Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, goshan_che said:

மிக்க நன்றி உங்களுக்கும் தமிழாயத்துக்கும்🙏

🤣

ஏதோ அன்ரி இந்த திரியை திறந்ததால் - ஒரு அரிய தமிழ் சொல்லை தூசணம் என நினைத்து கொண்டிருந்த என் அறியாமை நீங்கியது. 

அதேபோல் கட(ய)புலி என்பது சாதிய வசவு இல்லை என்பதும்,

விடுகாலி = கட்டுபாடற்றவன் என்பதும் தெளிவாகியது.

 

காவாலி என்பது, கா(ல்)வாளி என்பதன் பேச்சுச்சொல்.
அதாவது கா(ல்)க்குடம்.

முழுக்குடம் தளும்பாது. காக்குடம் தளும்பும்.

ஆகவே, இவன் அந்த காவலிகளுடன் திரிகிறான் என்றால்.... படிப்பை தூக்கி கடாசி விட்டு, திரிபவர்கள் உடன் கூடி, அவர்கள் போலவே தெருவுல நிக்கப்போறன் என்று அர்த்தம். 😁🤣

  • Confused 1
  • Replies 84
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

😂தவறேயில்லை! இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்ல

நிழலி

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு.  காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள்,

goshan_che

நானறிந்த வரை: காப்பிலி என்பது அரபிச்சொல்லான காபிர் இன் திரிபு. ஆசியாவில் இருந்து வட ஆபிரிக்கா நோக்கி நகர்ந்த அரபிகள், நம்பிக்கையற்றவன் என்ற பொருளில் காபிர் என அப்போ முஸ்லிம் அல்லாதவர்களாக இர

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

காவாலி என்பது, கா(ல்)வாளி என்பதன் பேச்சுச்சொல்.
அதாவது கா(ல்)க்குடம்.

முழுக்குடம் தளும்பாது. காக்குடம் தளும்பும்.

ஆகவே, இவன் அந்த காவலிகளுடன் திரிகிறான் என்றால்.... படிப்பை தூக்கி கடாசி விட்டு, திரிபவர்கள் உடன் கூடி, அவர்கள் போலவே தெருவுல நிக்கப்போறன் என்று அர்த்தம். 😁🤣

நாதம் என்னப்பா விட்டத்தை வெறிச்சு பார்த்துட்டு புது புது அர்தங்கள் கொடுக்கிறியலா🤣

காவாலி என்றால் rude boy 🤣.

https://agarathi.com/word/காவாலி
 

இன்னொரு அர்த்தம் சிவனாம்🤣 (பின்ன சாம்பலை அள்ளி அப்பி கொண்டு திரிஞ்சா rude boy தானே🤣)

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, goshan_che said:

இந்த வாதம் சரியே.

ஆனால் அதன் பின் நீங்கள் சொன்ன “அவர்கள் பார்க்கும்/ கேட்கும் போது சொல்வதில்லை” என்ற கருத்து - இந்த வாதத்தை (அதாவது இது இழி சொல் இல்லை) சுக்கலாக்கி விட்டதே அன்ரி? அதைதான் சுட்டினேன்.

நான் எங்கே எழுதினேன் ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, கிருபன் said:

இதை 

“விழ இருந்த என்னை ஒரு கறுப்பன் இழுத்து நிறுத்துகிறான்.” 

என்று எழுதியிருக்கலாம்.

காப்பிலி என்பது கறுப்பர்களை இழிவாக அருவருப்புடன் குறிக்கவே தமிழர்கள் பாவிக்கின்றவர்கள். கறுப்பர்களுடன் அடிமட்ட வேலை பார்த்த எனக்கு அவர்களுடன் அன்னியோன்யமாகப் பழக நன்றாகவே தெரியும். ஆனால் பல தமிழர்கள் முதல் பார்வையிலேயே கறுப்பர்களை சந்தேகத்துடனும், பயத்துடனும் பார்ப்பார்கள். அந்த அருவருப்புப் பார்வை போலவே காப்பிலி என்ற வார்த்தைப் பிரயோகமும்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் நீக்ரோ என்று கறுப்பர்களைச் சுட்டியவர்கள் இப்போது பிளாக், ஆபிரிக்க அமெரிக்கன் என்று சொல்லுவது போல தமிழர்களும் காப்பிரி, காப்பிலி என்று சுட்டுவதைக் கைவிட்டு கறுப்பர் என்று நாகரீகமாக வெளியே அழைக்கலாம்; எழுதலாம் (உள்ளே காப்பிலி என்றே நினைக்கலாம்!)

 

ஆசான் வெண்முரசு நாவல் தொடரில் வரும் கிராதம் நாவலில் இப்படி எழுதியிருக்கின்றார்.

“யவனநாட்டிலிருந்து  திரும்பி வந்துகொண்டிருந்த காப்பிரிநாட்டு வணிகக்குழுவினர் பாலைநிலத்தில் வெற்றுடலுடன் சடைக்கற்றைசூடி சிரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த பித்தனை கண்டார்கள். அவனை அவர்கள் தங்கள் அத்திரிகள் ஒன்றின்மேல் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களின் காப்பிரிநாட்டு துறைநகர் ஒன்றுக்கு கொண்டுசென்றார்கள்.”

