Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலில் கத்திகுத்து தாக்குதல் - இருவர் பலி

Published By: RAJEEBANvvv05 AUG, 2024 | 03:51 PM

image
 

இஸ்ரேலின் ஹொலொன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குகரையை சேர்ந்த நபர் ஒருவரே இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

66வயது யூத பெண் ஒருவரும் 80 வயது ஆணும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நான் எனது நாயுடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை நபர் ஒருவர் ஒடிவந்து முதுகில் கத்தியால் குத்தினார் என காயமடைந்த 26 வயது நபர் தெரிவித்துள்ளார்.

நான் பேருந்து தரிப்பிடத்தை நோக்கி தப்பிச்சென்றேன் கத்திக்குத்திற்கு மேலும் பலர் இலக்கானது அதன் பின்னரே எனக்கு தெரியவந்தது என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ஹெலொனில் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை இஸ்ரேலிய பிரதமர் அமைச்சரவை கூட்டத்தில் உறுதி செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/190338

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 100க்கும் மேற்பட்டவர்கள் பலி

10 AUG, 2024 | 09:36 AM
image

காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலையை இலக்குவைத்தே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அதிகாலை தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தவேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளது – பொதுமக்கள் தப்பமுடியாமல் அலறுகின்றனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/190715

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் ஆறு பணயக் கைதிகளின் உடல்கள் மீட்பு - இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன?

நடவ் பாப்பிள்வெல், அவ்ரஹாம் முண்டர், யாகேவ் புச்ஷ்டாப், அலெக்ஸ் டான்சிக், சைம் பெரி, யோரம் மெட்ஜெர்

பட மூலாதாரம்,HOSTAGE FAMILIES FORUM

படக்குறிப்பு, மேல் இடமிருந்து வலம்: நடவ் பாப்பிள்வெல், அவ்ரஹாம் முண்டர், யாகேவ் புச்ஷ்டாப், அலெக்ஸ் டான்சிக், சைம் பெரி, யோரம் மெட்ஜெர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பென்னெட்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹமாஸால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 6 பேரின் உடல்கள் காஸா முனையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் பகுதியில் இருந்து யாகேவ் புச்ஷ்டாப், அலெக்சாண்டர் டான்சிக், அவ்ரஹாம் முண்டர், யோரம் மெட்ஸ்கர், ஹைம் பெர்ரி மற்றும் பிரிட்டிஷ் - இஸ்ரேலியரான நடவ் பாப்பிள்வெல் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை அன்று வெளியான இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் அவ்ரஹாம் முண்டர் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் மீதம் இருக்கும் ஐந்து நபர்களும் இறந்துவிட்டதாக இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக பணயக்கைதிகளுள் ஒருவரான பாப்பிள்வெல் இறந்ததாக முன்பு ஹமாஸ் ஆயுதக்குழு கூறியிருந்தது.

 

பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் உடன் இணைந்து இஸ்ரேல் ராணுவப் படை, இந்த மீட்பு நடவடிக்கையை எடுத்து வந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது இவர்கள் ஆறு பேரும் உயிரோடு கடத்தப்பட்டு, பின்னர் காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக 'பணயக்கைதிகள் குடும்பங்கள் மன்றம்' கூறுகின்றது.

"இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதே, இக்குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்திற்கு தீர்வாக இருக்க முடியும். மீதம் உள்ள 109 பணயக்கைதிகளை காஸாவிலிருந்து விடுவித்து அழைத்து வருவது என்பது பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும்" என்று அந்த மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"தற்போது பேச்சு வார்த்தையில் இருக்கும் ஒப்பந்தங்களுக்கு முடிவு காண தன்னால் முடிந்த அனைத்தையும் அரசாங்கம் செய்ய வேண்டும்" என்று அந்த மன்றம் இஸ்ரேலிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காஸாவில் 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இஸ்ரேல்-காஸா இடையே இது குறித்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி வருகிறார்.

திங்கட்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடர்பான "இணைப்பு முன்மொழிவு" (bridging proposal) ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதாக பிளிங்கன் கூறினார்.

பணயக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதற்கு பிறகு, "இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு இந்த துக்கத்தை பகிர்ந்துகொள்கிறோம்" என்று செவ்வாய்கிழமை அன்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறினார்.

"அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து நாட்டிற்கு அழைத்து வரும்வரை நமது முயற்சிகளை ஒரு கணம் கூட நிறுத்தக்கூடாது", என்று இஸ்ரேல் அதிபர் கூறினார்.

கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலாவின் புறநகர்ப் பகுதிகளில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

மேற்கு கான் யூனிஸில் உள்ள இணைய விநியோக மையம் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கான் யூனிஸின் கிழக்கே உள்ள அபாசனில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் ஏஃஎப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

அக்டோபர் 7 ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் முன்னறிவிப்பின்றி நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டனர், பதிலடி கொடுக்கும் விதமாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காசா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட பாரிய தாக்குதல் : 48 மணி நேரத்தில் 61 பேர் பலி

பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் காரணமாக கடந்த 48 மணிநேர இடைவெளியில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர் 

இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் தலைமையிலான போராளிகளுடன்  போரை ஆம்பித்து பதினொரு மாதங்கள் ஆகியுள்ளன.

இராஜதந்திரங்கள்

இந்தநிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், காசாவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கும், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கும், மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திரங்கள், இதுவரை தோல்வியடைந்துள்ளன.

காசா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட பாரிய தாக்குதல் : 48 மணி நேரத்தில் 61 பேர் பலி | Israeli Military Strikes In Gaza Kill 61 48 Hours

இதற்கிடையில் ஜபாலியா நகர்ப்புற அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாகச் செயல்படும் ஹலிமா அல்-சதியா பள்ளி வளாகத்தின் மீது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனினும் வளாகத்திற்குள் இருந்த ஹமாஸ் கட்டளை மையத்தை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

காசா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட பாரிய தாக்குதல் : 48 மணி நேரத்தில் 61 பேர் பலி | Israeli Military Strikes In Gaza Kill 61 48 Hours

காசா நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் இன்று இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.

காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

https://tamilwin.com/article/israeli-military-strikes-in-gaza-kill-61-48-hours-1725730591

