Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் 08 பேர் கைது

Published By: DIGITAL DESK 3

29 JUN, 2025 | 01:13 PM

image

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்படையினர் இன்று  ஞாயிற்றுக்கிழமை (29) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 08 இந்திய மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய படகுகொன்றும் கடற்படையினரால் தாழ்வுப்பாடு  கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/218757

  • Replies 91
  • Views 4.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • இனி என்ன, அடுத்த செய்தி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுதான். இவர்கள் மீன் பிடித்து விட்டு போனால் பரவாயில்லை. கடலில் உள்ள மீன் உட்பத்தியாகும் அடித்தட்டுகளையெல்லாம் பெயர்த்து எறிகிறார்

  • ஏராளன்
    ஏராளன்

    எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை Published By: DIGITAL DESK 3   22 FEB, 2024 | 12:11 PM இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்ட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

30 JUN, 2025 | 10:41 AM

image

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை  எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை  (29)   உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வந்து எல்லை தாண்டி மீன்பிடித்த  8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை  மன்னார் கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை  மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-06-29_at_9.09.28_PM.

WhatsApp_Image_2025-06-29_at_9.09.32_PM.

https://www.virakesari.lk/article/218810

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 7 பேர் கைது 

01 JUL, 2025 | 03:57 PM

image

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் 7 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

நேற்று (30) இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் ஏழு பேரும் இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவரகள் என தெரிவிக்கப்படுகிறது. 

மீனவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

https://www.virakesari.lk/article/218938

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் 

01 JUL, 2025 | 05:51 PM

image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம்  துறைமுகத்தில் இருந்து நேற்று  திங்கட்கிழமை (30) மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள் நேற்றிரவு எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்று (1) பகல் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏழு மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

WhatsApp_Image_2025-07-01_at_5.02.44_PM.

WhatsApp_Image_2025-07-01_at_5.02.41_PM.

https://www.virakesari.lk/article/218967

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் கைது

13 JUL, 2025 | 02:24 PM

image

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர்.

அதன்போது அவர்களின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கைதான மீனவர்களையும், படகினையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், மீனவர்களை மேலதிக ச‌‌ட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/219867

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நெடுந்தீவில் கைதான 07 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

Published By: DIGITAL DESK 3

14 JUL, 2025 | 10:07 AM

image

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர். இதன்போது அவர்களின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கைதான மீனவர்களையும், படகினையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், மீனவர்களை மேலதிக ச‌‌ட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

 இதனை அடுத்து மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

https://www.virakesari.lk/article/219926

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு இந்திய மீனவர்கள் கைது

Published By: DIGITAL DESK 3

22 JUL, 2025 | 11:41 AM

image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே மீன்பிடிப்படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், குறித்த படகையும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை  இராமேஸ்வரத்தை சேர்ந்த 25 மீன்பிடிப்படகுகளும் 185 மீனவர்களும்  இலங்கை  கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

25 JUL, 2025 | 05:51 PM

image

நெடுந்தீவு கடற்பரப்பில் ஜூலை 13ம் திகதி கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜூலை 13ம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 7 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர்.

இலங்கை வேலைவாய்ப்பு

பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும்  கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரனைகளின் பின்னர் 7 தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்களையும் கடந்த 13ஆம் திகதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த மீனவர்களை ஜூலை 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த மீனவர் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/220941

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் அருகே சட்டவிரோதமாக மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Published By: Vishnu

05 Aug, 2025 | 02:52 AM

image

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

குறித்த படகைச் சோதனையிட்ட கடற்படையினர், அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு, மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

பின்னர், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கில் அவர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/221833

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் கைது

Published By: VISHNU

06 AUG, 2025 | 08:03 PM

image

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 80 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த இழுவைப் படகு தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும். இது பத்தலன்குண்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-08-06_at_19.48.10_8a

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், GPS வரைபடங்கள் மற்றும் மீன்களைக் கண்டறியும் கருவிகள் இருந்ததாகவும், இதன் மூலம் இந்த மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்திருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-08-06_at_19.48.11_9d

இலங்கையில் இழுவை வலை மீன்பிடித் தொழில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், இது உள்ளூர் மீனவ சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உள்ளூர் மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளூர் மீனவர்களின் கடும் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

WhatsApp_Image_2025-08-06_at_19.48.11_67

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

WhatsApp_Image_2025-08-06_at_19.48.11_ae

https://www.virakesari.lk/article/221995

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடற்பகுதியில் 07 இந்திய மீனவர்கள் கைது 

Published By: DIGITAL DESK 3

10 AUG, 2025 | 01:18 PM

image

மன்னாரை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடித்த 07 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

வட மத்திய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட படகுடன் இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்புக்குள் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க தொடர்ந்து ரோந்து மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்தது.

https://www.virakesari.lk/article/222231

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் நீடிப்பு!

17 Sep, 2025 | 01:54 PM

image

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் ஆகஸ்ட் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் நாளை வியாழக்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் இன்று (17) யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 03.09.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில், அன்றைய தினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் இன்று (17) வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

அதன்படி, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 மீனவர்களது விளக்கமறியலை நாளை (18) வரை நீடித்து நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவு பிறப்பித்தார்.

https://www.virakesari.lk/article/225308

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட் 05 மீனவர்களையும தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Published By: Vishnu

20 Sep, 2025 | 02:47 AM

image

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் வெள்ளிக்கிழமை [19] வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

IMG_5104.jpeg

 கடந்த ஜூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகுகளையும் ஒன்றையும் அதிலிருந்து 5 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் குறித்த மீனவர்களையும்,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 5 மீனவர்களையும் இம் மாதம் 26 ஆம் திகதி  வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்க  உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/225556

  • கருத்துக்கள உறவுகள்

Sri-Lanka-Fishermans.jpg?resize=649%2C34

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது!

கடந்த இரண்டு வாரங்களில், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த மீனவர்களுடன், 35 டிங்கி படகுகளையும், பல நாள் மீன்பிடி படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் திருகோணமலையைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளிலும், காரைதீவு முதல் நிந்தவூர் வரையிலான கடல் பகுதியிலும், நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1447893

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

15 Oct, 2025 | 05:04 PM

image

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  29  இந்திய  மீனவர்களையும் விளக்கமறியல் வைக்க யாழ்ப்பாணம்  ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 29  இந்திய மீனவர்களின் வழக்கு புதன்கிழமை (15)  ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் 28ம் திகதி நெடுந்தீவு கடலில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் கடந்த 9ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 17 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.  

குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை  நீதவான்  எதிர்வரும் 29ம் திகதி வரை 29 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227825

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

10 Nov, 2025 | 02:56 PM

image

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு திங்கட்கிழமை (10) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீனவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வழக்கினை ஆராய்ந்த நீதவான் 26 மீனவர்களுக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் இரு படகுகளையும் செலுத்தியவர்களுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் அபராத தொகையை செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/229990

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

Nov 17, 2025 - 06:45 PM

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

இவர்கள் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு இன்று (17) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழக மீனவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். 

இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

படகில் இருந்த ஏனைய 28 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதுவும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

10 வருட காலப்பகுதிக்குள் மீண்டும் எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்படும் காலப்பகுதியில் விதிக்கப்படும் தண்டனையுடன், 18 மாத சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

படகின் உரிமையாளர்களுக்கு படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. 

ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 31 மீனவர்களும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஊடாக மீரிகம முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmi363s8201puo29nc77e8eh5

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.