Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல். ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்ய சன்ரைசர்ஸுக்கு ஒரு புள்ளியே தேவை

16 MAY, 2024 | 06:45 PM
image
 

 

(நெவில் அன்தனி)

பாரத தேசத்தில் நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதி செய்வதற்கு ஒரே ஒரு புள்ளி தேவைப்படும் பெட் கமின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று இரவு தனது 13ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்தாடவுள்ளது.

இன்றைய போட்டி ஒருவேளை மழையினால் கழுவப்பட்டால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு புளளியைப்  பெற்று 15 புள்ளிகளுடன் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அல்லது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்.  

எவ்வாறாயினும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு இன்னும் ஒரு போட்டி பஞ்சாப் கிங்ஸுடன் மீதம் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது சொந்த மைதானத்தில் இன்றைய போட்டியை எதிர்கொள்வதால் அவ்வணிக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும் என கருதப்படுகிறது.

அதேவேளை, கொல்கத்தாவுடனான போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டதால் ப்ளே ஓவ் வாய்ப்பை முதலாவது அணியாக இழந்த குஜராத் டைட்டன்ஸ், தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் விடை பெற எதிர்பார்க்கிறது.

இந்த இரண்டு அணிகளும் முதல் சுற்றில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி சந்தித்துக்கொண்ட போது குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்களால் மிகவும் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.

இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்றே கூறத் தோன்றுகிறது.

ஆனால், இன்றைய போட்டியில் எந்த அணி தவறுகள் இழைக்காமல் மிகவும் திறமையாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும்.

எவ்வாறாயினும் இந்தப் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு தீர்மானம் மிக்க போட்டியாக அமைவதால் அவ்வணி வெற்றிபெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் என்பது உறுதி.

https://www.virakesari.lk/article/183728

மழையால மச் நடக்காது போல, அப்ப சன்ரைசர்ஸ் பிளேஓவ் உறுதி!

  • Like 1
  • Replies 257
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கிரிக்கட்டில் ஏன் பழைய பந்தில் விளையாடுகிறார்கள்?

பந்து பிய்ந்து போனால் ஒரு (Bond Bag)பொண்ட் பாக்குடன் ஓடிவருவார்கள்.

அதற்குள்ளும் புதிய பந்து இருக்காது.எல்லாமே ஓட்டை உடைசலாக இருக்கும்.

6 ஒட்டங்கள் எடுத்து வெளியே போன பந்தையும் தேடி எடுத்து தான் விளையாடுகிறார்கள்.

Baseball இல் புதிய புதிய பந்துகள்.வெளிய போன பந்தை யார் எடுக்கிறார்களோ அவருக்கே பந்து.

இப்படி கிரிக்கட்டில் இல்லாதது விசனமாக உள்ளது.

அமெரிக்காவில் போட்டிகள் நடக்கும்போது கிரிக்கட் போட்டியை முதன்முதலாக பார்வையிடுபவர் கையில் பந்து போனால் திரும்ப கொடுப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சன்ரைசர்ஸ் 3ஆவது அணியாக ப்ளே ஓவுக்கு தகுதி : நான்காவது இடத்திற்கு சென்னை, பெங்களூருக்கு இடையில் போட்டி

16 MAY, 2024 | 11:43 PM
image

(நெவில் அன்தனி)
இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிரமமின்றி முன்னேறியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் இடையில் ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை (16) இரவு நடைபெறவிருந்த 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 66ஆவது  போட்டி   மழையினால் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.


இதற்கு அமைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகளில் 15 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாகத் தகுதிபெற்றது.


ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தன.


இதேவேளை, இந்த மூன்று அணிகளைத் தொடர்ந்து 4ஆவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் அணி எது என்பதை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி தீர்மானிக்கவுள்ளது.


அப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றால் ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஓவ் வாய்ப்பை பெறும். இப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.


ஒருவேளை, அப் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டால் சென்னை சுப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளைப் பெற்ற ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும்.

https://www.virakesari.lk/article/183735

ipl-pt-16-05.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் மூன்று அணிகள் அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுவிட்டன. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி இருக்கும் முன்னரே லீக் ரேஸில் வென்று பிளே ஆஃபில் காலடி எடுத்து வைத்துவிட்டன. 

குஜராத், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டன. மீதமுள்ள ஒற்றை இடத்துக்கு நான்கு அணிகள் போட்டிபோடுகின்றன. ஆனால் இதில் டெல்லி அணிக்கு போட்டிகள் முடிந்துவிட்டன. அது 14 புள்ளிகளை எடுத்திருக்கிறது. லக்நௌ அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கடைசி போட்டி மீதமிருந்தது. இந்த போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும். ஆனால் இவ்விரு அணிகளும் மிக மோசமான ரன் ரேட் வைத்திருப்பதால் பிளே வாய்ப்பு வாய்ப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது. 

ஆக மீதமிருக்கும் ஒற்றை இடத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் நாளை மல்லுக்கட்ட உள்ளன. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜபிஎல்ல‌ அதிக‌ முறை ச‌ம்பிய‌ன் ஆன‌ மும்பை அணி

இர‌ண்டு முறை க‌ட‌சி இட‌த்தை பிடிச்சு இருக்கின‌ம்😁..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லக்னோவ் வெற்றியுடனும் மும்பை ஏமாற்றத்துடனும் விடைபெற்றன

Published By: VISHNU   18 MAY, 2024 | 12:57 AM

image

(நெவில் அன்தனி)

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 67ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது.

rohith.png

இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த இந்த இரண்டு அணிகளும் புகழ்ச்சிக்காக மாத்திரமே ஒன்றையொன்று எதிர்த்தாடிய நிலையில் அணித் தலைவர் கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடிகள், வீரர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றியுடன் விடைபெறவைத்தது.

அதேவேளை, 5 தடவைகள் சம்பியனான மும்பைக்கு கடைசிக் கட்டத்தில் நாமன் திர் வெளிப்படுத்திய அதிரடி உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் இறுதியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார மிகத் திறமையாக பந்துவீசி டெத் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்துவீசத் தயாராக இருப்பதை நுவன் துஷார வெளிப்படுத்தினார்.

இது இவ்வாறிருக்க, மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இந்தப் போட்டி அவரவர் அணிகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் போட்டியாக அமைந்தது.

இந்த இரண்டு அணிகளிலும் 3 வருட சுழற்சி காலத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இரவுப் பொழுது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. 

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.

கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் லக்னோவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது.

நிக்கலஸ் பூரண் 29 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் கே.எல் ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (28), அயுஷ் படோனி (22 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (12 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் நுவன் துஷார 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 29 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்  கைப்பற்றினர்.

215 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20   ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

டிவோல்ட் ப்ரெவிஸ், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 52 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த மும்பை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது.

ப்ரெவிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறும் அவரது இந்த வருட ஐபிஎல் பெறுதிகள் திருப்திகரமாக இருக்கவில்லை.

மத்திய வரிசையில் நாமன் திர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

நவீன் உல் ஹக்கின் முதல் பந்தை சிக்ஸாக பறக்கச் செய்தார் நாமன் திர். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸாக்க முயற்சித்தார். ஆனால், க்ருணல் பாண்டியா பவுண்டறி எல்லையில் உயரே தாவி ஒரு கையால் பந்தை பிடித்த வேகத்தில்  அந்தரத்தில் இருந்தவாறே பந்தை உள்ளே எறிந்துவிட்டு வெளியே வீழ்ந்தார். இதன் மூலம் அவர் 5 ஓட்டங்களைக் தடுத்தார். அதுவே லக்னோவின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்த பந்தில் இஷான் கிஷான் (14) ஆட்டம் இழக்க மும்பையின் வெற்றிக்கனவு தவிடுபொடியானது.

மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாமன் திர் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ரவி பிஷோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரண்

https://www.virakesari.lk/article/183821

ipl-pt-17-05.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க போட்டி தோனியின் பிரியாவிடை போட்டியாகவும் இது அமையலாம்!

18 MAY, 2024 | 03:36 PM
image
 

(நெவில் அன்தனி)

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (18) இரவு பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (19 புள்ளிகள்) ராஜஸ்தான் றோயல்ஸ் (16 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (15 புள்ளிகள்) ஆகிய 3 அணிகள் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதை ஏற்கனவே உறுதி செய்துகொண்டுள்ளன.

இந் நிலையில் ப்ளே ஓவ் சுற்று தகுதியைப் பெறப் போகும் நான்காவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியிலேயே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி, சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான அதிசிறந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரே ஒரு புள்ளியே சென்னைக்கு தேவைப்படுகிறது. இந்தப் போட்டி ஒருவேளை மழையினால் கைவிடப்பட்டால் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நான்காவது அணியாக சென்னை நுழையும்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஒவ் வாய்ப்பை பெற முடியும்.

உதாரணத்திற்கு வெற்றி இலக்கு 200 ஓட்டங்களாக இருந்தால் பெங்களூர் 2 18 ஓட்டங்களால் வெற்றிபெறவேண்டும். பதிலளித்து துடுப்பெடுத்தாடினால் 18.1 ஓவர்களுக்குள் வெற்றிபெற வேண்டும்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற போட்டிகள் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு சாதகமாகவே இருந்துள்ளது.

கடந்த 5 போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரே ஒரு தடவையே சென்னையை வெற்றிகொண்டுள்ளது.

ஆனால், இந்தப் போட்டி நொக் அவுட்டுக்கு ஒப்பானதாக இருப்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும்.

இரண்டு அணிகளினதும் இந்த வருட ஐபிஎல் முடிவுகளைப் பார்க்கும்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் கடந்த 5 போட்டிகளில் மேடு பள்ளங்களை சந்தித்து வந்துள்ளது.

எவ்வாறாயினும் கடந்த போட்டி முடிவுகளை வைத்து எந்த அணி வெற்றிபெறும் என்பதை அனுமானிக்க முடியாது.

இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் சிறப்பாக விளையாடுகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும்.

இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டியுடன் சென்னை வெளியேறினால் அப் போட்டி 43 வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் மஹேந்த்ர சிங் தோனிக்கு பிரியாவிடை போட்டியாக அமையும் என கருதகப்படுகிறது.

ஆனால், அது நிச்சயம் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

ஒருவேளை இது அவரது கடைசியாகப் போட்டியாக இருந்தால் தோனியும் கோஹ்லியும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடும் கடைசிப் போட்டியாகவும் இது அமையும்.

அணிகள் (பெரும்பாலும்)

சென்னை சுப்பர் கிங்ஸ்: ருத்துராஜ் கய்க்வாட் (தலைவர்), ரச்சின் ரவிந்த்ரா, டெரில் மிச்செல் அல்லது அஜின்கியா ரஹானே, ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி, மிச்செல் சென்ட்னர், ஷர்துல் தாகூர், மஹீஷ் தீக்ஷன, துஷார் தேஷ்பாண்டே.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் (தலைவர்), க்ளென் மெக்ஸ்வெல், ரஜாத் பட்டிடார், மஹிபால் லொம்ரோர், கெமரன் க்றீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள், கரண் ஷர்மா, மொஹமத் சிராஜ், லொக்கி பேர்கசன்.

csk_vs_rcb_ruturaj_and_fuf_du_plessis__1

csk_vs_rcb__1_.png

https://www.virakesari.lk/article/183877

  • கருத்துக்கள உறவுகள்
Posted

RCB vs CSK: கோலி, டுப்ளெஸ்ஸியை நெகிழ வைத்த ஆர்சிபி எழுச்சி - சிஎஸ்கே செய்த தவறுகள்

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

விராட் கோலியின் கண்களில் ஏறக்குறைய கண்ணீரே வந்துவிட்டது. டுப்ளெஸ்ஸியால் மகிழ்ச்சியை, உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. மகேந்திர சிங் தோனியை இதுபோல் விரக்தியான மனநிலையில், யாரும் பார்த்தது இல்லை, போட்டி முடிந்தபின் அவரை யாரும் பார்க்க முடியவில்லை.

இதுபோன்று ஏராளமான உணர்ச்சிகரமான சம்பவங்கள், திருப்பங்கள், சுவாரஸ்யம் நிறைந்த காட்சிகள் நேற்று பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடந்தது.

பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. 219 ரன்கள் சேர்த்தால் வெற்றி, 201 ரன்கள் சேர்த்தால் ப்ளே ஆஃப் சுற்று என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆனால், 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து 27 ரன்களில் தோல்வி அடைந்தது. ப்ளே ஆஃப்புக்கு செல்ல முடியாமல் 10 ரன்களில் சிஎஸ்கே வெளியேறியது.

 

மூன்று வாரங்களுக்கு முன்

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆர்சிபி அணி இந்த சீசனை மிகவும் மோசமாகத் தொடங்கியது. சிஎஸ்கேவுடன் முதல் போட்டியில் தோல்வி, அதன்பின் 8 போட்டிகளில் ஒரே வெற்றி மட்டுமே ஆர்சிபி பெற்றது. கடந்த 3 வாரங்களுக்கு முன்புவரை ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.

ஆர்சிபி அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், விடா முயற்சி, தன்னம்பிக்கை போராட்ட குணம் ஆகியவற்றை கடந்த 6 போட்டிகளிலும் வெளிப்படுத்தி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறியுள்ளது.

ஆர்சிபி அணி 68 போட்டிகளுக்குப் பின்

ஆர்சிபி அணி ஐபிஎல் டி20 தொடரில் 9வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறியுள்ளது. அதேநேரம், சிஎஸ்கே அணி 3வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுகிறது.

ஏறக்குறைய 68 போட்டிகளுக்குப் பின்புதான் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடப் போகும் 4வது அணி தேர்வாகியுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி என 4 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வந்தாலும் எந்த அணி யாருடன் மோதப் போகிறது என்பது இன்று நடக்கும் 2 ஆட்டங்களுக்குப் பின்புதான் தெரிய வரும்.

ஆர்சிபியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக நடுவரிசையில் பட்டிதார், கேமரூன் அடித்த ஸ்கோர், கேப்டன் டுப்ளெஸ்ஸியின் அரைசதம், அற்புதமான கேட்ச், ஃபீல்டிங் ஆகியவற்றைக் கூறலாம். இதைவிட முக்கியமானது கடைசி 2 பந்துகளை டிபெண்ட் செய்த யாஷ் தயாலின் பந்துவீச்சு என பலவற்றைப் பட்டியலிடலாம். ஆனால், இறுதியாக ஆட்டநாயகன் விருது கேப்டன் டுப்ளெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.

