Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   18 MAR, 2024 | 12:07 PM

image

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி  தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

alshifa11.jpg

காசாநகரில் உள்ள மருத்துவமனையில் பதற்றநிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள் எங்களை சூழ்ந்துள்ளன நாங்கள் கூடாரங்களுக்குள் மறைந்திருக்கின்றோம் டாங்கிகளின் சத்தங்களை எங்களால் கேட்க முடிகின்றது என ஒருவர் தெரிவிக்கும் குரல்பதிவு கிடைத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்களில் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிகின்றது.

மருத்துவமனைக்குள் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர், சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேரழிவு நிலை காணப்படுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் மருத்துவமனைக்குள் இருந்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினர் மிகவும் உறுதியான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179008

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய படையினர் காசாவில் திட்டமிட்டு மருத்துவ வசதிகளை அழிக்கின்றனர் - அமெரிக்க பிரிட்டன் மருத்துவர்கள்

Published By: RAJEEBAN   21 MAR, 2024 | 12:34 PM

image

பாலஸ்தீனியர்களை அவர்களின் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதற்காக இஸ்ரேலிய படையினர் திட்டமிட்ட முறையில் காசாவின் சுகாதார கட்டமைப்பை  அழித்துவருகின்றனர் என அமெரிக்க பிரிட்டனை சேர்ந்த மருத்துவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவுள்ளனர்.

காசாவின் மருத்துவமனைகளில் தாமாக முன்வந்து பணியாற்றிய பின்னர்நாடு திரும்பியுள்ள மருத்துவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை இந்த வாரம் சந்திக்கவுள்ளனர்.

பைடன்நிர்வாகத்துடனான இந்த சந்திப்பின்போது பாதுகாப்பான உணவு விநியோகம் சுகாதார சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புதலிற்கு அவசியமான யுத்தநிறுத்த உடன்படிக்கை இன்றி குண்டு வீச்சில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்களிற்கான நிதி உதவியை அதிகரிப்பது அர்த்தமற்ற விடயம் என மருத்துவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் அதிர்ச்சி தரும் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளனர் என காசாவின் அல்அக்சா மருத்துவமனையில் பணியாற்றிய பேராசிரியர் நிக்மேய்னார்ட் தெரிவித்துள்ளார்.

gaza_ceme106.jpg

சுகாதார கட்டமைப்புகளை இஸ்ரேலிய படையினர் திட்டமிட்ட முறையில் அழிக்கின்றனர் சுகாhதார பணியாளர்களை அழிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது வெறுமனே கட்டிடங்களை இலக்குவைப்பது தொடர்பானது மாத்திரமில்லை இது மருத்துவமனையின் உட்கட்டமைப்பை அழிப்பது தொடர்பானது அல்ஸிபா மருத்துவமனையின் ஒக்சிசன் டாங்கியை அழிப்பது தொடர்பானது சிடி ஸ்கானர்களை அழிப்பது மீண்டும் சுகாதார கட்டமைப்பைகட்டியெழுப்புவதை கடினமாக்குவது தொடர்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஹமாஸ்தீவிரவாதிகளை மாத்திரம் இலக்குவைக்கின்றார்கள் என்றால் ஏன் மருத்துவ கட்டமைப்பை அழி;க்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காசாவின் 36 மருத்துவமனைகளில் எதுவும் முழுமையாக இயங்கவில்லை என ஐநா தெரிவிக்கின்றது.

பல மருத்துவமனைகள் முற்றாக அழிந்துவிட்டன சில ஒரளவு இயங்குகின்றன என ஐநா தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் மீண்டும் அல்சிபா மருத்துவமனையின் மீது தாக்குதலை மேற்கொண்டது.

