Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், வினீத் காரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம் பாலத்தீனர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறை கொண்ட பலரை நீங்கள் விலக்கி வைத்துள்ளீர்கள், அவர்களின் நோக்கத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

பிரிட்டிஷ் தொலைக்காட்சி சேனலின் இந்தக் கேள்விக்கு பதிலளித்து, ஹமாஸின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான தலைவர் பாசம் நயீம், உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது கூற்று எவ்வளவு உண்மை?

1948-ல் இஸ்ரேல் உருவானதிலிருந்து இதுவரை இஸ்ரேலுக்குள் இவ்வளவு பெரிய அளவில் வன்முறை நிகழ்ந்தது இதுவே முதல் முறையாகும்.

பாலத்தீன அமைப்பான ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர், அதேநேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

காசா பகுதியில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் மனிதாபிமான உதவியை நம்பியே உள்ளனர். இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அடங்குவர்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இசை விழாக்களில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர்களைக் கொலை செய்வது, குடும்பங்கள், குழந்தைகள், பெண்களை கடத்திச் செல்வது, வீடுகளுக்குள் நுழைந்து மக்களை கொலை செய்வது போன்ற படங்களை சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இதைப் பார்த்து உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

 
ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம்,SAID KHATIB/AFP VIA GETTY IMAGES

மறுபுறம், காசாவில் பழிக்குப் பழி வாங்கும் வகையில் கொல்லப்பட்ட மக்களின் படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அவை மிகவும் வேதனையளிக்கக் கூடியவை.

நார்வே அகதிகள் கவுன்சிலின் ஜான் எகெலண்ட் ஒரு தொலைக்காட்சி சேனலில், "இந்த படங்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. இது பாலத்தீனர்களின் நோக்கத்துக்கு (அவர்களின் உரிமைகளுக்கு) மிகவும் மோசமானது, ஏனெனில் பெரிய அளவில் பழிக்குப் பழி வரும்" என்று கூறினார்.

கடத்தப்பட்ட பிணைக் கைதிகளை கொலை செய்வதாக ஹமாஸ் மிரட்டியுள்ளது.

பாலத்தீனர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்ட ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் அரசாங்கங்கள் இன்று ஹமாஸின் தாக்குதல்களை கண்டித்துள்ளன.

மூத்த பத்திரிகையாளர் மேதி ஹசன் X தளத்தில், "குழந்தைகள் பிணையாக பிடிக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அது மிருகத்தனம், அது அமைதிக்கும் வழிவகுக்காது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் முடிவுக்கு கொண்டு வராது" என்று எழுதியுள்ளார்.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சதம் ஹவுஸ் சிந்தனை குழுமத்தின் பேராசிரியரான யோசி மெகெல்பெர்க், "இந்தத் தாக்குதல் பாலத்தீனர்களுக்கு எந்த பயனும் அளிக்காது. இது இஸ்ரேலின் தடை விதிப்பு கொள்கையை மேலும் வலுப்படுத்தும். தாக்குதலின் நோக்கம் இஸ்ரேலின் பக்கத்து நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதைத் தடுப்பதாக இருந்தால், இந்த தாக்குதல்கள், பணயக் கைதிகளை எடுத்துச் சென்ற நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் பிராந்திய தலைவர்களுக்கு பாலத்தீனத்திற்கு பேச்சுவார்த்தைக்கான நம்பகமான கூட்டாளி இல்லை என்ற செய்தியை அனுப்பும்" என்று எழுதுகிறார்.

பாலத்தீனர்கள் ஆபிரகாம் உடன்படிக்கையின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளுடன் இஸ்ரேலின் உறவுகள் மேம்படுவதைப் பார்த்துள்ளனர்.

பல நிபுணர்களும், தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்று இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகள் என்று கூறுகின்றனர். பாலத்தீனர்களுக்கு இந்த ஒப்பந்தத்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் மற்றும் அவர்களின் உரிமைகள் என்றென்றும் பின்னால் விடப்படும் என்ற செய்தியை இந்த பேச்சுவார்த்தைகள் அனுப்பின.

பாலத்தீனத்திற்கான ஆதரவு இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது, ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் உறவுகள் ஆழமடைந்துள்ளன.