 

'ஆட்டநாயகன் நான் இல்லை'

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆர்சிபி கேப்டன் டுப்ளெஸ்ஸி கூறுகையில் “என்ன மாதிரியான ஆட்டம். அற்புதமான சூழல். உள்நாட்டு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சி. ராஞ்சியில் 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய உணர்வு இருந்தது.

நாங்கள் 175 ரன்களுக்குள் டிபெண்ட் செய்யத் திட்டமிட்டோம். இந்த வெற்றி பெருமையாக இருக்கிறது. பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் என பலரும் பங்களிப்பு செய்தனர்.

என்னைப் பொருத்தவரை ஆட்டநாயகன் விருதை யாஷ் தயாலுக்கு அர்ப்பணிக்கிறேன். ஆர்சிபி-சிஎஸ்கே ஆட்டம் உண்மையில் அற்புதமானது, ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி, வெற்றிக்கு அவர்களின் ஆதரவும் காரணம்,” எனத் தெரிவித்தார்.

ஆர்சிபி மீண்டு வர யார் காரணம்?

தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து துவண்டிருந்த ஆர்சிபி அணி, தொடரைவிட்டே வெளியேறும் நிலையில் இருந்தது. ஆனால், ஆர்சிபி பேட்டர்கள் காட்டிய தன்னம்பிக்கை, விடாமுயற்சி அணியைக் கட்டி இழுத்து மேலே அழைத்து வந்தது.

குறிப்பாக இதே பெங்களூரு மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணி 288 ரன்கள் சேர்த்தபோது, ஆர்சிபி 262 ரன்கள் சேர்த்து பதிலடி கொடுத்தது. இந்த ஆட்டம்தான் ஆர்சிபிக்கு திருப்புமுனையாக மாறியது.

இவ்வளவு தகுதியான பேட்டர்கள் இருப்பதை ஆர்சிபி உணர்ந்தது. அதன் விளைவு, அடுத்த 7 போட்டிகளில் ஆர்சிபியின் ரன்ரேட் 11.37 ஆக எகிறியது. ஆனால், முதல் 6 போட்டிகளில் ஆர்சிபியின் ரன்ரேட் 8.94 ஆகத்தான் இருந்தது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி தனது நம்பிக்கையை மேம்படுத்திக்கொண்டது.

 

'வின்டேஜ்' கோலி

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கோலியை பார்த்த உணர்வு ரசிகர்களுக்கு இந்த சீசனில் அவரது ஆட்டத்தைப் பார்த்தபோது ஏற்பட்டது. 2016இல் கோலி 973 ரன்கள் 4 சதங்களை விளாசினார். இந்த சீசனில் ஆர்சிபி அணி தொடர்ந்து பெற்ற 5 வெற்றிகளில் கோலி 3 அரைசதங்களை அடித்து கோலி 708 ரன்களை விளாசியுள்ளார். அது மட்டுமல்லாமல் இதுவரையில்லாத வகையில் இந்த சீசனில் கோலியின் சிக்ஸர் அடிக்கும் திறன் மேம்பட்டு 37 சிக்ஸர்களை விளாசி முன்னணியில் இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பவர்ப்ளேவில் அணியின் ரன்ரேட்டை உயர்த்தும் வித்தையைக் கற்றுள்ள கோலி, கடந்த 7 போட்டிகளில் 193 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். ஆனால், முதல் 6 போட்டிகளில் 161 ஸ்ட்ரைக் ரேட்டில் கோலி பேட் செய்தார். 2024 சீசனில் இதுவரை கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 163 ஆக இருக்கிறது.

விராட் கோலி சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார், பவர்ப்ளேவில் சுழற்பந்துவீசப்பட்டாலே கோலியின் ரன் சேர்க்கும் திறன் குறைந்துவிடுகிறது என்ற விமர்சனத்துக்கு நேற்று சான்ட்னர், ஜடேஜா ஓவர்களில் சிக்ஸர்களை விளாசி பதிலடி கொடுத்தார். இந்த சீசனில் முதல் 9 போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக கோலி 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த நிலையில், அடுத்த 4 போட்டிகளில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 167 ஆக உயர்ந்தது.

இந்த ஆட்டத்திலும் 40 நிமிடங்கள் மழைக்குப் பின் ஆட்டம் தொடங்கியபோது, திடீரென சிஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆர்சிபி ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஆனால், கோலி துணிச்சலாக சான்ட்னர், ஜடேஜா ஓவர்களை குறிவைத்து அடித்து மீண்டும் ரன்ரேட்டை உயர்த்தினார்.

 

பட்டிதார், கிரீன், ஜேக்ஸ் எழுச்சி

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபி தோல்விக்குப் பின் மேக்ஸ்வெல் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 6 இன்னிங்ஸ்களாக நான் வெறும் 32 ரன்கள் மட்டும்தான் சேர்த்துள்ளேன். என்னால் சரிவர பேட் செய்ய முடியவில்லை. ஆதலால், என்னை அணி நிர்வாகம் ப்ளேயிங் லெவனில் இருந்து விலக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அதன்பின் மேக்ஸ்வெல் இடத்துக்கு வில் ஜேக்ஸ் கொண்டுவரப்பட்டார். தனது 3வது ஆட்டத்தில் 22 பந்துகளில் ஜேக்ஸ் அரைசதம் அடித்தார். பஞ்சாப் அணிக்கு எதிராக 25 பந்துகளில் அரைசதமும், அடுத்த 10 பந்துகளில் சதத்தையும் ஜேக்ஸ் எட்டி நடுவரிசைக்கு நம்பிக்கையூட்டினார்.

அது மட்டுமல்லாமல் ரஜத் பட்டிதார், லாம்ரோர், கேமரூன் என நடுவரிசையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேட் செய்யத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக நடுவரிசை ஓவர்களில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பட்டிதர் ஆக்ரோஷ ஆட்டத்தை கடந்த 7 போட்டிகளில் வெளிப்படுத்தினார். இந்த 7 போட்டிகளில் மட்டும் பட்டிதார் 254 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி 135 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இந்த ஆட்டத்திலும் 41 ரன்கள் விளாசிய பட்டிதாரால் ஆர்சிபி அணி இந்த சீசனில் 6வது முறையாக 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது.

இதில் பட்டிதாரின் 5 அரை சதங்களும் 30 பந்துகளுக்குள் அடிக்கப்பட்டவை, பெரும்பாலும் சுழற்பந்துவீச்சில் வெளுக்கப்பட்டவை. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பட்டிதார் சதம் அடித்தபோது, ரஷித் கான் ஓவரில் மட்டும் 6,6,4,6,6 என வெளுத்தார்.

அதேபோல தினேஷ் கார்த்திக், கேமரூன் க்ரீன் ஆகியோரும் கடந்த 7 போட்டிகளாக நடுவரிசையின் கட்டமைப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். இதேபோன்றுதான் நேற்றைய ஆட்டத்திலும் நடுவரிசைக்கு பட்டிதாரும், கேமரூனும் பெரும் பலமாகவும் சிஎஸ்கேவுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தனர். 7 முதல் 16 ஓவர்கள் வரை ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்தது. ஆனால் சிஎஸ்கே அணி 80 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

 

பந்துவீச்சில் முன்னேற்றம்

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆர்சிபி அணியின் பந்துவீச்சு கடந்த 7 போட்டிகளாக முன்னேறி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனை வளர்த்துக்கொண்டது. முதல் 8 போட்டிகளில் ஆர்சிபி அணி 38 விக்கெட்டுகளை வீழ்த்தியது, எக்கானமி ரேட்டும் 10க்கும் அதிகமாக இருந்தது. குறிப்பாக சிராஜ் 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார்.

ஆனால், கடந்த 5 போட்டிகளில் ஆர்சிபி பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. கடந்த 5 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்சிபி 20 சராசரி வைத்தது, கொல்கத்தாவுக்கு அடுத்தாற்போல் 14 ஸ்ட்ரைக் ரேட் பந்துவீச்சில் வைத்துள்ளது.

முதல் சில போட்டிகளில் மயங்க் தாகர், மேக்ஸ்வெலுக்கு பந்துவீச ஆர்சிபியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கரன் ஷர்மா முதல் 6 போட்டிகளில் தேர்வு செய்யப்படவே இல்லை. ஆர்சிபியின் சுழற்பந்துவீச்சு பலவீனமாக இருந்தது.

ஆனால் 9வது ஆட்டத்தில் ஸ்வப்னில் சிங் வந்து சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மார்க்ரம், கிளாசன் விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஆர்சிபியின் சுழற்பந்துவீச்சுக்கு உயிர் அளிக்கப்பட்டது. சுழற்பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் பந்துவீசினர். அது மட்டுமல்லாமல் ஸ்வப்னில் சிங்கோடு, யாஷ் தயால், கேமரூன் ஆகியோரும் கடந்த சில போட்டிகளாக விக்கெட் வீழ்த்தும் திறனை மேம்படுத்தினர்.

குறிப்பாக யாஷ் தயால் நேற்று முதல் ஓவரில் கைப்பற்றிய மிட்ஷெல் விக்கெட்டும், கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டை சாய்த்து, கடைசி 2 பந்துகளை வீசிய விதமும்தான் ஆட்டத்தின் மையப்புள்ளியாக இருந்தது.

 

சிஎஸ்கே செய்த தவறுகள்

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் பேட் செய்தாதது சிஎஸ்கே தோல்விக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக சிஎஸ்கே பந்துவீச்சு திறனற்று இருந்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 63 ரன்களையும், கடைசி 5 ஓவர்களில் 83 ரன்களையும் சிஎஸ்கே அணி விட்டுக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் நடுப்பகுதி ஓவர்களான 7 முதல் 16 ஓவர்கள் வரை 113 ரன்களை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆர்சிபிக்கு வாரி வழங்கினர். தீக்சனா, சான்ட்னர் இருவரைத் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களுமே ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல் வழங்கினர்.

பேட்டிங்கில் கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத பேட்டர்களின் நிலை நேற்றும் தொடர்ந்தது. குறிப்பாக ஷிவம் துபே கடந்த 5 போட்டிகளாக 10 ரன்களைக்கூட தாண்டாத நிலையில் நேற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே இந்த சீசன் முழுவதும் ஃபார்மில் இல்லை என்பதை நேற்றும் 33 ரன்களில் ஆட்டமிழந்து நிரூபித்தார். கடந்த சீசனில் ரஹானே ஆடிய விதத்துக்கும் இந்த சீசனில் அவரின் பேட்டிங்கிற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.

ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் இந்த சீசனில் சில போட்டிகளில் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டார். மற்ற வகையில் நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் தவறான ஷாட்டை ஆடி 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அது மட்டுமல்லாமல் கேப்டன் கெய்க்வாட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது, சிஎஸ்கே தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில் பேட்டிங்கில் கெய்க்வாட்டை தவிர வேறு எந்த பேட்டரும் கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லை.

சிஎஸ்கே முன்னாள் சாம்பியன், தோனி இருக்கிறார், கெய்க்வாட் ஃபார்ம் ஆகிய பெரிய அடையாளத்துடனே கடந்த சில போட்டிகளை சிஎஸ்கே வென்றது. ஆனால், அந்த அடையாளங்களை ஆர்சிபி தகர்த்தவுடன் சிஎஸ்கேவின் நிலை மோசமானது.

 

கெய்க்வாட் என்ன சொல்கிறார்?

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “பெங்களூரு ஆடுகளம் சிறப்பானது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சிறிதளவு ஒத்துழைத்தது. 14 போட்டிகளில் 7 வெற்றிகளும் அருமையானவை.

கான்வே, பதீராணா ஆகியோரின் காயம், முஸ்தபிசுர் இல்லாதது அணியில் சமநிலை இல்லாத சூழலை ஏற்படுத்தி கடினமாக்கியது. வீரர்கள் காயமடையும்போது, அணியில் சமநிலை ஏற்படுத்துவது சிரமமான விஷயம். ஆனாலும் நடப்பவை நடந்தன. வெற்றிக்காக முழுமையாக உழைத்தோம் முடியவில்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு தோல்வி வேதனைதான்,” எனத் தெரிவித்தார்.

தோனியும் தோல்விக்கு ஒரு காரணமா?

சிஎஸ்கே கேப்டன்ஷிப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனி வழங்கினாலும், இன்னும் தோனியால் முழுமையான பங்களிப்பை இந்த சீசனில் வழங்க முடியவில்லை. இந்த சீசனில் 14 போட்டிகளிலும் தோனி கடைசி வரிசையில்தான் களமிறங்கினார்.

ஐபிஎல் 2024: RCB vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

கேப்டன் பொறுப்பு இல்லாத நிலையில் அணிக்கு பொறுப்பெடுத்து முன் வரிசையில், நடுவரிசையில் தோனி களமிறங்கி குறைந்தபட்சம் கேமியோ ஆடிக் கொடுத்திருக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி போன பிறகு ரோஹித் சர்மா பல போட்டிகளில் ஆடிய விதம் குறிப்பிடத்தக்கது. அந்த அளவுகூட தோனியால் விளையாட முடியாமல் கடைசி வரிசைக்கே முன்னுரிமை கொடுத்தார்.

இதனால், சிஎஸ்கே அணி தனது முழுமையான ரன் சேர்க்கும் திறனை இந்த சீசனில் இழந்துவிட்டது. உதாரணமாக தோனியால் அரைசதம் அடிக்க முடியும் என்ற நிலை இருந்தாலும், அவர் அதை விரும்பாலும் கடைசி வரிசையில், சில பந்துகள் இருக்கும்போது களமிறங்கியபோது, சிஎஸ்கேவுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான ரன் பலன் கிடைக்கவில்லை.

தோனி “தி கிரேட் ஃபினிஷர்” என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருந்தாலும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் சீனியர் வீரர் என்ற முறையில் 'ஆங்கர் ரோல்' எடுத்து தோனி நடுவரிசையில் களமிறங்கி இருக்கலாம் என்ற விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

ஃபினிஷர் என்ற பெயரை தக்கவைக்கும் பொருட்டு கடைசியில் களமிறங்கியது எந்தவிதத்திலும் பலன் அளிக்கவில்லை. அது நெருக்கடியை ஏற்படுத்தி சிஎஸ்கே தோல்விக்கு காரணமாகியது என்றும் ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய வியாஸ்காந்த்

2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் (vijayakanth viyaskanth) தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் (SRH) ஆகிய இரண்டு அணிகளுக்கிடையில் இன்று நடைபெறும் போட்டியிலே குறித்த விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

எதிரணியான பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிறப்பாக துடுப்பாட்டம் செய்த பிரப்சிம்ரன் சிங் இன் விக்கெட்டை இவர் 14.2ஆவது ஓவரில் வீழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய வியாஸ்காந்த் | Vijayakanth Viyaskanth Gets His Maiden Ipl Wicket

இரண்டாவது போட்டி

 

விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐ.பி.ல் தொடரில் விளையாடும் இரண்டாவது போட்டி இதுவாகும்.

