Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் நடத்திய அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 195 பேர் பலி: ஹமாஸ் அமைப்பு தகவல்

இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2 ஆவது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் வீடுகளுக்குள் இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 777 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 120 பேரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன என தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/279850

  • Replies 1.5k
  • Views 157.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

இஸ்ரேல் மீது வெளித்தரப்புகள் (யேமன் ஹூத்தி கிளர்சியாளர்) ஏவுகணை வீசுவதை தடுக்க, சவுதி அரேபியாவில் மேலதிக அமேரிக்க ஏவுகணைகளை நிறுத்த சவுதி இணக்கம்.

யேமனில் இருந்து ஹூத்தி கிளர்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகள், சவுதியை தாண்டியே இஸ்ரேலை அடைய முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது: ஐ.நா. கண்டனம்

இஸ்ரேல் இராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் இராணுவம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்தது மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்திற்க் கொண்டு அவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என பதிவிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/279855

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தப்பட வேண்டும்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்புகளுக்கும் இடையில் இடம்பெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரரமடைந்துள்ள நிலை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்; காசா பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைப்பு விடுத்துள்ளார்.

https://athavannews.com/2023/1356887

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள விசேட அனுமதி

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு 

 
 
 

காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர்.

“இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள பிரதிநிதி அலுவலகமும் செய்து வருகின்றன.அதன்படி அவர்கள் பத்திரமாக எகிப்தை அடையப் போகிறார்கள் என்றார்.

இதேவேளை, காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்ததாகவும், அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=179514

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உணவை பெறுவது மிகவும் ஆபத்தான கடினமான விடயம் - ஒரு பாண் துண்டிற்காக பெரும் சிரமங்களை சந்தித்தேன் - எகிப்திற்கு வந்து சேர்ந்துள்ள அவுஸ்திரேலிய பெண்

Published By: RAJEEBAN      02 NOV, 2023 | 12:34 PM

image

காசாவில் சிக்குண்டிருந்த நிலையில் எகிப்திற்கு வந்து சேர்ந்துள்ள  அவுஸ்திரேலியர்கள் காசாவில் தாங்கள் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவங்கள் குறித்து தெரிவித்துள்ளனர்.

காசா தொடர்ச்சியான குண்டுவீச்சினை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில் எகிப்துடனான  ரபா எல்லை ஊடாக உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தாங்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து தெரிவித்துள்ளனர்.

rafa_crossing.jpg

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களத்தில் பதிவு செய்த  23 அவுஸ்திரேலிய பிரஜைகள்  அங்கிருந்து வெளியேறலாம் என  அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தோம் எனது எகிப்திய சகாவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன் நான் நிம்மதியாக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ரபா எல்லை ஊடாக வெளியேறியவர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய பெண் மொனா தனது குடும்பத்தை உணவும் நீரும் இல்லாத காசாவில் விட்டுவிட்டு வந்துள்ளமை குறித்து கடும் வேதனை வெளியிட்டுள்ளார்.

காசாவில் உணவை பெறுவது மிகவும் கடினமானது ஆபத்தானது உங்களால் அதனை கற்பனை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் நான் உண்ண விரும்பாத ஒரு துண்டு பாணை பெற்றுக் கொள்வதற்காக நான்  மிகவும் கஸ்டப்பட்டேன்.

சிறுவர்களிற்காகவே அதனை நான் பெற்றுக்கொண்டேன் எங்கள் குடும்பத்தில் 17 சிறுவர்கள் உள்ளனர் உணவு இல்லை கடந்த இரண்டு நாட்களாக நீரும் இல்லை என அவர்  தெரிவித்துள்ளார்.

