Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

spacer.png

spacer.png

spacer.png

நான் கண்ட யாழ்ப்பாணம்!!

40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை.

உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே  இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும்.

யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை.

அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது.

ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது.

வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது.

உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது  நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல.

யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது.

உண்மை உரைகல்

  • Like 6
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணுக்கு தெரியாதபடி ஒரு இராணுவச் சிறைக்குள் இருக்கும் நகரம் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லது தொடருங்கள்.........🖐️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறியர்..ரத்தினச் சுருக்கமான ஆழ்மான அழகான  பயணப்பொதியை கொட்டியுள்ளிர்கள் .. தொடர்க..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, யாயினி said:

நல்லது தொடருங்கள்.........🖐️

5 minutes ago, alvayan said:

சிறியர்..ரத்தினச் சுருக்கமான ஆழ்மான அழகான  பயணப்பொதியை கொட்டியுள்ளிர்கள் .. தொடர்க..

யாயினி & அல்வாயன்  இது நான் எழுதிய பதிவு அல்ல.
“உண்மை உரைகல்”  என்பவர் முகநூலில் பதிந்த பதிவை இங்கே இணைத்துள்ளேன்.
கட்டுரையின் அடியில் அவரின் பெயரையும் இணைத்துள்ளேன்.
தவறான புரிதல் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன். 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

யாயினி & அல்வாயன்  இது நான் எழுதிய பதிவு அல்ல.
“உண்மை உரைகல்”  என்பவர் முகநூலில்

நன்றி ..சிறியர்...இதைதான் சொல்வது நறுக்கென்று நாலு வரியில்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

ராணுவ முகாம்கள் சிறிய தென்னை மாமரம்கள் முன்னால் நட்டு ஒவ்வொரு நாளும் கூட்டிபெருக்கி மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள்.

3 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது.

நானும் இதை அவதாத்தேன்.

கால்வாய்கள் தண்ணீர் ஓடாமல் தேங்கிநின்று மணக்கிறது.

இது மக்களின் தவறும் தான்.

கிராமப் புறங்களில் வீடுவீடாக சென்று குப்பை விடக்கு கோம்பை கவிட்டு வைக்கவில்லை என்று தண்டம் அறவிடுகிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

spacer.png

spacer.png

நான் கண்ட யாழ்ப்பாணம்!!

40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை.

உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே  இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும்.

யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை.

அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது.

ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது.

வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது.

உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது  நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல.

யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது.

உண்மை உரைகல்

எம்மவர்கள் முகம் பார்த்து புன்னகைக்காமல், ஒருவரை முறைப்பது போன்று பார்ப்பதை நான் வேறு பல நாடுகளிலும் பார்த்திருக்கின்றேன். இந்தியர்களும், பல ஆசிய நாட்டவர்களும் கூட இங்கும் தினமும் அப்படி நடந்து கொள்கின்றனர்.

நேற்றும் இங்கு நடைபாதையில் கொஞ்சம் வயதான ஒரு தம்பதியினரை பார்த்தேன். இந்தியர்கள் போன்றிருந்தனர், இந்த இடத்திற்கு புதியவர்கள். 'ஹலோ...' என்று சொல்லி புன்னகைத்தேன். அவர்கள் முகங்களை திருப்பிக்கொண்டு போய்விட்டனர்.
 
என்ன ஆனாலும், நாங்கள் ஹலோ என்று சொல்லி புன்னகைக்க வேண்டுமாம். அது எங்களுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லதாம்............. 
 
என்ன, 'இப்படியே எந்த நேரமும் எல்லாரையும் பார்த்து ஈ என்று சிரித்தால் உங்களை பைத்தியம் என்று நினைக்க போயினம்' என்ற ஒரு குறிப்பு பக்கத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கும்.......🤣🤣
 
  • Like 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ராணுவ முகாம்கள் சிறிய தென்னை மாமரம்கள் முன்னால் நட்டு ஒவ்வொரு நாளும் கூட்டிபெருக்கி மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள்.

இதற்குதான் அவர்களது சம்பளமே கொடுக்கப்படுகிற🙃து

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரசோதரன் said:

எம்மவர்கள் முகம் பார்த்து புன்னகைக்காமல், ஒருவரை முறைப்பது போன்று பார்ப்பதை நான் வேறு பல நாடுகளிலும் பார்த்திருக்கின்றேன். இந்தியர்களும், பல ஆசிய நாட்டவர்களும் கூட இங்கும் தினமும் அப்படி நடந்து கொள்கின்றனர்.

சரியாகச் சொன்னீர்கள். இது வெளிநாடுகளில் வெளிநாட்டு தமிழர்கள் உள்பட மற்றவர்களும் நடந்து கொள்கின்ற மிக வழக்கமான நடைமுறை
உண்மை உரைகல் என்ற மேட்டு குடியானவர் ஒரு மாத சுற்றுலா சென்றிருக் வேண்டிய அவருக்கு ஏற்ற இடம்  இலங்கை யாழ்ப்பாணம் இல்லை.அவர் இந்தியா கஷ்மீருக்கு சென்றிருக்கலாம்.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.