Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்தமிழ் இளைய தலைமுறையின் தலைநிமிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்தமிழ் இளைய தலைமுறையின் தலைநிமிர்வு

ஆக்கம்: ரி.என்.ஜே

ஞாயிறு, 30 செப்டம்பர் 2007

சுவிஸ் இளம் தலைமுறையின் புதிய புகுவு. இரண்டாம் தலைமுறையின் இனிய பிரவேசம். இதற்கான தமிழரின் பூரண ஆதரவுக்கரம், அரவணைப்புக்கரம் உவந்தளிப்போம் எதிர்வரும் அக்ரோபர் 21 ம் திகதி சுவிற்சர்லாந்து தழுவிய ரீதியில் நடைபெற இருக்கும் தேசிய பாராளுமன்றத் தேர்தலில் சோசலிசக்கட்சியின் சார்பில் போட்டியிடும் எம் இளைய தலைமுறையின, இரண்டாம் தலைமுறைக்கான சோசலிசக்கட்சி வேட்பாளர் செல்வி சுஜிதா வைரமுத்துவிற்கு எமது வாக்குகளை சரியான முறையில் இடுவதன் மூலம் அவரை மேலதிக வாக்குகளுடன் தேசிய பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்து எமது தலைமுறையின் குரல்களை ஓலிக்க வைப்போம்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் புலம் பெயர் மக்களின் தேசிய பாராளுமன்றப் பிரவேசம் அந்நாட்டு அரசுகள் தமது தேசிய உள்நாட்டு கொள்கைகளை வகுக்கும் போது அந்நாட்டு தேசிய இனவாத கட்சிகள் தமது நலன்கள் பேணும் வாதங்களை கக்கும் நிலையில் விளைவு பாரதூரமாகவும், சரியானது என்ற மாயையை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றது. இந்நிலையின் மாற்றத்திற்கு புலம் பெயர் வெளிநாட்டு மக்கள் தமது ஆக்கபூர்வமான குரல்களை பலத்துடன் ஒலிக்கச் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதற்கான தேவை தற்போது சுவிற்சர்லாந்திலும் தோன்றியுள்ளது. SVP கட்சியினரின் இனவாத கொள்கை ஒங்கி ஒலிக்கும் இன்றைய நிலையில் முதல்ப்பெண்மணி கால்மி ரே அவர்கள் அண்மையில் இந்நிலை மாற்றி அமைக்கபட வேண்டிய தேவையினை தனது கட்சியின் கூட்டத்தில் உரையாற்றியது நீங்கள் அறிந்ததே. எமக்காக ஒலிக்கும் குரல்களை பலத்துடன் ஒலிக்கச் செய்திட எமது வாக்கு வங்கிப்பலம் அதிகரிக்கப்படவேண்டும்.

ஏன் சுஜிதா போன்றோரின் தேசிய பாராளுமன்றப் பிரவேசம் அவசியம்?

எம் புலம் பெயர் ஈழத்தமிழ் மக்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த பொருளியற்துறை பேர்ன் பல்கலைக்கழக மாணவியான இவர் இனவாத அடிப்படையில் இரண்டாம் தலைமுறையின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்தவர்.

வெளிநாட்டவர் 20 வீதம் வாழும் நாட்டில் இவர் சார்ந்த கட்சி பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இந்த 20 வீத்தில் இருந்து இவரைத் தேர்ந்தெடுத்திருப்பது நாம் இவருக்கு எமது ஆதரவை வழங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது.

வெளிநாட்டு மக்களை சுவிஸ் மக்களுடன் இணைத்து வாழும் திட்டத்திற்கு 16.6 மில்லியன் செலவிடும் போது புகையிலை (Tabac) திட்டத்திற்கு 20 மில்லியன் பணத்தை செலவிடுவது வெளிநாட்டவர் பாரபட்சத்தை உணர்த்தி நிற்கும் நிலையில் எமது அடுத்த தலைமுறை எவ்வாறு தமக்குரிய ஓங்கிய குரலை உணர்த்தி ஆத்மபலத்துடன் போராட காலம் எம்மை கட்டாயப்படுத்துகிறது. இந்நிலையில் சுஜிதா போன்றோரின் பாராளுமன்றப்பிரவேசம் மிக மிக அத்தியாவசியமாகின்றது.