நான் எனது குடும்பத்தை பார்க்கப் போகின்றேன் என சந்தோசமடைகின்றேன் எனினும் அதேவேளை நான் எனது சகோதரர்களை முழு குடும்பங்களையும் அங்கு விட்டுவிட்டு வருகின்றேன் இதனால் நான் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் நிலைமை மிக மிக மோசமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை தாங்கள் எகிப்திற்குள் தப்பிவந்ததும் அவுஸ்திரேலியா அரசாங்கம் தங்களை சிறந்த விதத்தில் பராமரித்துள்ளது என மெல்பேர்னை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168318

  • கருத்துக்கள உறவுகள்

 

நாளை ஹிஸ்புல்லா தலைவர் பேச உள்ள கூட்டத்தின் ஏற்பாடுகள் இவையாம்.

அநேகமாக யுத்ததில் ஹிஸ்புலா இறங்கும் அறிவிப்பாய் இருக்கலாமாம்.

டிஸ்கி

பேசி கொண்டிருக்கும் போதே இஸ்ரேல் நசரல்லாவை தூக்கினால் எப்படி இருக்கும்?

———

ஹிஸ்புலா எறிகணை வீச்சுக்குள்ளான வட இஸ்ரேலிய நகரம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சிரியாவில் தங்கி இருந்த ஈரானின் இமாம் ஹொசேய்ன் ஆயுதகுழு லெபனான் வந்து ஹிஸ்புலாவுடன் சேர்ந்துள்ளதாம்.

———

இதே தகவலை சொல்லும் இன்னொரு கணக்கு.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

——-

இஸ்ரேலின் காசா இரு-துண்டறுப்பு நடவடிக்கை நிறைவுற்றுள்ளதாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

———-

இஸ்ரேலிய தாங்கிகள் மீது ஹமாசின் தாக்குதலாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் வாக்னர் குழு, ஹிஸ்புலாவுக்கு ரஸ்யாவின் அதி நவீன ஏவுகணை, விமான எதிர்ப்பு பீரங்கியை வழங்க இருப்பதாக வால் ஸ்டிரீட் ஜேனல் கூறுகிறது (இவர்களின் சில செய்திகள் முன்னர் தவறாகியுள்ளன).

https://www.wsj.com/world/russias-wagner-group-may-provide-air-defense-weapon-to-hezbollah-u-s-intel-says-37dc8f45

 

 

 

 

 

————

1990 இற்கு பின் முதல்தடவையாக ஈராக்கில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு குழு (ஈரான் ஆதரவு) தாக்குதல் நடத்தியதாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பைடனின் கோரிக்கைக்கு இணங்க, தற்காலிக போர் ஓய்வுக்கு தயார் என இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு தெரிவிப்பாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுடன் ஹிஸ்புலா போருக்கு போவது லெபானானிய மக்களுக்கு எதிரான குற்றம் எனவும், தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புலா பின்வாங்க வேண்டும் எனவும் லெபனானின் கிறிஸ்தவ சமூகத்கின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் தெரிவிப்பு.

மீளவும் லெபனானில் முஸ்லிம் எதிர் கிறிஸ்தவ முறுகல்?

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

இதைத்தானே இலங்கை இராணுவமும், அரசாங்கமும் எங்கள் விடயத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? 

ஐக்கிய நாடுகள் சபை பயப்படும் இலங்கையுடன் இஸ்ரவேலை ஒப்பிட முடியாது.

காசா பிராந்தியத்துக்கு முழு சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது. அதை பயங்கரவாதிகளின் குகையாக மாற்றினார்கள். பயங்கரவாதிகளின் அந்த பணத்தை மக்களின் பாதுகாப்புக்காக செலவு செய்திருந்தால், மக்களின் அபிவிருத்திக்காக செலவு செய்திருந்தால் இன்று சிங்கப்பூரை விட வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்திருக்கும்.

இலங்கையில் அப்படி நடக்கவில்லை. இலங்கை தமிழர்களை இந்தியாவின் சுய நலத்துக்காக பலிக்களமாக மாற்றினார்கள். 

21 hours ago, Maruthankerny said:

புரிந்தால் நன்று !!
எல்லா வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. 