பாலத்தீன நிறுவனமான ஹமாஸின் தாக்குதலை இந்திய பிரதமர் நரேந்திர மோதி "பயங்கரவாத தாக்குதல்" என்று விவரித்தது அதே கோணத்தில் பார்க்கப்படுகிறது.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

'தி இந்து' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பர்த்தசாரதி X தளத்தில் எழுதியுள்ளார்: "இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பிரச்சினையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடூரத்தனம் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது போலவே, பாலத்தீன விவகாரத்திலும் (அல்லது அவர்களின் உரிமைகள் பிரச்சினையிலும்) தீவிரவாதிகள் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹமாஸின் கொடூரத்தனம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது."

"அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை உலகம் ஒருபோதும் மன்னிக்காது" என்று அவர் எழுதுகிறார்.

மறுபுறம், லிபியா, ஜோர்டான் மற்றும் மால்டாவுக்கான முன்னாள் இந்திய தூதர் அனில் திரிகுணாயத் கூறுகையில், "ஹமாஸின் சமீபத்திய தாக்குதலுக்கு பாலத்தீன விவகாரத்திலோ அல்லது அவர்களின் உரிமைகள் மீதோ எந்த தாக்கமும் ஏற்படாது" என்று கூறினார்.

"மத்திய கிழக்கு முழுவதும், ஐரோப்பாவில், கனடா போன்ற நாடுகளில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்கு அர்த்தம் பாலத்தீனத்திற்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் சமீபத்திய வன்முறை குறித்து பேசிய பேராசிரியர் ஏ.கே.பாஷா, "இப்பகுதியில் இரத்தக்களரி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

மத்திய கிழக்கு-இந்தியா உரையாடலுக்கான மையத்தின் இயக்குநரான பேராசிரியர் ஏ.கே.பாஷா, ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் இருந்து வரும் படங்கள் பாலத்தீனர்களுக்கான உணர்வுகளில் "சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று நம்புகிறார், ஆனால் இஸ்ரேல் என்ன செய்கிறது அல்லது நிலத் தாக்குதல்களை நடத்தப் போகிறது என்பது "இஸ்ரேலுக்கான உணர்வுகளை முற்றிலுமாக அழித்துவிடும்" என்றார்.

ஹமாஸ் தாக்குதல்களின் விளைவு

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம்,PATRICIA DE MELO MOREIRA/AFP VIA GETTY IMAGES

ஹமாஸின் தாக்குதல்களின் விளைவாக, பாலத்தீனம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறும் நிதி உதவி குறித்து "மறுபரிசீலனை" செய்யப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பாலத்தீனத்திற்கு இந்த நிதி உதவி மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலத்தீனத்திற்கான ஐரோப்பிய யூனியனின் நிதி உதவி எந்த வகையிலும் இஸ்ரேலைத் தாக்கப் பயன்பட்டு விடக்கூடாது என்பதற்காக நிதியுதவி குறித்து உடனடியாக மறுபரிசீலனை செய்யப்படும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் தாக்குதல்களுக்கு பதிலளித்து, ஆஸ்திரியா பாலத்தீனத்திற்கான சுமார் $20 மில்லியன் நிதி உதவியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

பாலத்தீனத்திற்கான பொருளாதார உதவி குறித்து ஜெர்மனியிலும் விவாதம் நடந்து வருகிறது, அங்கு ஒரு அமைச்சர் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, "பாலத்தீனப் பகுதிகளுடன் எங்கள் முழு உறவும் மறுபரிசீலனை செய்யப்படும்" என்று கூறினார்.

பல பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் பகிரங்கமாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது, வேறு எந்த நாடு அல்லது குழுவும் இஸ்ரேலைத் தாக்க வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாதபடி, போர் விமானங்கள் மற்றும் கடற்படை போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பி வருகிறது.

காசாவை ஆளும் ஹமாஸிற்கு தனது மக்களிடம் என்ன பொறுப்பு உள்ளது மற்றும் மக்கள் மீதான பொருளாதார பாதிப்பு அல்லது இஸ்ரேலிய தாக்குதலுக்கு யார் பொறுப்பு ஏற்பார் என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம்,SAID KHATIB/AFP VIA GETTY IMAGES

 

இஸ்ரேல் பாலத்தீன் விவகாரத்தின் வரலாறு

இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான இந்த நீண்டகால சண்டை நிலத்திற்கானது.

