Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக் – பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடம்!

Paris Olympics 2024 live medal table: Japan in the lead with most golds |  Euronews

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் 6 தங்கங்களை வென்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

ஜப்பான் இதுவரை 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக 12 பதக்கங்களை வென்றுள்ளது.

Paris 2024 Olympics: Australia medals tally and winners list - full table

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரான்ஸ் இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

சீனா 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாமிடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா 5 தங்கம், 4 வெள்ளி அடங்கலாக 9 பதக்கங்களை வென்றுள்ளது.

இதுதவிர தென்கொரியா 5ஆம் இடத்திலும், அமெரிக்கா 6ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Team USA favored to lead Olympic medal count in Paris – NBC New York

https://thinakkural.lk/article/307014

  • Replies 70
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது!!! ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு  வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக

  • இணையவன்
    இணையவன்

    எல்லா நாடுகளிலும் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும்போது வெளிநாட்டிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் அவர்களுடன் வரும் பயிற்றுனர்கள் சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் வரவேற்புப் அன்பளிப்புப் பொத

  • ஏராளன்
    ஏராளன்

    பாரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லவுள்ள புலம்பெயர் இலங்கையர் தர்ஷன் செல்வராஜா 10 MAY, 2024 | 01:11 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்ட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் நீச்சல் : நீச்சல் போட்டியின் முதலாம் சுற்றில் இலங்கையின் கங்கா முன்னிலை

Published By: DIGITAL DESK 7   29 JUL, 2024 | 04:34 PM

image
 

(ஆர்.சேதுராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை கங்கா செனவிரத்ன, தனது குழுவில் முதலிடம் பெற்றார்.

பாரிஸில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் மல்லாக்கு நீச்சல் முதல் சுற்றுப்போட்டியில் கங்கா செனவிரத்ன பங்குபற்றினார். முதலாவது குழுவில் இடம்பெற்ற கங்கா, 1:04.26 எனும் நேரப்பெறுதியுடன் அக்குழுவில் முதலிடம் பெற்றார்.  

எனினும், அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு இந்நேரப் பெறுதி போதுமானதாக அமையவில்லை.  16 பேர் மாத்திரமே அரை இறுதிக்கு தெரிவுசெய்யப்படும் நிலையில் கங்கா 30 ஆவது இடத்தையே பெற்றார்.

Ganga_2.jpg

Ganga_236.jpg

https://www.virakesari.lk/article/189705

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் 2024: இந்தியாவிற்கு இரண்டாம் பதக்கம்- வரலாறு படைத்த மனு பாக்கர்

மனு பாக்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி, கொரிய அணியை வீழ்த்தி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா 16-10 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் மனு பாகர்- சரப்ஜோத் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியான லீ வான்ஹோ - ஒ யே-ஜின்னை வீழ்த்தியது.

ஒ யே-ஜின்தான் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில் தங்கம் வென்ற வீரங்கனையாவார்.

இது 2024 ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள இரண்டாம் பதக்கமாகும்.

இந்த பதக்கத்தின் மூலம் ஒலிம்பிக்கில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத அரிய சாதனையை மனு பாகர் படைத்துள்ளார்.

இதன்மூலம், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை மற்றும் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மனு பாகர்.

இதற்கு முன்பு சனிக்கிழமை நடந்த (ஜூலை 28) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசியின் வளரும் வீராங்கனை-2020 விருது வென்றவர்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர் 2020-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'வளரும் வீராங்கனை'க்கான விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசியின் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வீராங்கனை விருதுகள் பட்டியலில் வளரும் இளம் வீராங்கனை ஒருவர் 'பிபிசி வளரும் வீராங்கனை' விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்.

சிறந்த இந்திய வீராங்கனைகளையும் அவர்களது சாதனைகளையும் கௌரவிப்பதே 'பிபிசி சிறந்த இந்திய வீராங்கனை' விருதின் நோக்கம். அத்துடன், வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதிப்பதும், அவர்களது சாதனைப் பயணத்தை உலகிற்கு தெரியப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.

 
பிபிசியின் வளரும் வீராங்கனை

16 வயதில் 2 தங்கம் வென்ற மனு பாக்கர்

ஹரியானா ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு. இவரது தாய் பள்ளி ஆசிரியை, தந்தை மரைன் என்ஜினியர்.

2018-இல் மனு மெக்சிகோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பு (ISSF) போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்றார். பிறகு இரண்டாவது தங்கப்பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் (Mixed) வென்றார் மனு.

16 வயதில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் மனு. இந்தச் சாதனையைப் படைத்த இளம் வீராங்கனை மனு ஆவார்.

அப்போதைய போட்டிக்குப் பிறகு பிபிசியின் நிருபர் சரோஜ் சிங், மனுவின் தந்தை ராம் கிஷன் பாக்கரிடம் பேசினார்.

இந்தக் கலந்துரையாடலில், தான் ஒரு மரைன் என்ஜினீயர் என்றும், அந்த வேலையில் இருந்து நின்றுவிட்டதாகவும் கூறினார் ராம் கிஷன்.

மகளுக்காக வேலையை விட்ட தந்தை

பள்ளி பயிலும் போது முதல் முறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட மனு, துல்லியமாகக் குறிவைத்து சுட்டதை கண்டு ஆசிரியர்கள் வியந்தனர் என மனுவின் தந்தை ராம் கிஷன் கூறுகிறார்.

பிறகு, பயிற்சி மேற்கொண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளால் பங்கெடுக்கத் துவங்கினார்.

ஆனால், மனு உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது பிரச்னையாக இருந்தது. மேலும், அப்போது அவர் வாகனம் ஓட்டும் உரிமத்தைப் பெறுவதற்கான வயதை எட்டவில்லை. ஆகவே, அவர் போட்டி நடக்கும் இடங்களுக்குத் தனியாக வாகனம் ஓட்டிச் செல்ல இயலவில்லை.

எனவே, மகளின் கனவை நினைவேற்ற மனுவின் தந்தை ராம் கிஷன் தனது வேலையை விட்டு நின்றுவிட்டார்.

வேலையை ராஜினாமா செய்த பிறகு, மனு பாக்கரை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார் ராம் கிஷன்.

"துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்குபெற நிறைய பணம் செலவாகும். ஒரு பிஸ்டலின் விலை 2 லட்சம் ரூபாய். இதுவரை நாங்கள் மனுவுக்காக 3 துப்பாக்கிகள் வாங்கியுள்ளோம். மனுவின் விளையாட்டுக்காக மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தோம்," என்று ராம் கிஷன் பாக்கர் கூறுகிறார்.

 
மனு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிஸ்டல் உரிமம் பெறப் போராடிய மனு

இந்தியாவுக்காக மெக்சிகோவில் 2 தங்கப்பதக்கம் வென்ற போது மனு பாக்கர் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் பெற இரண்டரை மாதங்கள் காத்திருந்துள்ளார்.

பொதுவாக, வீரர்கள் ஒரே வாரத்தில் இதற்கான உரிமம் பெறுவர்.

அந்த நிகழ்வினை நினைவுகூர்ந்து பெரிய ராம் கிஷன் பாக்கர், "2017-ஆம் ஆண்டு மே மாதம், வெளிநாட்டில் இருந்து ஒரு பிஸ்டலை இறக்குமதி செய்ய விண்ணப்பித்திருந்தோம். ஆனால், எங்கள் விண்ணப்பத்தை ஜாஜர் மாவட்ட நிர்வாகம் நிராகரித்தது,” என்றார்.

"பின்னர் இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. அப்போது உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் ‘தற்காப்புக்காக’ என்று காரணம் குறிப்பிடப்பட்டது தெரியவந்தது,” என்றார்.

இதன் பிறகே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயம் குறித்து விசாரித்து, 7 நாட்களில் உரிமம் வழங்கப்பட்டது.

மனு பாக்கரின் வகுப்பு தோழர்கள், இவரை ‘ஆல்-ரவுண்டர்’ என அழைத்து வந்துள்ளனர். ஏனெனில், மனு பாக்கர் குத்துச்சண்டை, தடகளம், ஸ்கேட்டிங், கராத்தே, ஜூடோ என பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து வந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஒலிம்பிக் நீச்சல் : நீச்சல் போட்டியின் முதலாம் சுற்றில் இலங்கையின் கங்கா முன்னிலை

Published By: DIGITAL DESK 7   29 JUL, 2024 | 04:34 PM

image
 

(ஆர்.சேதுராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை கங்கா செனவிரத்ன, தனது குழுவில் முதலிடம் பெற்றார்.