இதேவேளை நடைபெறவுள்ள T-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில்  இலங்கை அணியில் உதிரி வீரராக வியாஸ்காந்த் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/vijayakanth-viyaskanth-gets-his-maiden-ipl-wicket-1716121759

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசிப் போட்டியில் பஞ்சாபை 4 விக்கெட்களால் வென்றது ஹைதராபாத்; ஐபிஎல்லில் வியாஸ்காந்த் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்

Published By: VISHNU   19 MAY, 2024 | 08:30 PM

image

(நெவில் அன்தனி)

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற 69ஆவது போட்டியில் 4 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 17 புள்ளிகளுடன்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

எனினும், இரவு நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிபெற்றால் அவ்வணி மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏற்கனவே ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்துகொண்டிருந்ததாலும் பஞ்சாப் கிங்ஸ் அந்த வாய்ப்பை இழந்திருந்ததாலும் இந்தப் போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய யாழ். மைந்தனும் இலங்கை வீரருமான விஜயகாந்த் வியாஸ்காந்த் திறமையாக பந்துவீசி 37 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஐபிஎல் போட்டியில் ப்ரப்சிம்ரன் சிங்கின் விக்கெட்டே வியாஸ்காந்த்தின் முதலாவது விக்கெட்டாக பதிவானது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெத்தாடத் தீர்மானித்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை வீரர்கள் மூவரும் மத்திய வரிசை வீரர் ஒருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி பஞ்சாப் கிங்ஸின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.

ஆதர்வா டெய்டுடன் 55 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த ப்ரப்சிம்ரன் சிங் தொடர்ந்து ரைலீ ருசோவ்வுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

ஆதர்வா டெய்ட் 27 பந்துகளில் 46 ஓட்டங்களையும் ப்ரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களையும் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (174 - 3 விக்)

மொத்த எண்ணிக்கை 181 ஓட்டங்களாக இருந்தபோது ரைலி ருசோவ் 49 ஓட்டங்களுடன் வெளியேறினார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களை விளாசினார்.

ஜிட்டேஷ் ஷர்மா 15 பந்துகளில் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் தங்கராசு நடராஜன் 33  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முதல் பந்திலேயே ட்ரவிஸ் ஹெட் ஆட்டம் இழந்தது சன்சைரர்ஸ் ஹைதாராபாத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஆனால், அபிஷேக் ஷர்மா உட்பட நான்கு துடுப்பாட்ட வீரர்கள் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

ராகுல் த்ரிபதியுடன் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டியுடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களையும் பகிர்ந்த அபிஷேக் ஷர்மா அணியைப் பலப்படுத்தினார்.

ராகுல் த்ரிபதி 18 பந்துகளில் 33 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து நிட்டிஷ் குமார் ரெட்டியும்ஹென்றிச் க்ளாசனும் 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

நிட்டிஷ் குமார் ரெட்டி 25 பந்துகளில் 37 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசன் 26 பந்துகளில் 46 ஓட்டங்களையும் குவித்து தமது அணி வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

ஷாஹ்பாஸ் அஹ்மத் 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

அப்துல் சமாத் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் சன்விர் சிங் ஆட்டம் இழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 37 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷால் பட்டேல் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/183982

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/5/2024 at 12:38, ஈழப்பிரியன் said:

 

கிரிக்கட்டில் ஏன் பழைய பந்தில் விளையாடுகிறார்கள்?

பந்து பிய்ந்து போனால் ஒரு (Bond Bag)பொண்ட் பாக்குடன் ஓடிவருவார்கள்.

அதற்குள்ளும் புதிய பந்து இருக்காது.எல்லாமே ஓட்டை உடைசலாக இருக்கும்.

6 ஒட்டங்கள் எடுத்து வெளியே போன பந்தையும் தேடி எடுத்து தான் விளையாடுகிறார்கள்.

Baseball இல் புதிய புதிய பந்துகள்.வெளிய போன பந்தை யார் எடுக்கிறார்களோ அவருக்கே பந்து.

இப்படி கிரிக்கட்டில் இல்லாதது விசனமாக உள்ளது.

அமெரிக்காவில் போட்டிகள் நடக்கும்போது கிரிக்கட் போட்டியை முதன்முதலாக பார்வையிடுபவர் கையில் பந்து போனால் திரும்ப கொடுப்பாரா?

இந்தக் கேள்விகளுக்கு யாருக்காவது பதில் தெரியுமா?

@Eppothum Thamizhan @கந்தப்பு @வீரப் பையன்26@கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கிரிக்கட்டில் ஏன் பழைய பந்தில் விளையாடுகிறார்கள்?

விளையாட்டின் இடையில் பந்து பழுதானால் அல்லது உருவம் மாறினால், அந்த ஓவரளவு பாவித்த பழைய பந்துகளில் ஒன்றை அம்பயர் இரு அணிகளின் கப்டன்களின் ஒப்புதலோடு பாவிப்பார். புதிய பந்தை பாவித்தால் bowling க்கு சாதகமாகிவிடும்.

நேற்றைய போட்டியில் தோனி பந்தை மைதானத்தைவிட்டு வெளியே அனுப்பியது (110 மீற்றர் சிக்ஸ்) RCB க்கு சாதகமாகிவிட்டது என்று சொல்கின்றார்கள்.  வேறு பந்தைக் கொண்டுவந்ததால் பந்துவீச்சாளருக்கு இலகுவாகிவிட்டது!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கேள்விகளுக்கு யாருக்காவது பதில் தெரியுமா?

@Eppothum Thamizhan @கந்தப்பு @வீரப் பையன்26@கிருபன்

இப்போது மூன்று வ‌கை கிரிக்கேட் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

ஜ‌ந்து நாள் விளையாட்டில் ந‌டுவ‌ர்க‌ள் ப‌ந்து அவ‌ர்க‌ள் வைச்சு இருக்கும் வ‌ட்ட‌த்துக்கை போனால் ப‌ந்து தேய்ந்து விட்ட‌து என்று அர்த்த‌ம் அத‌ற்க்கு பிற‌க்கு புது ப‌ந்தை கொடுப்பின‌ம்...................புது ப‌ந்தை எதிர் கொள்வ‌து சிர‌ம‌ம் ப‌ழைய‌ ப‌ந்து என்றால் ப‌ந்து போடும் திசையை நோக்கி ச‌ரியாக‌ போகாது.............................20ஓவ‌ர் விளையாட்டில் புது ப‌ந்து கொடுக்கும் போது அது கைச் பிடிக்க‌ ஈசியா இருக்கும் அதே தேய்ந்த‌ ப‌ந்து உய‌ர‌த்தில் இருந்து வ‌ரும் போது அதை க‌ணிச்சு ஓடி பிடிப்ப‌து சிர‌ம‌ம்

 

புது ப‌ந்து எப்ப‌வும் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாய் இருக்கும்......................ஜ‌ந்து நாள் விளையாட்டில் புது ப‌ந்து ந‌டுவ‌ர் கொடுத்தால் எதிர் அணி ம‌ட்டை வீர‌ர்க‌ள் அதுக்கு ஏற்ற‌ போல் விளையாட‌னும் புது ப‌ந்தில் ப‌ல‌ வித‌மாய் போட‌லாம்

 

நான் 2003ம் ஆண்டு தான் முத‌ல் முறை கொக் ப‌ந்தில் விளையாடினேன் ரெனிஸ் ப‌ந்தில் கிரிக்கேட் விளையாடுவ‌து ஈசி ப‌ல‌ த‌ட‌வை விளையாடின‌ கொக் ப‌ந்தில் கைச் பிடிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் உய‌ர‌த்தில் இருந்து வ‌ரும் போது அதிக‌ம் பாவிச்ச‌ கொக் ப‌ந்தை பிடிக்க‌ ஏலாது 

அதே புது ப‌ந்து என்றால் கைச் பிடிக்க‌ ஈசி

 

சில‌ வெஸ்வோள் ப‌ந்து ர‌சிக‌ர்க‌ள் பிடிச்சாலும் அதை மைதான‌த்துக்கை எறிந்தும் இருக்கின‌ம்..............................அமெரிக்காவில் MLB    BASEBALL விளையாட்டில்................................................. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

விளையாட்டின் இடையில் பந்து பழுதானால் அல்லது உருவம் மாறினால், அந்த ஓவரளவு பாவித்த பழைய பந்துகளில் ஒன்றை அம்பயர் இரு அணிகளின் கப்டன்களின் ஒப்புதலோடு பாவிப்பார். புதிய பந்தை பாவித்தால் bowling க்கு சாதகமாகிவிடும்.

நேற்றைய போட்டியில் தோனி பந்தை மைதானத்தைவிட்டு வெளியே அனுப்பியது (110 மீற்றர் சிக்ஸ்) RCB க்கு சாதகமாகிவிட்டது என்று சொல்கின்றார்கள்.  வேறு பந்தைக் கொண்டுவந்ததால் பந்துவீச்சாளருக்கு இலகுவாகிவிட்டது!

 

2 hours ago, வீரப் பையன்26 said:

இப்போது மூன்று வ‌கை கிரிக்கேட் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

ஜ‌ந்து நாள் விளையாட்டில் ந‌டுவ‌ர்க‌ள் ப‌ந்து அவ‌ர்க‌ள் வைச்சு இருக்கும் வ‌ட்ட‌த்துக்கை போனால் ப‌ந்து தேய்ந்து விட்ட‌து என்று அர்த்த‌ம் அத‌ற்க்கு பிற‌க்கு புது ப‌ந்தை கொடுப்பின‌ம்...................புது ப‌ந்தை எதிர் கொள்வ‌து சிர‌ம‌ம் ப‌ழைய‌ ப‌ந்து என்றால் ப‌ந்து போடும் திசையை நோக்கி ச‌ரியாக‌ போகாது.............................20ஓவ‌ர் விளையாட்டில் புது ப‌ந்து கொடுக்கும் போது அது கைச் பிடிக்க‌ ஈசியா இருக்கும் அதே தேய்ந்த‌ ப‌ந்து உய‌ர‌த்தில் இருந்து வ‌ரும் போது அதை க‌ணிச்சு ஓடி பிடிப்ப‌து சிர‌ம‌ம்

 

புது ப‌ந்து எப்ப‌வும் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாய் இருக்கும்......................ஜ‌ந்து நாள் விளையாட்டில் புது ப‌ந்து ந‌டுவ‌ர் கொடுத்தால் எதிர் அணி ம‌ட்டை வீர‌ர்க‌ள் அதுக்கு ஏற்ற‌ போல் விளையாட‌னும் புது ப‌ந்தில் ப‌ல‌ வித‌மாய் போட‌லாம்

 

நான் 2003ம் ஆண்டு தான் முத‌ல் முறை கொக் ப‌ந்தில் விளையாடினேன் ரெனிஸ் ப‌ந்தில் கிரிக்கேட் விளையாடுவ‌து ஈசி ப‌ல‌ த‌ட‌வை விளையாடின‌ கொக் ப‌ந்தில் கைச் பிடிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் உய‌ர‌த்தில் இருந்து வ‌ரும் போது அதிக‌ம் பாவிச்ச‌ கொக் ப‌ந்தை பிடிக்க‌ ஏலாது 

அதே புது ப‌ந்து என்றால் கைச் பிடிக்க‌ ஈசி

 

சில‌ வெஸ்வோள் ப‌ந்து ர‌சிக‌ர்க‌ள் பிடிச்சாலும் அதை மைதான‌த்துக்கை எறிந்தும் இருக்கின‌ம்..............................அமெரிக்காவில் MLB    BASEBALL விளையாட்டில்................................................. 

 

தகவல்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோலியின் 16 ஆண்டு கனவை சாம்ஸனின் தோனி போன்ற வியூகங்கள் கலைக்குமா?

RCB vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடரின் 2024ஆம் ஆண்டு சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் எந்தெந்த அணிகள் யாருடன் மோதுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தற்காலிகமாக 2வது இடத்தை 17 புள்ளிகளுடன் பிடித்திருந்தது.

அதேசமயம், குவஹாட்டியில் கொல்கத்தா அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டம், 2வது இடத்தை பிடிப்பவர் யார் என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாக இருந்தது. ஆனால் குவஹாட்டியில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

RCB vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

கொல்கத்தா அணி முதலிடம்

கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 2 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் 20 புள்ளிகளுடன் 1.428 நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடித்தது. ராஜஸ்தான் அணியும், சன்ரைசர்ஸ் அணியும் சரிசமமாக 17 புள்ளிகள் பெற்றன.

ராஜஸ்தான் அணியின் நிகர ரன்ரேட் 0.273 ஆக இருந்தது. ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் 0.414 ஆக உயர்வாக இருந்ததால், அந்த அணி 2வது இடத்தைப் பிடித்தது. ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

குவஹாட்டியில் நடக்கவிருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதாக அறிவித்த நடுவர்கள் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கினர்.

ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் வெற்றிகளைக் குவித்து முதலிடம் மற்றும் 2வது இடத்தில் நீடித்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்தது. கொல்கத்தா அணியும் கடந்த 2 ஆட்டங்களாக விளையாடாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது.

RCB vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.  

ராஜஸ்தான் Vs ஆர்சிபி

அகமதாபாத்தில் நரேந்திர மோதி மைதானத்தில் (21ஆம் தேதி) நாளை நடக்கும் முதல் தகுதிச்சுற்றில், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து 2வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

நாளை மறுநாள் (22ஆம் தேதி) நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 3வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து 4-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

(வெளியேற்றுதல் சுற்று)எலிமினேட்டர் சுற்றில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணி தனது முதல் 8 ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் வென்றிருந்தது. ஆர்சிபி அணி தனது முதல் 8 ஆட்டங்களில் 7 போட்டிகளில் தோற்றிருந்தது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தானும், கடைசி இடத்துக்கு சரிந்த ஆர்சிபியும், தற்போது எலிமினேட்டரில் மோத இருக்கிறது.