இஸ்ரேல் நூற்றுக்கணக்கான மருத்துவபணியாளர்களை கைதுசெய்து கொலை செய்ததும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனியர்களை அவர்கள் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதற்காக இஸ்ரேல் மருத்துவமனைகளை இலக்குவைக்குகின்றது என மருத்துவர் மேய்னார்ட் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் செயல் இழந்தால் பொதுமக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்தை அது ஏற்படுத்துகின்றது மருத்துவவசதிகள் குழம்பினால் பாதிக்கப்பட்டால் காசாநகர மக்கள் தென்பகுதியை நோக்கி நகரத்தொடங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179311

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் மேலும் இரண்டு மருத்துவமனைகளை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைப்பு; டாங்கி தாக்குதல் - செம்பிறை சங்கம்

25 MAR, 2024 | 01:39 PM
image

இஸ்ரேலிய படையினர் மேலும் இரண்டு மருத்துவமனைகளைமுற்றுகையிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  சர்வதேச செம்பிறை குழு கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

எங்கள் குழுக்கள் கடும் ஆபத்தில் சிக்குண்டுள்ளன முற்றாக செயல்இழந்துள்ளன என செம்பிறை சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது.

கான் யூனிசில் நாசெர் அல்அமால் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் திடீரென டாங்கிகளுடன் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் தங்களின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல உடல்களை காணமுடிந்துள்ளது என தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் சர்வதேச ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள் அவ்வப்போது எறிகணை வீச்சில் ஈடுபடும் என மருத்துவமனையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள ஐந்துமாடிக்கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் சர்வதேச செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார் எங்களை அச்சுறுத்தவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/179644

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பல் மேடாக காணப்படுகின்றது காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை - அரைகுறையாக புதைக்கப்பட்ட உடல்களை பார்க்க முடிகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம்

Published By: RAJEEBAN   08 APR, 2024 | 12:04 PM

image
 

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை இஸ்ரேலின் சமீபத்தைய முற்றுகை மற்றும் தாக்குதல் காரணமாக சாம்பல்மேடாகியுள்ளது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் மருத்துவமனை பல உடல்களுடன் வெறும் இடிபாடாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

முற்றிலும் அழிவுண்ட நிலையில் காணப்படும் மருத்துவமனைக்கு சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்கள் அரைகுறையாக புதைக்கப்பட்ட உடல்கள் கைகால்கள் வெளியில் தெரியும் நிலையில் காணப்படுவதை பார்த்துள்ளனர்.

அழுகிய உடல்களின் துர்நாற்றத்தையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.

al_shifa_112.jpg

மருத்துவமனையில் பாரிய அழிவையும் பார்வையிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்கள் முற்றுகையின் போது இஸ்ரேலிய படையினர் மிக மோசமான நிலையில் நோயாளிகளை தடுத்துவைத்திருந்தமை  அவர்களில் சிலர் உயிரிழந்தமை  குறித்து அறிந்துள்ளனர்.

இரண்டு வாரகால நடவடிக்கையின் பின்னர் கடந்த திங்கட்கிழமை  அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறியிருந்தனர்.

இரண்டு வாரங்களாக தாங்கள் மருத்துவமனையின் உள்ளே பாலஸ்தீன தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மருத்துவமனைக்குள் செல்வதற்கு பல தடவைகள் முயற்சிகளை மேற்கொணட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குள் சென்றதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

முன்னர் காசாவின் சுகாதார துறையின் முதுகெலும்பாக காணப்பட்ட அல்ஸிபதா மருத்துவமனைக்குள் நாங்கள் சென்றோம். அது தற்போது மனித உடல்களுடன் வெறும் கோதாக  காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அதனம் கெப்ரயோசிஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் நோயாளிகள் எவரும் இல்லை பல ஆழமற்ற மனித புதைகுழிகள் காணப்படுகின்றன தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே அவசரஅவசரமாக அவற்றை தோண்டியுள்ளனர் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

al_shifa_113.jpg

மருத்துவமனைக்கு சென்றவேளை ஆகக்குறைந்தது ஐந்து உடல்களாவது அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானித்தோம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை முற்றாக அழிந்த நிலையில் காணப்படுகின்றது உடல்களின் துர்வாசனை வீசுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர சூழ்நிலைகளிற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180686

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகின் அவமானம்,அசிங்கம்,அஜாரகம்  பெற்றெடுத்த மனிதாபிமானம் இல்லா பிள்ளை இஸ்ரேல் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் சிக்கிய அல்ஸிபா மருத்துவனையிலிருந்து மீட்கப்படும் உடல்கள் - பிள்ளைகள் எங்கே என சொல்லுங்கள் - கதறும் உறவுகள்

Published By: RAJEEBAN    10 APR, 2024 | 04:22 PM

image

அல்சிபா மருத்துவமனையின் புதைகுழிகளில் காணப்பட்ட உடல்களை சுகாதார பணியாளர்கள் செவ்வாய்கிழமை தோண்டி எடுத்தனர்.