பாரிஸில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் மல்லாக்கு நீச்சல் முதல் சுற்றுப்போட்டியில் கங்கா செனவிரத்ன பங்குபற்றினார். முதலாவது குழுவில் இடம்பெற்ற கங்கா, 1:04.26 எனும் நேரப்பெறுதியுடன் அக்குழுவில் முதலிடம் பெற்றார்.  

எனினும், அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு இந்நேரப் பெறுதி போதுமானதாக அமையவில்லை.  16 பேர் மாத்திரமே அரை இறுதிக்கு தெரிவுசெய்யப்படும் நிலையில் கங்கா 30 ஆவது இடத்தையே பெற்றார்.

Ganga_2.jpg

Ganga_236.jpg

https://www.virakesari.lk/article/189705

 

வாழ்த்துக்க‌ள்.......................

  • கருத்துக்கள உறவுகள்

1f13f741-8439-42ca-84fc-b2aa50fec708.jpg

ஒலிம்பிக்  போட்டியை நிறுத்த தொடரும் சதி திட்டம் !

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான குறித்த போட்டியன்று காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டிருச்தது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படடிருந்த நிலையில்,  பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி தெரிவிக்கையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதான நகரமாக மார்சில் [Marseille] உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது.

https://athavannews.com/2024/1394152

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌மேக்கா பெண் வேக‌மா ஓடினா கால‌ம் போய் 

 

இப்ப‌ இள‌ம் அமெரிக்க‌ன் பெண் மின்ன‌ல் வேக‌த்தில் ஓடுகிறா................................இவான்ட‌ அழ‌கு என‌க்கு பிடிச்சு இருக்கு.....................என‌க்கு ஏற்ற‌ ஜோடி💕 🥰😍.........................

 

@ரசோதரன் 

 

பெய‌ர்   sha carri richardson இவா கூட‌ ஓடி ஜ‌மேக்கா shelly ann தோத்த‌வா . வார‌ கிழ‌மை இவ‌ர்க‌ளுக்கான‌ ஓட்ட‌ப் போட்டி 

 

அமெரிக்கா sha carri richardson ப‌த‌க்க‌ம் வெல்வ‌து உறுதி............

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌மேக்கா பெண் வேக‌மா ஓடினா கால‌ம் போய் 

இப்ப‌ இள‌ம் அமெரிக்க‌ன் பெண் மின்ன‌ல் வேக‌த்தில் ஓடுகிறா................................இவான்ட‌ அழ‌கு என‌க்கு பிடிச்சு இருக்கு.....................என‌க்கு ஏற்ற‌ ஜோடி💕 🥰😍.........................

 

🤣.....

மோகம் முப்பது, ஆசை அறுபது....... இரண்டும் முடிய, இவவிடம் இருந்து ஓடியும் தப்ப முடியாது........

காசிக்கு தான் போனாலும், எங்களுக்கு முன்னேயே அங்கே ஓடிப் போய் நிற்பார், 'வா ராசா, வா.......' என்று.....

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

🤣.....

மோகம் முப்பது, ஆசை அறுபது....... இரண்டும் முடிய, இவவிடம் இருந்து ஓடியும் தப்ப முடியாது........

காசிக்கு தான் போனாலும், எங்களுக்கு முன்னேயே அங்கே ஓடிப் போய் நிற்பார், 'வா ராசா, வா.......' என்று.....

அமெரிக்கா ம‌ற்றும் அவுஸ்ரேலியா திற‌மையான‌ பெண்க‌ள் விளையாட்டில் சாதிச்ச‌தை பார்த்து ர‌சிக்க‌லாம்

ஆனால் இவ‌ர்க‌ள் கூட‌ பெண்ண‌ பெண் திரும‌ண‌ம் செய்து கொள்வ‌து தான் அதிக‌ம்...................

 

 

ம‌க‌ளிர் கிரிக்கேட்

ம‌க‌ளிர் வாஸ்கேட்வோல்

 

இந்த‌ இர‌ண்டு விளையாட்டில் திற‌மையான‌ அழ‌கான‌ பெண்க‌ள் பெண்க‌ளையே திரும‌ண‌ம் செய்யின‌ம்.......................அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் தான் கூட‌...................பார்க்க‌ அசிங்க‌மாய் இருக்கும்😁......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக பாரிஸில் அரங்கேறும் 5 புதுமைகள்

2024 ஒலிம்பிக் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 ஜூலை 2024

உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் நகரில் களை கட்டியுள்ளது. இதில் குறைந்தது 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாரிஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒரு வரலாற்று உறவைக் கொண்டுள்ளது. 1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் தான் நடந்தன.

நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில், முதன்முறையாக நடைபெறும் ஐந்து விஷயங்கள் என்ன?

2024 ஒலிம்பிக் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெண் மற்றும் ஆண் விளையாட்டு வீரர்களுடன் சம எண்ணிக்கையில் பங்குபெறுகின்றனர்

1. பாலின சமத்துவம் 50 - 50

“பாரிஸ் நகரில் நடக்கும் 2024-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளில், பெண் மற்றும் ஆண் விளையாட்டு வீரர்கள் சம எண்ணிக்கையில் பங்குபெறுகின்றனர். விளையாட்டுத் துறையில் எண் சார்ந்த பாலின சமத்துவத்தை அடையும் முதல் ஒலிம்பிக் போட்டியாக இருக்கும்."

இதைச் சொன்னது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach). இந்த மைல்கல்லை "ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் பொதுவாக விளையாட்டிலும், பெண்களின் வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று," என்று அவர் விவரித்தார்.

ஏதென்ஸில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1900-ஆம் ஆண்டில் பாரிஸில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில்தான் முதன்முறையாகப் பெண்கள் கலந்துகொண்டனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில், மொத்த பங்கேற்பாளர்களில் பெண்கள் 2.2% மட்டுமே பெண்கள் என்று உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது.

மேலும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், விளையாட்டுகளில் இருந்த ஆணாதிக்கம், பெண்களின் பங்கேற்பை கோல்ஃப் மற்றும் வில்வித்தை போன்ற மிகச் சில விளையாட்டுகளுக்குள் சுருக்கியது. ஆனால் ஆலிஸ் மில்லியட் (Alice Milliat ) வந்ததும் எல்லாம் மாறியது .

1884-இல் பிரான்சில் பிறந்த இவர் ஒரு படகு செலுத்தும் வீராங்கனை. இவர் பெண்கள் தடகள நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒலிம்பிக்கிற்கான பிரசாரத்தை முன்னெடுத்தார்.

இது எளிதாக இருக்கவில்லை, ஆனால் அவர் தோற்றுவித்த ‘ஃபெடரேஷன் ஸ்போர்ட்டிவ் ஃபெமினைன் இன்டர்நேஷனல்’ (FSFI) அமைப்பானது இந்த நீண்ட பாதையில் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.

2024 ஒலிம்பிக் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தொடக்க அணிவகுப்பு 6 கி.மீ வரை சென் நதியைக் கடந்தது.

2. திறந்த வெளியில் தொடக்க விழா

வரலாற்றில் முதல் முறையாக ஒரு மைதானத்தில் வைத்து ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நடத்தப்படவில்லை. அது பாரிஸின் சென் நதியில் நடத்தப்பட்டது.

இதற்காக, சுமார் 200 தேசிய பிரதிநிதிகளின் அணிவகுப்பு படகுகளில் நடந்தது. அது விளையாட்டு வீரர்களை ஆற்றின் வழியாகக் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அழைத்துச் சென்றது.

தொடக்க அணிவகுப்பு 6 கி.மீ வரை சென் நதியைக் கடந்தது. நதியின் இருகரைகளிலும் 3 லட்சம் மக்கள் இதைக் கண்டுகளித்தனர்.

இது பாரிஸின் பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்காவான ‘ஜார்தாங்க் தே பிளாண்டஸுக்கு’ அடுத்துள்ள ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கியது. நகரின் மையத்தில் உள்ள இரண்டு தீவுகளான ஈல் சாங் லூயிஸ் மற்றும் ஈல் த லா சிதே ஆகியவற்றைச் சுற்றிலும், ஒரு டஜன் பாலங்கள் மற்றும் நடைபாதைகளின் கீழ் சென்றது.

விழாவின் நிறைவு நிகழ்ச்சி புகழ் பெற்ற ட்ரோகாடெரோ பகுதியில் நடந்தது.

