Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    14 DEC, 2023 | 07:13 PM

image
 
(நா.தனுஜா)

உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள 'இமயமலை பிரகடனத்தில்' தமிழ்மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு, அதனை வெளியிட்டவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதை அவதானிக்கமுடிவதாக விசனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலை' பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. இதுகுறித்து டென்மார்க்கை தளமாகக்கொண்டு இயங்கிவரும் 'அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு' என்ற புலம்பெயர் தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகத்தமிழர் பேரவைக்கும், சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் எனும் புத்த பிக்குகளின் சங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடிப்படையாகக்கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் 'இமயமலை பிரகடனம்' எனும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் செய்தி பரப்பப்பட்டது.

சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் உலகத்தமிழர் பேரவைக்கும், புத்த பிக்குகளின் சங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலானது இலங்கை அரசாங்கத்தினாலும், அதன் ஊடகப்பிரிவினாலும் மேற்கூறப்பட்டவாறு மிகத்தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கை அரசின் தலையிடாக்கொள்கையை முன்னிறுத்துவதாகக்கூறி, இலங்கைக்கு சாத்தியமான வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்விளைவாக இலங்கையின் பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மென்மேலும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே இவ்விடயத்தை மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் கையாளவேண்டும்.

தமிழீழ மக்கள் தனிச்சிங்கள சட்டம், அரசினால் அனுமதிக்கப்பட்ட வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவழிப்பு போன்றவற்றால் சுமார் 6 தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக அடக்குமுறைகளை அனுபவித்துவருகின்றனர். துரதிஷ்டவசமாக வன்முறை வடிவிலான அடக்குமுறை என்பது எமது மக்களது இருப்பின் ஓரங்கமாகவே மாறிவிட்டது. தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்கள், தமது தன்னாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக பல தசாப்தங்களாக அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவை பலனளிக்காததால் தம்மைத் தற்காத்துக்கொள்வதற்கு 'இதுவே ஒரே வழி' என ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நிச்சயமற்ற சூழலில் ஊற்றெடுத்த இந்த எதிர்ப்பு மட்டுமே எமது மக்களின் குரலாக ஒலிக்கின்றது. நீண்டகாலமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் உச்சமாகவே 2009 மே மாதம் இடம்பெற்ற இனவழிப்புப்போர் அமைந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வமான தமிழ்ப்பிரதிநிதிகள் என இமயமலை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி தகுந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில் தமிழ்மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் எவையும் அப்பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை. குறிப்பாக சுதந்திர தமிழீழமே தமிழருக்கான தீர்வு என்று 1976 இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமும், அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் 2010 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அப்பிரகடனத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே இவர்களது (பிரகடனத்தை வெளியிட்டவர்கள்) கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

நாம் இராஜதந்திர ரீதியிலான சமாதானப்பேச்சுக்களின் மூலம் நிரந்தர தீர்வை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம். தமிழர் தாயகத்தை ஒரு தனித்துவமான தேசமாகவும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் கருத்துக்களைக்கொண்ட அரசியல் பேச்சுக்களை நாம் வரவேற்கின்றோம். சர்வதேச நாடுகளின் ஊடாக இதற்கான பரிந்துரையைப் பெறுவதற்குத் தீவிரமாக முயற்சிக்கின்றோம். எதுஎவ்வாறெனினும் இப்பேச்சுக்களின் வெற்றியானது தமிழர் தாயகத்தின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை அங்கீகரிப்பதிலும், அவற்றுக்கான சரியான தீர்வுகளைக் காண்பதிலுமே தங்கியுள்ளது. இந்த அடிப்படைப் பிரச்சினைகளை அங்கீகரிப்பது சமாதானப்பேச்சுக்களில் எமது முழுமையான பங்களிப்புக்கு வழிகோலும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/171719

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இது? 

புதுசு புதுசா உருட்டுறாங்களே,.....😁

  • கருத்துக்கள உறவுகள்

சரி உள்ளடங்காத விடயத்தை இந்த அமைப்பு உள்ளடக்கி அதை வலியுறுத்தி இவர்களும் அங்கு சென்று ஆக்கபூர்ரவமான விட்ங்களைச் செய்யலாம் தானே. யார் தடுத்தது? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

யாரப்பா இது? 

