Jump to content

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் வலிமையை பரிசோதிக்கப்போகும் பாகிஸ்தானின் 'பவர் ஹிட்டர்கள்'

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 31 மே 2024, 06:31 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் மோதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும் இப்போதிதிருந்தே சமூக வலைத்தளங்களில் வலம்வரத் தொடங்கிவிட்டன.

கடந்த கால வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பெற்ற வெற்றிக்குப்பின் இந்திய அணி வரலாற்றை மீட்டெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பதிலடி கொடுத்தாலும் கடைசிப்பந்தில் மிகுந்த சிரமப்பட்டே வெற்றி பெற முடிந்தது.

எனவே, இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா பாகிஸ்தான் போட்டி எங்கு, எப்போது நடக்கிறது?

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 2-ஆம் தேதி அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐசனோவர் பார்க்கில் உள்ள நாசா கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் நடக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை 145 முதல் 400 டாலர் என விற்கப்பட்டாலும், பிளாக்கில் டிக்கெட் விலை 4 ஆயிரம் டாலராக அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டிக்கெட் விலை உயர்விலேயே ஆட்டத்தின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டம் என்பதால், வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு இந்தக் கோப்பை ஏன் முக்கியமானது?

இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை வென்றது. அதன்பின் 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இறுதிப்போட்டிவரை பல போட்டிகளுக்கு சென்றும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்த முறை நடக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் பல மூத்த வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இது கடைசி உலகக் கோப்பையாகக் கூட அமையலாம்.

முகமது ஷமி காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் வயது காரணமாக அடுத்த 2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். ஆதலால், இந்த டி20 உலகக் கோப்பை மூத்த வீரர்களுக்கு பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அது மட்டுமல்லாமல் கோலி கேப்டன்ஷிப்பில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. அவருக்குப்பின் கேப்டன் பதவி ஏற்ற ரோஹித் சர்மா கடந்த முறை ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிவரை இந்திய அணியைக் கொண்டு சென்றும் கோப்பையைத் தவறவிட்டார்.

இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, கோப்பையை வெல்லத் தீவிரம் காட்டும். ரோஹித் சர்மாவுக்கும், கோலிக்கும் இது கடைசி வாய்ப்பு என்பதால் இருவரிடம் இருந்தும் முழுமையான பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, அயர்லாந்து அணிகளுடன் இந்திய அணியும் இடம் பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற அணிகளுடன் இந்திய அணிக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று நம்பினாலும், பாகிஸ்தானுடன் ஆட்டம் கடும் சவாலாக இந்திய அணிக்கு அமையக்கூடும்.

கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருந்த கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், அஸ்வின், முகமது ஷமி, ஹர்சல் படேல், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இந்த முறை இல்லை.

அதற்குப் பதிலாக இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்ஸன், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியது பெரிய பலம் என்றாலும் அவருக்குத் துணையாகப் பந்துவீச தரமான அளவில் பந்துவீச்சாளர்கள் இல்லை என்றே பரவலாகக் கருதப்படுகிறது. முகமது சிராஜ், அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான கரீபியன் ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு எவ்வாறு எடுபடும் என்பது போட்டி நடக்கும்போதுதான் தெரியவரும். இது தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன.

 
இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1000 ரன்களுக்கு மேல் குவித்த 8 இந்திய வீரர்கள்

பேட்டிங்கிற்கு வலு சேர்க்க ஜெய்ஸ்வால், ஆல்ரவுண்டருக்காக ஷிவம் துபே, ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சாம்ஸன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

கடந்த உலகக் கோப்பையைவிட அனுபவ வீரர்களுடன், இளம் வீரர்களும் கலந்த கலவையாக இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்டர்களில் 8 பேர் டி20 போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்தவர்கள், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவிக்கும் திறமை படைத்த டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள்.

குறிப்பாக 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பந்தை விளாசும் திறமையான பேட்டர். கிரிக்விஸ் தளத்தின் ஆய்வுப்படி, டி20 போட்டிகளில் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேட்டர்களில் சூர்யகுமார்தான் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளது.

விராட் கோலி நடந்து முடிந்த ஐபிஎல் டி20 தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று இருக்கிறார்.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் துவக்க ஜோடி எப்படி?

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது டி20 உலகக்கோப்பையை இந்திய அணி எதிர்கொள்கிறது. ரோஹித் சர்மாவுக்கு இந்த சீசன் ஐபிஎல் தொடர் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது, ஒரு சதம் அடித்தபின், பெரும்பாலான போட்டிகளில் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் மிகப்பெரிய பலமாக அணிக்கு அமையும்.

அதேபோல ஜெய்ஸ்வாலுக்கும் இந்த ஐபிஎல் சீசன் பெரிதாக அமையவில்லை. கடந்த 2023 சீசன் ஜெய்ஸ்வாலுக்கு பொற்காலமாக இருந்தநிலையில் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவு அவரால் ரன்கள் குவிக்க முடியவில்லை. உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியில் இடம் பெற்று ஐபிஎல் முதல்பகுதியில் சிறப்பான ஆட்டத்தை ஷிவம் துபே வெளிப்படுத்தினார். ஆனால், ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் அவரால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. இந்நிலையில் நடுப்பகுதி பேட்டிங்கை வலுப்படுத்த ஷிவம் துபேவை களமிறக்கும்போது அவரின் செயல்பாடு பெரிதாக எதிர்பார்க்கப்படும்.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் பந்துவீச்சு எப்படி உள்ளது?

பந்துவீச்சில் பும்ரா மட்டும் ஐபிஎல் சீசனில் கட்டுக்கோப்பாக பந்துவீசி எக்கானமியை சிறப்பாக வைத்திருந்தார். ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பைக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் அவரின் செயல்பாடு பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் உலகக் கோப்பையில் பாண்டியா எவ்வாறு பந்துவீசப் போகிறார், பேட்டிங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வாகாத ரவீந்திர ஜடேஜா இந்த முறை அணிக்குள் வந்துள்ளது பலமாகும். சுழற்பந்துவீச்சிலும், நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங்கை பலப்படுத்த ரவீந்திர ஜடேஜாவின் பங்கு சிறப்பானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஜடேஜாவின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே சிறப்பாக இருந்து நல்ல ஃபார்மில் உள்ளார்.

குல்தீப் யாதவ் பந்துவீச்சு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான முறையில் மெருகேறி இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு குல்தீப் பந்துவீச்சு துருப்புச்சீட்டாக இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து குல்தீப் யாதவ் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 14 சராசரி வைத்துள்ளார். இந்தியாவில் எந்த பந்துவீச்சாளரும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி குறைவான சராசரி வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இருவருமே பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இதில் இடதுகை பேட்டர்கள் தேவைப்பட்டால் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் சாம்ஸனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் உறுதி.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷிவம் துபே இருப்பது பேட்டிங்கிலும், பகுதிநேர பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணிக்கு சவாலாக விளங்கும் பாகிஸ்தானின் பவர் ஹிட்டர்கள்

பாகிஸ்தானைப் பொறுத்தவரை கடந்த 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது. ஆனால், 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்தது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியதால், கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆஸம் விலகினார்.

ஆனால் டி20 போட்டிகளில் சிறப்பாக அணியை வழிநடத்திய பெருமை பாபர் ஆஸமிற்கு இருப்பதால் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணியில் பவர் ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். குறிப்பாக ஆசம் கான், பாபர்ஆஸம், பக்கர் ஜமான், முகமது ரிஸ்வான் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கேப்டன் பாபர் ஆஸம் மட்டும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

குறிப்பாக ஒவ்வொரு 5 பந்துக்கு ஒரு பவுண்டரி அடிக்கும் வகையில் சராசரியை பாபர் ஆஸம் வைத்துள்ளது அந்த அணிக்கு பெரிய பலம். 118 டி20 போட்டிகளில் 3,987 ரன்களுடன் பாபர் ஆஸம் சராசரி 41 ரன்களும், 129 ஸ்ட்ரைக் ரேட்டும் என வலுவான பேட்டராகத் திகழ்கிறார். ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இருமுறை பைனலுக்கும், அரையிறுதிக்கும் அழைத்துச் சென்ற அனுபவம் வாய்ந்த கேப்டனாக பாபர் ஆஸம் இருக்கிறார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றிகளில் பாபர் ஆஸம் பங்கு முக்கியமாக இருந்துள்ளது. பாபர் ஆஸம் நங்கூரமிட்டாலே பெரும்பாலான ஆட்டங்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துருப்புச் சீட்டாக விளங்கும் இமாத் வாசிம்

கடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இப்திகார் அகமது அரசைதம் பெரிதாக உதவியது. இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தவிர சயிம் அயூப், முகமது ரிஸ்வான், பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் சதாப் கான், இமாத் வாசிம், அப்ரர் அகமதுவும், வேகப்பந்துவீச்சுக்கு ஷாஹீன்ஷா அப்ரிதி, முகமது அமிர், அப்பாஸ் அப்ரிதி, ஹாரிஸ் ராப், நசீம் ஷா என பெரிய படை உள்ளது.

இதில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் இமாத் வாசிம் கரீபியன் மைதானங்களில் மட்டும் 54 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் உடையவர். ஜமைக்கா தலாவாஸ் அணியில் இடம் பெற்று இமாத் வாசிம் பந்துவீசியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். கரீபியன் மைதானங்களில் மட்டும் 58 விக்கெட்டுகளை இமாத் வாசிம் வீழ்த்தி 18 சராசரி வைத்துள்ளார்.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியில் இருந்த ஹைதர் அலி, ஆசிப் அலி, குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், ஷான் மசூத், முகமது நவாஸ், முகமது வாசிம், முகமது ஹஸ்னைன் ஆகியோர் இந்த முறை பாகிஸ்தான் அணியில் இல்லை.

இவர்களுக்குப் பதிலாக, அப்ரார் அகமது, ஆசம் கான், இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது அமிர், சயீம் அயூப், உஸ்மான் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் அப்ரார் அமகது, ஆசம் கான், அப்பாஸ் அப்ரிதி, சயூம் அயூப், உஸ்மான் கான் ஆகியோருக்கு இது முதல் உலகக் கோப்பைத் தொடராகும். இதில் அப்ரார் அகமது மட்டும் ஸ்பெலிஸ்ட் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது, இதில் ஓய்வு அறிவித்திருந்த இமாத் வாசிம் இந்த தொடருக்காக மீண்டும் வந்துள்ளார்.

இந்த டி20 உலகக் கோப்பைத்தொடருக்காக தென் ஆப்பிரிக்க முன்னாள்வீரர் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக பாகிஸ்தான் அமர்த்தியுள்ளது. கிறிஸ்டன் தலைமையில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியது. இது தவிர பீல்டிங் பயிற்சியாளராக சிமன் ஹெல்மட்டையும், உளவியல் பயிற்சியாளராக டேவிட் ரீடையும் பாகிஸ்தான் உலகக் கோப்பைக்காக அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேருக்கு நேர்

கடந்த 1952ம் ஆண்டில் தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் இன்றுவரை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடங்கிய மோதல், ஒருநாள் போட்டிக்கு படர்ந்து, டி20 வரை நீண்டுள்ளது.

ஆனால் அரசியல்காரணங்களுக்காக இரு அணிகளுக்கு இடையே கடந்த 1962 முதல் 1971 வரை எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. ஆனால், 2008-ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை இந்தியா ரத்து செய்தது.

இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் மட்டும் பொதுவான நாடுகளில் நடக்கும் ஆட்டத்தில் மோதிக்கொள்ளும். மற்ற வகையில் இருதரப்பு நாடுகளின் பயணங்கள், கிரிக்கெட் தொடர்கள், கடந்த 14 ஆண்டுகளாக நடக்கவில்லை

இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 6 முறை வெற்றிபெற்றுள்ளது, பாகிஸ்தான் ஒருமுறை வென்றுள்ளது, ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 12 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 8 வெற்றிகளும், பாகிஸ்தான் 3 வெற்றிகளும் பெற்றுள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2012-இல் ஆமதாபாத்தில் நடந்த டி20 போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.

அதேபோல, 2016ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் தாகாவில் நடந்த ஆட்ட்டத்தில் பாகிஸ்தானை 83 ரன்களில் இந்திய அணி வீழ்த்தியதுதான் குறைந்தபட்ச ஸ்கோரில் ஆட்டமிழந்ததாகும்.

இந்திய அணிக்கு எதிராக 2021 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பேட்டர் முகமது ரிஸ்வான் 79 ரன்கள் சேர்த்ததுதான் தனி ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும். பந்துவீச்சில் இந்திய அணிக்கு எதிராக முகமது ஆசிப் 2007ல் டர்பனில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் 18 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தியதுதான் சிறந்த பந்துவீச்சாகப் பார்க்கப்படுகிறது.

 
இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணி விவரம்

இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, யாஸஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தான் அணி:

பாபர் ஆஸம்(கேப்டன்), அப்ரார் அகமது, ஆசம் கான், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ராப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது அமிர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயிம் அயூப், சதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிதி, உஸ்மான் கான்

https://www.bbc.com/tamil/articles/cglldnz43m6o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் வலிமையை பரிசோதிக்கப்போகும் பாகிஸ்தானின் 'பவர் ஹிட்டர்கள்'

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 31 மே 2024, 06:31 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் மோதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும் இப்போதிதிருந்தே சமூக வலைத்தளங்களில் வலம்வரத் தொடங்கிவிட்டன.

கடந்த கால வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பெற்ற வெற்றிக்குப்பின் இந்திய அணி வரலாற்றை மீட்டெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பதிலடி கொடுத்தாலும் கடைசிப்பந்தில் மிகுந்த சிரமப்பட்டே வெற்றி பெற முடிந்தது.

எனவே, இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா பாகிஸ்தான் போட்டி எங்கு, எப்போது நடக்கிறது?

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 2-ஆம் தேதி அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐசனோவர் பார்க்கில் உள்ள நாசா கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் நடக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை 145 முதல் 400 டாலர் என விற்கப்பட்டாலும், பிளாக்கில் டிக்கெட் விலை 4 ஆயிரம் டாலராக அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டிக்கெட் விலை உயர்விலேயே ஆட்டத்தின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டம் என்பதால், வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு இந்தக் கோப்பை ஏன் முக்கியமானது?

இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை வென்றது. அதன்பின் 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இறுதிப்போட்டிவரை பல போட்டிகளுக்கு சென்றும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்த முறை நடக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் பல மூத்த வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இது கடைசி உலகக் கோப்பையாகக் கூட அமையலாம்.