கா கூ என்று கத்தி 
வாவ் வாவ் என்று குலைகிற நாய்கள் சென்று படுத்துவிடும் 

பாய்கிற புலிகள் தக்க தருணத்திற்கு மெதுவாகவே நகரும் 

நீங்கள் பார்க்கின்ற , கேட்க்கின்ற எதிர் வினைகள்தான் இப்போது அங்கு நடந்த கொண்டிருக்கிறது.

புலிகளை அல்ல. புலி வால்களைத்தான் முதலில் அழிக்க வேண்டும். இலங்கை அரசும் அதைத்தான் முதலில் செய்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

 

ஆம் அவர்கள் பயங்கரவத்திற்கு எதிராக போர் செய்துகொண்டு இருக்கும் 
இந்த இக்கட்டான சூழலில்  
யாழ் கள  தளபதிகள் தலைமையில் நாம் எமது ஆதரவை இஸ்திரேலி ஜனநாயக இராணுவத்துக்கு 
கொடுப்பது என்பது இன்றி அமையாத ஒரு கடமை 

 

 

இஸ்ரேலியர்கள் அப்படி எல்லாம் எதிர்பார்க்கிறவர்கள் இல்லை. புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நாடடை விட்டு விட்டு எங்கும் ஓடுபவர்களும் இல்லை.

நாங்களும் அப்படிதான். விளங்கினால் சரி  . 😜

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஏன் என்றால் நீங்கள் இந்த ரெண்டு பக்கமும் ஜடாமுடி தொங்கவிட்ட யூத பழமைவாதிகள் ஏன் இப்படி எதிர்கிறார்கள் என்ற அடிப்படையை விளங்கி கொள்ளாமல் அல்லது விளங்கியும் மறைத்து எழுதுகிறீர்கள்.

இவர்கள் இப்படி எதிர்ப்பதன் அடிப்படைகாரணம் - இவர்கள் நம்பிக்கை படி (டோரா) ஆண்டவன் யூதருக்கு கொடுத்த சாபத்தினால் அவர்கள் நாடு அற்று அலைவார்கள். அப்படி அலையும் போது அவர்கள் வாழும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் ஆண்டவனுக்கு கொடுத்த உறுதிமொழி.

பின்னர் ஆண்டவனே இஸ்ரேலை உருவாக்கித்தருவார்.

இவர்கள் அது வரை பொறுக்கிறார்கள். தாம் வாழும் நாடு என கருதும் பலஸ்தீனுக்கு விசுவாசம் காட்டுகிறார்கள்.

இவர்களை பொறுத்தவரை யூதர் கூடி இஸ்ரேலை உருவாக்கியமை யூத மத நிந்தனை. 

இப்போ புரிகிறதா என் ஒப்பீடு ?

அதெல்லாம் அவர்களுக்கு எங்கே புரிய போகின்றது. அரை குறையாக விளங்கினால் இப்படித்தான். இன்னும் அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு படடவர், இப்படித்தான் எழுதுவார். 

இஸ்ரேவேல் நாடு இஸ்ரவேலருக்குத்தான் சொந்தம். வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Cruso said:

ஐக்கிய நாடுகள் சபை பயப்படும் இலங்கையுடன் இஸ்ரவேலை ஒப்பிட முடியாது.

காசா பிராந்தியத்துக்கு முழு சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது. அதை பயங்கரவாதிகளின் குகையாக மாற்றினார்கள். பயங்கரவாதிகளின் அந்த பணத்தை மக்களின் பாதுகாப்புக்காக செலவு செய்திருந்தால், மக்களின் அபிவிருத்திக்காக செலவு செய்திருந்தால் இன்று சிங்கப்பூரை விட வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்திருக்கும்.

இலங்கையில் அப்படி நடக்கவில்லை. இலங்கை தமிழர்களை இந்தியாவின் சுய நலத்துக்காக பலிக்களமாக மாற்றினார்கள். 