புதுசு புதுசா உருட்டுறாங்களே,.....😁

நாங்களும் புதுசா ஒரு அமைப்பை தொடங்க இருக்கிறோம். யாழ் சொந்தங்கள்  இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் உதவியாக இருக்கும். நீங்களும் இதில் அங்கத்தவர்களாக சேர்ந்து பண உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். வாழ்க தமிழ் ஈழம், வளர்க தமிழ் தொண்டு. 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாததால் 'இமயமலை பிரகடனத்தை' தமிழ் சிவில் சமூக குழுக்கள் நிராகரிப்பு - தவத்திரு வேலன் சுவாமிகள்

16 DEC, 2023 | 08:57 PM
image

தமிழ் சிவில் சமூக குழுக்கள் தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாததற்காக 'இமயமலை பிரகடனத்தை' நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

நேற்று (15) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாகவது :

தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் போனோர் குடும்பங்கள் உட்பட பாதிக்கப்பட்ட குழுக்கள், சமய குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கல்விமான்கள் என பலர் அடங்கிய தமிழ் சிவில் சமூக குழுக்கள், சங்காவின் சிறந்த இலங்கை (SBSL), உலகத் தமிழ் மன்றம் (GTF) இணைந்து 'இமயமலை பிரகடனத்தை' கூட்டாக நிராகரித்துள்ளன.  

இந்த இமயமலை பிரகடனத்தை ஆர்வத்துடன் படித்தோம். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு தமிழர்கள் அனுபவித்து வரும் வேதனைகள், தமிழர்களுக்கு உள்ள குறைகளை முற்றிலும் புறக்கணித்ததற்காக ஏமாற்றமடைந்தோம்.

வெளிப்படையாக, பௌத்த மதகுருமார்களுக்கு தமிழர்களின் குறைகள் பற்றி தெரியாது. ஏனெனில், அவர்கள் தமிழர் பகுதிகளுக்கு வெளியே சிங்களவர்களிடையே வசிப்பதால், நாம் எதை எதை கடந்து வந்தோம், தொடர்ந்து கடந்து வருகிறோம் என்பதை பற்றி எதுவும் தெரியாது. 

பதினான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர், 'பொத்துவில் முதல் பொலிகண்டி வரை' போன்ற வெகுஜன பேரணிகள் மூலம் நேரடியாக எமது குறைகளை வெளிப்படுத்தியுள்ளோம். 

பாதுகாப்புப் படையினரின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுமார் அரை மில்லியன் தமிழர்கள் இணைந்து தமிழ்ப் பகுதிகளில் ஐந்து நாள் 'பொத்துவில் முதல் பொலிகண்டி வரை'யான அணிவகுப்பு பேரணியை வழிநடத்தியது. 

தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட குழுக்களும் தமிழர்களின் குறைகளை வெளிப்படுத்தும்  வகையில் ஏராளமான போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். 

அவர்களின் குறைகள் எதுவும் இந்த பிரகடனத்தில் கவனிக்கப்படவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்களால் வெளிப்படுத்தப்பட்ட பின்வரும் தமிழர்களின் குறைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

1.போருக்கு முந்தைய 1983ஆம் ஆண்டு நிலைமைகளுக்கு தமிழர் பகுதிகளில் ஆயுதப் படைகளின் இருப்பை குறைத்தல். 

யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், மே 2009இல் போரின் உச்சகட்டத்தில் இருந்ததைப் போலவே மோசமான இராணுவ புலனாய்வுப் பிரிவு உட்பட பாதுகாப்புப் படைகளின் பிரசன்னம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

அமைதிக் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் இருப்பு, இனப்படுகொலைகள் மற்றும் தமிழ்ப் பெண்களை பாதுகாப்புப் படையினரால் பெருமளவிலான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கடுமையான அட்டூழியங்களுக்கு முகங்கொடுத்த தமிழர்களுக்கு பல பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. 

2. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) இலங்கையைப் பார்க்கவும்: 

போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஒரு பாதுகாப்புப் படை அதிகாரியோ அல்லது அரசியல் தலைவரோ நீதியை எதிர்கொள்ளவில்லை. - ஐ.நா. உள்ளாய்வு அறிக்கையின்படி, சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் 2009இல் நடந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் கொல்லப்பட்டனர். 