இரண்டுவார காலம் அந்த மருத்துவமனை இஸ்ரேலிய படையினரின் பிடியிலிருந்த வேளை நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேலிய படையினர் அவர்களின் உடல்களை சிதைவடையவிட்டனர் என சுகாதார பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

al_shifa_114.jpg

இஸ்ரேலிய படையினர் ஏப்பிரல் முதலாம் திகதி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் இதுவரை 381 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என காசாவின் சிவில்பாதுகாப்பு படையின் பேச்சாளர் மஹ்மூட் பசால் தெரிவித்தார்.

இதில் மருத்துவமனையின் வேறு சில பகுதிகளிற்குள் புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் அல்லது உடல்பாகங்கள் அதிகளவிற்கு ஆழமாக புதைக்கப்படவில்லை என  அதிகாரிகள் சிஎன்என்னிற்கு தெரிவித்தனர்.

ஏனையவர்கள் இஸ்ரேலின் டாங்கிகளால் நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

al_shifa_un.jpg

இதன் காரணமாக சில உடல்கள் முற்றிலும் அடையாளம் காணமுடியாத நிலையில் சிதைவடைந்து காணப்படுகின்றன என பசல் தெரிவித்தார்.

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டவேளை உள்ளே சிக்கிக்கொண்ட மக்கள் அந்த பகுதி முழுவதும் உடல்களாக காணப்பட்டதாக தெரிவித்தனர் என பசல் குறிப்பிட்டார்.

ஆக்கிரமிப்பு படையினர் இந்த உடல்களை சிதைத்து நிலத்தில் புதைத்தனர் என பொதுமக்கள்  தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

al_shifa_april.jpg

இஸ்ரேலிய படையினர் உருவாக்கியுள்ள மணல்மேடுகளிற்குள் புதையுண்டு கிடக்கும் உடல்களை மீட்பதற்கு முயல்கின்றோம் என அல்சிபா மருத்துவமனையின் மருத்துவர் அஹமட் அலைவா சிஎன்என்னிற்கு தெரிவித்தார்.

சில உடல்கள் அழுக்குகள் அல்லது பிளாஸ்டிக் தகரங்களி;ற்கு கீழே காணப்படுகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சமூக ஊடக செய்தியில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளை ஒருபோதும் இராணுவமயப்படுத்தகூடாது என அவர் வீடியோ செய்தியில் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்களும் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐநா அலுவலகமும் இந்த வாரம் அல்ஸிபா மருத்துவமனையை சென்றடைந்ததாக ஐநாவின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

மனிதாபிமான பணியாளர்கள் அங்கு செல்வதற்கு இஸ்ரேல் தொடர்ச்சியாக அனுமதி மறுத்துவந்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

al_shifa_april2.jpg

ஸிபா மருத்துவமனை முற்றுமுழுதாக ஒரு மயானமாக மாறிவிட்டது பல பகுதிகளில் இன்னமும் உடல்கள் காணப்படுகின்றன என ஓசிஎச்ஏயின் மனிதாபிமான விவகாரங்களிற்கான சிரேஸ்ட அதிகாரி ஜொனாதன் விட்டல்டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு முகவர் அமைப்புடன் இணைந்து அல்ஸிபாவில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் உட்கட்டமைப்பிற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக  சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையி;னர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 500 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் 200 பேர் அழிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து புலனாய்வு அமைப்புகளிடமிருந்து துல்லியமான தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன அவர்கள் ஸிபா மருத்துவமனை பயங்கரவாதிகளின் தலைமையகமாகவும் கட்டுப்பாட்டு நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டது என புலனாய்வு தகவல்கள் கிடைத்தன எனவும் இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது பெருமளவு ஆயுதங்களை புலனாய்வு தகவல்களை கைப்பற்றினோம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய மோதல்களில் ஈடுபட்டோம் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் போரிட்டோம் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் பாலஸ்தீனியர்கள்

தகர்க்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து சேதமடைந்த பாரிய கொங்கிரீட்கள் வெளித்தெரிவதை காண்பிக்கும் வீடியோக்களை சிஎன்என் பார்வையிட்டுள்ளது.