2024 ஒலிம்பிக் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2018-ஆம் ஆண்டில் பியூனர்ஸ் அயர்ஸ் யூத் ஒலிம்பிக்கில், பிரேக் டான்ஸ் அதன் ஒலிம்பிக் அறிமுகத்தை நிகழ்த்தியது

3. புதிய விளையாட்டு - பிரேக் டான்ஸ்

‘பிரேக்கிங்’ அல்லது ‘பிரேக் டான்ஸின்’ தோற்றம் 1970-களில் துவங்குகிறது. அப்போது நியூயார்க்கின் பிராங்க்ஸ் சுற்றுப்புறத்தில், ஆப்பிரிக்க-அமெரிக்கச் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அக்ரோபாட்டிக் அசைவுகளுடன் நடனமாடுவதன் மூலம் விருந்துகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இது ஹிப் ஹாப் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

பிரபலமான பிரேக் டான்ஸ் போர்களில் DJ மற்றும் MC இருப்பது (போட்டிகளின் மாஸ்டர்கள்) இன்றியமையாதது. இதில் இளைஞர்கள் வட்டமாக நின்றுகொண்டு, ஒவ்வொருவராக மாறி மாறித் தங்களின் சிறந்த நடனத்தை ஆடுகிறார்கள்.

2018-ஆம் ஆண்டில், பியூனர்ஸ் அயர்ஸ் யூத் ஒலிம்பிக்கில், பிரேக் டான்ஸ் அதன் ஒலிம்பிக் அறிமுகத்தை நிகழ்த்தியது.

இப்போது, தடகளம் மற்றும் நகர்ப்புற நடனம் ஆகியவற்றின் கலவையால், இது பாரிஸின் பெரிய மேடையில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

தனி நபர்களுக்கிடையே போட்டி நடைபெறும். காற்றாலைகள் போன்ற நடனங்கள், ஆறு படிகள், மற்றும் பிரபலமான முடக்கம் போன்ற நகர்வுகள் உட்பட, டி.ஜே. டிராக்குகளை பிரேக் டான்சர்கள் மேம்படுத்துவார்கள்.

2024 ஒலிம்பிக் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

4. கயாக் கிராஸ் - புதிய விளையாட்டு அறிமுகம்

கயாக் கிராஸ் என்பது ‘ஸ்லாலோம் கேனோயிங்’கின் ஒரு பகுதியாகும். இது 1972-ஆம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் அறிமுகமானது.

பெண் மற்றும் ஆண் பிரிவைக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டில், வீரர்கள் விரைவாக மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் எதிராகவும் போட்டியிடுவார்கள்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, கயாக் கிராஸ் வேறு எந்த நிகழ்வையும் போன்றதல்ல.

“முதலில், நான்கு துடுப்பு வீரர்கள் ஒரே நேரத்தில் போட்டியிடுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக, தண்ணீருக்கு மேல் வைக்கப்பட்டுள்ள வளைவில் பந்தயத்தைத் தொடங்குகிறார்கள்," என்கிறது இணையதளம்.

சமிக்ஞை கொடுக்கப்பட்டவுடன், அவர்கள் அதைத் தாண்ட வேண்டும். போட்டி ‘அதிகபட்சம் ஆறு வாயில்கள் கீழ்நோக்கியும், இரண்டு மேல்நிலை வாயில்கள் கொண்ட ஒரு கால்வாயில்’ நடைபெறும்.

பாரிஸில், மற்ற பாரம்பரிய விளையாட்டுகளிலும் புதுமை இருக்கும்.

1) தடகளம்: ஆடவர் 50 கி.மீ நடை போட்டி கிடையாது. அதற்குப் பதிலாக, கலப்பு ரிலே நடைபயண மாரத்தானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தடகள வீரர்கள் நான்கு மாற்று நிலைகளில் கடப்பார்கள்.

2) குத்துச்சண்டை: பெண்களுக்கு ஒரு புதிய எடைப்பிரிவு கூடுதலாகவும், ஆண்களுக்கு ஒரு எடைப்பிரிவு குறைவாகவும் இருக்கும். மொத்தத்தில், முறையே ஆறு மற்றும் ஏழு பிரிவுகள் உண்டு.

3) படகோட்டுதல்: இரண்டு புதிய போட்டிகள் இருக்கும்: iQFOil - இது விண்ட்சர்ஃபிங் துறையில் RS:X-க்கு பதில் இருக்கும். மற்றொன்று கைட்போர்டிங் - இது சர்ஃபிங், விண்ட்சர்ஃபிங், மற்றும் பாராகிளைடிங் ஆகியவற்றின் கூறுகளை ஒன்றிணைக்கிறது.

4) கைப்பந்து: முந்தைய ஒலிம்பிக் போட்டிகள் போலல்லாமல், அணிகள் நான்கு பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடும்.

 
2024 ஒலிம்பிக் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 95% உள்கட்டமைப்பு தற்காலிகமானது அல்லது ஏற்கனவே உள்ளது

5. ‘100% புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ பயன்பாடு

முந்தைய ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒப்பிடும் போது, இந்த ஒலிம்பிக்கின் கார்பன் உமிழ்வை பாதியாகக் குறைக்க ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

"இது பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்துடன் இணைந்த முதல் ஒலிம்பிக் போட்டி," என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் குறிப்பிடுகிறது.

இந்த நோக்கத்திற்காக, ஒலிம்பிக் வசதிகளை, பொது மின்சார வலையமைப்பு மூலம் இயக்க அனுமதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

"மின்சார விநியோக வலையமைப்புடன் இணைக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் வழங்க, ஆறு காற்றாலைகள் மற்றும் இரண்டு சோலார் பூங்காக்களில் இருந்து 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை 2024 ஒலிம்பிக் போட்டி பயன்படுத்துகிறது," என்று பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் இணையதளம் கூறுகிறது.

எரிசக்தி நிறுவனமான EDF, விளையாட்டு அரங்குகளில் பயன்படுத்தும் அதே அளவு மின்சாரத்தை இந்த கிரிட்டிற்கு வழங்கும். இந்த அணுகுமுறை விளையாட்டு வரலாற்றில் முதல்முறை பின்பற்றப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, "ஸ்டேட் த பிரான்சில் நடக்கும் போட்டிகளுக்கு டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நெட்வொர்க் மூலம் நேரடியாக மின்சாரம் வழங்கப்படும்."

விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தும் பிரான்ஸின் பாரம்பரியத்தால், ஏற்கனவே பல மைதானங்கள் அங்கு உள்ளன. எனவே, "பாரிஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் 95% உள்கட்டமைப்பு தற்காலிகமானது அல்லது ஏற்கனவே உள்ளது" என்று அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் பல மாற்றங்கள் தெரிகின்றன. 

வழமையாக தங்கங்களை அள்ளும் அமெரிக்கர்கள் இந்த தடவை பின்னிற்கின்றார்கள். 

நோர்வே நாட்டுக்கு இன்னும் ஒரு பதக்கம்தானும் கிடைக்கவில்லை. 

பிரான்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றாலும் ஐரோப்பிய நாடுகள் சிறப்பாக பங்கேற்பதாக தெரியவில்லை. பிரான்ஸ் மட்டும் விதிவிலக்காக உள்ளது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

இந்த தடவை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் பல மாற்றங்கள் தெரிகின்றன. 

வழமையாக தங்கங்களை அள்ளும் அமெரிக்கர்கள் இந்த தடவை பின்னிற்கின்றார்கள். 

நோர்வே நாட்டுக்கு இன்னும் ஒரு பதக்கம்தானும் கிடைக்கவில்லை. 

பிரான்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றாலும் ஐரோப்பிய நாடுகள் சிறப்பாக பங்கேற்பதாக தெரியவில்லை. பிரான்ஸ் மட்டும் விதிவிலக்காக உள்ளது. 

 

அண்ணா இன்னும் விளையாட்டு முடிய‌ வில்லை.................ஒலிம்பிக் விடிவில் தெரியும்......................

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வீரப் பையன்26 said:

அண்ணா இன்னும் விளையாட்டு முடிய‌ வில்லை.................ஒலிம்பிக் விடிவில் தெரியும்......................