 

இங்கே யாரும் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொள்வது பற்றி கவலை கொள்ளவில்லை. பொதுமக்களதுப்கொலைகள் தொடர்பாகத்தான் அக்கறை . 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

இங்கே யாரும் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொள்வது பற்றி கவலை கொள்ளவில்லை. பொதுமக்களதுப்கொலைகள் தொடர்பாகத்தான் அக்கறை . 

அதைத்தான் நானும் சொல்லுகிறேன். பொது மக்கள் கொல்லப்படுவது கவலைக்குரிய விடயம்தான். ஆனால், அதட்கு ஹமாஸ்தான் பதில் சொல்ல வேண்டும். அதாவது ஹமாஸ் அங்கிருந்து வெளிறினால், பணய கைதிகளைவிடுதலை செய்தால் எல்லாம் முடிவுக்கு வரும். 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இஸ்ரேலுடன் ஹிஸ்புலா போருக்கு போவது லெபானானிய மக்களுக்கு எதிரான குற்றம் எனவும், தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புலா பின்வாங்க வேண்டும் எனவும் லெபனானின் கிறிஸ்தவ சமூகத்கின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் தெரிவிப்பு.

மீளவும் லெபனானில் முஸ்லிம் எதிர் கிறிஸ்தவ முறுகல்?

 

 

 

சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இந்த பயங்கர வாதிகளினால் லெபனான் தேசமே அழியப்போகின்றது. நிச்சயமாக அங்குள்ள  கிறிஸ்தவர்கள் அதட்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

இன்று தலைமை பயங்கரவாதி நாசருள்ள உரையாற்றப்போகின்றார். என்ன சொல்லபோகின்றான் என்று கேட்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

அதைத்தான் நானும் சொல்லுகிறேன். பொது மக்கள் கொல்லப்படுவது கவலைக்குரிய விடயம்தான். ஆனால், அதட்கு ஹமாஸ்தான் பதில் சொல்ல வேண்டும். அதாவது ஹமாஸ் அங்கிருந்து வெளிறினால், பணய கைதிகளைவிடுதலை செய்தால் எல்லாம் முடிவுக்கு வரும். 

இஸ்ரேல் இறைமை உள்ள ஒரு ஜனநாயக நாடு.. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு.. யாருக்கும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் இஸ்ரேல் அப்படி அல்ல.. ஹமாசைபோல அப்பாவி மக்களை கண்ணைமூடிக்கொண்டு கொன்று அளிக்க முடியாது.. ஒரு இறைமை உள்ள ஜனநாயக அரசு அப்பாவி மக்களை கொல்லாமல் மாற்றுவழிகளை கண்டுபிடிக்கவேடும் கமாசை அளிக்க.. இப்படி நீங்கள் எழுதுவது போல் எல்லாம் ஒரு ஜனநாயக நாடு பேசமுடியாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரலையில் தோன்றிய பின்னர் வீடு திரும்பிய ஊடகவியலாளர் குடும்பத்துடன் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சில் பலி- நாங்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்கின்றோம் - காசா ஊடகவியலாளர்கள் அதிர்ச்சி

Published By: RAJEEBAN    03 NOV, 2023 | 11:55 AM

image

காசாவின் தென்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீன தொலைக்காட்சியின் செய்தியாளரும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் நசேர் மருத்துவமனைக்கு வெளியே நேரலையில் செய்தியை வழங்கிக்கொண்டிருந்த முகமட அபு ஹட்டாப் அரைமணித்தியாலத்தின் பின்னர் வீடு திரும்பியவேளை விமானக்குண்டுவீச்சில் பலியாகியுள்ளார் என அவரது ஊடகம் அறிவித்துள்ளது.

gaza_jour_22.jpg

அவரது மரணம் அவரது சக ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது சகா கொல்லப்பட்ட செய்தியை வாசித்த அறிவிப்பாளர் சல்மான் அல் பசீர் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

