Jump to content

இரண்டாம் பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2024 at 02:18, alvayan said:

கிருபன் உவ்வளவு துல்லியம்...ஆமா...இங்கு சோளங்கன்...(கரண்வாய்தான்)>.கிரிக்கட்டு ரீமுமொன்று  இருந்ததில்லே..அது இப்பவும் இருக்கா..

இப்போது இருக்கின்றதா என்று தெரியவில்லை. எனது பதின்ம வயதுகளின்போது சோளங்கன் ரீமுக்கு விளையாடிய பிரபலமானவர்களை நன்கு தெரியும். ஒருவர் மிக நெருங்கிய நண்பன். 91 இலிருந்து இப்போதும் இலண்டனில் கோடை காலம் என்றால் ஒவ்வொரு ஞாயிறும் கிரிக்கெட் விளையாடுகின்றான்.! அவ்வளவு கிரிக்கெட் பைத்தியம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கர

ரஞ்சித்

காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்

ரஞ்சித்

மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களா

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பயணத்தில் எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி ரஞ்சித்.

வன்னிக்கு நீங்கள் போன இடங்களை எல்லாம் போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து பல வருடங்கள் ஆகின்றது. 2022 இல் கிளிநொச்சி, ஆனையிறவு ஊடாகப் போனபோது மிகவும் மனச்சோர்வு ஏற்பட்டது. எங்கள் பெருமிதங்களையும் சேர்த்து எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்! 

ஆனாலும் ஊருக்குப் போய் முதியவர்களாக எஞ்சி இருக்கும் சொந்தங்களைக் கண்டு பேசியபோதும், பதின்ம வயதில் கிடைத்த நண்பர்களுடன் மனம்விட்டு உரையாடியபோதும் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவில்லை!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

எங்கள் பெருமிதங்களையும் சேர்த்து எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்! 

உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் வாசித்தன் ரகுநாதன்  உங்கள் ஆதங்கம் நினைவுகள் அனைத்தும் அருமை  அடிக்கடி வாருங்கள் இலங்கைக்கு 

Edited by தனிக்காட்டு ராஜா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2024 at 09:17, ரஞ்சித் said:

 

முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும்.

 

உண்மை, நீங்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தையும் கடந்து போயிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த இடத்தைத் சுற்றியுள்ள தேக்கு மரங்களைப் பார்த்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்வு ஒவ்வொரு மரமும் ஒரு மாவீரரது உயிர் என்றே.. 

எனக்கும் உங்களைப் போல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, நீங்கள் போன இடங்களுடன் மணலாறு, தென்னமாவரடி வழியாக திருகோணமலைக்குப் போயிருந்தேன், இந்த இடங்களை எல்லாம் பார்த்த பொழுது, காற்றை சுவாசித்த பொழுது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளால் என்னால் விபரிக்கமுடியாது..

அந்த இடங்களில் மனம் பலரைத் தேடியது.. இல்லை என அறிவுக்குத் தெரியும் ஆனாலும் இப்படி நடந்திருக்குமோ அப்படி இருந்திருப்பார்களோ என்ற எண்ணங்கள் ஏற்பட்டதை தடுக்க முடியவில்லை. 

நீங்கள் உங்களது உணர்வு கலந்து எழுதிய உங்களது பயண அனுபவம், எனது கடந்த அனுபவத்தை மீண்டும் நினைக்கவைத்துள்ளது. 

உங்களது பயண அனுபவத்தையும், நீங்கள் சென்றிருந்த இடங்களில் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களையும் தொடர்பையும் பகிர்ந்தமைக்கு நன்றி. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2024 at 03:57, கிருபன் said:

இப்போது இருக்கின்றதா என்று தெரியவில்லை. எனது பதின்ம வயதுகளின்போது சோளங்கன் ரீமுக்கு விளையாடிய பிரபலமானவர்களை நன்கு தெரியும். ஒருவர் மிக நெருங்கிய நண்பன். 91 இலிருந்து இப்போதும் இலண்டனில் கோடை காலம் என்றால் ஒவ்வொரு ஞாயிறும் கிரிக்கெட் விளையாடுகின்றான்.! அவ்வளவு கிரிக்கெட் பைத்தியம்!

நன்றி கிருபன் ..மூன்று சகோதரர்கள் விளையாடினார்கள்... அதில் ஒருவர் இங்கு கனடாவில் இருகின்றார் ..என்னுடன் பழக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, P.S.பிரபா said:
On 27/1/2024 at 14:17, ரஞ்சித் said:

முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும்.

 

உண்மை, நீங்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தையும் கடந்து போயிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த இடத்தைத் சுற்றியுள்ள தேக்கு மரங்களைப் பார்த்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்வு ஒவ்வொரு மரமும் ஒரு மாவீரரது உயிர் என்றே

கோப்பாயிலிருந்து உரும்பிராய் மருதனாமடம் ஊடாக பயணிக்கும் போது சாலையின் இருபக்கங்களிலும் தேக்கமரங்கள் வரிசையாக காணப்பட்டன.

அதைப்பற்றி கேட்ட போது எல்லாமே பெரிசுகளால் நடப்பட்டவை என்று மச்சான் சொன்னார்.

அவருக்கு பெயரைச் சொல்லி கதைக்க கூட பயமாக இருந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

கோப்பாயிலிருந்து உரும்பிராய் மருதனாமடம் ஊடாக பயணிக்கும் போது சாலையின் இருபக்கங்களிலும் தேக்கமரங்கள் வரிசையாக காணப்பட்டன.

நானும் கண்டிருக்கிறேன்..

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.