Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    14 DEC, 2023 | 07:00 PM

image

(நா.தனுஜா)

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் அங்கத்தவரான அவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஒரேயொரு புதல்வியும், மூன்றாம் சார்ள்ஸ் அரசரின் சகோதரியும் ஆவார்.

அதன்படி இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் பிரதி அட்மிரல் டிம் லோரன்ஸ் ஆகியோர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பாகி 75 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படவிருக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கம் இளவரசி ஆனுக்கு அழைப்புவிடுத்திருக்கும் நிலையிலேயே இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/171732

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம அணிலாருக்கு சந்தோசமான  செய்தி...அச்சொட்டா பொருந்துவா....அப்ப எங்கை அப்பப் பார்ட்டி..

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய இளவரசி ஆன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார்

Published By: DIGITAL DESK 3  10 JAN, 2024 | 09:53 AM

image
 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) சற்றுமுன்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence)  இன்று புதன்கிழமை லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலே இலங்கைக்கு வருகிறார். 

இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில்,

அரச குடும்பத்திற்கு ஏற்ற சேவை! இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆன்னை (Princess Anne) வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

இளவரசிக்கும் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு இலங்கையின் அரவணைப்பையும்  விருந்தோம்பலையும் விரிவுபடுத்துவது உண்மையிலேயே ஒரு கௌரவமாகும். எங்கள் விமான சேவையை பயணத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/173577

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசி ஆன் மிகவும் எளிமையானவர் போல் உள்ளது....... அவர் பிரித்தானிய அரச விமானத்தையோ அல்லது தங்களது சொந்த விமானத்தையோ பயன் படுத்தி இருக்கலாம்.......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்தார் இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஆன் 

Published By: PRIYATHARSHAN   11 JAN, 2024 | 11:24 AM

image
 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne,)  மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

WhatsApp_Image_2024-01-11_at_10.30.03.jp

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானிய இளவரசி ஆனின்  உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளது.

WhatsApp_Image_2024-01-11_at_10.30.02__1

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் புதன்கிழமை  (10) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.   

WhatsApp_Image_2024-01-11_at_10.30.06.jp

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆன் உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் வரவேற்பளிக்கப்பட்டது. 

WhatsApp_Image_2024-01-11_at_10.30.01.jp

அதனையடுத்து இளவரசி ஆன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர். 

WhatsApp_Image_2024-01-11_at_10.30.05.jp

இந்நிகழ்வை நினைவுக்கூறும் விதமாக ஜனாதிபதி மாளிகையிலிருக்கும் விருந்தினர் பதிவேட்டில் இளவரசி ஆன் நினைவுக் குறிப்பொன்றை பதிந்தார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,  சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.  

WhatsApp_Image_2024-01-11_at_10.30.05__1

முன்னதாக விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

GDfuFkeW4AAQDBK.jpg

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக் ஆகியோர் வரவேற்றனர்.

GDfuFkdWgAAu9yf.jpg

இதேவேளை, கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு பிரித்தானிய இளவரசி ஆன், மற்றும் கணவர்  வைஸ் அட்மிரல் சேர் திமோதி லாரன்ஸ் ஆகியோர் விஜயம் செய்தனர்.

GDecm_0bQAAFOD6.jpg

GDecm_1bIAAa-YC.jpg

GDecnAEaMAAKQot.jpg

இலங்கையில் பிரித்தானிய இளவரசி தங்கியிருக்கும் நாட்களில் கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மனிதாபிமான தேவைகளை ஆதரிப்பதற்காக கொழும்பில் உள்ள சேவ் தி சில்ட்ரன் அலுவலக ஊழியர்களை இளவரசி ஆன் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் நடவடிக்கைகளை கேட்டு அறிந்துகொண்டார்.

GDff_VPaMAAXUKf.png

GDff_VtboAAcpK9.png

GDe0fDKXAAAosyp.jpg

GDe0fC1X0AAF50D.jpg

GDe0fC5WgAABEM0.jpg

GDe0fDDWkAAYVA8.jpg

மேலும் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இளவரசி ஆன், சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். அத்துடன் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு தேவைகளை ஆதரிக்கும் சமூக-உணர்ச்சி கற்றல் கருவித்தொகுப்பான 'தில்லி' திட்டத்தின் அமர்வையும் அவதானித்தார்.

குறித்த வைத்தியசாலையில் உள்ள சிறுவர்களையும் இளவரசி ஆன் பார்வையிட்டார்.

GDff_WCb0AAvzVC.png

GDfdfYiWcAAQ54N.jpg

GDfbEWwWEAE89lc.jpg

GDfbEaeXIAA19fM.jpg

https://www.virakesari.lk/article/173665

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய இளவரசி ஆன் யாழுக்கு விஜயம் - வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு

11 JAN, 2024 | 03:49 PM
image
 

(எம்.நியூட்டன்)

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence)  உள்ளிட்ட குழுவினர் இன்று வியாழக்கிழமை (11) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

 

dgdghd.gif

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி  மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநரான பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கு வரவேற்பு அளித்தார்.

sgdg.gif

இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

பிரித்தானிய இளவரசி ஆன் யாழுக்கு விஜயம் - வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டிக்கு விஜயம் செய்தார் பிரித்தானிய இளவரசி

Published By: DIGITAL DESK 3   11 JAN, 2024 | 04:06 PM

image

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (11) கண்டியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கும் சென்றுள்ளார்.

GDjMEAEaIAEsqHo.jpg

GDjMEAIbcAAt-EO.jpg

https://www.virakesari.lk/article/173699

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 02:11, ஏராளன் said:

அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சில சிங்கள அமைச்சர் அறிக்கை விடுவினம் : இவர் 13 ஆம் திகதி திரும்பி போவதை வன்மையாக கண்டிக்கிறேன் என அறிக்கை விட்டாலும் விடுவினம்...தமிழரின் 13 ஆம் திறுத்த சட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து 13 ஆம் திகதி வெளிகிடுகிறார்...

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2024 at 19:13, suvy said:

இளவரசி ஆன் மிகவும் எளிமையானவர் போல் உள்ளது....... அவர் பிரித்தானிய அரச விமானத்தையோ அல்லது தங்களது சொந்த விமானத்தையோ பயன் படுத்தி இருக்கலாம்.......!  😁

இன்று பிரித்தானிய அரச குடும்பமும் ,சிறிலங்கா அரசு போல வங்குரோத்து நிலையில் தான் இருக்கிறது ..
அவர்களின் அடிமை நாடுகளின் விமானத்தில் போனால் அதிக மரியாதை கிடைக்கும் என நினைத்திருப்பார்கள்...
மேலும் எங்கன்ட விமான சேவை நிறுவனத்தினரும் வியாபாரத்தை அதிகரிக்க இவையளுக்கு கட்டணம் அறவிடாமல் டிக்கட் போட்டிருப்பினம்....ஆனால் பகிடி என்னவென்றால் வெளிநாட்டு சிங்களவர்களே அந்த விமானத்தில் ஏற யோசிக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு திரும்பினார் பிரித்தானிய இளவரசி

Anne-Princess-Royal.jpg

பிரித்தானிய இளவரசி ஹேன் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்.

இன்று அதிகாலை 02.25 மணியளவில் இளவரசி மற்றும் அவரது குழுவினர் இலங்கை விமான நிலையத்திற்கு சொந்தமான UL-505 இல் விமானத்தினூடாக பிரித்தானியா நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 10 ஆம் திகதி அவர் நாட்டை வந்தடைந்தார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய குறித்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/288052

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.