Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

கிருபனைத் தவிர்த்து!😁

அதெல்லாம் முடியாது.......எங்களைத் தாங்கிப் பிடிக்க உங்களை விட்டால் வேறு யார் இருக்கினம் சொல்லுங்கோ பார்ப்பம் ......!   😁

  • Replies 257
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி!

இந்தியன் பிரிமீயர் லீக்கின் (ஐ.பி.எல்) மினி ஏலம் நேற்றைய கடந்த (19) திகதி டுபாயில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்  இது தொடர்பில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தன.

அதில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

மிட்சல் ஸ்டார்க்

அதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அவுஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி! | Ipl 2024 Ab De Villiers About Kkr Team Csk Auction

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் பெற்றார்.

இந்நிலையில் “கொல்கத்தா அணி அதிக தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாது” என ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வரிசை

இது தொடர்பாக அவர் கூறுகையில் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது.

“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி! | Ipl 2024 Ab De Villiers About Kkr Team Csk Auction

பந்துவீச்சில் இருக்கும் பலம் அந்த அணியின் துடுப்பாட்டத்தில் இல்லை என்றே நான் கருதுகிறேன். கொல்கத்தா அணியில் இருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் திறமையானவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ஆனால் இந்த துடுப்பாட்ட வரிசையை வைத்து கொண்டு கொல்கத்தா அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகம் தான். துடுப்பாட்ட வரிசை மிக மோசமானது இல்லை என்றாலும், அவர்களால் நிச்சயம் முதல் 4 இடங்களுக்குள் வர முடியாது என்பதே எனது கருத்து.

கொல்கத்தா அணியின் பலவீனம்

துடுப்பாட்ட வரிசையே கொல்கத்தா அணியின் பலவீனமாக நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி! | Ipl 2024 Ab De Villiers About Kkr Team Csk Auction

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2024க்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முழு அணி

நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கே.எஸ். பாரத், ஸ்டார்க். , அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், கஸ் அட்கின்சன், சாகிப் ஹுசைன்.

https://ibctamil.com/article/ipl-2024-ab-de-villiers-about-kkr-team-csk-auction-1703253255

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் தொடரில் விலகும் ஹர்திக் பாண்டியா?

Hardik-Pandya.jpg

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஓல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதனால் உலகக் கோப்பை அணியில் இருந்து ஹார்திக் விலகினார்.

தொடர்ந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.

இந்த நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்பதால் வருகின்ற ஐபிஎல் தொடரிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்துக்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். தற்போது ஹர்திக் பாண்டியா விலகும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோஹித் சர்மாவே செயல்படுவாரா அல்லது சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

https://thinakkural.lk/article/285791

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ மும்பை வீர‌ர்க‌ளை ஊட‌க‌ங்க‌ள் நல்லாய் கோல் மூட்டி விடுகின‌ம்😂...........
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த 3 ஐ.பி.எல். சீசன்களில் டோனி விளையாடுவார்!

மகேந்திர சிங் டோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:-

அறுவை சிகிச்சைக்கு பின்னர் டோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் டோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள்.

டோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். டோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.

Capture-4-6.jpg

டோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம்.

களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம்.

https://thinakkural.lk/article/289781

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹா.....ஹா.....ஹா.......உண்மையை சொல்கிறார்.......!  😂

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார் தோனி!

doni.jpg

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஏனைய வீரர்கள் விரைவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள் என அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/291104

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

Capture-4-2.jpg

ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்ல 2024 சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 2024 சீசனில் விளையாடும் புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது.

இதை வெளிப்படுத்தும் விதமாக நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது எதிஹாட் ஏர்வைஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளதை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது.

வீரர்களின் ஜெர்சியின் பின்பக்த்தில் அவர்களுடைய நம்பர்களுக்கு மேல் இனிமேல் எதிஹாட் ஏர்வைஸ் இடம் பிடித்திருக்கும்.

https://thinakkural.lk/article/291168

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல். கனவு அணிக்கு டோனி கெப்டன் - முன்னாள் வீரர்கள் தேர்வு

dhoni-1.jpg

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு டோனி கெப்டனாக தேர்வாகி இருக்கிறார்.

அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வருமாறு:-

டோனி (கெப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரெய்னா, டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா, பும்ரா.

https://thinakkural.lk/article/292421

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று வெளியாகிறது ஐபிஎல் அட்டவணை

ManjulaFeb 22, 2024 12:11PM
PJbpQVcC-IPL.jpg

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்று (பிப்ரவரி 22) மாலை 5 மணிக்கு  வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகவிருக்கிறது. அடுத்த அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் வெளியாகும். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 26-ம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

bcci ipl 2024 schedule

முதல் போட்டியில் வழக்கம்போல சென்னை அணி களமிறங்குகிறது. எதிர்த்து ஆடுவது யாரென்பது தெரியவில்லை. அநேகமாக குஜராத் அல்லது பெங்களூர் அணி எதிர்த்து ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடைபெறும் தொடக்க விழாவில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கோப்பையை எடுத்து வந்து ஒப்படைப்பார். இதையடுத்து தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் கூட டி2௦ உலகக்கோப்பை தொடரால், ஐபிஎல் தொடரை தள்ளிப்போடும் சூழ்நிலை தற்போது இல்லை.

bcci ipl 2024 schedule

இதனால் தான் ஐபிஎல் போட்டிகளை முன்னதாகவே நடத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் வெளிநாடுகளில் போட்டியை நடத்திட பிசிசிஐ துளியும் விரும்பவில்லை. வீரர்களும் ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் தான் ஆடிட விரும்புகின்றனர். எனவே இந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமே இந்தியாவில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/sports/bcci-to-release-ipl-2024-schedule-on-february-22-at-5-pm/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல் 2024: எந்தெந்த வீரர்கள் மீது எதிர்பார்ப்பு குவிகிறது?

2024 ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது. இந்த ஐபில் டி20 தொடர் நடக்கும்போது மக்களவைத் தேர்தலும் நடக்க இருப்பதால், முதல் 21 போட்டிகளுக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐபிஎல் தொடரும் ஒவ்வொரு விதமான ஸ்வாரஸ்யங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த ஐபிஎல் டி20 தொடரில் பல வீரர்கள் அணி மாறியுள்ளனர், பல வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர், இளம் வீரர்கள் அறிமுகமாகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் பல வீரர்களுக்கு இந்த ஐபிஎல் டி20 தங்களின் திறமையை உரசிப்பார்க்கும் உரைகல்லாக மாற இருக்கிறது. ஏனென்றால், இந்த ஐபிஎல் டி20 தொடரில் அந்த குறிப்பிட்ட வீரர்கள் சரியாக விளையாடாத பட்சத்தில் பட்சத்தில் இது அவர்களுக்கு கடைசி ஐபிஎல் தொடராக அமையக்கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

வீரர்களுக்கு ஒரு ஐபிஎல் தொடர் கடைசித் தொடராக மாறுவதற்கு அவர்களின் வயது, உடற்தகுதி, களத்தில் எவ்வாறு விளையாடுகிறார்கள் ஆகிய அளவு கோள்களும் பொருந்தும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு அணியலும் பல வீரர்களின் பட்டியல் நீள்கிறது.

 
2024 ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

நட்சத்திர வீரர்களுக்கு சோதனையா?

இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற ‘ஐகான்’ வீரர்களும், வெளிநாட்டு நட்சத்திர வீரர்களுக்கும் கூட இந்த ஐபிஎல் தொடர் என்பது கம்பி மீது நடப்பதுபோலத்தான். சரியாக விளையாடமல் போகும்பட்சத்தில் கிரிக்கெட் எதிர்காலம் முடிவுக்கு வரக்கூடும்.

ஐபிஎல் டி20 தொடரரில் வீரர்கள் சரிவர செயல்படாவிட்டால் அடுத்த ஆண்டு நடக்கும் ஏலத்தில் அந்த வீரர்களை வாங்கத் நிர்வாகம் தயங்குவார்கள் என்பது நிதர்சனம். இது கடந்த காலங்களில் நடந்துள்ளது.

2024 ஐபிஎல் டி20 தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 7-ஆம் தேதிவரை நடப்பதற்கான போட்டி அட்டவணையை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி மே 26-ஆம் தேதி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்த 5 நாட்களுக்குப்பின் டி20 உலகக் கோப்பைத் தொடரும் தொடங்குகிறது. ஜூன் 1-ஆம் தேதி, கரிபியன் தீவுகளிலும், அமெரிக்காவிலும் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்குகிறது.

