அந்த நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கடந்தவாரம் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ள முடிந்ததுடன், இந்தவாரமும் அகழ்வுப் பணியை மேற்கொள்ளவுள்ளதாகவும், தொடர்ந்து அடுத்தவாரமும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டால் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள நிதி போதுமானதாக உள்ளதாகவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13) நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம்நாள் அகழ்வாய்வில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன.

இந்த புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக, ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால், அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடவேண்டியுள்ளது.

அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும்போது, சில நாட்களில் ஓரிரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளையே அகழ்ந்தெடுக்கமுடிகின்றது.

குறித்த மனிதப்புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகளையும், தடையப்பொருட்களையும் எடுத்தாலே, இது தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும்.

எனவே குறித்த அகழ்வாய்வுப் பணிகளின் காலத்தை வரையறுக்க முடியாதுள்ளது.

ஏற்கனவே அகழப்பட்டுள்ள குழியிலிருந்து மனித எச்சங்களையும், தடையப்பொருட்களையும் முழுமையாக அகழ்வாய்வு செய்து எடுப்பதற்கு ஒரு சில வாரங்கள் நீடிக்கலாம் என நினைக்கின்றேன்.

அதனைவிட இன்னும் மேலதிகமாக குழியைத் தோண்டி அகழ்வாய்வுகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு காலம்எடுக்கும் எனக்கூறமுடியாது.

இந்தப் புதைகுழி தொடர்பிலான அறிக்கைகள், அகழ்வாய்வு செய்யும் குழுவினால், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படும்.

அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடையப்பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பிரேதசாலையில், விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாய்விற்கென 5.7மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைகப்பெற்றது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தி, புதைகுழிக்குரிய தகரப் பந்தல், தங்குமிட வசதி, மலசலகூட வசதி உள்ளிட்ட விடயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒருக்கின்ற நிதி மூலத்தை வைத்து கடந்த வாரத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,  இந்தவாரத்திலும் அகழ்வாய்வுகளை மேற்கொண்டுவருகின்றோம்.

அடுத்தவாரமும் அகழ்வாய்வுகளை மேற்கெிள்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமாகவுள்ளது.

தொடர்ந்து அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதவான் உத்தரவிடுவாரெனில் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.

எடுக்கப்பட்ட தகட்டிலக்கம் தொடர்பாக, அவை எந்தக் காலத்துக்குரியவை போன்ற விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். அதன்பின்னர் தகட்டிலக்கங்கள் தொடர்பன விபரங்கள் அறியத்தரப்படும் என்றார்.

மேலும் இந்த அகழ்வாய்வு இடம்பெறும் இடத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20221013070656_IMG_0667.JPG

IMG-20230913-WA0037.jpg

IMG-20230913-WA0030.jpg

https://www.virakesari.lk/article/164520

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2023 at 14:18, ஏராளன் said:

அத்துடன், துப்பாக்கித் தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களையும் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, ஒரு இராணுவ அதிகாரியிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, துப்பாக்கி ரவைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார். துப்பாக்கி ரவைகள் இல்லையாயின் அது இராணுவம் செய்யவில்லை என்று அர்த்தமா? அப்படியெனில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் எப்படி யாரால் இது நிகழ்த்தப்பட்டிருக்கும்? பெரிய குழிதோண்டும் வாகனங்களை பயன்படுத்தி கொலை செய்யப்பட்ட போராளிகள் பொதுமக்களின் உடல்களை இராணுவம் புதைத்ததாகவும், பெரும் நெருப்புச் சுவாலை எழுந்ததாகவும்  இறுதி யுத்தத்தில் வன்னியில் இருந்து வந்த மக்கள் அறிவித்தனர். அப்போ, யாரும் அதை கணக்கிலெடுக்கவில்லை. இது மட்டுமல்ல இன்னும் நிறைய துயரங்கள் மண்ணிலே புதையுண்டு வெளிவர துடித்துக்கொண்டிருக்கின்றன.   

  • கருத்துக்கள உறவுகள்

புதைகுழியில் தோட்டாக்கள்  கண்டுபிடிக்கவில்லை, ஆகவே இராணுவத்தை குற்றம்  சாட்ட முடியாது என்று நழுவிய இராணுவ அதிகாரி ஒருவர், இது  மனித எச்சங்கள்தானா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் இராணுவ ஊடகப்பேச்சாளர். இப்போ துப்பாக்கி தோட்டாக்கள் வெளிவந்திருக்கின்றன, இது விலங்கின் எச்சமல்ல விடுதலை கேட்டு போராடிய  போராளிகளின் உடல்கள் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவத்தின் மனித உரிமை மீறல் என பொறுப்பெடுக்குமா இராணுவம்? இதிலிருந்து விளங்குவது என்ன? நீதிமன்றம், புத்திஜீவிகள், நீர்ப்பாசன திணைக்களம் என்பன சேர்ந்து அகழ்வுப்பணியை மேற்கொள்கின்றன, உறவுகள் இது தங்களது உறவுகளாக இருக்குமோ என அங்கலாய்க்கின்றன, இவர்களது  பேச்சு இவர்களின் பொறுப்பற்ற தன்மையை விளக்குவதோடு கேள்விகளை எழுப்புகின்றன. மனித புதைகுழிக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா சம்பந்தப்பட்டவர்கள்? அல்லது அவை விலங்குகளின் புதைகுழிகள் என நிறுவப்பார்க்கிறார்களா இவர்கள்? எப்படி இத்தனை விலங்குகளின் எச்சங்கள் ஒரே புதை குழியில் வந்திருக்கும்? ஏன் அந்தபுதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்? கிரிஷாந்தி புதைகுழியில் விலங்குகளின் எச்சங்களை புதைத்து  சாதித்த அனுபவம் அவர்களை இப்படி எதிர்பார்க்கவும் சாதிக்கவும் வைக்கிறது. இவர்களின் வாயே இவர்களை காட்டிக்கொடுக்கவும் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவும் செய்கிறது. "மூடர் தம்வாயாலேயே மாட்டுவர்."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் - தவறினால் மக்கள் போராட்டத்தில் குதிப்பர் - ரவிகரன்

