Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

modi-650x375.webp

அபுதாபியில்  இந்துக் கோயில்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம்  சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை  இன்று திறந்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோயிலானது பல்வேறு வசதிகளுடன் சுமார்  27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள  உலக உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி  கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடதத்க்கது.

https://athavannews.com/2024/1369685

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

thangaraja-745x375.jpg

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்துக்கோயிலை திறந்து வைக்கிறார் மோடி.

அபுதாபியில்  பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்துகோயிலானது இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

700 கோடி இந்திய ரூபாய்  மதிப்பில், சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட குறித்த கோயிலில் கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கேட்போர் கூட்டங்கள்,  உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 5000 பேர் வரை ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகளைப் பார்வையிடக் கூடியவாறு 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது  53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில்  மொத்தமாக  1,200 கார்கள் மற்றும் 30 பேருந்துகள்  ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1369764

  • கருத்துக்கள உறவுகள்

அபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில் : இன்று திறந்து வைக்கிறார் இந்திய பிரதமர் மோடி

kovil.jpg

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில் இன்று பெப்ரவரி 14 பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு சென்றிருந்த போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் அந்த கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அபுதாபி அரசு சார்பில் கோவில் கட்ட நிலத்தை அன்பளிப்பாக தருவதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பில் இருந்த தற்போதைய அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.

அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கோவில் கட்டமான பணிகள் மும்முரமாக நடந்து வந்தன . இந்த கோவில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன.

கோவில் இரும்பு மற்றும் கம்பிகள் எதுவும் இல்லாமல் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். மேலும் கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இதன் ஆயுட்காலம் 1,000 ஆண்டுகளாகும்.

அபுதாபி இந்து கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் கட்டிடம் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் மோடி இன்று கோவிலை திறந்து வைக்கிறார்.

https://thinakkural.lk/article/291678

  • கருத்துக்கள உறவுகள்

அபுதாபியில் முதல் இந்து கோவில் ஆச்சரியம் தான்.அபுதாபிக்கு துரோகி பட்டம் கொடுத்துவிடுவார்களே அன்பு மார்க்கத்தினர்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அபுதாபியில் முதல் இந்து கோவில் ஆச்சரியம் தான்.அபுதாபிக்கு துரோகி பட்டம் கொடுத்துவிடுவார்களே அன்பு மார்க்கத்தினர்

கிழமைக்கு 14௦ பவுனுக்கு டீசல் அடித்த நமக்கு தற்போது 7௦ மைலுக்கு வெறும் 1.5௦ பவுன்ஸ் தான் இரவு 12க்கு பிறகு சிலவு எல்லாம் கரண்டு கார்கள் செய்த வேலை நன்றி மீரா .

உலகில் அல்லா மட்டுமே கடவுள் எனும் கோசம் வராது பழையபடி ஒட்டகம் மேய்ப்பது நல்ல தொழில் .லித்தியம் 9௦வீத  இருப்பு   தற்போது மட்டும் அவுசில் மட்டுமே கண்டறியபட்டுள்ளது சிலவேளை லித்தியம் பற்றரிகளை விட மென்மையான உலோகம் கண்டு பிடிக்கும் மட்டும் அவுஸ்ரேலியாதான் லித்தியம் பர்றரிகளின் வல்லரசு .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

உலகில் அல்லா மட்டுமே கடவுள் எனும் கோசம் வராது பழையபடி ஒட்டகம் மேய்ப்பது நல்ல தொழில் .லித்தியம் 9௦வீத  இருப்பு   தற்போது மட்டும் அவுசில் மட்டுமே கண்டறியபட்டுள்ளது சிலவேளை லித்தியம் பற்றரிகளை விட மென்மையான உலோகம் கண்டு பிடிக்கும் மட்டும் அவுஸ்ரேலியாதான் லித்தியம் பர்றரிகளின் வல்லரசு .

இந்த மின்சார மாற்றத்தை அவர்கள் உணர்ந்ததால் தான் அவர்களிடம் மெதுவாக மாற்றமும் வரத்தொடங்கியுள்ளது. ஆனால் இலங்கை இந்தியாவில் உள்ளவர்கள் அவர்களையே முன்னிருந்த நிலையையே  பின்பற்றி கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

😩

12 hours ago, பெருமாள் said:

கிழமைக்கு 14௦ பவுனுக்கு டீசல் அடித்த நமக்கு தற்போது 7௦ மைலுக்கு வெறும் 1.5௦ பவுன்ஸ் தான் இரவு 12க்கு பிறகு சிலவு எல்லாம் கரண்டு கார்கள் செய்த வேலை நன்றி மீரா .

உலகில் அல்லா மட்டுமே கடவுள் எனும் கோசம் வராது பழையபடி ஒட்டகம் மேய்ப்பது நல்ல தொழில் .லித்தியம் 9௦வீத  இருப்பு   தற்போது மட்டும் அவுசில் மட்டுமே கண்டறியபட்டுள்ளது சிலவேளை லித்தியம் பற்றரிகளை விட மென்மையான உலோகம் கண்டு பிடிக்கும் மட்டும் அவுஸ்ரேலியாதான் லித்தியம் பர்றரிகளின் வல்லரசு .

அப்பா,..இந்தத் திரி தப்பித்தது.

பெருமாள் இந்தத் திரிக்குளும்  சுமந்திரனை இழுத்து விடுவாரோ என்று திகைத்துப்போனேன. ஆனால் பெருசு கொஞ்ச நேரம் அந்த  மனிதனை மறந்துவிட்டார்.. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பெருமாள் இந்தத் திரிக்குளும்  சுமந்திரனை இழுத்து விடுவாரோ என்று திகைத்துப்போனேன.

பெருமாள் எல்லா தவறுகளும்  சுமந்திரனை இழுத்து விடுவதற்கு மசூதி கொண்டு பழிவாங்கல்

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2024 at 16:14, Kapithan said:

😩

அப்பா,..இந்தத் திரி தப்பித்தது.

பெருமாள் இந்தத் திரிக்குளும்  சுமந்திரனை இழுத்து விடுவாரோ என்று திகைத்துப்போனேன. ஆனால் பெருசு கொஞ்ச நேரம் அந்த  மனிதனை மறந்துவிட்டார்.. 

🤣

அவருக்கு சுமந்திரனை பற்றி எழுதாவிடடாள் நித்திரை வருவதில்லையாம். அநேகமாக இரவு ஒரு மணி, இரண்டு மணி வரையும் இருந்து அவரை பற்றி எழுதி விட்டுத்தான் தூங்குவார். எனக்கும் அடிக்கடி எழுதிப்போட்டுத்தான் தூங்க போவார். 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.