ஓட்டங்கள், எல்லாம் இனித்தான். ஆனாலும் வழமைபோல் தங்கங்களை அள்ளுவார்கள் என நான் நினைக்கவில்லை. பார்ப்போம். வழமைபோல் நீச்சலில் இந்த தடவை சோபிக்கவில்லை. இது தங்கங்கள் எண்ணிக்கையில் பின்னடைவை கொண்டு வரும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: தடகளத்தில் புதிய சாதனைகள் படைப்பது ஏன் அரிதாகிவிட்டது?

யாரோஸ்லாவா மஹுசிக்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஜூலை 7 அன்று பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் யுக்ரேனின் யாரோஸ்லாவா மஹுசிக் புதிய உலக சாதனை படைத்தார்.
7 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேன் வீராங்கனை யாரோஸ்லாவா மஹுசிக், ஜூலை மாதம் பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் 37 ஆண்டுகளாக இருந்த சாதனையை முறியடித்து ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படும் வீராங்கனைகளில் அவரும் ஒருவர். விளையாட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, தடகளத்தில் அவர் புரிந்த சாதனை ஒரு தனித்துவமான வெற்றிக் கதை. ஏனெனில் தடகளத்தில் பெரும்பாலான உலகச் சாதனைகள் 1980களில் தான் முறியடிக்கப்பட்டன.

மஹுசிக்கின் வரலாற்று சாதனை
ஸ்டெஃப்கா கோஸ்டாடினோவா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,1987இல் ரோம் நகரத்தில், பல்கேரியாவின் ஸ்டெஃப்கா கோஸ்டாடினோவா 2.09 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படைத்தார்.

உலக சாம்பியனான யாரோஸ்லாவா மஹுசிக் (22 வயது) ஜூலை 7 அன்று பாரிஸ் டயமண்ட் லீக்கில் 2.10 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படைத்தார். இதற்கு முன் 1987இல் ரோம் நகரத்தில், பல்கேரியாவின் ஸ்டெஃப்கா கோஸ்டாடினோவா 2.09 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படைத்தார்.

மஹுசிக்கின் புதிய சாதனையை ‘வரலாற்றுச் சாதனை’ என்று விவரித்துள்ளார் கோஸ்டாடினோவா.

“காரணம், 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, மனித திறன்களுக்கு வரம்பு இல்லை என்பதற்கும், எப்போது வேண்டுமானாலும் தடகளச் சாதனைகள் முறியடிக்கப்படலாம் என்பதற்கும் இது ஆதாரமாக விளங்கும்” என்கிறார் கோஸ்டாடினோவா.

மஹுசிக், 2022இல் யுக்ரேனில் உள்ள தனது சொந்த ஊரான நிப்ரோவை விட்டு வெளியேறினார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு சில வாரங்களுக்குப் பிறகு அவர் தனது பெற்றோரைப் பிரிந்தார்.

நிப்ரோவிலிருந்து செர்பியாவின் பெல்கிரேடுக்கு, 2,000 கிமீ பயணம் செய்து மூன்று நாட்களில் சென்றடைந்தார். உலக உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் 2.02 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

மஹுசிக், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் யுக்ரேன் நாட்டிற்காக தங்கம் வெல்லும் முனைப்புடன் இருக்கிறார்.

தடகளத்தில் முந்தைய சாதனைகள்

உசேன் போல்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக வரலாற்றின் அதிவேகமாக ஓடக்கூடிய மனிதர் உசைன் போல்ட். 2008ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 9.6 வினாடிகளுக்குள் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 9.58 வினாடிகளில் இந்த சாதனையை அவர் படைத்தார்.

கென்யாவின் ஃபெயித் கிபிகோன், 1,500 மீட்டர் மற்றும் ஒரு மைல் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் 2024 மற்றும் 2023இல் உலக சாதனை படைத்தவர்.

பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (Triple Jump) போட்டியில் வெனிசுவேலாவின் யூலிமர் ரோஜாஸ் 15.74 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.

ஆனால் பல ஆண்டுகளாக உடைக்க முடியாத பெரும்பாலான சாதனைகள் 80களின் பிற்பகுதியில் தான் படைக்கப்பட்டன என்றும், அவை "ஊக்கமருந்து குறித்த சர்ச்சைகள் பிரபலமாக இருந்தபோது படைக்கப்பட்டன” என்றும் பத்திரிகையாளர் மற்றும் இப்போது யுக்ரேனிய ஆயுதப் படைகளின் ராணுவ அதிகாரியாக இருக்கும் யூரி ஒனுஷ்செங்கோ கூறுகிறார்.

 

ஊக்க மருந்து குற்றச்சாட்டுகள்

யூலிமர் ரோஜாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (Triple Jump) போட்டியில் யூலிமர் ரோஜாஸ் 15.74 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.

"பல விளையாட்டு வீரர்கள் ஹார்மோன் மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளின் கலவைகளை எடுத்துக் கொண்டனர். 35-40 ஆண்டுகளுக்குப் பிறகும், விளையாட்டு, ஊட்டச்சத்து மற்றும் பயிற்சி ஆகியவற்றில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூட, இக்கால விளையாட்டு வீரர்களால் அந்த சாதனைகள் பலவற்றை உடைக்க முடியவில்லை.” என்கிறார் சஃபோல்க் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி அறிவியல் பேராசிரியர் ஜான் ப்ரூவர்.

"அந்த சகாப்தத்தில் படைக்கப்பட்ட பல சாதனைகள், செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளின் உதவியுடன் படைக்கப்பட்டவை என்று ஓரளவு உறுதியாகச் சொல்லலாம். அப்போது அந்த மருந்துகள் சட்டப்பூர்வமாக கிடைத்தன, ஆனால் இப்போது அவை சட்டவிரோதமானவை" என்று ஜான் கூறுகிறார்.

"போதை மருந்து சோதனை மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு இப்போது மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமாக தேசிய ஊக்கமருந்து நிறுவனம் இருக்கும், இது உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் (WADA) வழிகாட்டுதலின் கீழ் செயல்படும்," என்று அவர் கூறுகிறார்.

மரிட்டா கோச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மரிட்டா கோச் 1985ஆம் ஆண்டு, 400 மீட்டர் ஓட்டத்தை 47.6 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.

கிழக்கு ஜெர்மன் தடகள வீராங்கனையான மரிட்டா கோச் 1985ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, 400 மீட்டர் ஓட்டத்தை 47.6 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடந்த உலகக் கோப்பையில் படைக்கப்பட்ட கோச்சின் சாதனை பல விவாதங்களுக்கு வித்திட்டது. முக்கியமாக அந்தச் சாதனையை யாராலும் நெருங்க முடியவில்லை. கிழக்கு ஜெர்மனி தனது விளையாட்டு வீரர்களுக்கு முறையாக ஊக்கமருந்து அளிக்கிறது என பேசப்பட்ட காலத்தில் கோச் போட்டியிட்டார்.

இருப்பினும், கோச் ஒருபோதும் போதைப்பொருள் சோதனையில் தோல்வியடையவில்லை. மேலும் தான் எந்த தவறும் செய்ததில்லை என்பதை அவர் உறுதியாகக் கூறி வந்தார்.

புளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை புளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னர்

அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை புளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னர், 1988ஆம் ஆண்டு பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் உலக சாதனைகளை படைத்தார். 1988 கோடைகால ஒலிம்பிக்கில், 100 மீட்டர் இறுதிப் போட்டியில் 10.54 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 200 மீட்டர் அரையிறுதியில் 21.56 வினாடிகளில் ஓடிக் கடந்து உலக சாதனை படைத்தார்.

பின்னர் இறுதிப்போட்டியில் தனது சொந்த சாதனையை அவரே முறியடித்து, 21.34 வினாடிகளில் வெற்றி பெற்றார்.

அந்த இரண்டு சாதனைகளும் இன்றும் முறியடிக்கப்படவில்லை.

கிரிஃபித் ஜாய்னரின் வியத்தகு வெற்றிகளுக்கு ஊக்க மருந்துகள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் தொடர்ந்து ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார், குறிப்பாக 1988இல் மட்டும் 11 முறைகள் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

நீளம் தாண்டுதலில் பெண்களின் உலக சாதனையும் முறியடிக்கப்படாமல் உள்ளது. 1988ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி லெனின்கிராட்டில் 7.52 மீட்டர் உயரம் தாண்டிய முன்னாள் சோவியத் யூனியனின் கலினா சிஸ்டியாகோவா இதைப் படைத்தார்.

 

மனித உடலின் வரம்புகள்

மனித உடலின் வரம்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேராசிரியர் ஜான் ப்ரூவரின் கூற்றுப்படி, உலக தடகளத்தில் சாதனைகளை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருகிறது.