RCB vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

ராஜஸ்தான் அணியில் வெளிநாட்டு வீரர்கள் கடந்த சில போட்டிகளாக பெரிதாக ஸ்கோர் செய்யாதது பெரிய பின்னடைவாகும். அந்த அணி பெற்ற பல வெற்றிகளில் உறுதுணையாக இருந்த ஜாஸ் பட்லர் உலகக் கோப்பைத் தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட டாம் கோஹ்லர் காட்மோர் 2 போட்டியில் ஆடி பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டமும் நிலையாக இல்லை. நடப்பு சீசனில் 14 போட்டிகளில் 152.63 ஸ்ட்ரைக் ரேட்டில் 348 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். கடந்த மூன்று இன்னிங்ஸ்களிலும் அவர் 4, 24 மற்றும் 4 ரன்களே எடுத்துள்ளார். துருவ் ஜூரல் 13 போட்டிகளில் 131 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும்.

அதேபோல சிம்ரன் ஹெட்மயரும் கடந்த சில போட்டிகளாக பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபினிஷ் செய்யாமல் ஏமாற்றினார். இதனால் ரோவ்மென் பாவெலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அவரும் சொதப்பி வருகிறார்.

RCB vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்ஸன், பராக் சிறப்பான ஆட்டம்

குவாஹாட்டியில் பிறந்த 22 வயதான ரியான் பராக், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடப்பு சீசனில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். பராக் இதுவரை 14 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 531 ரன்கள் எடுத்துள்ளார். எலிமினேட்டர் போட்டியில், அணியின் பேட்டிங்கில் பராக் முக்கிய பங்கு வகிப்பார். எலிமினேட்டர் போட்டியில் அவரிடமிருந்து அணி சிறப்பான இன்னிங்சை எதிர்பார்க்கும்.

கேப்டன் சஞ்சு சாம்சனிடமிருந்தும் மீண்டும் ஒருமுறை வலுவான கேப்டன்சி இன்னிங்சை அந்த அணி எதிர்பார்க்கிறது. சஞ்சு 504 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் சீசனில் அவர் முதல்முறையாக 500 ரன்களுக்கும அதிகமாக சேர்த்துள்ளார்.

RCB vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலியின் கனவை சாம்ஸன் கலைப்பாரா?

ராஜஸ்தான் ராயல்ஸின் வலுவான அம்சம் அவர்களின் பந்துவீச்சு ஆகும். இது கிட்டத்தட்ட இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்பட்டது. டெத் ஓவர்களில் சந்தீப் சர்மாவின் எகானமி ரேட் 8.07 ஆகவும், பவர் பிளேயில் டிரென்ட் போல்ட்டின் எகானமி ரேட் 8.38 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், நடப்பு சீசனில் அதிகபட்சமாக 708 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ள நட்சத்திர வீரர் விராட் கோலியை தடுப்பது ராஜஸ்தான் ராயல்சுக்கு எளிதாக இருக்காது.

ராஜஸ்தான் ராயல்ஸின் வலுவான பந்துவீச்சு யூனிட்டுடன் தோனி போன்று வியூகங்களை வகுப்பதில் சிறந்தவரான கேப்டன் சாம்ஸனின் சாதுர்யமும் சேர்ந்து கோலியின் 16 ஆண்டு கோப்பை கனவுக்கு முட்டுக்கட்டை போடுமா?

https://www.bbc.com/tamil/articles/c3ggje8d920o

ipl-pt-19-05.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

442465938_980194513478837_83221485972362

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2024 ஐபிஎல்: சிஎஸ்கே-வின் ஆட்டம் எப்படி? தோனி கேப்டனாக இருந்தால்தான் சாம்பியன் பட்டம் சாத்தியமா?

2024 ஐபிஎல், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ். க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 50 நிமிடங்களுக்கு முன்னர்

புதிய கேப்டன், ஏலத்தில் எடுக்கப்பட்ட புதிய வீரர்கள், முதல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வரை ஏற்றம் என உற்சாகமாக ஐபிஎல் 2024 சீசனைத் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

வழக்கம்போல் இந்த முறையும் சிஎஸ்கே தான் சாம்பியன், ப்ளே ஆஃப் சுற்றில் வெல்லப்போகிறது, தோனியின் வழிகாட்டலில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்றெல்லாம் ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் செயல்பாடு குறித்து புலங்காகிதம் அடைந்தனர்.

ஆனால், ஐபிஎல் தொடரில் உயிர்ப்பித்து நின்றிருக்க வேண்டிய முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பலவீனமும் அம்பலமானது. முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து ஐபிஎல் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேறியது 5 முறை சாம்பியன் வென்ற சிஎஸ்கே அணி.

2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்வி என 14 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட் 0.392 என 5-வது இடத்தைப் பிடித்து, ப்ளே ஆஃப் செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது.

ஆனால், தொடக்கத்தில் முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றி, அதன்பின் தொடர்ந்து 6 வெற்றிகளைக் குவித்து ஆர்சிபி அணி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சிஎஸ்கே-வைச் சாய்த்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது.

ஐபிஎல் தொடரின் முதல் பாதி சுற்று முடியும் போது ஆர்சிபி-யின் நிலையைப் பார்த்து, ஆர்சிபி வெளியேறிவிடும் என்று அந்த அணியின் ரசிகர்களே பேசத் தொடங்கி, கருத்துக்களைப் பதிவிட்டனர். ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் ஆர்சிபி அணி பொய்யாக்கி, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது.

 
2024 ஐபிஎல், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2024 ஐபிஎல் சீசன் போட்டியின் இடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அறிவிப்பும் சிஎஸ்கே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்

சிஎஸ்கே-வின் ஆட்டம் எப்படி?

ஐபிஎல் வரலாற்றில் 2024 சீசன்தான் சிஎஸ்கே அணியின் 3வது மோசமான ஆட்டம் என்பது தெரியவந்துள்ளது. 2008-ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வெற்றி சதவீதம் குறைந்தபட்சம் 55 சதவீதத்துக்கு மேல் இருந்து, அதிகபட்சம் 68 சதவீதம் இருந்துள்ளது.

எந்தெந்த சீசனில் வெற்றி சதவீதம் குறைந்ததோ அந்த சீசனில் சிஎஸ்கே மோசமாக அடிவாங்கியது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டு சிஎஸ்கே வெற்றி சதவீதம் 42.86 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் சிஎஸ்கே வெற்றி சதவீதம் வெறும் 28.57 சதவீதமாகவும் இருந்தது. அதற்கு அடுத்தார்போல் 2024 சீசனில் சிஎஸ்கே வெற்றி சதவீதம் 50 சதவீதம் இருந்துள்ளது.

ஆக, ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடாக 2024 ஐபிஎல் சீசன் அமைந்திருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம்.

இதில் 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே லீக் சுற்றோடு வெளியேறியதற்கு முதல் காரணம், சிஎஸ்கே-வின் கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்புதான். சிஎஸ்கே கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு மீண்டும் தோனி நியமிக்கப்பட்ட குழப்பம் தோல்விக்கு இட்டுச் சென்றது.

அதேபோன்ற குழப்பம் 2024 சீசன் தொடக்கத்திலும் ஏற்பட்டது. ஐபிஎல் சீசன் தொடங்கும்வரை தோனிதான் கேப்டன் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது, அதிர்ச்சியையும், அவர் எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல் 2024 ஐபிஎல் சீசன் போட்டியின் இடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அறிவிப்பும் சிஎஸ்கே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காகக் கடந்த சில சீசன்களாகச் சிறப்பாக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை ஆனால், ஷிவம் துபே ,ஜெய்ஸ்வால் இடம் பெற்றது குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால், கெய்க்வாட் கடந்த சில சீசன்களாக சிறப்பாகச் செயல்பட்டநிலையில் அவருக்கான இடம் இந்திய அணியில் இல்லை.

ஆனால், இந்த ஆதங்கத்தை கெய்க்வாட் எந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தவில்லை, அவரது பேட்டிங் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றபோதிலும், மனதளவில் அவருக்கு இது தாகத்தை ஏற்படுத்தி இருக்கும், அவரின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

 
2024 ஐபிஎல், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிஎஸ்கே அணியின் 9 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திரா ஜடேஜா, மொயின் அலி, மிட்ஷெல் ஆகியோரைத் தவிர வேறு எந்த வீரர்களுக்கும் சர்வதேச அனுபவம் பெரிதாக இல்லை

வீரர்கள் தேர்வில் என்ன சிக்கல்?

2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் தேர்வே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சிஎஸ்கே அணியில் இதற்கு முன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பல ஜாம்பவான்கள் இருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றபின் அந்த இடத்தை நிரப்பச் சரியான வீரர்கள் கொண்டுவரப்பட்டார்களா என்ற கேள்விக்கு பதில் இல்லை.

உதாரணமாக, டூவைன் பிராவோ சிஎஸ்கே அணியின் பெரிய சொத்து. ஆட்டத்தை எந்தநேரத்திலும் மாற்றக்கூடிய திறன் கொண்டவர், தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வேரியேஷன்களை வெளிப்படுத்தி எதிரணியை திக்குமுக்காடச் செய்பவர். பிராவோ இருக்கும்வரை சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் யானை பலம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், பிராவோ ஓய்வு பெற்றுச் சென்றபின் அவரது இடத்தை நிரப்பச் சரியான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனரா, என்றால், பிராவோவுக்கு இணையாக இல்லாவிட்டாலும், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் யாரும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

சிஎஸ்கே அணிக்கு நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் பிளெம்பிங் பயிற்சியாளராக இருக்கிறார் என்பதால், நியூசிலாந்து வீரர்களுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. டேவான் கான்வே, மிட்ஷெல் சான்ட்னர், டேரல் மிட்ஷெல், ரச்சின் ரவீந்திரா என நியூசிலாந்து வீரர்கள் அதிகம் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் டேவன் கான்வே காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடாதது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவானது. இருப்பினும் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல், ரூ.1.80 கோடிக்கு வாங்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, ரூ.1.80 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்ஷெல் சான்ட்னர் எந்த அளவுக்கு இந்த சீசனில் திறமையை வெளிப்படுத்தினர் என்பது ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று.

குறிப்பாக 'ஆல்ரவுண்டர்' அந்தஸ்துக்காக வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் 13 போட்டிகளில் 318 ரன்கள் சேர்த்து, சராசரியாக 24 என வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் 142 என, மிரட்டும் அளவுக்கு இல்லை.

அதேபோல 10 போட்டிகளில் மட்டும் ஆடிய ரச்சின் ரவீந்திரா 222 ரன்கள் சேர்த்து 22 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார். மிட்ஷெல் சான்ட்னருக்கு பந்துவீச்சில் வாய்ப்பே வழங்கப்படவில்லை, மூன்று போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆக, சிறப்பாகச் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து வீரர்கள் தேர்வும் சிஎஸ்கே-வுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

இதுதவிர, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி என்ற வீரரை ரூ.8 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால், சமீர் ரிஸ்வி 8 போட்டிகளில் பங்கேற்று வெறும் 51 ரன்கள் மட்டுமே சேர்த்து வெறும் 7.5 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார். சர்வதேச அளவில் அனுபவம் இல்லாத, டி20 போட்டிகளில் பெரிதாக சாதிக்காத வீரர்களை ஏலத்தில் எடுத்து சிஎஸ்கே கையைச் சுட்டுக்கொண்டது.

ஷிவம் துபே-வை ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கொண்டாடும் சிஎஸ்கே அணி, அவருக்கு இந்த சீசனில் அதிகபட்சம் 10 ஓவர்கள்கூட வழங்கவில்லை. ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் சிறப்பாக ஆடிய ஷிவம் துபே, பிற்பகுதியில் படுமோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் ஆடிய துபே 396 ரன்கள் குவித்து 28 ரன்கள் சராசரி வைத்து 162 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.

சிஎஸ்கே அணியின் 9 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திரா ஜடேஜா, மொயின் அலி, மிட்ஷெல் ஆகியோரைத் தவிர வேறு எந்த வீரர்களுக்கும் சர்வதேச அனுபவம் பெரிதாக இல்லை. தரமான பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து ஆடி சன்சேர்ப்பது என்பதிலும் அனுபவம் இல்லை. வீரர்கள் தேர்விலேயே சிஎஸ்கே அணி கோட்டை விட்டது.

 
2024 ஐபிஎல், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,13 போட்டிகளில் 12 இன்னிங்ஸ் ஆடிய ரஹானே 242 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் சராசரி வைத்து 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்

ரஹானே, மொயின் அலி மீது விமர்சனம்

ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் குறித்துக் கேள்வி எழுந்து விமர்சிக்கப்பட்ட பின்புதான் அவரை இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டினர். ஆனால், ஐபிஎல் ஏலத்தில் ரஹானேவே சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து வாழ்வு கொடுத்தது. கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக சொதப்பினார். தொடக்க வரிசை, நடுவரிசை, ஒன்டவுன் என பலவரிசையில் மாற்றி ரஹானேவே களமிறக்கியும் அவரால் ஜொலிக்க முடியவில்லை.

13 போட்டிகளில் 12 இன்னிங்ஸ் ஆடிய ரஹானே 242 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் சராசரி வைத்து 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். கடந்த சீசனில் ரஹானே 14 போட்டிகளில் 326 ரன்கள் குவித்தார். இந்த சீசனில் ஏறக்குறைய 100 ரன்கள் குறைவாகச் சேர்த்து ஏமாற்றம் அளித்தார்.

அதேபோல சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மொயின் அலி, 2021-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு வந்தவுடன் அருமையான பங்களிப்புச் செய்தார். அதன்பின் ஒவ்வொரு சீசனிலும் அவரது பந்துவீச்சு, பேட்டிங் திறமை மங்கிக்கொண்டே சென்றது.

2021 சீசனில் 15 போட்டிகளில் 357 ரன்கள் குவித்த மொயின் அலி, 2022 சீசனில் 10 போட்டிகளில் 244 ரன்கள் சேர்த்தார், 2023 சீசனில் 15 போட்டிகளில் 124 ரன்களாக மொயின் அலி பங்களிப்பு என படிப்படியாக மொயின் அலியின் பங்களிப்பும் குறைந்தது. 2024 சீசனில் 8 போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 128 ரன்கள் சேர்த்து 25 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இதுபோன்று ஒவ்வொரு சீசனிலும் ஆட்டத்தின் திறன் குறையும் வீரர்கள் ஏலத்தில் மாற்றப்படாமல் தொடர்ந்து வைத்திருப்பது பெரிய விமர்சனமாக வைக்கப்படுகிறது.

மொயின் அலி, ரஹானே இருவரும் அனுபவம் நிறைந்த பேட்டர்களாக இருந்தபோதிலும், இந்த சீசனின் முக்கியமான எந்த ஆட்டத்திலும் அவர்களால் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடிக்கொடுக்க முடியவில்லை.