அதனால், இந்த ஐபிஎல் டி20 தொடர் ஒவ்வொரு நாட்டு தேசிய அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

 

4 டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள்

இந்திய அணியைப் பொறுத்தவரை, ஐபிஎல் டி20 தொடரில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களில் பலருக்கு டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவும் வாய்பப்புண்டு. டி20 உலகக் கோப்பைக்கு அணியைத் தேர்வு செய்வதில் ஐபிஎல் தொடரும் அளவுகோலாக தேர்வுக்குழுவினரால் பார்க்கப்படலாம்.

இதில் ஐபிஎல் டி20 தொடரின் 2வது போட்டித் தொடர் அட்டவணை, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் ஐபிஎல் நிர்வாகம் வெளியிடுகிறது. இந்த 21 நாட்கள் நடக்கும் போட்டியில் 4 நாட்களில் 2 போட்டிகள் நடக்கின்றன.

மார்ச் 22-ஆம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. அதன்பின் நடக்கும் மற்ற ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டபுள் ஹெட்டர்ஸ் என்று அழைக்கப்படும் இரு போட்டிகள் நடக்கும் நாளில், முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் தொடங்குகிறது.

மார்ச் 23, 24 ஆகிய இரு நாட்களில் டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடக்கின்றன. அதன்பின் மார்ச் 31, ஏப்ரல் 7-ஆம் தேதிகளில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.

டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்ன்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் தங்களின் 14 போட்டிகளில் 5 ஆட்டங்களை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் விளையாடி முடித்துவிடுவர். கொல்கத்தா அணி 3 போட்டிகளிலும், மற்ற அணிகள் 4 போட்டிகளிலும் விளையாடும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வழக்கமாக தங்களின் மொஹாலி மைதானத்தில் ஆட்டத்தைத் தொடங்காமல், சண்டிகாரின் புறகநரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது.

 
2024 ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்ச் முதல் வாரத்தில் சென்னையில் தோனி பயிற்சி

முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஆர்சிபியுடன் மோதுகிறது. இந்தத் தொடரின் பயிற்சிக்காக மார்ச் முதல்வாரத்தில் தோனி சென்னை வந்து, அணியினருடன் பயிற்சியில் ஈடுபடுகிறார். கடந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே கோப்பையை வென்றவுடன் தோனி முழங்கால் அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் இதுவரை எந்தவிதமான போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

ஹர்திக் பாண்டியா கடந்த 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தநிலையில் இந்தமுறை மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்புகிறார்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின், மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், முழு தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 4 ப்ளே ஆஃப் ஆட்டங்கள் உள்பட 74 போட்டிகள் நடைபெற உள்ளன.

2024 ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது

அணிகள் மீதான எதிர்பார்ப்புகள் என்ன?

இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் பல புதிய வீரர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் புதிய வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே - ரச்சின் ரவீந்திரா, ரிஸ்வி,டேரல் மிட்ஷெல்

சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, உ.பியைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் ரூ.8.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள சமீர் ரிஸ்வி வலதுகை சுரேஷ் ரெய்னா என்று அழைக்கப்படுகிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பாகும். இதுதவிர ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள நியூசிலாந்து வீரர் டேரல் மிட்ஷெல், ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தோனி கைகளில் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா, கோட்ஸி

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். ரோஹித் சர்மா கேப்டனாகத் தொடர்வார் என்பது அவர் மீது நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இது தவிர தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி ஏலத்தில் எடுத்திருப்பது பந்துவீச்சில் பெரிய பலத்தை காட்டுகிறது.

கேகேஆரும் ஸ்டார்க்கும்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24 கோடிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை வாங்கியுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
2024 ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹர்ஷல் படேல்

பஞ்சாப்புக்கு வலுசேர்ப்பாரா ஹர்ஷல் படேல்?

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை ரூ.11.4 கோடிக்கு ஹர்ஷல் படேலை விலைக்கு வாங்கியுள்ளதால், அவரின் பந்துவீச்சு எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர ரூஸோ, கிறிஸ் வோக்ஸ் என பந்துவீச்சாளர்களையும் அந்த அணி வாங்கியுள்ளது.

ராவ்மென் பாவல் வருகை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கெனவே ஸ்திரமான அணியாக இருந்தபோதிலும் கூட, ஏலத்தில் ரோவ்மென் பாவல் ரூ.7.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவரின் வருகை பேட்டிங்கை எந்த அளவுக்கு பலப்படுத்தும் என்பது தெரியவில்லை.

