Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உலகில் வாழும் ஒவ்வொரு மனித இனங்களும் தமக்குரிய இன மத கலாச்சாரங்களுடனேயே வாழ்கின்றன. பெரிய பிரித்தானிய மக்கள் தங்களுக்குரிய கலாச்சாரங்களுடனேயே வாழ்கின்றார்கள். இதே போல் பிரான்ஸ் நாட்டை பற்றி  சொல்லவே தேவையில்லை. உணவில் கூட கண்ணியமான கலாச்சாரம் வைத்திருப்பார்கள். இத்தாலியும் கலை கலாச்சாரங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதே போல் ஜேர்மனி,போலந்து ரஷ்ய மக்கள் என தங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதனால் தான் தாம் தம் மக்கள் கலாச்சாரம் என விட்டுக்கொடுக்காமல் வாழ்கின்றார்கள்.

உங்களைப்போன்ற கருத்தாளர்களால்  ஏற்கனவே நடுத்தெருவில் நிற்கும் தமிழினம் நடுத்தெருவே இல்லாமல் காணாமல் போகும்.

எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை.

பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம்.

இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை.

சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள்.

வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது.

அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர்.

டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது.

உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை.

உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.

  • Replies 56
  • Views 5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.  

  • அவருடைய வெற்றி யின் பின்னால் உள்ள  அவரது கடும் உழைப்பும் + இந்திய அரசின் அரசியல் நகர்வும் (ஈழத் தமிழரை தனது  வட்டத்திற்குள் கொண்டுவரும்)  இருக்கிறதாக பார்க்கிறேன்.  அவரது வெற்றியை நிதானமாகக் கொண்

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழினத்தின் கலாச்சாரத்தை,மொழியை,பண்பாடுகளை,இருப்பிடத்தை,உரிமைகளை வேரோடு அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றான். நாமோ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிக்கொண்டு திரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை.

பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம்.

இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை.

சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள்.

வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது.

அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர்.

டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது.

உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை.

உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.

நான் ஏதோ சொல்ல விழைய நீங்கள் சாப்பாட்டில் வந்து நிற்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

நான் ஏதோ சொல்ல விழைய நீங்கள் சாப்பாட்டில் வந்து நிற்கின்றீர்கள்.

நான் எப்பவும் அப்படித்தான்🤣.

#சாப்பாட்டு இராமன்🤣

சாப்பாடும் பண்பாட்டின் ஒரு கூறுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை.

பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம்.

இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை.

சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள்.

வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது.

அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர்.

டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது.

உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை.

உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.

உங்கள் ஜதார்ததமான. கருத்தை வரவேற்கிறேன்.  உலகின் எல்லா இனங்களின் கலாச்சாரத்தை விட அனைத்து இன மக்களுக்கும் பொதுவான  மனித பண்பாடே உயர்வானது.  

கில்மிஷாவின் வெற்றியை தென்னிலங்கை சிங்கள  ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட போது சமூக ஊடகங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்ட பல்லாயிரம்  சாதாரண சிங்கள பொது மக்கள்  இதயபூர்வமாக  கில்மிஷாவை  வாழ்த்தி பின்னூட்டங்களை இட்டதை அவதானிக்க கூடியமாக இருந்தது.  அது எமக்கு பெருமையாகவும் இருந்தது. 

எமது இனம் ஏனைய இனங்களுக்கு எத்த வகையிலும் சளைத்தது அல்ல. உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் இணையானவர்கள் நாம் என்பதை பல்வேறு துறைகளில் எமது வெற்றிகரமான  செயற்பாடுகள் மூலம் உலகிற்கு  காட்டுவதே எமக்கு பெருமை.  

அதை விடுத்து நாம் நாம் மூத்தகுடி, உலகத்திற்கே அறத்தை சொல்லி கொடுத்தவர்கள் நாம், உலகத்திற்கே தாய் மொழி எமது மொழிதான் என்று,  நாமே மேடை போட்டு  நாமே எமக்குள் மட்டும் காட்டு கூச்சல் இடுவது நிச்சயமாக எமக்கு பெருமையானது அல்ல.  அதை எவரும் திரும்பி கூட பார்ககப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட அனைவருக்கும் சொந்த நாடு சொந்த நிலம் சொந்த கலாச்சாரம் பண்பாடு என அடித்தளம் இருக்கின்றது.சேறு கண்ட இடத்தில் மிதித்து குளம் கண்ட இடத்தில் கழுவி விட்டு போகலாம். ஏனெனில் அவர்களுக்கு சொந்த கூடாரம் இருக்கின்றது.செய்யும் விடயங்களில் சரி பிழை பார்த்து ஒதுங்கிக்கொள்ளலாம்.
ஆனால் எங்களுக்கோ சொந்த நிலமும் இல்லை.உரிமைகளும் இல்லை. நாடு நாடாக அகதியாய் அலைந்து திரிந்து கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் என அலைந்து திரிய வேண்டியதுதான்.

உலகிலே ஒரே இனம் ஒரே நிறம் ஒரேமொழி ஒரே மனித பண்புகள் இருப்பதில்லை. இது இயற்கை சொல்லும் பாடம். சமிக்கை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சொந்த இடம், நாடு உள்ள இனங்கள், நாடற்ற இனங்கள் என்ற வேறுபாடில்லை. 

மாற்றம் ஒன்றே மாறாதது.

அழுதாலும், தொழுதாலும், மிரட்டினாலும் யாழ்பாணத்தில் அம்மக்கள் சுய விருப்பில் செண்டை மேளம் அடிப்பதை, டிஜே பார்ட்டிக்கு போவதை யாராலும் நிறுத்த முடியாது. தொடரூந்து பாதையில் விழுந்து படுப்பதால் அதை நிறுத்த முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

சொந்த இடம், நாடு உள்ள இனங்கள், நாடற்ற இனங்கள் என்ற வேறுபாடில்லை. 

மாற்றம் ஒன்றே மாறாதது.

அழுதாலும், தொழுதாலும், மிரட்டினாலும் யாழ்பாணத்தில் அம்மக்கள் சுய விருப்பில் செண்டை மேளம் அடிப்பதை, டிஜே பார்ட்டிக்கு போவதை யாராலும் நிறுத்த முடியாது. தொடரூந்து பாதையில் விழுந்து படுப்பதால் அதை நிறுத்த முடியாது.

மாற்று கலாச்சாரங்களும், தேவையில்லாத பழக்க வழக்கங்களும், காற்றோடு கலந்து வருபவை அல்ல. ஏதோ ஒரு விதத்தில் திணிக்கப்படலாம்.கவர்ச்சியாக விளம்பரப்படுத்தலாம். சினிமா மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிர்மூலமாக்கலாம்.மதங்கள் கூட திணிக்கப்படுபவைதான். இதுதான் இன்று உலகில் நடக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.