இஸ்ரேலும் பாலத்தீனமும் அமைதியுடன் வாழ வேண்டிய இரண்டு தனி நாடுகள் என்று சர்வதேச சமூகம் பேசுகிறது, ஆனால் அனைத்து முயற்சிகளையும் தாண்டி இது நடக்கவில்லை.

பாலத்தீனர்கள், இஸ்ரேல் பல தசாப்தங்களாக தங்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி வருவதாகவும், இஸ்ரேல் தொடர்ந்து தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இஸ்ரேல் இன்னும் மேற்கு கரை பகுதியை ஆக்கிரமித்துள்ளது, ஆனால் காசாவை விட்டு வெளியேறிவிட்டது.

கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

காசா பகுதி பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸால் ஆளப்படுகிறது.

கடந்த காலங்களில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பல போர்கள் நடந்துள்ளன. ஆயுதங்கள் ஹமாஸைச் சென்றடையாதபடி இஸ்ரேலும் எகிப்தும் காசாவின் எல்லைகளை கடுமையாகக் கட்டுப்படுத்துகின்றன, ஆனால் இது பாலத்தீனர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

விரிவடையும் இஸ்ரேலியர்களின் குடியேற்றங்களும் பாலத்தீனயர்களின் கோபத்திற்கான ஒரு காரணமாகும்.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

லிபியா, ஜோர்டான் மற்றும் மால்டாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அனில் திரிகுணாயத் கூறுகையில், "பாலத்தீன பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்த பிரச்னை தொடரும். சர்வதேச சமூகம் இரு தரப்பும் ஒன்றாக வாழ வழி கண்டுபிடிக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்தியா-மேற்கு ஆசிய உரையாடலுக்கான மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஏ.கே.பாஷா கூறுகையில், "பாலத்தீன விவகாரம் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் மட்டுமல்ல, அரபு நாடுகளிலும், பாலத்தீன மக்களிடையே மட்டுமல்ல, முஸ்லிம்களிடையே மட்டுமல்ல, காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், பாலத்தீனர்களுக்கான ஆதரவு மெல்ல அதிகரித்து வருகிறது” என்றார்.

ஆனால், 'தி இந்து' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பர்த்தசாரதி இந்த கருத்துக்கு உடன்படவில்லை.

"எந்த ஒரு இன மற்றும் பிராந்திய மோதலையும் வன்முறையால் தீர்க்க முடியாது. குற்றமற்ற மக்கள் மீதான கொடூரமான தாக்குதல்கள் இந்த மோதலை மட்டுமே அதிகரிக்கும்" என்று அவர் கூறுகிறார்.

இது இஸ்ரேலின் 9/11 தருணம் என்றும் பேச்சுவார்த்தை மேசைக்கு ஒருபோதும் வராது என்றும் இஸ்ரேல் கூறியது.

"மீண்டும் வந்து பாலத்தீன மக்களிடம் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பழி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். பின்னர் இரு தரப்பிலும் உள்ள தீவிரவாதிகள் முன்னுக்கு வருவார்கள், இராணுவ விருப்பம் மேலோங்கும்."

https://www.bbc.com/tamil/articles/c040pxy9g8go

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இந்த மாலினி பார்த்தசாரதி புலிகளின் தீவிர எதிர்ப்பாளர் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லா, உந்த பிபிசி தமிழ் வெளிவருவது தில்லியிலிருந்து, எம்மை கருவறுக்க காத்திருக்கும் கருநாகங்களின் கூடரத்திலிருந்து என்பதை அறிந்துகொள்ளவும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, ஏராளன் said:

"குழந்தைகள் பிணையாக பிடிக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அது மிருகத்தனம், அது அமைதிக்கும் வழிவகுக்காது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் முடிவுக்கு கொண்டு வராது"

பலஸ்தீனக் குழந்தைகளை கதறக் கதற கொன்ற இஸ்ரேலின் செயல்..???!