மேலும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் உட்பட பல ஐ.நா அதிகாரிகளின் கோரிக்கையின்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு நாங்கள் கோருகிறோம்.

3. புராதன இந்து இடங்கள் உட்பட இந்துக் கோவில்களை அழிப்பதை நிறுத்தவும், பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ் பகுதிகளில் புத்த கோவில்கள் கட்டுவதை நிறுத்தவும்.

4. தமிழர் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல் மற்றும் தமிழர் நிலங்களை அபகரிப்பதை நிறுத்துதல். 

5. நீடித்து வரும் தமிழர் மோதலைத் தீர்க்க சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தவும் : 

சுதந்திரம் பெற்றதில் இருந்து நீடித்து வரும் தமிழர் மோதலுக்கான அடிப்படைக் காரணம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு இல்லாததுதான். இந்த மோதலின் விளைவாக 1958, 1977, 1983 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். 

தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களுக்கும் இடையிலான பல ஒப்பந்தங்கள் ஒருதலைப்பட்சமாக அடுத்தடுத்த அரசாங்கங்களால் இரத்து செய்யப்பட்டன மற்றும் இந்தியா மற்றும் நோர்வேயின் சர்வதேச மத்தியஸ்தம் கூட தோல்வியடைந்தது. 

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ளதைப் போலவே, ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வினை காண்பதற்கு சர்வதேச அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

2.jpg

3.jpg

https://www.virakesari.lk/article/171845

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 13:14, island said:

சரி உள்ளடங்காத விடயத்தை இந்த அமைப்பு உள்ளடக்கி அதை வலியுறுத்தி இவர்களும் அங்கு சென்று ஆக்கபூர்ரவமான விட்ங்களைச் செய்யலாம் தானே. யார் தடுத்தது? 

அது எப்படி   அவர்கள் சுதந்திர தமிழீழமே தமிழருக்கான தீர்வு என்று சர்வதேச நாடுகளின் ஊடாக அதை பெறுவதற்குத் தீவிரமாக முயற்சித்து கொண்டிருக்கிறர்கள். தை பொங்கலுடன் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 06:25, Kapithan said:

யாரப்பா இது? 

புதுசு புதுசா உருட்டுறாங்களே,.....😁

இமயமலை பிரகடனம் எனும் பெயரை கேட்ட அதிர்ச்சி இன்னும் நீங்க முன்னர்..

பெயர் வைத்தே நம்மை அசத்துகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நியாயம் said:

இமயமலை பிரகடனம் எனும் பெயரை கேட்ட அதிர்ச்சி இன்னும் நீங்க முன்னர்..

பெயர் வைத்தே நம்மை அசத்துகின்றார்கள். 

யாராவது ஓராள் ஒரு அடி முன்வைக்கக் காலைத் தூக்கினாலே போதும்,  இழுத்து விழுத்த பலர் ஆயத்தம். 

எங்கள் இனம் பலமுள்ளவனுக்கு அடிமையாக இருக்க அல்லது ஆயுதத்தால் கட்டுப்படுத்த மட்டுமே பொருத்தமானது. 

7 hours ago, ஏராளன் said:

தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாததால் 'இமயமலை பிரகடனத்தை' தமிழ் சிவில் சமூக குழுக்கள் நிராகரிப்பு - தவத்திரு வேலன் சுவாமிகள்

16 DEC, 2023 | 08:57 PM
image

தமிழ் சிவில் சமூக குழுக்கள் தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாததற்காக 'இமயமலை பிரகடனத்தை' நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

நேற்று (15) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாகவது :

தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் போனோர் குடும்பங்கள் உட்பட பாதிக்கப்பட்ட குழுக்கள், சமய குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கல்விமான்கள் என பலர் அடங்கிய தமிழ் சிவில் சமூக குழுக்கள், சங்காவின் சிறந்த இலங்கை (SBSL), உலகத் தமிழ் மன்றம் (GTF) இணைந்து 'இமயமலை பிரகடனத்தை' கூட்டாக நிராகரித்துள்ளன.  

இந்த இமயமலை பிரகடனத்தை ஆர்வத்துடன் படித்தோம். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு தமிழர்கள் அனுபவித்து வரும் வேதனைகள், தமிழர்களுக்கு உள்ள குறைகளை முற்றிலும் புறக்கணித்ததற்காக ஏமாற்றமடைந்தோம்.