"பல ஆண்டுகளாக, ஒவ்வொரு நிகழ்விலும், போட்டியாளர்களின் செயல்திறன்கள் மேம்பட்டுள்ளன. ஆனால் இறுதியில், மனித உடல் அதன் செயல்திறனின் வரம்பை எட்ட தான் செய்யும்," என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "காலப்போக்கில் நாம் பார்த்தது என்னவென்றால், சமயங்களில் ஒப்பீட்டளவில் செயல்திறன் அதிகரித்தாலும், மனித உடல் அதன் வரம்பை அடையும்போது தவிர்க்க முடியாத வகையில் மனித செயல்திறன் படிப்படியாக சரிய ஆரம்பிக்கும்."

"இருப்பினும் பயிற்சி, விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து நிகழ்வுகளிலும் நாம் தொடர்ந்து செயல்திறன் முன்னேற்றங்களை எதிர்பார்ப்போம் என்று நினைக்கிறேன். இருப்பினும், முன்னேற்றத்தின் அளவு படிப்படியாக குறையும். பல விளையாட்டுகளில் நாம் ஏற்கனவே அதைப் பார்த்து வருகிறோம்” என்று கூறுகிறார்.

பேராசிரியர் ப்ரூவரின் கூற்றுப்படி, போட்டித் தடங்களின் வளர்ச்சி மற்றும் கார்பன் ஃபைபர் கொண்டு இயங்கும் ஷூக்கள் ஆகியவை தொழில்நுட்ப முன்னேற்றங்களின் சிறந்த உதாரணங்கள்.

"அவை தரையில் கால்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை உள்ளிழுத்து, ஒரு ஓட்டப்பந்தயப் போட்டியாளர் முன்னோக்கி செல்ல அந்த ஆற்றலைப் பயன்படுத்த உதவுகின்றன".

"இதனால், ஓடுபவர்கள் குறைந்த ஆற்றல் மற்றும் முயற்சியுடன் வேகமாக ஓட முடியும். அதுமட்டுமில்லாது அவர்கள் அதிக தூரம் விரைவாக ஓட முடியும்" என்று அவர் கூறுகிறார்.

“விளையாட்டு வீரர்களின் செயல்திறனை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மதிப்பிட முடியும் என்றாலும், செயல்திறனின் சில அம்சங்களை அளவிடுவது எளிதல்ல. அதாவது லட்சியம், உந்துதல் சக்தி மற்றும் மனநிலை போன்றவை" என்று கூறுகிறார் விளையாட்டு உளவியலாளர் சோஃபி புரூஸ்.

"சாதனைகள் என்பது முறியடிக்கப்படுவதற்கு மட்டுமே இல்லை, அவை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் அடையாளமும் கூட. வரலாற்றில் போட்டியாளர்கள் சந்தித்த அசாதாரணமான, மிகச்சிறந்த தருணங்களையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன." என்கிறார் சோஃபி புரூஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: அன்று புல்லட் வாங்கவே கடன், இன்று துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் - ஸ்வப்னில் குசாலேவின் பின்னணி

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

1 ஆகஸ்ட் 2024, 08:58 GMT
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் குசாலே ஆவார்.

ஸ்வப்னில் குசாலே

ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று மனு பாக்கர் சாதனை படைத்தார். இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.

மனு பாக்கர் சரபோஜித் சிங் இணை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும், வெண்கலம் வென்றது.

தற்போது இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் ஸ்வப்னில் குசாலே மூலமாகக் கிடைத்திருக்கிறது.

ஸ்வப்னில் குசாலேவின் பயணம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம், ராதாநகரியைச் சேர்ந்தவர் 28 வயதான ஸ்வப்னில். அவர் நாசிக்கின் கிரிடா பிரபோதினி பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். புனேவில் ரயில்வே துறையில் பணிபுரிகிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்வப்னில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், மகாராஷ்டிராவில் துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசாலே மிகவும் பரிட்சையமானவர்.

கடந்த பத்து-பன்னிரண்டு ஆண்டுகளில், முதலில் ஜூனியர் பிரிவில் பின்னர் சீனியர் மட்டத்தில், ஸ்வப்னில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு, அவர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் கால்பதித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

'புல்லட் வாங்க வங்கியில் கடன் வாங்கிய ஸ்வப்னில்'

“இத்தனை ஆண்டுகளில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது அவர் ஒருமுறைகூட சலித்துக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. அவர் எப்போதுமே பயிற்சி செய்யத் தயாராக இருப்பார். இதுதவிர, அவர் மிகவும் அமைதியான மற்றும் ஒழுக்கமான இளைஞர்” என்று அவரது தந்தை சுரேஷ் குசாலே பிபிசி மராத்தியிடம் பேசும்போது கூறினார்.

 
ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராதாநகரி, கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் குசாலே ஒரு ஆசிரியர். ஸ்வப்னிலின் தாயார் அனிதா, கம்பல்வாடி கிராமத்தின் தலைவராக உள்ளார்.

தனது மகன் விளையாட்டில் காட்டிய ஆர்வத்தைக் கண்டு, நாசிக்கின் விளையாட்டுப் பயிற்சி மையத்தில் ஸ்வப்னிலை சேர்த்தார். ஸ்வப்னில் அங்கு துப்பாக்கி சுடுதல் விளையாட்டைத் தேர்வு செய்தார். ஸ்வப்னில் 2009இல் 14 வயதில் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி எடுத்து வருகிறார்.

ஆனால் துப்பாக்கி சுடுதல் என்பது அவ்வளவு எளிதான விளையாட்டல்ல. பயிற்சியின் போதே செலவுகளும் அதிகமாக இருக்கும். பயிற்சி மேற்கொள்பவர்கள் துப்பாக்கிகள் வாங்கவும் ஜாக்கெட்டுகள் வாங்கவும் செலவிட வேண்டும். புல்லட் வாங்குவதில்கூட நிறைய பணம் செலவாகும்.

ஸ்வப்னில் பயிற்சிக்காக தோட்டாக்கள் வாங்கப் போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்ட காலகட்டம் இருந்தது. அந்த நேரத்தில் அவரது தந்தை கடன் வாங்கிச் செலவு செய்து, மகனை விளையாட ஊக்குவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம்,SWAPNIL KUSALE

“விளையாட்டு மீதான என் ஆர்வத்தைப் பாதிக்கக்கூடாது, பயிற்சியை நிறுத்தக்கூடாது என்பதற்காக, எனது தந்தை வங்கியில் கடன் வாங்கி தோட்டாக்கள் வாங்குவதற்காகப் பணம் கொடுத்தார். அப்போது ஒரு புல்லட்டின் விலை 120 ரூபாய். அதனால் ஷூட்டிங் பயிற்சியின் போது ஒவ்வொரு புல்லட்டையும் கவனமாகப் பயன்படுத்தினேன். ஏனென்றால், எங்கள் குடும்பத்துக்கு இந்தச் செலவு கட்டுப்படியாகவில்லை. நான் இந்த விளையாட்டுக்கான பயிற்சியைத் தொடங்கியபோது, என்னிடம் போதுமான உபகரணங்கள்கூட இல்லை" என்று ஸ்வப்னில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

ஸ்வப்னில் மேலும் கூறுகையில், பெற்றோர் மட்டுமின்றி, அவரது பயிற்சியாளர் தீபாலி தேஷ்பாண்டேவும் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

"தீபாலி மேடம் எங்களுக்கு வாழ்க்கை மற்றும் விளையாட்டில் சரியான ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தார். அவர் தனது செயல்களின் மூலம் இந்த விஷயங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். துப்பாக்கி சுடுவதைத் தவிர்த்து ஒரு மனிதனாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்," என்று ஸ்வப்னில் கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்வப்னில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் தனது திறமையைக் காட்டத் தொடங்கினார். அந்த நேரத்தில் 'லக்ஷ்யா ஸ்போர்ட்ஸ்' என்ற அமைப்பு அவருக்குத் துணை நின்றது.

பின்னர், ரயில்வே துறை ஸ்வப்னிலுக்கு வேலை கொடுத்தது. 2015 முதல் மத்திய ரயில்வேயின் புனே பிரிவில் பயணிகள் டிக்கெட் பரிசோதகராகப் (TTE) பணியாற்றினார்.

அன்றிலிருந்து அவர் பலேவாடியில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கிரிடா பிரபோதினியில் (Chhatrapati Shivaji Maharaj Krida Prabodhini) பயிற்சி செய்தார்.

