Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் கிளேமோர் தாக்குதலில் இரு பொதுமக்கள் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் கிளேமோர் தாக்குதலில் இரு பொதுமக்கள் பலி (மேலதிக இணைப்பு)

வீரகேசரி இணையம்

யாழ் சுன்னாகம் சந்தையில் இன்று காலை 9.50 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரு பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவ

நேற்றைய சம்பவம் குறித்து உதயனில்....

ஆசிரியை உட்பட இரண்டு பொதுமக்கள் சித்தன்கேணியில் கிளைமோருக்குப் பலி! மூன்று படையினர் காயம்

சித்தன்கேணிச் சந்தியில் இருந்து வட் டுக்கோட்டைக்குச் செல்லும் வீதியின் சந்தியில் பிள்ளையார் கோயிலுக்கு சமீப மாக நேற்றுக்காலை 8 மணியளவில் கிளை மோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.இத்தாக்குதலில் சிக்கி இரு பொது மக் கள் மரணமானார்கள். ஒரு பொதுமகன் மற் றும் மூன்று படையினர் காயமடைந்தனர்.அந்தப் பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.கிளைமோர் தாக்குதலையடுத்து படை யினர் வேட்டுக்களைத் தீர்த்தனர். அத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இத்தாக்குதலில் சங்கானை சிவப்பிர காச வித்தியாலய சங்கீத ஆசிரியையான சாரதா பரஞ்சோதி(வயது 42) அந்த இடத் தில் கொல்லப்பட்டார்.மூளாயைச் சேர்ந்த இவர் தமது இரு பிள்ளைகளையும் யாழ்ப்பாணக் கல்லூரி யில் விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தமது கடமையிடத்துக்கு(சங்கானை சிவப் பிரகாச வித்தியாலயத்தை நோக்கி) சென்று கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதலில் சிக்கி மரணமானார்.யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் ஆறு வருடகாலம் சங்கீத விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், பின்னர் சங்கானை சிவப்பிர காசம் வித்தியாலயத்தில் சங்கீத ஆசி ரியராக கடமையாற்றி வந்தார்.மாணவர்களை கொழும்புக்குஅழைத்துச் செல்ல இருந்தார்கொலையுண்ட ஆசிரியை தமது பாட சாலை மாணவர்களை வவுனி யாவில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண மட்ட காவிய கதா நாட்டியப் போட்டிக்கு இன்று அழைத்துச் செல்ல விருந்தார் என்று தெரிவிக்கப்பட் டது.டோகாவில் பணிபுரியும் இவரது கணவர் சமீபத்திலேயே இங்கு வந்து திரும்பினார் என அறியவந்தது.இத்தாக்குதலில் சிக்கிய வட்டுக் கோட்டை பிளவத்தையைச் சேர்ந்த ஸ்ரீகாந்தன் நிசாந்தன்(வயது25) காய மடைந்த நிலையில் சங்கானை ஆஸ் பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழி யில் உயிரிழந்தார்.உடுவில் பிரதேச செயலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணியாற்றும் இவர் மோட்டார் சைக்கி ளில் பணிக்குச் சென்றுகொண்டிருந்த சமயம் இச்சம்பவத்தில் சிக்கி னார்.சம்பவ இடத்திற்குச் சென்ற மல் லாகம் நீதிவான் திருமதி சறோஜினி இளங்கோவன் விசாரணைகளை மேற் கொண்டதுடன் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப் படைக்கு மாறு வட்டுக்கோட்டை பொலீஸா ருக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த சித்தன்கேணியைச் சேர்ந்த எஸ்.இருத யராஜ்(வயது 24) என்பவர் யாழ்.ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியை படையி னர் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத் தினர்.அதன் காரணமாக அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தன. நேற்று நண்ப கலுக்குப் பின்னரே போக்குவரத்து வழமை நிலைக்குத் திரும்பியது.இச்சம்பவம் காரணமாக வலி. மேற்கு பிரதேசத்தில் நேற்றுப் பதற்ற நிலை நிலவியது. (அ1295068)

www.uthayan.com

ஈராக்காக மாறி வரும் யாழ்ப்பாணம்????

Edited by சாணக்கியன்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

2 civilians killed, 30 wounded in bomb blast in Chunnaakam, Jaffna

[TamilNet, Thursday, 27 September 2007, 07:35 GMT]

Two civilians were killed and 30 wounded following an explosion near Chunnaakam market town in Valikaamam in the Jaffna district Thursday around 10:00 a.m. Four policemen were also wounded in the blast, police sources said claiming that a Claymore mine had targeted a police vehicle.