ஷாருக்கான்,ஓமர்ஜாய், ரூ.10 கோடி ஜான்சன்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த ஷாருக்கான் இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். பிக் ஹிட்டரான ஷாருக்கான் வருகை, ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓமர்ஜாய் ஆகியோரின் வருகையும் பலம் சேர்க்கும். ஸ்பென்சர் ஜான்சன் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாயம் செய்வாரா மாவி?

லக்னோ சூப்பர் ஜெயிட்ஸ் அணி ஏலத்தில் ஷிவம் மாவியை ரூ.6.4 கோடி கொடுத்து வாங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியது. இந்த சீசனில் மாவியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும், பிற அணியின் பேட்டர்களுக்கு எந்த அளவுக்கு சிம்மசொப்னமாக மாறும் என்பது எதிர்பார்ப்பு.

டெல்லி கேபிடல்ஸ் நிலை என்ன?

டெல்லி கேபிடல்ஸ் அணி, மார்க்கெட் இழந்த ஹேரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஹை ரிச்சர்ட்சன், ஷாய் ஹோப் ஆகியோரின் வருகையும் டெல்லி அணிக்கு வலு சேர்க்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

பந்துவீச்சில் அதிக கவனம்

ஆர்சிபி அணி இந்த ஏலத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோஸப்பை ரூ.11 கோடிக்கு வாங்கி பந்துவீச்சை பலப்படுத்த முயன்றுள்ளது. இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாலை ரூ.5 கோடிக்கு வாங்கி பந்துவீச்சு மீது கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதபோல நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷன் வருகையும் ஆர்சிபிக்கு கூடுதல் பலத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் அணியின் நிலைமை என்ன?

சன்ரைசர்ஸ் அணி எப்போதுமே இளைஞர்கள் மீது அதிக கவனத்தைச் செலுத்தும். இந்த முறை ரூ.20 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கியுள்ளது. உலகக் கோப்பையில் பட்டையக் கிளப்பிய டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கும், ஹசரங்கா ரூ.1.50 கோடிக்கும், உனத்கட் ரூ.1.60 கோடிக்கும் வாங்கியுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் பேட்டர்களைவிட, பந்துவீச்சாளர்களே அதிகம் இருப்பதால், யாரைத் தேர்ந்தெடுத்து விளையாட வைக்கப்போகிறது, ப்ளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 
2024 ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

40 வயது கடந்தும் தோனி விளையாடுவாரா?

ஐபிஎல் தொடரில் உள்ள ஒவ்வொரு அணியிலும் ஐகான் வீரர்களைத் தவிர 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள், விளம்பு நிலை வீரர்கள் அதாவது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடும் வீரர்கள், சில சீசன்களாக திறமையை வெளிப்படுத்தாத வீரர்களுக்கு இந்தத் சீசன் கடைசியாக இருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

40 வயதைக் கடந்தாலும் தோனிக்கு இருக்கும் பிராண்ட் மதிப்பு, விளம்பரம், வர்த்தகரீதியான மதிப்பு ஆகியவை அவரை இன்னும் விளையாட வைக்கலாம். அதேபோல கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தாலும், ரசிகர்களின் மத்தியில் இருக்கும் வரவேற்பால், இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடலாம். ஆனால், இவை அனைத்துமே கணிப்பாகத்தான் இருக்குமே தவிர நிதர்சனத்தில் ஏதும் மாறலாம்.

ஐபிஎல் தொடரை வைத்து வீரர்கள் இந்திய அணிக்குள், அல்லது பிற அணிகளுக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்கு விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்து குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் “ ஐபிஎல் தொடர் என்பது முழுமையான வர்த்தக நோக்கோடு நடத்தப்படும் தொடர். இதை வைத்து ஒவ்வொரு நாட்டு அணியும், பிசிசிஐ நிர்வாகமும் வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அணிக்குள் வந்திருக்கலாம். ஆனால், இது அளவுகோலாக கருத முடியாது” எனத் தெரிவித்தார்.

ஐகான் வீரர்களுக்கு வயதாகிவிட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்களா என்று கேட்டபோது “ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத வெளிநாட்டு வீரர்கள், வயது காரணமாக ஆண்டுதோறும் வீரர்கள் செல்வது இயல்புதான். ஆனால், இதில் தோனி, கோலி, ரோஹித் சர்மா, ஷகர் தவண் இவர்களைக் கணக்கில் சேர்க்க முடியாது. இதில் இஷன் கிஷன், ரிஷப் பந்த் ஆகியோரும் வருவார்கள்.