 

உடல்நலப் பிரச்னை இருந்த போதிலும் சிறப்பான செயல்திறன்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம்,SWAPNIL KUSALE

ஸ்வப்னில் துப்பாக்கி சுடும் வீரர்களான விஸ்வஜித் ஷிண்டே, தீபாலி தேஷ்பாண்டே ஆகியோரால் வழிநடத்தப்பட்டார்.

ஸ்வப்னிலை பற்றி அவரது பயிற்சியாளர் விஸ்வஜித் ஷிண்டே கூறுகையில், “ஸ்வப்னில் மிகவும் அமைதியான இயல்புடையவர். அதிகம் பேசமாட்டார். வேறு எந்த விஷயங்களிலும் ஈடுபடாமல், பயிற்சியில் மட்டும் அதிக கவனம் செலுத்துவார்” என்றார்.

துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தேசிய அளவில் முன்னேறிய பிறகும், ஸ்வப்னிலின் பயணம் கடினமான பக்கங்களைக் கொண்டிருந்தது.

பல ஆண்டுகளாக அவர் கடுமையான வலி, காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் அவதிப்பட்டார். டான்சில்லிடிஸ் (tonsillitis) பகுதியில் அவ்வப்போது வலி, தொடர்ந்து தலையை உயர்த்தினால் வலி என அவதிப்பட்டார்.

வலியின் காரணம் என்ன என்பது உடனடியாகக் கண்டறியப்படவில்லை. அதனால் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தினார்.

இறுதியாக, 2023 டிசம்பரில், இந்தப் பிரச்னைக்கான உண்மையான காரணம் வெளிப்பட்டது. ஸ்வப்னிலுக்கு `பால் ஒவ்வாமை’ இருப்பது தெரிய வந்தது. பாலில் உள்ள லாக்டோஸ் காரணமாக பால் மற்றும் பால் பொருட்களைச் சாப்பிடுவதை ஸ்வப்னில் நிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

 

இறுதிப் போட்டியில் பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம்,SWAPNIL KUSALE

ஸ்வப்னிலுக்கு சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் இல்லை. ஆனால் இதுவரை விளையாடிய போட்டிகளில் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அபாரமாக விளையாடி வருகிறார்.

“இதுவரை, அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிறகு பெரும்பாலான போட்டிகளில் வென்றுள்ளார். பாரிஸிலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று பயிற்சியாளர் கூறினார்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலும், பல ஏற்ற தாழ்வுகளைக் கடந்து ஸ்வப்னில் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

``இந்த இலக்குக்காகத்தான் ஸ்வப்னில் இதுவரை கடுமையாக உழைத்தார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய தவம் நிச்சயம் வெற்றி பெறும்” என்று சுரேஷ் குசாலே, ஸ்வப்னில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றபோது கூறியிருந்தார். தற்போது ஸ்வப்னில் வெண்லகப் பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்வப்னில் துப்பாக்கி சுடுதலில் எந்த பிரிவில் விளையாடினார்?

துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன.  ரைஃபிள் (rifle), பிஸ்டல் (pistol) மற்றும் ஷாட் கன் (shotgun). அவற்றில் எந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து பல்வேறு வகைகள் உள்ளன.

ஸ்வப்னில் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள், மூன்று நிலைப் போட்டியில் விளையாடினார்.

அதில் மூன்று நிலைகள் உள்ளது: முழங்காலிட்டு சுடுதல் (kneeling), ப்ரோன் (prone) மற்றும் நின்று சுடுதல் (standing shooting).

பயிற்சியாளர் விஸ்வஜித் ஷிண்டே கூறுகையில், இந்தப் பிரிவு மற்ற துப்பாக்கி சுடுதல் பிரிவுகளைவிட சவாலானது. துப்பாக்கி சுடும் வீரர் மூன்று வெவ்வேறு நிலைகளில்சுட வேண்டும் மற்றும் துல்லியமாகக் குறிவைக்க வேண்டும் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

453507636_894210059410634_31979315337080

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலின பரிசோதனை சர்ச்சை: 46 விநாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை!

பாரிஸ் ஒலிம்பிக் 2024: இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி கட்டுரை தகவல்
  • எழுதியவர், கேட்டி ஃபால்கிங்காம்
  • பதவி, பிபிசி ஸ்போர்ட் மூத்த பத்திரிகையாளர், பாரிஸில் இருந்து
  • 13 நிமிடங்களுக்கு முன்னர்

இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பிற்கு எதிரான தனது ஒலிம்பிக் போட்டியை 46 வினாடிகளுக்குள் கைவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்," என்று கூறி அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

தகுதி தரநிலைகளை அடைய தவறியதால் கடந்த ஆண்டு மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தடகள வீரர்களில் இருவர் மட்டுமே மீண்டும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் கெலிஃப்.

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்தவில்லை. ஆனால், தற்போது பாரீஸில் நடைபெற்று வரும் போட்டிகளை இந்த கமிட்டிதான் நடத்துகிறது.

66 கிலோ எடைப்பிரிவு வீராங்கனையான கெலிஃபின் டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோனின் அளவு அதிகரித்ததால், இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளின் போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறுகிறது.

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் முன்னேறிய 25 வயதான கெலிஃப், அரங்கிற்கு வந்தபோது அல்ஜீரிய மக்கள் ஆரவாரமாக கைத்தட்டி அவரை வரவேற்றனர். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றார்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: இமானே கெலிஃப் மற்றும் ஏஞ்சலா கரினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப்புடன் போட்டியிட்ட இத்தாலி குத்துசண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி

46 விநாடிகள் மட்டுமே நீடித்த போட்டியில் என்ன நடந்தது?

30 விநாடிகளுக்குள் முகத்தில் ஒரு குத்து வாங்கிய பிறகு, கரினி தன் தலைக்கவசத்தை சரிசெய்வதற்காக தன்னுடைய பயிற்சியாளரிடம் சென்றார். பிறகு விளையாட வந்த அவர், விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் பயிற்சியாளரிடம் சென்றார்.

கெலிஃபின் கையை நடுவர் உயர்த்தி, வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு சற்று முன்பு, "இது சரியில்லை" என்று கரினி கூறுவதை கேட்க முடிந்தது.

போட்டியில் இருந்து வெளியேறிய பிறகும், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் கண்ணீர் மல்க பேசிக் கொண்டிருந்தார்.

"என்னால் போட்டியை முடிக்க முடியவில்லை. என் மூக்கில் ஒரு பலத்த வலியை உணர்ந்தேன். என் அனுபவத்திற்கும், ஒரு பெண்ணாக எனக்கு இருக்கும் முதிர்ச்சியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை என்னுடைய நாட்டினர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நான் எனக்குள்ளே கூறிக் கொண்டேன். என் அப்பா இதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன். எனக்காக நான் இந்த போட்டியை நிறுத்தக் கூறினேன்" என்று கரினி பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார்.

"இந்த போட்டி என் வாழ்நாளில் மிக முக்கியமான போட்டியாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த தருணத்தில் நான் என் உயிரை காப்பாற்ற வேண்டியிருந்தது," என்றும் அவர் கூறினார்.

"எனக்கு பயம் இல்லை. விளையாட்டு மேடையை கண்டு பயப்படவில்லை. அடி வாங்க பயமில்லை. ஆனால் இந்த முறை, எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது. என்னால் முடியவில்லை என்பதால்தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்," என்றும் கூறினார் கரினி.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து கூறிய இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, "ஒரு போட்டியில், சமமான இருவர் போட்டியிடுவது முக்கியம். ஆனால் என்னுடைய பார்வையில், அது சமமான போட்டி அல்ல," என்று குறிப்பிட்டார்.

கெலிஃப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கரினி "அவர் இறுதி போட்டி வரை செல்ல வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று கூறினார்.

"இவர்கள் சரி, இவர்கள் தவறு என்று மற்றவர்களை மதிப்பிட நான் இங்கு வரவில்லை," என்றும் கூறினார் கரினி.