முகமது ஷமி காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் வயது காரணமாக அடுத்த 2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். ஆதலால், இந்த டி20 உலகக் கோப்பை மூத்த வீரர்களுக்கு பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அது மட்டுமல்லாமல் கோலி கேப்டன்ஷிப்பில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. அவருக்குப்பின் கேப்டன் பதவி ஏற்ற ரோஹித் சர்மா கடந்த முறை ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிவரை இந்திய அணியைக் கொண்டு சென்றும் கோப்பையைத் தவறவிட்டார்.

இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, கோப்பையை வெல்லத் தீவிரம் காட்டும். ரோஹித் சர்மாவுக்கும், கோலிக்கும் இது கடைசி வாய்ப்பு என்பதால் இருவரிடம் இருந்தும் முழுமையான பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, அயர்லாந்து அணிகளுடன் இந்திய அணியும் இடம் பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற அணிகளுடன் இந்திய அணிக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று நம்பினாலும், பாகிஸ்தானுடன் ஆட்டம் கடும் சவாலாக இந்திய அணிக்கு அமையக்கூடும்.

கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருந்த கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், அஸ்வின், முகமது ஷமி, ஹர்சல் படேல், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இந்த முறை இல்லை.

அதற்குப் பதிலாக இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்ஸன், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியது பெரிய பலம் என்றாலும் அவருக்குத் துணையாகப் பந்துவீச தரமான அளவில் பந்துவீச்சாளர்கள் இல்லை என்றே பரவலாகக் கருதப்படுகிறது. முகமது சிராஜ், அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான கரீபியன் ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு எவ்வாறு எடுபடும் என்பது போட்டி நடக்கும்போதுதான் தெரியவரும். இது தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன.

 

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1000 ரன்களுக்கு மேல் குவித்த 8 இந்திய வீரர்கள்

பேட்டிங்கிற்கு வலு சேர்க்க ஜெய்ஸ்வால், ஆல்ரவுண்டருக்காக ஷிவம் துபே, ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சாம்ஸன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

கடந்த உலகக் கோப்பையைவிட அனுபவ வீரர்களுடன், இளம் வீரர்களும் கலந்த கலவையாக இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்டர்களில் 8 பேர் டி20 போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்தவர்கள், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவிக்கும் திறமை படைத்த டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள்.

குறிப்பாக 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பந்தை விளாசும் திறமையான பேட்டர். கிரிக்விஸ் தளத்தின் ஆய்வுப்படி, டி20 போட்டிகளில் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேட்டர்களில் சூர்யகுமார்தான் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளது.

விராட் கோலி நடந்து முடிந்த ஐபிஎல் டி20 தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று இருக்கிறார்.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் துவக்க ஜோடி எப்படி?

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது டி20 உலகக்கோப்பையை இந்திய அணி எதிர்கொள்கிறது. ரோஹித் சர்மாவுக்கு இந்த சீசன் ஐபிஎல் தொடர் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது, ஒரு சதம் அடித்தபின், பெரும்பாலான போட்டிகளில் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் மிகப்பெரிய பலமாக அணிக்கு அமையும்.

அதேபோல ஜெய்ஸ்வாலுக்கும் இந்த ஐபிஎல் சீசன் பெரிதாக அமையவில்லை. கடந்த 2023 சீசன் ஜெய்ஸ்வாலுக்கு பொற்காலமாக இருந்தநிலையில் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவு அவரால் ரன்கள் குவிக்க முடியவில்லை. உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியில் இடம் பெற்று ஐபிஎல் முதல்பகுதியில் சிறப்பான ஆட்டத்தை ஷிவம் துபே வெளிப்படுத்தினார். ஆனால், ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் அவரால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. இந்நிலையில் நடுப்பகுதி பேட்டிங்கை வலுப்படுத்த ஷிவம் துபேவை களமிறக்கும்போது அவரின் செயல்பாடு பெரிதாக எதிர்பார்க்கப்படும்.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் பந்துவீச்சு எப்படி உள்ளது?

பந்துவீச்சில் பும்ரா மட்டும் ஐபிஎல் சீசனில் கட்டுக்கோப்பாக பந்துவீசி எக்கானமியை சிறப்பாக வைத்திருந்தார். ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பைக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் அவரின் செயல்பாடு பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் உலகக் கோப்பையில் பாண்டியா எவ்வாறு பந்துவீசப் போகிறார், பேட்டிங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வாகாத ரவீந்திர ஜடேஜா இந்த முறை அணிக்குள் வந்துள்ளது பலமாகும். சுழற்பந்துவீச்சிலும், நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங்கை பலப்படுத்த ரவீந்திர ஜடேஜாவின் பங்கு சிறப்பானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஜடேஜாவின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே சிறப்பாக இருந்து நல்ல ஃபார்மில் உள்ளார்.

குல்தீப் யாதவ் பந்துவீச்சு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான முறையில் மெருகேறி இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு குல்தீப் பந்துவீச்சு துருப்புச்சீட்டாக இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து குல்தீப் யாதவ் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 14 சராசரி வைத்துள்ளார். இந்தியாவில் எந்த பந்துவீச்சாளரும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி குறைவான சராசரி வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இருவருமே பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இதில் இடதுகை பேட்டர்கள் தேவைப்பட்டால் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் சாம்ஸனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் உறுதி.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷிவம் துபே இருப்பது பேட்டிங்கிலும், பகுதிநேர பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணிக்கு சவாலாக விளங்கும் பாகிஸ்தானின் பவர் ஹிட்டர்கள்

பாகிஸ்தானைப் பொறுத்தவரை கடந்த 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது. ஆனால், 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்தது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியதால், கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆஸம் விலகினார்.

ஆனால் டி20 போட்டிகளில் சிறப்பாக அணியை வழிநடத்திய பெருமை பாபர் ஆஸமிற்கு இருப்பதால் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணியில் பவர் ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். குறிப்பாக ஆசம் கான், பாபர்ஆஸம், பக்கர் ஜமான், முகமது ரிஸ்வான் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கேப்டன் பாபர் ஆஸம் மட்டும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

குறிப்பாக ஒவ்வொரு 5 பந்துக்கு ஒரு பவுண்டரி அடிக்கும் வகையில் சராசரியை பாபர் ஆஸம் வைத்துள்ளது அந்த அணிக்கு பெரிய பலம். 118 டி20 போட்டிகளில் 3,987 ரன்களுடன் பாபர் ஆஸம் சராசரி 41 ரன்களும், 129 ஸ்ட்ரைக் ரேட்டும் என வலுவான பேட்டராகத் திகழ்கிறார். ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இருமுறை பைனலுக்கும், அரையிறுதிக்கும் அழைத்துச் சென்ற அனுபவம் வாய்ந்த கேப்டனாக பாபர் ஆஸம் இருக்கிறார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றிகளில் பாபர் ஆஸம் பங்கு முக்கியமாக இருந்துள்ளது. பாபர் ஆஸம் நங்கூரமிட்டாலே பெரும்பாலான ஆட்டங்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துருப்புச் சீட்டாக விளங்கும் இமாத் வாசிம்

கடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இப்திகார் அகமது அரசைதம் பெரிதாக உதவியது. இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தவிர சயிம் அயூப், முகமது ரிஸ்வான், பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் சதாப் கான், இமாத் வாசிம், அப்ரர் அகமதுவும், வேகப்பந்துவீச்சுக்கு ஷாஹீன்ஷா அப்ரிதி, முகமது அமிர், அப்பாஸ் அப்ரிதி, ஹாரிஸ் ராப், நசீம் ஷா என பெரிய படை உள்ளது.

இதில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் இமாத் வாசிம் கரீபியன் மைதானங்களில் மட்டும் 54 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் உடையவர். ஜமைக்கா தலாவாஸ் அணியில் இடம் பெற்று இமாத் வாசிம் பந்துவீசியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். கரீபியன் மைதானங்களில் மட்டும் 58 விக்கெட்டுகளை இமாத் வாசிம் வீழ்த்தி 18 சராசரி வைத்துள்ளார்.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியில் இருந்த ஹைதர் அலி, ஆசிப் அலி, குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், ஷான் மசூத், முகமது நவாஸ், முகமது வாசிம், முகமது ஹஸ்னைன் ஆகியோர் இந்த முறை பாகிஸ்தான் அணியில் இல்லை.

இவர்களுக்குப் பதிலாக, அப்ரார் அகமது, ஆசம் கான், இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது அமிர், சயீம் அயூப், உஸ்மான் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் அப்ரார் அமகது, ஆசம் கான், அப்பாஸ் அப்ரிதி, சயூம் அயூப், உஸ்மான் கான் ஆகியோருக்கு இது முதல் உலகக் கோப்பைத் தொடராகும். இதில் அப்ரார் அகமது மட்டும் ஸ்பெலிஸ்ட் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது, இதில் ஓய்வு அறிவித்திருந்த இமாத் வாசிம் இந்த தொடருக்காக மீண்டும் வந்துள்ளார்.

இந்த டி20 உலகக் கோப்பைத்தொடருக்காக தென் ஆப்பிரிக்க முன்னாள்வீரர் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக பாகிஸ்தான் அமர்த்தியுள்ளது. கிறிஸ்டன் தலைமையில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியது. இது தவிர பீல்டிங் பயிற்சியாளராக சிமன் ஹெல்மட்டையும், உளவியல் பயிற்சியாளராக டேவிட் ரீடையும் பாகிஸ்தான் உலகக் கோப்பைக்காக அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேருக்கு நேர்

கடந்த 1952ம் ஆண்டில் தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் இன்றுவரை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடங்கிய மோதல், ஒருநாள் போட்டிக்கு படர்ந்து, டி20 வரை நீண்டுள்ளது.

ஆனால் அரசியல்காரணங்களுக்காக இரு அணிகளுக்கு இடையே கடந்த 1962 முதல் 1971 வரை எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. ஆனால், 2008-ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை இந்தியா ரத்து செய்தது.

இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் மட்டும் பொதுவான நாடுகளில் நடக்கும் ஆட்டத்தில் மோதிக்கொள்ளும். மற்ற வகையில் இருதரப்பு நாடுகளின் பயணங்கள், கிரிக்கெட் தொடர்கள், கடந்த 14 ஆண்டுகளாக நடக்கவில்லை

இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 6 முறை வெற்றிபெற்றுள்ளது, பாகிஸ்தான் ஒருமுறை வென்றுள்ளது, ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 12 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 8 வெற்றிகளும், பாகிஸ்தான் 3 வெற்றிகளும் பெற்றுள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2012-இல் ஆமதாபாத்தில் நடந்த டி20 போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.

அதேபோல, 2016ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் தாகாவில் நடந்த ஆட்ட்டத்தில் பாகிஸ்தானை 83 ரன்களில் இந்திய அணி வீழ்த்தியதுதான் குறைந்தபட்ச ஸ்கோரில் ஆட்டமிழந்ததாகும்.

இந்திய அணிக்கு எதிராக 2021 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பேட்டர் முகமது ரிஸ்வான் 79 ரன்கள் சேர்த்ததுதான் தனி ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும். பந்துவீச்சில் இந்திய அணிக்கு எதிராக முகமது ஆசிப் 2007ல் டர்பனில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் 18 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தியதுதான் சிறந்த பந்துவீச்சாகப் பார்க்கப்படுகிறது.

 

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணி விவரம்

இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, யாஸஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தான் அணி:

பாபர் ஆஸம்(கேப்டன்), அப்ரார் அகமது, ஆசம் கான், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ராப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது அமிர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயிம் அயூப், சதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிதி, உஸ்மான் கான்

https://www.bbc.com/tamil/articles/cglldnz43m6o

பாக்கிஸ்தான் இந்தியாவிட்டை அடி வேண்ட‌ போகுது

அந்த‌ குருப்பில் இந்தியா முத‌ல் இட‌ம்

 

ரோகித் ச‌ர்மா த‌ன‌து க‌வ‌லையை வெளிப் ப‌டுத்தி இருந்தார் த‌ன‌து த‌லைமையில் கோப்பை வெல்வ‌தை விரும்புகிறேன் என்று...........................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணி வெற்றி

sl-team.jpg

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (31) இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

https://thinakkural.lk/article/302898

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பழைய 'கிரிக்கெட் பகையாளர்கள்'  வரலாற்றை ரி-20 உலகக் கிண்ணத்தில் புதுப்பிக்கும் கனடா - ஐக்கிய அமெரிக்கா

01 JUN, 2024 | 11:16 PM
image

(நெவில் அன்தனி)

டெக்சாஸ், டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கில் அறிமுக அணிகளான கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் மோதவுள்ள போட்டியுடன் 20 நாடுகள் பங்குபற்றும் 9ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டி ஐக்கிய அமெரிக்காவில் ஜுன் மாதம் 1ஆம் திகதி இரவு ஆரம்பிக்கின்றது. (இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (02) காலை 6.00 மணி)

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பழைமையான 'கிரிக்கெட்  பகையாளர்கள்' (போட்டியாளர்கள்) என்ற வரலாற்றைக் கொண்ட கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் அதனை ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியின் மூலம் புதுப்பிப்பது விசேட அம்சமாகும்.

அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் 1877இல் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு 33 வருடங்களுக்கு முன்னர் நியூயோர்க்கில் கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் 3 நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதாகவும் அப் போட்டியில் 23 ஓட்டங்களால் கனடா வெற்றிபெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.

இப்போது 180 வருடங்கள் கழித்து இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் மோதவுள்ளன.

இணை வரவேற்பு நாடு என்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா நேரடி தகுதியைப் பெற்றதுடன் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட கனடா தகுதிபெற்றது.

க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கில் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி விளையாட இருப்பது இதுவே முதல் தடவையாகும். எனினும், டலாஸில் கிரிக்கெட் ஆர்வம் பெரிய அளவில் இல்லாத நிலையில் அங்கு நடைபெறவுள்ள எல் ஏ கெலக்ஸி - எவ் சி டலாஸ் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் கால்பந்தாட்டத்திற்கே அதிக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

போதாக்குறைக்கு கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டிக்கு சீரற்ற கால நிலை தடையாக இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெறவிருந்த இரண்டு பயிற்சிப் போட்டிகள் கடுங்காற்றுடன் கூடிய மழையினால் கைவிடப்பட்டிருந்தது.

எது எவ்வாறாயினும், ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவே வெற்றிபெறக்கூடிய அணி என அனுமாணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப் போட்டியை கனடா இலகுவில் நழுவ விடாது என்ற அபிப்பிராயமும் கூடவே இருக்கிறது.

சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் 5 வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான ஐக்கிய அமெரிக்கா இதுவரை  விளையாடிய   28 போட்டிகளில் 16 வெற்றிகளை ஈட்டியதுடன் 10 தோல்விகளைத் தழுவியுள்ளது.

கனடாவுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளை ஈட்டிய ஐக்கிய அமெரிக்கா 2 தோல்விகளைத் தழுவயது.

இதேவேளை கடந்த 2 மாதங்களில் ஐக்கிய அமெரிக்கா விளையாடிய 7 போட்டிகளில் கனடாவை 4 - 0 எனவும் பங்களாதேஷை 2 - 1 எனவும் வெற்றிகொண்டிருந்தது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடொன்றுக்கு (பங்களாதேஷ்) எதிராக விளையாடிய முதலாவது தொடரிலேயே வெற்றிபெற்றதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா வரலாறு படைத்தது.

மறுபக்கத்தில் 2008இல்  சர்வதேச ரி20 கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த கனடா, 58 போட்டிகளில் 30 வெற்றிகளை ஈட்டியதுடன் 25இல் தோல்வி அடைந்துள்ளது.

இந்தப் போட்டி மழையினால் தடைப்படாமல் விளையாடப்பட்டால் இரண்டு நாடுகளுக்கு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை முன்னாள் நியூஸிலாந்து வீரர் கோரி அண்டர்சன் பெறுவார். அவர் இப்போது ஐக்கிய அமெரிக்காவுக்கு விளையாடி வருகிறார்.

ரோலோவ் வென் டேர் மேர்வ் (தென் ஆபிரிக்கா, நெதர்லாந்து), டேர்க் நெனிஸ் (நெதர்லாந்து, அவுஸ்திரேலியா), டேவிட் வைஸ் (தென் ஆபிரிக்கா, நமிபியா), மாக் செப்மன் (ஹொங்கொங், நியூஸிலாந்து) ஆகியோரே இரண்டு நாடுகளுக்கு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய மற்றைய நால்வராவர்.

இது இவ்வாறிருக்க, 2102இல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் சம்பியனான இந்திய அணியில் இடம்பெற்றவரும் அப்போது எதிர்கால பிஷென் சிங் பேடி என பேசப்பட்ட வருமான   ஹார்மீத் சிங் சகலதுறைகளிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் முதல்தர கிரிக்கெட் விளையாடிய கலீம் சானா, இந்தியாவில் முதல்தர கிரிக்கெட் விளையாடிய மொனான்க் பட்டேல் (அணித் தலைவர்), கயானாவில் விளையாடியவரும் இணை உறுப்பு நாடுகளில் அதிவேக பந்துவீச்சாளருமான ஜெரெமி கோர்டன், இலங்கை மற்றும் கனடா ஆகியவற்றின் முன்ளாள் வீரர் புபுது தசநாயக்க (தற்போதைய பயிற்றுநர்) முன்னாள் கனடா வீரர் நிட்டிஷ் குமார் ஆகிய அனைவரும் புலம்பெயர்ந்தவர்களாவர்.

கனேடிய அணியிலும் பலர் இந்திய, பாகிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் வம்சாவழியினராவர்.

அவர்களில் ஜெமெய்க்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆரோன் ஜோன் திறமையான துடுப்பாட்ட வீரர் ஆவார். 16 போட்டிகளில் 2 சதங்கள், 5 அரைச் சதங்களுடன் மொத்தம் 713 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அணித் தலைவர் சாத் பின் ஜவார் ஒருவரே சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 4 ஓவர்களையும் ஓட்டமற்ற ஓவர்களாக பதிவு செய்த சாதனையாளர் ஆவார். பனாமாவுக்கு எதிரான போட்டியில் அவர் 4 ஓவர்களிலும் ஓட்டம் கொடுக்காமல் 2 விக்கெட்களைக் கைப்பற்றி மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.

அணிகள்

ஐக்கிய அமெரிக்கா: மொனான்க் பட்டேல் (தலைவர்), ஸ்டீவன் டெய்லர், அண்ட்றீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிட்டிஷ் குமார், கோரி அண்டர்சன், ஹார்மீத் சிங், ஷெட்லி வென் ஷோல்வைக், ஜஸ்தீப் சிங், அலி கான், சௌராப் நேட்ராவல்கர்.

கனடா: சாத் பின் ஸபார் (தலைவர்), ஆரோன் ஜோன்சன், நவ்னீத் தாலிவால், ரய்யான் பத்தான், நிக்கலஸ் கேர்ட்டன், பர்கத் சிங், ஷ்ரோயாஸ் மொவ்வா, நிக்கில் டுட்டா, டிலொன் ஹேலிகர், ஜெரமி கோர்டன், கலீம் சானா.

https://www.virakesari.lk/article/185080

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா

டி20 உலகக்கோப்பை, இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அயாஸ் மேமன்
  • பதவி, கிரிக்கெட் எழுத்தாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ’வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ள’ அணியாக (favourites) ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் நுழைகிறது.

அடுத்த நான்கு வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளையும் தீவிர ஆய்வுகளையும் எதிர்கொள்ளும்.

2007 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு முதலாவது உலகக்கோப்பையை வென்ற இந்தியாவால் அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியவில்லை. பணம், செல்வாக்கு மற்றும் திறமை இருந்த போதிலும் முக்கிய கிரிக்கெட் சாம்பியன் பட்டங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.

2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு இந்தியா எந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் பட்டம் வென்றதில்லை. அதன் பிறகு, மூன்று சிறந்த கேப்டன்கள் - எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மற்றும் இரண்டு பிரபலமான தலைமை பயிற்சியாளர்கள் - ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மற்ற தொடர்களில் சிறந்த வெற்றிகளை பெற்ற போதிலும், ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்தனர்.

கடந்த ஆண்டு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த துரதிர்ஷ்டத்தை இந்தியா இந்த முறை முறியடிக்க முடியுமா?

டி20 உலகக்கோப்பை, இந்திய அணி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, ஐபிஎல் பந்தயங்களில் அதிக ரன் குவித்த விராட் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார்.

இந்திய அணித் தேர்வில் குழப்பமான சிக்னல்

2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), வீரர்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கும், இந்திய அணியின் தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகவும் இருந்துவருகிறது. டி20 போட்டிகளுக்கும், சில சமயங்களில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இது பொருந்தும். ஐபிஎல் பந்தயங்களில் நிலவும் கடுமையான போட்டியும், அழுத்தமும் வீரர்களின் திறனையும், மன உறுதியையும் சோதிக்கிறது.

இருப்பினும் ஐபிஎல் 2024 இன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குழப்பமான சமிக்ஞைகளை அளிக்கிறது. ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்க பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒரு வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட முக்கிய அணியில் இல்லை. ரிசர்வ் வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 'பெரிய சாதனையாளர்' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த சுப்மன் கில், ரிசர்வ் வீரர்களில் ஒருவராக உள்ளார்.

விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் 2024-ல் அதிக ரன்கள் எடுத்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கெய்க்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, இந்தியாவின் 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷல் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

 
டி20 உலகக்கோப்பை, இந்திய அணி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, ஐபிஎல்-லில் மட்டை வீச்சாளர்களை நடுநடுங்க வைத்த பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.

நட்சத்திர வீரர்கள் கோலி, பும்ரா

ஐபிஎல் 2024 இன் ஃபார்ம் அடிப்படையில் பல வீரர்களைச் சேர்த்தது மற்றும் குறிப்பிடத்தக்க சில புறக்கணிப்புகள், பாரம்பரிய தேர்வு முறைக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் நடுப்பகுதியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் அற்புதமாக பேட்டிங் செய்து சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். முன்னணி ரன் எடுத்தவர் என்ற முறையில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார்.

பும்ரா மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்காவிட்டாலும் (மூன்றாவது இடத்தைப் பிடித்தார்) அவர் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார் என்பது உண்மை. அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் சிக்கனமாக இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் கொடுத்தார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட பும்ராவின் அபாரமான திறமையும், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவரை ஆக்கியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரின் மூலம் பும்ரா, சம கால வேகப்பந்து வீச்சாளர்களில் நிகரில்லாதவராக திகழ்கிறார்.

டி20 உலகக்கோப்பை, இந்திய அணி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, குல்தீப் யாதவ் (வலது) மற்றும் ரவீந்திர ஜடேஜா (இடது) இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றனர்.

ரிஷப் பந்தின் வலுவான மறுபிரவேசம்

இந்த அணியில் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஒப்பாக நான் கருதும் ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே.

இது ஐபிஎல் 2024 இல் அவர் செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களுக்காக அல்ல. மாறாக உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து அவர் செய்த குறிப்பிடத்தக்க மற்றும் வலுவான மறுபிரவேசத்திற்காக. இந்த காயம் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தது. இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்த ரிஷப் பந்தின் சுதந்திரமான, அதிரடியான மற்றும் புதுமையான பேட்டிங் மீண்டும் திரும்பியிருப்பது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகிறது.

அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் சிவம் துபே. ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இங்கிருந்து இந்திய அணியின் பலம் குறையத் தொடங்குகிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2024 இல் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால் சிறப்பாக எதையும் சாதிக்கவில்லை.

மற்ற வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றனர். பும்ராவின் முக்கிய ஜோடியான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெரும்பாலான நேரங்களில் பின்தங்கியே இருந்தார்.

 
டி20 உலகக்கோப்பை, இந்திய அணி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து ரிஷப் பந்த் ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.

இந்திய அணிக்கு கவலை தரும் ரோஹித், ஹர்திக்

ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிட்ச்கள் (ஆடுகளங்கள்) எப்படி இருக்கும் என்பது உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிலையற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் (புதியவர்கள் கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்) இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம்தான் முக்கிய கவலை. மும்பை இந்தியன்ஸில் கேப்டன்சி மாற்றத்தால் எழுந்த சர்ச்சை அணியின் ஒற்றுமையை பாதித்தது.

தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித்தின் அதிரடி பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இது ஒருநாள் உலகக் கோப்பையில் நிரூபணமானது. பினிஷர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர் என பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமையும் முக்கியமானது. பாண்டியா தனது ஆட்டத்திறமையின் உச்சத்தில் இல்லாமல் இருப்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக் கூடும்.

டி20 உலகக்கோப்பை, இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனி தலைமையிலான இந்திய அணி, 2007ஆம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்றது.

டி20 உலகக்கோப்பை யாருக்கு?

இந்தியாவின் தேர்வாளர்கள் நெருக்கடி காலத்திட்டம் உட்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பல நட்சத்திர வீரர்கள் கேள்விக்குரிய ஃபார்மில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமையின் ஆழம் இதை சாத்தியமாக்குகிறது.

ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு ஒரு சோதனைக் களமாகவும், உலகெங்கிலும் உள்ள (பாகிஸ்தான் தவிர) சிறந்த டி20 வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பை உருவாக்கிய பல வீரர்கள் தங்கள் நாட்டிற்காக களம் இறங்கத் தயாராக உள்ளனர்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் கடந்த ஆண்டு முதல் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் அடங்குவார்கள்.

உலகக் கோப்பையின் முந்தைய 8 சீசன்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஆறு வெவ்வேறு நாடுகள் சாம்பியன் ஆயின. கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறக் கூடும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 
டி20 உலகக்கோப்பை, இந்திய அணி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இந்தியாவின் பேட்டிங் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆதிக்கத்தை தக்க வைக்குமா இந்தியா?

ஆப்கானிஸ்தான் போன்ற வலுவாக போராடக் கூடிய அணிகள், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதை செய்து காட்டியது. இந்த உலகக் கோப்பை போட்டியின் வெற்றியாளரைக் கணிப்பது சிரமம் என்பது மட்டுமல்ல, முற்றிலும் முட்டாள்தனமானதும் கூட. எல்லா அணிகளும் தங்கள் உச்ச திறனுடன் விளையாட வேண்டும்.

லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் "முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய" போட்டியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் பந்தயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுமே தோல்வியை விரும்பாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் (ODI மற்றும் T20) பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை குவித்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்துவது ஒரு படிக்கல் மட்டுமே. உலகக் கோப்பையை வெல்வதே முந்தைய இழப்புகளுக்கு ஈடுசெய்வதாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/ckkk69xgl6qo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T20 WorldCup : சொந்த மண்ணில் அமெரிக்கா சாதனை வெற்றி!

Screenshot-2024-06-02-103844.jpg

டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (ஜூன் 2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், போட்டியை நடத்தும் அமெரிக்கா அணியும் மோதின.

அமெரிக்காவில் உள்ள டல்லாஸ்  கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது.

Image

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய கனடா அணி அதிரடியாக விளையாடி, 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக  தொடக்க வீரர் நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் நிக்கோலஸ் கிர்டோன் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அமெரிக்கா அணியில் அலிகான், ஹர்மீத் சிங் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

Image

தொடர்ந்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அமெரிக்கா அணி.

தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர்(0) மற்றும் மோனங்க் பட்டேல்(16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

எனினும் அடுத்த இணைந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஜோடி ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுபக்கம் கனடா பவுலர்களை துவம்சம் செய்த ஆரோன் ஜோன்ஸ் சிக்சர் அடித்து அமெரிக்க அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Image

கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ரன்கள் ஆரோன் ஜோன்ஸ்  ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற தனது முதல் போட்டியிலேயே  அமெரிக்கா அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

https://minnambalam.com/sports/t20-worldcup-americas-record-win-at-home/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அணி வீர‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: வெற்றி பெற்றாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகளை திணறவைத்த பிஎன்ஜி

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி ஒருநாள் போட்டியில் 2 முறை சாம்பியன், டி20 போட்டிகளில் 2 முறை சாம்பியன், உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் , சர்வதேச அனுபவம் நிறைந்த பல வீரர்கள் இருந்தும் வலிமையான மேற்கிந்தியத்தீவுகள் அணியை கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராட வைத்தது அனுபவம் குறைந்த பப்புவா நியூ கினியா(பிஎன்ஜி) அணி.

மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்றைய டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி முன்னாள் சாம்பியன் தரத்துக்கும், தகுதியான வெற்றியாக எடுக்க முடியாது, வெட்கப்பட வேண்டும் என்று வர்ணனையாளர்கள் போட்டி முடிந்தபோதே கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் தோற்றுவிடுமோ என்று எண்ணியபோது, தடுமாறித்தான் வெற்றிப்பாதைக்குத் திரும்பி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொண்டது.

கயானாவின் ப்ராவிடன்ஸ் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் பிஎன்ஜி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

 

முதலில் பேட் செய்த பிஎன்ஜி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் சி பிரிவில் இடம்பெற்று போட்டியை நடத்தும் மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 புள்ளிகள் பெற்றது. கடந்த 2 உலகக் கோப்பைத் தொடர்களிலும் முன்னாள் சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெறக்கூட இல்லை. ஆனால், இந்த முறையும் அதே சூழல் ஏற்பட்டிருக்கும் ஆனால், போட்டியை நடத்தும் நாடு என்பதால் தானாகவே வாய்ப்பைப் பெற்றது.