எங்களால் இதற்குமேலும் தாங்கிக்கொள்ள முடியாது நாங்கள் களைப்படைந்துவிட்டோம் நாங்கள் இங்கே பாதிக்கப்பட்டவர்கள் மரணத்திற்காக காத்திருக்கும் தியாகிகள் என அந்த அறிவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒருவர் பின்ஒருவராக உயிரிழக்கின்றோம் எங்களை பற்றியே காசாமீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாரிய அழிவு குறித்தோ எவருக்கும் கவலையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பாதுகாப்பே இல்லை நினைத்ததை செய்வதற்கான தண்டனையிலிருந்து விடுபாட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பசீர் தான் அணிந்துள்ள பாதுகாப்பு கவசம் ஹெல்மெட்டை அகற்றிவிட்டு இது எங்களிற்கு பாதுகாப்பளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஸ் என்ற அடையாளத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது வெறும் சுலோகம் மாத்திரமே எங்களிற்கு  எந்த பாதுகாப்பும் இல்லை எனவும்தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கள் பாலஸ்தீன மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக மாறியுள்ளன எங்கள் சகா முகமது அபுஹட்டாப் அரைமணித்தியாலத்திற்கு முன்னர்தான் இங்கிருந்தார் தற்போது அவர் தனது குடும்பத்தவர்களுடன் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168404

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இஸ்ரேல் இறைமை உள்ள ஒரு ஜனநாயக நாடு.. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு.. யாருக்கும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் இஸ்ரேல் அப்படி அல்ல.. ஹமாசைபோல அப்பாவி மக்களை கண்ணைமூடிக்கொண்டு கொன்று அளிக்க முடியாது.. ஒரு இறைமை உள்ள ஜனநாயக அரசு அப்பாவி மக்களை கொல்லாமல் மாற்றுவழிகளை கண்டுபிடிக்கவேடும் கமாசை அளிக்க.. இப்படி நீங்கள் எழுதுவது போல் எல்லாம் ஒரு ஜனநாயக நாடு பேசமுடியாது..

அருமை. 

  • கருத்துக்கள உறவுகள்

1. அக் 7 இல் இஸ்ரேலில் பல விடயங்கள், வேலை நிமித்தம் வந்து, கைதாகி இருந்த ஆயிரக்கணக்கானோரை இஸ்ரேல் விடுவிக்கிறதாம்.

2. பிளிங்கின் இஸ்ரேல் சென்றடைந்தார்

3. ஹிஸ்புலா இறங்குவதை தடுக்க இஸ்ரேல் தற்காலிக  போர் ஓய்வை அறிவிக்க கூடும் என்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நசரல்லா உரை நேரலை

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

1. நசரல்லா இஸ்ரேலை விட அமேரிக்காவைத்தான் உரையில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

2. அக் 7 தாக்குதல் தமக்கும் ஈரானுக்கும் கூட அதிர்ச்சியாம் (🤣)

3. அக் 7 இல் நடந்தது நியாயமான எதிர் நடவடடிக்கைதானாம்.

4. இஸ்ரேல் மிக வலுவிழந்து உள்ளதாம்

5. அமெரிக்காவின் வழி நடத்தலில்தான் யுத்தம் நடக்கிறதாம்

6. அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டனின் மிலேச்சத்தனத்துக்கு எதிரான நீதி சார் நடவைக்கைதான் அக் 7 ஆம்.

7. ஈராக், சிரியாவில் அமரிக்க தளங்களை தாக்குவதை வரவேற்கிறாராம்

8. உலகம் தம்மோடுதானாம். 

9. ஹமாசின் ஆக் 7 நடவடிக்கையை ஆதரிக்க வேண்டியது மனிதாபிமானம் (🤣) உள்ள ஒவ்வொரு உலக மாந்தரினதும் கடமையாம்.

உரை தொடர்கிறது…..

டிஸ்கி

யாழ்கள புட்டின் பிரிகேட்டுக்கு இன்னொரு நாயகன் உருவாகியுள்ளார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.