எமக்கு என்று இல்லாமல் சுஜிதா போன்றோரின் கரங்களை எம் வாக்குப்பலத்தால் பலப்படுத்தி அவரின் குரலை அவரின் கட்சியிலும் தேசிய அரசியலிலும் ஆழப்பதிப்பதன் மூலம் மாநிலக்குரல்களாக இருந்த குரல்களை தேசிய மட்டத்திற்கு உயர்த்தி தேசிய அரசியலிலும் பலம் பெறுவோம். தேசிய அரசியலில் பலம் பெறும் எம் மக்களின் குரல் எமது தேசியம்,எமது வருங்காலசந்த்தியின் சுவிஸ் எதிர்காலம் என்பவற்றை பலப்படுத்தும் எனவே வாக்களிப்போம். ஒன்றுபட்டு செயற்படுவோம்

எனவே 19 வது வாக்குச்சீட்டில் சுஜிதாவின் பெயரை மீண்டும் ஒருமுறை எழுதுவதன் மூலம் அவரை பாராளுமன்ற உறுப்பினராக்குவோம். வாக்களிக்கும் முறைபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் விபரமாக இங்கு இணைக்கப்படும்.

http://www.murasam.ch/content/view/2691/23/

ஒரு தமிழ்ப்பெண் போட்டியிடுவது வரவேற்கத்தக்க விடயம் அவர் வெற்றி பெற மனமார வாழ்த்துகின்றேன்.

ஆனால் இங்கு அவர் போட்டியிடுவதற்கு கூறும் காரணங்கள் தான் ஓவர் பில்லட்பாக இருக்கின்றது. அவர் வெற்றிபெற வெறும் வெளிநாட்டவரின் வாக்குகள் மட்டுமல்ல சுவிஸ் மக்களின் வாக்குகளும் தேவை. அவர் வெற்றி பெற்று வந்தால் சுவிஸ் மக்களையோ அல்லது அவரது கட்சியையோ மீறீ அவரால் செயற்பட முடியாது. ஏற்கனவே சுவிசில் இப்படிச் சொல்லிப் போட்டியிட்டவர்கள் பல பேர். வெற்றி பெற்ற பின் என்ன செய்தார்கள் என்று பட்டியலிடுங்களேன். பார்க்க ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை மீறிச் செயற்பட முடியாது என்ற கருத்த நியாயம் தான். ஆனாலும் கட்சியும் இவரது குரலுக்கு மதிப்புக் கொடுத்துத் தான் செயற்பட வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

இவரது குரலால் 100 வீதம் வெற்றி கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் 1வீத ஆதரவு என்பது கிடைத்தாலும் எமக்கு ஒரு வெற்றி தான்.

விடுதலைப் போராட்டத்தின் பரப்புரை என்பது நாம் ஒவ்வொருவனுக்கும் கொண்டு செல்கின்ற செய்தியில் தங்கியுள்ளது. நம்மவர்கள் வந்தால் அதை ஒரு பங்கிற்காகவது காவிக் கொண்டு செல்லத் துணையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத் தான் நான் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறேன். இவர்களால் கட்சியை மீறி எந்த செயலிலும் இறங்க முடியாது. காரணம் இந்தக் கட்சியை விட்டால் வேறு கட்சிகள் இவர்களை ஏற்றுக்கொள்ளாது. அது அந்தக்கட்சியின் நோக்கங்களை பாதிக்கும். மற்றும் இவர்களின் திறமைகளை வைத்து கட்சிகள் இடம் கொடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் தான். இருந்தாலும் உண்மை அதுவே. இங்கு சுவிசில் முன்மாதிரியான வெளிநாட்டவர்களில முக்கிய பங்கு வகிப்பவர்கள் தமிழர்கள் தான். எனவே ஒரு தமிழரை போட்டியிட வைத்தால் வெளிநாட்டவர்களின் ஆதரவும் இந்நாட்டவர்களின் ஆதரவும் கிடைக்கும். சுவிசில் ஒரு துருக்கி நாட்டவரோ, அல்லது அல்பேனிய நாட்டவரையோ இக் கட்சிகள் தூக்கி வைத்திருப்பதில்லை. தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தியதால் ஒரு சில மாநிலங்களில் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதையே இப்பொழுது அனைத்து மாநிலங்களும் பின் பற்றதொடங்கியுள்ளன. என்னைப்பொறுத்த வரையில் இவர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விடயம். ஆனால் கறிவேப்பிலையாக இல்லாமல்இருப்பது நல்லது. அத்துடன் தமிழர்களிற்கு இவர்கள் பெரிதாக ஆதரவு வழங்கமுடியாது அதற்கு கட்சிகளும் சம்மதிக்க மாட்டாது. தமிழர்களின் பிரச்சனைகளில் இவர்கள் உபத்திரம் பண்ணாமல் இருந்தால் போதும்.