"இவர்கள் மீது கோடிக்கணக்கான முதலீடுகளை விளம்பர நிறுவனங்கள் செய்துள்ளன. இவர்களே நினைத்தாலும்கூட ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு இவர்கள் மீது பிராண்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐபிஎல் கட்டமைப்பும் ஒரு காரணம்,” என்றார் முத்துக்குமார்.

"ஐபிஎல் முழுக்க முழுக்க வணிக ரீதியில்தான் நடத்தப்படுகிறது. அணிகளின் நிர்வாகங்களுக்கு லாபம்தான் முழுமையாக நோக்கமாக இருக்கிறது,” என முத்துக்குமார் தெரிவித்தார்.

 

‘தோனி நினைத்தாலும் ஓய்வு பெற முடியாது’

தோனி, கோலி, ரோஹித் சர்மாவுக்கு வயதாகிவிட்டதால் அவர்களுக்கு இந்தத் தொடர் கடைசியாக இருக்குமா என்று கேட்டபோது, “தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் ஐகான் வீரர்கள். இவர்கள் மீது வர்த்தகரீதியான அழுத்தம் விழுந்துள்ளது. ஆதலால், ஓய்வு என்பது ஐகான் வீரர்களின் தனிப்பட்ட முடிவு இல்லை என்பது என்னுடைய கருத்து,” என்றார் முத்துக்குமார்.

“ஆதலால், தோனி, ரோஹித், கோலி ஆகியோர் இன்னும் சில ஆண்டுகள்கூட விளையாடலாம்,” என்கிறார் அவர்.

மேலும், “விளம்பு நிலை வீரர்கள், ஐபிஎல் தொடரை மட்டுமே நம்பி இருக்கும் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இந்தத் தொடரில் சரியாக விளையாடாவிட்டால் அடுத்த சீசனில் நீக்கப்படலாம். குறிப்பாக ஆந்த்ரே ரஸல், சுனில் நரேன், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, பியூஷ் சாவ்லா, ஷமி, மணிஷ் பாண்டே ஆகியோர் வயது காரணமாகவும், உடற்தகுதி காரணமாகவும் அடுத்தசீசனில் காணாமல் போகலாம் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால், ஐகான் வீரர்களுக்கான மார்க்கெட் இருக்கும்வரை ஐபிஎல் தொடரில் விளையாடலாம்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/ce5ke3e43jno

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல்.லில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார்

இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பெட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.

அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கெபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கெப்டனாக செயற்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Capture-1-13.jpg

இது தொடர்பாக டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறியதாவது:-

2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு ரிஷப்பண்ட் கெப்டனாக செயற்படுவார். ஆனால் முதல் 7 ஆட்டங்களில் விக்கெட் கீப்பிங் பணியை செய்யமாட்டார். அவர் தனது விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.

பெட்டிங் மற்றும் ஓட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐ.பி.எல். போட்டிக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பார். முதல் போட்டியில் இருந்தே அவர் தலைமை தாங்குவார். ஒரு பெட்ஸ்மேனாக மட்டுமே அவரது உடல் எவ்வாறு செயற்படுகிறது என்பதை பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது பற்றி முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/292949

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து மொஹமட் ஷமி விலகல்!

wsw.jpg

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொஹமட் ஷமி வெளியேறியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொஹமட் ஷமி குறித்த தொடரிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொஹமட் ஷமி இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://thinakkural.lk/article/292917

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். வீரருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு

கிரிக்கட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க தொடரான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரொருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

யாழ். வீரருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு | Jaffna Player Joins Csk Team

மார்ச் 19, 2024 அன்று சென்னை சூப்பர்கிங்ஸ் குழாமில் வலைப்பந்து வீச்சாளராக சேர இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரரின் பெயரை விரைவில் வெளியிடுவோம்.

மேலும், அவரது பெற்றோர், பாடசாலை , கல்வி அமைச்சர் மற்றும் இலங்கை கிரிக்கட் பேரவை ஆகியோரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17ஆவது தொடர்

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 தொடர்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17ஆவது தொடர் மார்ச் மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கிண்ணங்களை வென்றுள்ளன.