ஈழத்தில் தமிழ் குழந்தைகளை குண்டு போட்டு.. தாரூத்தி.. தூக்குப் போட்டு.. கிருசாந்தி குமாரசாமி போன்ற பள்ளிப் பிள்ளைகளை வன்புணர்ந்து கொன்ற சிங்க அரசெல்லாம்.. சரியான மென்மை..?!

ஈழத்தில் 1990 இல் இருந்து 1996 வரை திட்டமிட்ட.. மின்சாரத் தடை.. உணவுப் பொருள் தடை.. எரிபொருள் தடை.. எல்லாம் வந்த போது.. உளறாதவர்கள்.. இப்போ.. எதற்கு எதனை ஒப்பிடுகிறார்கள்.

தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து தமிழ் மக்களை கொன்றும் விரட்டியும் வந்த.. ஆயுதமேந்திய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றகாரர்களையும் சிங்கள ஊர்காவல்படை.. மற்றும் முஸ்லிம் ஊர்காவல்படை..  ஜிகாத் கும்பல்களையும் புலிகள் தாக்கியதும்.. ஹமாஸ் இயக்கம்.. ஆயுதம் ஏந்தாத குடியேற்ற நோக்கில் வராத.. திருவிழாக் கொண்டாடக் காரர்களைக் கொன்றதும்.. ஒன்றா...??!

ஈழத்தில் பள்ளிகள்.. தேவாலயங்கள்.. இந்துக் கோவில்கள்.. ஆஸ்பத்திரிகள்.. பொது இடங்கள் மீது குண்டு மழை பொழிந்தது போல்.. இஸ்ரேல் காஸாவில் குண்டு மழை பொழிவது.. பொஸ்பரஸ் குண்டைக் கொட்டுவது..  மிருகத்தனமில்லாத.. மென்போக்கு போல..??!

மக்களை ஒன்று கூடச் சொல்லிவிட்டு.. ஐநா பள்ளிகள் மீது.. ஆஸ்பத்திரி மீது குண்டு வீசுவது.. முள்ளிவாய்க்காலில் செய்த.. அதே குற்றங்களுக்கு ஒப்பானது.. இதெல்லாம்.. மென்போக்கு..?!

ஆக இஸ்ரேல் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள் சிலவற்றின் ஆதரவோடு செய்யும் மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான மிலேச்சத்தனம்.. பயங்கரவாதம்.. கொடூரம் கிடையாது.. புலிகளும் கமாஸூம் செய்வது செய்தவை தான் பயங்கரவாதம்..  இது பிபிசி தமிழ் ஹிந்தியக் கூலிகளின் கண்டுபிடிப்பு.

பிபிசி ஆங்கிலம்.. கமாஸை தான் பயங்கரவாத இயக்கம் என்றே உச்சரிக்கப் போவதில்லை என்று கூறி விட.. இந்த உதிரிகளுக்கு எதற்கு தேவையில்லாத ஒப்பீடு. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Terrorism is a loaded word, which people use about an outfit they disapprove of morally. It's simply not the BBC's job to tell people who to support and who to condemn - who are the good guys and who are the bad guys.

https://www.bbc.co.uk/news/world-middle-east-67083432

பிபிசி தமிழின் இந்த எதேச்சதிகார.. ஹிந்திய பாசிச அரசுகளின் நோக்கங்களுக்காக வடிக்கப்படும் கருத்துக்களை இட்டு பிபிசி யிடம் முறைப்பாடுகள் பதியப்பட வேண்டும். தவறான ஒப்பீடுகளின் மூலம்.. ஈழத்தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான தேவைக்குரிய உரிமைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை பிபிசி தமிழ் ஹிந்தியக் கூலிகள் நிறுத்த செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/10/2023 at 18:09, ஏராளன் said:

'தி இந்து' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பர்த்தசாரதி X தளத்தில் எழுதியுள்ளார்: "இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பிரச்சினையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடூரத்தனம் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது போலவே, பாலத்தீன விவகாரத்திலும் (அல்லது அவர்களின் உரிமைகள் பிரச்சினையிலும்) தீவிரவாதிகள் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹமாஸின் கொடூரத்தனம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது."