Edited by வடிவேல் 007

மகிழ்வான விடயம்.

வாழ்த்துகள்

மேலே உள்ள இரு கருத்துகளும் முதன்மையானவை!

இவர்களால் தனித்து எதுவும் செய்ய முடியாது.

தமிழரில் ஒரு சிலர் அரசியலில் இருக்கிறார்கள் என்று மகிழலாம்.

அதாவது

நம்ம பிள்ளைகளும் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று

நம் ஊர்களில் சொல்வது போல............

சுவிஸில்

ஒரு முறை இருக்கிறது.

அதாவது

ஒரு வேலைத்தலத்திலோ அல்லது

ஒரு பெரிய பொறுப்பிலோ

தலைமைப் பதவியில் இருப்போரை எதிர்த்து

கருத்துகளை வெளியே சொல்லாத ஒரு வகை அடிமை நிலை.

இவை அடிமைத்தனமாக தெரிவதில்லை.

இது பள்ளிகளிலிருந்தே வரும் ஒரு பழக்கம்.

அல்லது வழக்கம்.

இதை ஒழுங்கு என்று சுவிஸ்காரர்கள் நினைக்கிறார்கள்.

இதை நம்மவரிடமும்

நம் குழந்தைகளிடமும் இவர்கள் காண்கிறார்கள்.

நம்மில் ஓரிருவரைத் தவிர பெரும்பாலானவர்கள்

இவர்களை நேரடியாக எதிர்ப்பதில்லை.

இவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்பவர்கள்.

அல்லது

அது போல நடிப்பவர்கள்

இதுதான் உண்மை!

நம்மவர்கள் பிரச்சனைப்படுவது கூட

நம்மவரோடுதானே தவிர

சுவிஸ் மக்களோடு அல்ல.

துருக்கியர் கூட ஓரளவு பரவாயில்லை என்பார்கள்

குரவாத்சியரைத் தவிர்த்து

யூகோஸ்லாவிய (அல்பானிய : பொஸ்னிய : கொசோவோ............)

பகுதிகளில் இருந்து வந்தவர்கள்

பெரும்பாலும் சற்று கடுமையானவர்கள்.

எதிர்த்து பேசுபவர்கள்.

பிரச்சனைக்குரியவர்களாகவே இருக்கிறார்கள் என்பார்கள்.

எனவே இவர்களை

இஸ்லாமியர் மற்றும் யூகோ என்றே

அவர்களால் கணிக்க முடிகிறது.

செப்டம்பர்11 க்கு பின்னர்

இஸ்லாமியர் என்றாலே தவறான கருத்து

பெரும்பாலானவர்களிடம் உண்டு.

நல்லவர்கள் இருக்கிறார்கள்.

இருந்தாலும் அது இவர்களுக்கு தெரிவதில்லை.

இங்கே வளரும் நமது குழந்தைகள்

பெரும்பாலும் அமைதியானவர்களாகவும்

கட்டுப்பட்டு நடப்பவர்களாகவுமே

சுவிஸ் மக்கள் கண்களுக்கு தெரிகிறார்கள்.

உண்மையும் அதுதான்.

எனவே

நாம் நினைப்பது போல

நமது பிரச்சனைகளை தட்டிப் பேச

இந்த பதவிகளுக்கு வரும்

இவர்களால் முடியாது.

தேவைப்படும் போது

இவர்களால் சில கருத்துகளை சொல்ல முடியும்.

நமது நாட்டு பிரச்சனை குறித்து

இவர்கள் அடித்து பேசுவார்கள் என்று

நாம் நினைப்பது தவறு!

அதற்காக அவர்களை நோகவும் கூடாது.

அகதியாக வந்தவர்களுக்கு தெரியும்

எங்கள் நாட்டில் எங்களால் வாழ முடியாது என்று

பேசத் தொடங்கினாலே..............

உன் பிரச்சனையை மட்டும் சொல்லு

என்று சொல்லும் இவர்களை பற்றி!

