Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியும் ஜேர்மனிய முன்னணி தொலைக்காட்சியில் பெருமையாக காட்டினார்கள். ஆனால் அந்த பெண்மணிகளை பார்த்தால் மொடல் அழகிகள் போல் தெரிந்தது. இராணுவ உடையுடன் ஏதோ கொண்டாட்டத்திற்கு போவது போல் வாய்,கண்களுக்கு பூச்சுக்கள் பூசி அலங்கரித்துக்கொண்டு நின்றார்கள். 🤣

உண்மை எல்லாமே யாழ் களத்திலுள்ள மேற்குலகின் இரட்டை வேடத்தின் இரசிகர் பட்டாளத்திற்குத் தெரியும், புரியும். 

ஆனால் அவர்கள் அதனை ஏற்கமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Kapithan said:

உண்மை எல்லாமே யாழ் களத்திலுள்ள மேற்குலகின் இரட்டை வேடத்தின் இரசிகர் பட்டாளத்திற்குத் தெரியும், புரியும். 

ஆனால் அவர்கள் அதனை ஏற்கமாட்டார்கள். 

எல்லாம் நாடக கொம்பனிகள். உண்மைக்கு புறம்பானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

இது போல ஒற்றை அளவீட்டை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்க பொருளாதார ஆரோக்கியத்தையோ அல்லது அமெரிக்காவின் உலக மேலாண்மையயோ அளப்பதைப் பற்றி ஏற்கனவே நாம் கருத்தாடியிருக்கிறோமென நினைக்கிறேன். சந்தையில் கொஞ்சம் பயம் பற்றிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், உள்ளூரில் தொழில் வாய்ப்புகள் உருவாகும் வீதமும் எதிர்பார்த்தது போல குறையவில்லை. நுகர்வோர் செலவு வீதமும் குறையவில்லை (இதை "head scratcher" என்கிறார்கள்).

அமெரிக்கா கடன்முறியை விற்று செலவுக்கு எடுப்பது பல காலமாக நடந்து வருகிற செயல்பாடு. இதை உக்ரைன், இஸ்ரேலுக்கு செலவு செய்யாமல் உள்ளூரில் செலவு செய்யுங்கள் என்று ஒரு குழு உக்ரைன் யுத்தம் தொடங்கிய நாள் முதலே சொல்லி வருகிறது. இந்தக் குரல்களின் பின்னால் சென்று வாக்கு வேட்டை நடத்த சிவப்புக் கட்சி இப்போது முயல்கிறது. இது ஓர் உள்ளூர் அரசியல் கயிறிழுப்பு நிலை.

இதே போல ஒரு நிலை முதல் உலகப் போரின் தொடக்கத்திலும், இரண்டாம் உலகப் போர் தொடக்கத்திலும் நிலவியது. அந்த நேர அமெரிக்காவின் தலையிடாக் கொள்கையினால் (isolationism) அடி வாங்கியதும், அழிவுற்றதும் ஐரோப்பாவேயொழிய அமெரிக்கா அல்ல!

இன்றும் கூட அமெரிக்கா கை கழுவி விட்டால் பிரச்சினை ஐரோப்பாவிற்குத் தான் - இது தெரியாமல் துள்ளிக் குதிக்கும் அப்பிரண்டிசுகளை (உங்களை அல்ல!) நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது😂!  

உங்கள் கருத்திற்கு நன்றி, ஓம் ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் பற்றி பற்றி கதைத்துள்ளோம்.

ஆரம்பத்தில் பொருளாதாரம் பற்றிய விவாதத்தில் ஆர்வம் இருந்தது காரணம் எனது கருத்தினை மறுதலித்து கருத்து எழும்போது அவற்றினடிப்படையில் புதிதாக அறிய சந்தர்ப்பம் ஏற்படும் என்பதால் ஆனால் பொருளாதாரம் மிகவும் அலுப்பான பாடம் என பொருளாதாரம் படித்தவர்கள் கூறுவார்கள், அதுபோல யாழிலும் பெரிதாக யாரும் ஆர்வம் காட்டுவதில்லை அதனால் கருத்தாடல் ஒரு கை ஓசை போல எந்த பலனும் இல்லாமல் போவதால் தற்போது எழுதும் ஆர்வம் இல்லை.

மேலும் இந்த பணமுறியினை பொருளாதாரத்தில் leading indicator என்பார்கள்.

1.சாதாரணமான வளைவு இரண்டு அச்சுகளிடையே ஒரு வானவில்லை போல தோன்றும, இது பொருளாதாரம் சீராக உள்ளதை காட்டும்.