வெளிப்படையாக, பௌத்த மதகுருமார்களுக்கு தமிழர்களின் குறைகள் பற்றி தெரியாது. ஏனெனில், அவர்கள் தமிழர் பகுதிகளுக்கு வெளியே சிங்களவர்களிடையே வசிப்பதால், நாம் எதை எதை கடந்து வந்தோம், தொடர்ந்து கடந்து வருகிறோம் என்பதை பற்றி எதுவும் தெரியாது. 

பதினான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர், 'பொத்துவில் முதல் பொலிகண்டி வரை' போன்ற வெகுஜன பேரணிகள் மூலம் நேரடியாக எமது குறைகளை வெளிப்படுத்தியுள்ளோம். 

பாதுகாப்புப் படையினரின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுமார் அரை மில்லியன் தமிழர்கள் இணைந்து தமிழ்ப் பகுதிகளில் ஐந்து நாள் 'பொத்துவில் முதல் பொலிகண்டி வரை'யான அணிவகுப்பு பேரணியை வழிநடத்தியது. 

தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட குழுக்களும் தமிழர்களின் குறைகளை வெளிப்படுத்தும்  வகையில் ஏராளமான போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். 

அவர்களின் குறைகள் எதுவும் இந்த பிரகடனத்தில் கவனிக்கப்படவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்களால் வெளிப்படுத்தப்பட்ட பின்வரும் தமிழர்களின் குறைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

1.போருக்கு முந்தைய 1983ஆம் ஆண்டு நிலைமைகளுக்கு தமிழர் பகுதிகளில் ஆயுதப் படைகளின் இருப்பை குறைத்தல். 

யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், மே 2009இல் போரின் உச்சகட்டத்தில் இருந்ததைப் போலவே மோசமான இராணுவ புலனாய்வுப் பிரிவு உட்பட பாதுகாப்புப் படைகளின் பிரசன்னம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

அமைதிக் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் இருப்பு, இனப்படுகொலைகள் மற்றும் தமிழ்ப் பெண்களை பாதுகாப்புப் படையினரால் பெருமளவிலான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கடுமையான அட்டூழியங்களுக்கு முகங்கொடுத்த தமிழர்களுக்கு பல பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. 

2. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) இலங்கையைப் பார்க்கவும்: 

போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஒரு பாதுகாப்புப் படை அதிகாரியோ அல்லது அரசியல் தலைவரோ நீதியை எதிர்கொள்ளவில்லை. - ஐ.நா. உள்ளாய்வு அறிக்கையின்படி, சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் 2009இல் நடந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் கொல்லப்பட்டனர். 

மேலும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் உட்பட பல ஐ.நா அதிகாரிகளின் கோரிக்கையின்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு நாங்கள் கோருகிறோம்.

3. புராதன இந்து இடங்கள் உட்பட இந்துக் கோவில்களை அழிப்பதை நிறுத்தவும், பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ் பகுதிகளில் புத்த கோவில்கள் கட்டுவதை நிறுத்தவும்.

4. தமிழர் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல் மற்றும் தமிழர் நிலங்களை அபகரிப்பதை நிறுத்துதல். 

5. நீடித்து வரும் தமிழர் மோதலைத் தீர்க்க சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தவும் : 

சுதந்திரம் பெற்றதில் இருந்து நீடித்து வரும் தமிழர் மோதலுக்கான அடிப்படைக் காரணம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு இல்லாததுதான். இந்த மோதலின் விளைவாக 1958, 1977, 1983 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். 

தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களுக்கும் இடையிலான பல ஒப்பந்தங்கள் ஒருதலைப்பட்சமாக அடுத்தடுத்த அரசாங்கங்களால் இரத்து செய்யப்பட்டன மற்றும் இந்தியா மற்றும் நோர்வேயின் சர்வதேச மத்தியஸ்தம் கூட தோல்வியடைந்தது. 

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ளதைப் போலவே, ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வினை காண்பதற்கு சர்வதேச அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

2.jpg

3.jpg

https://www.virakesari.lk/article/171845

எந்தப் பிரகடனத்தையோ அல்லது தீர்வுத் திட்டத்தையோ நிராகரிப்பதும் ஏற்பதும் மக்களைப் பொறுத்தது. இதனை நிராகரிக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.