 

வாட்ஸ்ஆப்பில் பிபிசி தமிழ்

-------------------------------------

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

 
மேற்கிந்தியத் தீவுகளை திணறவைத்த பிஎன்ஜி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிஎன்ஜி அணிக்கு பாராட்டு

மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ரோவ்மென் பாவெல் கூறுகையில் “உண்மையில் பிஎன்ஜி அணிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். எளிதாக திட்டமிட்டு அதை சிறப்பாகச் செயல்படுத்தி நல்லகிரிக்கெட் விளையாடினர். இன்னும் கூடுதலாக 15 ரன்களை பிஎன்ஜி சேர்த்திருந்தால் ஆட்டம் கடினமாக மாறியிருக்கும். பந்துவீச்சில் இன்னும் நாங்கள் முன்னேற வேண்டும். ரஸ்டன் சேஸ் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். நெருக்கடியான நேரத்தில் அவரின் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தினார்” எனத் தெரிவித்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டாலும் பேட்டிங்கில் கோட்டைவிட்டனர். மேற்கிந்தியத்தீவுகளுக்கு வெற்றிக்கான இலக்கு எளிதாக ஓவருக்கு 7 ரன்கள் சேர்த்தாலே கிடைத்துவிடும் என்று இருந்தது. ஆனால், திட்டமிடல் இன்றி பேட்டர்கள் பொறுப்பின்றி பேட் செய்தனர். அதிலும் நடுவரிசையில் அனுபவம் வாய்ந்த ரூதர்போர்ட், கேப்டன் பாவெல், பூரன் இருந்தும் யாரும் நிலைத்து ஆடவில்லை.

ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றிக்கு 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் பிஎன்ஜி கரங்களுக்கு மாறியது. அனுபவமற்ற அணிபோல் பந்துவீசாமல் மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்களை ரன்கள் சேர்க்க திணறவைக்கும் விதத்தில் பந்துவீசினர்.

61 ரன்கள்வரை ஒரு விக்கெட் மட்டும் இழந்து வலுவாக பேட் செய்திருந்த மேற்கிந்தியத்தவுகள் அணி, அடுத்த 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

9-வது ஓவரில் இருந்து 15-வது ஓவர்கள் வரை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ரன்ரேட்டை பிஎன்ஜி பந்துவீச்சாளர்கள் இறுக்கிப் பிடித்தனர். இந்த 6 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 37 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இதுதான் ஆட்டத்தை கடைசி நேர பரபரப்பு வரை இழுத்துச் சென்றது.

 
மேற்கிந்தியத் தீவுகளை திணறவைத்த பிஎன்ஜி

பட மூலாதாரம்,GETTY IMAGES

17-ஆவது ஓவரில் திருப்புமுனை

ஆட்டம் அனைத்துமே 17-வது ஓவர்களுக்குப்பின்புதான் திரும்பியது. அதுவரை பிஎன்ஜி அணியின் கரங்களே ஆட்டத்தில் மேலோங்கி இருந்தது. ரஸ்டன் சேஸ், ஆந்த்ரே ரஸல் இருவரும் கடைசி நேரத்தில் கேமியோ ஆடாமல் இருந்திருந்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி உறுதியாகியிருக்கும். 17, 18 மற்றும் 19வது ஓவர்களில் சேர்க்கப்பட்ட ரன்கள்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

ரஸ்டன் சேஸ் தனது ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சேஸ் 27 பந்துகளில் 42 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டர்கள் அடங்கும்.

ரஸல் 9 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 15 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு, பேட்டிங்கிலும் அணியின்வெற்றிக்கு உதவிய ரஸ்டன் சேஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

16 வது ஓவரில் ரூதர்ஃபோர்டை 2 ரன்னில் பிஎன்ஜி கேப்டன் ஆசாத் வாலா ஆட்டமிழக்கச் செய்தபின் 7வது வீரராக ஆந்த்ரே ரஸல் களமிறங்கினார். ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த ரஸல் களத்துக்கு வந்தபோது மேற்கிந்தியத்தீவுகள் வெற்றிக்கு 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது. ரஸல் தான்சந்தித்த 4வது பந்தில் சிக்ஸர் விளாசி அழுத்தத்தைக் குறைத்தார்.

அதன்பின் ஆட்டத்தை சேஸ் கையில் எடுத்துக்கொண்டார். வாலா வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸரும், 2 பவுண்டரிகளும் அடித்து தோல்வியின் பிடியிலிருந்து தங்கள் அணியை மீட்கும்முயற்சியில் இறங்கினார். மொரியாவின் 19-வது ஓவரில் 2 பவுண்டரி அடித்து சேஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 
மேற்கிந்தியத் தீவுகளை திணறவைத்த பிஎன்ஜி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஏன் இந்த நிலை?

மேற்கிந்தியத்தீவுகள் அணி தற்போது எப்படி இருக்கிறது, பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் அடங்கிய அணியாக இருந்தாலும், சர்வதேச அனுபவம் நிறைந்த வீரர்கள் இருந்தாலும் உண்மையில் அந்த அணியின் நிலை, வலிமை என்ன என்பதை பிஎன்ஜி அணி முதல் போட்டியிலேயே அம்பலப்படுத்திவிட்டது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்த பில் சிம்மன்ஸ் தற்போது பிஎன்ஜி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021ம் ஆண்டு டி20 போட்டியிலிருந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் டி20 போட்டிகளை ஆய்வு செய்தால் அந்த அணி பெரும்பாலான போட்டிகளில் சேஸிங்கின்போது தடுமாறியுள்ளதும், பல போட்டிகளில் தோல்வி அடைந்ததும் இருக்கிறது என்று கிரிக்இன்போ தகவல் தெரிவித்துள்ளது.

அதிலும் 2022ம் ஆண்டு தகுதிச்சுற்றுப்போட்டிகளில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்பே அணிகளை வெல்ல முடியாமல் மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி கூட பெறவில்லை, கடந்த 50 ஓவர்கள் உலகக் கோப்பையிலும் அந்த அணி இடம் பெறவில்லை.

இந்த நிலை இந்த உலகக் கோப்பையிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தொடர்ந்து வருகிறது. குறைந்த இலக்கை சேஸிங் செய்ய முயலும்போதுகூட மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்கள் பொறுப்பின்றி விக்கெட்டை இழந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகளை திணறவைத்த பிஎன்ஜி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிலும் பிஎன்ஜி பந்துவீச்சாளர் அலி நாவோ உலகக் கோப்பையில் தனது முதல் ஓவர் முதல் பந்தை வீசியபோது, மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர் சார்லஸ் தேவையின்றி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். சார்லஸ் அடித்த ஷாட் தேவையில்லாதது, பிரண்ட்ஃபுட் வைத்து ஆட வேண்டிய ஷாட்டை கால்காப்பி்ல் வாங்கி வெளியேறினார்.

அதன்பின் ஆட்டத்தில் சிறிதுநேரம் மழைக்குறுக்கிடவே சிறிதுநேரம் ஆட்டம் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

அடுத்துவந்த நிகோலஸ் பூரன் தொடக்கத்தில் பேட்டிங்கில் திணறினார் அதன்பின் இயல்புக்கு வந்தார். பாவுவின் 6வது ஓவரில் பூரன் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி விளாசினார். பூரன் தடுமாறிய அதேநேரத்தில் பிரன்டன் சிங் பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். பவர்ப்ளேயில் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என வலுவாகவே இருந்தது.

ஆனால், கரிக்கோ வீசிய 9-வது ஓவரில் லாங்ஆன் திசையில் பூரன் அடித்தஷாட் கேட்சாக மாற 27 ரன்களில் வெளியேறினார். அதன்பின் கேப்டன் வாலா, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி, மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்களை திணறவிட்டார். நிலைத்து பேட் செய்துவந்த கிங்கை 34 ரன்களி்ல் வாலா தனது சுழற்பந்துவீச்சால் ஆட்டமிழக்கச் செய்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளேவுக்குபின், 13வது ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 25 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

மேற்கிந்தியத் தீவுகளை திணறவைத்த பிஎன்ஜி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்துவந்த கேப்டன் பாவெல் 2 பவுண்டரிகள் அடித்தநிலையில் சாட் சாப்பர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரூதர்ஃபோர்டும் 2 ரன்களில் விக்கெட் கீப்பர் டோரிகாவிடம் கேட்ச் கொடுத்து வாலா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி தோல்வியின் பிடியில் இருந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஆந்த்ரே ரஸல், ரஸ்டன் சேஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

பெருமையும் வருத்தமும்

பிஎன்ஜி அணியின் கேப்டன் ஆசாத் வாலா கூறுகையில் “ என்னுடைய அணியின் முயற்சிகளை நினைத்து பெருமையாக இருக்கிறது, வெற்றியை நழுவ விட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இன்னும் 15 ரன்கள் சேர்த்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். நாங்கள் போராடியவிதம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம், என் வீரர்களின் செயல்பாடு முழுநிறைவு அளிக்கிறது. நாங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல இது வாய்ப்பு, சவால் நிறைந்தது. எங்களுடைய வீரர்கள் சிறந்த அணிக்கு எதிராக சிறப்பான பங்களிப்பை அளித்தனர்” எனத் தெரிவித்தார்.

வேகப்பந்துவீச்சாளர் மோரியா, சீசே பாவு ஆகியோர் மட்டும் சிறிது கட்டுக்கோப்புடன் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தி இருந்தால், ஆட்டம் நிச்சயமாக பிஎன்ஜி அணியின் பக்கம் சாய்திருக்கும். சீசே பாவு ஓவரில் பூரன் அடித்த 18 ரன்கள்தான் கடைசி நேரத்தில் ஆட்டத்தை தீர்மானித்தது.

https://www.bbc.com/tamil/articles/cv224pl4kq1o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் ஓமானை சுப்பர் ஓவரில் வென்றது நமிபியா

03 JUN, 2024 | 12:24 PM
image

(நெவில் அன்தனி)

நமிபியா - ஓமான் அணிகளுக்கு இடையில் பார்படோஸ், கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவர் முறையில் நமிபியா வெற்றிபெற்றது.

பிலான் கான் வீசிய சுப்பர் ஓவரில் நமிபியா விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வைஸ் 13 ஓட்டங்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 8 ஓட்டங்களையும் பெற்றனர்.

டேவிட் வைஸ் வீசிய சுப்பர் ஓவரில் ஓமான் ஒரு விக்கெட்டை இழந்து 10 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. நசீம் குஷி 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஸீஷான் மக்சூத் 6 ஓட்டங்களைப் பெற்றார்.

david.jpg

இரண்டு அணிகளும் தத்தமது 3ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் ஓமான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா கடைசிக் கட்டத்தில் கடும் சவாலை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.  

போட்டியின் 18ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களுடன் சிறந்த நிலையில் இருந்த நமிபியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. குறிப்பாக மெஹ்ரான் கான் வீசிய கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்ந்தமை நமிபியாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

khan.jpg

துடுப்பாட்டத்தில் ஜான் ப்ரைலின்க் 45 ஓட்டங்களையும் நிக்கலஸ் டெவின் 24 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

ge.jpg

பந்துவீச்சில் மெஹ்ரான் கான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 10 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த ஓமான், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 100 ஓட்டங்களைக் கடந்தது.

காலித் கய்ல் 34 ஓட்டங்களையும் ஸீஷான் மக்சூத் 22 ஓட்டங்களையும் அயான் கான் 15 ஓட்டங்களையும் ஷக்கீல் அஹ்மத் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

4.jpg

பந்துவீச்சில் ரூபன் ட்ரம்பள்மான் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டேவிட் வைஸ் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: டேவிட் வைஸ்

ruban.jpg

https://www.virakesari.lk/article/185172

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் .........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரி-20 உலகக் கிண்ண போட்டித் தொடருக்கான பரிசுத்தொகை அறிவிப்பு

Published By: VISHNU  03 JUN, 2024 | 08:46 PM

image
 

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் ரி-20 உலகக் கிண்ணம் (2024) கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத்தொகை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

ஆடவருக்கான ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் (2024) வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு மிளிரும் கோப்பையையும் மொத்தப் பரிசுத் தொகையான குறைந்தபட்சம் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெறுவார்கள்.

001.png

இது போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ரி-20 உலகக் கோப்பையை விட, இது 850,000 டொலர் அதிகமாகும், அங்கு வெற்றி பெற்ற இங்கிலாந்து 1.6 மில்லியன் டொலர் பெற்றது.

போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை இரட்டிப்பாகியுள்ளது. 2022 இல் 5.6 மில்லியனில் டொலர் இருந்த பரிசுத்தொகை இந்த ஆண்டு 20 அணிகள் கொண்ட போட்டியில் 11.25 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது. அதாவது மற்ற அணிகளுக்கும் பரிசுத் தொகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/185246

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரி20யில் இலங்கையை குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருட்டிய தென் ஆபிரிக்காவுக்கு இலகுவான வெற்றி

Published By: VISHNU   03 JUN, 2024 | 11:35 PM

image

(நெவில் அன்தனி)

நியூயோர்க் நசவ் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் டி குழுவுக்கான ஆரம்ப போட்டியில் இலங்கையை 77 ஓட்டங்களுக்கு சுருட்டிய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

அன்றிச் நோக்கியாவின் 4 விக்கெட் குவியலுடனான துல்லியமான பந்துவீச்சு தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுவாக்கியது.

இந்தப் போட்டியில் இலங்கை பெற்ற 77 ஓட்டங்கள் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை ஆகும்.

நசவ் செயற்கை ஆடுகளத்தில் முதல் தடவையாக விளையாடப்பட்ட இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் துடுப்பெடுத்தாடுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்தப் போட்டி இலங்கையின் பந்துவீச்சுக்கும் தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டத்துக்கும் இடையிலான போட்டியாக அமையும் என எதிர்வுகூறப்பட்டது.

ஆனால் இரண்டு அணிகளினதும் பந்துவீச்சாளர்களுக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போட்டியாக இது அமைந்திருந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணியில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் இருவரும் பின்வரிசையில் இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (3), கமிந்து மெண்டிஸ் (11), அணித் தலைவர் வனிந்து ஹசரங்க (0), சதீர சமரவீர (0), குசல் மெண்டிஸ் (19), சரித் அசலன்க (6) ஆகிய அறுவரும் ஆட்டம் இழக்க 12 ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 45 ஓட்டங்களாக இருந்தது.

ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசுன் ஷானக்க 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவர்கள் இருவரது இணைப்பாட்டமே இலங்கை இன்னிங்ஸில் அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது.

அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

மதீஷ பத்திரண, நுவன் துஷார ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

மஹீஷ் தீக்ஷன 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மகாராஜ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

78 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 16.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தென் ஆபிரிக்காவுக்கும் துடுப்பாட்டம் இலகுவாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸின் சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் தவறவிட்டார்.

குவின்டன் டி கொக், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குவின்டன் டி கொக் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (51 - 3 விக்.)

மேலும் 7 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனால், ஹென்றிச் க்ளாசன் (19 ஆ.இ.), டேவிட் மில்லர் (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 20 ஓட்டங்களைப் பெற்றுகொடுத்தனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நுவன் துஷார 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை யும்    கைப்பற்றினர். 

ஆட்ட நாயகன்: அன்றிச் நோக்கியா

https://www.virakesari.lk/article/185248

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்பாஸ், இப்ராஹிம், பாறூக்கி ஆகியோரின் அபார ஆற்றல்களுடன் உகண்டாவை வீழ்த்தியது ஆப்கான்

04 JUN, 2024 | 12:20 PM
image

(நெவில் அன்தனி)

கயானா, ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த ஆப்கானிஸ்தானுக்கும் உகண்டாவுக்கும் இடையிலான 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் சி குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்றாஹிம் ஸத்ரான் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களும் பஸால்ஹக் பாறூக்கியின் 5 விக்கெட் குவியலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை மிகவும் இலகுவாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஆரம்ப வீரர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் 154 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப விக்கெட்டுக்கான இரண்டாவது அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.

இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் பகிர்ந்த பிரிக்கப்படாத 170 ஓட்டங்களே ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகச் சிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகும்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் 46 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட மொஹமத் நபி ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ப்றயன் மசாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கொஸ்மஸ் கிவுட்டா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

185 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா 16  ஓவர்களில்  சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் ரொபின்சன் ஒபுயா (14), ரியாஸாத் அலி ஷா (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 5 ஓவர்களில் 9 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சார்பாக பதிவான சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.

அவரைவிட நவீன் உல் ஹக் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஷித் கான் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பஸால்ஹக் பாறூக்கி

https://www.virakesari.lk/article/185283

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து - ஸ்கொட்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது

Published By: VISHNU   05 JUN, 2024 | 02:38 AM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் பார்படோஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் பி குழு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2008இல் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தது.

மழையினால் தாமதித்து ஆரம்பமானதும் இடையில் தடைப்பட்டு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுமான  போட்டியில்  ஸ்கொட்லாந்து விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களைக் குவித்தது.

மழை காரணமாக 52 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது மைக்கல் ஜோன்ஸ் 30 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் மன்சே 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 10 ஓவர்கள் என மத்தியஸ்தர்களால் அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் எஞ்சிய 3.4 ஓவர்களில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மேலும் 39 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 90 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.

மைக்கல் ஜோன்ஸ் 30 பந்துகளில் 45 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் மன்சே 31 பந்துகளில் 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இதனை அடுத்து டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 109 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடரப்படாமால் கைவிடப்பட்டது.

https://www.virakesari.lk/article/185339

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தை 6 விக்கெட்களால் வென்றது நெதர்லாந்து

Published By: VISHNU   05 JUN, 2024 | 02:40 AM

image

(நெவில் அன்தனி)

டெக்சாஸ் டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) மிகவும் இறுக்கமாக நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

நேபாளத்தின் கடும் சவாலுக்கு மத்தியிலேயே நெதர்லாந்து வெற்றிபெற்றது.

அனுபவசாலியான மெக்ஸ் ஓ'தௌத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றி அடையச் செய்தார்.

அவரைவிட விக்ரம்ஜித் சிங் 22 ஓட்டங்களையும் சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 14 ஓட்டங்களையும் பாஸ் டி லீட் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

18ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 89 ஓட்டங்களாக இருந்தபோது ஓ'தௌத் கொடுத்த இலகுவான பிடியை நேபாள அணித் தலைவர் பவ்டெல் தவறவிட்டார்.

அடுத்த ஓவரில் அதிரடியாகக் துடுப்பெடுத்தாடிய ஓ'தௌத், பாஸ் டி லீட் ஆகிய இருவரும் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் திப்பேந்த்ரா சிங் அய்ரீ 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சோம்பால் காமி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அபினாஷ் பொஹாரா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட காரண் கே.சி. 17 ஓட்டங்களையும் குல்சான் ஜா 14 ஓட்டங்களையும் அனில் சாஹ் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்துவீச்சில் லோகன் வென் பீக் 18 ஓட்டங்களுக்கு 3 விச்கெட்களையும் டிம் ப்றிங்ள் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் போல் வென் மீக்கரன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: டிம் ப்ரிங்ள்

https://www.virakesari.lk/article/185340

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: பேட்ஸ்மேன்களின் உடலை ரணமாக்கிய நியூயார்க் ஆடுகளம்

இந்தியா vs அயர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 6 ஜூன் 2024, 03:22 GMT
    புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர்

குறைந்த ரன்கள், பேட்டர்களின் உடலை ரணமாக்கும் விக்கெட், சமனற்ற ஆபத்தான ஆடுகளம் ஆகியவற்றைக் கொண்ட நியூயார்க் ஆடுகளத்தில்தான் நேற்று டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 8-வது லீக் ஆட்டம் நடந்தது.

நியூயார்க்கில் நேற்று குரூப் ஏ பிரிவில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் 8-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களில் சுருண்டது. 97 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணி சார்பில் 3 ஓவர்கள் வீசி ஒருமெய்டன், 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா vs அயர்லாந்து

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதே மைதானத்தில்தான் வரும் 9ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே இங்கு நடந்த இரு ஆட்டங்களும் குறைந்த ஸ்கோர் கொண்டவையாக இருந்தன. பாகிஸ்தான், இந்திய அணியிலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் இந்த ஆடுகளத்தில் நடக்கும் போட்டி வல்லவனுக்கு வல்லவன் யார் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும்.

அதேநேரம், பேட்டர்களுக்கு சாதகமில்லாத வகையிலும், பேட்டர்களின் உடலை பதம்பார்க்கும்விதத்திலும் ஆடுகளம் அமைந்திருப்பது ஆபத்தானது என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் கூறுகையில் “ நியார்க் மைதானத்தில் உள்ள ஆடுகளம் ஆபத்தின் எல்லையில் இருக்கிறது” என்று எச்சரித்துள்ளார்.

 
இந்தியா vs அயர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆடுகளம் எப்படி?

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ புதிய மைதானம், புதிய இடம், எப்படி இருக்கும் என்பது விளையாடும்போதுதான் தெரியும். இதில் விழுந்த அடி எனக்கு லேசாக வலிக்கிறது. ஆடுகளம் செட்டில் ஆகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கியுள்ளது. டெஸ்ட் போட்டி பந்துவீச்சை மனதில் வைத்து பேட்டர்கள் பேட் செய்ய வேண்டும். அர்ஷ்தீப் வலதுகை பேட்டர்களுக்கு அருமையாக ஸ்விங் செய்தார்.”

“இங்கு 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. சூழல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருந்தால், அவர்களுக்குத்தான் வாய்ப்பு. இந்தத் தொடரில் வேறு இடத்தில் ஆட்டம் நடக்கும்போது, சுழற்பந்துவீச்சாளர்கள் வாய்ப்புப் பெறுவார்கள்.பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கலாம். இந்த ஆடுகளத்துக்கு ஏற்ப எங்களை தயார் செய்ய வேண்டும். இந்த ஆட்டம் ப்ளெயிங் லெவனில் உள்ள அனைத்து வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப்பங்களிப்பு செய்யும் ஆட்டமாக அமைவது அவசியம். பேட் செய்ய கடினமாக இருந்தாலும் நிதானமாக ஆடினால், ரன்களைச் சேர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்

 
இந்தியா vs அயர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆடுகளத்தில் பிரச்னையா?

நியூயார்க்கில் உள்ள இஷன்ஹோவர் பார்க்கில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தில் அமைக்கப்பட்ட விக்கெட்டில் 2-ஆவது முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த மைதானத்தில் ஸ்குயர் பவுண்டரி அளவும் அதிகம் என்பதால், பேட்டர்கள் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் சிரமம்.

அது மட்டுமல்லாமல் விக்கெட் சீராக இல்லாமல் எந்த இடத்தில் பந்து பிட்ச்சானால் எப்படி பவுன்ஸ் ஆகும் என்பது தெரியாமல் இருந்தது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதே நிலைமை நேற்றைய ஆட்டத்திலும் அயர்லாந்து பேட்டர்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

இந்திய அணி பேட் செய்யும்போதும், தொடக்கத்தில் ரோஹித் சர்மா ரன் சேர்க்க மிகவும் தடுமாறி 20 பந்துகள்வரை மெதுவாகவே ஆடினார். ஆனால், ஒரு கட்டத்தில் தீர்க்கமாக முடிவெடுத்து அதிரடியாக ஆடித்தான் ரன்களைச் சேர்த்தார். அதிலும் ஜோஷ்லிட்டில் வீசிய வேகப்பந்துவீச்சில் திடீரென வந்த பவுன்ஸர் ரோஹித் சர்மாவின் தோள்பட்டையை தாக்கவே, வலி தாங்க முடியாமல், ரிட்டயர் ஹர்ட் ஆகினார்.

ஐசிசி சார்பில் நடக்கும் இதுபோன்ற சர்வதேச போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை பரிசோதிக்காமல் விட்டார்களா, இதுபோன்று தரமற்ற ஆடுகளத்தில், குழிபிட்ச்சில் போட்டி நடத்தலாமா என்ற கேள்வியை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக வைத்துள்ளனர்.

இந்தியா vs அயர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடிலெய்ட் ஆடுகள வடிவமைப்பாளர்

நியூயார்க்கில் உள்ள இந்த ஆடுகளத்தை அமைப்பதற்காகவே ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட்ஓவல் மைதானத்தின் தலைமை பிட்ச் வடிவமைப்பாளர் டேமியன் ஹோவை பணிக்கு அமர்த்தியது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஆடுகளத்தை வடிவமைத்து “ட்ராப்-இன் பிட்ச்” முறையை கொண்டுவந்து இங்கு ஐசிசி அமைத்தது. இந்தியா-வங்கதேசம் இடையிலான பயிற்சிப்போட்டி நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் இந்த ஆடுகளத்தின் வடிவமைப்புப் பணியே நடந்து முடிந்துள்ளது. இன்னும் விக்கெட் இறுகி செட் ஆவதற்குள் ஆட்டம் நடப்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவில் 16 போட்டிகளில் 8ஆட்டங்கள் நியூயார்க் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. அதில் குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் ஆட்டமும் இந்த விக்கெட்டில்தான் நடக்க இருக்கிறது. அனைத்து ஆட்டங்களும் பகலில் நடக்கும் ஆட்டமாக இருக்கும். இந்திய அணியும் தனது 3 லீக் ஆட்டங்களை நியூயார்க் மைதானத்தில்தான் விளையாட இருக்கிறது.

இந்தியா vs அயர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஐபிஎல் போட்டி போன்று இருக்காது"

இந்த ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் “ நியூயார்க்கில் நடக்கும் ஆட்டங்கள் பகலில்தான் இருக்கும், பந்து நன்றாக ஸ்விங் ஆகும், சீமிங் இருக்கும். ஆதலால் பேட்டர்கள் ஐபிஎல் போன்று 240 ரன்கள் வரை அடிக்கலாம் என்பதை மறந்துவிட்டு, இன்னிங்ஸை எவ்வாறு தொடங்கலாம், மோசமான பந்துகளை மட்டும் எவ்வாறு பெரிய ஷாட்களாக மாற்றலாம் என்பதை கணித்து ஆட வேண்டும். 240 ரன்கள் ஸ்கோர் என்பது இந்த ஆடுகளத்தில் சாத்தியமில்லை. பேட்டர்களுக்கு இங்கு நடக்கும் ஆட்டங்கள் வித்தியாசமான சவாலாக இருக்கும்.” என்றார்.

“ஆடுகளத்தை வடிவமைத்த டேமியன் ஹோவ் பேசியதை கேட்டேன். நியூயார்க் ஆடுகளம், பேட்டர்களுக்கும், பந்துவீ்ச்சாளர்களுக்கும் சமமான போட்டியை உருவாக்கும் விதத்தில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். இலங்கை, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சிறிதளவு ஒத்துழைத்தது. மற்றவகையில் பேட்டர்கள் ஒவ்வொரு பந்தையும் நன்கு மனதில் வைத்து விளையாடும் விதத்தில் இருந்தது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த ரன் திருவிழாவுக்கு நேர் எதிராகவே இந்த ஆடுகளம் இருக்கும்” எனத் தெரிவித்தார் பான்டிங்.

இந்தியா vs அயர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 விக்கெட்டுகளை அள்ளிய வேகப்பந்துவீச்சாளர்கள்

நியூயார்க் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து இந்திய அணி நேற்று 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துஆல்ரவுண்டர்களுடன் களமிறங்கியது. அயர்லாந்து அணியின் 8 விக்கெட்டுகளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட், அர்ஷ்தீப் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் வெளிப்பட்ட சீமிங், ஸ்விங், பவுன்ஸர்கள் அயர்லாந்து பேட்டர்களை திக்குமுக்காடச் செய்தன. பேட்டிங் செய்வதற்கு கடுமையாக போராடிய அயர்லாந்து பேட்டர்கள், 16 ஓவர்களில் சுருண்டனர்.

இந்திய அணியின் பேட்டர்களும் பேட்டிங் செய்தபோது, அயர்லாந்து வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டனர். ரோஹித் சர்மா தொடக்கத்தில் நிதானமாக ஆடி, பின்பு அதிரடிக்கு மாறினார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், சூழலை உணர்ந்த ரோஹித் சர்மா அதிரடியாக 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விளாசி 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ரோஹித் 52 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜோஸ் லிட்டல் பந்துவீச்சில் தோள்பட்டையில் பந்துபட்டு வலியால் துடித்து ரிட்டயர்ஹர்ட் முறையில் வெளியேறினார். அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் 4ஆயிரம் ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையையும், 600-வது சிக்ஸரையும் அடித்து ரோஹித் சர்மா சாதனை படைத்தார்.