IMG-4767.jpg

  • Thanks 1
  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்சியின் தலைவர் விடயம்! நாள்முழுதும் பேசி முடிவுகள் எட்டப்படாமல் முடிந்த கூட்டம்!  14 DEC, 2024 | 06:31 PM இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சனிக்கிழமை (14) இடம்பெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டது.  தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (14) காலை10.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெற்றது.  இதன்போது கூட்டம ஆரம்பிக்கமுன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா வருகைதராமல் கூட்டத்தை நடாத்தவேண்டாம் என தெரிவித்திருந்தார்.இதனால் கூட்டத்தில்  குழப்பநிலை ஏற்ப்பட்டது. பின்னர் மாவைசேனாதிராயா கூட்டத்திற்கு வருகைதந்திருந்தார். அதனைத்தொடர்ந்து கூட்டம் ஆரம்பமாகியது. இந்தநிலையில் மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதால் அவருக்கு பதிலாக வேறொருவர் தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்று ஒரு தரப்பினர் கேட்டுக்கொண்டதுடன், மற்றொருதரப்பினர் அவரே தொடர்ச்சியாக தலைவராக செயற்படவேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதனால் இன்றைய கூட்டம் முழுவதும் அந்த விடயம் தொடர்பாகவே பேசப்பட்டதுடன், முடிவுகள் எடுக்கப்படாமல் பிறிதொருநாள் அதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன்…. கட்சியின் கூட்டத்திற்கு தலைமைதாங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. மாவை சேனாதிராஜா கடந்த ஒக்டோபர் மாதத்திலே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன்பிறகு இடம்பெற்ற அரசியல் குழு கூட்டத்தில் அது தொடர்பாக செயலாளர் அவரிடம் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார். கடிதமும் அனுப்பியிருந்தார். இருப்பினும்அவர் அதற்கு பதில் சொல்லியிருக்கவில்லை. இதனால் செயலாளர் அவரது ராஜினாமா நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு அடுத்தகட்டநடவடிக்கையினை மேற்கொள்வதாக அவருக்கு அறிவித்திருக்கிறார்.  அதன்பின்னர் தனது ராஜினாமாவை மீள கைவாங்குவதாக அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளதாக காட்டப்படும் ஒரு கடிதம் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மூலம் செயலாளருக்கு அனுப்பபட்டிருந்தது. அதற்கு மறுநாள் மாவை அவர்களும் செயலாளருக்கு அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார்.  எனவே அவர் ராஜினாமா செய்திருப்பதால் கட்சியின் அடுத்த மாநாடுவரைக்கும் எஞ்சியிருக்கிற காலத்துக்கு மத்தியசெயற்குழு ஒருவரை தலைவராக நியமிக்க முடியும் என்ற எமது யாப்பின் அடிப்படையில் சிவிகே சிவஞானம் அவர்களை அந்த பதவிநிலைக்கு நியமிக்குமாறு முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.  இதேவேளை சேனாதிராஜா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றிருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற மாற்று முன்மொழிவும் சொல்லப்பட்டது. இதனால் குறித்த விடயம் தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. எனவே இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விடும்படியாக அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தரப்பினர் கேட்டுக்கொண்டனர். இறுதியில் அது வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் அதற்காக இன்னொரு கூட்டத்தை கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  கட்சியின் தலைவர் யார் என்று தெரியாத ஒரு நிலையிலேதான் அடுத்த கூட்டம் வரைக்கும் கட்சி பயணிக்க வேண்டியநிலையில் இருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/201292
    • திண்ணையை பற்றி திரும்பவும் வாய் திறக்கும் ஆக்களுக்கு கருக்கம் மட்டையால (அந்த இடத்திலதான்) அடிவிழும் என்று அதிபர் சொல்லப்போகின்றார்.
    • எரிக் சொல்கைமை அணுகி சத்தியமூர்த்தி அவர்களுக்கும் அர்ச்சனா அவர்களுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையை நல்லெண்ண அடிப்படையில் ஆரம்பித்து வைக்க இயலாதா? ஆனானப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பிலேயே தனிநபர்களுக்கும், பிரிவுகளுக்கும் இடையில் பல்வேறு போட்டிகள், சச்சரவுகள் காணப்பட்டன. தமிழருக்கு தனிநாடு எல்லாம் சரிவராது. ஒருத்தனுக்கு கீழ் அடிமையாக வாழவேண்டும் என்பதுதான் தலைவிதி.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.