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிரம்பை கொல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் யார்? அவர் பின்னணி என்ன? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ரியான் வெஸ்லி ரூத் கட்டுரை தகவல் எழுதியவர், ஆன் பட்லர் பதவி, பிபிசி செய்தியாளர் 24 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது. புளோரிடாவில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவத்தைத் தொடர்ந்து, ரியான் வெஸ்லி ரூத் என்பவரை சந்தேகத்துக்குரிய நபராக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. புளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பிவிட்டார் என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சந்தேகிக்கப்படும் 58 வயதான ரியான் வெஸ்லி வட கரோலினாவைச் சேர்ந்தவர். அவரது சொத்து பதிவுகளின்படி, அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வட கரோலினாவில் கழித்தார். ஆனால், அவர் சமீபத்தில் ஹவாயில் வசித்து வந்தார்.   ரியான் வெஸ்லியின் சில செயல்பாடு, அவரது அரசியல் நிலைப்பாட்டின் கலவையான பிம்பத்தை பிரதிபலிக்கிறது. யுக்ரேன் ரஷ்யா போரில் தீவிர யுக்ரேனின் ஆதரவு நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர் பல சட்ட சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளார். மேலும் அவரைப் பற்றி நமக்கு கிடைத்த சில தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,PALM BEACH COUNTY SHERIFF'S OFFICE/REUTERS படக்குறிப்பு, புதரில் ரூத் மறைந்திருந்த இடத்தில் ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ரியான் வெஸ்லி ரூத் என்ன செய்தார்? ஞாயிற்றுக்கிழமை அன்று புளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் சர்வதேச கோல்ஃப் மைதானத்திற்கு ரூத், ஏகே 47 ரக துப்பாக்கியுடன் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் ஒரு புதரில் மறைந்திருந்ததாக எஃப்.பி.ஐ(FBI) சந்தேகிக்கிறது. அந்த புதரில் இருந்து ஆயுதம், ஸ்கோப்,கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் ஆகியவற்றை எஃப்.பி.ஐ மீட்டுள்ளது. ரூத் தனது காரில் தப்பிச் சென்ற போதிலும், அவர் ஓட்டிச் சென்ற கருப்பு நிற நிசான் காரை ஒரு நபர் புகைப்படம் எடுத்தார். அவர்தான் இந்த விவகாரத்தின் முக்கிய சாட்சி. அந்த காரின் அடையாளம் வெளியிடப்பட்டு அவசர எச்சரிக்கை விடப்பட்டது. கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு அதிகாரிகள் ரூத்தின் வாகனத்தை பின்தொடர்ந்ததாக பாம் பீச் கவுண்டியின் காவல் உயர் அதிகாரி ரிக் பிராட்ஷா கூறினார். அந்த நபர் இறுதியில் இன்டர்ஸ்டேட் 95 சாலையில் நிறுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.   ரூத்தின் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்துவது என்ன? பிபிசி வெரிஃபை ரூத்தின் பெயருடன் பொருந்தும் சமூக ஊடக கணக்குகளை கண்டறிந்தது. ரஷ்யாவுக்கு எதிராக போரிட வெளிநாட்டு வீரர்கள் யுக்ரேனுக்கு செல்ல வேண்டும் என்று ரூத் அழைப்பு விடுப்பதை அந்த சமூக ஊடகக் கணக்கு காட்டுகிறது. "உங்கள் குழந்தைகள், குடும்பம் மற்றும் ஜனநாயகத்திற்காக நான் ஹவாயில் இருந்து யுக்ரேனுக்கு வருகிறேன். உங்களுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்." என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு கூறுகிறது என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் கூறுகிறது. அவரது சமூக ஊடக கணக்குகளில் பாலத்தீன ஆதரவு, தாய்வான் ஆதரவு மற்றும் சீனாவுக்கு எதிரான பதிவுகளும் உள்ளன. சீன "உயிரியல் போர்" பற்றிய குற்றச்சாட்டுகள் மற்றும் கோவிட்-19 வைரஸை "தாக்குதல்" என்று குறிப்பிடும் விமர்சனமும் உள்ளது. ஒரு கட்டத்தில் அதிபர் டிரம்ப்பை ஆதரித்த ரூத், "2016-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிக்கு நான் ஆதரவளித்தேன்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் நடவடிக்கைகள் "மோசமடைந்து, வலுவிழந்தது" "நீங்கள் இல்லை என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் பதிவிட்டதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் டிரம்பின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். பென்சில்வேனியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை ரூத் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.   பட மூலாதாரம்,MARTIN COUNTY SHERIFF'S OFFICE படக்குறிப்பு, காவல்துறையால் வெளியிடப்பட்ட புகைப்படம் ரூத்துக்கும் யுக்ரேனுக்கும் என்ன தொடர்பு? ரூத் 2023 இல் நியூயார்க் டைம்ஸிடம் யுக்ரேனில் போர் முயற்சிகளுக்கு உதவ விரும்புவதாகவும், தாலிபன்களிடம் இருந்து தப்பி ஓடிய ஆப்கானிஸ்தான் வீரர்களை பணியில் அமர்த்த விரும்புவதாகவும் கூறினார். தொலைபேசி வாயிலாக அவர் அந்த அளித்தப் பேட்டியில், 10க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமாக இருப்பதாகவும், அவர்களை பாகிஸ்தான் மற்றும் இரானில் இருந்து யுக்ரேனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இதனை சட்டவிரோதமாக செய்யவும் தயார் என்று பேட்டியளித்தார். "பாகிஸ்தான் ஊழல் நிறைந்த நாடு என்பதால் நாங்கள் சில பாஸ்போர்ட்டுகளை பாகிஸ்தான் மூலம் வாங்க முடியும்" என்று அவர் கூறினார். யுக்ரேனுக்கு கூடுதல் ஆதரவை வழங்கி