Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ரூ. 470 மில்லியன் பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான(ICU) 157 படுக்கைகள் இந்த வாரம் (மார்ச் 21) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

34 அரசு மருத்துவமனைகளுக்கு

சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ICU படுக்கைகள் ஒவ்வொன்றும் ரூ. 3 மில்லியன் பெறுமதி வாய்ந்தவை என்பதுடன், 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை | A Huge Donation Sri Lankan Family Ln Canada

நீர்கொழும்பு, ராகம போதனா வைத்தியசாலை, சிலாபம், புத்தளம், சீதுவ, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மருத்துவமனைகளுக்கு இந்த ICU படுக்கைகள் வழங்கப்பட உள்ளன.

சுகாதார அமைச்சரின் நன்றி

நன்கொடையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, கனடாவில் வசிக்கும் பட்ரிக் நீல்கமல் பெர்னாண்டோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் தேவையான நன்கொடைக்காக நன்றி தெரிவித்தார்.

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை | A Huge Donation Sri Lankan Family Ln Canada

https://ibctamil.com/article/a-huge-donation-sri-lankan-family-ln-canada-1711175253

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லவிடயம்

பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விடயம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராட்டதக்க செயல்.......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நல்ல வேளை, பங்குத்தந்தையிடம் அளித்துள்ளார். அரசியல்வாதிகள், கர்தினாலை நன்கு அறிந்து வைத்துள்ளனர் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராட்டுகளும் வாழ்த்துக்களும். உரித்தாகுகா நன்றி 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.