யாழ். வீரருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு | Jaffna Player Joins Csk Team

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை, வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/jaffna-player-joins-csk-team-1708760576?itm_source=article

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியுசிலாந் வீர‌ர்க‌ள் தேசிய‌ அணிக்கு விளையாடுவ‌தா ஜ‌பிஎல்ல‌ விளையாடுவ‌தா என்ப‌தை வீர‌ர்க‌ள் தான் முடிவு செய்ய‌னும் என்று நியுசிலாந் தேர்வுக்குழு சொல்லி இருக்கின‌ம்..........இந்த‌ மாத‌ம் நியுசிலாந் அணி பாக்கிஸ்தான் சென்று விளையாட‌ இருப்ப‌தால் இப்ப‌டி சொல்லி இருக்கின‌ம்............நியுசிலாந் வீ ரீம் பாக்கிஸ்தான் போனால் எல்லா ம‌ச்சையும் பாக்கி வெல்லும்...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/12/2023 at 07:38, கிருபன் said:

@ஈழப்பிரியன் ஐயா,

போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வருகின்றதோ அப்போது பார்க்கலாம். குறைந்தது பத்துபேர் கலந்துகொண்டால்தான் நடத்தமுடியும்

போட்டிகளின் முழுமையான அட்டவணையை வெளியிடாமல் 21 மட்சுகளின் அட்டவணையை மாத்திரம் வெளியிட்டுள்ளமையால் இந்தமுறை யாழ் களத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது கடினம். 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, கிருபன் said:

போட்டிகளின் முழுமையான அட்டவணையை வெளியிடாமல் 21 மட்சுகளின் அட்டவணையை மாத்திரம் வெளியிட்டுள்ளமையால் இந்தமுறை யாழ் களத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது கடினம். 

என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்.

திகதிகளும், போட்டி மைதானங்களும் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை. ஆனால் அணிகளின் போட்டி  விபரங்கள் தேவை. எங்காவது கிடைத்தால் இந்த வாரம் தொடங்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

திகதிகளும், போட்டி மைதானங்களும் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை. ஆனால் அணிகளின் போட்டி  விபரங்கள் தேவை. எங்காவது கிடைத்தால் இந்த வாரம் தொடங்கலாம்

உங்கள் முயற்சிக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சி.எஸ்.கே. வில் டோனிக்கு புதிய பொறுப்பு

DHONI1-300x184.jpg

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி கெப்டனாக களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தொடங்க இருக்கும் 2024 ஐ.பி.எல். தொடரில் புதிய ரோலை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்து இருககிறார். டோனி ஏற்கவிருக்கும் புதிய பொறுப்பு என்னவென்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

 

https://thinakkural.lk/article/294496

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது ஜ‌பிஎல்ல‌ வேறு நாடுக‌ளில் தான் வைக்கிற‌வை இந்த‌ முறை இந்தியாவில் வைக்கின‌ம் 
ம்ம்ம்ம்ம்ம்ம்.....................................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/3/2024 at 20:53, கிருபன் said:

போட்டிகளின் முழுமையான அட்டவணையை வெளியிடாமல் 21 மட்சுகளின் அட்டவணையை மாத்திரம் வெளியிட்டுள்ளமையால் இந்தமுறை யாழ் களத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது கடினம். 

 

On 2/3/2024 at 00:02, ஈழப்பிரியன் said:

உங்கள் முயற்சிக்கு நன்றி கிருபன்.

முழு அட்ட‌வ‌னைய‌ வெளியிடாத‌துக்கு கார‌ண‌ம் பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்...........பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் வ‌ந்தால் ஜ‌பிஎல்ல‌ தென் ஆபிரிக்காவில் அல்ல‌து டுபாயில் ந‌ட‌த்துவின‌ம்............