ஆபிரிக்காவை காப்பிரிநாடு என்றும் சீனாவை பீதர்நாடு என்றும் ஆசான் சொல்லுவதனால் காப்பிரி என்பது இன்றைய வழக்கில் நாகரீகமான வார்த்தை என்று சொல்லமுடியாது.

 

 

எனக்கும் ஆபிரிக்க நண்பர்கள் சிலர் இருக்கின்றனர். காப்பிலி என்ற சொல்லை அருவருப்புடன் தான் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது எனக்குப் புதிது. கறுப்பன் இழுத்து நிறுத்துகிறான் என்று  எழுதியிருந்தால் மட்டும் சரி என்று ஏற்றிருபிபார்களென்று நான் நினைக்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 hours ago, Kavi arunasalam said:

நீங்களே அந்தச் சொல் தவறு என்று சொல்கிறீர்கள். அந்தச் சொல் ஒருவருக்கு முன்னாலோ பின்னாலோ சொன்னாலும் தவறுதான்.  தவிர்த்திருக்கலாம்

அதைத் தானே நானும் சொல்லியுள்ளேன். நீங்களும் கோஷானும் என்னைக் குழப்புகிறீர்களே

19 hours ago, நிலாமதி said:

 

19 hours ago, நிலாமதி said:


நீங்கள் கதை எழுதியது தமிழ் மக்களுக்கு தெரிவிக்க , உங்களை விழாது   தடுத்தவனை விபரிக்க "காப்பிலி "என எழுதினீர்கள். இதை கதையின் சுவாரசியம் கருதி நம்மின மக்களுக்கு இலகுவில் விளக்கம் தர இவ்வாறு  எழுதியது சரியே ...குற்றம் காண நினைப்பவர்கள் கதையை ரசிக்காமல்  குறை காண்பார்கள்.  

நன்றி அக்கா

23 hours ago, vasee said:

தவறு என்பது தெரிந்தே செய்வது, தெரியாமல் செய்வது தவறாகாது.

தெரியாமல் செய்த தவறை உணர்ந்து அதற்காக வருந்துபவரை மேலும் மேலும் கஸ்டப்படுத்தாமல் விடுவதுதான் சரி.

இதில் வருத்துவதற்கோ வருந்துவதற்கோ ஒன்றும் இல்லை.😀

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

நன்றி.

இதில் கடைசி சொல்லு தூஷணம் என நினைக்கிறேன்.

பொதுப்படையாக அன்றி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் என்ன என அறிய ஆவல்.

ஓடுகாலி என்றால் வீட்டில் தங்காதவர்கள். விடுகாலி?

 

எம் மூரில் வங்கோலை  அறுத்த கள்ளன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அது தூஷண வார்த்தை அல்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நாதம் என்னப்பா விட்டத்தை வெறிச்சு பார்த்துட்டு புது புது அர்தங்கள் கொடுக்கிறியலா🤣

காவாலி என்றால் rude boy 🤣.

https://agarathi.com/word/காவாலி
 

இன்னொரு அர்த்தம் சிவனாம்🤣 (பின்ன சாம்பலை அள்ளி அப்பி கொண்டு திரிஞ்சா rude boy தானே🤣)

கா(ல்)வாளி, கடைசீல சபைக்குதவா முரட்டுப் பயல் (rude boy) தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 5/10/2023 at 09:06, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த நிறத்தவர் முன்னாலோ அன்றி அவர் வாசிக்கக் கூடிய ஆங்கிலத்திலோ நான் இந்தக் கதையை எழுதவில்லை. அப்படியிருக்க எப்படி தவறாகும்???

இதைத்தான் சொல்கிறேன்.👆🏼

35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எங்கே எழுதினேன் ???

 

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எம் மூரில் வங்கோலை  அறுத்த கள்ளன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அது தூஷண வார்த்தை அல்ல

நன்றி. 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/10/2023 at 21:56, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது கதைப்பது பற்றியது இல்லை ரதி. உங்கள் வீட்டிலிருந்து மூன்றாம் வீட்டில் ஒரு கறுப்பு இனத்தவர் இருந்தால் அவர்கள் பற்றிய விபரம் ஒன்றுமே தெரியாது ஒரு விடயத்தை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் எப்படிக் கூறுவீர்கள் ???? அவர்கள் வீடுக்குச் சென்று பெயரை விசாரித்துவிட்டா விடயத்தைக் கூறுவீர்கள் ???

உங்களுக்கு இது பிழை என்று தெரிந்தும் ஒரு விதண்ட வாதத்திற்கு கேட்க்கிறீர்கள் என நினைக்கிறேன் ...பக்கத்து வீட்டில்  ஒரு பிளக் பமிலி  அல்லது கறுப்பினத்தவர் புதுசாய் குடி வந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லுவேன் 

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/10/2023 at 18:25, ரதி said:

உங்களுக்கு இது பிழை என்று தெரிந்தும் ஒரு விதண்ட வாதத்திற்கு கேட்க்கிறீர்கள் என நினைக்கிறேன் ...பக்கத்து வீட்டில்  ஒரு பிளக் பமிலி  அல்லது கறுப்பினத்தவர் புதுசாய் குடி வந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லுவேன் 

எனக்கு அது பிழையாகவே  தெரியவில்லை ரதி 😃




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.