 
2024 ஐபிஎல், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ருதுராஜால் கேப்டன்சியில் தனித்தன்மையிடன் வெளிப்பட முடியவில்லை

கெய்க்வாடுக்கு கேப்டன் பதவி 'சுமை' ஆனதா?

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே எனும் அணி 5 முறை சாம்பியன்ஷிப் பெற்ற வலிமையான அணி. அந்த அணிக்குக் கேப்டனாக வளரும் இளம் வீரரை உருவாக்குகிறோம் என்ற பெயரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்ட்டது. இது விளம்பர உத்தியா அல்லது உண்மையில் அதற்கான தகுதிகள் அவருக்கு இருப்பதைக் கண்டறிந்து வழங்கப்பட்டதா என்ற கேள்விகள் சிஎஸ்கே அணி வெளியேற்றத்துக்குப்பின் எழும்பியிருக்கின்றன.

ஏனென்றால், அணியில் இருக்கும் பல வீரர்கள் சீனியர் வீரர்கள். ரஹானே, தோனி, மொயின் அலி, ஜடேஜா ஆகியோரை கையாள்வதும், பீல்டிங் அமைப்பதும் ஈகோவாக ஏற்காதவரை பணியின் சுமை தெரியாது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் என்ற இடைவெளி சிஎஸ்கே ஓய்வறையில் இருந்ததாகப் பல்வேறு செய்தியறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஓய்வறையில் கேப்டன்சி குறித்து தன்னிடம் ஆலோசனை கேட்கக்கூடாது என்று தோனி கெய்க்வாட்டிடம் கூறியதாகத் தகவல்களும் வெளிவந்தன.

உதாரணமாக, ஆர்சிபியுடன் கடைசி லீக்கில் கடைசி ஓவரை வீசுவதற்கு முன் யாஷ் தயாலிடம் கோலி, டூப்பிளசிஸ், தினேஷ் கார்த்திக் என கேப்டன் அனுபவம் கொண்ட வீரர்கள் எந்த ஈகோவும் இன்றி ஆலோசனை நடத்தினர். ஆனால், இதே போன்ற சூழல் சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் இருந்ததா என்பது சந்தேகம்தான். கெய்க்கவாட்டுக்கு ஆலோசனை கூறுகிறேன் என்று தோனியே பீல்டிங் செய்வது, ஆலோசனைகள் கூறுவது என 'பேக் சீட் டிரைவராகப்' பல போட்டிகளில் செயல்பட்டார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தபின்புதான், தோனி கேப்டன்சி பதவியை மறைமுகமாகச் செய்வதில் இருந்து விலகினார்.

சிஎஸ்கே என்ற பிரமாண்டமான அணி ரசிகர்கள் மனதில் பெரிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியைக் கையாள்வதும், நிர்வகிப்பதும் ஒரு யானையை அடக்குவது போலாகும். இந்தக் கேப்டன்சி பதவியை ருதுராஜ் சிறப்புடன் கையாண்டாரா அல்லது விருப்பத்துடன் ஏற்றுச் செயல்பட்டாரா என்பது குறித்து வரும் காலங்களில்தான் விளக்கம் கிடைக்கும். ஆனால், இளம் வீரர்களான கே.எல்.ராகுல், சஞ்சு சாம்ஸன், ரிஷப் பந்த் ஆகியோர் தனித்துச் செயல்பட்ட அளவுக்கு ருதுராஜால் கேப்டன்சியில் தனித்தன்மையிடன் வெளிப்பட முடியவில்லை, தோனியின் சாயலே பெரும்பகுதி இருந்தது.

அது மட்டுமல்லாம் கேப்டனாக பொறுப்பேற்றாலும் அந்தச் சுமை தெரியாமல் கெய்க்வாட் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். 14 இன்னிங்ஸ்களிலும் 583 ரன்கள் சேர்த்து 42 ரன்கள் சராசரி வைத்துள்ளார். நிச்சயமாக கேப்டன் பொறுப்பும் ஏற்று, இதுபோன்று பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களிப்பு செய்வது கடினமான பணிதான். ஆனால் அதை கெய்க்வாட் கடைசிவரை சிறப்பாகவே செய்தார்.

 

சிஎஸ்கே-வின் 'டீம் ஸ்பிரிட்' என்னவானது?

2024 ஐபிஎல், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிஎஸ்கே என்ற பிரமாண்டமான அணி ரசிகர்கள் மனதில் பெரிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியைக் கையாள்வதும், நிர்வகிப்பதும் நுட்பமான விஷயம்

தோனி கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் அனைத்து வீரர்களிடமும் கூட்டுழைப்பு, அர்ப்பணிப்பு, உற்சாகம் ஆகியவை இயல்பாகவே இருந்தன என்பதைக் காண முடிந்தது. ஒவ்வொரு ஓவரையும் பந்துவீச்சாளர்களும் சரி, பேட்டர்களும் சரி ரசித்துச் செய்தனர். ஆனால், தோனி இல்லாத சிஎஸ்கே அணியில் இந்த 'டீம் ஸ்பிரிட்', வீரர்ளுக்கான ஆர்வம் இருந்தது என்றாலும், தோனி கேப்டன்சியில் இருந்த அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

எந்த இடத்திலும் சிஎஸ்கே சறுக்கினாலும், அதைத் தூக்கி நிறுத்த ஏதாவது ஒரு வீரர் விஸ்வரூமெடுத்து ஆடும் சூழல் தோனி கேப்டன்சியில் இருந்தது. ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே வெற்றி பெற்ற 7 போட்டிகளிலும் கெய்க்வாட்டின் பேட்டிங் பங்களிப்பு மட்டுமே பிரதானமாக இருந்தது.

எப்போதாவது ஒருமுறைதான், ரச்சின் ரவீந்திரா, மிட்ஷெல், ஜடேஜாவின் பங்களிப்பு இருந்தது. ஆனால், அணிக்கான கூட்டுழைப்பு, வீரர்களுக்கான ஸ்பிரிட் இந்த சீசனில் இல்லை. ஆர்சிபி அணியை கடைசி லீக்கில் 218 ரன்கள் வரை அடிக்கவிடும் வகையில் பந்துவீச்சு இருந்தபோதே சிஎஸ்கே டீம் ஸ்பிரிட் குறித்து தெரிந்திருக்கும்.

2024 ஐபிஎல், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எந்த இடத்திலும் சிஎஸ்கே சறுக்கினாலும், அதைத் தூக்கி நிறுத்த ஏதாவது ஒரு வீரர் விஸ்வரூமெடுத்து ஆடும் சூழல் தோனி கேப்டன்சியில் இருந்தது

தோனி இல்லாத சிஎஸ்கே சாத்தியமா?

தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்கள் இன்னும் தயாராகவில்லை. அவர்களுக்கு அந்தத் துணிச்சலும் இல்லை. தோனி, கேப்டன் பொறுப்பேற்காமல் ப்ளேயிங் லெவனில் இருந்தபோதே சிஎஸ்கே அணி லீக் சுற்றோடு வெளியேறுகிறது. அப்படியிருக்கும்போது தோனி ஓய்வு பெற்று சிஎஸ்கே அணியிலிருந்து சென்றால், சிஎஸ்கே என்ற அணியின் நிலையை கற்பனை செய்வது கடினமாக இருக்கிறது.

“தோனிதான் சிஎஸ்கே. தோனி இல்லாத சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் ஆதரவு குறையும், சிஎஸ்கே அணியை ரசிகர்கள் இப்போதுள்ள அளவு கொண்டாடமாட்டார்கள்,” என்று முன்னாள் வீரர் சேவாக் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

தோனியால் மட்டும்தான் சிஎஸ்கே அணிக்கு சாம்பியன்ஷிப்பை பெற்றுத்தர முடியும் என்ற பிம்பம் ரசிகர்கள் மனதில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பிம்பத்தை ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா கொண்டு நிறுத்தினாலும், அதை உடைக்க முடியாது. அந்தப் பிம்பத்தை உடைக்க தோனி இல்லாத சிஎஸ்கே அணிக்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அதற்கு, புதிய கேப்டனை ரசிகர்கள் ஏற்க வேண்டும்.

போட்டியின் தொடக்கத்தில், இடையே கேப்டன்சி பதவியை உதறும் தோனியின் போக்கு இந்த சீசனிலும் இருந்தது. ஏற்கெனவே இந்திய டெஸ்ட் அணிக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலியா பயணம் செய்தார். அங்கு ஆஸ்திரேலிய அணியிடம் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தவுடன், 2-வது டெஸ்ட் தொடங்கும் முன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி திடீரென அறிவித்தது இந்திய அணியின் தன்னம்பிக்கையை, மனோபலத்தை குலைத்தது. அதேபோன்ற போக்கை இந்த சீசனில் ஐபிஎல் தொடர் தொடங்கும் சில நாட்களுக்கு முன் சிஎஸ்கேவிலும் புகுத்தினார்.

சிஎஸ்கே-வின் கேப்டன் தோனி என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியது, தோனி தலைமையில் விளையாடப் போகிறோம் என்ற வீரர்களின் நம்பிக்கை அசைத்துப் பார்க்கும் முடிவாக அமைந்தது.

கேப்டனாக இருக்கும்போது தோனி பேட்டிங்கில் கடந்த சீசன்களில் சிறப்பாக ஆடியுள்ளார். ஆனால், இந்த சீசனில் தோனிக்குக் கேப்டன் என்ற சுமை இல்லை. அப்படி இருக்கும்போது, தோனி தானாக முன்வந்து நடுவரிசை, முன்வரிசையில் களமிறங்கி கேமியோ ஆடியிருக்கலாம். ஆனால், கடைசி லீக்ஆட்டம் வரை தோனி கடைசி வரிசையில்தான் களமிறங்கினார். 14 போட்டிகளில் 161 ரன்கள் மட்டுமே தோனி சேர்த்து, 11 ரன்கள் சராசரி வைத்துள்ளார். தோனி நடுவரிசையில், முதல்வரிசையில் களமிறங்கினால் நிச்சயம் சிஎஸ்கே ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதை தோனி கடைசி வரை பயன்படுத்தவே இல்லை.

தோனி மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதில் ரசிகர்கள் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபிப்பதற்காகவே, தோனி கடைசி வரிசையிலும், அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போதுதான் களமிறங்குவேன் எனச் செயல்பட்டது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

தான் இருக்கும்போதே, தன்னுடைய இருப்பு இல்லாத சிஎஸ்கேவை தோனி உருவாக்க வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான அணியாக வலம் வர முடியும், என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 
2024 ஐபிஎல், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனியால் மட்டும்தான் சிஎஸ்கே அணிக்கு சாம்பியன்ஷிப்பை பெற்றுத்தர முடியும் என்ற பிம்பம் ரசிகர்கள் மனதில் கட்டமைக்கப்பட்டுவிட்டது

பலவீனமான பந்துவீச்சு

சிஎஸ்கே அணியில் இருக்கும் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், பதீராணா, தேஷ்பாண்டே ஆகியோருக்குச் சர்வதேச அனுபவங்கள் பெரிதாக இல்லை. இவர்கள் சர்வதேச தளத்துக்குச் செல்லும்போது அவர்களது பலவீனம் வெளிப்பட்டுவிடும் என்பது கடந்த காலங்களில் தெரியவந்துள்ளது. அந்த உண்மை தெரிந்தும், இன்னும் இவர்களை சிஎஸ்கே நிர்வாகம் தாங்கி நிற்பது வியப்பாக இருக்கிறது.

குறிப்பாகப் பதீரணாவின் பந்துவீச்சு கடந்த சீசனில் பெரிதாக சிஎஸ்கே அணியால் பேசப்பட்டது. ஆனால் உலகக் கோப்பைத் தொடரில் பதீரணா பந்துவீச்சால்தான் இலங்கை பெரிய தோல்விகளைச் சந்தித்தது என்ற விமர்சனங்களும் எழுந்தன. அப்படியிருக்கும் போது பந்துவீச்சாளர்களை ஏலத்தில் ஏன் சிஎஸ்கே நிர்வாகம் மாற்றவில்லை என்ற கேள்வி எழுகிறது.

தொடர்ந்து ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் அணியில் நீடிக்கும்போது, எதிரணியின் பேட்டர்களுக்கு வியூகங்களை வகுப்பது எளிதாகிவிடும், சிஎஸ்கே அணியின் தோல்வியும் எளிதாக அமைந்துவிடும். இது தெரிந்தே 4 பந்துவீச்சாளர்களையும் தொடர்ந்து தக்கவைத்துள்ளனர். இதில் பதீராணா 13 விக்கெட்டுகள், தேஷ் பாண்டே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஷர்துல், தீபக் சஹர் இருவரும் 9 போட்டிகளில் பங்கேற்றும் 5 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளனர்.

சிஎஸ்கே அணியில் அனுபவம் நிறைந்த பந்துவீச்சாளராக இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டும்தான். சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த சிறந்த முடிவு முஸ்தபிசுர் ரஹ்மானை வாங்கியது மட்டும்தான். அவரும் தன்னுடைய அணிக்கான பணிக்கு செல்லும்வரை சிறப்பான பங்களிப்பை சிஎஸ்கே அளித்து 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதீராணா, முஸ்தபிசுர் இருவரும் சிஎஸ்கே அணியிலிருந்து பாதியில் சென்றபோதே, சிஎஸ்கே பந்துவீச்சு பலம் பாதியாகக் குறைந்தது.

சுழற்பந்துவீச்சுக்கு சான்ட்னர், ஜடேஜா, தீக்சனா, மொயின் அலி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இருந்தனர். ஆனால், இந்த சீசன் முழுவதும் சுழற்பந்துவீச்சாளர்களை கெய்க்வாட் பயன்படுத்திய வீதம் வேகப்பந்துவீச்சோடு ஒப்பிடுகையில் குறைவுதான். தோனி கேப்டன்சியில் சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தத் தனி உத்தியே வைத்திருப்பார். ஜடேஜா, தீக்சனா, சான்ட்னர், மொயின் அலி ஆகியோரை தோனி சிறப்பாகக் கையாண்டு, தேவைப்படும் நேர்த்தில் விக்கெட்டுகளை எடுப்பார். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வீணடிக்கப்பட்டுவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஒட்டுமொத்தத்தில், சிஎஸ்கே ப்ளே ஆஃப் லீக்கோடு வெளியேறியிருக்கும் இந்நிலையில், தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்களும், வீரர்களும் மனதளவில் இன்னும் தயாராகவில்லை எனும் உணர்வே மேலெழுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cz991njzg97o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னையின் தோல்விக்கு வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்

இந்த‌ போடுகிறோம் RCB வீர‌ர்க‌ள் நீங்க‌ள் அடியுங்கோடா என்ர‌ ரேஞ்சில் ப‌ந்தை போட்டு அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்தார்க‌ள்

டோனி சிவ‌ம் டூபே அவுட் ஆன‌ போது மைதான‌த்துக்கு வ‌ந்து இருந்தா ஜ‌டேயா கூட‌ சேர்ந்து இன்னும் கூடுத‌ல் ர‌ன் அடிச்சு புள்ளி ப‌ட்டிய‌லில் 4வ‌து இட‌த்தை பிடிச்சு இருக்க‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து.......................

