Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் (Deobra Redden) எனும் 30 வயதான கைதி பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றசாட்டில் டியோப்ரா ரெட்டன் மீது வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.

 

நீதிபதி மீது தாக்குதல்

 

எனினும், அவருக்கு நன்னடத்தை சோதனை முறையான விடுதலையை (Probation) வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் தீர்ப்பை வாசிக்கும் நீதிபதி மீது தாக்குதல் | Inmate Jumps At Judge At Las Vegas District Court

இதற்கமைய அந்த கோரிக்கையை நிராகரித்து, நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் நீதிபதி மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேரி கே ஹோல்தஸ் எனும் 62 வயதான பெண் நீதிபதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

https://tamilwin.com/article/inmate-jumps-at-judge-at-las-vegas-district-court-1704398103

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த சம்பவம் பற்றிய காணொளி பார்த்தேன். இங்கு தமிழ்வின்னில் குறிப்பிட்ட சம்பவத்தில் இடம்பெற்ற முக்கியவிடயம் குறிப்பிடப்படவில்லை.  

அவர் திடீர் என நீதிபதி மீது பாயும் அளவுக்கு நீதிபதி என்ன சொன்னார் என அறியுங்கள் காரணம் புரியும். 

இந்த நீதிபதி ஒரு பக்குவப்பட்ட பொறுப்பான நீதிபதி போல் தோன்றவில்லை.  அவரது நக்கல் கதை குற்றவாளிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.  

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீதிபதிகளின் நிகழ்ச்சிகள் பார்க்கின்றோம். அவை நாடகம் போன்றவை.  இங்கே நீதிபதி தனது வார்த்தைகளில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

எல்லாரும் ஒரு பொறுப்புக்கு வந்தபின்னர் அதிகாரம் கிடைத்தபின் சக மனிதனை எப்படியும் நடத்தலாம் என நினைக்கின்றனர்.  ஆணவம் தலைக்கேறுகின்றது.  

தீர்ப்பு கூறும்போது இனிமேல் இந்த நீதிபதி நையாண்டி நக்கல் கதை கதைக்கும்போது (கதைத்தால்) இந்த பாயும் மனிதன் (பாய்ந்து தாக்கியவர்) நினைவில் வருவார்.  

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயம் said:

நான் இந்த சம்பவம் பற்றிய காணொளி பார்த்தேன். இங்கு தமிழ்வின்னில் குறிப்பிட்ட சம்பவத்தில் இடம்பெற்ற முக்கியவிடயம் குறிப்பிடப்படவில்லை.  

அவர் திடீர் என நீதிபதி மீது பாயும் அளவுக்கு நீதிபதி என்ன சொன்னார் என அறியுங்கள் காரணம் புரியும். 

இந்த நீதிபதி ஒரு பக்குவப்பட்ட பொறுப்பான நீதிபதி போல் தோன்றவில்லை.  அவரது நக்கல் கதை குற்றவாளிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.  

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீதிபதிகளின் நிகழ்ச்சிகள் பார்க்கின்றோம். அவை நாடகம் போன்றவை.  இங்கே நீதிபதி தனது வார்த்தைகளில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

எல்லாரும் ஒரு பொறுப்புக்கு வந்தபின்னர் அதிகாரம் கிடைத்தபின் சக மனிதனை எப்படியும் நடத்தலாம் என நினைக்கின்றனர்.  ஆணவம் தலைக்கேறுகின்றது.  

தீர்ப்பு கூறும்போது இனிமேல் இந்த நீதிபதி நையாண்டி நக்கல் கதை கதைக்கும்போது (கதைத்தால்) இந்த பாயும் மனிதன் (பாய்ந்து தாக்கியவர்) நினைவில் வருவார்.  

என்ன சொன்னாராம் நீதிபதி? ஏற்கனவே aggravated battery இற்காக இந்த வழக்கு நடந்திருக்கிறது, தண்டனை ஒத்தி வைப்பை (probation) நிராகரித்து தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்த நேரம் இவர் பாய்ந்து தாக்கியிருக்கிறார். அப்படி என்ன தான் சொன்னாராம்?

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அப்பாவி மாதிரி நின்றவன் எப்படி தண்ணீருக்குள் பாய்வது போல மேசைக்கு மேலால் நீதிபதி மேல் பாய்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 

 

மேல் வீடியோவிலும் சரி, வேறெங்கும் அவர் பாய்வதற்கு முன்னரான உரையாடல் இல்லை. ஆனால், நியூ யோர்க் ரைம்சின் படி பின் வரும் உரையாடல் நடந்திருக்கிறது.

Mr. Redden’s lawyer, Caesar Almase, asked the judge to sentence his client to probation.

அவரது வக்கீல், அவருக்கு ஒத்தி வைக்கப் பட்ட தண்டனை கொடுக்கும் படி கேட்டிருக்கிறார்.

“I appreciate that, but I think it’s time he get a taste of something else,” Judge Holthus said at the hearing, just before the attack. “I just can’t with that history,” she added, appearing to refer to Mr. Redden’s criminal background.

"புரிகிறது, ஆனால் இந்த முறை இவருக்கு வேறு வகையான ரேஸ்ற் உடைய ஒன்று அவசியமாகிறது. இவரது கடந்த கால வரலாற்றின் காரணமாக உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாது"

அதென்ன கடந்த கால வரலாறு? மூன்று வரையான வன்முறைக் குற்றங்களும், பல வன்முறை கலந்த குழப்படிகளும் (misdemeanor) செய்திருக்கிறார் பாய்ந்தவர். இவ்வளவு குற்ற வரலாறுள்ளவரை இன்று மீண்டும் திரும்பி வந்து 4 வருட சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார் அதே நீதிபதி. நீதிபதியைத் தாக்கிய வழக்கு வேற நீதிபதியின் கீழ் நடக்கும், மேலும் பல வருடங்கள் சிறை கிடைக்கும்.

என்னைப் பொறுத்த வரை, நீதிபதி நக்கல் அடித்ததாகத் தெரியவில்லை. இது வரை வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள், அவர் திருந்தவில்லை, அதனைச் சுட்டிக் காட்டும் சொல்லாடல் தான் "வேற ரேஸ்ற்" என்பது.

https://www.nytimes.com/2024/01/08/us/las-vegas-judge-attacker-sentenced.html

  • கருத்துக்கள உறவுகள்

வேற டேஸ்ட் என்பது நக்கல் கதை இல்லையா? அப்ப சரி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.