உன் குடும்பத்தின் பிரச்சனையோ

உன் நாட்டின் பிரச்சனையோ

இங்கே முக்கியமில்லை

உன் பிரச்சனைதான் முக்கியம் என்பார்கள்.

தன் குழந்தைகளது பிரச்சனைகளில் கூட

தலையிடாதவர்கள் இவர்கள்.

இதிலிருந்தே உங்களால் ஊகிக்க முடியுமே?

எனவே

இவர்களது வருகை மகிழ்ச்சிக்குரியது.

வரவேற்க வேண்டும்.

வாழ்த்துகள்!

முதலில் வாழ்த்துக்கள் ம் சகோதரி எந்தக்கட்சீ சார்பா போட்டியிடுகிறார் என்று சொல்லுங்கோவன் SP (Sozialdemokratische Partei ) தானே ????????

:(

நம்ம தெரிவு 2வது வாக்குச்சீட்டு

2X

:wub::lol::lol::lol:

Edited by sinnappu

http://www.sp-ps.ch/

ஆனால்

எங்கே போட்டியிடுகிறார் என்ற தகவல் ஒன்றும் தெளிவாக இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தமிழர் என்று கொண்டு வாக்குக் கேட்டுக் கொண்டு வாங்கோ.. அப்புறம்.. தமிழர்களை ஏறெடுத்தும் பார்க்காதேங்கோ...! அப்புறம்.. ஒரு கதிர்காமராவோ.. அல்லது ஒரு நீலனாகவோ.. அல்லது ஒரு ராதிகா குமாரசாமியாகவோ மாறிடுங்கோ..???!

எல்லோரும் வரேக்க நல்ல கோசம் போட்டுக் கொண்டுதான் வாறீங்கள்.. ஆனால்.. காலங்காலமா.. பதவிக்கு வந்ததும்.. உங்கள் எண்ணங்கள் குறுகிய எல்லைகளுக்குள்ள சுயநலத்துக்க கட்டுப்பட்டுப் போயிடுது. இதுதான் கடந்த கால வரலாறு.

பொதுத் தேர்தல்களில்..என் வாழ்க்கையில் இரண்டு தடவை வாக்களித்திருக்கிறேன். ஒரு போதும் தமிழர்களுக்காக வாக்களிக்கவில்லை. காரணம்.. அவர்கள் தமிழினத்தின் உண்மைப் பிரதிநிதிகளாக எனக்குத் தெரியவில்லை. இறுதியில் அதுதான் உண்மையும் ஆனது. ஆனால் அவர்களின் பிரச்சாரம் என்பது தமிழர்களின் நலனை மையப்படுத்தியே இருந்தது.

தமிழர்களின் நலனுக்காக்கப் பாடு படும் போராளிகள்.. அதுவும் உங்களைப் போன்ற மிக இளம் போராளிகள்..பதவிக்கு அப்பால்.. தங்கள் உயிர்களை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையாவது புகலிடத்தில் வாழும் எதிர்கால சந்ததி கருத்திற் கொண்டு.. வாழும் சூழலில் தமிழர்களுக்கு உதவும் மனநிலையைப் பெற வேண்டும். வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்து பெருமை தேடும் நிலையில் இருந்து மாற வேண்டும். நாம் இங்கு கோருவது தமிழர்களுக்கு மட்டும் உதவுகள் என்றல்ல. தமிழர்களின் நிலையை உணர்ந்து உணர்த்த முன்னில்லுங்கள். உங்களுக்கு வாக்களித்த பிற மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்து நில்லுங்கள். சுயநலத்துக்கும்.. புகழுக்கும்.. விலை போகாதீர்கள். :lol::wub:

Edited by nedukkalapoovan

கட்சியை மீறிச் செயற்பட முடியாது என்ற கருத்த நியாயம் தான். ஆனாலும் கட்சியும் இவரது குரலுக்கு மதிப்புக் கொடுத்துத் தான் செயற்பட வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

இவரது குரலால் 100 வீதம் வெற்றி கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் 1வீத ஆதரவு என்பது கிடைத்தாலும் எமக்கு ஒரு வெற்றி தான்.

விடுதலைப் போராட்டத்தின் பரப்புரை என்பது நாம் ஒவ்வொருவனுக்கும் கொண்டு செல்கின்ற செய்தியில் தங்கியுள்ளது. நம்மவர்கள் வந்தால் அதை ஒரு பங்கிற்காகவது காவிக் கொண்டு செல்லத் துணையாக இருக்கும்.