இந்த‌ முறையாவ‌து RCB கோப்பை தூக்க‌ட்டும்

ம‌ற்ற‌ மூன்று அணிக‌ளும் கோப்பை  தூக்கி விட்டின‌ம் இவ‌ர்க‌ள் தான் இதுவ‌ரை தூக்க‌ வில்லை

 

ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ RCB ம‌க‌ளிர் இந்த‌ முறை கோப்பை தூக்கின‌ மாதிரி 

டூ பில‌சி த‌லைமையில் இவ‌ர்க‌ளும் கோப்பை தூக்க‌ கூடும்.......................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வலுவான கொல்கத்தாவை சன்ரைசர்ஸ் அணியின் சூறாவளி பேட்டிங் சாய்க்குமா? பிளேஆஃபில் இன்று மோதல்

SRH vs KKR

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 35 நிமிடங்களுக்கு முன்னர்

ஐபிஎல் டி20 2024 சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.

எந்த ஆடுகளம்?

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரு அணிகளிலும் பவர் ஹிட்டர் பேட்டர்கள் அதிகம் இருப்பதால், இன்று நடக்கும் ஆட்டத்தில் ரன் மழைக்கு எந்தக் குறையும் இருக்காது, வாண வேடிக்கைக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் எந்த ஆடுகளத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் ஸ்வாரஸ்யம் இருக்கிறது.

ஏனென்றால் ஆமதாபாத்தில் உள்ள இரு விக்கெட்டுகளில் சிவப்பு மண் கொண்ட விக்கெட் பேட்டர்களுக்கு சாதகமானது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி, பேட்டர்களை நோக்கி நன்கு வரும். முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும். சேஸிங்கும் சுவாரசியமாக இருக்கக் கூடிய விக்கெட்.

ஆனால், கறுப்பு மண் கொண்ட விக்கெட்டில் 165 ரன்களைக் கடப்பதே பெரும்பாடாக இருக்கும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற மெதுவான விக்கெட்டாக இருக்கும்.

இதுவரை நேருக்கு நேர்

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,SPORTZPICS

இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 26 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 17 முறை வெற்றி பெற்றுள்ளது, சன்ரைசர்ஸ் 9 முறை தான் வெற்றுள்ளது.இந்த சீசனில் இரு அணிகளும் ஒரு முறை மோதிக்கொண்ட ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 4 ரன்களில் தோற்கடித்தது கொல்கத்தா அணி.

 

சம வலிமையில் அணிகள்

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,SPORTZPICS

பந்துவீச்சு, பேட்டிங்கில் இரு அணிகளும் சம வலிமை பெற்ற அணிகளாகத் திகழ்வதால் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கொல்கத்தா அணியில் பில் சால்ட் இங்கிலாந்து புறப்பட்டதால் அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைனின் மிரட்டல் ஃபார்ம், ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரஸல், ராமன்தீப் சிங் என பேட்டிங்கில் வலிமையான படை இருக்கிறது.

அதேபோல சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிதிஷ்குமார் ரெட்டி, கிளாசன், அப்துல் சமது என தரமான பவர் ஹிட்டர்கள் உள்ளனர்.

கொல்கத்தாவில் குர்பாஸ்

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஹ்மனுல்லா குர்பாஸ்

இதில் கொல்கத்தா அணியில் முதல்முறையாக ரஹ்மனுல்லா குர்பாஸ் இன்று களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் இவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் அணிக்கு 3வது இடத்தில் ராகுல் திரிபாதி ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு வலிமையாகும்.

இந்த சீசனில் இரு அணிகளும் விளையாடியபோது அந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் ஹெட் களமிறங்கி நரைன், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை எதிர்கொள்வது சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்.

 

கம்மின்ஸ் - ஸ்டார்க்

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாட் கம்மின்ஸ்

சன்ரைசர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ் எனும் உலகத் தரமான பந்துவீச்சாளர் இருப்பதைப் போல், கொல்கத்தா அணியில் மிட்ஷெல் ஸ்டார்க் இருப்பது போட்டியின் சுவாரசியத்தை மேலும் அதிகப்படுத்தும்.

இது தவிர கொல்கத்தா அணியில் ஹர்சித் ராணா, வைபவ் அரோரா, ரஸல் ஆகியோரும் வேகப்பந்துவீச்சுக்கு இருக்கிறார்கள். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், புவனேஷ்வர் குமார், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய வேகப் பந்துவீச்சாளர்களும் இருப்பது போட்டியை சமநிலைப்படுத்தும்.

நரைன், வருண்- விஜயகாந்த்

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனில் நரைன்

சுழற்பந்துவீச்சிலும் இரு அணிகளும் சம வலிமையோடு களமிறங்குகின்றன. கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருப்பதைப் போல், சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் விஜயகாந்த், ஷாபாஸ் அகமது இருவரும் இருக்கிறார்கள். இதில் சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களை விட கொல்கத்தாவின் சுழற்பந்துவீச்சு மேம்பட்டதாக இருக்கிறது.

 

இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய பங்கு

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி இம்பாக்ட் ப்ளேயராக பேட்டிங்கை வலிமைப்படுத்த நிதிஷ் ராணாவையும், பந்துவீச்சில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அங்குல் ராய் அல்லது வைபவ் அரோரா இருவரில் ஒருவரை ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்து பயன்படுத்தலாம்.

அதேபோல சன்ரைசர்ஸ் அணி இம்பாக்ட் ப்ளேயராக தமிழக வீரர் நடராஜன், அல்லது சுழற்பந்துவீச்சாளர் விஜயகாந்த் இருவரில் ஒருவரை பயன்படுத்தக்கூடும். முக்கியத்துவமான ஆட்டம் என்பதால், எய்டன் மார்க்ரம் அணியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மார்க்ரம் அணிக்குள் வரும் பட்சத்தில் ஷாபாஸ் அகமது அல்லது விஜயகாந்த் அமரவைக்கப்படலாம்.

மார்க்ரம் வரும்போது பேட்டிங் வரிசை வலுப்படும், சுழற்பந்துவீச்சுக்கும் உதவுவார். குறிப்பாக கொல்கத்தாவின் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக மார்க்ரம் ஆஃப் ஸ்பின் நன்கு எடுபடும். இது தவிர பந்துவீச்சில் இடதுகை பந்துவச்சாளர் தேவை எனும் பட்சத்தில் ஜெயதேவ் உனத்கட் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

ரிங்கு சிங் மீது எதிர்பார்ப்பு

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரிங்கு சிங்

கொல்கத்தா அணியில் ரிங்கு சிங்கிற்கு 2023 சீசனைப் போல் இல்லாமல், இந்த சீசன் பெரிதான வாய்ப்புகளை வழங்கிய சீசனாக அமையவில்லை. அதனால்தான் அவரால் இந்திய அணியிலும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் இடம் பெற முடியவில்லை.

இந்த சீசனில் ரிங்கு சிங் 11 இன்னிங்ஸ்களில் 113 பந்துகளை மட்டுமே சந்தித்து, 168 ரன் சேர்த்துள்ளார். ஃபினிஷர், பவர் ஹிட்டராகக் கருதப்படும் ரிங்கு சிங் ஆட்டம் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நடராஜன் மிரட்டல் ஃபார்ம்

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோல, சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் பந்துவீச்சு பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசிய நிலையில் நடராஜன் பந்துவீச்சு மட்டுமே சிறப்பாக இருந்தது.

யார்கர் மட்டும் நடராஜன் தற்போது வீசாமல், ஸ்லோ பவுன்ஸர், ஷார்ட் பால் போன்றவற்றை வீசும் வித்தைகளை கற்றுள்ளார். குறிப்பாக நடுப்பகுதி, டெத் ஓவர்களில் நடராஜன் பந்துவீச்சு இன்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

ஆடுகளம் எப்படி?

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானம்

ஆமதாபாத்தில் இரு விதமான ஆடுகளங்களில் எதை பயன்படுத்தப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆடுகளம் பயன்படுத்துவதைப் பொருத்துதான் இரு அணிகளிலும் வீரர்கள் தேர்வுகூட அமையலாம். சிவப்பு மண் கொண்ட தட்டையான ஆடுகளத்தை தேர்வு செய்தால், நிச்சயமாக ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும். இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் இருமுறை சேஸிங் செய்யப்பட்டு அதிகபட்சமாக 231 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்துக்கு சுவாரசியத்தைக் கூட்ட வேண்டுமென்றால் இந்த ஆடுகளத்தை பயன்படுத்தலாம்.

கறுப்பு மண் கொண்ட ஆடுகளம் மெதுவானது. பேட்டர்கள் பெரிதாக எந்த ஷாட்களையும் அடிக்க முடியாத கடுமையான ஆடுகளம். சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் இந்த ஆடுகளத்தில் ஆட்டம் நடந்தால் 165 ரன்களைக் கடப்பதே சிரமம்.

டாஸ் முக்கியப் பங்கு

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,SPORTZPICS

இன்றைய டாஸ் ஆட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். சிவப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன. அதில் 2 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. பெரிய ஸ்கோரை அடித்தாலும் டிபெண்ட் செய்ய முடியும், இரவு நேரத்தில் பனிப்பொழிவும் பெரிதாக இருக்காது.

சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை பெற்ற வெற்றிகளில் 2 மட்டுமே சேஸிங் மூலம் பெற்றுள்ளது. மற்ற 5 வெற்றிகளுமே முதலில் பேட் செய்து டிபெண்ட் செய்துதான் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து அதை டிபெண்ட் செய்வதைத்தான் சன்ரைசர்ஸ் விரும்புகிறது, அதுதான் அந்த அணிக்கு வசதியாக இருக்கிறது.

சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்த போது ரன்ரேட், சேஸிங் செய்தபோது இருந்ததைவிட 1.07 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

கொல்கத்தா அணி இந்த சீசனில் 3 முறை சேஸிங் செய்து வென்றுள்ளது. 6 முறை ஸ்கோரை டிபெண்ட் செய்துள்ளது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் ஒருவேளை கொல்கத்தா டாஸ் வென்றால், முதலில் பேட் செய்யும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணிக்கு நிச்சயம் வழங்காது. ஆதலால் இன்று டாஸ் யார் வெல்லப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சுனில் நரைன் - புவனேஷ்வர்

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனில் நரைன்

இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு யானை பலத்தை தரும் ஆல்ரவுண்டராக சுனில் நரைன் இருந்து வருகிறார். இந்த சீசனில் சதம் அடித்து 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். கொல்கத்தா அணி மாபெரும் வெற்றிகளைப் பெற்றதற்கு சுனில் நரைன், பில்சால்ட் கூட்டணி முக்கியக் காரணம். சுனில் நரைன் களத்தில் இருந்தாலே கொல்கத்தாவுக்கு பாதி வெற்றியை உறுதி செய்துவிடுகிறார். ஆதலால் இன்றைய ஆட்டத்தில் சுனில் நரைனை வீழ்த்த சன்ரைசர்ஸ் பெரிய திட்டத்தோடு வரும்.

குறிப்பாக, ஐபிஎல்லில் இதுவரை பவர்ப்ளேயில் புவனேஷ்வர் ஓவரில் 34 பந்துகளில் நரைன் 31 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒருமுறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால், இந்த முறை நரைனுக்கு எதிராக புவனேஷ்வரின் ஸ்விங் பந்துவீச்சை ஆயுதமாக சன்ரைசர்ஸ் பயன்படுத்தும்.

அதேபோல ஸ்ரேயாஸ், வெங்கேடஷ் இருவருமே ஸ்விங் பந்துவீச்சை விளையாடக் கூடிய அளவுக்கு பெரிய பேட்டர்கள் இல்லை. ஆதலால் இருவருக்கு எதிராகவும் புவனேஷ்வர் பெரிய துருப்புச்சீட்டாக இருப்பார். ஸ்ரேயாஸ் அய்யரை மட்டும் 3 முறை புவனேஷ்வர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதேசமயம் குர்பாஸுக்கு எதிராக 4 பந்துகள் வீசிய புவனேஷ் 2 முறை விக்கெட் எடுத்துள்ளார், ஒரு ரன்கூட வழங்கவில்லை. இது சன்ரைசர்ஸ் அணிக்கு கூடுதல் போனஸ்.

திட்டங்கள் தேவை

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாசன் மூவரும் கொல்கத்தாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தலாம். பஞ்சாப் அணிக்கு எதிராக ஹெட் டக்அவுட் ஆன பின்பும், அபிஷேக் தனது அதிரடியை நிறுத்தாமல் வெளுத்து கட்டினார். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஈவு இரக்கமின்றி அபிஷேக் விளையாடக் கூடியவர். அதலால், நரைன், வருணுக்கு எதிராக அபிஷேக்கின் பேட்டிங் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெட் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவீனமானவர். ஆனால் வேகப்பந்துவீச்சை வெளுத்துவிடுவார் என்பதால், இருவருக்கும் பல உத்திகளை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணிக்கு நடுவரிசையில் தூணாக செயல்படுபவர் ஹென்ரிச் கிளாசன். கொல்கத்தா அணி கிளாசனுக்கு எதிராக யாரைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சுழற்பந்துவீச்சு, இடதுகை வேகப்பந்துவீச்சை கிளாசன் புரட்டி எடுப்பார் என்பதால், ரஸல் பந்துவீச்சை தான் கொல்கத்தா கையில் எடுக்கக்கூடும். ஏனென்றால் பந்துவீச்சில் வேரியேஷன்களை வெளிப்படுத்தக் கூடியவராக ரஸல் இருக்கிறார்.

 

ரஸலை வீழ்த்தும் ஆயுதம்

சன்ரைசர்ஸ்- கொல்கத்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆந்த்ரே ரஸல்

கொல்கத்தா அணிக்கு நடுவரிசையில் பலமாகவும், பந்துவீச்சில் ஆபத்பாந்தவனாக இருப்பவர் ஆந்த்ரே ரஸல். தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் விஸ்வரூபமெடுத்து ரஸல் விளையாடக்கூடியவர். கொல்கத்தாவுக்கு ஃபினிஷ் செய்யும் நேரத்தில் ரஸலின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருக்கிறது.

