Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

 

 

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

 

 

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு கடந்த ஓகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

 

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

 

 

இதன் பின்னர் 09.09.2023 அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

 

இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

 

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

https://www.madawalaenews.com/2023/11/i_90.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பெளத்த விரிவாக்கம் என்ற போர்வையில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு மில்லியன் கணக்கில் கொட்டிக்கொடுக்க ஹிந்தியாவும்.. சீனாவும் இருக்கும் போது.. புத்தருக்கு என்ன பஞ்சம். இதனை மேற்குலகம் ரசித்துக் கொண்டிருக்கும் நிலையில்.. புத்தருக்கு தெம்பு பிறக்காதா என்ன.

என்ன.. சீனா அடிப்படையில்.. பெளத்த சித்தாந்த நாடு.. அது பெளத்தத்திற்கு உதவுவது.. பெரிய விடயமல்ல.. ஆனால்.. ஹிந்தியா மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு முதுகில் குத்தும் காரியத்தையே செய்கிறது.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் ஹிந்திய அடிவருடிகளாக வாழாதிருப்பது தான் மிகக் கேவலமாக உள்ளது. 

ஒருவேளை சீனாவை முறையாக அணுகினால்.. கூட தமிழர்களுக்கு குறைந்த பட்ச நன்மையாவது கிடைக்கலாம். 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 திருமலை இலுப்பைக்குளத்தில் புத்தர் சிலை

Published By: VISHNU    06 NOV, 2023 | 05:43 PM

image

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளது.

IMG_20231106_125341.jpg

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்ற பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் திங்கட்கிழமை (06) காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் பின்னர் 09.09.2023 அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருமலை இலுப்பைக்குளம் விகாரையின் முக்கிய பதிவுகள்

2018 – விகாரை பதிவு செய்யப்பட்டது.

22.11.2021 – விகாரையின் கட்டுமானங்களுக்கான பிரதேச செயலாளரின் அனுமதி

09.12.2021 – பிரதேச செயலாளருக்கான புத்தசாசன அமைச்சின் விண்ணப்பம்

2023 – விகாரையின் மண்டபத்திற்கான கட்டுமானப்பணிகள் முன்னெடுப்பு

11.08.2023 – ஆளுநரினால் குறித்த பகுதியில் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

12.08.2023 – கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கோரி குறித்த பகுதியில் புத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

28.08.2023 – மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கச்சேரியில் இடம்பெற்ற நிலையில் கச்சேரிக்கு முன்னால் வீதியை மறித்து புத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் கூட்டத்திற்குள் சென்றும் குழப்பம் விளைவிக்கப்பட்டது. இதன்போது 2023.07.09 அன்று திருகோணமலை பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட தடை தொடர்பான கடிதத்தை மீறப்பெறுவதான கடிதம் வழங்கப்பட்டது. பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது.

03.09.2023 – குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் சாம்பல்தீவு மற்றும் அதற்கு அண்மையிலும் இடம்பெற்றது. தடையுத்தரவும் வழங்கப்பட்டது.

03.09.2023 – குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தடையுத்தரவு வழங்கப்பட்டது.

09.09.2023 – விகாரையின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டது.

22.09.2023 – விகாரையின் கட்டுமானங்களுக்காக நிதி ஒதுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரல அவர்களின் விண்ணப்பம்.

25.09.2023 – கட்டுமானப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

01.10.2023 – ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.

01.10.2023 – விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து சொல்ல முடியாமல் பொலிசாரினால் துரத்தியடிக்கப்பட்டார்கள்.

04.10.2023 – கட்டுமானப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன

13.10.2023 – மண்டபத்தின் கட்டுமானப்பணிகளின் கட்டு வேலைகள் நிறைவு பெற்றன.

06.11.2023 – இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/168661

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

1950 களிலிருந்து உவ்வாறு நடப்பவற்றை கால அட்டவணைப்படுத்தல் வேண்டும்,

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நன்னிச் சோழன் said:

1950 களிலிருந்து உவ்வாறு நடப்பவற்றை கால அட்டவணைப்படுத்தல் வேண்டும்,

அடடவணைப்படுத்தலாம். அதனால் ஏதாவது பயன் உண்டா என்பதுதான் பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
50 minutes ago, Cruso said:

அடடவணைப்படுத்தலாம். அதனால் ஏதாவது பயன் உண்டா என்பதுதான் பிரச்சினை.

என்ன பயனா?

ஐயனே... சிங்களவனின் ஒட்டு மொத்த வண்டவாளம் தண்டவாளத்தையும் வெளியில் கொண்டு வரலாம். இருந்து பாருங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, நன்னிச் சோழன் said:

என்ன பயனா?

ஐயனே... சிங்களவனின் ஒட்டு மொத்த வண்டவாளம் தண்டவாளத்தையும் வெளியில் கொண்டு வரலாம். இருந்து பாருங்கோ. 

நல்லது நடந்தால் நல்லதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தர் ஒரு நல்ல மனிதர், அரசியலே வேண்டாம் என சன்னியாசம் போன மனிதரை (கடவுளை) வைத்து அரசியல் செய்கிறார்கள், பாவம், அவர் ஒரு பக்கமாக இருந்துவிட்டு போகட்டுமே! எதற்காக தேவையில்லா சங்கடங்கள்?

இங்கு வெளிநாட்டில் பல தமழர்களது வீட்டில் அலங்கார பொருளாக புத்தர் கொலுவுற்றிருக்கிறார்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.