2.தட்டையான கோடு நிலையற்ற பொருளாதாரத்தினை குறிக்கும்

3.தலைகீழ் வானவில் வளைவு பொருளாதார சரிவினைஎதிர்வு கூறும்.

https://www.investopedia.com/terms/y/yieldcurve.asp

தற்போது அமெரிக்க பணமுறி 3 ஆவது நிலையில் உள்ளது.

http://www.worldgovernmentbonds.com/country/united-states/

எப்போதும் 3வது நிலையில் பொருளாதாரம் சரிவடைந்து விடும் என கூறமுடியாது, ஆனால் பொருளாதார சரிவு  இடம்பெற்ற காலங்களில் இந்த 3ஆவது நிலை நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள்.

இது முதலீட்டாளர்கள் அரச கொள்கை வகுப்பாளர்கள் பார்க்காத விடயங்களை உணர்வதால் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இஸ்ரேலுக்காக எதுவும் செய்யும். வெளியில் சமாதானம், பேச்சு வார்த்தை, மனிதாபிமானம் என எதை பேசினாலும் உள்ளால் செய்யும் வேலைகள் எப்படியானவர் என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

உங்கள் கருத்திற்கு நன்றி, ஓம் ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் பற்றி பற்றி கதைத்துள்ளோம்.

ஆரம்பத்தில் பொருளாதாரம் பற்றிய விவாதத்தில் ஆர்வம் இருந்தது காரணம் எனது கருத்தினை மறுதலித்து கருத்து எழும்போது அவற்றினடிப்படையில் புதிதாக அறிய சந்தர்ப்பம் ஏற்படும் என்பதால் ஆனால் பொருளாதாரம் மிகவும் அலுப்பான பாடம் என பொருளாதாரம் படித்தவர்கள் கூறுவார்கள், அதுபோல யாழிலும் பெரிதாக யாரும் ஆர்வம் காட்டுவதில்லை அதனால் கருத்தாடல் ஒரு கை ஓசை போல எந்த பலனும் இல்லாமல் போவதால் தற்போது எழுதும் ஆர்வம் இல்லை.

மேலும் இந்த பணமுறியினை பொருளாதாரத்தில் leading indicator என்பார்கள்.

1.சாதாரணமான வளைவு இரண்டு அச்சுகளிடையே ஒரு வானவில்லை போல தோன்றும, இது பொருளாதாரம் சீராக உள்ளதை காட்டும்.

2.தட்டையான கோடு நிலையற்ற பொருளாதாரத்தினை குறிக்கும்

3.தலைகீழ் வானவில் வளைவு பொருளாதார சரிவினைஎதிர்வு கூறும்.

https://www.investopedia.com/terms/y/yieldcurve.asp

தற்போது அமெரிக்க பணமுறி 3 ஆவது நிலையில் உள்ளது.

http://www.worldgovernmentbonds.com/country/united-states/

எப்போதும் 3வது நிலையில் பொருளாதாரம் சரிவடைந்து விடும் என கூறமுடியாது, ஆனால் பொருளாதார சரிவு  இடம்பெற்ற காலங்களில் இந்த 3ஆவது நிலை நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள்.

இது முதலீட்டாளர்கள் அரச கொள்கை வகுப்பாளர்கள் பார்க்காத விடயங்களை உணர்வதால் என கருதுகிறேன்.

ஆம், பதிலுக்கு நன்றி. இதைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன், வளையியின் திசை முதலீட்டாளர்களின் (pessimism/optimism) சிந்தனையைக் காட்டும் அளவீடு என்கிறார்கள்.

ஒரு கை ஓசை என்ற உங்கள் குறிப்பிற்கு: உங்கள் மன நிலையே என்னுடயதும்.  துறை சார்/தரவு பகிரும் எழுத்துக்களுக்கு அதிக நேரம், உழைப்பு செலவாகும். அவற்றிற்கு பெரியளவு வரவேற்பு இல்லாமல் இருப்பது கூட ஒரு குறையில்லை, ஆனால் நக்கல் செய்வோரின் இலக்காகவும் அவை யாழில் மாறி வருகின்றமையை அவதானிக்கிறேன். டேஜா வோ (Deja Vu) 😂!

