Jump to content

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

டேனியல் பாலாஜிக்கு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தனது 48 ஆவது வயதில் காலமானார்.

பொல்லாதவன், காக்க காக்க உள்ளிட்ட படங்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.

டேனியல் பாலாஜி தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர்.

 

தனி இரசிகர் பட்டாளம் 

சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பைரவா மற்றும் வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் | Co Star Daniel Balaji Passes Away

 

இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி இரசிகர் பட்டாளம் உண்டு.

டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது இரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.  

https://tamilwin.com/article/co-star-daniel-balaji-passes-away-1711752369

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

டேனியல் பாலாஜிக்கு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தனது 48 ஆவது வயதில் காலமானார்.

பொல்லாதவன், காக்க காக்க உள்ளிட்ட படங்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.

டேனியல் பாலாஜி தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர்.

 

தனி இரசிகர் பட்டாளம் 

சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பைரவா மற்றும் வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் | Co Star Daniel Balaji Passes Away

 

இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி இரசிகர் பட்டாளம் உண்டு.

டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது இரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.  

https://tamilwin.com/article/co-star-daniel-balaji-passes-away-1711752369

😢............

'வேட்டையாடு விளையாடு' படத்தில் இவரின் பாத்திர அமைப்பும், நடிப்பும் மறக்க முடியாதவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கண்ணீர் அஞ்சலிகள்.

டானியல் பாலாஜி தனது கண்களை தானமாக வழங்கியுள்ளார் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினராவார்.

Edited by ஏராளன்
தவறான தகவல் திருத்தப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி

'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி

பட மூலாதாரம்,DANIEL BALAJI

7 மணி நேரங்களுக்கு முன்னர்

‘வேட்டையாடு விளையாடு’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

’சித்தி’ எனும் பிரபலமான தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. பாலாஜி என்பதுதான் அவருடைய இயற்பெயர். ஆனால், சித்தி தொடரில் ‘டேனியல்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், டேனியல் பாலாஜி எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

இவர், 2003இல் ‘ஏப்ரல் மாதத்தில்’ எனும் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதே ஆண்டில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து காவல்துறை அதிகாரியாக நடித்துப் பிரபலமானார் டேனியல் பாலாஜி.

'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி

பட மூலாதாரம்,DANIEL BALAJI

திருப்புமுனையாக அமைந்த ‘வேட்டையாடு விளையாடு’

’காக்க காக்க’ திரைப்படத்திற்குப் பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்த சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜியை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. பல முயற்சிகளுக்குப் பின்னரே ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க கௌதம் மேனன் முடிவெடுத்துள்ளார்.

”கமலுக்கு வில்லனாக பாலாஜியா?” என அப்போது பலரும் பேசியதாக டேனியல் பாலாஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். எனினும், தன் மீது நம்பிக்கை வைத்து கௌதம் மேனன் அந்தக் கதாபாத்திரத்தைத் தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.

'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி

பட மூலாதாரம்,DANIEL BALAJI

‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் அமுதன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதில், தன்னுடைய தனித்துவமான நடிப்பால், பெரும் புகழை அடைந்தார். அத்திரைப்படத்தில் தன் வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவற்றுக்காக இன்றும் அறியப்படுகிறார்.

சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவரும் கௌதம் மேனனும் இணைந்து வழங்கிய நேர்காணலில், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் வசனத்தை அப்படியே பேசிக் காட்டினார். அப்போது, “இப்போதும் அதேபோன்று வசனத்தை ஒத்திகை இல்லாமல் பேச முடிகிறதென்றால் இவர் ஒரு (திறமையான) நடிகர்,” என கௌதம் கூறியிருந்தார்.

தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் ’பொல்லாதவன்’ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்மூலம், தமிழ் சினிமாவில் தனித்துவமான வில்லன் நடிகராக அறியப்பட்டார் டேனியல் பாலாஜி.

 

பிரபலமான ‘வட சென்னை’ வசனம்

டேனியல் பாலாஜி

பட மூலாதாரம்,DANIEL BALAJI

வில்லன் நடிகராக அறியப்பட்ட டேனியல் பாலாஜி, அதன்பின் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்தத் திரைப்படங்கள் பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017இல் பைரவா, 2018இல் வட சென்னை, 2019இல் பிகில் போன்ற திரைப்படங்களின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார் டேனியல் பாலாஜி. எனினும், அதன் பின்னும் அவருக்குப் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

‘வட சென்னை’ திரைப்படத்தில் ‘லைப்-அ தொலைச்சிட்டியேடா’ என்று கூறும் வசனம் சமூக ஊடகங்களில் பிரபலமான ‘மீம்’ வசனமாக உள்ளது.

அதேபோன்று, சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். படங்களில் நடிப்பதைத் தாண்டி சில திரைப்படங்களில் ஒப்பனைக் கலைஞராகவும் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியான ’அறியவன்’ எனும் திரப்படம் அவர் நடித்த கடைசி திரைப்படம் எனத் தெரிகிறது. இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினராவார்.

 
டேனியல் பாலாஜி

பட மூலாதாரம்,DANIEL BALAJI

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவருடைய உடல் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையின்போது கொரோனா தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்தார் டேனியல் பாலாஜி.

அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடலுக்கு இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், அமீர், அருண் மாதேஸ்வரன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டேனியல் பாலாஜி மரணத்திற்கு சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.

இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண் தானம் செய்ததன் மூலம் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியைக் கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி,” எனத் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/ceq74yev4g7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.........!  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.