 
இந்தியா vs அயர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அயர்லாந்து திணறல்

அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தபோது, முதல் இரு ஓவர்கள் எவ்வாறு ஆடுகளம் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடனே அர்ஷ்தீப், சிராஜ் பந்துவீசினர். ஆனால், அர்ஷ்தீப் வீசிய பந்துகள் மின்னல் வேகத்தில் சென்றது, நிலையற்ற பவுன்ஸ் ஆனது, விக்கெட் கீப்பர் கைகளுக்கு செல்லும்முன்பே ஸ்விங் ஆகியதைப் பார்த்தபின், சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில் ஸ்விங் பந்தை அடிக்க முயன்று பால் ஸ்ட்ரிங் 2 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப்பந்தில் பால்ப்ரிங் க்ளீன் போல்டாகி வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் அயர்லாந்து 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

இந்திய வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து பேட்டர் ஹேரி டெக்டர் கையுறையிலும், தொடைப்பகுதியிலும் பந்தால் அடி வாங்கி பேட் செய்தார். பொறுமையிழந்த டெக்டர் 4 ரன்னில் பும்ரா வீசிய ஷார்ட் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

குறிப்பாக காயத்திலிருந்து மீண்டுவந்து பந்துவீசி வரும் பும்ரா பந்துவீச்சை தொடுவதற்கே அயர்லாந்து பேட்டர்கள் அஞ்சினர். துல்லியமான லென்த், இன்கட்டர், ஸ்விங் என அயர்லாந்து பேட்டர்களை பும்ரா தனது பந்துவீச்சால் மிரட்டினார். பும்ராவின் ஓவரில் ஒரு பவுண்டரி கூட அயர்லாந்து பேட்டர்கள் அடிக்கவில்லை, 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

அதன்பின் ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் பந்துவீச வந்தபின் அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அக்ஸர் படேல் பந்துவீச்சில் கூட பேரி மெக்ரத்தி விக்கெட்டை இழந்தார். 26 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்த அயர்லாந்து 50 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. அயர்லாந்து அணியில் கேரத் டிலானி 14 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.

https://www.bbc.com/tamil/articles/cjrry7edr9ko

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி: ரி20இல் அடம் ஸம்ப்பா 300 விக்கெட்கள் பூர்த்தி

Published By: DIGITAL DESK 7   06 JUN, 2024 | 10:40 AM

image
 

(நெவில் அன்தனி)

ஒமானுக்கு எதிராக பார்படோஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் சற்றநேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் அவுஸ்திரேலியா 39 ஓட்டங்களால்  வெற்றியீட்டியது.

அதேவேளை அப் போட்டியில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் அடம் ஸம்ப்பா சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்களைப் பூர்த்திசெய்து மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.

மாக்கஸ் ஸ்டொய்னிஸில் அபார சகலதுறை ஆட்டம், டேவிட் வோனரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்கள் ட்ரவிஸ் ஹெட் (12), அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (14), க்ளென் மெக்ஸ்வேல் (0) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

அவுஸ்திரேலியா 9ஆவது ஓவரில் 3 விக்கெட்ளை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், அதன் பின்னர் டேவிட் வோனர், மாக்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை பலமான நிலையில் இட்டனர்.

மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 36 பந்துகளில் 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டேவிட் வோனர் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மெஹ்ரான் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

165 ஓட்டங்கள் என்ற கடுமையான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அயான் கான் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட மெஹ்ரான் கான் (27), அணித் தலைவர் ஆக்கிப் இலியாஸ் (18), ஷக்கீல் அஹ்மத் (11) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் எலிஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

0606_david_warner_aus_vs_oman_t20wc__2_.

https://www.virakesari.lk/article/185420

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
02:16 - Source: CNN
CNN — 

The US cricket team orchestrated a shocking defeat of powerhouse Pakistan following a dramatic Super Over victory at the Men’s T20 Cricket World Cup on Thursday in Dallas.

The thrilling win was the biggest in USA Cricket history. The triumph could be considered one of the biggest upsets in the sport of cricket.

The United States is co-hosting the World Cup for the first time, along with the West Indies.

Pakistan, the runners-up at the 2022 tournament, are ranked No. 6 in the world while the US team is No. 18.

Nitish Kumar hit a match-saving boundary to force the Super Over – a tie-breaking method in which whoever scores the most runs from six balls wins – much to the delight of US fans at the Grand Prairie Cricket Stadium.

In the tie-breaking over, the United States posted a competitive score of 18 runs.

 

Fans react after a boundary hit by Pakistan batsman during the ICC Men's T20 World Cup cricket match between United States and Pakistan at the Grand Prairie Stadium in Grand Prairie, Texas, Thursday, June 6, 2024.

Fans react after a boundary hit by Pakistan batsman during the ICC Men's T20 World Cup cricket match between United States and Pakistan at the Grand Prairie Stadium in Grand Prairie, Texas, Thursday, June 6, 2024. 

Tony Gutierrez/AP

Saurabh Netravalkar took the ball for the US and limited the Pakistan batters to 13 to secure the win.

USA captain Monank Patel was the team’s top batter and named the player of the match.

“I am proud of the boys,” Patel said after the win.

USA’s opening match at the tournament was also a smashing success. The United States beat Canada in the Group A opener and now sits top of the group with 4 points.

 

United States' Aaron Jones plays a shot in Super Over during the ICC Men's T20 World Cup cricket match between United States and Pakistan at the Grand Prairie Stadium in Grand Prairie, Texas, Thursday, June 6, 2024.

United States' Aaron Jones plays a shot in Super Over during the ICC Men's T20 World Cup cricket match between United States and Pakistan at the Grand Prairie Stadium in Grand Prairie, Texas, Thursday, June 6, 2024. 

Tony Gutierrez/AP

India, who are also in Group A, are one of the favorites to win the 2024 T20 Cricket World Cup.

Pakistan will now face archrivals India in New York on Sunday.

USA’s final two Group A matches are against India and Ireland. 

https://www.cnn.com/2024/06/06/sport/usa-pakistan-t20-cricket-world-cup/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி.

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது.

போட்டி ஏற்பாட்டாளர்களான அமெரிக்கா முதல் தடவையாக உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் கிரிக்கட் அணி அறிமுக அணியான அமெரிககாவிடம் முதல் சுற்றுப் போட்டியொன்றில் தோல்வியடைந்துள்ளது.

சுப்பர் ஓவர்

 

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சுப்பர் ஒவரில் அமெரிக்கா வெற்றியீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றக்கொண்டது இதில் உஸ்மான் கான் 44 ஓட்டங்களையும் சாடெப் கான் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அமெரிக்க அணியின் சார்பில் நொஸ்டுக் கின்ஜெ 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி | Usa Beat Pak In T20 Worldcup

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் மொனாக் பட்டெல் 50 ஓட்டங்களையும் ஆரோன் ஜோன் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியில் இரு அணிகளும் சம எண்ணிக்கையிலான ஓட்டங்களைப் பெற்ற காரணத்தினால் சுப்பர் ஓவர் மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.

சுப்பர் ஓவரில் அமெரிக்க அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 18 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி சுப்பர் ஓவரில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் அணி இவ்வாறான உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிர்ச்சி தோல்விகளை பல சந்தர்ப்பங்களில் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/usa-beat-pak-in-t20-worldcup-1717719284

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பப்புவா நியூ கினியை வீழ்த்தி ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது உகண்டா

Published By: DIGITAL DESK 3   06 JUN, 2024 | 09:22 AM

image

(நெவில் அன்தனி)

கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை நடைபெற்ற சி குழுவுக்கான 9ஆவது ரி20 உலகக் கிண்ண போட்டியில் பப்புவா நியூ கினியை 3 விக்கெட்களால் உகண்டா வெற்றிகொண்டது.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்த வருடம் அறிமுகமான உகண்டா இதன் மூலம் தனது முதலாவது உலகக் கிண்ண வெற்றியைப் பதிவு செய்தது.

78 ஓட்டங்கள் என்ற குறைந்த மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா சிரமத்திற்கு மத்தியில் 18.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ரியாஸத் அலி ஷா 33 ஓட்டங்களையும் ஜீமா மியாகி 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

உதிரிகளாக 15 ஓட்டங்கள் உகண்டாவுக்கு கிடைத்தது.

பந்துவீச்சில் அலெய் நாஓ 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நோமன் வனுவா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பப்புவா நியூ கினி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட மிகக் குறைந்த இணை மொத்த எண்ணிக்கை இதுவாகும். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கையும் 77 ஓட்டங்களையே பெற்றிருந்தது.

பப்புவா நியூ கினி துடுப்பாட்டத்தில் ஹிரி ஹிரி (15), செசே பாவ் (12), கிப்லின் டோரிகா (12) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். உதிரிகளாக 13 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு கிடைத்தது.

பந்துவீச்சில் ப்ராங்க் என்சுபுகா 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 4 ஓவர்களில் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜுமா மியாகி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்பேஷ் ராம்ஜானி, கொஸ்மஸ் கியூவுட்டா ஆகியோர் தலா 17 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும்  கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரியாஸத் அலி ஷா.

https://www.virakesari.lk/article/185415

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமிபியாவை 5 விக்கெட்களால் வென்றது ஸ்கொட்லாந்து!

07 JUN, 2024 | 10:52 AM
image
 

(நெவில் அன்தனி)

பார்படோஸ், பிறிஜ்டவுனில் நடைபெற்ற (இலங்கை நேரப்படி இன்று காலை) பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண போட்டியில் நமிபியாவை 5 விக்கெட்களால் ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டது.

சுமாரான மொத்த எண்ணிக்கை பெறப்பட்ட இப் போட்டியில் நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் ஸ்கொட்லாந்து 3 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது அவுஸ்திரேலியா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது.

இது இவ்வாறிருக்க நமிபியாவுக்கு எதிராக முதல் தடவையாக வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து தரவரிசையில் நமிபியாவை முந்தியுள்ளது.

இப் போட்டியின் இறுதியில் ஸ்கொட்லாந்து இலகுவாக வெற்றிபெற்ற போதிலும் முதல் 11 ஓவர்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 4 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (47 ஆ.இ.), மைக்கல் லீஸ்க் (17 பந்துகளில் 4 சிக்ஸ்களுடன் 35) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.

அவர்களைவிட மைக்கல் ஜோன்ஸ் 26 ஓட்டங்களையும் ப்றெண்டன் மெக்முலன் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அணித் தலைவர் ஜேர்ஹாட் இரேஸ்மஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய நமிபியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 31 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஸேன் க்றீனுடன் 5ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஸேன் க்றீன் 28 ஓட்டங்களையும் நிக்கலஸ் டெவின் 20 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

வேறு எவரும் 15 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.

பந்துவீச்சில் ப்றட் வீல் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றட் கியூரி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மைக்கல் லீஸ்க்

https://www.virakesari.lk/article/185507

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சௌரப் நேத்ரவால்கர்: சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை சுருட்டிய மும்பை வீரர் - இந்தியாவுக்குப் பதிலாக அமெரிக்க அணியில் ஆடுவது ஏன்?

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜான்வி மூலே
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 7 ஜூன் 2024, 04:33 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 உலகக்கோப்பைப் போட்டியில் அனுபவமில்லாத அமெரிக்க அணியுடன் தோல்வியைத் தழுவியிருக்கிறது பாகிஸ்தான்.

இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் உள்ள புள்ளிப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த வெற்றியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சௌரப் நேத்ரவால்கர் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வெற்றி பெறவிடாமல் சுருட்டினார். அவர் அமெரிக்க அணியில் இடம்பெற்ற கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.

மும்பையைச் சேர்ந்த சௌரப், ஒரு காலத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் (Under-19) இடம் பிடித்திருந்தார். அதன்பிறகு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றபோது தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினார்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதேநேரம் கிரிக்கெட் மீதான அவரது காதல் அப்படியே இருந்தது. அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் போதுகூட, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இறுதியில், அவருக்கு ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான கதவுகள் திறக்கப்பட்டது.

மும்பை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சௌரப் தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடுவது அவரின் கிரிக்கெட் மீதான காதல் மற்றும் ஆர்வத்திற்குக் கிடைத்த வெகுமதி.

 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் சௌரப் எப்படி விளையாடினார்?

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2015இல், செளரப் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

செளரப் 1991ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மலாட்டில் வளர்ந்த அவர் 10 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டார்.

கடந்த 2008-09 காலக்கட்டத்தில் முதல் முறையாக அவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹார் கோப்பை (Cooch Behar Trophy) கிரிக்கெட் போட்டியில் ஆறு போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்தக் காலக்கட்டத்தில் மும்பையில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனவே ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்திய நிகழ்வு, அங்கு உடனடியாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. சௌரப், உயரமான மற்றும் ஒல்லியான இடதுகை பந்துவீச்சாளர் என்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு 2010இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த முத்தரப்பு தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய சௌரப், நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்போது, சௌரப் உடன், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்தனர். அதன் பிறகு இவர்கள் மூவரும் இந்திய அணியில் இடம்பிடித்தனர். ஆனால் சௌரப்பால் அது முடியவில்லை.

செளரப் கிரிக்கெட் மட்டுமின்றி படிப்பிலும் ஆர்வம் காட்டினார். 2009-13இல் மும்பை சர்தார் படேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பை முடித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "2013இல் புனேவில் பொறியியல் துறை தொடர்பான வேலை கிடைத்தது. அதன் பிறகு குறைந்தது இரண்டு ஆண்டுகள் எந்தப் பணிக்கும் செல்லாமல் கிரிக்கெட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மும்பை அணியில் தேர்வாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆண்டு மும்பை ரஞ்சி அணியில் அறிமுகமானேன்," என்றார்.

சௌரப் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து முயன்ற போதிலும், கிரிக்கெட் அணியின் பிரதான 11 வீரர்களில் ஒருவராகத் தேர்வாகவில்லை. அப்போது அணியில் இடம் பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவியதால் அவரால் தனக்கான இடத்தைத் தக்க வைக்க முடியவில்லை.

 

கிரிக்கெட் செயலி உருவாக்கிய செளரப்

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை 22-23 வயதில்தான் தொடங்குகிறது. ஆனால் இந்த வயதில் செளரப் கிரிக்கெட்டில் இருந்து விலகும் முக்கிய முடிவை எடுத்தார்.

இதுகுறித்து சௌரப் பேசுகையில், "அந்த நேரத்தில் நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன். கிரிக்கெட்டை விட்டுவிட்டு படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமா என்ற சந்தேகத்தில் தவித்தேன்," என்கிறார்.

அந்த நேரத்தில் மும்பை ரஞ்சி அணியில் அவரது இடம் உறுதியாகவில்லை. மேலும் அவர் எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கும் வாய்ப்பில்லை. எனவே படிப்பில் கவனம் செலுத்த சௌரப் முடிவு செய்தார்.

செளரப் கூறுகையில் “2015இல், கிரிக்கெட்டுக்கு மாற்றாக நான் அமெரிக்காவில் முதுகலை நுழைவுத் தேர்வில் பங்கேற்றேன். என் சக பொறியியல் மாணவர்கள் பலர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்ததால் அவர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். முதுநிலைப் படிப்பிற்காக, கணினி அறிவியலுக்கான உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது," என்றார்.