13 civilians with serious wounds were taken to Jaffna hospital. 17 civilians with minor wounds were treated at Thellippazhai hospital.

The blast site has been cordoned off by the military and police and nobody were allowed to reach the site to verify the details of the kind of the blast.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களின் உயிரிழப்பு.. கிளைமோரால் நிகழ்ந்ததா.. துப்பாக்கிச் சூட்டால் நிகழ்ந்ததா..??!

காரணம் இரண்டு சம்பவங்களின் பின்னரும் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இராணுவத்துக்கு தெளிவாகவே தெரியும்.. இவை தொலைதூரக் கருவிகள் மூலம் இயக்கப்படுகின்றன என்று. பிறகென்ன வேண்டி இருக்கு துப்பாக்கிப் பிரயோகம்.

அல்லது இராணுவமே பொதுமக்களை இலக்கு வைத்து இத்தாக்குதல்களை நடத்துகிறதா.. விடுதலைப்புலிகளுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில். புலிகள் சந்தைப் பகுதியில் கிளைமோரை மக்கள் இறக்கும் வகையில் வெடிக்க வைக்க வாய்ப்புக் குறைவாக உள்ளது. அதுவும் மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில். <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன்மாருக்கு வாசிக்க கச்ரமெண்டவடியா திரும்ப நம்ம ஊடகங்களின்ர தலைப்பு செய்தியள தாறன்

ஆசிரியை உட்பட இரண்டு பொதுமக்கள் சித்தன்கேணியில் கிளைமோருக்குப் பலி! மூன்று படையினர் காயம்

http://www.uthayan.com Posted on : Wed Sep 26 9:35:00 2007

2 civilians killed, 30 wounded in bomb blast in Chunnaakam, Jaffna

[TamilNet, Thursday, 27 September 2007, 07:35 GMT]

புலிகள் மீது வெறுப்பு வரவே இப்படி செய்கிறார்கள் சிங்கள இராணுவத்தை பொறுத்த மட்டில் ஒரு கல்லு பல மாங்காய் என்பது தான்...............

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகச் சந்தையில் குண்டு வெடிப்பு! 4 பொதுமக்கள் பலி! 23 பேர் காயம்

யாழ் சுன்னாகச் சந்தை பகுதியில் குண்டு வெடித்ததில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இக்குண்டு வெடிப்பு இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நான்கு சிறீலங்கா காவல்துறையினரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. 23 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து சிறீலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தோர் விபரம்

1.செல்லையா அசோகன் வயது 37 கல்லாரை மல்லாகம்.

2.நாகமுத்து ராசையா வயது 70 அளவெட்டி

3.சீனியர் சண்முகராஜா வயது 49

படுகாயமடைந்தோர் விபரம்

1. ஜே.ஜெகதீஸ்வரன் வயது 16

2. ஜீவன் வயது 34

3. விசாலாட்சி

4. நளாயினி வயது 45 அளவெட்டி வடக்கு

5. காசிப்பிள்ளை வயது 90 கண்ணகி அம்மன் கோவிலடி அளவெட்டி

6. நந்தகுமார் அளவெட்டி

7. தமிழ்ச்செல்வன் வயது 35அளவெட்டி மேற்கு

8. கே.அமுதராணி வயது 42 தொல்புரம் கிழக்கு

9. ஜீ.பொன்னையா வயது 63 வயது

10. எஸ்.குணமணிதேவி வயது 50

11. வீ.கமலவாஸ் வயது 48

12. ரீ.நாகேஸ்வரி வயது 46

13. ரீ.சர்மிளா வயது 16

14. ரீ.சீதாலக்ஷ்மி வயது 57

15. ஏ.காந்திமதி வயது 43

16. சின்னத்தம்பி செல்லத்துரை வயது 45

17. இராசையா சிறிசண்முகராஜா வயது 40

-பதிவு

(5 ஆம் இணைப்பு)யாழில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்றும் நால்வர் சுட்டுப் படுகொலை- 20 பேர் காயம்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 20 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சுன்னாகம் பொதுச்சந்தையின் வெளிப்புறமாக வாகனத்தரிப்பிடம் அமைந்திருக்கும் பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:40 மணியளவில் கிளைமோர் தாக்குதலில் சிக்கி இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.

http://www.eelampage.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.