Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

download-15.jpg?resize=259,194&ssl=1

மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா காலமானார்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியரான செ.யோகராசா நேற்று (07) கொழும்பில் காலமானார்.

யாழ் வடமராச்சி கரணவாய் கிராமத்தில் பிறந்த இவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில், குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவராவார்.

கடந்த 1991 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில், மொழித்துறை விரிவுரையாளராக இணைந்த இவர், 2009இல் பேராசிரியராக நியமனம் பெற்று 2014 இல் 23 வருட பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

அதுமட்டுமல்லாது இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எட்டு நூல்கள், ஆறு தொகுப்பு நூல்களை அவர் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1362528

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேராசிரியருக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2001  இல் இலங்கை சென்றபோது மட்டக்களப்பில் இவரது வீட்டிலே தான் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம்
மிகுந்த பண்பான மனிதர். அன்பான உபசரிப்பு.
அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஈழத்து இலக்கிய உலகின் தகவல் பெட்டகம் அழிந்து விட்டது.
பேராசிரியர் செ. யோகராசா, ஈழத்து இலக்கிய உலகின் தகவல் பெட்டகமாக விளங்கியவர். பெருமை பேசாத மனிதர். எந்த நேரத்திலும் இலக்கிய ரீதியான தேவைகளுக்காக அணுகுபவர்களுக்கு குறித்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தனது பங்களிப்பை செய்வர். சாதாரணமாக அனைவருடனும் பழக்க கூடியவர். அவருடன் கதைக்கின்ற போது பல புதிய ஆய்வுகள், தகவல்கள் சார்ந்த விடயங்கள் அறிய கூடியதாக இருக்கும். ஒருவரை பற்றியும் குறை கதைக்க மாட்டார். புதிதாக எதையாவது கண்டு பிடித்து வெளிப்படுத்த வேண்டும் என்பதே எப்போதும் அவரது சிந்தனையாக இருக்கும்.
இறுதியாக 2 கிழமைக்கு முன்னர் ராணி சிறீதரனின் 'கடவுள் தான் அனுப்பினரா?' நூலுக்கு முன்னுரையை அனுப்பி வைத்தார். இது தான் கடைசி போலும். மேலும் இர்ஷாத்தின் ஹைக்கூ தொகுதி முன்னுரையும் வெளிவராது என்னிடம் இருக்கிறது.
ஜீவநதி ஆரம்பித்த காலம் முதல் எந்த இக்கட்டான நேரத்திலும் கட்டுரை கேட்டாலும் விரைவாக தருவார். ஜீவந்தியில் அவரது 40 மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அதனை தொகுத்து நூலாக்க எண்ணி இருந்தோம். பரணீ 2024 செய்வோம் என சொல்லி இருந்தார். எங்கட அவை நிகழ்வில் அவரை வருகையாளராக அழைத்து அந்த நூலையும் வெளியீடு செய்ய 2 வருடமாக முயற்சித்தேன். முடியாமலே போய்விட்டது... இது தான் எனது அவசரத்துக்கு காரணம்...எதையும் நாளைக்கு என தள்ளி போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை...
பல புதிய விடயங்களை, பல இலைமறைகாயாய் இருந்த படைப்பாளிகளை, படைப்புகளை ஜீவந்தியில் அறிமுகம் செய்தார்.
அவரது சிறப்பிதழையாவது வெளியீடு செய்ய முடிந்தது என நினைத்து மனதை தேற்றி கொள்கிறேன்.
அவரது குரல் வழி ஆவணப்படுதலை 3 மணித்தியாலம் செய்துள்ளேன். தேவை படுவோர் aavanaham.org இல் கேட்கலாம்.
கடைசி நேரத்தில் கூட தனது நோய் பற்றி எனக்கு சொல்லவில்லை. நண்பர் அஜந்தகுமாருக்கு சொல்லி உள்ளார் "பரணீக்கு தனக்கு என்ன நோய் என சொல்லவேண்டாம்... பரணீ அறிந்தால் கவலை படும்... பரணீக்கு சொல்ல வேண்டாம்' இதை விட அவருக்கும் எனக்குமான அன்பை சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை...
ஜீவநதிக்கு சேரின் இழப்பு பேரிழப்பு... ஜீவநதிக்கு மட்டுமல்ல ஈழத்து சஞ்சிகைகள், இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு....
நினைக்க முடியாத இழப்பு... உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது சேர்... ஏன் சேர் உங்களை கவனிக்காமல் விட்டீர்கள்.
எங்கடை தொடர் இழப்புகளையும் வர போகும் 5 - 10 வருடத்தில் அடைய போகும் இழப்புகளையும் நினைக்க மிகவும் பயமாக உள்ளது... எமது இலக்கிய உலகம் வனாந்தரமாகுமோ? .....
அவரால் ஆக்க பட்ட மாணவர்கள் அவர் புகழை எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களுக்கு விடை கொடுக்க முடியவில்லை சேர்... உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்...
407975644_7799141146768176_4663686113919
 
 
407937323_7799143226767968_4481329292613
 
 
407940117_7799143240101300_3987802326581
 
 
409126702_7799143230101301_4740093777220
 
 
409167326_7799143336767957_7607460493674
 
+4
 
 
 
  • Like 1
  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.