அனைத்து பந்துவீச்சுக்கு எதிராக துவம்சம் செய்யும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஸல், லெக் ஸ்பின்னுக்கு எதிராக பெரிதாக இதுவரை ஸ்கோர் செய்யவில்லை. 28 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஒருமுறை லெக்ஸ்பின்னில் ரஸல் ஆட்டமிழந்துள்ளார். ரஸல் களத்துக்கு வருவதைப் பொருத்து சன்ரைசர்ஸ் அணி லெக் ஸ்பின்னர் விஜயகாந்தை கொண்டுவரும்.

இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லும், யார் ஆதிக்கம் செய்வார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளும் சம வலிமை படைத்தவர்களாக இருப்பதுதான் போட்டியின் உச்சகட்ட சுவாரசியம்.

https://www.bbc.com/tamil/articles/c9wwpxpkz0ko

  • கருத்துக்கள உறவுகள்
Posted

436187650_1057822205700342_7577872282109

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி இறுதிப் போட்டியில் முதல் அணியாக நுழைந்தது கொல்கத்தா

Published By: VISHNU   22 MAY, 2024 | 01:15 AM

image

(நெவில் அன்தனி)

அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அப் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய முன்னாள் சம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6.2 ஓவர்கள் மீதமிருக்க மிக இலகுவாக வெற்றிபெற்று நான்காவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

2012இலும் 2014இலும் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2021இல் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 160 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ரஹ்மத்துல்லா குர்பாஸ் (23), சுனில் நரேன் (21) ஆகிய இருவரும் 3.2 ஓவர்களில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர், அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களை மிக இலகுவாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்து வெற்றியை உறுதி செய்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 58 ஓட்டங்களுடனும் வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 51 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இருவரும் தலா 5 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் விளாசினர்.

தங்கராசு நடராஜன், பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

விஜயகாந்த் வியாஸ்காந்த்துக்கு இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீச முடியாமல் போனது.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ட்ரவிஸ் ஹெட் (0), அபிஷேக் ஷர்மா (3), நிட்டிஷ் குமார் ரெட்டி (9), ஷாஹ்பாகஸ் அஹ்மத் (0) ஆகிய நால்வரும் வெளியேற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் தடுமாற்றம் அடைந்தது. (5 ஓவர்கள் நிறைவில் 39 - 4 விக்.)

அதன் பின்னர் ராகுல் த்ரிபதியும் ஹென்றிச் க்ளாசனும் 5ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் சரிவை ஓரளவு சீர் செய்தனர்.

எனினும் சீரான இடைவெளியில் அவர்கள் இருவரும்  ஆட்டம் இழந்தனர்.

ராகுல் த்ரிபதி 55 ஓட்டங்களையும் க்ளாசன் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து மேலும் 3 விக்கெட்கள் சரிய 16 ஓவர்கள் நிறைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் அணித் தலைவர் பெட் கமின்ஸ் (30), விஜயகாந்த் வியாஸ்காந்த் (7 ஆ.இ) ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக்.

https://www.virakesari.lk/article/184177

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதிப்போட்டியில் கொல்கத்தா: சன்ரைசர்ஸ் சூறாவளி பேட்டிங்கை சீர்குலைத்த 'அந்த' முடிவு

KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

முதல் ஓவரின் 2வது பந்து அது. சரியான லென்த்தில் வீசப்பட்ட அந்த பந்து லேசாக ஸ்விங் ஆகி, ஸ்டெம்பை சிதறடிக்க தனது பேஸ்பால் ஆட்டத்தால் எதிரணிகளை கலங்கடித்து வந்த டிராவிஸ் ஹெட் டக்அவுட் ஆகி வெளியேறினார். 75 ஆயிரம் பேர் நிறைந்திருந்த ஆமதாபாத் அரங்கில் சன்ரைசர்ஸ் அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை கொல்கத்தா வீரர்கள் அந்த அதிர்ச்சியியில் இருந்து கடைசி வரை மீளவே விடவில்லை.

அடுத்த ஓவரில் மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். 5வது ஓவரில் நிதிஷ் குமர் ரெட்டி, ஷாபாஸ் அகமது என இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழவே சன்ரைசர்ஸ் அணி நெருக்கடியில் சிக்கியது.

அவை அனைத்துக்கும் காரணம் ஒரே நபர் மிட்ஷெல் ஸ்டார்க். ரூ.24 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் தன்னை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வாங்கியது சரியே என்பதை இந்த ஒரு போட்டியில் அவர் நிரூபித்துவிட்டார்.

மிட்ஷெல் ஸ்டார்க்கின் வலிமையே புதிய பந்தில் பந்தை காற்றின் வேகத்துக்கு ஏற்ப பந்தை வீசுவதும், துல்லியம் தான். கிரிக் இன்ஃபோ வலைதள புள்ளிவிவரங்கள்படி, டி20 கிரிக்கெட்டில் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவர்களில் 67.5 சதவீதம் ஸ்டெம்ப்பை நோக்கி வந்து போல்டாக்கும் அல்லது பேட்டர்களுக்கு அவுட்சைட் எட்ஜாகி கேட்சாகும்.

இதே பாணியை நேற்றும் கடைபிடித்து சன்ரைசர்ஸ் அணியை ஸ்டார்க் சிதறடித்தார். மிட்ஷெல் ஸ்டார்க்கின் ஆகச்சிறந்த பந்துவீச்சால், ஐபிஎல் டி20 2024 சீசனின் இறுதிப்போட்டிக்கு 4வது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

அந்த அணி ப்ளே ஆஃப் தகுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

4வது முறையாக இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கௌதம் கம்பீர்

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. இதற்கு முன் 2012, 2014ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2021ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்கள் அதிகம் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டம் ஒருதரப்பாக நடந்து முடிந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்டார்க் தனது மந்திர பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் அணியை பாதி சாய்த்தார். பிற்பகுதியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தனது பங்களிப்பை செய்து ஒட்டுமொத்தமாக வீழ்த்தினார்.

பேட்டிங்கில் கொல்கத்தா அணியின் குர்பாஸ், நரைன் இருவரும் பவர்ப்ளே ஓவருக்குள் எதிரணியின் நம்பிக்கையை குலைத்துவிட்டனர். 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் இருவரும் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை வசமாக்கினர்.

‘எனக்கு தமிழ் தெரியாது, ஆனால் அவர் தமிழில் பேசுவார்’

இறுதிப்போட்டியில் 4வது முறையாக கொல்கத்தா

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “ஒவ்வொரு வீரரும் பொறுப்புடன் செயல்பட்டனர். இந்த புத்துணர்ச்சி முக்கியமானது. பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து புத்துணர்ச்சி குறையாமல் வைத்திருப்பது சாதாரணது அல்ல. ஒரேமாதிரியாக விளையாடுவது மிக முக்கியம்.

கிடைக்கும் ஒவ்வொரு வாயப்பையும் சரியாகப் பயன்படுத்தினோம். சூழலுக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் சிறப்பாக செயல்பட்டனர். ஒவ்வொரு வீரரும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளாமல், பொறுப்புடன் செயல்பட்டனர். குர்பாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பந்துவீச்சின் போது நடுப்பகுதி ஓவர்களை சுனில், வருண் பார்த்துக்கொண்டனர்.

எனக்கும் வெங்கேடஷுக்கும் இடையே ஒரே வித்தியாசம் எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் என்னிடம் அவர் தமிழில் பேசுவார். இருவரும் சேர்ந்து சந்தோஷமாக பேட் செய்தோம்” என்றார்.

 

சன்ரைசர்ஸ் ஏமாற்றம்

இறுதிப்போட்டியில் 4வது முறையாக கொல்கத்தா

பட மூலாதாரம்,SPORTZPICS

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. குறைந்த ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்யவும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டதால், எளிதாக வெற்றியை கொல்கத்தா வசமாக்கியது.

சன்ரைசர்ஸ் அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. முக்கிய கட்டங்களில் பல கேட்சுகளை அந்த அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். ஸ்ரேயாஸ் ஷாட் அடித்த போது, கையில் விழுந்த பந்தைக் கூட டிராவிஸ் ஹெட் பிடிக்காமல் கோட்டை விட்டார்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சு வழக்கத்துக்கு மாறாக மோசமாக இருந்து. நடராஜன் மட்டுமே ஓவருக்கு 7 ரன்கள் வீதம் கொடுத்திருந்தார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு இரட்டை இலக்க ரன்களில் தான் வாரி வழங்கினர்.

நடுப்பகுதியில் எதிரணி ரன்சேர்ப்பைக் கட்டுப்படுத்த ஸ்பெலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. பகுதி நேரப் பந்துவீச்சாளர்களான நிதிஷ் ரெட்டி, ஹெட், விஜயகாந்த் ஆகியோரின் பந்துவீச்சு அந்த அணிக்கு கைகொடுக்கவில்லை.

சன்ரைசர்ஸ் அணிக்கு இதோடு வாய்ப்பு முடிந்துவிடவில்லை. ஆமதாபாத்தில் இன்று நடக்கும் ராஜஸ்தான்-ஆர்சிபி இடையேயான வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதி, அதில் வென்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம். வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் மீண்டும் கொல்கத்தாவை எதிர்கொண்டு சன்ரைசர்ஸ் பழிதீர்க்க முடியும்.

ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு

ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,மிட்ஷெல் ஸ்டார்க்கை பாராட்டும் சக கொல்கத்தா வீரர்கள்

சன்ரைசர்ஸ் அணியின் முதுகெலும்பை முதல் 6 ஓவர்களிலேயே மிட்ஷெல் ஸ்டார்க் முறித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஸ்டார்க் 3 விக்கெட், அரோரா ஒரு விக்கெட் என 4 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அப்போதே தோல்வியை நோக்கி நடைபோடத் தொடங்கிவிட்டது எனலாம்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிராவிஸ் ஹெட்டை முதல் ஓவரின் 2வது பந்திலேயே கிளீன் போல்டாக்கி டக்அவுட் ஆக்கினார் ஸ்டார்க். டி20 ஃபர்மெட்டில் டிராவிஸ் ஹெட்டை டக்அவுட்டில் ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்தது 4வது முறையாகும்.

டிராவிஸ் ஹெட் தொடர்ந்து 2வது முறையாக இந்த சீசனில் டக்அவுட் ஆகினார். கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டக்அவுட் ஆனார்.

அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசினார். நிதானமாக பேட் செய்த அபிஷேக் ஷர்மா 3 ரன்களில் ரஸலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2024 சீசனில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக இருந்து, மிரட்டல் விடுத்த இரு பேட்டர்களும் ஒற்றை ரன்னிலும், டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தது சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை எளிதாக்கியதில் பெரும்பங்கு ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரையே சாரும். அவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் ஆட்டமிழந்த போதே ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது என்பது அந்த அணி ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது.

5வது ஓவரில் ஸ்டார்க் வீசிய 5வது பந்து அவுட்சைட் ஆஃப்சைடில் சென்றதை நிதிஷ் குமார் ரெட்டி தட்டிவிட விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்சானது. அடுத்து களமிறங்கிய ஷாபாஸ் அகமது க்ளீன் போல்டாகி வெளியேற, ஸ்டார்க்கிற்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கிடைத்தன.

பவர்ப்ளே ஓவருக்குள் 45 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணியின் முதுகெலும்பை உடைத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

 

நம்பிக்கையளித்த திரிபாதி

நம்பிக்கையளித்த திரிபாதி

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,ராகுல் திரிபாதி

3வது வீரராகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஓரளவுக்கு நிதானமாக ஆடி சன்ரைசர்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹர்சித் ராணா, அரோரா பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டர்களாக வெளுத்த திரிபாதி, 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

வழக்கத்துக்கு மாறாக பொறுமையாக பேட் செய்த கிளாசன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்த நிலையில், 32 ரன்களில் வருண் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று எல்லைக்கோடு அருகே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்த திரிபாதி, நரைன் வீசிய 14-வது ஓவரில் ரஸலால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி மீண்டும் நெருக்கடியில் சிக்கியது. இம்முறை அந்த அணியை காப்பாற்ற யாரும் இருக்கவில்லை.

அடுத்த வந்த சன்வீர் சிங், அதே ஓவரில் நரைன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார். அதன்பின் அப்துல் சமது(30), புவனேஷ்வர்(0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 30 ரன்கள் சேர்த்து கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.

101 ரன் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 58 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

சன்ரைசர்ஸ் சூறாவளி பேட்டிங்கை சீர்குலைத்த மோசமான முடிவு

ஆடுகளத்தை கணிக்காத சன்ரைசர்ஸ்

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆமதாபாத்தில் நேற்று பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், சிவப்பு, கறுப்பு மண் கலந்த ஆடுகளம். இதனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் சிறிது ஈரப்பதத்துடன் இருந்ததால், பந்து நன்றாக ஸ்விங் ஆகி, வேகமாக பேட்டர்களை நோக்கி வந்ததால், விக்கெட்டுகள் மளமளவென சன்ரைசர்ஸ் அணிக்குச் சரிந்தது.

ஆனால், பிற்பகுதியில் பந்து பழையதான பிறகு சன்ரைசர்ஸ் பேட்டர்கள் அடித்து ஆடவும் உதவியாக இருந்தது. ஆக சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியில் ஆடுகளத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் விட்டதும், டாஸ் வென்றதும் வழக்கம்போல் பேட்டிங்கை தேர்வு செய்ததும் தவறான முடிவாக அமைந்துவிட்டது.

"விரைவில் மீண்டு வருவோம்"

விரைவில் மீண்டுவருவோம்

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ்

முக்கியமான ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் சிறிது கூட மனம் தளராமல் பேசி, உற்சாக ஊற்றை வற்றாமல் பார்த்துக்கொண்டார்.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “இந்த தோல்வியிலிருந்து விரைவாக மீண்டு வருவோம். சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் இதுபோன்ற தோல்விகள் டி20 போட்டியில் வரத்தான் செய்யும். பேட்டிங்கில் சரியான தொடக்கம் அமையவில்லை, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படவில்லை.