16 SEP, 2023 | 10:38 AM
image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முழுமையாக அகழ்ந்து, ஆய்வுசெய்யப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு உண்மைகள் வெளிக்கொணரத் தவறினால் மக்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஒன்பதுநாட்கள் இடம்பெற்ற நிலையில், செப்ரெம்பர் (15) நேற்று  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒக்ரோபர் மாத மூன்றாவது வாரத்தில் அகழ்வாய்வுகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த ஒன்பது முன்னெடுக்கப்பட்டுவந்தநிலையில், 17மனித எலும்புக்கூட்டத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இன்னும் பல மனித எலும்புக்கூடுகள் அங்கே இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இந் நிலையில் ஒன்பதுநாட்கள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றதையடுத்து, குறித்த அகழ்வாய்வுப் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதப்புதைகுழியை ஆய்வுசெய்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறு பணிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இந்த மனிதப் புதைகுழி முற்று முழுதாக அகழ்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன், இந்த மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைத் தன்மை வெளிவரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடகவிருக்கின்றது.

அத்தோடு சர்வதேச நாடுகள் இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விடயத்தில் தலையிட்டு, இந்த மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கை அரசின் பொறுப்புக் கூறலுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும்.

குறிப்பாக தற்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந் நிலையில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்து, தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களாகத் தேடப்படுபவர்கள், குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்இங்குள்ள பலருக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன.

இப்படியான சூழலில் இங்கு அகழ்வாய்வு மேற்கொள்பவர்களை நாம் நம்புகின்றோம்.

இந்த அகழ்வாய்வுகளில் உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும்.

அவ்வாறு உண்மைகள் வெளிக்கொணரத் தவறும் பட்சத்தில் மக்கள் திரண்டு போராட்டங்களை நடாத்தவேண்டிய சூழல் ஏற்படும் - என்றார்.

https://www.virakesari.lk/article/164691

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட இலக்கத்துக்குரிய போராளிகளை உறவினர், நண்பர் அறிந்திருக்க கூடும். அவ்வாறானவர்கள் யாரும் உயிரோடு இல்லையா அல்லது வெளிப்படுத்த அஞ்சுகின்றனரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்படவில்லை - முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி

Published By: VISHNU

20 SEP, 2023 | 09:00 PM
image
 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளின்போது இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எந்தவொரு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அதுகுறித்து செய்திகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் என்பன சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது அங்கு கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் 'வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் அகப்பட்டுள்ளன' என்ற பதிவொன்று ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, 'கடந்த ஏழு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் கிடைக்கவில்லை' என அவர் தெரிவித்ததாக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டியங்கிவரும் Fact Seeker தெரிவித்துள்ளது.

அத்துடன், 'கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த (13) புதன்கிழமை ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 6 ஆம் திகதியிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் இரண்டு வழக்கறிஞர்கள் அகழ்வுப்பணிகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், சிவில் பிரதிநிதிகள் சிலரும் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

ஆகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியில் குறிப்பிடுவதைப்போன்று எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை' எனவும் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா Fact Seeker க்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/165052

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்பு

Published By: DIGITAL DESK 3   23 NOV, 2023 | 10:31 AM

image

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய அகழ்வுப் பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. 

இவ் அகழ்வு பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. நாளை நான்காம் நாள் அகழ்வு பணி இடம்பெறவுள்ளது.

அத்துடன் நேற்றையதினம் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு - இ0043, O+ எனவும் மற்றுமொரு குறியீடும் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/170027

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செல்வதால் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் : அறிக்கை டிசம்பரில்

Published By: VISHNU    29 NOV, 2023 | 05:31 PM

image

ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்செயலாக வெளிவந்த கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செவல்வதாக தெரியவந்ததையடுத்து அகழ்வுப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் நிறுத்தப்படும் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதலாம் முதல் மீண்டும் ஆரம்பமாகுமென, நவம்பர் 29ஆம் திகதியான இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சடலங்களை அகழ்ந்து எடுக்கும் பணிக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“புதைகுழியானது கொக்கிளாய் - முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்திற்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை ஸ்கேன் பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பிலேயே இன்று கலந்துரையாடப்பட்டது. இந்த புதைகுழி முற்று முழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர். எனவே எதிர்வரும் வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.”

அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வைத்தியர் வெளிப்படுத்தினார்.

"இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. "

இரண்டாம் கட்ட புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்படுவதோடு இத்துடன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.  நவம்பர் 28 ஆம் திகதி வரை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து குறைந்தது 39 பேரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

தற்போது 14 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் நேற்று வெளிப்படுத்தியிருந்தார்.

கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் அளவை தீர்மானிப்பதற்காக கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களாக ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதன் முடிவுகள் மற்றும்  நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முல்லைத்தீவு நீதவான் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/170562

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 - 1996 காலப்பகுதிக்குரியவை : ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிப்பு

22 FEB, 2024 | 01:37 PM
image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைய தினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது இடம்பெற்ற வழக்கின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

IMG-20240222-WA0048.jpg

ஏற்கனவே, அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று மன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் அவர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பகுப்பாய்வின் அடிப்படையில், இது 1994ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகிறது.

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டுத் தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

இருப்பினும், அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, மீண்டும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு இந்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்புக்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கிறது என்றார். 

IMG-20240222-WA0047.jpg

IMG-20240222-WA0036.jpg

https://www.virakesari.lk/article/177034

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.