வெள்ளை தலைக்கவசம் அணிந்த ஐநாவின் பணியாளர்கள் இடிபாடுகளின் மேல் காணப்படுகின்றனர் -பல உள்ளுர் பணியாளர்கள் சவல்களை பயன்படுத்திஉடல்களை தோண்டி வெளியே எடுக்கின்றனர்.

ஏனையவர்கள் வெள்ளைதுணிகளால் போர்த்தப்பட்ட உடல்களை மிகவும் அவதானமாக கொண்டு செல்கின்றனர்.

தலைக்கு மேலே இஸ்ரேலிய விமானங்களின் சத்தம் கேட்பதையும் சோர்வடைந்த நிலையில் காணப்படும் பாலஸ்தீனியர் சிறுவர்கள் அவற்றை அவதானித்தபடி காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

al_shifa_115.jpg

காணாமல்போனவர்களின் உடல்களை தேடுவதற்காக காசா மக்கள் மருத்துவமனை பகுதியில் குழுமியுள்ளனர்.

மனித புதைகுழிகளில் காணப்பட்டவர்களில் தனது தந்தையும் ஒருவர் என கசான் ரியாத் குனைத்தா தெரிவித்தார்.

அவர் ஒரு அப்பாவி பொதுமகன் என அவர் சிஎன்என்னிற்கு தெரிவித்தார். என்ன சொல்ல முடியும் அவர்கள் அவரை வீட்டிலிருந்து கொண்டு சென்று கொலை செய்தார்கள் என அவர் குறிப்பிட்டார்

இதனை சிஎன்எனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

மருத்துவமனைக்கு அருகிலிருந்த தங்கள் உறவினர்களின் வீடுகளிற்குள் நுழைந்த  இஸ்ரேலிய படையினர் அவர்களை தெற்கு நோக்கி தப்பியோடுமாறு உத்தரவிட்டனர் என  குறிப்பிட்ட கசான் ரியாத் குனைத்தா எனது தந்தை மருத்துவமனையின் சத்திரகிசிச்சை பிரிவிற்கு அருகில் காணப்பட்டார் திங்கட்கிழமை அவரது உடலை அங்கேயே கண்டுபிடித்தோம் எனவும் குறிப்பிட்டார்.

நாங்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அவரை காணவில்லை தொலைத்துவிட்டோம் பின்னர் திங்கட்கிழமை அவரது உடலையே கண்டுபிடிக்கமுடிந்தது இஸ்ரேலிய படையினர் அங்கிருந்து விலகி ஒரு வாரத்தின் பின்னர் அவரது உடலை கண்டுபிடித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் காணப்பட்ட நுஹா ஸ்வைலெம் என்ற பெண்மணி இஸ்ரேலிய படையினரால் தேடுதலின் போதுகைதுசெய்யப்பட்ட தனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்தோ அல்லது  எனது கணவருக்கு என்ன நடந்தது என்பது குறித்தோ எங்களிற்கு தெரியாது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா அல்லது புதைக்கப்பட்டுவிட்டனரா என்பது தெரியாது எங்கள் குழந்தைகள் எங்கே எனது கணவர் எங்கே என தெரிவியுங்கள் என அவர் மன்றாடினார்.

https://www.virakesari.lk/article/180922

  • கருத்துக்கள உறவுகள்

காசா பாலஸ்த்தீனியர்களின் முள்ளிவாய்க்கால் முள்ளிவாய்க்கால்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

காசா பாலஸ்த்தீனியர்களின் முள்ளிவாய்க்கால் முள்ளிவாய்க்கால்..

முள்ளிவாய்க்காலில் நாம் எல்லோரும் ஒன்றாக தர்மத்தின் பக்கம் நின்று தடுத்திருந்திருந்தால் .........

இனி மேலாவது தர்மம் அதர்மம் இரண்டு தான் உலகில். நடுநிலை என்று ஒன்று இல்லை என்பதை புரிந்து இவ்வுலகம் இயங்கணும். இயங்கும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.