உம்ரான் மாலிக்கை கொண்டுவர திட்டமிட்டோம், ஆனால் சன்வீர் பேட்டிங் செய்வார் என்பதால் வைத்திருந்தோம். கொல்கத்தா அணியினர் நன்றாக பேட் செய்தனர், பந்துவீசினர். இந்த தோல்வியிலிருந்து விரைவில் வெளியேவருவோம். புதிய இடம் எங்களுக்காக காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பவர் ப்ளேயில் பாதி வெற்றி

159 ரன்கள் எனும் குறைந்த இலக்கை துரத்திய அணிக்கு பில் சால்ட்டுக்குப் பதிலாக களமிறங்கிய குர்பாஸ் நல்ல தொடக்கம் அளித்து 23 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆபத்தான பேட்டர் சுனில் நரைன் 4 பவுண்டர்கள் உள்பட 21 ரன்களில் கம்மின்ஸ் பவுன்சரில் விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் 63 ரன்கள் சேர்த்து இருவரும் ஆட்டத்தை பாதி முடித்துக் கொடுத்தனர்.

 

வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் அரைசதம்

வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் அரைசதம்

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,அரைசதம் அடித்த வெங்கடேஷ்

3வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வெங்கடேஷ் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்று 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் வெங்கடேஷ் கணக்கில் சேரும்.

வெங்கடேஷ் அரைசதம் அடித்ததும், பொறுமையிழந்த கேப்டன் ஸ்ரேயாஸும் அதிரடியைக் கையில் எடுத்தார். டிராவிஸ் ஹெட் வீசிய 14வது ஓவரில் ஸ்ரேயாஸ் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து 23 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். வெங்கடேஷ் 51, ஸ்ரேயாஸ் 58 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

https://www.bbc.com/tamil/articles/ck557z24045o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

RR vs RCB: எலிமினேட்டரில் தொடரும் ஆர்சிபியின் தோல்விகள் - ராஜஸ்தானின் ராஜதந்திரம்

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து 17 ஐபிஎல் சீசன்களாக கோப்பையை வெல்ல ஆர்சிபி முயன்று வருகிறது. அது இந்த முறையும் நடக்கவில்லை.

அதேநேரம், தொடக்கம் முதல் வெற்றிகளைக் குவித்து, பிறகு தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்த ராஜஸ்தான் அணிக்கு, திடீரென தன்னம்பிக்கைக் குறைவு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த எலிமினேட்டர் வெற்றி, மீண்டும் ஃபார்முக்கு அழைத்து வந்துள்ளது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான பாதை தெளிவாகியுள்ளது. சென்னையில் நாளை நடக்கும் 2வது தகுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராஜஸ்தான் பலப்பரிட்சை நடத்தும்.

 

ஆர்சிபி-யும் எலிமினேட்டர் சுற்றும்

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம்,SPORTZPICS

அதேநேரம் ஆர்சிபியின் போராட்டம், விடாமுயற்சி இந்த ஆட்டத்தோடு முடிவுக்கு வந்தது. கடந்த 17 சீசன்களாக கோடிக்கணக்கான ரசிகர்கள், ஆதரவாளர்கள், சிறந்த ஆட்டம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தியும் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாத நிலை இந்த சீசனிலும் தொடர்கிறது.

ஐபிஎல் தொடர்களில் மட்டும் 5 முறை எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோற்றுள்ளது. 2015ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ், 2020ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ், 2021ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தாவிடம், 2022 சீசனில் லக்னெளவிடம் தோற்ற நிலையில் இப்போது மீண்டும் ராஜஸ்தானிடம் 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தோற்றுள்ளது ஆர்சிபி அணி.

ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம்

நேற்று ஃபீல்டிங்கும், பந்துவீச்சும் மிக சொதப்பலாக அமைந்திருந்ததே ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பவர்ப்ளே ஓவருக்குள் இரு கேட்சுகளை மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் தவறவிட்டனர். இரு கேட்சுகளை பிடித்திருந்தால், ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். அதேபோல ஸ்வப்னில் சிங், சிராஜ் பல ஃபீல்டிங்குகளை கோட்டைவிட்டு ரன்களை வழங்கினர். இதுபோன்ற தவறுகளைத் திருத்தியிருந்தாலே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கலாம்.

விராட் கோலி 33 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். லீக் சுற்றுகளில் சிறப்பாக ஆடிய கோலி, இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டங்களில் தவறவிட்டுள்ளார்.

பந்துவீச்சிலும் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். பனிப்பொழிவு ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மாவின் பந்துவீச்சிலும் ராஜஸ்தான் பேட்டர்கள் திணறியபோது தொடர்ந்து பந்துவீச அனுமதித்திருக்கலாம்.

 

'நம்பிக்கை வந்துவிட்டது'

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம்,SPORTZPICS

வெற்றிக்குப் பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில், “எங்களுக்கு மிகப்பெரிய சிறந்த நாட்களும் இருக்கிறது, மோசமான நாட்களுக்கும் இருக்கிறது. ஆனால், அனைத்திலும் மீண்டு வருவது முக்கியம்," என்று தெரிவித்தார்.

"பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் அனைத்திலும் எங்கள் அணியின் செயல்பாடு அருமை. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணம் வீரர்கள்தான். திட்டமிட்டபடி ஃபீல்டிங் அமைத்தோம், திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினோம், உத்திகளைச் சிறப்பாக சப்போர்ட் ஸ்டாஃப் வகுத்துக் கொடுத்தனர்."

"அஸ்வின், ஆவேஷ், போல்ட் பந்துவீச்சு அருமையாக இருந்தது. இளம் வீரர்கள் பேட்டிங்கில் பொறுப்புடன் செயல்பட்டனர். எங்களின் ஓய்வறையில் மீண்டும் நம்பிக்கை வந்துவிட்டது,” எனத் தெரிவித்தார்.

ராஜதந்திர ராஜஸ்தான்

ஆமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்றவுடன் சிறிதுகூட சிந்திக்காமல் பந்துவீச்சை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது. எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் இந்த மைதானத்தில் ஸ்குயர் பவுண்டரி பெரிதானது, ஒருபுறம் சிறிதாக இருக்கும். அதாவது வலதுகை பேட்டர்கள் லெக் திசையில் பவுண்டரி அடிப்பது கடினமாகவும், இடதுகை பேட்டர்கள் ஆஃப்சைட் பவுண்டரி அடிப்பது சிரமமாகவும் இருக்கும். இந்தக் கணிப்பை சரியாக ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி, ஆர்சிபி பேட்டர்களுக்கு தொந்தரவு கொடுத்தனர்.

இதனால் பவர்ப்ளே ஓவர்களில் ஆர்சிபி அணியால் 56 ரன்களுக்கு மேல் சேர்க்க முடியவில்லை. வலதுகை பேட்டர்களுக்கு வேண்டுமென்றே லெக் திசையில் பந்துவீசி அவர்களால் பவுண்டரி அடிக்க முடியாத வகையில் ரன்ரேட்டை குறைத்தனர்.

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம்,SPORTZPICS

டிரென்ட் போல்ட், அஸ்வின், ஆவேஷ் கான் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் ஆர்சிபியின் விக்கெட் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் குறிப்பாக அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இதில் அஸ்வின் வீசிய 4 ஓவர்களிலும் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட ஆர்சிபி பேட்டர்களை அடிக்க அனுமதிக்கவில்லை.

அதேபோல டிரென்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கவிட்டார். ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் என சிறிது அதிகமாக ரன்கள் வழங்கினாலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்குத் துணையாக இருந்தார்.

ஆர்சிபி பேட்டர்களை திணறவிட்ட போல்ட்

புதிய பந்தில் பந்துவீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் போல்ட் வல்லவர். ஐபிஎல் தொடர்களில் மட்டும் புதிய பந்தில் முதல் ஓவரில் 30 முறைக்கும் மேலாக போல்ட் விக்கெட் எடுத்துள்ளார். அதேபோல நேற்றும் போல்ட் தனது பந்துவீச்சில் ஆர்சிபி பேட்டர்களை திணறடித்தார்.

போல்ட் தனது 3 ஓவர்களிலும் இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என சரியான லென்த்தில் வீசி ஆர்சிபி பேட்டர்களுக்கு செக் வைத்தார். 3 ஓவர்களில் 6 ரன்கள், அதில் 2 லெக்பை மட்டுமே போல்ட் வழங்கி, ஆர்சிபிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆனால், ஆர்சிபி அணி தனது பந்துவீச்சின்போது 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணியை 42 ரன்கள் அடிக்கவிட்டது.

 

அஸ்வினின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம்,SPORTZPICS

இந்த சீசனில் அஸ்வினின் பந்துவீச்சு பல பேட்டர்களால் அடித்து விளாசப்பட்டாலும், நேற்றைய ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சு சிம்ம சொப்னமாக அமைந்திருந்தது. பந்தை டாஸ் செய்வதிலும், சரியான லென்த்தில் பிட்ச் செய்வதிலும் அஸ்வின் அற்புதமாகச் செயல்பட்டார்.

ஆர்சிபி பேட்டர்கள் அடித்து விளையாட எந்த சந்தர்ப்பத்தையும் அஸ்வின் வழங்கவில்லை. ஒருபுறம் சஹல் பந்துவீச்சில் ரன்கள் சென்றபோதிலும், அஸ்வின் அதை ஈடு செய்து கட்டுப்படுத்தினார். சஹலும் தனது பங்கிற்கு கோலி விக்கெட்டை வீழ்த்தினார்.

அஸ்வின் பந்துவீசிய 4 ஓவர்களும் ஆர்சிபி பேட்டர்களுக்கு நேற்று தலைவலியாக இருந்து, ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தது. ஒரு தவறான பந்தைக்கூட அஸ்வின் வீசாததால்தான் ஒரு பவுண்டரிகூட அடிக்க விடாமல் தடுத்தார்.

ஆர்சிபிக்கு நடுவரிசையில் நங்கூரமிட்ட கேமரூன் கிரீனை(27) வீழ்த்திய அடுத்த பந்தில் ஆபத்தான பேட்டர் மேக்ஸ்வெலையும் அஸ்வின் வெளியேற்றினார்.

ஆர்சிபியின் வலதுகை பேட்டர்கள் லெக்திசையில் பவுண்டரி அடிக்க சிரமப்பட்டு, மறுபுறம் ஸ்ட்ரைக் கிடைக்கும்போது ரன்சேர்க்க பயன்படுத்தினர். இதனால், ஆவேஷ் கான் வீசிய 12வது ஓவர், சஹல் வீசிய 10வது ஓவரில் தலா 13 ரன்கள் சென்றது.

 

தினேஷ் கார்த்திக் அவுட் சர்ச்சை

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆவேஷ் கான் வீசிய 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக் கால்காப்பில் வாங்கியபோது அதற்கு களநடுவர் ஆனந்தபத்மநாபன் அவுட் வழங்கினார். இந்த முடிவுக்கு எதிராக டிகே உடனடியாக அப்பீல் செய்யவில்லை, மாறாக களத்தில் இருந்த லாம்ரோருடன் பேசிவிட்டு டிஆர்எஸ் அப்பீல் செய்தார்.

மூன்றாவது நடுவர் ரீப்ளேவில் பந்து கால்காப்பில் படுவது போலவும், பேட்டில் பட்டு அதன்பின் கால்காப்பில் படுவது போலவும் இருந்தது. ஆனால் அல்ட்ரா எட்ஜில் பார்த்தபோது, உறுதியாகத் தெரியாத நிலையில் 3வது நடுவர் அனில் சவுத்ரி, அவுட் இல்லை என அறிவித்து களநடுவர் முடிவை மாற்றுமாறு கூறினார்.

எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாத நிலையில் அவுட் இல்லை என்று கூறிய 3வது நடுவர் முடிவை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்கராவும் இந்த முடிவால் ஆவேசமடைந்து சேனல்களிடம் பேசினார்.

வலுான அடித்தளமிட்ட ஜெய்ஸ்வால்

ராஜஸ்தான் அணி சேஸிங் செய்யும்போது ஜெய்ஸ்வால், டாம் காட்மோரின் இரு கேட்ச் வாய்ப்புகளை ஆர்சிபி ஃபீல்டர்கள் நழுவவிட்டு அந்த அணி வெற்றிக்கு வாய்ப்பளித்தனர். இதைப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 45 ரன்கள் விளாசினார்.

பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழந்து 47 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது. ஆனால், காட்மோர் 20 ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அடுத்த சில ஓவர்களில் கரன் ஷர்மா ஓவரில் கேப்டன் சாம்ஸன்(17) வெளியேறினார். ஆட்டம் திடீரென ஆர்சிபி பக்கம் சாய்வதைப் போல் இருந்தது. 14-வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு 36 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்டது.

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம்,SPORTZPICS

சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ரியான் பராக், ஹெட்மயர், இருவரும் கேமரூன் ஓவரை குறிவைத்தனர். கரீன் வீசிய 4வது ஓவரில் 17 ரன்களை விளாசினார். தயால் வீசிய 17வது ஓவரில் ஹெட்மயர் இரு பவுண்டரிகளை விளாச பந்துகளும்,தேவைப்படும் ரன்களும் ஏறக்குறைய சமமானது.

கடைசி நேரத்தில் சிராஜ் திருப்பம் ஏற்படுத்தினார். சிராஜ் வீசிய ஓவரில் ரியான் பராக் 36 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்ததாக நிலைத்து பேட் செய்த ஹெட்மயரை 26 ரன்களில் சிராஜ் வெளியேற்றினார். மிகவும் கடினமான கேட்சை டூப்ளெஸ்ஸி பிடித்து ஹெட்மயரை பெவிலியன் அனுப்பினார்.

ரோவ்மென் பாவெல், அஸ்வின் களத்தில் இருந்தனர். ஆனால், பாவெல் கடந்த பல போட்டிகளில் சொதப்பினாலும் இந்த ஆட்டத்தில் இரு பவுண்டரி, ஒரு பெரிய சிக்ஸர் அடித்து வெற்றி பெறச் செய்தார். பாவெல் 16 ரன்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் இருந்தனர்.

 

தோல்விக்கு காரணம் என்ன?

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில், “பனிப்பொழிவால் எங்களால் போதுமான அளவு சிறப்பாகப் பந்துவீச முடியவில்லை. ராஜஸ்தானை டிபெண்ட் செய்ய இன்னும் 20 ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருக்க வேண்டும்."

"இந்த ஆட்டத்தில் போராடிய வீரர்களுக்கு வாழ்த்துகள். இது 180 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம்தான், எங்கள் அணியில் இன்னும் ஒரு பேட்டர் நிலைத்து ஆடியிருந்தால் ஸ்கோர் பெரிதாக வந்திருக்கும், சவாலாக மாறியிருக்கும்.

எங்களால் முடிந்த அளவு சிறந்த ஆட்டத்தை வழங்கினோம். தொடர்ந்து 6 வெற்றிகள் பலரின் பாராட்டையும், இதயத்தையும் கைப்பற்றினோம்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cd11dpjyppzo

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.