தான் பங்கேற்ற 50 சண்டை போட்டிகளில் ஒன்பது முறை தோல்வியடைந்த கெலிஃப், "நான் தங்கப் பதக்கம் பெறவே இங்கே வந்தேன். நான் அனைவரையும் எதிர்த்து விளையாடுவேன்," என்று பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024: அல்ஜீரிய வீராங்கனை இமேன் கெலீஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அல்ஜீரிய வீராங்கனை இமேன் கெலீஃப் (இடது)

கெலிஃப் மீதான, ஆதாரமற்ற தாக்குதல்களை அல்ஜீரியாவின் ஒலிம்பிக் கமிட்டி கண்டித்து ஒரு நாள் ஆன நிலையில் இந்த போட்டி நடைபெற்றது.

கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்ட தைவானின் லின் யூ-டிங் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்.

பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வந்துள்ள அனைத்து குத்துச்சண்டை வீரர்களும் போட்டிகளுக்கான தகுதி மற்றும் நுழைவு விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளனர் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

செவ்வாயன்று, கமிட்டியின் செய்தித்தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ்,"இந்த விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் திடீரென்று ஒன்றும் தோன்றவில்லை," என்று கூறினார்.

'உரிய நடவடிக்கை எடுத்தோம்' - சர்வதேச குத்துசண்டை சங்கம்

கெலிஃப் மற்றும் லின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (IBA) ஏற்பாடு செய்தது.

ஆனால் கடந்த ஜூன் மாதம், ரஷ்யாவை தலைமையாக கொண்டு செயல்படும் இந்த சங்கத்தின் சர்வதேச போட்டிகளை நிர்வகிக்கும் அந்தஸ்த்தை நீக்கி அறிவித்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

இந்த கமிட்டி தான் 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. இம்முறை பாரீஸிலும் இந்த அமைப்பே குத்துச் சண்டை போட்டிகளை நடத்தி வருகிறது.

போட்டியின் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டினை நிலை நிறுத்துவதற்காக இந்த இரண்டு வீராங்கனைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக புதன்கிழமை அறிவித்தது ஐ.பி.ஏ.

அவர்கள் "டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் ஒரு தனி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், இதன் முடிவுகள் ரகசியமாக இருக்கும்" என்றும் கூறியது சர்வதேச குத்துச்சண்டை சங்கம்

''இரண்டு வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்க தேவையான தகுதிகளை கொண்டிருக்கவில்லை என்பதை சோதனையானது உறுதி செய்தது. மேலும் மற்ற பெண் போட்டியாளர்களை விட சில நன்மைகளை அவர்கள் பெற்றிருப்பதாகவும் கண்டறியப்பட்டது" என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்தது.

என்ன தகுதி சோதனைகள் நடத்தப்பட்டன என்பதை பிபிசியால் கண்டறியமுடியவில்லை

2022-இல் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவ்விரண்டு வீராங்கனைகளுக்கும் சோதனைகள் நடத்தப்பட்டன. பிறகு மீண்டும் 2023-லும் நடத்தப்பட்டது.

2023ம் ஆண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, லின், அதற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், கெலிஃப் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் பின்னர் அதை வாபஸ் பெற்றதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கூறியது.

வியாழன் அன்று பிபிசி ஸ்போர்ட்டிடம் பேசிய ஐ.பி.ஏ தலைமை நிர்வாகி கிறிஸ் ராபர்ட்ஸ், "எங்கள் மருத்துவக் குழு கொண்டிருந்த ஐயப்பாடுகளின் காரணமாகவே இந்த இரண்டு வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்பட்டனர்," என்று கூறினார்.

"நாங்கள் சரியான நடவடிக்கையை தான் எடுத்தோம். இது எங்கள் குத்துச்சண்டை போட்டிகளுக்கு மட்டுமே சரியானது," என்று அவர் கூறினார்.

"அவர்கள் (லின் மற்றும் கெலிஃப்) பெண்களாக போட்டியிட தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. அதைத்தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்."

இது ஒரு 'பாலின சோதனையா' என்று கேட்டதற்கு, "ஆம்" என்று கூறினார் ராபர்ட்ஸ்.

"தகுதி தரநிலைகளை மற்றும் சோதனைகளில் ஒரு வீராங்கனை மற்றொரு வீராங்கனையை வீழ்த்தினால், அந்த நபர் பெண் போட்டியாளராக இருக்க தகுதியற்றவர் என்றே அர்த்தம்," என்றும் அவர் கூறினார்.

"அது சரியானது இல்லை... அதைத்தான் நாம் இன்று பார்க்கின்றோம்," என்றும் ராபர்ட்ஸ் கூறினார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024: இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி

ஐ.பி.ஏவின் தன்னிச்சையான முடிவை விமர்சிக்கும் ஒலிம்பிக் கமிட்டி

வியாழக்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையில், பாரீஸ் 2024 குத்துச்சண்டை பிரிவு மற்றும் ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தை விமர்சித்தன. மேலும் "கெலிஃப் மற்றும் லின் ஆகியோர் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் திடீர் மற்றும் தன்னிச்சையான முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்," என்று கூறின.

2023ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில், அவர்கள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியது ஒலிம்பிக் கமிட்டி.

"இந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு எதிரான தற்போதைய எதிர்ப்பு முற்றிலும் குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த முடிவு எந்த ஒரு விதிகளையும் பின்பற்றாமல் எடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக உயர்மட்ட போட்டிகளில் பங்கேற்றிருப்பதையும் கருத்தில் கொள்ளாமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அத்தகைய அணுகுமுறை நல்லதல்ல'' என்றும் அறிக்கையில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விமர்சனத்துக்கு ஆளானது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024: இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி

ஒரு முழுமையான பேரழிவு

இது ஒரு முழுமையான பேரழிவு என்று கூறுகிறார் பிபிசி ரேடியோ 5 லைவ்வின் குத்துச்சண்டை ஆய்வாளர் ஸ்டீவ் பன்ஸ்.

"ஒலிம்பிக் குத்துச்சண்டையின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த நிகழ்வு நடந்திருப்பதாக நான் நினைக்கிறேன். இது ஒரு முழுமையான பேரழிவு.

''சுவாரசியமான விஷயம் என்னவென்றால், போட்டியை உருவாக்குவதில் தான் உள்ளது. கெலிஃபை எதிர்த்து போட்டியிட்ட சில பழைய வீராங்கனைகள், நல்ல போட்டியாளர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்கள், அவர் ஒரு ஏமாற்றுக்காரர் அல்ல என்று தான் கூறியுள்ளனர்.''

''மோசமாக தாக்கும் வகையிலான போட்டியாளர் அவர் இல்லை. ஐந்தாவது முறை அவருக்கு இப்படி நிகழ்கிறது.''

''கரினியை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் கெலிஃபின் நிலையையும் கொஞ்சம் உணர வேண்டும். அவர் இங்கே சிக்கிக்கொண்டார். அவரின் நிலைமை மிகவும் மோசமான நிலைமை. இன்னும் ஒலிம்பிக் போட்டிகளும் நிறைவடையவில்லை," என்கிறார் ஸ்டீவ்.

அடுத்து ஹமோரியை எதிர்கொள்ளும் கெலிஃப்

சனிக்கிழமை நடைபெறும் 66 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிப் போட்டியில் கெலிஃப், ஹங்கேரி நாட்டு வீராங்கனையான அன்னா லூகா ஹமோரியை எதிர்கொள்கிறார். அங்கு அவர் வெற்றி பெற்றால் அவருக்கு மற்றொரு ஒலிம்பிக் பதக்கம் உறுதி செய்யப்படும்.

ஹமோரி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் ஸ்போர்ட்டிடம் பேசிய போது "எனது மனநிலை ஒருபோதும் கைவிடக்கூடாது, என்ன நடந்தாலும் பரவாயில்லை என்பதுதான் என மனநிலை'' என்று கூறினார்

"கரினி போட்டியில் இருந்து வெளியேறியது அவரது விருப்பம். நான் இறுதிவரை போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். உண்மை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, நான் கவலைப்படவில்லை. நான் வெற்றி பெறவே விரும்புகிறேன்," என்று கூறுகிறார் ஹமோரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் விளையாட்டுட‌ன் பொழுதும் ந‌ல்ல‌ போகுது ப‌ல‌ விளையாட்டுக்க‌ள் பார்க்க‌ ம‌கிழ்ச்சியா இருக்கு...................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடகை தர முடியாமல் சிரமப்படுவதாக பதிவிட்ட ஒலிம்பிக் வீராங்கனைக்கு உதவ முன்வந்த ரெடிட் இணை நிறுவனர்!

ஒலிம்பிக் தடகள வீராங்கணை வெரோனிகா ஃப்ரேலி தான் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறிய நிலையில், ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் மற்றும் ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் ஆகியோர் உதவ முன் வந்தனர்.