நீங்கள் சுவிசிலுள்ள அரசியல் புரியாது எழுதியுள்ளீர்கள். நாங்கள் இங்கு வாழ்ந்து நடப்பதை உணர்ந்து யதார்த்தமாக எழுதியுள்ளோம். எனக்குப் பின் கருத்தெழுதிய வடிவேல், அஜீவன் போன்றோரின் கருத்துக்களும் உங்களுக்கு புரிய வைத்திருக்குமென நம்புகின்றேன்.

Edited by இணையவன்

http://www.sp-ps.ch/ஆனால்எங்கே போட்டியிடுகிறார் என்ற தகவல் ஒன்றும் தெளிவாக இல்லையே?
நானும் தேடினான் முடியலை நான் 2வது க்கு பண்ணிணான் .......SP க்கு மற்றது அண்ணா SVP international சார்பா ஓருத்தர் சிறீலங்காவில இருந்து ஓட்டு கேக்கிறார் பாத்தீங்களோாாாா :lol::lol:
நீங்கள் சுவிசிலுள்ள அரசியல் புரியாது எழுதியுள்ளீர்கள். நாங்கள் இங்கு வாழ்ந்து நடப்பதை உணர்ந்து யதார்த்தமாக எழுதியுள்ளோம். எனக்குப் பின் கருத்தெழுதிய வடிவேல், அஜீவன் போன்றோரின் கருத்துக்களும் உங்களுக்கு புரிய வைத்திருக்குமென நம்புகின்றேன்.
வம்பர் சொல்வது மிகவும் சரி :(:D:)
எல்லாரும் தமிழர் என்று கொண்டு வாக்குக் கேட்டுக் கொண்டு வாங்கோ.. அப்புறம்.. தமிழர்களை ஏறெடுத்தும் பார்க்காதேங்கோ...! அப்புறம்.. ஒரு கதிர்காமராவோ.. அல்லது ஒரு நீலனாகவோ.. அல்லது ஒரு ராதிகா குமாரசாமியாகவோ மாறிடுங்கோ..???!எல்லோரும் வரேக்க நல்ல கோசம் போட்டுக் கொண்டுதான் வாறீங்கள்.. ஆனால்.. காலங்காலமா.. பதவிக்கு வந்ததும்.. உங்கள் எண்ணங்கள் குறுகிய எல்லைகளுக்குள்ள சுயநலத்துக்க கட்டுப்பட்டுப் போயிடுது. இதுதான் கடந்த கால வரலாறு.பொதுத் தேர்தல்களில்..என் வாழ்க்கையில் இரண்டு தடவை வாக்களித்திருக்கிறேன். ஒரு போதும் தமிழர்களுக்காக வாக்களிக்கவில்லை. காரணம்.. அவர்கள் தமிழினத்தின் உண்மைப் பிரதிநிதிகளாக எனக்குத் தெரியவில்லை. இறுதியில் அதுதான் உண்மையும் ஆனது. ஆனால் அவர்களின் பிரச்சாரம் என்பது தமிழர்களின் நலனை மையப்படுத்தியே இருந்தது. தமிழர்களின் நலனுக்காக்கப் பாடு படும் போராளிகள்.. அதுவும் உங்களைப் போன்ற மிக இளம் போராளிகள்..பதவிக்கு அப்பால்.. தங்கள் உயிர்களை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையாவது புகலிடத்தில் வாழும் எதிர்கால சந்ததி கருத்திற் கொண்டு.. வாழும் சூழலில் தமிழர்களுக்கு உதவும் மனநிலையைப் பெற வேண்டும். வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்து பெருமை தேடும் நிலையில் இருந்து மாற வேண்டும். நாம் இங்கு கோருவது தமிழர்களுக்கு மட்டும் உதவுகள் என்றல்ல. தமிழர்களின் நிலையை உணர்ந்து உணர்த்த முன்னில்லுங்கள். உங்களுக்கு வாக்களித்த பிற மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்து நில்லுங்கள். சுயநலத்துக்கும்.. புகழுக்கும்.. விலை போகாதீர்கள். :lol::wub:
ஆணால் இங்கு போட்டியிடுபவர்கள் தமிழன் சம்மந்தமா கதைத்தே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறன் :):):)

Edited by இணையவன்

சம்மந்தமா கதைத்தே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறன் :lol::lol::lol:

இந்த குறையை தீர்க்க நம சின்னப்பு தாத்தாவே களம் இறங்கபோகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசில் ஏற்கனவே அரசியலில் இருப்பவர்களின் இணையத்தளங்கள்.

www.rupan.ch

www.lathan.ch

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால். இங்கே ரூபன் என்பவர் லிபனான் நாட்டில் குண்டு போட்டதை கண்டித்து ஒரு பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதே நேரம் எமது நாட்டில் சிறீலங்கா அரசாங்கம் திருகோணமலையில் குண்டு போட்டது (வாகரையை பிடிப்பதற்கு முன்னம் என்று நினைக்கின்றேன்). இதற்காக ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஒரு மனிதாபிமான முறையில் என்றாலும் ஒரு கண்டனக்கடிதம் எழுதியிருக்கலாம்.

இதோ அந்தக்கடிதத்தின் முகவரி:

http://www.rupan.ch/pdf/leserbriefe/Zum%20...hen%20Osten.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றது அண்ணா SVP international சார்பா ஓருத்தர் சிறீலங்காவில இருந்து ஓட்டு கேக்கிறார் பாத்தீங்களோாாாா :wub::lol: வம்பர் சொல்வது மிகவும் சரி :lol::lol::(ஆணால் இங்கு போட்டியிடுபவர்கள் தமிழன் சம்மந்தமா கதைத்தே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறன் :D:):)

http://www.svp-international.ch/dynasite.c...p;dspaid=643209

Daetwyler.JPG

அதில என்ன இப்படி போட்டு இருக்கு? வேறு நாடு ஒன்றில் வாழ்ந்து கொண்டும் ஓட்டு கேட்கலாமோ?

Wohnort: Colombo, Sri Lanka

Beruf: Kaufmann

Geburtsdatum: 7.7.1955

Heimatort: Zürich

Stimmgemeinde: 8906 Bonstetten

Email: baurs@bluewin.ch

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் நீங்கள் வேறு நாட்டில் வசித்தாலும் ஓட்டுக்கேட்கலாம். இவர் சிறீலங்காவில என்ன செய்யிறார் என்டு ஒருக்கா மோப்பநாய் Google மூலம் தேடிப்பாக்கிறன்.மேலதிகமா இது தான் புரட்ட முடிஞ்சது.http://www.consul.cc/consul.php/910/HC-LV-LK

வடிவேலு ஜயா இவர் எவர்?

910.jpg

Honorary CONSUL for Latvia to Sri Lanka

Upper Chatham, 70

Sri Lankaoffice 0094-1-2385660

fax 0094-1-2448382

இவரா அவர்

கீழ் இருந்து மேலாக 5 பெயர்

Edited by வாசகன்

ஜயாஇதையும் பாருங்கோ

Definitive Kandidaten:

6) Ueli Maurer jn., Borgen, Norwegen.

Beruf: Business Manager. Alter: 29. Stimmgemeinde: 8340 Hinwil.

ஓய் வடிவு உவர் Ueli Maurer இன்ர பெடி போல இருக்கு தகப்பனின்ர இம்சை தாங்க ஏலாது இதிலை மகன் வேற

:wub::rolleyes::rolleyes::rolleyes:

Daetwyler.JPG

அதில என்ன இப்படி போட்டு இருக்கு? வேறு நாடு ஒன்றில் வாழ்ந்து கொண்டும் ஓட்டு கேட்கலாமோ?

Wohnort: Colombo, Sri Lanka

Beruf: Kaufmann

Geburtsdatum: 7.7.1955

Heimatort: Zürich

Stimmgemeinde: 8906 Bonstetten

Email: baurs@bluewin.ch

ஓய் கலைஞா நானும் கேக்கலாம் நான் கனடாவில உம்மட வீட்டை வந்து இருந்து கொண்டு கேக்கலாம் எண்டு இருக்கிறன் நீர் ஓகேயா ???

(ஓய் அறசியள் :wub: வாதியோடை கூட்டுச் சேர்ந்த பெருமை உமக்கு கிடைக்கும்)

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு ஜயா இவர் எவர்?

910.jpg

Honorary CONSUL for Latvia to Sri Lanka

Upper Chatham, 70

Sri Lankaoffice 0094-1-2385660

fax 0094-1-2448382

இவரா அவர்

கீழ் இருந்து மேலாக 5 பெயர்

ஆம் அவர் தான் இவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.