உதவுவதற்காக, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க ஆணையத்தை சந்திக்க தான் வாஷிங்டனில் இருப்பதாகவும் ரூத் பேட்டியில் கூறியிருந்தார். ஜூலை மாதம் வரை ஆட்சேர்ப்பு முயற்சிகளில் ரூத் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஜூலை மாதத்தில் அவர் பதிவிடப்பட்ட ஒரு முகநூல் பகிர்வில் , “வீரர்களே, தயவுசெய்து என்னை அழைக்காதீர்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களை யுக்ரேன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக முயற்சிகளை செய்து வருகிறோம், வரும் மாதங்களில் பதில்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். தயவுசெய்து பொறுமையாக இருங்கள்." என கூறப்பட்டுள்ளது யுக்ரேனின் சர்வதேச வெளிநாட்டு தன்னார்வலர்களின் அமைப்பு, ரூத்தின் பதிவுக்கும் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. . இந்த அரசியல் வன்முறைக்கு யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்களில், "நெருப்புடன் விளையாடுவது அதன் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று ரஷ்ய அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். ரூத் மீது குற்றப் பதிவு உள்ளதா? சிபிஎஸ் செய்தியின்படி, 1990 களில் காசோலை மோசடி உட்பட ரூத் சில சட்ட சிக்கல்களை எதிர்கொண்டதாக பதிவுகள் காட்டுகின்றன. ரூத் 2002 மற்றும் 2010க்கு இடையில் வட கரோலினாவில் உள்ள கில்ஃபோர்ட் கவுண்டியில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்றும் சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 2002 இல், மிக ஆபத்தான முழு தானியங்கி துப்பாக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது, கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஆயுத விதிமீறல்களை மறைத்தது போன்ற செயல்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல், திருடப்பட்ட சொத்தை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளது. ரூத்தின் முன்னாள் பக்கத்து வீட்டார் கிம் முங்கோ, ரூத் "அன்பானவர்" என்று விவரிக்கிறார், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒருமுறை ரூத்தின் சொத்துக்களை சோதனையிட்டதாகக் கூறினார். அவர் தனது வீட்டில் "திருடப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொருட்களை" வைத்திருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் ரூத் மற்றும் அவரது குடும்பத்தினர் திறந்த வெளியில் துப்பாக்கியால் சுடுவதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.   அவரது அரசியல் நிலைப்பாடு என்ன? 2024-ம் ஆண்டு வட கரோலினாவில் கட்சிகளுக்குள் யாரை வேட்பாளரை முன்னிறுத்து என்பதை முடிவு செய்வதற்காக நடத்தப்படும் முதற்கட்ட தேர்தலில், இவர் நேரடியாக வந்து ஜனநாயக கட்சிக்கு வாக்களித்ததாக மாகாண தேர்தல் வாரிய தரவுகள் கூறுவதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. அவர் 2016-ஆம் ஆண்டு டிரம்ப்பை ஆதரித்ததாக அவரது சமூக ஊடகப் பதிவுகள் இருந்தபோதிலும், அவர் எந்த கட்சியிலும் சாராத வாக்காளர் என பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS ரெளத்தின் குடும்பம் பற்றி ரூத் மகன் அவரை "அன்பான மற்றும் அக்கறையுள்ள தந்தை. நேர்மையான கடின உழைப்பாளி" என்று கூறியுள்ளார். அவரது மூத்த மகன் ஓரான், குறுஞ்செய்தி மூலம் சிஎன்என் உடன் பேசினார். "புளோரிடாவில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, எதிர்பார்க்காத விஷயங்கள் நடந்திருப்பதாக நான் நம்புகிறேன், ஏனென்றால் நான் சிறிய வயதில் இருந்த பார்த்த நபர் அப்படியானவர் இல்லை. எனக்குத் தெரிந்த மனிதர் மிகவும் ஆக்ரோஷமானவர் இல்லை” என கூறியுள்ளார்.   அடுத்து என்ன நடக்கும்? ரூத் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. அவர் திங்கட்கிழமை பாம் பீச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவத்தின் போது அவர் தனது ஆயுதத்தை பயன்படுத்தி உண்மையில் துப்பாக்கி சூடு நடத்தினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ''ஒரு தனிநபரால் எங்களது அதிகாரிகளை சுடமுடியுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக சந்தேக நபரிடம் எங்கள் அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியிருப்பார்கள்'' என்று ரகசிய சேவையின் மியாமி கள அலுவலகத்தின் ரஃபேல் பாரோஸ் கூறினார். பென்சில்வேனியாவில் டிரம்ப் மீதான முந்தைய கொலை முயற்சிக்குப் பிறகு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், "அச்சுறுத்தல் அளவு அதிகமாக உள்ளது" என்றும் அவர் கூறினார். எஃப்பிஐ தனது விசாரணையை அறிவித்துள்ளது, மேலும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறுகிறது. ரகசிய சேவை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வட கரோலினாவின் கிரீன்ஸ்போரோவில் ரூத் முன்பு தங்கியிருந்த வீட்டையும் சோதனை செய்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cvgxx0034g7o
    • தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில்; தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்காக அணிதிரண்டுள்ள உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் - மாவை.சோ.சேனாதிராஜா Published By: VISHNU   16 SEP, 2024 | 10:28 PM   தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சி பசுமைப்பூங்கவில் திங்கட்கிழமை (16) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழனம் விடுதலை பெறதாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதி தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது.  அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள். விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம். அந்த வகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம், அந்தப் பயணத்தினை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகைதந்துள்ளேன். அது மட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன். கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக , அதற்காக பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவு படுத்தியவனாக, எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்கு தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடைபெறுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/193882
    • பட மூலாதாரம்,X/M.K.STALIN படக்குறிப்பு, திருமாவளவன் மற்றும் மு.க. ஸ்டாலின் (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுவிலக்கு மாநாட்டிற்கு அ.தி.மு.கவுக்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி குறித்த சலசலப்பு எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். என்ன நடந்தது? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் செய்தித் தொடர்புப் பிரிவின் செயலர் டி.கே.எஸ். இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறியதாக தெரிவித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது விலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்தப்போவதாகவும் அதில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாடு தொடர்பான அழைப்பையும் தேர்தல் கூட்டணியையும் இணைத்துப் பார்க்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டாலும் இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.   மதுவிலக்கு விவகாரத்தை வைத்து தி.மு.க. கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் அழுத்தம் கொடுக்கிறதா என்பதில் துவங்கி, கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்பதுவரை பல்வேறு கருத்துகள் இதனைச் சுற்றி எழுந்தன. உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் இந்த விவகாரத்தை வைத்து விவாதங்களை நடத்தின.   செப்டம்பர் 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோது, இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு அவரே (திருமாவளவன்) விளக்கமளித்துவிட்டார், அதற்கு மேல் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார். ஆனால், அதே நாளில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்பது குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. விரைவிலேயே அது நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தி.மு.க. - வி.சி.க. கூட்டணி குறித்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான், திங்கட்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்பேசியிருக்கிறார் திருமாவளவன். காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் வழங்கினோம். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47ன் படி, படிப்படியாக மதுவிலக்கை இந்தியா அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும். கோரிக்கையை படித்துப் பார்த்த முதல்வர் மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம். வி.சி.கவின் மாநாட்டில் தி.மு.கவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பார்கள் என்று சொன்னார்" என்று தெரிவித்தார். மேலும், தி.மு.க. - வி.சி.க. கூட்டணியில் எந்த நெருடலும் இல்லை என்றும் கூறினார்.   படக்குறிப்பு, ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன். "மதுவிலக்கு மாநாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் எல்லாக் கட்சிகளும் வரலாம், அ.தி.மு.கவும் வரலாம் என திருமாவளவன் பேசியது, எதிர்பாராத அளவில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அதற்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்வர் தமிழ்நாட்டிற்குத் திரும்பும் நாளில், 'அதிகாரத்தில் பங்கு' குறித்த வீடியோ ஒன்றை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, நீக்கி பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது. இதெல்லாம் சேர்த்து திருமா கூட்டணி மாறப்போகிறாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. வி.சி.க.விற்குள்ளேயே தி.மு.கவுக்கு கூடுதல் அழுத்தம் அளிக்கவேண்டும் எனக் கருதும் சக்திகள் இருக்கலாம். அவர்கள் இதனைச் செய்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த மதுவிலக்கு மாநாட்டில் கலந்துகொள்வதாக அறிவித்ததன் மூலம், கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதபடி செய்துவிட்டது தி.மு.க.. தி.மு.