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செளரப் 2015ஆம் ஆண்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். பின்னர் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த நேரத்தில், செளரப் கிரிக்கெட் தொடர்பான ஒரு செயலியையும் உருவாக்கினார். அதன் பிறகு அவரது யோகா மற்றும் பாட்டு பாடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பிரபலமானது. அமெரிக்கா போன பிறகு கிரிக்கெட் விளையாட்டைத் தொடர முடியாது என்று நினைத்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

"கல்லூரியில் சில மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் விளையாடுவார்கள். அவர்கள் கல்லூரியில் கிரிக்கெட் கிளப்பை உருவாக்கினர். கல்லூரி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன" என்கிறார் சௌரப்.

ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை கிடைத்த பிறகு, சௌரப் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஒவ்வொரு வார இறுதியிலும் கிளப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. சௌரப் ஐந்து நாட்கள் வேலை செய்யவும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் திட்டமிட்டிருந்தார்.

சௌரப் கூறுகையில், “அங்கு நடந்த போட்டிகள் இந்தியா அளவுக்கு இல்லை. இங்கு சாதாரண கிரிக்கெட் பிட்ச்கள்தான் இருந்தன். இன்றளவும் அப்படித்தான். இந்தியாவில் இருப்பது போல் சரியான மண் பிட்ச்கள் இங்கு இல்லை. இங்கு சின்தட்டிக் மேட் போன்ற ஆடுகளங்கள்தான் உள்ளன். இருப்பினும், லாஸ் ஏஞ்சல்ஸில் மும்பையைப் போலவே ஒரு பூங்காவில் மூன்று அல்லது நான்கு ஆடுகளங்கள் உள்ளன. அவை அனைத்தும் நல்ல பிட்ச்கள். நாங்கள் விளையாடுவதற்கு அங்குதான் செல்வோம்,” என்றார்.

 

கிரிக்கெட் விளையாட 6 மணிநேரம் பயணித்த செளரப்

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஆறு மணிநேர பயண தூரத்தில் உள்ளது. எனவே செளரப் வெள்ளிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு காரில் சென்று, சனிக்கிழமை அங்கு விளையாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோவுக்கு திரும்புவது வழக்கம்.

“அந்த கிளப்பில் விளையாடும்போது என்னுடன் விளையாடியவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் அமெரிக்க அணியில் இருந்தனர். உண்மையில், அமெரிக்காவிலும் ஒரு கிரிக்கெட் அணி உள்ளது என்பதை அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்" என்கிறார் செளரப்.

இருப்பினும் சௌரப்புக்கு அமெரிக்க தேசிய அணிக்காக விளையாடும் நம்பிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. காரணம் அங்குள்ள அணிக்கான தேர்வு விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தன.

அப்போதைய சூழல் குறித்து சௌரப் கூறுகையில், “ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராக இருக்க வேண்டும், நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். நான் அப்போது மாணவர் விசாவில் அங்கு தங்கியிருந்தேன், அதோடு பணி விசாவில் இருந்தேன். எனவே, அமெரிக்காவுக்காக விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தது. கிரிக்கெட் மீதிருந்த காதலால் நான் விளையாடினேன்,” என்றார்.

வருடங்கள் கடந்தன. ஐசிசி ஏழு வருடம் அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும் என்னும் விதியை மூன்று ஆண்டுகளாகக் குறைத்தது.

பயிற்சிக்காக அமெரிக்க அணி லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தபோது, அங்குள்ள பயிற்சியாளர் செளரப்பின் ஆட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல அவருக்கு அமெரிக்க அணியின் கதவுகள் திறக்கத் தொடங்கியது.

அதன் பின்னர் அவர் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச லீக் டி20 ஆகியவற்றில் பங்கேற்றார்.

 

கிரிக்கெட் பிரபலமில்லாத நாட்டு அணிகளிலும் இடம் எளிதாகக் கிடைத்துவிடாது

சௌரப் நேத்ரவால்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செளரப் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச லீக் டி20 ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.

கிரிக்கெட்டில் எல்லாம் எளிதில் கிடைக்கும் என்றும் சிறிய அணிகளுக்கு விளையாடுவது சுலபம் என்றும் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இங்கும் பெரிய போராட்டம் நடக்கிறது என்கிறார் செளரப்.

“அசோசியேட் நாடுகளில் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினம். ஏனெனில் வசதிகள் மிகவும் குறைவாக இருக்கும். பல இடங்களில் பயிற்சிக்கான வசதிகளோ அல்லது சாதாரண ஆடுகளங்களோ இல்லை.

நாங்கள் ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறி, இரவு ஏழு முதல் ஒன்பது வரை வீட்டிற்குள்ளேயே பயிற்சி செய்வோம். 2019இல், ஐசிசி அனைத்து அசோசியேட் உறுப்பினர்களுக்கும் டி20 சர்வதேச அணி அந்தஸ்தை வழங்கியது. 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்குள் நுழைந்ததன் மூலம் அமெரிக்கா தற்காலிக ODI அந்தஸ்தையும் பெற்றது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் கிரிக்கெட் வேகமாக விரிவடையப் போகிறது,” என்கிறார் சௌரப்.

அவர் மேலும் கூறுகையில், “நல்ல மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் அகாடமிகள் வடிவம் பெறுகின்றன, அவற்றில் இருந்து புதிய வீரர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர். எங்கள் ODI அணியில் ஆரம்பம் முதல் இங்கிருக்கும் சிலர் இருக்கிறார்கள். இங்கு 13-14 வயதுடைய வீரர்களும் உள்ளனர், அவர்களின் தரம் அடுத்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும். சர்வதேச போட்டிக்கு அவர்களைத் தயார்படுத்துவது இங்கு அடுத்த சவாலாக உள்ளது,’’ என்றார்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்வுப்பூர்வமான சவால்

டி20 உலகக்கோப்பைக்கு முன், டி20 தொடரில் வங்கதேசத்தை அமெரிக்கா தோற்கடித்தது. அந்த வெற்றி தனது அணிக்குப் புதிய நம்பிக்கையை அளித்தது என்கிறார் சௌரப். தற்போது, கனடா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் மூலம் அந்த அணி சிறப்பான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

அடுத்ததாக ஜூன் 12ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும் என்று செளரப் கூறுகிறார்.

அவர் கூறுகையில், “நான் இந்தியாவுக்காக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி இருக்கிறேன். ஒரு காலத்தில் என்னுடன் விளையாடிய பலர் இப்போது இந்திய அணியில் உள்ளனர். அவர்களை மீண்டும் சந்திக்கப் போவது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து செளரப் கூறுகையில், "டி20-இல் எதுவும் நடக்கலாம். நாங்கள் நேர்மறையாக இருக்கிறோம். அதே நேரம் அந்த ஒரு போட்டியைப் பற்றி மட்டும் மிகவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cd11ddd4pz3o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் கிரிக்கெட் மைதான ஆடுகளம் தரமற்றது: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை

நியூயோர்க்கில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் தரமானதாக இல்லை என்பதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து எஞ்சியுள்ள போட்டிகளுக்கு அவற்றை சரிசெய்ய மைதான ஊழியர்கள் பணியாற்றி வருவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி

எனினும் ஆடுகளத்தின் தன்மை காரணமாக அந்த போட்டிகளில் குறைந்த ஓட்டங்களே பெறப்பட்டன என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நியூயோர்க் கிரிக்கெட் மைதான ஆடுகளம் தரமற்றது: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை | The Pitch At The New York Cricket Ground Is Shoddy

அத்துடன் ஆடுகள அமைப்பில் பந்து மேழெழும் தன்மை (bounce) காரணமாக துடுப்பாட்டத்தை மிகவும் கடினமாக்கியது என கூறப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்  இலங்கை 77 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதேநேரம் இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து அணி 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்

 

இந்த நிலையில் உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு நேற்றைய ஆட்டத்தின் பின்னர் நிலைமையை சரிசெய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நியூயோர்க் கிரிக்கெட் மைதான ஆடுகளம் தரமற்றது: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை | The Pitch At The New York Cricket Ground Is Shoddy

 

இதேவேளை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டிகளுடன் இன்னும் ஆறு போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன.

முன்னதாக இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர் இது சவாலான விக்கெட் களம் என்று வர்ணித்தார்.

எனினும் உள்ளது உள்ளபடியே இருக்கும் எனவே அதைச் சமாளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இந்திய அணியில் அதனை சமாளிக்க போதுமான திறமையும், போதுமான அனுபவமும் இருப்பதாக தாம் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.  

https://tamilwin.com/article/the-pitch-at-the-new-york-cricket-ground-is-shoddy-1717782301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்தை வீழ்த்தி ரி20 உலகக் கிண்ணத்தில் முதலாவது வெற்றியை ஈட்டியது கனடா

Published By: VISHNU  08 JUN, 2024 | 12:50 AM

image
 

(நெவில் அன்தனி)

நியூயோர்க் நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்தை 12 ஓட்டங்களால்  கனடா  வெற்றிகொண்டது.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமான கனடா ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

இரண்டு அணிகளும் மந்தகதியில் ஓட்டங்களைப் பெற்றதால் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்தின் 16ஆவது ஓவர்வரை ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கவில்லை.

ஆனால், மார்க் அடயாரும் ஜோர்ஜ் டொக்ரெல்லும் 17ஆவது ஓவரிலிருந்து விளாசி அடிக்கத் தொடங்கியதும் போட்டியில் ஓரளவு விறுவிறுப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரது அதிரடிகள் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்டதால் கனடாவின் வெற்றியை அவர்களால் தடுக்க முடியாமல் போனது.

கனடாவினால் நிர்ணியிக்கப்பட்ட சுமாரான 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மிக மோசமாக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 11ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்தது.

முன்வரிசையில் அண்டி பெல்பேர்னி (17), லோக்கன் டக்கர் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

13ஆவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட் விழ மொத்த எண்ணிக்கை வெறும் 59 ஓட்டங்களாக இருந்தது.

ஜோர்ஜ் டொக்ரெல்லும் மார்க் அடாயரும் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அயர்லாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், கடைசி ஓவரில் மார்க் அடயார் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அயர்லாந்தின் வெற்றிக் கனவு கலைந்து போனது.

ஜோர்ஜ் டொக்ரெல் 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜெரமி கோர்டன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டிலொன் ஹேலிகர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

நிக்கலஸ் கேர்ட்டன், ஷ்ரேயாஸ் மொவ்வா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 75 ஓட்டங்களே கனடாவை கௌரவமான நிலையில் இட்டது.

நிக்கலஸ் கேர்ட்டன் 49 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட பர்கத் சிங் (18), ஆரோன் ஜோன்சன் (14) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பெறி மெக்காத்தி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரெய்க் யங் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: நிக்கலஸ் கேர்ட்டன்.

https://www.virakesari.lk/article/185575

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை 75 ரன்களில் சுருட்டி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி

AFG vs NZ

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்து எதிர்பார்த்த போட்டிகளில் இருந்து எதிர்பாராத முடிவுகள் கிடைத்து வருகின்றன. கத்துக்குட்டி அணிகள் என்று கருதப்பட்ட அணிகள் முன்னாள் சாம்பியன்களை சாய்த்து வருகின்றன.

அந்த வரிசையில் இன்று நடந்த ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

கயானாவின் பிராவிடன்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சி பிரிவில் 14-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 84 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணியை முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிதானமான தொடக்கம்

ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. குர்பாஸ், இப்ராஹிம் ஜாத்ரன் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஹென்றி வீசிய 2வது ஓவரில் குர்பாஸ் 3 பவுண்டரிகளை அடித்து அதிரடியாகத் தொடங்கினார். அதன் பின் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தனர்.

நியூசிலாந்து பந்துவீ்ச்சு மிகுந்த கட்டுக்கோப்புடன் இருந்ததால் ஜாத்ரன், குர்பாஸால் நினைத்த ஷாட்களை ஆடமுடியவில்லை. இருவரையும் பிரிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் செய்த முயற்சியும் தோல்வி அடைந்தது. ஹென்றி வீசிய 5வது ஓவரில் இப்ராஹிம் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்காமல் ஆலன் தவறவிட்டார்.

ஆப்கன் பேட்டர்கள் திணறல்

6-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சான்ட்னர், ஹென்றி, பெர்குஷன், கட்டுக்கோப்பாகப் பந்துவீசியதால் ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மந்தமாகவே இருந்தது. இந்த 4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 11 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், ரன்ரேட் 5க்கும் கீழ் சரிந்தது.

 
AFG vs NZ

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடிக்கு மாறிய குர்பாஸ், இப்ராஹிம்

பிரேஸ்வெல் வீசிய 11வது ஓவரை குறிவைத்த குர்பாஸ், இப்ராஹிம் சிக்ஸர்களாக விளாசினர். குர்பாஸ் 2 சிக்ஸர்களும், ஜாத்ரன் ஒரு சிக்ஸரும் என 20 ரன்கள் சேர்த்தனர். பெர்குஷன் வீசிய 12வது ஓவரில் ஜாத்ரன் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார். போல்ட் வீசிய 13-வது ஓவரில் குர்பாஸ் சிக்ஸர் அடித்து 40 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

11வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை மூன்றே ஓவர்களில் 42 ரன்களை ஆப்கானிஸ்தான் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு ஜாத்ரன், குர்பாஸ் இருவரும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இந்த உலகக் கோப்பைத் தொடரில் 2வது முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்துள்ளனர்.

ஹென்றி வீசிய 15-வது ஓவரில் ஜாத்ரனின் ஹெல்மெட் மீது பந்து பட்டு நிலைகுலைந்ததால் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. அடுத்த பந்தில் இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகி ஜாத்ரன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 103 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து ஓமர்ஜாய் களமிறங்கினார். சான்ட்னர் வீசிய 16-வது ஓவரில் ஓமர்சாய் பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்த்தார். ஹென்றி வீசிய 17-வது ஓவரில் ஓமர்ஜாய் 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில் 22 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

 

விக்கெட்டுகள் சரிவு

அடுத்து முகமது நபி களமிறங்கி, குர்பாஸுடன் சேர்ந்தார். பெர்குஷன் வீசிய 18-வது ஓவரில் குர்பாஸ் 2 பவுண்டரிகளை விளாசினார். நபி சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். அதன்பின் வந்த ரஷித் கான் களத்துக்கு வந்தது முதல் அதிரடியாக பேட் செய்தார். முதல் பந்திலேயே ரஷித்கான் பவுண்டரி விளாசினார்.