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்த சூழலில் அமெரிக்க தடகள வீராங்கணையான வெரோனிகா ஃப்ரேலி தனது வாடகையை செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று நேற்று (ஆகஸ்ட் 1) இணையப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறும்போது, “நான் நாளை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறேன், எனது வாடகையை கூட என்னால் செலுத்த முடியாது. எனது பள்ளி 75% மட்டுமே அனுப்பியது, அவர்கள் கால்பந்து வீரர்களுக்கு (எதையும் வெல்லாதவர்கள்) புதிய கார்கள் மற்றும் வீடுகளை வாங்க போதுமான அளவு செலுத்துகிறார்கள்” என பதிவிட்டிருந்தார்.

இவரின் பதிவு சிறிது நேரத்திலேயே, ராப்பர் ஃப்ளேவர் ஃப்ளேவ் மற்றும் ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர்கள் வெரோனிகா ஃப்ரேலிக்கு (இவரின் உண்மையான பெயர் வில்லியம் டிரேட்டன் ஜூனியர்) உதவ முன்வந்தனர். அவருக்கு பதிலளித்த ஃப்ளேவர் ஃப்ளேவ் “எனக்கு புரிந்தது. நான் இன்று பணம் அனுப்புகிறேன், எனவே நீங்கள் நாளை அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை,” என்றார். ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், ராப்பருடன் செலவைப் பிரித்துக்கொள்வதாக உறுதியளித்தார். இணை நிறுவனர் ஃப்ரேலிக்கு 7,760 டாலர் அனுப்பியதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்தார்.

https://thinakkural.lk/article/307303

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2024 at 13:25, வீரப் பையன்26 said:

ஒலிம்பிக் விளையாட்டுட‌ன் பொழுதும் ந‌ல்ல‌ போகுது ப‌ல‌ விளையாட்டுக்க‌ள் பார்க்க‌ ம‌கிழ்ச்சியா இருக்கு...................................

அது என்றால் உண்மை தான் உறவே தலையிடி பிடித்த அரசியல் விடியோக்களை பார்ப்பதை விட விளையாட்டு பார்ப்பது மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கின்றது 👍

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது என்றால் உண்மை தான் உறவே தலையிடி பிடித்த அரசியல் விடியோக்களை பார்ப்பதை விட விளையாட்டு பார்ப்பது மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கின்றது 👍

உண்மை தான் உற‌வே👍....................

  • கருத்துக்கள உறவுகள்

454033654_1066402532160601_3013550806125

ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது!!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு  வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக 70,000 ஆணுறைகள் பாவித்துத் தீர்க்கப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் போகப் போக விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. 
உதாரணமாக, 2012 இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் போது, சுமார் 100,000 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் தேவைப்பட்டன. 

தற்போது 2024 ல் பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில்  இதுவரை ஒலிம்பிக் வீரர்கள் தங்கும்  கிராமங்களில்  300,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Follow On WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VaTYF6cKAwEdCSa8cq2J

@Kandiah57 அண்ணை சில நாடுகள்  தங்கப் பதக்கம் எடுக்காததற்கு இதுக்கும் ஒரு காரணமாக இருக்குமோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

454033654_1066402532160601_3013550806125

ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது!!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு  வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக 70,000 ஆணுறைகள் பாவித்துத் தீர்க்கப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் போகப் போக விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. 
உதாரணமாக, 2012 இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் போது, சுமார் 100,000 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் தேவைப்பட்டன. 

தற்போது 2024 ல் பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில்  இதுவரை ஒலிம்பிக் வீரர்கள் தங்கும்  கிராமங்களில்  300,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Follow On WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VaTYF6cKAwEdCSa8cq2J

@Kandiah57 அண்ணை சில நாடுகள்  தங்கப் பதக்கம் எடுக்காததற்கு இதுக்கும் ஒரு காரணமாக இருக்குமோ. 😂

த‌மிழ் சிறி அண்ணா இது யாரோ கில‌ப்பி விட்ட‌ புர‌ளி போல் தெரியுது....................சீடிவி க‌மரா உள்ள‌ இந்த‌ தொழிநுட்ப‌ கால‌த்தில் கொட்ட‌ல்க‌ளில் இப்ப‌டியான‌ விளையாட்டுக்க‌ள் காட்ட‌ முடியுமா

 

அந்த‌ அந்த‌ நாட்டை சேர்ந்த‌ விளையாட்டு கொச் மார் இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை க‌ண்டும் காணாது போல் இருப்பார்க‌ளா.......................................

11 minutes ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா இது யாரோ கில‌ப்பி விட்ட‌ புர‌ளி போல் தெரியுது....................சீடிவி க‌மரா உள்ள‌ இந்த‌ தொழிநுட்ப‌ கால‌த்தில் கொட்ட‌ல்க‌ளில் இப்ப‌டியான‌ விளையாட்டுக்க‌ள் காட்ட‌ முடியுமா

 

அந்த‌ அந்த‌ நாட்டை சேர்ந்த‌ விளையாட்டு கொச் மார் இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை க‌ண்டும் காணாது போல் இருப்பார்க‌ளா.......................................

எல்லா நாடுகளிலும் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும்போது வெளிநாட்டிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் அவர்களுடன் வரும் பயிற்றுனர்கள் சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் வரவேற்புப் அன்பளிப்புப் பொதிகளில் ஆணுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இது உடலுறவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னேற்பாடே. ஆண்களுக்கு மட்டுமன்றி எல்லாப் பெண்களுக்கும் வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா இது யாரோ கில‌ப்பி விட்ட‌ புர‌ளி போல் தெரியுது....................சீடிவி க‌மரா உள்ள‌ இந்த‌ தொழிநுட்ப‌ கால‌த்தில் கொட்ட‌ல்க‌ளில் இப்ப‌டியான‌ விளையாட்டுக்க‌ள் காட்ட‌ முடியுமா

 

அந்த‌ அந்த‌ நாட்டை சேர்ந்த‌ விளையாட்டு கொச் மார் இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை க‌ண்டும் காணாது போல் இருப்பார்க‌ளா.......................................

பையா.... விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள்  தங்கும் ஹோட்டேலில் வைத்துதான்,
உடலுறவு கொள்ள வேண்டும் இல்லை.
இந்த விஷயம் எல்லாம், "கோச்" சுக்கு சொல்லிப் போட்டு செய்யிற காரியமும் இல்லை. 😃

செய்ய வேண்டும் என்று... ஆர்வம் வந்திட்டுது என்றால்,
 "கோச்" சை சுழிச்சுக்  கொண்டு போக CCTV கமெரா இல்லாத ஆயிரம் வழிகளும், இடங்களும் உள்ளன.😂

அவுஸ்திரேலியாவில்  இலங்கை கிரிக்கெட் வீரர் செய்த விளையாட்டை 
அதுக்கிடையில் மறந்து போனீர்களா பையன். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம்

 பிரான்ஸ்(france) தலைநகர் பாரிஸில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ஓடி முடித்து தனது நாட்டின் கனவை நிறைவேற்றி தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்

23 வயதேயான யுவதி. செயின்ட் லூசியாவைச் சேர்ந்த 23 வயதான ஜூலியன் ஆல்பிரட்(Julian Alfred) என்ற யுவதியே முதல் தங்கப் பதக்கத்தை வென்றவராவார். இந்த ஓட்டப்பந்தயத்தில் 10.72 விநாடிகளில் எல்லைக்கோட்டைக் கடந்து அவர் தனது வெற்றியை உறுதிப்படுத்தினார்.

வெற்றி தந்தைக்கு அர்ப்பணம்

இந்த வெற்றியை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக ஜூலியன் ஆல்பிரட் தெரிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம் | Julian Alfred Win Gold Medal

சோபிக்காத அமெரிக்க வீராங்கனை

எனினும் உலக சம்பியனான அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர் 10.87 விநாடிகளில் போட்டி தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.மூன்றாவது இடத்தை மெலிசா ஜெபர்சன் (10.92பிடித்தார்.

 

இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்ததைப் போல, இந்த முறை பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர்களின் ஆதிக்கம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/julian-alfred-win-gold-medal-1722840804

Julien Alfred stuns with gold in women’s 100m final and more 🏃‍♀️➡️🥇 | Day 8 Athletics Highlights

https://youtu.be/70rY3wyIh5k?si=r-uhQBR1ywpHhMhQ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.