ஜ‌பிஎல்ல‌ விடுங்கோ இன்னும் 4 மாத‌த்தில் 20அணிக‌ள் க‌ல‌ந்து கொள்ளும் 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை போட்டி ஜ‌பிஎல்ல‌ விட‌ சூடு பிடிக்கிம்.................இப்ப‌ இருக்கிற‌ சின்ன‌ அணிக‌ள் பெரிய‌ அணிய‌ வெல்ல‌ சாத்திய‌ம் அதிக‌ம்.................வெஸ்சீன்டிஸ் . அமெரிக்கா . க‌ன‌டாவில் இந்த‌ உல‌க‌ கோப்பை ந‌ட‌ப்ப‌தால் ம‌க்க‌ள் ம‌த்தியில் அதிக‌ வ‌ர‌வேற்ப்பை பெரும்🙏🥰................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிஎஸ்கேவின் அடுத்த தலைவர் யார்! நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

ஐபிஎல் 2024 ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் எதிர்கால திட்டம் பற்றி அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பின்னர் அணியின் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியை தோனியே வழிநடத்துவார் என்று காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த அணித்தலைவர்

அதேவேளை சிஎஸ்கே அணியின் புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய அவசரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் சென்னை அணியின் பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து தான் இதனை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சிஸ்கேவின் அடுத்த தலைவர் யார்! நிர்வாகம் எடுத்துள்ள முடிவு | Replace Ms Dhoni Csk Captain Ceo Big Revelation

அணித்தலைவர் உட்பட முதன்மையான இரு பொறுப்புகள் குறித்து நாம் விவாதிக்க தேவையில்லை, அதை தோனியும் பயிற்சியாளரும் முடிவு செய்யட்டும் அவர்கள் முடிவை தம்மிடம் தெரிவிக்கட்டும், அதை உங்களுக்கு தெரிவிப்பேன் என ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி முன்பு ரவீந்திர ஜடேஜாவை அணித்தலைவராக நியமித்திருந்த நிலையில் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே மீண்டும் அணித்தலைவராக தோனியே களமிறங்கினார்.

ஐபிஎல் 2024 இம்மாதம் 22 ஆரம்பமாகவுள்ளதோடு அன்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

https://ibctamil.com/article/replace-ms-dhoni-csk-captain-ceo-big-revelation-1710246797

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜ‌டேயா சென்னைக்கு ஏற்க‌ன‌வே க‌ப்ட‌னாய் இருந்து ப‌ல‌ ம‌ச் தோல்வில‌ முடிந்த‌து................ஜ‌டேயா க‌ப்ட‌னுக்கு ராசி இல்லாத‌வ‌ர் வேறு யாரிட‌ம் கொடுப்ப‌து............டோனிய‌ மாதிரி அனுப‌மிக்க க‌ப்ட‌ன் சென்னை அணியில் இல்லை...............அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாத‌வ‌ர்க‌ள் சென்னை அணியில் அதிக‌ம் .................அடுத்த‌ ஏல‌த்தில் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் அணிய‌ யார் ந‌ல்லா வ‌ழி ந‌ட‌த்தின‌மோ அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரை சென்னை அணி க‌ப்ட‌னாய் நிய‌மிக்க‌லாம்............அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் Pat Cummins சிற‌ந்த‌ க‌ப்ட‌ன் அவ‌ரை க‌ருணாநிதி குடும்ப‌ம் வேண்டி விட்ட‌து................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல் 2024 தொடர்: பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே கெப்டன் டோனி

Capturen-300x175.jpg

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கெப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் கெப்டன் டோனி தனது பயிற்சியை இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஒன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி,
கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்ததை ஒட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/295433

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனியை ஈர்த்த மாலிங்க பாணியிலான மாதுலன்

15 MAR, 2024 | 12:04 PM
image

(நெவில் அன்தனி)

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் இணைந்துகொண்டுள்ளார்.

இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 117ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் சார்பாக பந்துவீசிய மாதுலன், எதிரணி வீரர்  தகுதாஸ் அபிலாஷை இரண்டாவது இன்னிங்ஸில் யோக்கர் பந்தின் மூலம் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.

அவரது பந்துவீச்சுப் பாணி லசித் மாலிங்கவின் பந்துவீச்சை ஒத்ததாக இருந்ததுடன் அவர் வீசிய யோக்கர் பந்து சமூக ஊடகங்களில் பரவியது.

இதனை அடுத்து இளம் வீரர் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை பார்க்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி விரும்பியதாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களால் குகதாஸ் மாதுலன் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் இருக்கும் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுநர் குழாம் அவதானித்து வருவதடன் அவருக்கு தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருவதாக அறியக் கிடைக்கிறது.

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சு இலங்கை பயிற்றுநர்களினதோ தெரிவாளர்களினதோ கண்களில் படாமல் போனதாகும்.

https://www.virakesari.lk/article/178786




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.