மிட்ஷெல் வீசிய 19-வது ஓவரில் குர்பாஸ் ஒரு சிக்ஸரை விளாசினார். ரிஷித் கான் ஸட்ரைக்கில் இருந்த போது, மிட்ஷெல் வீசிய பந்து அவரின் ஹெல்மெட்டில் பட்டதால் அவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கன்கசன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஓவரின் கடைசிப்பந்தில் குர்பாஸ் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசி 16 ரன்கள் சேர்த்தார்.

AFG vs NZ

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 ரன்களுக்கு 3 விக்கெட்

கடைசி ஓவரை டிரன்ட் போல்ட் வீசினார். முதல் பந்தில் ரஷித்கான் பீட்டன் ஆகவே விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால், ரஷித்கான் ரன் ஓடுவதற்குள், குர்பாஸ் ஸ்ட்ரைக்கர் க்ரீஸுக்கு வந்தார். இதனால் ரஷித்கான் ரன் எடுக்க முயன்ற போது 6 ரன்னில் ரன்அவுட் செய்யப்பட்டார். அடுத்த பந்தில் குர்பாஸ் க்ளீன்போல்ட் ஆகி 56 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

குல்புதீன் நயிப், கரீன் ஜனத் களத்தில் இருந்தனர். 5வது பந்தில் குல்புதீன் தூக்கி அடிக்க மிட்விக்கெட்டில் பிலிப்ஸ் கேட்ச் பிடித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆப்கானிஸ்தான் இழந்தது. டிரன்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அருமையாகப் பந்துவீசினார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹென்றி இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

நியூசிலாந்து ஃபீல்டிங் மோசம்

நியூசிலாந்து அணி தொடக்கத்திலிருந்தே மோசமாக பீல்டிங் செய்தது. 4வது ஓவரில் பின் ஆலன் ஒரு கேட்சையும், அதன்பின் வில்லியம்ஸன் ஒரு கேட்சையும் கோட்டைவிட்டனர். இரு கேட்ச்களை தவறவிட்டதற்கு விலையாக ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தது. அது மட்டுமல்லாமல் குர்பாஸ், ஜாத்ரன் அடித்த பல ஷாட்களை கேட்ச் பிடிக்கவும் பெரிதாக நியூசிலாந்து வீரர்கள் பிடிக்கத் தவறிவிட்டனர்.

3 ரன்அவுட்களையும் நியூசிலாந்து வீரர்கள் கோட்டைவிட்டனர். பிரேஸ்வெல், ஹென்றி இருவரும் ரன்களை வாரி வழங்கினர்.

AFG vs NZ

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாய்ப்பை தவறவிட்ட ஆப்கன்

குர்பாஸ், இப்ராஹிம் இருவரும் களத்தில் இருந்தவரை ரன்ரேட் நன்றாக உயர்ந்தது. இப்ராஹிம் ஆட்டமிழந்தபின், குர்பாஸுக்கு போதுமான சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தான் 170 ரன்கள் வரை சேர்த்திருக்க வாய்ப்பு இருந்தது.

கடைசி நேரத்தில் ரன்களைச் சேர்க்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் முயன்றும் முடியவில்லை. கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை ஆப்கான் இழந்தது. குர்பாஸ், ஜாத்ரன் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் அடுத்துவந்த பேட்டர்கள் பயன்படுத்தியிருந்தால் அந்த அணிக்கு பிரமாண்ட ஸ்கோர் கிடைத்திருக்கும்.

கோல்டன் விக்கெட்

160 ரன் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. பின் ஆலன், கான்வே ஆட்டத்தைத் தொடங்கினர். ஃபரூக்கி வீசிய முதல் ஓவர் முதல் பந்தில், பந்து லேசாக காற்றில் ஸ்விங் ஆகி, ஸ்டெம்ப்பை பிடுங்கி எறிந்தது. முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி ஆலன் வெளியேறினார்.

அடுத்து வந்த வில்லிம்யஸன், கான்வேயுடன் சேர்ந்தார். 2வது ஓவரிலேயே முகமது நபி பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஃபரூக்கி வீசிய 3வது ஓவரில் 2வது பந்தில் கான்வே ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 3வது பந்தில் ஜாத்ரனிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 18 ரன்களுக்கு நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து மிட்ஷெல் களமிறங்கினார். ஆனால், இவரும் நிலைக்கவில்லை.

ஃபரூக்கி வீசிய 5-வது ஓவரில், அற்புதமான ஸ்விங் பந்தில் விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து மிட்ஷெல் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் சேர்த்து தடுமாறியது.

 

நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிவு

ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றி! நியூசிலாந்தை வாரி சுருட்டிய பந்துவீச்சாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7-வது ஓவரை ரஷித் கான் வீசினார். முதல் பந்திலேயே வில்லியம்ஸன் ஸ்லிப்பில் நயீப்பிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 33 ரன்களுக்கு நியூசிலாந்து 4வது விக்கெட்டையும் இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ், சாப்மேன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியையும் ரஷித்கான் தனது 2வது ஸ்பெல்லில் பிரித்தார். ரஷித்கான் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தில் சாப்மேன் க்ளீன் போல்டாகி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த பிரேஸ்வெல் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ரஷித் கானுக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கிடைத்தன.

நியூசிலாந்து அணி 43 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியில் பிடியில் இருந்தது. கிளென் பிலிப்ஸ், சான்ட்னர் களத்தில் இருந்தனர். 10-வது ஓவரே முகமது நபி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து பிலிப்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 54 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி நகர்ந்தது.

அடுத்து மாட் ஹென்றி களமிறங்கி, சான்ட்னருடன் சேர்ந்தார். 12வது ஓவரை நபி மீண்டும் வீசினார். இந்த ஓவரின் கடைசிப் பந்தில் சான்ட்னர் கிளீ்ன் போல்டாகி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ரஷித்கான் வீசிய 13-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெர்குஷன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பரூக்கி வீசிய 16-வது ஓவரில் ஹென்றி 12 ரன்னில் கரீமிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழக்க நியூசிலாந்து தோல்வி அடைந்தது.

15.2 ஓவர்களில் 75 ரன்களில் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்து, 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 3.2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ரஷித்கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

AFG vs NZ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கன் வெற்றிக்கான காரணங்கள்

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்கார்கள் குர்பாஸ்(80), ஜாத்ரன்(44), பந்துவீச்சில் ஃபரூக்கி, ரஷித் கான் ஆகியோர்தான். ஃபரூக்கி, கேப்டன் ரஷித் கான் இருவரும் சேர்ந்து நியூசிலாந்து பேட்டிங் முதுகெலும்பை உடைத்து 8 விக்கெட்டுகளை அள்ளினர். ஆப்கானிஸ்தானுக்கு வலுவான ஸ்கோர் கிடைக்கக் காரணமாக அமைந்த குர்பாஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு சிம்மசொப்பனமாக இருந்தது. அதிலும் ஃபருக்கி புதிய பந்தில் இரு போட்டிகளிலும் பிரமாதமாகப் பந்துவீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் முதல் ஓவர், முதல் பந்தில் பின் ஆலனை போல்ட் செய்து ஸ்டெம்ப்பை பறக்கவிட்டார் ஃபருக்கி. ஆலனை ஏமாற்றி, லேசாக ஸ்விங் ஆன பந்து ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது ஃபரூக்கியின் சிறந்த பந்துவீச்சுக்கு உதாரணமாகும்.

இந்த அதிர்ச்சியில் இருந்து நியூசிலாந்து அணி கடைசிவரை மீளவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்த போதே நம்பிக்கை இழந்துவிட்டது. இதைப் பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் தொடர்ந்து நெருக்கடியளித்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியது. ரஷித்கான் வீசிய 9-வது ஓவரில் தொடர்ந்து இரு விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தபோது, தோல்வி உறுதியானது. ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட்டிருந்தால் அது பெரிய தவறாகும்.

நியூசிலாந்து அணியைப் பொருத்தவரை இன்றைய போட்டியில் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் அனைத்திலும் சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது. 3 எளிய கேட்சுகளை கோட்டைவிட்டனர். சில ரன்அவுட்டுகளையும் தவறவிட்டனர். பந்துவீச்சிலும் போல்ட்டைத் தவிர பெரிதாக யாரும் சிறப்பாகப் பந்துவீசவில்லை.

பேட்டிங்கில், கிளென் பிலிப்ஸ்(18), ஹென்றி(12) இருவர் மட்டும்தான் இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். உதிரிகள் 3வது அதிகபட்ச ஸ்கோராக 10 இருந்தது.

AFG vs NZ

பட மூலாதாரம்,GETTY IMAGES

"வெற்றி, தோல்வி முக்கியம் அல்ல"

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறுகையில், “ டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய அணிக்கு எதிராக எங்களின் சிறந்த செயல்பாடாக இதைப் பார்க்கிறோம். அணியின் மகத்தான கூட்டுழைப்பு. குர்பாஸ், இப்ராஹிம் அளித்த தொடக்கம், இந்த விக்கெட்டில் எளிதானது அல்ல. விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 170 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை.

பந்துவீச்சிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, சரியான லென்த்தில் துல்லியமாக பந்துவீசினர். குறிப்பாக, ஃபரூக்கியின் பந்துவீச்சு அற்புதம். எங்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள நியூசிலாந்து பேட்டர்கள் சிரமப்பட்டனர். ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு ரன்னையும் சேமிக்க ஆவேசமாக ஃபீல்டிங் செய்தனர். வெற்றி, தோல்வி என்பது என்னைப் பொருத்தவரை முக்கியமல்ல, எப்படி தயாராகிறோம், எப்படி பங்களிப்பு செய்தோம் என்பதுதான்” எனத் தெரிவித்தார்.

சி பிரிவில் ஆப்கானிஸ்தான் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடத்தில் 5.225 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. அடுத்து ஒரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வென்றாலே வலுவான நிக ரன்ரேட்டால், சூப்பர்-8 சுற்றுக்கு சென்றுவிடும்.

ஆனால், நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் அடைந்த மோசமான தோல்வியால், கடைசி இடத்தில், மைனஸ் 4.200 நிகர ரன்ரேட்டுக்கு சரிந்துவிட்டது. அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று, நிகர ரன்ரேட்டை உயர்த்தாமல் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதிபெறுவது கடினமாகும்.

https://www.bbc.com/tamil/articles/cv228lry2k7o

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் யாரோ கட்சிக்காக வடக்கில் வாக்கு கேட்கிறார்கள், தரகர் வேலை செய்கிறார்கள், அனுர கட்சிக்காக வாக்கு கேட்க ஆயிரம் இளையோர் முன்வருவர், தமிழரசுக்கட்சி விலகாவிட்டால் விலக்கப்படுவர். ஆடியது, அடக்கியது, ஏமாற்றியது போதும். அடங்கும் காலம் வந்துவிட்டது. சம்பந்தர் போனதோடு தமிழருக்கு நல்ல காலம். சுமந்திரன், டக்கிளசு சொல்வார்கள்; தாங்கள் சொல்லித்தான் மயிலிட்டியிலிருந்து ஆமியை அனுர வெளியேற்றினார் என்று. எங்கள் நிலத்தை விட்டதற்கு ஏதோ தர்மம் போடுகிற மாதிரி கதையளப்பர். உண்மையிலேயே ஆமி வெளியேறியிருந்தால்; யாருக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஆரவாரமில்லாமல் நடக்க வேண்டிய மாற்றங்கள் நிறைவேறும்,  யாருக்கும் எதிர்க்க தோன்றாது எதிர்க்கவும் முடியாது. மெல்லென பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சரத், விமல் வீரவன்ச மௌத்தாய் விட்டார்களா?  விமல் வீரவன்ச இரந்த கட்சியில் இருந்திருந்தால் கட்சி வென்றிருக்காது.
    • ஆகா ஆகா மேடையில் இருந்தவரை மேசைக்கு அனுப்பப் போறாங்க. ஊரில் சிலருடன் பேசியபோது என் பி பி யின் போக்கைப் பலரும் முக்கியமாக இளைஞர்கள் விரும்புவதாகவும் அடுத்த தேர்தலில் தமிழ்கட்சிகள் ஒன்றாக இணையாவிட்டால் வடக்கிலேயே 2-3 ஆசனங்களை என்பிபி தூக்கும் என்கிறார்கள்.
    • அப்பாவிகளை பொதுமக்களை கொல்வதால் என்ன பயன்? அரசன் கொன்றால் அரசனைஅல்லவா கொல்ல வேண்டும். எத்தனையோ நாட்களுக்கு முதலே எரிச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் வீதிகளில் உலாவுகிறார்கள்.
    • சாத்தான்... வேதம் ஓதுகின்றது.  எங்களை நம்பட்டாம். 😂 சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன். 
    • மிகபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரேலையே அழித்துவிடுவோம் என்று வீரவசனம் பேசிக்கொண்டு, லெபனானில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைவரா இஸ்ரேல் தூக்கி கொண்டிருக்கும்போது, பேஜர் வாக்கி டாக்கி என்று கற்பனைக்கெட்டாத தொழில்நுட்ப தாக்குதல்  செய்துகொண்டு, பெய்ரூட்வரை போய் விமானதாக்குதல் செய்துகொண்டு இருக்கும்போது  எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுமில்லாமல் மிக இலகுவாக இலக்கு வைக்க கூடிய நகரத்தின் நடுவே உள்ள அவர்களின் தலைமையகத்தில் போய் இருந்திருக்காரே இந்த மூளையை வைச்சுக்கொண்டு எப்படி இஸ்ரேலை வெல்ல போகிறார்கள்? வெறும் அல்லாஹ் அல்லாஹ் என்றால் எதிரிகளை எதிர்கொள்ள முடியாது என்பதை ஹிஸ்புல்லா கமாஸ் தலமைகளின் ஒட்டுமொத்த அழிவு காண்பிக்கிறது. இத்தனைக்கும் காரணம் ஈரான். பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்து இவர்களை உருவாக்கி ரத்தத்தை சூடாக்கி உசுப்பேத்திவிட்டு  இஸ்ரேலை அழிக்கபோகிறோம் என்று பிலிம் காட்டிவிட்டு இவர்களை முன்னே தள்ளிவிட்டு  தலைபோகும் நேரங்களில் சத்தம் போடாமல் தான் ஒதுங்கி கொள்கிறது, தற்போது ஈரானிய ஆன்மீக தலைவரிலிருந்து அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு ஈரான் நகர்த்திவிட்டது என்றும் செய்தி வருகிறது. கமாஸ் ஹிஸ்புல்லா வரிசையில் இனிமே ஹுத்திகள்மேலே இஸ்ரேல் தனது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கலாம். இஸ்ரேலை வெல்ல அல்லாஹ் போதாது இஸ்ரேல்போல அறிவுகூர்மை வேண்டுமென்பதை காலம் இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.