க. தலைமையகத்தில் வந்து முதல்வரைச் சந்தித்ததைப் போல, கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளின் தலைவர்களைப் போய் திருமாவளவன் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, கூட்டணியைப் பொறுத்தவரை இப்போதைக்கு போர் நிறுத்தம் வந்திருப்பதாகச் சொல்லலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம்; தேர்தல் அரசியலுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என திருமாவளவன் சொல்வதை ஏற்கலாம் என்றாலும் வீடியோ வெளியிடப்பட்டதுதான் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மதுவிலக்கு குறித்து பலரும் பேசினாலும் இப்போதைக்கு அது நடைமுறை சாத்தியமில்லாதது என்பது எல்லோருக்குமே தெரியும். மதுவிலக்கு மாநாட்டிற்கு தி.மு.கவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபடி, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் அழைப்பது என்பதே வித்தியாசமாக இருந்தது. அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொள்வதாகவே வைத்துக்கொள்வோம். அவர் பேசிய பிறகு ஆர்.எஸ். பாரதி பேசினால் என்னவாகும்? இது ஒருபுறமிருக்க, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசிய வீடியோவை இந்தத் தருணத்தில் வெளியிட்டு, நீக்கி, மீண்டும் வெளியிட்டதும் ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது" என்கிறார் குபேந்திரன். ஆனால், கூட்டணி மாற்றம் தொடர்பாக, இந்தத் தருணத்திலேயே ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்கிறார் அவர். மதுவிலக்கு மாநாட்டை ஒட்டி எழுந்த யூகங்கள் அனைத்தும் தவறானவை என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு. "இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் தலைவரின் பிறந்த நாளை ஒட்டி ஒரு மாநாட்டை நடத்துவோம். அதுவும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து நடத்துவோம். கடந்த ஆண்டு 'வெல்லும் ஜனநாயகம்' என்ற பெயரில் நடத்தினோம். அதற்கு முந்தைய ஆண்டு, 'சமூக நீதி சமூகங்களுடைய ஒற்றுமை மாநாடு' என்ற பெயரில் நடந்தினோம். இந்த ஆண்டு 'மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு' என்ற பெயரில் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நாங்களாக அ.தி.மு.கவுக்கு அழைப்புவிடுக்கவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொன்னபோது, அ.தி.மு.கவும் பங்குபெறலாமா எனக் கேட்டபோது, பங்கு பெறலாம் என திருமாவளவன் பதிலளித்தார். மதுவிலக்கு தொடர்பாக, எல்லா கட்சிகளுமே தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அ.தி.மு.கவும் அதனைச் சொல்ல வேண்டும். தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது. ஆகவே அந்தக் கூட்டணியைச் சிதைக்க வேண்டும், அதற்காக அந்தக் கூட்டணியிலிருந்து வி.சி.கவை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இப்படி கிளப்பிவிடுகிறார்கள்" என்கிறார் வன்னியரசு. வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, "அதிகாரத்தில் பங்கு என்பது 1999ஆம் ஆண்டிலிருந்து வி.சி.க. முன்வைத்துவரும் கருத்துதான். அதில் புதிதாக ஏதும் இல்லை. செப்டம்பர் 13-ஆம் தேதி நடந்த மண்டல செயற்குழு கூட்டத்திலும் அதைத்தான் திருமாவளவன் பேசினார். அந்த வீடியோதான் பதிவேற்றப்பட்டது. ஆனால், அதன் ஒரு பகுதி மட்டும் பதிவேற்றப்பட்டதால் முழுவதையும் பதிவேற்றும்படி சொன்னார். ஆகவே, அது நீக்கப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டது. அதில் வேறு எதுவும் இல்லை" என்றார் அவர்.   படக்குறிப்பு, தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு வி.சி.கவின் கூட்டணி 1999ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் வி.சி.க. இடம்பெற்று, த.மா.கா. சின்னத்திலேயே 2 இடங்களில் போட்டியிட்டது. 2001-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 8 இடங்களில் போட்டியிட்டது. 2004-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஜனதா தளம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 8 இடங்களில் போட்டியிட்டது. 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்ணியில் போட்டியிட்டது. 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் இடம்பெற்றது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி. 2 இடங்களில் போட்டியிட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் வி.சி.க. 25 இடங்களில் போட்டியிட்டது. 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வி.சி.க இடம்பெற்றது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் விசிக தொடர்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr7551evjyjo
    • தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை இந்த கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mavai-senathiraja-support-in-ariyanendren-1726495223#google_vignette
    • Published By: VISHNU   16 SEP, 2024 | 07:34 PM   முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாய்த் தமிழ் பேரவை அமைப்பின், தாய்த்தமிழ் நினைவேந்தல் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் உறவுகள்  பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர். தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு, உயிர்நீத்தவர்களின் உறவுகள் மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தாய்த்தமிழ் பேரவை அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.சத்தியரூபன், தாய்த் தமிழ் பேரவை அமைப்பு நிர்வாகிகள், படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193880
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.