உக்ரெயின் போரில் ரஸ்யா வென்றால் அது சீன மேலாதிக்கத்திற்கான கதவுகளைத் திறந்து விடுவதற்க்கு ஒப்பானது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது அமெரிக்கா நேரடியாக ஈடுபடாத உக்ரெயின்  போருக்காகச் செலவிடும் பணத்தை விடப் பன்மடங்கு பணச் செலவை அமெரிக்காவுக்கு உண்டாக்கும். ஏனென்றால் ரஸ்யா வெல்லும் பட்சத்தில் ஐரோப்பாவை நோக்கி அமெரிக்கா தனது கடல் ஆகாய கண்காணிப்பு எதிர்ப்பு இராணுவத் தளபாடங்களை நகர்த்த வேண்டி வரும். இதனால் தாய்வானின் பிடியை அமெரிக்கா தளர்த்த வேண்டி வரும்.

வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் இஸ்ரெயில் போரும் இதேபோல் இருக்கலாம். இந்த இரு போர்களுக்கும் அமெரிக்கா தற்போது செலவிடும் பணம் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரத்துக்கு வாய்ப்பானவையே. 

இதில் ஐரோப்பாவும் பெரும் பலனடைகிறது. அமெரிக்கா உக்ரெயினைக் கைவிட்டால் இப் போரை முழுமையாக ஐரோப்பிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டி வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2023 at 01:58, Justin said:

ஆம், பதிலுக்கு நன்றி. இதைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன், வளையியின் திசை முதலீட்டாளர்களின் (pessimism/optimism) சிந்தனையைக் காட்டும் அளவீடு என்கிறார்கள்.

ஒரு கை ஓசை என்ற உங்கள் குறிப்பிற்கு: உங்கள் மன நிலையே என்னுடயதும்.  துறை சார்/தரவு பகிரும் எழுத்துக்களுக்கு அதிக நேரம், உழைப்பு செலவாகும். அவற்றிற்கு பெரியளவு வரவேற்பு இல்லாமல் இருப்பது கூட ஒரு குறையில்லை, ஆனால் நக்கல் செய்வோரின் இலக்காகவும் அவை யாழில் மாறி வருகின்றமையை அவதானிக்கிறேன். டேஜா வோ (Deja Vu) 😂!

https://www.nasdaq.com/articles/treasuries-u.s.-10-year-yield-touches-lowest-since-mid-july

இன்று அமெரிக்க 10 வருட பணமுற்யில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதால் (அதற்காக கூறப்படும் காரணமான ஒரு பொருளாதார சரிவினை கூறுகிறார்கள்) அதனது Yield குறைவடைந்துள்ளது.

இது முன்னர் இணைத்த 30 வருட பணமுறியில் ஆர்வம் காட்டாத முதலீட்டாளர்கள் குறுங்காலத்தில் ஒரு பொருளாதார சரிவு ஏற்படும் என முதலீட்டாளர்கள் கருதுவதால் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்பதனடிப்படையில் கூறப்பட்டுள்ளது.

அரச பொருளாதார கொள்கை வகுப்பாளர் எதிர்கால பொருளாதார நடவடிக்கைகளை LEI  மூலமும்

https://www.usnews.com/news/economy/articles/2023-12-21/leading-indicators-fall-again-flashing-recession-signals-as-other-data-shows-a-more-positive-vibe-for-the-economy

output gap மூலமும் தீர்மானிக்கிறார்கள் ( பல விடயங்களில் இவை முக்கிய குறிகாட்டிகளாக  நான் கருதுகிறேன்)

https://www.imf.org/external/pubs/ft/fandd/2013/09/basics.htm#:~:text=The output gap is an,that is%2C at full capacity.

output gap என்பது எதிர்பார்க்கப்படும் பொருளாதாரவளர்ச்சியுடன் அனைத்து வள்ங்கலையும் பயன்படுத்தி எந்தவித பக்கவிளைவுகளற்ற (பணவீக்கம், பணசுருக்கம்) பொருளாதார வளர்ச்சியினை கழித்தால் வரும் இடைவெளி.

பழைய தரவுகளினடிப்படையில் அமெரிக்க பொருளாதாரம் ( தரவு அண்ணளவாக உள்ளமையால் தவறாக இருக்கலாம்) 2024 , 2025 இரண்டாண்டுகளிலும் ஏற்படும் பொருளாதாரவளர்ச்சியால் 0.49% பக்க விளைவினை உண்டாக்கும், அதாவது வட்டி விகிதம் அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகளே அதிகம் குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என கருதுகிறேன்.

அவுஸ்ரேலிய ஜப்பானிய  நாணயங்களை வர்த்தகம் செய்வதால் அமெரிக்க பொருளாதாரத்தினை கணிப்பதில்லை அதனால் அமெரிக்க பொருளாதாரம் பற்றிய புரிதல் அவ்வளவாக இல்லை, உங்களது அமெரிக்க பொருளாதாரம் பற்றிய கருத்துகளை பதிவிட்டால் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.